Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கேரி ஒடோனொயு, பெர்ண்ட் டெபுஷ்மேன் & மேட் மர்ஃபி
  • பதவி, பிபிசி நியூஸ், பட்லர், பென்சில்வேனியா மற்றும் லண்டனில் இருந்து
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பென்சில்வேனியாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மேடையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் முகம் சுளித்தபடி, அவரது வலதுபுற காதில் கை வைத்திருப்பதை சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. டிரம்பின் இந்த பொதுக்கூட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.

டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டவுடனே அவர் விரைவில் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டார். அங்கிருந்து உடனடியாக அவருக்காகக் காத்திருந்த வாகனத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். காரில் ஏற்றப்பட்டபோது அவர் தனது முஷ்டியை வெளியே உயர்த்திக் காட்டினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது?

டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் இட்டிருந்த பதிவில், தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாகக் கூறியுள்ளார். அதற்கு முன்னதாக அவரது செய்தித் தொடர்பாளர், டிரம்ப் “நலமாக இருப்பதாகவும்” உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

“ஏதோ தவறு இருப்பதாக நான் உடனடியாக அறிந்தேன். அப்போது உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ரத்தப்போக்கு அதிகமாவதைக் கண்டவுடன், என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துவிட்டேன்,” என்றும் எழுதியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் வடிந்திருந்த ரத்தம் தெளிவாகத் தெரிந்தது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார். அதோடு, “துப்பாக்கிச் சூட்டில் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஆல்லிஜெனி பொது மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க தொழில் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம், “இந்தத் தாக்குதலை நடத்திய ஆண் துப்பாக்கி ஏந்தியிருந்ததாகவும், மைதானத்திற்கு வெளியே சில நூறு மீட்டர் தொலைவிலுள்ள உயரமான அமைப்பிலிருந்து சுட்டதாகவும்” கூறியுள்ளனர். அதோடு, இந்தத் தாக்குதல் ஒரு படுகொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் டிரம்பின் செய்தித் தொடர்பாளர் குக்லீல்மி கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

துப்பாக்கிச்சூடு எப்படி நடந்தது?

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களுக்கு உள்ளாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பிபிசியிடம் பேசியபோது, டிரம்ப் பேசிய மேடையின் வலதுபுறத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட கிரெக், டிரம்ப் மேடையில் ஏறுவதற்கு சுமார் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கட்டடத்தின் கூரையில் சந்தேகத்திற்கிடமான தோற்றத்தில் ஒரு நபர் “கரடி போல் தவழ்ந்து சென்றதை” கண்டதாக பிபிசியிடம் கூறினார். அந்த நபரை காவல்துறையிடம் சுட்டிக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த நபரின் கையில் துப்பாக்கி இருந்தது. அவர் துப்பாக்கியுடன் இருப்பதை எங்களால் தெளிவாகக் காண முடிந்தது. அதை நாங்கள் சுட்டிக்காட்டியபோது போலீசார் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை,” என்று கிரெக் கூறினார்.

இதை நேரில் கண்ட மற்றொரு நபரான ஜேசன், பிபிசியிடம் ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சத்தத்தைக் கேட்டதாகக் கூறினார்.

“டிரம்பை பாதுகாக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் மேடையில் குதிப்பதை நாங்கள் கண்டோம். கூட்டத்தில் இருந்த அனைவரும் மிக வேகமாகக் கீழே இறங்கினார்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு டிரம்ப் எழுந்து நின்று தனது முஷ்டியை மேலே தூக்கிக் காட்டினார்,” என்றார் அவர். மேலும் அங்கு தோட்டா சத்தம் கேட்டதும் குழப்பம் நிலவியதால் அனைவரும் தரையில் படுக்கத் தொடங்கியதாகவும் ஜேசன் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் இருந்த டிம் என்பவர் பேசியபோது, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார்.

"அதிபர் டிரம்ப் கீழே விழுந்ததைத் பார்த்தோம். என்ன செய்வதென்று யாருக்கும் புரியாததால் உடனே எல்லோரும் தரையில் படுக்கத் தொடங்கினார்கள்." என்றார் டிம்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வாரன் மற்றும் டெபி, குறைந்தது நான்கு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்கள். சத்தம் கேட்டவுடன் தரையில் படுத்துவிட்டதாகவும், கூட்டத்தினூடாக மேடைக்கு வந்த ரகசிய சேவை ஏஜென்டுகள், மேடையில் இருந்தவர்களை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர் என்றும் கூறினார்.

