Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image00010-2.jpeg?resize=750,375

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடன் கதைத்து ஏமாறுவதற்குள் சம்பந்தன் இறந்து விட்டார் : அரியநேத்திரன்

இலங்கையின் 09வது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் ஆத்ம சாந்தி வேண்டி, இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2024/1390804

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழன்பன் said:

கடைசியாக இருந்த தமிழரசு கட்சியை பிளந்தததை தவிர இந்த திருவாளர் சாதித்தது என்ன? சும்மா வெறும் கதை விடக்கூடாது. புலிகளை இங்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் .

ஐயா , சம்பந்தர் அரசியல் செய்தாரா ? அட , அந்தாள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது உடுப்பு போட்டதுதான் மிச்சம் . இது அரசியலா ? அட போங்க உங்க பகிடிக்கு அளவேயில்லை .

சம்பந்தன் எங்கே பிரித்தார்? தமிழ் கூட்டமைப்பின் ஒரேயொரு நிரந்தர முகமாக இருந்தார். யார் பிரிந்து போனார்கள் என்று நியூசில் வாசிக்காமலா இங்கே எங்களுக்கு பாடமெடுக்கிறீர்கள்😂

வாகன இறக்குமதிப்  பெர்மிற் விற்பனை, அரச வேலைக்கு கையூட்டு, இடைத்தங்கல் முகாமில் அடை பட்ட தமிழர்களை வெளியே எடுக்க கையூட்டு, இரகசிய கப்பம் என்று குஜாலாக இருந்த கூட்டமைப்பின் முன்னாள் ஆயுத தாரிகளான பா. உக்கள் சம்பந்தனின் அரசியலில் இதை இழக்க விரும்பாமல் பிரிந்தார்கள். வன்முறை அரசியல் சாரா சுமந்திரன் போன்றோர் இணைந்தார்கள்.

இதெல்லாம் உங்களுக்கு கூட்டமைப்பின் பிரிப்பாக தெரிகிறது, உங்கள் பார்வை அப்படி. எனக்கு இந்த முன்னாள் ஆயுத தாரிகளின் விலகலால் நல்ல திசையில் கூட்டமைப்பு நகர்வதாகத் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2024 at 17:18, island said:

சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்?  அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம். 

எப்படி, உங்கட நானாமார் செய்யிற அரசியல் மாதிரியோ! அதுக்கேன் சொல்லிக்கொடுப்பான்? கும்பிடுபோடத்தெரிந்தால் மாத்திரம் போதுமே!!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இவை எல்லாவற்றிக்கும் சம்பந்தன்  பதில் சொல்லியிருக்க வேண்டும்.2009 க்கு முன்னரும் பின்னரும் சம்பந்தன் அரசியிலில் முதன்மையானவராகவே இருந்துள்ளார்.

 

இவரை உங்களுக்கு தெரியுமா?

நான் அறிந்தவரை ஆயுதங்கள் கடைசியாக மெளனிக்கப்பட முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் தலைமை இவரையே தமது பிரதிநிதியாக நியமனம் கொடுத்தார்கள். சம்பந்தர் இங்கு வெளி ஆள். அமைப்பினுள் உள்வாங்கப்பட்ட ஒருவர் அல்ல.  

 

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]
The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. 

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations. 

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors.

 

https://tamilnet.com/art.html?catid=13&artid=28224

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நியாயம் said:

இவரை உங்களுக்கு தெரியுமா?

உளமார தெரிந்த படியால் தான் இவரை நினைத்தாலே மூக்கின் மேல் கோபம் கோபமாக வருகின்றது.

இவர் நலமாக உயிருடன் இருக்கும் போதே சம்பந்தனை வாய்க்கு வந்தபடி யாழ்களத்தில் திட்டியிருக்கின்றேன். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

வாய்க்கு வந்தபடி யாழ்களத்தில் திட்டியிருக்கின்றேன். :cool:

நீங்கள் திட்டியது பலித்து விட்டது”   அதனால் தான்   இறந்துபோனார்.    🤣🤣🤣.  என்னையும்   ஒருக்கால். திட்டுங்கள்.  🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

காயம்பட்ட பொது மக்களை ஏற்ற கப்பல் அனுப்பியது ICRC யும், MSF உம். கப்பல் அனுப்ப வேண்டி வந்தததன் காரணம்,

ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்!

