Jump to content

தலையிடி காய்ச்சல் வந்தால் நீங்களும் பனடோல், தைலனோல் போடுவீங்களோ?


Recommended Posts

வணக்கம்,

இன்னொரு ஆராய்ச்சி...

இப்ப எங்கள் எல்லாருக்கும் இருந்திட்டு தலையிடி, காய்ச்சல் வருகிது. சிலர் அடுத்தநாள் டொக்டரிட்ட போய் காட்டுவீனம். ஆனால், பலர் அப்படி செய்வதில்லை. பேசாமல் வருத்தத்தை அனுபவித்து கஸ்டப்பட்டுக்கொண்டு இருப்பீனம். இல்லாட்டி தங்கட பாட்டில ஏதாவது மருந்து குளிகைகளை போடுவீனம்.

இப்படி போடப்படுகிற மருந்துக் குளிகைகளில பிரபல்யமானது பனடோ, தைலனோ, அஸ்பிரின்.. இவை..

நான் உடனடியாக மருந்து குளிகைகள் போடுவதில்லை. டொக்டரிட்டையும் போவதில்லை. வருத்தம் ஓரளவு துன்பம் தரத்தொடங்கியதும் முதலில் பனடோல் அல்லது தைலனோலை நாடுவேன். வருத்தம் எக்கச்சக்கமாய் முத்தியபின் தான் டொக்டரிடம் ஓடுவது.

ஆ... அந்த அனுபவம் பயங்கரமானது... உடம்பில குளிர் ஊதல் அடிக்க.. இரவில நான் வீட்டில இருக்கிற பெட் சீட்டை எல்லாம் எனக்கு மேல போத்துக்கொண்டு படுக்கிறது. பிறகு காலம்பற ஒன்றுக்கு மேல ஒன்றா நாளைஞ்சு உடுப்புக்கள போட்டுக்கொண்டு டொக்டரிட்ட போறது.

அஸ்பிரின் அல்லது டிஸ்பிரினை... எது என்று தெரியவில்லை.. பாவிக்கவேண்டாம் என்று மருத்துவர்களால் அறிவித்தல் செய்யப்பட்டுள்ளதாக நான் எப்போதோ, எங்கோ படித்த ஞாபகம். இது பற்றி உங்கள் யாருக்காவது தெரியுமா?

காய்ச்சல் வந்தால் கூட ஓரளவுக்கு தாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்த நாசமாப் போன தலையிடி வந்தால் சொல்லிவேலை இல்லை. எல்லாம் சர்வ நாசம்!! :lol:

எனக்கு தலையிடி வருவதற்கான பிரதான காரணங்கள் - எனது அனுபவத்தில் கண்டுபிடித்தவை - எனது தலை மீது ஏதாவது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் - உதாரணமாக கல்லு மாதிரியான தலாணியில் நான் தலையை வைத்து படுத்தால் அல்லது கடினமான பரப்பு உள்ள ஏதாவது சோபா மீது தலையை வைத்து படுத்தால் நிச்சயம் தலையிடி வந்துவிடும். தலை தாக்குப்பட்டால், அல்லது தலையை குலுங்குப்பட்டாலும் தலையிடி வந்துவிடும். வந்தால் பிறகென்ன...?? தலையில இருக்கிற எல்லா நரம்புகளும் விண் விண் என்று ஒவ்வொரு பக்கத்தால இழுக்க அல்லாவில இருந்து எல்லாக் கடவுள்களையும் பிரார்த்தனை செய்து அழுவதுதான்...

உங்களுக்கு இப்படியான காரணங்களால் தலையிடி வருமா?

தலையிடி காய்ச்சல் வந்தால் நீங்களும் பனடோல், தைலனோல் போடுவீங்களோ?