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிபர் ஜோ பைடன் கூறியது என்ன?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிரம்ப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடைந்ததாக” தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என்று தெரிவித்த பைடன், “நாம் ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நாம் கண்டிக்க வேண்டும்,” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டொனால்ட் டிரம்புடன் அதிபர் ஜோ பைடன் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இருவரும் என்ன பேசினார்கள் என்பதை வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவிக்கவில்லை.

ஜோ பைடன் பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, பட்லர் நகரத்தின் மேயர் பாப் டாண்டோய் ஆகியோருடனும் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பற்றி அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு

பட மூலாதாரம்,REUTERS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அந்தோணி குக்லீல்மி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியப் பிரதமர் மோதி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

அமெரிக்க ரகசிய சேவை கூறியது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்காவின் ரகசிய சேவை முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடந்த பகுதிக்கு வெளியே, தாக்குதல் நடத்திய நபர் ஓர் உயரமான இடத்திலிருந்து பிரசார மேடையை நோக்கிப் பலமுறை சுட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர் (தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவர்) பார்வையாளர்களில் ஒருவரைக் கொன்றதாகவும் மேலும் இருவரை மோசமாகக் காயப்படுத்தியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபரை ரகசிய சேவை ஏஜென்டுகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

முழுமையான அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூலை 13 அன்று மாலை சுமார் 6:15 மணிக்கு பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில், துப்பாக்கி ஏந்திய சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே, உயரமான ஓரிடத்திலிருந்து இருந்து மேடையை நோக்கிப் பலமுறை சுட்டார்."

"அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது பதில் தாக்குதல் நடத்தினர். அதில் அவர் இறந்துவிட்டார். அமெரிக்க ரகசிய சேவை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தச் சம்பவத்திற்கு விரைவாகப் பதிலளித்தது."

"முன்னாள் அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார். பொதுக் கூட்டத்திலிருந்த ஒரு பார்வையாளர் கொல்லப்பட்டார், இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எஃப்.பி.ஐ (FBI) அமைப்புக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது."

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய டிரம்ப்

இந்தத் தாக்குதலின் காரணமாக, தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிந்தார். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இப்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டதாக பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் எங்கு செல்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பேரணிக்குப் பிறகு இன்று நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டரில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.

திங்களன்று நடக்கவிருக்கும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்கத்திற்காக, விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவும் முன்னாள் அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

 

கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ்

கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தத் தாக்குதலில் டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை, நலமாக இருக்கிறார் என்பதைக் கேட்டு ஆறுதல் அடைந்ததாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

"அவருக்காகவும், அவரது குடும்பத்தினருக்காகவும், இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று ஹாரிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"இதுபோன்ற வன்முறைக்கு நம் நாட்டில் இடமில்லை. இந்த வெறுக்கத்தக்க செயலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். இது மேலும் வன்முறைக்கு வழிவகுக்காமல் இருக்க நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

 

டிரம்பின் மகள் கூறியது என்ன?

டிரம்ப்பின் மகள் கூறியது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இவாங்கா டிரம்ப்

டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"என் தந்தைக்காகவும், பென்சில்வேனியாவின் பட்லரில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் நீங்கள் காட்டிய அன்பு மற்றும் செய்த பிரார்த்தனைகளுக்கு நன்றி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"விரைவாகவும் உறுதியாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்ட ரகசிய சேவை மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டிற்காக நான் தொடர்ந்து பிரார்த்திக்கிறேன். அப்பா! இன்றும் எப்போதும் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோதி, ராகுல் காந்தி கண்டனம்

பிரதமர் மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோதி (கோப்புப் படம்)

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாக பிரதமர் மோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது நண்பரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் என்னைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அந்தப் பதிவில், "அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை, அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தாக்குதலில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து அமெரிக்க மக்களுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என்றும் பிரதமர் மோதி கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டுவதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்டுள்ள கொலை முயற்சி தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு, நான் மிகவும் கவலைப்பட்டேன். இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, ஏராளன் said:

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், வெற்றியைத் தீர்மானிக்கும் மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் அமைந்திருக்கும் பட்லர் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது

large.IMG_6858.jpeg.ca4d3d4708882bcbb46e

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்கா: அதிபர் தேர்தல் களத்தையே மடைமாற்றப் போகும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்கா: அதிபர் தேர்தல் களத்தையே மடைமாற்றப் போகும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரா ஸ்மித்
  • பதவி, வட அமெரிக்க ஆசிரியர்
  • 11 நிமிடங்களுக்கு முன்னர்

டொனால்ட் டிரம்ப், தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு, முகத்தில் ரத்தத்துடன் காட்சியளிப்பது, கையை உயர்த்தி மக்களை நோக்கிக் கத்துவது, பின்னர் அவர் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சூழப்பட்டு மேடையை விட்டு வெளியேறுவது ஆகியவற்றின் அசாதாரண புகைப்படங்கள் அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் இடம்பெறுவது மட்டுமல்லாது, நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலின் போக்கையே மடைமாற்றக்கூடும்.

