Jump to content

பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
03 JUL, 2024 | 11:15 AM
image
 

பிரிட்டனில் நாளை  பொதுத்தேர்தலில்மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில் கருத்துக்கணிப்புகளில் தொடர்ந்தும் தொழிற்கட்சி அதிக  ஆதரவு காணப்படுவதாக  கார்டியன் தெரிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளி;ல் காணப்பட்ட நிலையில் மாற்றமில்லை  தொழில்கட்சிக்கான ஆதரவு சிறிய அளவில் குறைந்துள்ளது என   தெரிவித்துள்ள கார்டியன் எனினும் அந்த கட்சியே தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.

 கென்சவேர்ட்டிவ் கட்சியின் 14 வருடகால ஆட்சியின் பின்னர்  கெய்ர் ஸ்டாமெரின் தொழில்கட்சி2022 முதல்  கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் காணப்படுவதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின் படி தொழில்கட்சிக்கு 40 வீத ஆதரவு காணப்படுவதாகவும்  பிரதமர் ரிசி சுனாக்கின் கென்சவேட்டிவ் கட்சிக்கு 20 வீத ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள கார்டியன் பிரிட்டனின் சீர்திருத்த கட்சிக்கு 15 வீத ஆதரவும்  லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 11வீத ஆதரவும் பசுமை கட்சிக்கு 5.8 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. 

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழில்கட்சிக்கு 326 ஆசனங்கள் கிடைக்கலாம் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 127 ஆசனங்களும் லிபரல் ஜனநாயக கட்சியினருக்கு 50 ஆசனங்களும் கிடைக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187565

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சி யார் என்பதுதான் மேட்டர்.. எப்படி பிரிட்டனில் வலதுசாரிகள் இம்முறை எதிர்க்கட்சி ஆகின்றனரோ அதேபோல் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பார்கள்.. பிரான்சிலும் இப்படித்தான் படிப்படியாக வலர்ந்து இன்று ஆடையை கைப்பற்றுகின்றனர்.. அமெரிக்காவில் டிரம்ப்.. இதேதான் அடுத்து ஜேர்மனியிலும் நிகழும்.. உலகின் வல்லரசு நாடுகள் முழுவதும் இனி அவர்கள் ஆட்சிதான்.. இதற்கு இடதுசாரிகள் மற்றும் மையவாதிகளின் கட்டற்ற குடியேற்ற கொள்கை ஒரு புறம் என்றால் உக்கிரேன் போரிற்கு அள்ளி அள்ளி குடுத்து உள்ளூர் மக்களை உணவு வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நில்கவைத்தது இன்னொரு பெரிய தவறு.. இனியாவது இடதுசாரிகள் தம்மை சீர்திருத்தம் செய்யவேண்டும்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு நீதியை உறுதி செய்வது குறித்து கென்சவேர்ட்டிவ் கட்சி உறுதி - பிரிட்டன் தேர்தலிற்கு முன்னர் கட்சியின் வேட்பாளர் எலியட் கொல்பேர்ன்

Published By: RAJEEBAN   03 JUL, 2024 | 09:09 PM

image
 

தமிழ்மக்களின் உரிமைகளை ஆதரிப்பது மற்றும் வரலாற்று அநீதிகளிற்கு தீர்வை காண்பது குறித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது  என கென்சவேர்ட்டிவ் கட்சியின் கார்சல்டன் மற்றும் வலிங்டன் வேட்பாளர் எலியட் கோல்பேர்ன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக தமிழ் கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையில்  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் சமூகத்தின் நீண்டகால சகா என்ற அடிப்படையில் தமிழ் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்தும் பகிர்ந்துகொள்ளப்பட்ட விழுமியங்கள் பரஸ்பர மதிப்பு நீதி மற்றும் செழிப்பு ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக போராடுவது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாங்கள் மிக முக்கியமான தேர்தலை நெருங்கும் இவ்வேளையில் நாங்கள் ஒன்றிணைந்து சாதித்த முன்னேற்றங்கள் குறித்தும் முன்னோக்கி பயணிப்பதற்கான பாதை குறித்தும்  தமிழ் சமூகம் சிந்திப்பது அவசியமாகும்.