உங்களுக்கு தலையிடி, காய்ச்சல் வந்தால் நீங்கள் என்ன செய்வீங்கள் என்று ஒருக்கால் சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

மறுபடி இன்னொரு ஆராய்ச்சியா உங்களை நினைக்க பெருமையா இருக்குது வெகு விரைவில் உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் கிடைகாட்டி நானாவது ஒன்றை யாழ்களம் சார்பில் தருகிறேன்!!இப்ப விசயதிற்கு வாரேன்!! :o

காய்ச்சல் வந்தால் அதாவது இலங்கையில இருக்கும் போது பாடசாலைக்கு போற நேரம் எப்ப காய்ச்சல் வரும் என்று ஆசையா இருக்கும் அப்ப தான் பள்ளிக்கு மட்டம் போடலாம் படுத்திருக்க அம்மா எல்லாம் வேலையும் பார்ப்பா அது தான் :( ........காய்ச்சல் மாறினாலும் 2நாள் எக்ஸ்ராவா அக்டிங் பண்ணி போட்டு தான் எழும்புறனான் என்றா பாருங்கோ!! :(

காய்ச்சல் வந்தா டாக்டரிட்ட தான் போறது அதற்கு முன்னம் அம்மா குடிநீர் எல்லாம் அவித்து தருவா ஆனா அதை கொண்டு போய் ஊத்திடுவேன்......அதை மனிசன் குடிப்பானா அந்த மணமே எனக்கு பிடிகாது :D !!பிறகு டாக்டரிட்ட போனா அவர் தாற மருந்து மாத்திரை எல்லாம் கட்டிலிற்கீழே எரிந்திடுவன் பிகோஸ் என்னால மருந்து எல்லாம் என்னால குடிக்க முடியாது ஜெனரல் சரியான கஷ்டமான விசயம் :D .......பிறகு காய்ச்சல் கூடி கஷ்டபட்டு தானாகவே காய்ச்சல் நிற்கும் என்றா பாருங்கோ........இப்பவும் பல மருந்துகளை வீசுற பழக்கம் போகவில்லை சின்ன மருந்தா இருந்தா குடிபேன் பெரிசா இருந்தா வீசி போடுவேன்!!

நீங்க சொன்ன மாதிரி காய்ச்சலையும் தாங்கிடலாம் ஆனா இந்த "தலையிடி" இருக்கே அது தான் மனிசனை பாடாபடுத்தும்,நான் கண்ணாடி போடுறனான் சில நேரம் கண்ணாடி போடாம ஏதாவது வாசித்தா அல்லது கணணியில் இருந்தா தலையிடிக்க தொடங்கிடும் அந்த நேரங்களில் பனடோல் தான் போடுறனான் :( ......பனடோல் போடுறதும் பிடிகாது தான் ஆனா இந்த தலையிடியை விட பனடோல் எவ்வளவு பெட்டர்.......பிறகு தடிமன் வந்து "சலி" தலையிற்கு போனா வரும் ஒரு தலையிடி அதை தாங்கவே ஏலாது அந்த தலையிடிக்கு பனடோல் போட்டும் நிற்காது........பிறகு என்ன கத்துவேன் அம்மா வந்து மஞ்சள் மற்றும் இன்னும் சில இன்கிரிடியன்ஸ் (என்ன இன்கிரிடியன்ஸ் என்று தெரியாது) போட்டு சூடாக்கி விட்டு தலைக்கு பூசுவா போட்டு 5 நிமிசத்தில போயிடும் என்றா பாருங்கோ நல்ல மருந்து என்றே சொல்லுவன்!!

சொல்ல போனா அஸ்பிரின் மற்றும் செப்ரின் மருந்து வகைகள் எனக்கு அலர்ஜி நான் பாவிக்கிறதில்லை டிஸ்பிரின் நான் பாவிப்பதில்லை நீங்கள் சொல்வது போல பலர் சொல்லுவார்கள் பாவிக்க கூடாது என்று காரணம் வடிவாக தெரியாது!! :o