அரசியல் வன்முறையின் இந்த அதிர்ச்சியூட்டும் செயல், அதிபர் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகள் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலை ஒரு படுகொலை முயற்சியாகக் கருதுவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தன.

காதிலிருந்து ரத்தம் கசிய, காற்றில் கையை உயர்த்தியவாறே செல்லும் டிரம்பின் புகைப்படத்தை தாக்குதல் நடந்தவுடன் அவரது மகன் எரிக் டிரம்ப், "அமெரிக்காவுக்குத் தேவையான போர் வீரர் இவர்தான்" என்ற வாசகத்துடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

 

பைடன் தரப்பு என்ன செய்கிறது?

அமெரிக்கா: அதிபர் தேர்தல் களத்தையே மடைமாற்றப் போகும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் ஜோ பைடன், இதுபோன்ற அரசியல் வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றார்.

அதிபர் தேர்தலுக்கான தனது போட்டியாளர் டிரம்ப் குறித்து கவலை தெரிவித்தார் பைடன். இன்று இரவு அவருடன் பேசவிருப்பதாகவும் பைடன் கூறினார்.

பைடனின் தேர்தல் பிரசாரக் குழு அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. டிரம்புக்கு எதிரான அதன் தொலைக்காட்சி விளம்பரங்களையும் தற்காலிகமாக அகற்றுவதற்கான வேலை நடக்கிறது.

இந்த நேரத்தில் டொனால்ட் டிரம்பை தாக்குவது பொருத்தமற்றது என்று பைடனின் தரப்பு நம்புகிறது. அதற்குப் பதிலாக இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதில் அது கவனம் செலுத்துகிறது.

பல்வேறு தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள், டிரம்புடன் அதிகம் உடன்படாதவர்கள்கூட இதைக் கண்டித்துள்ளார்கள். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.

 
அமெரிக்கா: அதிபர் தேர்தல் களத்தையே மடைமாற்றப் போகும் டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் இந்த வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். டிரம்ப் பெரிய அளவில் காயமடையவில்லை என்பது தங்களுக்குப் பெரிய ஆறுதல் என்றும் கூறியுள்ளார்கள்.

ஆனால் டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் இந்த வன்முறைக்காக பைடனை குற்றம் சாட்டி வருகின்றனர். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அதிபர் பைடன் ஒரு படுகொலை முயற்சியைத் தூண்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

பைடனின் பிரசார உரைகள்தான் இந்தச் சம்பவத்திற்கு நேரடியாக வழிவகுத்தது என்று செனட்டர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். டிரம்ப் தரப்பின் துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜே.டி.வான்ஸ் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மற்ற குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளும் இதேபோன்ற கருத்துகளைச் சொல்கிறார்கள். அமெரிக்க அரசியல் ஏற்கெனவே ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என பைடன் தரப்பு கூறுகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், தேர்தல் களத்தில் மிகவும் அசிங்கமான ஒரு சண்டைக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதை நாம் காணலாம். அத்தகைய சண்டைகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரக் களத்தையே மறுவடிவமைக்கும் ஒன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........!

சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!  

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........!

சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!  

டிரம்பின் டிரம்ப் card தான் இத்த துப்பாக்கிச் சம்பவம். இருவாரங்களுக்குமுன்னே டிரம்ப் பயங்கரவாத தாக்குதல் தடக்குமென்று அடிச்சு சொன்னது ஞாமகமிருக்குதோ? இது வாக்கு வங்கியை வைத்த குறி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருண்ட தருணங்களிலிருந்து மீண்ட ரம்ப் அவர்கள் நலமடைய வேண்டுகின்றேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

ஆபிரகாம் லிங்கன், கென்னடி வரிசையில் இப்போது ட்ரம்ப் ........!

சிறந்த பழங்களைத்தான் வண்டு துளைக்கும், திறமையான ஜனாதிபதிகளை குண்டு துளைப்பது அமெரிக்காவில் ஒன்றும் புதிதல்ல.......அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் ட்ரம்தான் சிறந்த தலைவர் என்பதை சம்பவம் உணர்த்துகின்றது.........!  

