Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே! 

இந்தியாவில் ம‌த‌வெறி இல்லையா அன்மையில் ந‌ட‌ந்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் பீஜேப்பி த‌லைவ‌ர்க‌ள் பேசின‌ பேச்சு நீங்க‌ள் கேட்க்க‌ வில்லையா

எல்லா ம‌த‌த்திலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் கெட்ட‌வ‌ர்க‌ளும் இருக்கின‌ம்............................ஜ‌ப்பான் ம‌ற்றும் அமெரிக்கா செய்யாத‌ அட்டூழிய‌த்தையா இஸ்லாம் ம‌த‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் செய்து விட்டின‌ம்

அமெரிக்காவுக்கும் ஜ‌ப்பானுக்குன் க‌டும் போர் ந‌ட‌க்கும் போது அணுகுண்டை போட்டால் பெரும் பாதிப்பு வ‌ரும் ம‌க்க‌ள் அதிக‌ம் இற‌ப்பார்க‌ள் என்று தெரிந்தும் அமெரிக்கா இர‌ண்டு குண்டை ஜ‌ப்பான் மீது  போட்ட‌வை....................ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் இந்த‌ உல‌கை எங்க‌ளுக்கு எழுதி தாங்கோ என்று கேட்க்க‌ வில்லை த‌ங்க‌ட‌ நாடு த‌ங்க‌ளுக்கு வேனும் என்று தான் கேட்க்கின‌ம்.............................யூத‌ர்க‌ளின் வ‌ர‌லாறு உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று நாடு இல்லாம‌ உல‌க‌ அள‌வில் அக‌திக‌ளாக‌ த‌ஞ்ச‌ம் புகுந்த‌வை

அதில் அமெரிக்காவில் அதிக‌ம்

பாக்கிஸ்தானிட‌ம் அணுகுண்டு இருக்கு அதுவும் இஸ்லாம் நாடு அவ‌ர்க‌ள் நினைத்தால் நீங்க‌ள் சொல்லும் தீவிர‌வாத‌ அமைப்புக்கு மேசைக்கு கீழால‌ கொடுக்க‌ முடியும் ஆனால் பாக்கிஸ்தான் அதை செய்ய‌ வில்லை

இந்த‌ நூற்றாண்டில் எல்லாரும் அமைதியை தான் விரும்புகின‌ம் 

வ‌ன்முறை தீர்வாகாது........................அமெரிக்கான்ட‌ ட‌வுள் கேமால் தான் இந்த‌ உல‌கில் அதிக‌ தீவிர‌வாதிக‌ள் உருவாகின‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை உருவாக்கி விட்ட‌தே அமெரிக்கா தான்......................ஏதோ அமெரிக்காவும் இஸ்ரேலும் இல்லை என்றால் உல‌க‌ம் அழிந்து போய் விடும் என்று க‌ற்ப‌னை க‌தை எழுதுறீங்க‌ள்

யாரோ இஸ்லாம் ம‌த‌த்தில் இருந்த‌ கோமாளி சொன்னா போல‌ ஒட்டு மொத்த‌ இஸ்லாம் ம‌க்க‌ள் க‌த்தி பொல்லுக‌ளுட‌ன் ச‌ண்டைக்கு வ‌ர‌வா போகின‌ம் அதுக‌ளுக்கும் எங்க‌ளை மாதிரி ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ம‌ன‌சை அவ‌ர்க‌ளுக்கும் ஆண்ட‌வ‌ர் ப‌டைத்துள்ளார்.................................

  • Replies 111
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அ

valavan

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு. அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன? இன்ற

nunavilan

பலஸ்தீனியர்களையும் ஒரே கூடைக்குள் போட்டீர்கள்  பாருங்கள் அங்கை தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரி பெரும்பாலான போர்களுக்கு ஏன் அமெரிக்கா காரணகர்த்தாவாக நிற்கிறது என எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

சஹ்ரான் சாகுமுன்  வெளியிட்ட ஒரு வீடியோவில்  இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும்  மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், 

இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும்  சொன்னான்.

அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் .

பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே

.அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத  இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள்,

புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும்  சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே! 