ஆனாலும் நாங்களே மருந்து போட்டு கொண்டு இருக்காம டாக்டரிட்ட காட்டுறது சிறந்தது ஏனேனில் என்ன வருத்தமோ தெரியாது தானே.........நாங்க மருந்தை போட்டு கொண்டு இருக்க வருத்தம் முற்றின பிறகு டாக்டரிட்ட போய் பிரயோசனமில்லை பலபேருக்கு இப்படி நடந்ததிருகிறது என்று சொல்லலாம்!! :lol:

காய்ச்சல் வந்தா எனக்கு ஒரு விசயம் பிடிகாது "வாந்தியெடுத்தல்" என்னவோ பிடிகாது :( மற்றது வாய் கைச்சலா இருக்கும் ஒன்றும் வடிவா சாப்பிடமுடியாது இது தான் பிரச்சினை நீங்க சொல்லுற மாதிரி சரியா குளிரும் அந்த நேரத்தில விக்சை எடுத்து (மம்மி சித்தாலேப போடுறவா அல்லது அக்ஸ் ஒயில் போடுறவா) கால் பாதத்தில மற்றும் உள்ளம்கையில தேய்த்து மற்ற்றும் காதடியில தேய்த்தா குளிராது காய்சலும் உடனடியாக குறையும் :lol: பிகோஸ் நாம மருந்தை கட்டிலிற் கீழே வீசுறது பிறகு காய்ச்சல் கூடினா மம்மிக்கு தெரியாது மருந்தை வீசிட்டேன் என்று இப்படி எல்லாம் செய்வா ஆனா காய்ச்சல் நிற்கும் ஜெனரல்!!

மீண்டும் மற்றுமொரு ஆராய்ச்சியில சந்திபோம் அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் -

"லைவ்வில மருந்து எடுக்கலாம் ஆனா லைவ்வே மருந்தில இருக்க கூடாது"

Link to comment
Share on other sites

முதலில் குளிர் தண்ணில தலை முழுகிப்பாருங்கள். வந்த தலையிடி பறந்து போயிடும். காய்ய்சலும் அதுபோலவே தான்.

Link to comment
Share on other sites

ஜம்மு குளிசை குடிக்க பயமெனில் அதை இடிச்சு மாவாக்கிட்டு நீங்கள் குடிக்கும் பாப்பாவில் கலந்து அதை பீடீங்க் போத்தலில் ஊத்திட்டு குடிக்கலாமே.

இல்லை கட்டிலுக்கு கீழை நீங்கள் போடும் குளிசைகளாஇப் பார்த்து மற்றவர்களுக்கு தலையிடி வந்திடும் எல்லோ. அதுதான் :lol:

Link to comment
Share on other sites

இல்லை பீடிங் போத்திலையும் குடிக்க ஏலாது எனக்கு குளிசை என்றாலே பிடிகாது இது தெரியாதோ :( !!கட்டிலிற்கு கீழே போட்டா தானே மற்றவைக்கு தலையிடி வரும் எனி வெளியால வீசிவிடுறேன் இப்ப சரி தானே நிலா அக்கா :lol: !!

குளிர் தண்ணிலையில குளித்தா காய்ச்சல் கூடும் என்று அம்மா சொல்லுவா நீங்க இப்படி சொல்லுறீங்க நிலா அக்கா எதை பேபி வலோ பண்ணுறது!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

காய்ச்சல் தலையிடி வந்தால் குளிக்க கூடாது னு தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு அநேகர் குளிப்பார்கள் காய்ச்சல் வந்தால்.

ஏன் காய்ச்சல் வந்தால் டாக்டரே சொல்லுவார் ஈரச்சீலை போட்டு உடம்பை துடைச்சிட்டு இருங்கோ என. உதைவிட குளிக்கலாம்

Link to comment
Share on other sites

காய்ச்சல் வரும்போது உடலின் வெப்பநிலை சூழலின் வெப்பநிலையை விட அதிகரிக்கிறது. இதனால் உடல் குளிர்வது போன்ற உணர்வு ஏற்படும்.

உடலைக் குளிர வைக்கவே குளிக்க வேண்டும் என்பதாக இருக்கலாம்.