கென‌டிக்கு ந‌ட‌ந்த‌து சின‌ப்ப‌ர் தாக்குல் த‌லைவ‌ரே கென‌டிய‌ எப்ப‌டியாவ‌து கொல்ல‌னும் என்று ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தாக்குத‌ல் ..................இந்த‌ துப்பாக்கி சூட்டில் ச‌ந்தேக‌ம் எழுது..................டொனால்ட் டிரம்ப்க்கு சின்ன‌ காய‌ம் மெதுவான‌ ர‌த்த‌ம் 

 

ர‌ம்பை போட்டு த‌ள்ள‌னும் என்றால் ச‌க்தி வாய்ந்த‌ கை துப்பாக்கியால் கென‌டிக்கு த‌லையில் சுட்ட‌ மாதிரி சுட்டு கொன்று இருபாங்க‌ள்

 

இது அர‌சிய‌ல் ஆதாய‌த்த‌ பெற‌ பிலான் ப‌ண்ணி செய்த‌ மாதிரி இருக்கு ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம் ........................

 

டொனால்ட் டிரம்ப் ந‌ல்ல‌ ம‌னித‌ர் அவ‌ர் ஆட்சியில் இருந்த‌ 4 ஆண்டுக‌ளில் உல‌க‌ம் அமைதியாய் இருந்த‌து....................ஊதிவிட்டால் கீழ‌ விழுந்து போர‌ பைட‌ன் ஆட்சிக்கு வ‌ந்த‌ பிற‌க்கு தான் உல‌க‌ அள‌வில் க‌டும் போர்

ர‌ம் ஆட்சியில் இருந்து இருந்தா உக்கிரேன் ர‌ஸ்சியா போர் வ‌ந்து இருக்காது அப்ப‌டி வ‌ந்து இருந்தாலும் பேச்சு வார்த்தை மூல‌ம் முடிவு கிடைச்சு இருக்கும்..................டொனால்ட் டிரம்ப் ம‌ற்றும் புட்டின் இவ‌ர்க‌ளுக்குள் ந‌ல்ல‌ ந‌ட்பு உற‌வு இருக்கு.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் யார்? பெயர் விபரங்களை வெளியிட்டது எவ்பிஐ.

14 JUL, 2024 | 12:33 PM
image
 

தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் குறித்த தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது.

20 வயது தோமஸ் மத்தியு குரூக்ஸ் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என  தெரிவித்துள்ள  எவ்பிஐ இவர் சம்பவம் இடம்பெற்ற பென்சில்வேனியாவின் பட்லரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெத்தெல் பூங்காவை  என்ற பகுதியை  சேர்ந்தவர் என  குறிப்பிட்டுள்ளது.

மத்தியு குரூக்ஸ் இரகசிய சேவைப்பிரிவை சேர்ந்தவர்களால் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பதிவு செய்யப்பட்ட குடியரசுக்கட்சியின் ஆதரவாளராக தன்னை பதிவு செய்துகொண்டவர். இதேவேளை ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படும் குழுவிற்கு சிறியளவு நிதியை வழங்கியவர் என்பது பொதுஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

இம்முறையே அவர் முதல்தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவிருந்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/188420

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினப்பர் தாக்குதல் ஆனால் காதில் மட்டும். 

WWF ஆளப்பா. இவ்வளவு செய்திட்டம் இது செய்ய தெரியாதா.  ..???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துப்பாக்கி சூடு நடந்த பொழுது எடுத்த காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

துப்பாக்கி சூடு நடந்த பொழுது எடுத்த காணொளி.

என்ன‌ த‌மிழ்சிறி அண்ணா

சுட்ட‌வ‌ருக்கு ப‌யிற்ச்சி காணாது போல் தெரியுது....................இத்த‌னை தோட்டாவாலும் சுட்டு ர‌ம் ம‌லை போல் நின்று வெறித்த‌ன‌த்தோடு கைய‌ உய‌ர்த்தி காட்டுகிறார்😛 த‌லைக்கு தினா வெட்டு அதிக‌ம் தான்.....................

 

அது ச‌ரி ர‌ம்ப‌ சுட்ட‌ துப்பாக்கி எந்த‌ வ‌கை துப்பாக்கி இதை ஏன் கேட்க்கிகிறேன் என்றால் ப‌ல‌ மாடி உய‌ர‌த்தில் இருந்து கென‌டிய‌ ஒரு சூட்டின் மூல‌ம் கென‌டியின் மண்டை சித‌ரி மருத்துவமனைக்கு கொண்டு போக‌ முதலே இற‌ந்து விட்டார் .......................இதில‌ ஏதோ குள‌று ப‌டி இருப்ப‌தாக‌ தெரியுது......................துப்பாக்கியால் சுட்டால் தொண்ட‌ர்க‌ள் தொட்டு ப‌ல‌ர் ப‌த‌றி அடிச்சு ஓடுவின‌ம் ஆனால் இந்த‌ காணொளியில் அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லையே ஹா ஹா.ர‌ம்பின் உட‌ம்பில் தோட்டா போன‌ மாதிரி தெரிய‌ வில்லை..................இது முன் கூட்டியே போட்ட‌ பிலான் மாதிரி தெரியுது...................இது வெறும் ராமா 😁😛........................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ த‌மிழ்சிறி அண்ணா