மேல‌ நுனா அண்ணா எழுதின‌து போல‌ யாழ்ப்பாண‌த்தில் வ‌சித்த‌ முஸ்லிம்க‌ளை எம்ம‌வ‌ர்க‌ள் விர‌ட்டி  அடிச்ச‌த‌ன் விலைவு தான் 

எங்க‌ளுக்கு பெரும்பாலான‌ முஸ்லிம் நாடுக‌ளின் ஆத‌ர‌வு ஆயுத‌ங்க‌ள் கிடைக்க‌ வில்லை

2002ச‌மாதான‌ கால‌த்தில் தேசிய‌ த‌லைவ‌ர் முஸ்லிம் ம‌க்க‌ளை விர‌ட்டின‌துக்கு வ‌ருத்த‌ம் தெரிவித்தார் அதோட‌ த‌மிழீழ‌ நில‌ம்ப‌ர‌ப்பில் எங்கையும் மீண்டும் முஸ்லிம் ம‌க்க‌ள் வ‌ந்து வாழ‌லாம் என்று சொன்னார்

காட்டி கொடுத்த‌வ‌ர்க‌ளை போட்டு த‌ள்ளி விட்டு யாழ்பாண‌த்தில் வாழ‌ ஆசைப் ப‌ட்ட‌ முஸ்லிம் உற‌வுக‌ளை எம்மோடு வைச்சு இருந்து இருக்க‌னும்......................க‌ருணா துரோக‌ம் செய்த‌த‌ற்காக‌ க‌ருணா கூட‌ நின்ற‌ போராளிக‌ளை கொல்ல‌ முடியுமா அதுக‌ள் த‌மிழீழ‌ மீட்புக்காய் போராட்ட‌த்தில் இணைந்த‌வ‌ர்க‌ள்.....................முஸ்லிம் ம‌க்க‌ளை விட‌ க‌ருணாவால் நாம் இழ‌ந்வை  ப‌ல‌........................................

Edited by வீரப் பையன்26
Posted
4 hours ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது.

மிகவும் உண்மை.

கொல்லப்பட்டவர் ஹமாஸ் தலைவர்களில் ஒருவர் என்ற நல்ல செய்தியுடன் என் காலை விடிகின்றது.

5 hours ago, விசுகு said:

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால். 

ஈரான் ஒரு செல்லாக்காசு. ஒரு அடையாள தாக்குதலை செய்து விட்டு, மீண்டும் பங்கருக்குள் பதுங்கிக் கொள்ளும்.

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

35 வருடங்களுக்கு முன்னரே அவர் தேர்ந்து கொண்ட பாதை, இப்படித் தான் முடியுமென்று அவருக்கே தெரிந்திருக்கும் - occupational hazard. நிலைமை இப்படி இருக்க ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு "அனுதாபங்கள்" என்று கண்ணீர் உகுப்போரைப் பார்த்து இந்த மரண வீட்டிலும் சிரிப்பே வருகிறது😂.

இஸ்ரேல் ஒக்ரோபர் தாக்குதலுக்குப் பதிலடியாக இதைப் போன்ற குறி வைத்துப் போட்டுத் தள்ளும் வேலைகளைத் தான் செய்திருக்க வேண்டும், காசாவில் 40K மக்களைக் கொன்றதால் எதையும் இஸ்ரேல் அடையவில்லை. அதைச் செய்திருக்காமல் இப்படியான வேலைகளைத் தொடர்ந்தால் பயன் பல மடங்கு இருக்குமென நினைக்கிறேன். 

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இது ஏன் அண்ணா உக்ரைன் மக்களுக்கு பொருந்தாது???

அது நேட்டோவினது ஆக்கிரமிப்பின் பிரதிபலிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, valavan said:

இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும்.

 உலகில் பலஸ்தின பிரச்சனையை வைத்துத்தான் அதிக  பிரச்சனைகள்  நடக்கின்றன. அதை தீர்க்க நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் தயார் இல்லை.
எனவே முஸ்லீம்கள் அடங்கப்போவதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, குமாரசாமி said:

அது நேட்டோவினது ஆக்கிரமிப்பின் பிரதிபலிப்பு.

நான் கேட்டது 

இதே அனுதாபம் ஏன் மண்ணை இழந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு இல்லை என்பது அண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Hamas Leader Killed: Iran-க்குள் புகுந்து கொன்றதா Israel? மத்திய கிழக்கில் போர் மூளும் அச்சம்

Ismail Haniyeh Killed: Iran-க்குள் புகுந்து Hamas leader-ஐ கொன்றதா Israel? அடுத்தடுத்த கொலைகளால் Middle East-ல் பதற்றம்

ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனிய கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, குமாரசாமி said:

 உலகில் பலஸ்தின பிரச்சனையை வைத்துத்தான் அதிக  பிரச்சனைகள்  நடக்கின்றன. அதை தீர்க்க நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் தயார் இல்லை.
எனவே முஸ்லீம்கள் அடங்கப்போவதில்லை.

