Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களின் பேரெழுச்சியால் முடங்கியது ஏ-9 வீதி

யாழ். சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் திங்கட்கிழமை (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது.

image_b8635062f6.jpg

இதில் பொதுமக்கள் தமது எதிர்ப்பு கோஷசம் மிட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வருகை தராத நிலையில் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ-9 வீதியை முடக்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image_1ff0a9cb2c.jpg

இதனால் போக்குவரத்து முற்றாக முடங்கியது. பின்னர் பொலிஸார் போராட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் வீதி முடக்கம் கைவிடப்பட்டதுடன் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யாமையும் குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன், நிதர்ஷன் வினோத் 

image_b7456efaa4.jpg

image_35a980faba.jpg

image_1cdb839ad0.jpg

image_b5b2bdbb2e.jpg
 

https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மக்களின்-பேரெழுச்சியால்-முடங்கியது-ஏ-9-வீதி/46-340023

  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

நியாயம்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

Ahasthiyan

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம் : சாவகச்சேரி நகரெங்கும் கதவடைப்பு

08 JUL, 2024 | 11:21 AM
image
 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக ஞாயிற்றுக்கிழமை (7)  இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமையும் (08) மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளன.

IMG-20240708-WA0025.jpg

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா, "பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன்" என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில், புதிய பதில் அத்தியட்சகருக்கான கடிதம் கிடைத்தவுடன் விரைவில் நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

IMG-20240708-WA0020.jpg

IMG-20240708-WA0043.jpg

IMG-20240708-WA0023.jpg

IMG-20240708-WA0022.jpg

IMG-20240708-WA0026.jpg

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக போராட்டம் : சாவகச்சேரி நகரெங்கும் கதவடைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 hours ago, பெருமாள் said:

சிலவேளை கூகிள் வைத்தியர்களாக இருக்கலாம் 😀

இயங்காத X-Ray கூடத்தில் வேலை செய்யும் Radiographerக்கும் மற்றும் மருந்தகமே இல்லாதமருந்தகத்தில் வேலை செய்யும் மருந்தாளருக்கும் எப்படி over time கிடைக்கின்றது. அதிஸ்டசாலிகள் அல்லவா?

Edited by Ahasthiyan
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுசரி ஆளுநர் என்ன செய்கின்றார் ? டாக்கி போனாலே விளங்காதே .... ஆமை புகுந்த வீடு மாதிரி .
25 வைத்தியர்களும் கூட்டு காளவாணிகளா ? அது சரி ஏன் மக்கள் இவ்வளவு காலமும் எந்த விதமான எதிர்ப்புக்களை தெரிவிக்கவில்லை . உண்மையில் என்ன நடக்கின்றது .....

  • Like 2
Posted

 

 

 அதிரடியாய் வெளியேறிய வைத்தியர்; கொழும்பில் ஆரம்பமாகும் விசாரணை! 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா! 

08 JUL, 2024 | 05:46 PM
image
 

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார்.

வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். 

வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

IMG-20240708-WA0026.jpg

IMG-20240708-WA0029.jpg

IMG-20240708-WA0037.jpg

IMG-20240708-WA0032.jpg

 

 

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மிகவும் தந்திரமான முறையில் வெளியேற்றப்பட்டிருக்கும் வைத்தியர் அர்ச்சுனா.அடுத்து வரும் நியமனக் கடித்தை வாங்குவாரா...விடுவாரா ..........?  வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.......🖐️🖐️

 

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்கல்களை கொண்டு வரலாம். 

இது ஒன்றும் சினிமா இல்லை. சினிமாவில் நடிகர் அர்ச்சுன் மூன்று நாள் முதல்வராக வந்து தமிழ்நாட்டை மாற்றி அமைத்தார். இங்கே அர்ச்சனா அப்படி சினிமா பாணியில் செயற்படுவது பலருக்கும் பல தீங்குகளை கொண்டுவரும். 

