Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பு - துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

22 JUL, 2024 | 02:51 PM
image
 

திருவாரூர்: அமெரிக்காவின் ஜனநாயக கட்சி ஜனாதிபதிர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதியாக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றினார்.

ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பி.வி கோபாலன் குடியேறினார்.

பின்னர் அமெரிக்காவில் பி வி கோபாலன் குடும்பம் குடியேறியது.இவரது இரண்டாவது மகள் சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். அரசியலில் வளர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன்  வெற்றி பெற்ற போது துணை அதிபராக போட்டியிட்டு கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரீஸ் குடும்பம் இன்றளவும் தமிழகத்தோடு நெருக்கமாக உள்ளது. அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது உறவினர்களில் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர். மேலும் அவரது குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்த கோயிலுக்கு கமலாஹரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விபரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தின் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமலா ஹாரீஸ் கடந்த 2019 ம் ஆண்டு "Truth Be Hold'' என்ற புத்தகத்தில் தனது தாத்தா . கோபாலன் தனக்கு ஊக்க சக்தியாக இருந்ததாகவும் கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தாத்தாவுக்கு நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் குடும்பத்தினரோடு கலந்து கொண்டது இன்றளவும் தனது நினைவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பதிலிருந்து தனது பொது வாழ்க்கைக்கு இந்திய வம்சாவளி உறவுகள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்துள்ளதை உணர்ந்திருக்கிறார் என அவரது உறவினர்கள் பெருமிதத்தோடு தெரிவிக்கிறார்கள்.

https://www.virakesari.lk/article/189090

இந்தியர்கள் அலப்பறை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
சென்ற முறை   கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப் பட்ட போது… கமலா ஹரிசை  வாழ்த்தி, பால் ஊத்தாத குறையாக “கட் அவுட்” எல்லாம் வைத்து வெறுப்பேற்றினார்கள்.
இதானால் தான்… இந்தியர்களை கழுவி ஊற்ற வேண்டி உள்ளது.

  • Replies 142
  • Views 10.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உயர்தர வாழ்க்கை என்பது பிச்சை அல்ல. அது கடின உழைப்பினூடாக அமைத்துக் கொள்வது..  சட்டத்தின் ஆட்சி Rule of Law எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பிரயாசை உள்ள  மக்கள் சீரான உயர்தர வாழ்க்கையை அமைத்து

  • ரசோதரன்
    ரசோதரன்

    ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதை

  • குமாரசாமி
    குமாரசாமி

    விசுகர்! எமது தஞ்ச வாழ்வை வைத்து அறம் பற்றிய முடிவிற்கு வரமுடியாது. நீங்கள் கருதும் அறத்திற்கு பெயர் நன்றிக்கடன். நீங்கள் கருதும் மேற்குலக அறத்தை எமது மண்ணில் போரால் அல்லது வறுமையால்  அவதிப்படும் மக

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சட்டத்தின் ஆட்சி இல்லாத நாடுகளை   உங்கள் இந்த பதில் தெளிவாக சுட்டி காட்டியுள்ளது   அதாவது   இலங்கை தமிழர்கள் வாழத நாடுகள்  சட்டத்தின் ஆட்சி அற்ற நாடுகள்  ......அந்த நாடுகள் தொடர்ந்தும் அப்படியே இருக்க வேண்டும் என்று கருத்துகள் எழுதுவது தான் கொடுமை   

ஆமாம் உண்மை ஒவ்வென்றாகத். தான்   செய்யலாம் 

வழமைபோல கபிதன்.  திரியை   திறமையாக. திட்டமிடப்பட்ட முறையில்  திசை திருப்பி விட்டார் 🤣🙏

இனி அமெரிக்கா தேர்தல் செய்திகளை எதிர்பார்க்கிறேன்…நீங்கள்    ??? 