தமிழ் மக்களிற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படுத்திய கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு வாக்களிக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களிற்கு ஐக்கிய நாடுகளில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கி வந்துள்ளது.

இந்த கொள்கைகளிற்கான எங்கள் அர்ப்பணிப்பு குறையவில்லை தடம் மாறவில்லை.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவது குறித்த துணிச்சலான வாக்குறுதிகளை தொழில்கட்சி வழங்கியுள்ள அதேவேளை உண்மையான மாற்றத்திற்கு சொல்லாட்சியை விட அதிகம் தேவை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

மேலும் சர்வதேச அரங்கில் நிலையான பயனுள்ள நிலையான நடவடிக்கை அவசியம். இவ்வாறான நடவடிக்களை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது. தொடர்ந்தும் முன்னெடுக்கும். உதாரணத்திற்கு எங்களின் 11மில்லியன் யூரோ இலங்கையின் யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கு உதவும். மேலும் இந்த நிதி உதவி சிவில் சமூகத்திற்கு உதவும் ஜனநாயக செயற்பாடுகளிற்கும் உதவும்.

தமிழர் நினைவுநாள் என்பது உயிர் இழந்தவர்களின் நினைவுகளை போற்றும் மற்றும் தமிழ் சமூகத்தின் தொடரும் வேதனையை அங்கீகரிக்கும் ஒரு புனிதமான நிகழ்வாகும். எங்களை துயரத்திலும் நீதியை காண்பதற்கான உறுதிப்பாட்டிலும் இணைக்கும் நாள்.

கன்சவேர்ட்டிவ் கட்சி இந்த நாளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து உங்களுடன் இந்த நாள் குறித்த நினைவிலும் உறுதிப்பாட்டிலும் உங்களுடன் இணைந்துள்ளது.

தமிழர்களை உரிமைகளை ஆதரிப்பதிலும் வரலாற்று அநீதிகளிற்கும் எங்களின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.

மேலும் இந்த ஆண்டு நினைவுகூரல் நிகழ்வில் கலந்துகொண்டது குறித்து பெருமிதம் கொள்கின்றேன்.

https://www.virakesari.lk/article/187626

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

07.jpg?fit=1024,683

பிரித்தானிய பொதுத்தேர்தல் – மனைவியுடன் வாக்களித்தார் பிரதமர் ரிஷி

பிரித்தானியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவியுடன் சென்று வாக்களித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

 

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாண்டு முதல் வாக்களிக்க அடையாள கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாட்டின் புதிய அரசைத் தீா்மானிக்கக் கூடிய இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (house of commons) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவர்.

எனவே, 326 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்றால்தான் பிரித்தானியாவில் ஆட்சியமைக்க முடியும்.

இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திப்பார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2024/1390957

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர் - கென்சவேர்ட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவிற்கு வரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பு

Published By: RAJEEBAN    04 JUL, 2024 | 05:45 PM

image
 

பிரதமர் ரிசி சுனாக்கின் கென்சவேர்ட்டிவ் கட்சியை 14 வருடங்களிற்கு பின்னர் அதிகாரத்திலிருந்து அகற்றும் தொழிற்கட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும்  என எதிர்பார்க்கப்படும் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

கெய்ர் ஸ்டார்மெரின் தொழில்கட்சி பெரும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

எட்டு வருடங்களில் ஐந்து பிரதமர்கள் ஆட்சி புரிந்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் உள்கட்சி மோதல் குழப்பநிலை முடிவிற்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பிரிட்டன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் என தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் வியாழக்கிழமை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐந்து வருடங்கள் கென்சவேர்ட்டிவ் ஆட்சியை தாங்க முடியாது என தெரிவித்துள்ள அவர் நீங்கள் தொழில்கட்சிக்கு வாக்களித்தால் மாத்திரமே மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.

rishi_voting.jpg

நாட்டின் 40000 வாக்களிப்பு நிலையங்களில்  வாக்களிப்பு இடம்பெறுகின்றது.