16 hours ago, Kandiah57 said:

இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, satan said:

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

 மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

1977 இல்.  நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது    அமிர்.  பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர்    பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள்  

ஜே  ஆரே சொன்னார்  கூட்டணியின்.  பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக    சுதந்திர கட்சி  பலமிழந்த நிலையிலிருந்தது  ... என்ன செய்தார்கள??? 

என்ன செய்தார்கள்.  ???  தமிழ் பகுதியில் உள்ள  முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும்.  தமிழர்கள்  ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும்     எதுவும் செய்ய முடியாது   இது தான் யதார்த்தம்   🙏

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Eppothum Thamizhan said:

 

 மேலே சிவப்பு எழுத்தில் கூறப்பட்டவை, இங்கு யாழில் விடுமுறைக்கு வன்னிக்கு போய் சும்மா மதவடியில் குந்தியிருப்போருடன் அரட்டை அடித்துவிட்டுவந்து அதுதான் முள்ளிவாய்க்காலில் இருந்த லட்சக்கணக்கான மக்களின் கருத்து என அம்புலிமாமா கதைசொல்லும் அப்பிரண்டிசுகளை இல்லைத்தானே!

கடந்த காலங்களில் தேர்தல் நெருங்கும் வேளைகளில் மஹிந்த மாத்தையா சொன்னவை, "நீங்கள் போரில் இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாவற்றயும் திருப்பி தந்துவிடுகிறேன்." என்று உறுதி கூறினார். மக்கள் ஆதரித்தனரா அவரை? தேர்தல் முடிந்த பின்னர் சொன்னார், வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தினேன், காப்பற்தெருக்களை அமைத்தேன், அதை செய்தேன், இதை செய்தேன் ஆனால் தமிழ் மக்களின் மனதை என்னால் வெல்ல முடியவில்லை, காரணம் அவர்களின் தலைவனை நான் அழித்தேன்." என்பதே. மாவீரர் மாதம் பிறந்தாலே அத்தனை தடைகளையுந்தாண்டி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தம் வீர புருஷர்களுக்கு வணக்கம் செலுத்த  முண்டியடிக்கிறார்களே அதன் அர்த்தம் என்ன? எத்தனை போக்கிரித்தனம் செய்தாலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் தாரக மந்திரம் என்ன? அன்று தலைவர், அரசியல் பொறுப்பை இவர்களை நம்பி ஒப்படைத்ததால் அதை தோல்வியடையாமல் மக்கள் தாங்கிப்பிடிக்கிறார்கள். இதுதான் மக்களின் கருத்து. யார் என்ன சொன்னாலும் செய்தாலும் மக்கள் தங்கள் கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். சிலருக்கு அது புரிவதில்லை அல்லது புரியாததுமாதிரி கதையளப்பர்.

10 minutes ago, Kandiah57 said:

1977 இல்.  நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது    அமிர்.  பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர்    பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள்  

ஜே  ஆரே சொன்னார்  கூட்டணியின்.  பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக    சுதந்திர கட்சி  பலமிழந்த நிலையிலிருந்தது  ... என்ன செய்தார்கள??? 

என்ன செய்தார்கள்.  ???  தமிழ் பகுதியில் உள்ள  முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும்.  தமிழர்கள்  ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும்     எதுவும் செய்ய முடியாது   இது தான் யதார்த்தம்   🙏

அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

449943544_876175164547457_33682771899789

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அப்போதும் தமிழர் சார்பாக ஒரே ஒரு கட்சி இருந்திருக்காது, முன்னோர் யாரையாவது கேட்டுப்பாருங்கள். 