இங்கு குழந்தைகளைக் கூட காய்ச்சல் வந்தால் போர்வையால் போர்க்க வேண்டாம் என்றும் அடிக்கடி குளிப்பாட்ட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Link to comment
Share on other sites

காயச்சல் வந்தால் என் தந்தையாரின் மருத்துவம்

ஒரு பெக் அடிச்சிற்று பெற்சீற்ரால இழுத்து இறுக்கி போர்த்துக் கொண்டு படுத்திருவார்

5அல்லது 6 மணித்தியாலத்தால எழும்பி ஒரு முழுக்கு போடுவார் அப்புறம் பார்த்தா அவருக்கு காய்ச்சல் வந்ததா என்றமாதிரி இருப்பார்

இத வாசிச்சிற்று அப்புறம் ஜம்மு வந்து லொள்ளு பண்ணிறதில்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயச்சல் வந்தால் என் தந்தையாரின் மருத்துவம்

ஒரு பெக் அடிச்சிற்று பெற்சீற்ரால இழுத்து இறுக்கி போர்த்துக் கொண்டு படுத்திருவார்

5அல்லது 6 மணித்தியாலத்தால எழும்பி ஒரு முழுக்கு போடுவார் அப்புறம் பார்த்தா அவருக்கு காய்ச்சல் வந்ததா என்றமாதிரி இருப்பார்

இத வாசிச்சிற்று அப்புறம் ஜம்மு வந்து லொள்ளு பண்ணிறதில்ல

காய்ச்சல் வந்த ஆரம்பத்திலையே இதை செய்தால் வெர்க் பண்ணும். நான் மாறி செய்றனான். குளிர் தண்ணியில தோஞ்சிட்டு 1-2 பெக் அடிச்சிட்டு உறைப்பா சூடா கோழிக்கறியோட சோறு சாப்பிட்டு ஒரு நித்திரை அடிச்சா போய்டும். சளி எண்டால் ஒரு பெக்குக்கு முட்டை வெள்ளைகருவை விட்டுட்டு அடிச்சாலும் போய்டும்.

பி.கு. ஊரில ஒராள் காய்சலோட தென்னங்கள்ளு அடிச்சு மண்டைய போட்டவர் எண்டு கேள்விபட்டனான்.

Link to comment
Share on other sites

அஸ்பிரின் அல்லது டிஸ்பிரினை... எது என்று தெரியவில்லை.. பாவிக்கவேண்டாம் என்று மருத்துவர்களால் அறிவித்தல் செய்யப்பட்டுள்ளதாக நான் எப்போதோ, எங்கோ படித்த ஞாபகம். இது பற்றி உங்கள் யாருக்காவது தெரியுமா?

யா, அஸ்பிரின் என்று தான் கூட பாவிக்கப்படுகின்றது. அது ஒரு பெயின் கில்லர் தான்.

ஆனால் அதை பாவிக்கும் பொழுது உண்டாகும் பக்க விளைவினால் தான் அதை கூட

பாவிக்க வேண்டாம் என்று சொல்கின்றனர். அஸ்பிரின் இரப்பையை சேதப்படுத்தும்!

அதாவது அது இரப்பைக்குள் சுரந்து இரப்பையை பாதுகாக்கும் ஒரு வித திரவம் சுரப்பதை

தடுக்கின்றது. அதனால் அல்சர் தன்மையான நோய்கள் உருவாகும்.

டாக்டர்கள் இதை பாவிக்க சொல்லும் பொழுது கூடுதலாக இரப்பையை பாதுகாக்கும்

மருந்தும் எழுதி தருவார்கள். நாங்களாக அதை எடுத்துக்கொள்ளும் பொழுது இரப்பையை

பாதுகாக்க முடிவதில்லை. இதுதான் அதற்கான காரணம் என படித்தேன்.

காய்ச்சல் வந்தால் கூட ஓரளவுக்கு தாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்த நாசமாப் போன தலையிடி வந்தால் சொல்லிவேலை இல்லை. எல்லாம் சர்வ நாசம்!!