கந்தையருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 

🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எட்டு வருடங்களின் முன், இங்கு வேலையிலும்,வெளியிலும் சிலர் நேராகவே, வெளியாகவே பெண் ஒருவர் அதிபராக வருவதற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொன்ன போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. இன்னும் சிலரோ இதையே வெளியில் சொல்லாமல் இருந்திருக்கவும் கூடும்.  எட்டு வருடங்கள் ஆகி விட்டாலும், வெறும் கருத்துகளால் மனங்களில் மாற்றங்கள் உண்டாகும் வயதை அதற்கு முன்னேயே நாங்கள் தாண்டி விட்டோம், ஆகவே அவர்கள் இன்றும் அப்படியே இருப்பார்கள் என்றே நம்புகின்றேன். இப்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் ஏதும் வித்தியாசம் இருக்கலாம், உட்பொருளிலும் தெரிவுகளிலும் அநேகமாக எந்த மாற்றமும் இருக்காது.

கமலா ஹாரீஸ் ஒரு எழுத்தாளராக முயற்சிக்கலாம். அவரிடம் அப்படியான ஒரு திறமை இருப்பது போலவே தெரிகின்றது. ஒரு வித 'தத்துவ அலட்டல்கள்' போன்றே அவரின் பேச்சுகள் இருக்கின்றன. இதுவே நடுநிலையில் நிற்கும் மக்களை அந்நியப்படுத்த போதுமானது.

என்னுடைய இங்கு வாழும் இலங்கை மற்றும் இந்திய நண்பர்களில் மிகப் பெரும்பாலானோர் ஜனநாயக் கட்சியின் ஆதரவாளர்களே. அவர்கள் நேற்றிலிருந்து ஒரு புது உற்சாகத்துடன் இருக்கின்றார்கள். ஆனாலும் கலிஃபோர்னியா தேர்தல் கணக்கில் இல்லவே இல்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும்.  

 அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது அமெரிக்க அதிபர்களால் உண்டாக்கப்படுவதில்லை. அமெரிக்கா முதலாளிகளால், முதலாளிகளுக்காக மாற்றப்பட்ட ஒரு நாடு. ஆதிக்கம் அங்கிருந்தே உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றது. இன்று  உலகில் கண்ணுக்கெட்டியவரை ஒரு மாற்று இல்லை என்பதே நிஜம். ஒரு பங்குச் சந்தை சரிவு, கோவிட் தொற்று, டாலரின் வீழ்ச்சி, கடைசியாக வந்த Antivirus என்று ஒவ்வொரு தடவையும், 'கதை முடிந்து விட்டது.........' என்று வெளியிலிருந்து பலரும் சொல்வார்கள். ஆனால் மாற்று கிடையாது. 

அமெரிக்காவின் ஆதிக்கம், அது பல வேளைகளில் மனிதாபிமானம் அற்றது தான், குறைக்கப்பட வேண்டும் என்றால், அது மற்றைய ஒவ்வொரு நாட்டிலிருந்துமே ஆரம்பிக்கப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இருக்கும் உறவும், ஊடலும், தேவைகளும் போலவே உலகில் பல நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது. இங்கு எவர் அதிபரானாலும் அதில் மாற்றம் இல்லை.      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கந்தையருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 

🤦🏼‍♂️

இது அமெரிக்கா தேர்தல் பற்றிய கேள்வி இல்லை எனவேதான் பதில் அளிக்க முடியவில்லை தயவுசெய்து மன்னிக்கவும் 😂🙏.  

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

இது அமெரிக்கா தேர்தல் பற்றிய கேள்வி இல்லை எனவேதான் பதில் அளிக்க முடியவில்லை தயவுசெய்து மன்னிக்கவும் 😂🙏.  

அதுவும் சரிதான்,.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

  அதாவது   இலங்கை தமிழர்கள் வாழத நாடுகள்  சட்டத்தின் ஆட்சி அற்ற நாடுகள்  

உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவும் நீதியான நாடுகள் எவை என்பதை இலங்கை தமிழர்கள் பெருந் தொகையாக குடியேறி உலகத்திற்கே அடையாளம் காட்டி உள்ளார்கள் 👍  இலங்கை தமிழர்கள் குடியேறாத நாடுகள் அறம் அற்றவை தீயவை என்பது  உள்ளங்கையில் உள்ள உதைபந்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

இன்று  உலகில் கண்ணுக்கெட்டியவரை ஒரு மாற்று இல்லை என்பதே நிஜம்.