எனக்கு தெரியும்    நான் முதலாவது ஆக வாக்கு போட்டேன்     வடக்கு முழுமையாக கூட்டணிக்கு தான்  கிழக்கில் கல்குடாத் தொகுதில். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக  தேவநாயகம் வென்றார்.  அவர்  தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்   மற்றும் குமாரசூரியர்.    அத்துடன்  இராசதுரை   அந்த நேரம் மட்டக்களப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமிர்தலிங்கம். கூட்டணி சார்பில்   காசி ஆனந்தனையும். போட்டியில் இறக்கினார். இது இராசதுரைக்கு பிடிக்கவில்லை   எனவே… தேர்தலில் பிறகு அவர் அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சராகிவிட்டார்      3 பேர் தான் எதிராக சில நேரம் 4 உம் வரலாம்   கூட்டணிக்கு 24 பாராளுமன்ற உறுப்பினர்கள்  25   அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்ன செய்ய முடியும்???  ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்ட வேண்டும்   முஸ்லிம்கள் அமைதியாக இருந்து அதை தான் செய்கிறார்கள்  1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியில். போட்டி இட்ட் முஸ்லிம்கள் இன்று தனித்து போட்டி இடுகிறார்கள்  

அவர்கள் ஒருகாலத்தில்  இலங்கை அரசியலில் பலமிக்க சக்திவாய்ந்தவர்கள்  ஆகுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

image_4127275803.jpg

என்ன ஒரு சிரிப்பு !!!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2024 at 00:02, ஈழப்பிரியன் said:

உண்மை தான் நிகழ்ச்சி நிரல் இருந்தது இப்பவும் இருக்குது.

ஆனால் எல்லாமே வெளிநாட்டவர்களிடம்.

2009 க்கு பின் வெளிநாட்டவர்களின் தாளத்துக்கு எமது தலைவர்கள் நடனம் போடுகிறார்கள்.

அதுசரி பொலிசுக்காரன் தோரணையில் இதைக் கேட்கிறீர்களே.

உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாதா ஐயா?

கோமாவில் இருந்து இப்பதான் எழும்பி வந்தீர்களா?

இங்கு அத்தனை பேருமே ஐயா சம்பந்தன் 2009 க்கு பின் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார் என்று தானே கேட்கிறார்கள்.

அவர் ஏதாவது செய்திருந்தால் எழுதுங்கள் எல்லோரும் அறிந்து கொள்வோம்.

வெளிநாட்டு கோஸ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஒத்திசைவாக அவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சம்பந்தர் ஐயா தாயகத்தில் பணி ஆற்றினாரா என்பது சந்தேகமே. 

2009 இன் பின் அவரை கறிவேப்பிலை போல பயன்படுத்த முடியாது போனது பற்றிய கோபம் நியாமானதுதான். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிக்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். 

கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.  

GRny-Ii-ZWQAAJ5-By.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

அஞ்சலிக்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். 

கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.  

GRny-Ii-ZWQAAJ5-By.jpg

 

சம்பந்தனின் அஞ்சலிக்கு...  இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து..
அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 
அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை.

நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை.
மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி  செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. 

இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்!

யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 

சும்மா அலட்டி நேரத்தை விரயமாக்காதீர்கள். முள்ளிவாய்க்காலுக்காக சம்பந்தனை திட்ட முதல் (அல்லது வேறெவரையும் திட்ட முதல்) ஆயுத முனையில் மக்களை தடுத்து வைத்தவர்களையும், அவர்கள் மீது குண்டு போட்டவர்களையும் தான் திட்ட வேண்டும். அதைச் செய்ய பக்தி முத்தி தடுத்தால் அது உங்கள் பிரச்சினை. அவ்வளவு தான் மேட்டர்.

 இதையெல்லாம் 2017 வரை இங்கே பேசியிருக்கிறோம். அந்த நேரம் "இனிப் பேசாதேயுங்கோ, முன்னகர்வோம்" என்று யாழ் நிர்வாகமும் பகிரங்கமாக அறிவித்து, (உங்களுக்குப் பச்சை போட்டவர்களில் இருவரும்😎) கை கூப்பிய பின்னர் நான் புலிகள் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தே வருகிறேன். ஆனால், உங்கள் போன்ற "மூடனுக்கு பீ அப்பினால் மூன்று இடத்தில் அப்பும்" என்ற மாதிரி நடந்து கொள்ளும் ஆட்களால், மீள நினைவூட்ட வேண்டியிருக்கிறது. 