கோமாளி நெத்த‌னியாகு இர‌ண்டு மாத‌ம் போதும் ஹாமாச‌ அழிக்க‌....................இன்னும் இர‌ண்டு மாத‌ங்க‌ளில் ஒரு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.............39ஆயிர‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ள் ப‌லி😥☹️

ஈரான் நாட்டு ஜனாதிப‌தி இழ‌ந்து மூன்று மாத‌ங்க‌ளும் ஆக‌ வில்லை ஈரான் நாட்டுக்குள் வைச்சு ஹ‌மாஸ் சேர்ந்த‌ ந‌ப‌ர‌ சுட்டு கொன்று இருக்கின‌ம் என்றால்

மொசாட்டுக்கு கு*டி க‌ழுவி விட்டு காட்டி கொடுக்கும் துரோகிய‌ல் ஈரான் நாட்டுக்குள் இருக்கின‌ம்

ஈரான் அர‌சு அன்மைக் கால‌மாய் கூட‌ இழ‌ப்புக‌ளை தான் ச‌ந்திக்குது.........................

உந்த‌ விடைய‌த்தில் புட்டினின் மெய்பாதுகாவ‌ல‌ர்க‌ளை பாராட்டியே ஆக‌னும்.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

நான் கேட்டது 

இதே அனுதாபம் ஏன் மண்ணை இழந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்கு இல்லை என்பது அண்ணா?

விசுகர்! உக்ரேனில் முக்காவாசிக்கு மேல் யுத்தம் என்னவென்று தெரியாத பகுதிகள். அரசியலும் ஊடகங்களும் நடத்தும் நாடகங்களுக்கு நீங்களும் பலியாகியிருப்பதையிட்டு மிக வருந்துகின்றேன்.

யுத்தம் இல்லாத இன்றைய உக்ரேனின் நிலையை பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வீரப் பையன்26 said:

யாழ்ப்பாண‌த்தில் வ‌சித்த‌ முஸ்லிம்க‌ளை எம்ம‌வ‌ர்க‌ள் விர‌ட்டி  அடிச்ச‌த‌ன் விலைவு தான் 

எங்க‌ளுக்கு பெரும்பாலான‌ முஸ்லிம் நாடுக‌ளின் ஆத‌ர‌வு ஆயுத‌ங்க‌ள் கிடைக்க‌ வில்லை

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு.

அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன?

இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, 

எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள்,

இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட  பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட  அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம்,

மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம்  சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின.

பாலஸ்தீன பிரச்சனையில்  பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா?

இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள்.

அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று  மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட.

44 minutes ago, குமாரசாமி said:

உலகில் பலஸ்தின பிரச்சனையை வைத்துத்தான் அதிக  பிரச்சனைகள்  நடக்கின்றன. அதை தீர்க்க நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் தயார் இல்லை.
எனவே முஸ்லீம்கள் அடங்கப்போவதில்லை.

ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா?

ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும்  நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது.

அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், 

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா?

பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா  இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள்.

நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை.

அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி  எப்போதுமே!

  • Like 9
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Guided Missile Attack என பிபிசி தமிழில் இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! உக்ரேனில் முக்காவாசிக்கு மேல் யுத்தம் என்னவென்று தெரியாத பகுதிகள். அரசியலும் ஊடகங்களும் நடத்தும் நாடகங்களுக்கு நீங்களும் பலியாகியிருப்பதையிட்டு மிக வருந்துகின்றேன்.

யுத்தம் இல்லாத இன்றைய உக்ரேனின் நிலையை பாருங்கள்.

🤣விசுகரைத் தான் ஏமாற்றி விட்டார்கள் போல, பாவம்!.

உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி செய்யும் பிரதான துறைமுக நகரான ஒடெஸ்ஸா பலமாகப் பாதுகாக்கப் பட்ட ஒரு நகரம், உல்லாசப் பயணிகளைக் கவரும் நகரும் கூட. இங்கே இந்த உல்லாசப் பயணி போன ஒரு மூலையில் எல்லாம் நலமாக இருக்கிறதென சின்னத் திரையில் பார்த்து நம்பும் உங்கள் போல புத்திசாலிகளை நம்பித் தான் புரின், ஹமாஸ், கிம் ஜன் உன் எல்லாம் நிலைத்திருக்கிறார்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, valavan said:

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு.

அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன?

இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, 

எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள்,

இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட  பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட  அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம்,

மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம்  சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின.

பாலஸ்தீன பிரச்சனையில்  பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா?

இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள்.

அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று  மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட.

ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா?

ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும்  நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது.

அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், 

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா?

பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா  இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள்.

நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை.

அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி  எப்போதுமே!