பிரதமர் ரிசி சுனாக் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் காலையிலேயே வாக்களித்துள்ளனர். வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் அவர் தனது மனைவியுடன் வாக்களித்துள்ளார். எதிர்பாராத விதத்தில் முன்கூட்டியே தேர்தலிற்கு அழைப்பு விடுத்த ரிசி சுனாக் கடந்த சில வாரங்களாக தொழில்கட்சி ஐந்தாவது தடவையாக  ஆட்சியை கைப்பற்றுவது குறித்து கருத்து தெரிவிப்பதை கைவிட்டுள்ளார். மாறாக தொழில்கட்சிக்கு மிகப்பெரும் பெரும்பான்மையை வழங்குவது குறித்து அவர் வாக்காளர்களை எச்சரித்து வந்துள்ளார்.

britan_voting.jpg

தேர்தல் வாக்களிப்பு தினமான இன்று தொழில்கட்சி குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்த ரிசி சுனாக் தொழில்கட்சியினர் வரிகளை அதிகரிப்பார்கள் புவிசார் அரசியல் பதற்றம் காணப்படும் சூழலில் பிரிட்டனை பலவீனப்படுத்துவார்கள் என  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187698

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

முடிவு எப்போது வரும்?

எல்லா முடிவும் வர நியூயோர்க நேரம் அதிகாலை 2 மணியாகுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

எல்லா முடிவும் வர நியூயோர்க நேரம் அதிகாலை 2 மணியாகுமாம்.

தகவலுக்கு நன்றி நுணா.

Live Updates: Labour Party Is Set for Landslide Win in U.K. Election

A nationwide exit poll indicated a decisive end to 14 years of Conservative rule. Labour’s center-left leader, Keir Starmer, was poised to become prime minister.

https://www.nytimes.com/live/2024/07/04/world/uk-election-results

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2024 at 10:12, பாலபத்ர ஓணாண்டி said:

எதிர்க்கட்சி யார் என்பதுதான் மேட்டர்.. எப்படி பிரிட்டனில் வலதுசாரிகள் இம்முறை எதிர்க்கட்சி ஆகின்றனரோ அதேபோல் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பார்கள்.. பிரான்சிலும் இப்படித்தான் படிப்படியாக வலர்ந்து இன்று ஆடையை கைப்பற்றுகின்றனர்.. அமெரிக்காவில் டிரம்ப்.. இதேதான் அடுத்து ஜேர்மனியிலும் நிகழும்.. உலகின் வல்லரசு நாடுகள் முழுவதும் இனி அவர்கள் ஆட்சிதான்.. இதற்கு இடதுசாரிகள் மற்றும் மையவாதிகளின் கட்டற்ற குடியேற்ற கொள்கை ஒரு புறம் என்றால் உக்கிரேன் போரிற்கு அள்ளி அள்ளி குடுத்து உள்ளூர் மக்களை உணவு வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நில்கவைத்தது இன்னொரு பெரிய தவறு.. இனியாவது இடதுசாரிகள் தம்மை சீர்திருத்தம் செய்யவேண்டும்..

உண்மைதான்...
இந்த உக்ரேன் பிரச்சனை ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில் வாழும் உக்ரேனியர்களால் நாட்டிற்கு பெரிய செலவுகள் என பத்திரிகைகள் நேரடியாகவே எழுதுகின்றன.
பிரித்தானிய தேர்தல்,அமெரிக்க தேர்தல்,பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் நல்லதாக அமைத்தால்  உலகம் நிம்மதியாக வாழும்.

Link to comment
Share on other sites

பிரான்சின் தேர்தலுக்கு பிறகு ஜேர்மன் தேர்தலுக்கு (செப்டம்பர் 2025 ஆக இருந்தாலும்) ஒலாவ் சுல்ஸ்(Olaf Scholz) துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவார் என சக ஜேர்மன் நண்பன் சொல்கிறார். உங்களின் கருத்து என்னவாக இருக்கும் கு.மா அண்ணா.??