அது சரி, இப்ப சம்பந்தரும் போய் விட்டார். சுமந்திரன் அடுத்த தேர்தலில் வெல்லாமல் தாயக மக்கள் வாக்களிக்கிறார்கள் (விரட்டியடிக்கிறார்கள்😂) என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓணாண், ஒட்டுண்ணி எல்லாம் கிளியர். யார் உங்கள் அடுத்த தலைவர் என நினைக்கிறீர்கள்?   

  • கருத்துக்கள உறவுகள்

வட மராட்சியில் இருந்து சம்பந்தன் ஐயாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துபவர்களுக்கான இலவச பஸ் மற்றும் காலை, மதிய உணவு பார்சல்களும்  கிடைக்கும். உங்கள் வரவை உறுதிப் படுத்த.... 
தொடர்பு:  தீபன் 077652 XXXX  

Alagan Ratnam

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

வெளிநாட்டு கோஸ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஒத்திசைவாக அவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சம்பந்தர் ஐயா தாயகத்தில் பணி ஆற்றினாரா என்பது சந்தேகமே. 

2009 இன் பின் அவரை கறிவேப்பிலை போல பயன்படுத்த முடியாது போனது பற்றிய கோபம் நியாமானதுதான். 

புலம்பெயர் போராளிகளை சம்பந்தன் கணக்கெடுக்கவே இல்லை. அந்த கோவம் இருக்கும்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2024 at 17:03, நிழலி said:

அதே போல், புலி எதிர்ப்பு எனும் அதி தீவிர காச்சலால் பீடிக்கப்பட்டு, தாம் மாற்றுக் கருத்து வைக்கின்றோம் என்ற போர்வையில், எல்லா இடங்களிலும் புலிகளையும், புலிகளின் தலைமையையும் இழுத்து, மோசமாக விமர்சிக்கின்றவர்கள் ஆரோக்கியமான உரையாடல்களுக்கும், தவறுகளை விமர்சிப்பதனூடாக சரியான வழிகளை தேட முயல்கின்றவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானவர்கள் மட்டுமன்றி, அவர்களும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே ஆகும்.

இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது .

மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது .

உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் .

இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை  யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன்

http://www.kuriyeedu.com/wp-content/uploads/2016/10/sivasakthi-ananthan.pngதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கதைப்பதை நிறுத்திவிட்டு, அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் எவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றது என்பதனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில்,

மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டம்
யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறியிருக்கின்றனர். மேலுமொரு பகுதியினர் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களில் இருக்கின்றார்கள்.

மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணியில் வசித்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையே உள்ளது. அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் அல்லது ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் பல கிராமங்களுக்கு இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை.

அதனால் வருடந்தோறும் ஏற்படும் பருவமழை காரணமாக தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே 7 வருட காலத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதில் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் சரி வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது பாரிய குற்றச்சாட்டாகும்.

நாங்கள் புதிய அரசாங்கத்துடனும் கூட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஒரு இலட்சத்தி 30 ஆயிரமாக மாற்றி 21 இலட்சமான அந்த தொகையை இருவருக்கு வழங்குமாறும் கோரியிருந்தோம். அத்துடன் பொருத்து வீடு என்பது எமது பகுதி காலநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதனால் நிரந்தரமான வீடாக அமைக்குமாறும் கேட்டுள்ளோம்.

குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இந்த பொருத்து வீட்டை நிரந்தரமான வீடாக வழங்குமாறு கேட்டிருந்தும் அரசாங்கமோ அமைச்சரோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்தவாரம் கூட சுவாமிநாதன் தலைமையில் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த இடத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அந்த இடத்திலும் சுவாமிநாதன் பொருத்து வீட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார். எவரும் இந்த வீட்டைத் தருவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை என்றார்.

ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம் இந்த போரால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் சொத்திழப்புகள் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இந்த 7 வருடங்களில் நிவாரணங்களை வழங்காமல் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள முப்படையினரையும் அவர்களது குடும்பங்களையும் அவர்களுக்கு தேவையான சலுகைகளையும் வசதிகளையும் வழங்குவது தொடர்பாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பேசிக்கொண்டிருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயம்.

கிடைத்துள்ள வீடுகளையாவது நிரந்தரமான வீடுகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்டாலும் கூட அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியாத நிலை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களினுடைய அபிவிருத்தி வாழ்வாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவில்லை.

இரா.சம்பந்தன் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும்

நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் காணும் விடயத்திலும் கூட அக்கறையற்ற போக்கே உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சம்பந்தன் ஐயா தனது மௌனமான போக்கை கலைக்கவேண்டும்.

இந்த அரசாங்கத்துடன் நேரடியான பேச்சுக்கு செல்லவேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய உடனடிப்பிரச்சனைகள் என்ன? அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பாக எமது கட்சி கூட்டங்களில் பல தடைவை வலியுறுத்தியும் கூட சம்பந்தனால் இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஓர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்பந்தனும் விரும்பவில்லை அரசாங்கமும் விரும்பவில்லை.

ஆனால் மக்கள் மாவட்டம் தோறும் தங்களது பிரதிநிதிகளுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தை வெறுமனே பாதுகாப்பது தான் எதிர்க்கட்சித் தலைவரதோ அல்லது கூட்டமைப்பின் தலைவரது கடமை என்று இல்லாமல் எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு நாங்கள் மதித்து நடக்கவேண்டும்.

இதில் கூட்டமைப்பு தலைவரின் மௌனம் அல்லது அசமந்தம் இராஜதந்திர ரீதியாக பின்பற்றுகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசாங்கத்தில் உள்ள் பிரதான இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சி நிரலில் சரியாக சென்று கொண்டிருக்கின்றார்கள்.

எனவே அரசாங்கததின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நாங்கள் இழுபட்டு செல்ல முடியாது. கூட்டமைப்பின் தலைவர் எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல் மென்போக்காக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

அடுத்த ஆண்டைப் பொறுத்தவரையில் தெற்கிலும் வடக்கிலும் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இந்த அரசாங்கத்துடன் இணைந்து எதையும் செய்ய முடியாது.

ஆனால் சம்பந்தன் ஒரு சிலரோடு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார். அதனால் 2016 முடிவதற்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். ஆகவே அந்த நாட்களும் இன்னும் சொற்ப நாட்களாகவே உள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறாக தீர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே எமக்கு ஆதரவளித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தார்.

https://www.kuriyeedu.com/?p=19364

  • கருத்துக்கள உறவுகள்
http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/sivasakthi_ananthan.jpg

விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே: சிவசக்தி ஆனந்தன்!

Posted: 2020-05-17 06:25:27 EST

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் அதன் தலைவரான சம்பந்தனாக இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேலிக்கு ஓணான் சாட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியயப்படுத்தல்களையும் செய்திருந்தார்.

உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர்.

பாராளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான தேனிலவுக்காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார்.

அதுமட்மன்றி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாராளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

அவர்கள் தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார்.

இவ்வாறான நிலையில் அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப்புலிகளையும், ஆயுதப்போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தியிருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவு படுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சியா?

மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த்தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பது மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது.

ஆகவே சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியே கடந்த நான்கரை வருடங்கள் தமிழர்களை ஏமாற்றி நீதிக்கான கோரிக்கையையும் மலினப்படுத்தியது. இப்போது அவர்களின் உண்மையான முகத்திரையும் கிழிந்துவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டள்ளார்கள் என்றுள்ளது.

https://www.aruvi.com/article/tam/2020/05/17/11896/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.