எனக்கு தலையிடி வருவதுண்டு ஆனால் இது என்ன நாசமா போன தலையிடி? அதுதான் தெரியல.

(சரி ஜோக் அடிக்கல மாப்புக்கு கோவம் வர போகுது! :lol: )

உங்களுக்கு இப்படியான காரணங்களால் தலையிடி வருமா?

என்னோட முதல் எதிரி...தலையிடி!!!!!!! :lol::lol::lol:

பல வருடங்களாக என்னை வாட்டிக்கொண்டே இருக்கின்றது. கொஞ்சம் என்றால் வந்து விடும்.

எனக்கு கூட டென்சன்,கோவம், நிறைய யோசித்தால் எல்லாவற்றையும் விட சத்தமான இடத்தில்,

லைற் நிறைய போட்ட இடத்தில் நின்றால் வந்து விடும். இதை வாசிக்கும் போதே உங்களுக்கு புரியும். இது என்ன தலையிடி என்று.

ஏதாவது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் - உதாரணமாக கல்லு மாதிரியான தலாணியில் நான் தலையை வைத்து படுத்தால் அல்லது கடினமான பரப்பு உள்ள ஏதாவது சோபா மீது தலையை வைத்து படுத்தால் நிச்சயம் தலையிடி வந்துவிடும். தலை தாக்குப்பட்டால், அல்லது தலையை குலுங்குப்பட்டாலும் தலையிடி வந்துவிடும். வந்தால் பிறகென்ன...??

தலை இடியில் நிறைய வகை இருக்கு.இப்படியான காரணங்களால் தலைஇடி வருகின்றதென்றால்

மாப்பு இந்த சந்தர்ப்பங்களை தவிர்ப்பது தான் சிறந்தது. நான் நினைக்கிறேன் சோபாவில் படுக்கும் பொழுது

கழுத்து நரம்புகளுக்கு நோ ஏற்படுகின்றது போலும், அதுதான் தலையிடியை கொண்டு வருகின்றது.

சில பேருக்கு தோள் நோவு, கழுத்து நோவு அத்தோடு தலையிடி!

இப்படி என்றால் படுக்கும், இருக்கும்,நிற்கும் முறைகளை செக் பண்ண் வேண்டும் என்று சொல்வார்கள்.

நிற்கும் போது தோளை கூனாமல் நிற்க வேண்டும்.

படுக்கும் போது குப்புற படுத்துக்கொண்டு தலையை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு படுக்க கூடாது.

நிமிர்ந்து அல்லது சரிந்து ( நேராக) படுக்க வேண்டும். சரியான தலையணை வேண்டும்.

அப்படியும் நிற்காவிட்டால் மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு 4 கிழமை செய்து வர நோவு குறைந்து

விடும்.

இது நான் படித்த சில டிப்ஸ்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களாக என்னை வாட்டிக்கொண்டே இருக்கின்றது. கொஞ்சம் என்றால் வந்து விடும்.

எனக்கு கூட டென்சன்,கோவம், நிறைய யோசித்தால் எல்லாவற்றையும் விட சத்தமான இடத்தில்,

லைற் நிறைய போட்ட இடத்தில் நின்றால் வந்து விடும். இதை வாசிக்கும் போதே உங்களுக்கு புரியும். இது என்ன தலையிடி என்று.

உங்களுக்கு எல்லாம் மைக்கிரைன்(migraine) போல இருக்கு...

Link to comment
Share on other sites

முதலில் குளிர் தண்ணில தலை முழுகிப்பாருங்கள். வந்த தலையிடி பறந்து போயிடும். காய்ய்சலும் அதுபோலவே தான்.

எல்லா தலை இடிக்கும் முழுகுதல் சிறந்த மருத்துவம் என்றில்லை!

சில தலையிடி சூட்டில் வருவது..அல்லது தலைப்பாரத்தால் வருவது அதற்கு இது சிறந்தது.