சுட்ட‌வ‌ருக்கு ப‌யிற்ச்சி காணாது போல் தெரியுது....................இத்த‌னை தோட்டாவாலும் சுட்டு ர‌ம் ம‌லை போல் நின்று வெறித்த‌ன‌த்தோடு கைய‌ உய‌ர்த்தி காட்டுகிறார்😛 த‌லைக்கு தினா வெட்டு அதிக‌ம் தான்.....................

 

அது ச‌ரி ர‌ம்ப‌ சுட்ட‌ துப்பாக்கி எந்த‌ வ‌கை துப்பாக்கி இதை ஏன் கேட்க்கிகிறேன் என்றால் ப‌ல‌ மாடி உய‌ர‌த்தில் இருந்து கென‌டிய‌ ஒரு சூட்டின் மூல‌ம் கென‌டியின் மண்டை சித‌ரி மருத்துவமனைக்கு கொண்டு போக‌ முதலே இற‌ந்து விட்டார் .......................இதில‌ ஏதோ குள‌று ப‌டி இருப்ப‌தாக‌ தெரியுது......................துப்பாக்கியால் சுட்டால் தொண்ட‌ர்க‌ள் தொட்டு ப‌ல‌ர் ப‌த‌றி அடிச்சு ஓடுவின‌ம் ஆனால் இந்த‌ காணொளியில் அப்ப‌டி ஒன்றும் ந‌ட‌ந்த‌ மாதிரி தெரிய‌ வில்லையே ஹா ஹா.ர‌ம்பின் உட‌ம்பில் தோட்டா போன‌ மாதிரி தெரிய‌ வில்லை..................இது முன் கூட்டியே போட்ட‌ பிலான் மாதிரி தெரியுது...................இது வெறும் ராமா 😁😛........................................

பையன்.... தூரத்தில் இருந்து, துப்பாக்கியால் சுட்டு எல்லாம் ட்ராமா செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ட்ராமா செய்திருந்தாலும்... இப்போதைக்கு, ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அப்படி  எவரும் நீங்கள் நினைத்தமாதிரி எழுதியாக தெரியவில்ல. உண்மைச் சம்பவம் போலதான் தெரிகின்றது.
ட்ரம்ப்... மயிரிழையில் உயிர் தப்பியதாகவே நான் கருதுகின்றேன். 

ஒருவனுக்கு ஆயுள்  நல்ல பலமாக இருந்தால், எந்த உயிர் ஆபத்தில் இருந்தும் தப்பி விடுவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

ர‌ம் ஆட்சியில் இருந்து இருந்தா உக்கிரேன் ர‌ஸ்சியா போர் வ‌ந்து இருக்காது அப்ப‌டி வ‌ந்து இருந்தாலும் பேச்சு வார்த்தை மூல‌ம் முடிவு கிடைச்சு இருக்கும்..................டொனால்ட் டிரம்ப் ம‌ற்றும் புட்டின் இவ‌ர்க‌ளுக்குள் ந‌ல்ல‌ ந‌ட்பு உற‌வு இருக்கு.........................

வீரப்பையன் அண்ணா, 

டொனால்ட் ட்ரம்பினதும் புட்டினதும் நட்புறவு இஸ்ரேலை வைத்துத்தான் இருக்கும். ட்ரம்ப் ஒரு ஸியோனிச ஆதரவாளர். புட்டின் இஸ்ரேலைத் தொட்டுப் பார்க்கட்டும் அப்ப தெரியும் ட்ரம்பின் நிலைப்பாடு.

அது ஓருபுறமிருக்க, இப்ப பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும், எல்ஜிபிடிகியூ கூட்டத்துக்கும் வயித்தில புளிகரைக்கத்தொடங்கியிருக்கும்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, தமிழ் சிறி said:

பையன்.... தூரத்தில் இருந்து, துப்பாக்கியால் சுட்டு எல்லாம் ட்ராமா செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ட்ராமா செய்திருந்தாலும்... இப்போதைக்கு, ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அப்படி  எவரும் நீங்கள் நினைத்தமாதிரி எழுதியாக தெரியவில்ல. உண்மைச் சம்பவம் போலதான் தெரிகின்றது.
ட்ரம்ப்... மயிரிழையில் உயிர் தப்பியதாகவே நான் கருதுகின்றேன். 