அது எல்லாம் அவர்களுக்கு நன்றாக தெரியும் அண்ணா. அதனால் தானே மேற்குலகில் தமது  பாதங்களை உறுதியாக பதித்து மகிழ்ந்திருக்கின்றார்கள்.  புதினும், ஜின்பிங்கும்,  கிம்யொங்கும்  முல்லாக்களும்  மாற்றத்தை எல்லாம் கொண்டுவர போகிறார்கள் என்பது எல்லாம் பொழுது போக வேண்டுமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kandiah57 said:

அதாவது   இலங்கை தமிழர்கள் வாழத நாடுகள்  சட்டத்தின் ஆட்சி அற்ற நாடுகள்  .

நீங்கள் புலம்பெயர்ந்த  இலங்கை அகதி தமிழர்களை வைத்து அறம்,சட்ட ஆட்சி பற்றி பேச முடியாது.அவர்கள் சிந்தனையும் நோக்கமும் வேறானது.
உதாரணத்திற்கு.....
85ல் ஜேர்மனியின் பேர்லினுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரியவர்....சில மாதங்கள் செல்ல அக்கா டோர்முன்ட்ல் இருக்கிறார் நான் அவவிடம் செல்ல வேண்டும் என சொல்லி அக்காவிடம் வந்து சேர்கின்றார்.அங்கு கள்ள வேலை செய்து கொஞ்ச காசு சேர்த்து ஹொலன்ட் போகின்றார்.அங்கும் அரசியல் தஞ்சம் கோரி அவர்  எதிர்பார்த்த சந்தர்ப்பங்கள் சரிவர ஒரு விதமாக கனடா போய் வெற்றிவாகை சூடுகின்றார்.இவர் வந்து இறங்கிய இடமும் தங்கிய இடங்களும் அகதி விண்ணப்பங்கள் ஏற்கக்கூடிய இடங்கள்.அகதி தஞ்சம் கொடுத்து சகல வசதிகளுடனும் வாழ்க்கை கொடுத்த இடங்கள். அப்படியிருக்கும் போது அந்த நபர் ஏன் தில்லுமுல்லு செய்து கனடாவிற்கு போனார்? இதைப்பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். 

இதே போல்தான் ஜேர்மனி வந்து ..
டென்மார்க் சென்றார்கள்,பிரான்ஸ் சென்றார்கள்,சுவீஸ் சென்றார்கள்,நோர்வே சென்றார்கள்,இங்கிலாந்திற்கு சென்றார்கள்.இங்கிலாந்திலிருந்து அவுஸ்ரேலியா சென்றார்கள்.ஜேர்மனியில் சிற்றிசன் எடுத்த பின் இங்கிலாந்து சென்றார்கள்.கனடா சென்றார்கள்.

இப்படி ஆயிரம் முதுகு ஊத்தைகள் இருக்க......ரஷ்யாவை கடந்து வந்தனீர்.அங்கையே இருந்திருக்கலாமே என்பர். இவ்வளவிற்கும் நன்றி விசுவாசம் பொங்க கதைப்பவர்கள் யாரென்று பார்த்தால் மலிந்த ரஷ்ய விமானங்களில் ஏறி மேற்குலகு வந்தவர்கள் தான்... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களை கொடுத்து பலஸ்தீனியர்களை கொல்ல வைப்பது. பிறகு பலஸ்தீனியர்களுக்கு உணவு கொடுப்பது போல் பாசாங்கு பண்ணி உளவு பார்ப்பது. உக்ரேனியர்களை கொல்கிறார்கள் என்று ஒலிம்பிக்கில் ரஸ்யாவை தடை செய்வது. 37 ஆயிரம் பலஸ்தீன குழந்தைகள், பெண்களை கொன்றவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பங்கு பற்றலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nunavilan said:

ஆயுதங்களை கொடுத்து பலஸ்தீனியர்களை கொல்ல வைப்பது. பிறகு பலஸ்தீனியர்களுக்கு உணவு கொடுப்பது போல் பாசாங்கு பண்ணி உளவு பார்ப்பது. உக்ரேனியர்களை கொல்கிறார்கள் என்று ஒலிம்பிக்கில் ரஸ்யாவை தடை செய்வது. 37 ஆயிரம் பலஸ்தீன குழந்தைகள், பெண்களை கொன்றவர்கள் எப்படி ஒலிம்பிக்கில் பங்கு பற்றலாம்?