இலங்கை ஒரு மூன்றாம் உலக நாடு. மனித உரிமைகளில் பின் தங்கி உள்ள ஒரு நாடு. ஊழல்கள் மலிந்த நாடு. அரசாங்க அமைச்சரே மருந்து ஊழல் காரணமாக உள்ளே போனார். 

அர்ச்சனா நினைப்பது போல் குட்டையை கிளறுவதால் தீர்வு கிடைக்காது. இன்னும் குழப்பங்களே அதிகமாகும்.  

தனியொருவர் முழு வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் அதனால் வரக்கூடிய தீமைகளே அதிகம். 

கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை சம்மந்தமாக நிறைய காணொளிகள் பார்த்தேன். 

எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக ஒற்றுமையாக பணி ஆற்றினால்தான் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். 

அனைவரும் விரைவில் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டு, சமரசம் கண்டு மேற்கண்ட வைத்தியசாலையை நல்ல முறையில் இயங்க வைப்பார்க என எதிர்பார்ப்போம். 

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

இராமநாதன் ஐயா

தமிழீழக் காவல்துறை பயிற்றுனர்.

2009 இல் காணாமலாக்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் நியமனம்????
May be an image of 2 people and text
 
 
 
All r
  • கருத்துக்கள உறவுகள்
Posted
செய்தி:
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதியவைத்திய அத்தியச்சராக Dr. கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்
May be an image of 3 people
 
All rea
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நோயாளிகளை  விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா? - போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கேள்வி

Published By: VISHNU  09 JUL, 2024 | 12:16 AM

image
 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். 

திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார  வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. 

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தமது சிறிய வயது காலத்தில் இருந்து இந்த வைத்தியசாலையை பயன்படுத்தி வருகிறோம். 

இங்கு வைத்தியர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தற்போதைய வைத்தியர் அர்சுனா வெளிப்படுத்தியதன் மூலம் நாம் அறிந்து கொண்டோம்.

நாங்கள் சிகிச்சைக்கு வரும்போது வைத்தியர் இல்லை என பலமுறை திரும்பிச் சென்றிருக்கின்றோம், ஆனால் இங்கு இருபதுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருக்கும் விடயம் தற்போது தான் எமது மக்களுக்கு தெரியவந்தது.

இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் பலர் வைத்தியசாலைக்கு வராது வீடுகளிலும் தனியார் வைத்திய சாலைகளிலும் கடமையாற்றுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் கடவுளுக்கு நிகராக வைத்திய துறையை கருதி சேவை செய்து வரும் நிலையில்  சிலர் அவர்களையும் குழப்பி தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த மூன்று நாட்களாக வைத்தியர்கள் குறித்த வைத்திய சாலையை விட்டு வெளியேறச் சென்று இருக்கிறார்கள். அவர்களுடன் வைத்தியசாலையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத வைத்தியர்களும் நிர்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருப்பதை நாம் அறிகிறோம்.

வைத்தியர் ஒருவர் வைத்திய சாலையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியதற்காக ஏழை நோயாளிகளை கைவிட்டு விட்டு சென்ற வைத்தியர்கள் தமது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் போராட்டம் என கூறி வெளியேறிச் செல்வீர்களா என குறித்த பெண் கேள்வி எழுப்பினார்.

https://www.virakesari.lk/article/187993

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்!

09 JUL, 2024 | 10:46 AM
image

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியட்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்று  செவ்வாய்க்கிழமை (09)  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து நேற்று  திங்கட்கிழமை (08)  நண்பகல் வெளியேறினார்.  

பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை  இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று  திங்கட்கிழமை நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

2__2_.jpg

https://www.virakesari.lk/article/188005

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

I was long waiting for this.
Thank you sir for your great leadership.
You are the one first reached out Base Hospital Chavakacheri.
Now I'm glad you will do the needful as you were doing so far.
Let me retire on this issue and face the inquiries these corrupted PDHS AND RDHS has initiated on me.
I hope the justice will be served to me.
Thank you once again sir.
Truly yours
Dr. Ramanathan Archchuna
Medical Superintendent
Base Hospital Chavakacheri
450400364_1026590998822343_6387623277429
 
 
450424381_1026591012155675_2650638374991
 
 
 
1h  · 
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு அமைக்கப்பட்டு , சீர்கேடுகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பெண் நோயியல் பிரிவு, சந்திர சிகிச்சை பிரிவு, ஐ.சி.யு. பிரிவு ஆகியவற்றை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 மாடிக் கட்டிடம் கடந்த 14 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன், நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான சத்திர சிகிச்சை உபகரணங்களும் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், அவற்றை செயற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர், முதற் கட்டமாக ஐ.சி.யு. மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியவற்றை செயற்படுத்தியுள்ளார்.
அதேபோன்று, குறித்த வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில், அதனை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மேற்கொண்டு, பொது மக்களுக்கு ஏற்பட்டு வந்த தேவையற்ற அசௌகரியங்களை தடுப்பதற்கும் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பொறுப்பற்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை| அமைச்சரவை அதிரடி|சாவகச்சேரி வைத்தியசாவை விவகாரம்

 
Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Day 17
Life as Medical Administrator
Base Hospital, Chavakacheri 

First baby born at New Gynecology and Obstetrics ward at Base Hospital Chavakacheri on 29.6.2024 
I'm so proud of sharing this with all of you and my heartfelt thanks for the staff.
The baby and mother are doing well.
Thank you for sharing in advance. 

Thank you 
Dr. Ram Archchuna 
For the public from the public. ❤️

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PrSACfbzr6GxTg9wZtfbGTZWH7oapwUCGEBibXesVUR2nKve3Jfu9fjfNhgqesaPl&id=100030148033723&mibextid=cr9u03

படங்களுடன் பார்க்க மேலுள்ள சுட்டியை அழுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிக்கு பிறந்தது!

யார் இந்த வைத்தியர்?

இத்தனை துணிச்சல் இவருக்கு எங்கிருந்து வந்தது?

மருத்துவ மாபியாவுக்கு எதிராய் போராடும் அம்பு தொடுக்கும் போர்க்குணம் ஒரு தனி மனிதனுக்கு எப்படி வந்தது?

என "DR அர்ச்சுனா"வின் வேரை தேடினால் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பிரமிக்கவைக்கின்றது!

இவரது தந்தை எங்கள் தமிழீழ காவல் துறை முதன்மை ஆய்வாளர் இராமநாதன் என்பதோடு இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்!

அவரின் குடும்பபின்னணி,வளர்ந்த சூழ்நிலை,வளர்க்கப்பட்ட விதம் அவரது கல்லூரிக்காலம்,பல்கலைகழச் செயற்பாடுகள் என்பன இனஉணர்வு தாண்டியும் உண்மையில்  புல்லரிக்க வைக்கின்றது!

வீரமும்,அஞ்சாமையும்,போராட்டகுணமும் அவரது இரத்தத்திலேயே ஊறிப்போயிருக்கிறது!

இனமானமும்,மனிதநேயமும்,தேசநலனும், மக்கள் தொண்டும், அவரது இயல்பிலேயே கலந்து இருக்கிறது!!

அதுசரி,ஒரு புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன?
 

What’s app இல் வந்தது.

Posted

 

சற்றுமுன் பாராளுமன்றில் வைத்தியர் அர்ச்சுனா; கேள்விகளால் துளைத்தெடுத்தெடுப்பு! 

 

அதென்ன வைத்தியரை பாராளுமன்றுக்கு அழைப்பது ? எந்த வகையான சட்டம் அது??