37 minutes ago, குமாரசாமி said:

உண்மைதான்...
இந்த உக்ரேன் பிரச்சனை ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில் வாழும் உக்ரேனியர்களால் நாட்டிற்கு பெரிய செலவுகள் என பத்திரிகைகள் நேரடியாகவே எழுதுகின்றன.
பிரித்தானிய தேர்தல்,அமெரிக்க தேர்தல்,பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் நல்லதாக அமைத்தால்  உலகம் நிம்மதியாக வாழும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Labour has won Blyth and Ashington, the second seat of the night to declare, with the populist Reform UK party again putting in a strong showing and coming second.

Link to comment
Share on other sites

லேபர் கட்சி அமோகமாக போவதாக பிபிசி உலக செய்திகள் சொல்லி வருகின்றது.  சிஎன் என் ஜூலை 4 கொண்டாட்டங்களில் மூழ்கி கிடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  • LAB410Labour: 410 seats
  • CON131Conservative: 131 seats
  • LD61Liberal Democrat: 61 seats
  • REF13Reform UK: 13 seats
  • SNP10Scottish National Party: 10 seats
  • OTH25Others: 25 seats
326 seats for a majority
Open for more
Source: Ipsos for BBC/ITV News/Sky News
 

Results: parties by seats

640 seats to go. Counting under way. 

  • LAB9+1Labour: 9 seats, 1 seat gained
  • LD1+1Liberal Democrat: 1 seat, 1 seat gained
  • REF0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • LAB410Labour: 410 seats
  • CON131Conservative: 131 seats
  • LD61Liberal Democrat: 61 seats
  • REF13Reform UK: 13 seats
  • SNP10Scottish National Party: 10 seats
  • OTH25Others: 25 seats
326 seats for a majority
Open for more
Source: Ipsos for BBC/ITV News/Sky News
 

Results: parties by seats

577 seats to go. Counting under way. 

  • LAB66+27Labour: 66 seats, 27 seats gained
  • CON3-28Conservative: 3 seats, 28 seats lost
  • LD3+2Liberal Democrat: 3 seats, 2 seats gained
  • REF1+1Reform UK: 1 seat, 1 seat gained
  • GRN0-Green: 0 seats, No change
  • OTH

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • LAB410Labour: 410 seats
  • CON131Conservative: 131 seats
  • LD61Liberal Democrat: 61 seats
  • REF13Reform UK: 13 seats
  • SNP10Scottish National Party: 10 seats
  • OTH25Others: 25 seats
326 seats for a majority
Open for more
Source: Ipsos for BBC/ITV News/Sky News
 

Results: parties by seats

545 seats to go. Counting under way. 

  • LAB86+32Labour: 86 seats, 32 seats gained
  • CON9-37Conservative: 9 seats, 37 seats lost
  • LD9+7Liberal Democrat: 9 seats, 7 seats gained
  • REF1+1Reform UK: 1 seat, 1 seat gained
  • GRN0-Green: 0 seats, No change
  • OTH0-3

லிபரல் கிடுகிடுவென்று ஏறிக் கொண்டு போகுது.

Parliament results

Counting under way. After 116 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 95
    • Change +36
    • Total votes 1,970,263
    • Share 40.3%
    • Share change +1.2
  2. conservative.svgConservative

    • Total seats 11
    • Change -40
    • Total votes 1,012,088
    • Share 20.7%
    • Share change -19.8
  3. liberal_democrat.svgLiberal Democrat

    • Total seats 9
    • Change +7
    • Total votes 471,967
    • Share 9.6%
    • Share change -0.3
  4. reformuk.svgReform UK

    • Total seats 1
    • Change +1
    • Total votes 826,273
    • Share 16.9%
    • Share change +12.8
  5. green.svgGreen

    • Total seats 0
    • Change 0
    • Total votes 318,470
    • Share 6.5%
    • Share change +4.1
  6. independent.svgIndependent

    • Total seats 0
    • Change 0
    • Total votes 92,548
    • Share 1.9%
    • Share change +1.1
  7. scotland_snp.svgScottish National Party