கூட எப்போ,எப்படி தலை இடி வருகின்றது என அறிந்து மருந்து எடுப்பதே பெட்டர்.

என்னோட படித்த பிள்ளை ஒருவருக்கு அடிக்கடி தலையிடி. என்னை போல!

ஆனால் நான் டார்கர் அனுமதியோடு மருந்து பாவிக்கின்றேன் மிக்கிரைனுக்கு. அவரும் அப்படி ஏதோ

ஒரு தலை இடி என்று பனடோல்,அஸ்பிரினோடு இருந்திருக்கிறார்.

கடைசியில் தலையிடி 1 கிழமை மட்டில் நீடிக்கவே டொக்டரிடம் போனார்.

அது அவர் தலையில் சிறு வருடங்கள் முன் சிறிதாக அடிபட்டதால் ஏற்பட்ட கட்டியினால் என்று

கண்டு பிடித்தார்கள். இப்போ அது ஒப்பரேசனில் தான் முடிந்தது.

நான் சென்று பார்த்த போது முடி எல்லாம் வெட்டி, மெலிந்து காணப்பட்டார். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் தலையிடி 1 கிழமை மட்டில் நீடிக்கவே டொக்டரிடம் போனார்.

அது அவர் தலையில் சிறு வருடங்கள் முன் சிறிதாக அடிபட்டதால் ஏற்பட்ட கட்டியினால் என்று

கண்டு பிடித்தார்கள். இப்போ அது ஒப்பரேசனில் தான் முடிந்தது.

நான் சென்று பார்த்த போது முடி எல்லாம் வெட்டி, மெலிந்து காணப்பட்டார். :(

எனக்கு தெரிந்த ஒருவருக்கும் இப்படி நடந்தது. அவருக்கு பரீட்சை காலங்களிலும் எதைப்பற்றியாவது அதிகமாக சிந்தித்தாலும் வரும். அவரும் மைகிரைன் எண்டு விட்டுட்டு இருந்தார். இது தொடரவே, அவரும் இதுக்கான சிறப்பு மருத்துவரிடம் காட்டினார். அவர்கள் ஸ்கான் பண்ண பார்த்போது மூளைக்கு இரத்தம் போகும் குளாய் ஒன்றில் சிறு அடைப்பு இரந்ததை கண்டறிந்தனர். (அதிகமாக சிந்திக்கும் போது மூளைக்கு அதிக இரத்தம் தேவையாம் அது கிடைக்காததனால்தான் அக்காலங்களில் தலையிடி வருமாம்). பின்னர் மாத்திரை மூலம் அந்த அடைப்பை கரைத்தனர். அதன் பின்னர் அவருக்கு அப்படியான தலையிடி வருவதில்லை.

Link to comment
Share on other sites

தலையிடியில் பல வகையுண்டு.கலைஞன் உங்களுக்கு உள்ளது எனப்படுவது ஆக இருக்கலாம்.ஆனால் பொதுவான தலையிடி(50%) க்கு நிறைய தண்ணீர் குடிப்பதால் போய்விடும் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.உடம்பில் தண்ணீர் (அளவுக்கு குறைவாக உள்ள போது) எனக்கு தலையிடி வருவதுண்டு.இதனால் எப்பொழுதுமே தண்ணீர் தாராளமாக குடிப்பேன்.தலையிடி பறந்து விடும்.கலைஞன், முயற்சித்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவலிக்கு இருதய நோய்களும் காரணமாக இருக்கலாம்.எனவே அடிக்கடி தலைவலி வருபவர்கள் வைத்தியரிடம் சென்று எதனால் வருகிறதென்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.விளையாட்டாக இருந்து விடாதீர்கள் :(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

காய்ச்சல் தலையிடி வந்தால் குளிக்க கூடாது னு தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு அநேகர் குளிப்பார்கள் காய்ச்சல் வந்தால்.