Posted

 

மக்களின் Real Hero Dr.Archuna!! | Chavakachcheri Issue!!!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, யாயினி said:

பொறுப்பற்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை| அமைச்சரவை அதிரடி|சாவகச்சேரி வைத்தியசாவை விவகாரம்

நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:
5 hours ago, யாயினி said:

பொறுப்பற்று செயற்பட்ட அதிகாரிகளுக்கு தண்டனை| அமைச்சரவை அதிரடி|சாவகச்சேரி வைத்தியசாவை விவகாரம்

நல்ல செய்தி

நடக்கும்

ஆனால் நடக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 🛑1.சாவகச்சேரி ஆசுப்பத்திரியில் 400 மில்லியன் ரூபாவில் கட்டின building project இல் ஊழல் நடந்திருக்குமா? இல்லையா?
நடந்திருக்கும்!
நடந்திருக்கு எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑2.சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பிணத்தை வைச்சு JMOs காசு கறந்திருக்கிறாங்களா? இல்லையா?
கறந்திருப்பாங்கள்!
காசு கறந்தவங்கள் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑3.பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதா? இல்லையா?
செய்யப்பட்டது!
விற்கப்பட்டது , அதுக்கும் கேதீஸ்வரனுக்கும் சம்பந்தம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑4.அரச வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒரு சில வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருந்துகொண்டு, வராத நாளுக்கும் சம்பளம் எடுத்துக்கொண்டு அதே நாளில் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினமா? இல்லையா?
செய்யினம்!
8மணித்தியாலம் ஒரு சில வைத்தியர்கள் வேலை செய்வதில்லை. களவா போய் பிறைவேற் கிளினிக்கில் வேலை செய்யினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑5.ஒரு சில வைத்தியர்களுக்கும் pharmacy கடைகளுக்கும் தொடர்பு இருக்கு.சட்டவிரோதமாக Commission வாங்குகினமா? இல்லையா?
வாங்குகினம்!
வாங்குகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑6.ஒரு சில அரசியல்வாதிகள் பிழையாக நடக்கும் அரச வைத்தியர்களை தங்கள் அரசியல் செல்வாக்கால் காப்பாத்துகிறார்களா? இல்லையா?
காப்பாத்துகினம்!
ஒரு சில அரசியல்வாதிகள் தவறுசெய்த டாகுத்தர்மாரிடம் லஞ்சம் பெறுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑7.அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் அபிவிருத்தி நிதியை ஒழுங்கா கையாளத்தெரியாமல் பல மில்லியன் ரூபா திருப்பி அனுப்பப்படுகிறதா? இல்லையா?
அனுப்பப்படுகிறது!
ஒழுங்கான திட்டமிடலும் project management உம் இல்லை எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑8.medical marfia வடக்கில் தலைவிரித்தாடுகிறதா? இல்லையா?
ஆடுது!
Medical Marfia வை ஒழிக்கவேணும் எண்டால் முதல்ல அடிப்படையில் ஆசுப்பத்திரியில் இருந்து ஆரம்பிப்பம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑9.நோயாளர்களை தகாத வார்த்தைகளால் சில வைத்தியர்கள் ஏசுகிறார்களா? இல்லையா?
ஏசுகினம்!
முறைப்பாடு செய்தால் courts case எண்டு அலையவேண்டி வரும் என சனத்தை ஒரு சில வைத்தியர்கள் வெருட்டுகினம் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை அதைப்பாத்துக்கொண்டிருக்கும் நாங்கள் லூசா?
🛑10. கடைசியா ஒரு கேள்வி...
டாக்குத்தர் சத்தியமூர்த்தி, டாக்குத்தர் கேதீஸ்வரன், சாவகச்சேரி மரண விசாரணை வைத்திய அதிகாரி,Jaffna JMO சேர் பிரணவன் உட்பட இன்னும் சில ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிப்பாட்டி நீதியான விசாரணை செய்யோணுமா? இல்லையா?
செய்யோணும்!
நீதியான விசாரணைக்குழு ஒண்டு அமைச்சு எல்லா ஊழல்களும் விசாரணை செய்யவேணும் எண்டு சொன்ன வைத்தியர் அருச்சுனா லூசா? இல்லை ஊழல்களை பாத்துக்கொண்டிருக்கிற நாங்கள் லூசா?

#தமிழ்ப்பொடியன்#

  • Thanks 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.