ஒருவனுக்கு ஆயுள்  நல்ல பலமாக இருந்தால், எந்த உயிர் ஆபத்தில் இருந்தும் தப்பி விடுவார்கள்.

தூரத்தில் இருந்து சுட்டாலும் ஒரு தோட்டா கூட‌ ர‌ம்பின் மெய் பாதுகாவலர்கள் மீது கூட‌ ப‌ட‌ வில்லையா அது தான் ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாலி said:

வீரப்பையன் அண்ணா, 

டொனால்ட் ட்ரம்பினதும் புட்டினதும் நட்புறவு இஸ்ரேலை வைத்துத்தான் இருக்கும். ட்ரம்ப் ஒரு ஸியோனிச ஆதரவாளர். புட்டின் இஸ்ரேலைத் தொட்டுப் பார்க்கட்டும் அப்ப தெரியும் ட்ரம்பின் நிலைப்பாடு.

அது ஓருபுறமிருக்க, இப்ப பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும், எல்ஜிபிடிகியூ கூட்டத்துக்கும் வயித்தில புளிகரைக்கத்தொடங்கியிருக்கும்.😂

வாலி அங்கில்...................

புட்டின் இதுவ‌ரை இஸ்ரேல் பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்க‌ வில்லை...................புட்டின் ஈரான் கூட‌ ந‌ல்ல‌ ந‌ட்பு உற‌வை பேனுகிறார் அம்ம‌ட்டும் தான்

 

இஸ்ரேல் பிர‌ச்ச‌னைய‌ உல‌க‌ அள‌வில் தென் ஆபிரிக்கா கிழிச்சு தொங்க‌ போட்டு விட்ட‌து

இஸ்ரேல் செய்யும் இன‌ப் ப‌டுகொலை ப‌ற்றி👏🙏.....................

 

புட்டின் உக்கிரேன் பிர‌ச்ச‌னைய‌ முடிக்காம‌ இன்னொரு நாட்டின் மீது கை வைப்பார் என்று நான் நினைக்க‌ வில்லை 😁....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Trump ஐச் சுற்றியுள்ள ஒருவருக்குமே காயம் இல்லையா? 

எங்கேயோ இடிக்குதே,......

சுட்டவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்,.....

😁

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Trump ஐத் தாண்டிப் போகும் துப்பாக்கி ரவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரம்பின் வாயை பார்த்த பின் எழுதவே தயக்;கமாகத் தான் உள்ளது..🤭

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அமெரிக்காவின் வாழ்நாள் ஜனாதிபதி இனிமேல் டிரம்ப்தான்..

இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அமெரிக்க மக்களின் வோட்டிங் ட்ரென்ட் பெருமளவில் மாறும் அல்லது ஸிம்பதியை உருவாகும் என நான் கருதவில்லை. சில மாகாணங்கள் எப்பொழுதுமே குடியரசு கட்சி அல்லது ஜனநாய கட்சியின் கோட்டைகளாக இருப்பவை அவற்றின் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஸ்விங்க் ஸ்டேட்ஸ் தான் தீர்மானம் செய்யப்போகின்ற மாநிலங்கள். அப்படியான ஸ்விங்க் ஸ்டேட்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம். மற்றும்படி பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  நல்லதொரு  வலுவான வேட்பளரை நிறுத்தினால் ட்ரம்ப் தோற்கடிக்கப்படலம்.

Edited by வாலி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வாலி said:

இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் அமெரிக்க மக்களின் வோட்டிங் ட்ரென்ட் பெருமளவில் மாறும் அல்லது ஸிம்பதியை உருவாகும் என நான் கருதவில்லை. சில மாகாணங்கள் எப்பொழுதுமே குடியரசு கட்சி அல்லது ஜனநாய கட்சியின் கோட்டைகளாக இருப்பவை அவற்றின் மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை. ஸ்விங்க் ஸ்டேட்ஸ் தான் தீர்மானம் செய்யப்போகின்ற மாநிலங்கள். அப்படியான ஸ்விங்க் ஸ்டேட்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம். மற்றும்படி பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.  நல்லதொரு  வலுவான வேட்பளரை நிறுத்தினால் ட்ரம்ப் தோற்கடிக்கப்படலம்.