ஏன் காய்ச்சல் வந்தால் டாக்டரே சொல்லுவார் ஈரச்சீலை போட்டு உடம்பை துடைச்சிட்டு இருங்கோ என. உதைவிட குளிக்கலாம்

ம்ம்ம்ம் நிலா அக்கா டாக்டர் ஈரசீலை எடுத்து துடைக்க சொல்லுறதை கேள்விபட்டிருகிறேன் ஆனா சூடு தண்ணியால தான் துடைக்க சொல்லி சொல்ல்லுறவர் :( என்று நினைக்கிறேன்!!பிறகு டாக்டர் சொல்லுவார் என்ன சொல்லுறது என்று தெரியாது ஆனா பெட் சீட்டால மூடி கொண்டு சூடு தண்ணி முகத்திலபடுற மாதிரி இருத்தல் :( ......அது நல்ல விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் :lol: !!காய்ச்சல் வந்து போனா பிறகு கூட காய்ச்சல் என்று பிடிகிறனான் அப்ப தான் படிகிற நேரத்தை கடத்தலாம் நிலா அக்கா :( !!இப்ப எல்லாம் பேபி திருந்திட்டு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

காயச்சல் வந்தால் என் தந்தையாரின் மருத்துவம்

ஒரு பெக் அடிச்சிற்று பெற்சீற்ரால இழுத்து இறுக்கி போர்த்துக் கொண்டு படுத்திருவார்

5அல்லது 6 மணித்தியாலத்தால எழும்பி ஒரு முழுக்கு போடுவார் அப்புறம் பார்த்தா அவருக்கு காய்ச்சல் வந்ததா என்றமாதிரி இருப்பார்

இத வாசிச்சிற்று அப்புறம் ஜம்மு வந்து லொள்ளு பண்ணிறதில்ல

சா நான் லொள்ளு எல்லாம் பண்ணமாட்டேன் சிவா அண்ணா :( !!அது சரி பெக் என்றா என்ன :lol: நல்ல மருந்தா இருக்கு இதை பேபியும் குடிக்கலாமோ :lol: !!நீங்களும் இந்த மருந்தை தான் பாவிக்கிறனீங்களோ சிவா அண்ணா!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பி.கு. ஊரில ஒராள் காய்சலோட தென்னங்கள்ளு அடிச்சு மண்டைய போட்டவர் எண்டு கேள்விபட்டனான்.

குமாரசாமி அண்ணர்தான் காய்ச்சல்வந்தா யோசித்து மருந்த பாவிக்கவேணும்

Link to comment
Share on other sites

எனது நண்பிக்கு (அவளைப் பற்றி சொல்லணும் எனில் நல்ல அழகு. நல்லாக படிப்பாள். 3 ஏ எடுத்து யுனிவர்சிட்டிக்குள் நுழைந்தவளும் கூட) ம்ம் அவளுக்கு தினமும் சாதாரண தலையிடி வாறது. தினமும் விக்ஸ் பூசிட்டுத்தான் இருப்பாள். ஆண்களை வெறுப்பவள். ஆனால் ஆண்களின் நக்கலால் தான் அவளுக்கு தலையிடி வருவது என டாக்டர்கள் கண்டுகொண்டனர். அது அப்பிரதேசத்தில் கூட எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் ஆண்கள் அவளை விட்டதில்லை. தினமும் நக்கலடித்தனர். அதுக்கு காரணம் அவளின் படிப்பை குழப்பணும் என்பதற்காகவே, ஆனாலும் அவள் அத்தலையிடியுடனும் நன்றாக படித்தாள்.