நுணாவிலாரே! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.😄
இப்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. 
ஆனால் டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது  மேற்குலக நாயகன் செலென்ஸ்கி தான் உக்ரேனில் நல்லாட்சி செய்தார். இப்போதும் நல்லாட்சி செய்கின்றார். உக்ரேனில் தேர்தல் சிஷ்டம்  இல்லையா?:cool: எதிர்க்கட்சி ஏதும் இல்லையா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் புலம்பெயர்ந்த  இலங்கை அகதி தமிழர்களை வைத்து அறம்,சட்ட ஆட்சி பற்றி பேச முடி

அண்ணை கொஞ்சம் நில்லுங்கள் !!   .....ஒன்றை உறுதியாக இறுதியாக சொல்லுகிறேன்.....உங்களுக்கு   இலங்கை தமிழனை குறைத்து இனிமேல் குறைத்து மதிப்பிடாதீர்கள். 

உதாரணமாக ஜேர்மனியில்  தொலைபேசி பெட்டிகள் உறுதியற்றவை    என்றும்  இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் செயல்முறையுடன் எடுத்து ஜேர்மனி அரசாங்கத்திற்கு முதல் முறையாக சொன்னவர்கள் இலங்கை தமிழர்கள்     எனவே… சட்டத்தின் ஆட்சி பற்றி இலங்கை தமிழர்கள் பேச முடியும்    அவர்கள் ரஸ்யாவில். வாழவில்லை  எனபதில் இருந்து  ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும்  ஆகவே இலங்கை தமிழர்களை அவர்கள் வாழும் நாடுகளின் ஆட்சி முறைமையினையும்.  அவர்கள் வாழதா நாட்டின் கொடுங்கோல். ஆட்சி முறைமையினை பற்றியும் அறிய முடியும்   

அகதிகள் என்பது  விசாரணை முடியும் மட்டும் தான்   விசாரணை முடிந்த பின். பைல்கள். முடிய பின்  எந்த இலங்கை தமிழனும் அகதிகள் இல்லை    ..   நான் இப்போது இப்போது இப்போது அகதி இல்லை    சும்மா சும்மா அகதிகள் என்று எழுத வேண்டாம் 🙏🙏🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நுணாவிலாரே! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.😄
இப்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. 
ஆனால் டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது  மேற்குலக நாயகன் செலென்ஸ்கி தான் உக்ரேனில் நல்லாட்சி செய்தார். இப்போதும் நல்லாட்சி செய்கின்றார். உக்ரேனில் தேர்தல் சிஷ்டம்  இல்லையா?:cool: எதிர்க்கட்சி ஏதும் இல்லையா? 😎

"Black rock company " இவர்கள் உக்ரேனை என்ன செய்ய போகிறார்கள் என ஆற அமர இருந்து வாசித்து விட்டு வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

 

 

அப்படியாயின் சந்திரிக்காவின் சொல் கேட்டு புலம்பெயர் தமிழர்களின் குரலாக இருந்த ரிரிஎன் தொலைக்காட்சியின் குரலை நசுக்கினார்களே ஏன்?

அதேதான் என் கருத்தும். நன்றியுடன் இருப்பது எனது அறம். அதற்காக தவறுகளை விமர்ச்சிக்காமல்,சுட்டிக்காட்டாமல் இருப்பது அடிமைத்தனம்.
ஒட்டுமொத்த ஜேர்மனியர்களும் உக்ரேன் போரை விரும்பவில்லை.அவர்களில் நானுமொருவன் அவ்வளவுதான்.