    • Total seats 0
    • Change -4
    • Total votes 50,584
    • Share 1.0%
    • Share change -0.6
  8. workers_party.svgWorkers Party of Britain

    • Total seats 0
    • Change 0
    • Total votes 44,709
    • Share 0.9%
    • Share change +0.9
  9. wales_plaidcymru.svgPlaid Cymru

    • Total seats 0

Parliament results

Counting under way. After 125 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 99
    • Change +39
    • Total votes 2,099,034
    • Share 39.8%
    • Share change +1.5
  2. conservative.svgConservative

    • Total seats 13
    • Change -44
    • Total votes 1,107,657
    • Share 21.0%
    • Share change -19.7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Parliament results

Counting under way. After 144 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 112
    • Change +43
    • Total votes 2,405,426
    • Share 39.2%
    • Share change +1.0
  2. conservative.svgConservative

    • Total seats 15
    • Change -50
    • Total votes 1,293,015
    • Share 21.1%
    • Share change -19.4V. 

1977 இலங்கைத் தேர்தல் மாதிரி இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Parliament results

Counting under way. After 212 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 158
    • Change +65
    • Total votes 3,466,629
    • Share 38.0%
    • Share change +1.1
  2. conservative.svgConservative

    • Total seats 25
    • Change -77
    • Total votes 1,973,874
    • Share 21.6%
    • Share change -19.8
  3. liberal_democrat.svg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Parliament results

Counting under way. After 435 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 307
    • Change +139
    • Total votes 6,932,826
    • Share 36.5%
    • Share change +1.4
  2. conservative.svgConservative

    • Total seats 65
    • Change -154
    • Total votes 4,216,871
    • Share 22.2%
    • Share change -19.4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

702350_0.jpeg?resize=750,375

பிரித்தானியா தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்!

https://athavannews.com/2024/1390995

41 minutes ago, ஈழப்பிரியன் said:

 

Parliament results

Counting under way. After 435 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 307
    • Change +139
    • Total votes 6,932,826
    • Share 36.5%
    • Share change +1.4
  2. conservative.svgConservative

    • Total seats 65
    • Change -154
    • Total votes 4,216,871
    • Share 22.2%
    • Share change -19.4

பிரித்தானிய தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறியத்தரும் ஈழப்பிரியனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் தேர்தல் முடிவுகள்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தொழிலாளர் கட்சி

கீர் ஸ்டார்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
5 ஜூலை 2024, 02:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது.

இதன் மூலம் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டார்மர்.

தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தனது பதவியை இழக்கிறார்.

தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 330-க்கும் அதிகமான இடங்களை வென்றுவிட்டது. மேலும் 160-க்கும் அதிகமான இடங்களுக்கான முடிவுகள் வரவேண்டியுள்ளன.

கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 72 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

2019 தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றியதால், போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்களைப் பெற வேண்டும்.

இதுவரை வெளியான முடிவுகள்:

தொழிலாளர் கட்சி - 338

கன்சர்வேடிவ் - 72

லிபரல் டெமாக்ரடிக் - 46

ரிஷி சூனக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரிஷி சூனக்

2019 தேர்தலில், எதிர்க்கட்சியான லேபர் கட்சி 203 இடங்களை மட்டுமே பெற்றது. பாரம்பரியமாக வெல்லக்கூடிய பல இடங்களிலும் தோற்றுப் போனது.

கருத்துக் கணிப்புகளின்படியே எல்லாம் நடந்தால், 1997-இல் டோனி பிளேர் பெற்ற வெற்றிக்கு சற்றே நிகரானதாக தற்போதைய தொழிலாளர் கட்சியின் வெற்றி இருக்கும்.

56 இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் லிபரல் டெமாக்ராட் கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடும்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 10 ஆகக் குறையக்கூடும்.

கீர் ஸ்டார்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வழக்கறிஞரான ஸ்டார்மர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானா

பெரும்பாலான தொகுதிகளில் வென்றாலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லை.

அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு குறைவாக இருப்பது இதுவரையிலான முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.