Bro ர‌ம்புக்கு கீழ‌ தான் இவை எல்லாரும்

Donald Trump 

Joe Biden 

Kamala Harris 

Gavin NweSonm 

Michelle Obama 

Gretchen Whitmer 

Hillary Clinton 

ர‌ம்புக்கு தான் அதிக‌ ஆத‌ர‌வு என்று என‌க்கு தெரிந்த‌ த‌ள‌த்தில் பார்த்தேன்................2020 பைட‌ன் தான் ஆட்சிய‌ பிடிப்பார்க‌ள் என்று சொன்னார்க‌ள் அதே போல் பைட‌ன் ஆட்சிய‌ பிடித்தார்

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் யார் உட்காருவது என்று முடிவெடுப்ப‌து இரண்டே இரண்டு மாநிலங்கள் தான் 

ஒன்று California இர‌ண்டாவ‌து Texas.............அமெரிக்க ம‌க்க‌ள் தொகை 38கோடி 

அதில் Californiaவில் ம‌ட்டும் 8கோடி ம‌க்க‌ள் . Texasசில் 7கோடி ம‌க்க‌ள்  இந்த‌ இர‌ண்டு மானில‌த்தில் ம‌ட்டும் 15 கோடி ம‌க்க‌ள் மீத‌ம் உள்ள‌ மானில‌ங்க‌ளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள்

 

11மாத‌ தேர்த‌ல் முடிவு சொல்லும் யார் அமெரிக்கா ஜ‌னாதிப‌தி என்று

ர‌ம் வெல்வ‌து உறுதி👍😁......................... 

 

 

 

Edited by வீரப் பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் யார் ஆட்சிய‌ பிடித்தாலும் எங்க‌ளுக்கு விடிவு கால‌ம் வ‌ந்திட‌ப் போவ‌து கிடையாது..................கால‌ நீர் ஓட்ட‌த்தில் டெல்லியில் இருப்ப‌வ‌ர்க‌ள் ந‌ல்ல‌ முடிவெடுத்து த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்தால் ச‌ரி ம‌ற்ற‌ம் ப‌டி எந்த‌ நாட்டில் யார் ஜ‌னாதிப‌தியா வ‌ந்தாலும் இப்ப‌ இருக்கிற‌ நிலை தான் த‌மிழ‌ர்க‌ளுக்கு எப்ப‌வும்...............15வ‌ருட‌த்தை க‌ட‌ந்தும் ஒரு தீர்வும் இல்லாம‌ அனாதைக‌ள் போல் அலைகிறோம்☹️..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டிரம்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயது இளைஞரா? என்ன காரணம்? அமெரிக்க புலனாய்வு அமைப்பு புதிய தகவல்

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ பற்றிய தகவல்கள்

பட மூலாதாரம்,CBS NEWS

படக்குறிப்பு,தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் மெக்ஆர்தர்
  • பதவி, பிபிசி செய்தி
  • 14 ஜூலை 2024, 15:37 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ என்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த டிரம்ப் அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பார்வையாளர் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது இளைஞரான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

டிஎன்ஏவைப் பயன்படுத்தி அடையாளத்தை கண்டுபிடித்த அதிகாரிகள்

எஃப்.பி.ஐ. அமைப்பின் அறிக்கையில், முன்னாள் அதிபர் மீதான படுகொலை முயற்சியில் `சம்பந்தப்பட்ட’ நபரின் பெயர் க்ரூக்ஸ் என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.

அந்த நபர் அடையாள அட்டையை வைத்திருக்கவில்லை என்பதால் புலனாய்வு அதிகாரிகள் அவரை அடையாளம் காண டி.என்.ஏ.வைப் பயன்படுத்தினர் என்றும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

பிட்ஸ்பர்க் ட்ரிப்யூன்-ரிவ்யூ செய்தித்தாள் கூற்றின்படி, அவர் பென்சில்வேனியாவில் உள்ள பெத்தேல் பார்க் பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி, டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70கிமீ (43 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. க்ரூக்ஸ் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகத் தெரிகிறது.

அமெரிக்க ஊடகங்களின்படி, க்ரூக்ஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் (Republican Party) என்பதை மாநில வாக்காளர் பதிவுகள் காட்டுகின்றன.

அவர் 2021 இல் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழுவான `ActBlue’ அமைப்புக்கு $15 நன்கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,DOUG MILLSTHE NEW YORK TIMESREDUXEYEVINE

படக்குறிப்பு,டிரம்பின் காதுகளை உரசிச் சென்ற தோட்டா

அவரின் நோக்கம் என்ன?

க்ரூக்ஸின் நோக்கம் குறித்தும், வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"அவரின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை" என்று சனிக்கிழமை இரவு ஒரு மாநாட்டில் எஃப்.பி.ஐ பிட்ஸ்பர்க் சிறப்பு முகவரான கெவின் ரோஜெக் கூறினார்.