இந்த‌ தொலைக் காட்சி பிரான்ஸ் வாழ் தமிழ‌ர்க‌ள் நட‌த்தின‌ தொலைக் காட்சியா தாத்தா குழ‌ப்ப‌மாய் இருக்கு தெரிய‌ப் ப‌டுத்த‌னும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த‌ தொலைக் காட்சி பிரான்ஸ் வாழ் தமிழ‌ர்க‌ள் நட‌த்தின‌ தொலைக் காட்சியா தாத்தா குழ‌ப்ப‌மாய் இருக்கு தெரிய‌ப் ப‌டுத்த‌னும்.........................

புலிகளின். தொலைக்காட்சி  வீரபையா 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவும் நீதியான நாடுகள் எவை என்பதை இலங்கை தமிழர்கள் பெருந் தொகையாக குடியேறி உலகத்திற்கே அடையாளம் காட்டி உள்ளார்கள் 👍  இலங்கை தமிழர்கள் குடியேறாத நாடுகள் அறம் அற்றவை தீயவை என்பது  உள்ளங்கையில் உள்ள உதைபந்து.

கண்களை மூடிக்கொண்டு  பால் குடிப்பதால்  உலகம் இருண்டுவிட்டதாக அர்த்தம் அல்ல.

உலகம் இருண்டது பூனைக்கு மட்டும்தான். உலகத்துக்கல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடன் ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியதன் பின்னணி அம்பலம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன்(Joe Biden) திடீரென்று விலகுவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட கட்சியின் முதன்மையான தலைவர்கள் பலர் விலகச் சொல்லியும், கடவுள் நேரிடையாக வந்து தம்மை விலகச் சொல்ல வேண்டும் என்று கூறி வந்த ஜோ பைடன், கடைசி நொடியில் அதிரவைக்கும் அந்த முடிவுவை எடுத்துள்ளதற்கு காரணம், வெற்றி வாய்ப்பு தொடர்பில் அவரிடம் அளிக்கப்பட்ட விரிவான தரவுகளே என தெரிவிக்கப்படுகிறது.

விரிவான தரவுகள்

நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு ஜோ பைடன் தாம் போட்டியிடவில்லை என அறிவிக்கும் 48 மணி நேரம் முன்னர் வரையில், டொனால்ட் ட்ரம்பை தம்மால் தோற்கடிக்க முடியும் என்றே ஜோ பைடன் கூறி வந்துள்ளார்.

நேரலை விவாதத்தில் பதற்றம் அடைந்ததும், பல்வேறு பரப்புரை மேடைகளிலும் தடுமாறிய ஜோ பைடன், நவம்பர் தேர்தலில் தாம் கண்டிப்பாக டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வேன் என அடம் பிடித்து வந்தார்.

ஜோ பைடன் ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியதன் பின்னணி அம்பலம் | Background To Joe Biden S Resignation

ஆனால், கடந்த சனிக்கிழமை அவரிடம் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் தொடர்பான விரிவான தரவுகள் அளிக்கப்பட, 81 வயது ஜோ பைடன் வேறு வழியின்றி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் உடனடியாக தமக்கு நெருக்கமான வட்டாரத்தை கலந்து பேசிய ஜோ பைடன், ஞாயிறன்று மதியம் 1.45 மணிக்கு தமது முடிவை அமெரிக்க மக்களுக்கு அறிவித்திருந்தார்.

ஜோ பைடன் ட்ரம்புக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியதன் பின்னணி அம்பலம் | Background To Joe Biden S Resignation

மேலும், ஜோ பைடனுக்கு அளிக்கப்பட்டுள்ள தரவுகளில், 6 முக்கிய மாகாணங்களில் அவர் மிகவும் பின்தங்கியிருந்ததும், வர்ஜீனியா மற்றும் மினசோட்டா மாகாணங்களிலும் நிலை கவலைக்கிடம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கோவிட் பாதிப்பால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஜோ பைடன், உடனடியாக அரசியல் சூழலை புரிந்துகொண்டு, விலகும் முடிவுக்கு வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

452513088_887886340043006_43613468538502

 

452531492_887884373376536_72660535981403

 

452421294_887843320047308_75676980765215

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, குமாரசாமி said:

நுணாவிலாரே! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்.😄
இப்போது அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. 
ஆனால் டொனால்ட் ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது  மேற்குலக நாயகன் செலென்ஸ்கி தான் உக்ரேனில் நல்லாட்சி செய்தார். இப்போதும் நல்லாட்சி செய்கின்றார். உக்ரேனில் தேர்தல் சிஷ்டம்  இல்லையா?:cool: எதிர்க்கட்சி ஏதும் இல்லையா? 😎

https://posts.voronoiapp.com/money/The-Price-of-a-Big-Mac-Around-the-World--1663

கடன் குடுக்கிற அமெரிக்காவினை விட உக்கிரேனில் வாழ்க்கை செலவு 48% குறைவாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பும் அவரின் உப சனாதிபதி வேட்பாளரும்.. உக்ரைன் போருக்கு தாம் ஆதரவில்லை என்பதான சமிக்ஞயை காட்டி விட்டார்கள். அதனால் மேற்குலக ஊடகங்கள் மாக்கு மாக்கென்று பைடனை தாங்கின. அவரோ தன் வாயாலேயே உளறிக் கொட்டிட்டு போயிட்டார். புட்டினிடம் மண்டியிட மாட்டன் என்ற பைடன்.. இப்ப மண்டியிட வாய்ப்பே இல்லாத வெத்து பைடனாகி விட்டார். இப்போ கமலா ஹரிஸ் என்ற இன்னொரு இப்புச் சப்பற்றதை தலையில் வைச்சுக் கொண்டாடினம். இதனால்.. ரம் ஆதரவுக்கு வீழ்ச்சி வருமாப் போல தெரியவில்லை.

ரம் படுகொலை முயற்சியில்.. உக்ரைன் மறைமுக பங்களிச்சிருக்கலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

புலிகளின். தொலைக்காட்சி  வீரபையா 

ந‌ன்றி பெரிய‌வ‌ரே

ஆனால் இது பொதுவான‌ தொலைக் காட்சி 1999க‌ளில் அதிகாம் பார்த்து இருக்கிறேன்

காலையில் ஒரு ஜ‌யா நேய‌ர் விருப்பம் நிக‌ழ்ச்சி ந‌ட‌த்துவார் உற‌வுகளுக்கு பிடிச்ச‌ பாட‌லை தொலைபேசி ப‌ண்ணி கேட்டால் போடுவார்

 

ஒவ்வொரு  நாளும் ஒரு த‌மிழ் திரைப் ப‌ட‌ம் போடுவின‌ம்

 

வெள்ளிக் கிழ‌மையில் புது ப‌ட‌ம் போடுவின‌ம்

 

2000ம் ஆண்டில் இருந்து டெனிஸ் ம‌க்க‌ளோடு தான் இருந்து வ‌ள‌ந்தேன் அது தான் அந்த‌ தொலைக் காட்சி முட‌க்க‌ப் ப‌ட்ட‌து தெரியாது

 

புலிக‌ள் ந‌ட‌த்தினாலும் அதை ந‌டுநிலையா ந‌ட‌த்தின‌வை அதில் குற்ற‌ம் ஒன்றும் க‌ண்டு பிடிக்க‌ முடியாது............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

டிரம்புக்கு இப்ப இருக்கின்ற முகவெட்டு, 1955´ம் ஆண்டு அவருக்கு  9 வயதாக இருக்கும் போதே வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

புலிக‌ள் ந‌ட‌த்தினாலும் அதை ந‌டுநிலையா ந‌ட‌த்தின‌வை அதில் குற்ற‌ம் ஒன்றும் க‌ண்டு பிடிக்க‌ முடியாது............................