ஆனால் தினமும் தலையிடி என்பதால் அவள் ஒரு சாதாரண மனநோயாளியானாள். ஆனால் யாருக்குமே அவள் மனநோயாளி என தெரிய வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் அவள் மருந்து எடுத்திருந்தாள். யுனிவர் சிட்டியில் ஒரு மேடை நாடகத்தில் பைத்தியக்கார வேடமிட்டு மிக சிறப்பாக நடித்தாள். அப்போதும் ஆண்கள் அவளை பைத்தியக்காரி என அழைச்சதால் மிகவும் மனம் நொந்தாள் தலையிடியால் அவதிப்பட்டாள் பிறகென்ன அத்தலைவலி தாங்கமுடியாமலே தன்னைத் தானே எரித்து மாய்த்துக்கொண்டாள். :):(:(

சோ தினமும் தலையிடி வருகின்றவர்கள் பனடோல் அஸ்பிரின் தைலம் குளித்தல் இபப்டியான வழிகளை கையாளாமல் மருத்துவரை நாடி அவர்களின் ஆலோசனைப்படி நடவுங்கள்.

Link to comment
Share on other sites

தூக்கமின்மை

பெரும்பாலும்

மன அழுத்தம்

மருத்துவரை நாடாமல் நாமாக முடிவெடுக்கக் கூடாது

Link to comment
Share on other sites

எனது நண்பிக்கு (அவளைப் பற்றி சொல்லணும் எனில் நல்ல அழகு. நல்லாக படிப்பாள். 3 ஏ எடுத்து யுனிவர்சிட்டிக்குள் நுழைந்தவளும் கூட) ம்ம் அவளுக்கு தினமும் சாதாரண தலையிடி வாறது. தினமும் விக்ஸ் பூசிட்டுத்தான் இருப்பாள். ஆண்களை வெறுப்பவள். ஆனால் ஆண்களின் நக்கலால் தான் அவளுக்கு தலையிடி வருவது என டாக்டர்கள் கண்டுகொண்டனர். அது அப்பிரதேசத்தில் கூட எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் ஆண்கள் அவளை விட்டதில்லை. தினமும் நக்கலடித்தனர். அதுக்கு காரணம் அவளின் படிப்பை குழப்பணும் என்பதற்காகவே, ஆனாலும் அவள் அத்தலையிடியுடனும் நன்றாக படித்தாள்.

ஆனால் தினமும் தலையிடி என்பதால் அவள் ஒரு சாதாரண மனநோயாளியானாள். ஆனால் யாருக்குமே அவள் மனநோயாளி என தெரிய வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் அவள் மருந்து எடுத்திருந்தாள். யுனிவர் சிட்டியில் ஒரு மேடை நாடகத்தில் பைத்தியக்கார வேடமிட்டு மிக சிறப்பாக நடித்தாள். அப்போதும் ஆண்கள் அவளை பைத்தியக்காரி என அழைச்சதால் மிகவும் மனம் நொந்தாள் தலையிடியால் அவதிப்பட்டாள் பிறகென்ன அத்தலைவலி தாங்கமுடியாமலே தன்னைத் தானே எரித்து மாய்த்துக்கொண்டாள். :(:(:(

சோ தினமும் தலையிடி வருகின்றவர்கள் பனடோல் அஸ்பிரின் தைலம் குளித்தல் இபப்டியான வழிகளை கையாளாமல் மருத்துவரை நாடி அவர்களின் ஆலோசனைப்படி நடவுங்கள்.

நல்ல அழகா எனக்கு சொல்லவே இல்லை சொல்லி இருந்தா ஒரு ரிலேசன்சிப்பை மெயின்டேன் பண்ணி இருபேன் என்று சொல்ல வந்தனாக்கும் :( !!ஆண்களை வெறுப்பவளா நம்ம நெடுக்ஸ் தாத்தா பெண்களை வெறுகிற மாதிரியா நிலா அக்கா :) !!இந்த தலையிடியினுடனும் நன்றாக படித்தாள் என்றா என்னை மாதிரி சரியான கெட்டிகாரி போல தான் :( (என்ன லுக்கு வேண்டி இருக்கு பேபியின்ட கெட்டிதனம் தெரியாது போல :( ).என்னை தன்னை தானே எரித்து கொண்டாவா பாவம் :( நிலா அக்கா அவாவின்ட ஆவி சுற்றி கொண்டு இருக்குமோ தெரியாது எனக்கு பயமா இருக்கு!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.