என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணையை முழுமையாக முடிக்க பல மாதங்கள் வரை ஆகலாம், மேலும் க்ரூக்ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய புலனாய்வு அதிகாரிகள் அயராது உழைப்பார்கள் என்றும் ரோஜெக் கூறினார்.

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய க்ரூக்ஸின் தந்தை, மேத்யூ க்ரூக்ஸ், "என்ன நடக்கிறது" என்பதை புரிந்துக் கொள்ள முயற்சிப்பதாக அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். தனது மகனைப் பற்றி பேசுவதற்கு முன் "நான் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் பேசும் வரை காத்திருப்பேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

க்ரூக்ஸ் வசித்த வீட்டிற்கு செல்லும் சாலையை போலீஸார் சீல் வைத்துவிட்டதடாக சிபிஎஸ் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அதிகாரிகள் தங்களை வெளியேற்றியதாக பக்கத்து வீட்டுக்காரர் சிபிஎஸ்ஸிடம் கூறியுள்ளார்.

க்ரூக்ஸின் வீட்டைச் சுற்றிலும் விசாரணை நடைபெற்று வருவதாக பெத்தேல் பார்க் போலீசார் தெரிவித்தனர்.

 

க்ரூக்ஸ் வேறு யாரையாவது தாக்கினாரா?

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம்,TMZ

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூன்று பேரும் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த ஆண்கள் என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில் "என் மீது சுடப்பட்ட தோட்டா என் வலது காதின் மேல் பகுதியை துளைத்தது" என்று பதிவிட்டிந்தார்.

“ஏதோ தவறு நடப்பதாக நான் உடனடியாக உணர்ந்தேன். அப்போது என் காதருகில் உச்ச ஸ்துதியில் விசில் போன்ற சத்தமும் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக தோட்டா ஒன்று என் தோலைக் கிழித்துச் சென்றதை உணர்ந்தேன்” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் டிரம்பை சூழ்ந்து அழைத்துச் செல்லும்போது அவரது காது மற்றும் முகத்தில் ரத்தம் வடிவது தெளிவாகத் தெரிந்தது.

குடியரசுக் கட்சியின் தேசியக் குழு (RNC) இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, டிரம்ப் நலமாக இருக்கிறார், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் பதிவிடப்பட்டிருந்தது.

டிரம்பிடம் இருந்து எவ்வளவு தூரத்தில் க்ரூக்ஸ் நின்றிருந்தார்?

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ பற்றிய தகவல்கள்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு, ஒரு கட்டிடத்தின் கூரை (க்ரூக்ஸ் என்று கூறப்படும் நபர்) மீது ஒரு நபர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

பிபிசி வெரிஃபை, சம்பவம் நடந்த இடத்தின் காட்சிகளை ஆய்வு செய்து, டிரம்புக்கு 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி (flat warehouse) கட்டடத்தின் மேல் இருந்து துப்பாக்கி வைத்திருந்த நபர் தூப்பாக்கிச்சூடு நடத்தியதை உறுதி செய்தது.

`TMZ’ வெளியிட்ட வீடியோ காட்சிகள், துப்பாக்கிச்சூடு நடந்த தருணத்தைக் காட்டுகின்றன.

டிரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியவர் "ஏஆர்-ஸ்டைல் துப்பாக்கி" (AR-style rifle) பயன்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான `சிபிஎஸ் நியூஸ்’ ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் எந்த வகையான துப்பாக்கியைப் பயன்படுத்தினார், எத்தனை முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பதை பற்றி உடனடியாகக் கண்டறிய முடியவில்லை என்று எஃப்.பி.ஐ. கூறுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் க்ரூக்ஸ் சம்பவ இடத்திலேயே அமெரிக்க ரகசிய சேவை ஏஜென்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆயுதமேந்திய அதிகாரிகள் கட்டடத்தின் மேற்கூரையில் ஒரு சடலத்தை நோக்கி செல்வதை வீடியோ காட்டுகிறது.

எஃப்.பி.ஐ. கூறியது என்ன?

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் `தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்’ பற்றிய தகவல்கள்

பட மூலாதாரம்,REUTERS

தேர்தல் பிரசார கூட்டத்தின் போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. (FBI) தெரிவித்துள்ளது.

பென்சில்வேனியாவில் பட்லர் என்ற இடத்தில் ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இறந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

20 வயது இளைஞன், ரகசிய சேவை ஏஜென்டுகளால் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், முன்னாள் அதிபரின் படுகொலை முயற்சியில் க்ரூக்ஸ் "சம்பந்தப்பட்டவர்" என்றும் அதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளது.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.