10% க்கும் அதிகமான மக்கள் முஸ்லீம்களாக அடையாளம் காணும் இடங்களில் தொழிலாளர்களின் வாக்குகள் சராசரியாக 10 புள்ளிகள் குறைந்துள்ளன என்று பிபிசி தலைமை அரசியல் செய்தியாளர் ஹென்றி ஷெப்மன் குறிப்பிட்டுள்ளார்.

லெஸ்டர் கிழக்கு தொகுதியை இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம். நிழல் கேபினட்டில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜொனாதன் அஷ்வொர்த் லெஸ்டர் தெற்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் இழந்திருக்கிறார்.

கீர் ஸ்டார்மர் யார்?

ஏப்ரல் 2020 இல், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கீர் ஸ்டார்மர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார்மருக்கு 61 வயது. வழக்கறிஞரான ஸ்டார்மர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார்.

தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே ஸ்டார்மர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

கட்சியின் தலைவரான பிறகு, "இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்" என்று கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Parliament results

Counting under way. After 620 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 403
    • Change +203
    • Total votes 9,364,151
    • Share 34.2%
    • Share change +1.5
  2. conservative.svgConservative

    • Total seats 110
    • Change -238
    • Total votes 6,426,066
    • Share 23.5%
    • Share change -19.8
  3. liberal_democrat.svgLiberal Democrat

    • Total seats 68
    • Change +60
    • Total votes 3,301,435
    • Share 12.1%
    • Share change +0.5
1 hour ago, ஏராளன் said:

தொழிலாளர் கட்சி - 338

326 ஆசனங்களே தேவையான இடத்தில் 403 எடுத்திருக்கிறார்கள்.

இன்னமும் 30 தொகுதிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1 hour ago, தமிழ் சிறி said:

பிரித்தானிய தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறியத்தரும் ஈழப்பிரியனுக்கு நன்றி.

படுதோல்வியடைந்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கு யாருமே எதிர்பார்க்கவில்லைப் போல.

எங்கடையாட்கள் யாராவது வெற்றி பெற்றுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Results: parties by seats
Starmer_Keir_LAB_gs_256x256.png
 
Labour win

Labour win

326 seats for a majority
 
11 seats to go
 
 
 
 
 
 
  • LAB410+210Labour: 410 seats, 210 seats gained
  • CON118-247Conservative: 118 seats, 247 seats lost
  • LD70+62Liberal Democrat: 70 seats, 62 seats gained
  • SNP8-38Scottish National Party: 8 seats, 38 seats lost
  • SF7-Sinn Fein: 7 seats, No change
  • OTH26+13Others: 26 seats, 13 seats gained
Change since 2019
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

Parliament results

Counting under way. After 620 of 650 seats declared.

Change compared with 2019
  1. labour.svgLabour

    • Total seats 403
    • Change +203
    • Total votes 9,364,151
    • Share 34.2%
    • Share change +1.5
  2. conservative.svgConservative

    • Total seats 110
    • Change -238
    • Total votes 6,426,066
    • Share 23.5%
    • Share change -19.8
  3. liberal_democrat.svgLiberal Democrat

    • Total seats 68
    • Change +60
    • Total votes 3,301,435
    • Share 12.1%
    • Share change +0.5

326 ஆசனங்களே தேவையான இடத்தில் 403 எடுத்திருக்கிறார்கள்.

இன்னமும் 30 தொகுதிகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

படுதோல்வியடைந்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கு யாருமே எதிர்பார்க்கவில்லைப் போல.

எங்கடையாட்கள் யாராவது வெற்றி பெற்றுள்ளார்களா?

உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்

Counting complete

Change compared with 2019
  1. labour.svgLabour,Uma Kumaran

    • Votes 19,145
    • Share 44.1%
    • Share change -26.3
  2. green.svgGreen,Joe Hudson-Small

    • Votes 7,511
    • Share 17.3%
    • Share change +13.6
  3. workers_party.svgWorkers Party of Britain,Halima Khan

    • Votes 3,274
    • Share 7.5%
    • Share change +7.5
  4. conservative.svgConservative,Kane Blackwell

    • Votes 3,114
    • Share 7.2%
    • Share change -7.3
  5. independent.svgIndependent,Nizam Ali

    • Votes 2,380
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்

Counting complete

Change compared with 2019
  1. labour.svgLabour,Uma Kumaran

    • Votes 19,145
    • Share 44.1%
    • Share change -26.3
  2. green.svgGreen,Joe Hudson-Small

    • Votes 7,511
    • Share 17.3%
    • Share change +13.6
  3. workers_party.svgWorkers Party of Britain,Halima Khan

    • Votes 3,274
    • Share 7.5%
    • Share change +7.5
  4. conservative.svgConservative,Kane Blackwell

    • Votes 3,114
    • Share 7.2%
    • Share change -7.3
  5. independent.svgIndependent,Nizam Ali

    • Votes 2,380

வாழ்த்துக்கள் உமா குமரன், மக்களின் ஆணையை மதித்து சமூகத்துக்கும் நமது இனத்திற்கும் சேவை ஆற்றுவீர்களாக.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 05 JUL, 2024 | 06:33 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்காததன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இயலவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜப்பானின் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் கூறியதாவது: கடன்களை மீள்செலுத்த முடியாத நிலை உள்ளடங்கலாக நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான பல தசாப்த காலமாக இலங்கை வரவு -செலவுத்திட்டப் பற்றாக்குறையையும், வர்த்தகப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுவருகின்றது. அதன் நீட்சியாகக் கடந்த சில வருடங்களாக செலவினங்களை ஈடுசெய்வதற்குப் போதுமான வருமானம் இலங்கையிடம் இருக்கவில்லை. குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, ஏனைய உதவிக் கொடுப்பனவுகள் என்பன உள்ளிட்ட சகல செலவுகளுக்கும் சுமார் 4.4 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்ட அதேவேளை, அப்போது அரசின் வருமானம் 3 ட்ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே 69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆலோசனையை சர்வதேச அங்கீகாரமுடைய கட்டமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அமைச்சரவையின் ஊடாக முன்னெடுத்தார். அதன் பிரகாரமே க்ளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லிஸார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய தேவை ஏற்பட்டபோது, அதுகுறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. அதன் காரணமாக நாணய நிதியத்தை நாடு செயன்முறை தாமதமடைந்தது. அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எழுச்சி தோற்றம் பெற்று, பேரழிவு இடம்பெற்றதன் பின்னர், சவால் மிகுந்ததொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்வந்தார். அவரது தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டியதன் ஊடாக, தற்போது நாடு மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்திருக்கின்றது.   இது இவ்வாறிருக்க நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த காலப்பகுதியில் சர்வதேச நாடுகளோ அல்லது அமைப்புக்களோ எமக்கு எவ்வித நிதியுதவியையும் வழங்கவில்லை. அதன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இயலவில்லை. இருப்பினும் தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதில் விசேட ஒத்துழைப்பை வழங்கிய ஜப்பானின் உதவிகள் கிட்டும் பட்சத்தில், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இருப்பினும் அதற்கு நாம் தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அவற்றை இடைநிறுத்தும் பட்சத்தில் மீண்டும் பின்னடைவு நிலைக்குச் சென்றுவிடுவோம் என்றார்.  https://www.virakesari.lk/article/187784
    • TIN வருமான வரி செலுத்தக் கோரி குறுந்தகவல் – இராஜாங்க அமைச்சர் விளக்கம்! மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற எவரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார். வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டாதவர்கள், இந்தத் தகவல் குறித்து அவதானம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறுகின்றவர்கள், தங்களது வருமான வரியை உரிய கணக்கிற்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305331
    • ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு...  ஜேர்மனியும்,   ஸ்பெயினும்  ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்...  கால் இறுதி ஆட்டம்  விளையாட இருக்கின்றது.  ஜேர்மனி வெற்றி பெற,  முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள்.   
    • உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று  சொன்னாரே?
    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.