புலிகள் பற்றிய செய்திகள் மிக விரைவாக  வெளியீடுவார்கள் 

புலிகளின். விமான தாக்குதல் ஒன்றை  உடனாடியாகவும்  தூள்ளியமாகவும்.  வெளியீட்டவர்கள். இதை காட்டி தான் பிரான்ஸ் உள்ள இலங்கை தூதுவர்  தடை செய்தவர் என நினைக்கிறேன் இதில் நானும் சாந்தாகனாக இருந்தேன்   மேலும் இவர்கள் இந்த தொலைக்காட்சி புலிகனின்  இல்லை என்று  உறுதிபடுத்த முடியவில்லை  மாறாக புலிகளின். என்பதற்கு பல சான்றுகளையும் கைப்பற்றி உள்ளார்கள்   இது விசுகருககு  நன்கு தெரியலாம் தெரியுமா அல்லது இல்லை என்பதை அவர் தான் உறுதி செய்ய வேண்டும் 😂😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

புலிகள் பற்றிய செய்திகள் மிக விரைவாக  வெளியீடுவார்கள் 

புலிகளின். விமான தாக்குதல் ஒன்றை  உடனாடியாகவும்  தூள்ளியமாகவும்.  வெளியீட்டவர்கள். இதை காட்டி தான் பிரான்ஸ் உள்ள இலங்கை தூதுவர்  தடை செய்தவர் என நினைக்கிறேன் இதில் நானும் சாந்தாகனாக இருந்தேன்   மேலும் இவர்கள் இந்த தொலைக்காட்சி புலிகனின்  இல்லை என்று  உறுதிபடுத்த முடியவில்லை  மாறாக புலிகளின். என்பதற்கு பல சான்றுகளையும் கைப்பற்றி உள்ளார்கள்   இது விசுகருககு  நன்கு தெரியலாம் தெரியுமா அல்லது இல்லை என்பதை அவர் தான் உறுதி செய்ய வேண்டும் 😂😂🙏

புலிக‌ள் வ‌ந்து  பிரான்ஸ் த‌லைந‌க‌ர‌ம் பாரிஸ்சிலா குண்டு போட்டார்க‌ள்

 

அப்ப‌டி பார்த்தால் 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு நவாலி க‌ர்ரொலிக் தேவாலயம் மீது குண்டு போட்டு நூற்றுக்கு மேல் ப‌ட்ட‌ அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவித்த‌வ‌ங்க‌ள்.......................அதுக்கு பிரான்ஸ் அர‌சு சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ஏதும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்தார்க‌ளா........................

இந்த‌ உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரிய‌வில்லை புரிய‌ வில்லை☹️....................................

 

 

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

452513088_887886340043006_43613468538502

 

452531492_887884373376536_72660535981403

 

452421294_887843320047308_75676980765215

ட்ரம்பு போட்டியிலிருந்து விலகவில்லைய???  அல்லது அக்கா கமலா உடன் போட்டி இட்டு  தோற்க விரும்புகிறாரா ??  அக்கா இரும்பு பெண்  அமெரிக்கா சட்டத்தை கரைந்து குடித்தவர் 

குற்றவாளிகளை சிறையிலிருந்து வெளியில் எடுப்பார்கள் சுற்றவாளியை சிறையினுள்ளே  தள்ளக்கூடியவர்   கடந்த தேர்தலில் கமலா தான் தனக்கு சரியான போட்டியாளர் என்று சொன்னவர் ....மனிதனுக்கு கமலா என்றால் வைத்தை. கலக்கும் 

1 minute ago, வீரப் பையன்26 said:

புலிக‌ள் வ‌ந்து  பிரான்ஸ் த‌லைந‌க‌ர‌ம் பாரிஸ்சிலா குண்டு போட்டார்க‌ள்

 

அப்ப‌டி பார்த்தால் 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சு நவாலி க‌ர்ரொலிக் தேவாலயம் மீது குண்டு போட்டு நூற்றுக்கு மேல் ப‌ட்ட‌ அப்பாவி ம‌க்க‌ளை கொன்று குவித்த‌வ‌ங்க‌ள்.......................அதுக்கு பிரான்ஸ் அர‌சு சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு ஏதும் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்தார்க‌ளா........................

இந்த‌ உல‌கில் என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரிய‌வில்லை புரிய‌ வில்லை☹️....................................

 

 

இல்லை பையா  கொழும்பில் குண்டுகள் போட்டார்கள் ஒரு போராட்ட இயக்கம்  விமான மூலம் முதலாவது ஆக உலகில் குண்டுகள் போட்டது புலிகள் தான்  இதனை உலக நாடுகள் விரும்பவில்லை 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.