ஜோடான் , எகிப்து , ச‌வுதி

இத்த‌ன‌ நாடுக‌ளும் சேர்ந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா......................எகிப் நாட்டை இஸ்ரேல் ம‌ற்றும் அமெரிக்கா மிர‌ட்டி வைச்சு இருக்கு , அமெரிக்கான்ட‌ பெரிய ஆயுத‌ம் . எத‌ற்க்கு எடுத்தாலும் பொருளாதார தடை போடுவோம் என்று மிரட்டுவது ம‌ற்ற‌ நாடுக‌ளை , ஏன் வீன் பிர‌ச்ச‌னைக்கு போவான் என்று எகிப்து ஒதுங்கி இருக்குது
ஆனால் ம‌று  ப‌க்க‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் ஹ‌வூதிஸ் ப‌டை அமெரிக்க‌ன்ட‌ இங்லாந் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌லில் வைச்சு ம‌ர‌ண‌ அடி கொடுத்தார்க‌ள் 
இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் தொழிநுட்ப‌த்தால் இய‌ங்கும் போர் க‌ப்ப‌லை தாக்கி அழிப்ப‌து லேசான‌ விடைய‌ம் அல்ல‌  . ஆனால் அதை ஹ‌வூதீஸ் ப‌டை செய்து காட்டி அமெரிக்காவையும் மிர‌ட்டி இங்லாந்தையும் மிர‌ட்டின‌து

இப்ப‌ தெரியுதா ப‌ல‌ஸ்தீன‌ . ஈரான் . ஹ‌வூதிஸ்சின் ஒற்றுமை

2009 எம் இன‌ம் அழிந்த‌ போது த‌மிழ் நாட்டில் மான் ஆட‌ ம‌யில் ஆட‌ பார்த்த‌ இன‌ம் தானே எங்க‌ட‌ இன‌ம் 

எங்க‌ட‌ ஒற்றுமையோட‌ ஒப்பிடும் போது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்காக

ஈரான்
ஹ‌வூதீஸ்
ஹிஸ்புள்ளா என்று ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வான‌ போராட்ட‌ குழு க‌ள‌த்தில் உட‌ன‌ குதிச்ச‌வை இதே அவ‌ர்க‌ளின் ஒற்றுமைக்கு கிடைச்ச‌ பெரிய‌ வெற்றி🫡.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, குமாரசாமி said:

விசுகர்! உக்ரேனில் முக்காவாசிக்கு மேல் யுத்தம் என்னவென்று தெரியாத பகுதிகள். அரசியலும் ஊடகங்களும் நடத்தும் நாடகங்களுக்கு நீங்களும் பலியாகியிருப்பதையிட்டு மிக வருந்துகின்றேன்.

யுத்தம் இல்லாத இன்றைய உக்ரேனின் நிலையை பாருங்கள்.

ஐயோ அண்ணா 

எப்படி இருந்த புட்டின்

எப்படி இருந்த ரசியா

எப்படி இருந்த குமாரசாமி அண்ணா....????😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வீரப் பையன்26 said:

ஜோடான் , எகிப்து , ச‌வுதி

இத்த‌ன‌ நாடுக‌ளும் சேர்ந்து இஸ்ரேல் மீது போர் தொடுத்த‌தை ம‌ற‌ந்து விட்டீங்க‌ளா......................எகிப் நாட்டை இஸ்ரேல் ம‌ற்றும் அமெரிக்கா மிர‌ட்டி வைச்சு இருக்கு , அமெரிக்கான்ட‌ பெரிய ஆயுத‌ம் . எத‌ற்க்கு எடுத்தாலும் பொருளாதார தடை போடுவோம் என்று மிரட்டுவது ம‌ற்ற‌ நாடுக‌ளை , ஏன் வீன் பிர‌ச்ச‌னைக்கு போவான் என்று எகிப்து ஒதுங்கி இருக்குது
ஆனால் ம‌று  ப‌க்க‌ம் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் ஹ‌வூதிஸ் ப‌டை அமெரிக்க‌ன்ட‌ இங்லாந் க‌ப்ப‌ல்க‌ளை க‌ட‌லில் வைச்சு ம‌ர‌ண‌ அடி கொடுத்தார்க‌ள் 
இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் தொழிநுட்ப‌த்தால் இய‌ங்கும் போர் க‌ப்ப‌லை தாக்கி அழிப்ப‌து லேசான‌ விடைய‌ம் அல்ல‌  . ஆனால் அதை ஹ‌வூதீஸ் ப‌டை செய்து காட்டி அமெரிக்காவையும் மிர‌ட்டி இங்லாந்தையும் மிர‌ட்டின‌து

இப்ப‌ தெரியுதா ப‌ல‌ஸ்தீன‌ . ஈரான் . ஹ‌வூதிஸ்சின் ஒற்றுமை

2009 எம் இன‌ம் அழிந்த‌ போது த‌மிழ் நாட்டில் மான் ஆட‌ ம‌யில் ஆட‌ பார்த்த‌ இன‌ம் தானே எங்க‌ட‌ இன‌ம் 

எங்க‌ட‌ ஒற்றுமையோட‌ ஒப்பிடும் போது ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளுக்காக

ஈரான்
ஹ‌வூதீஸ்
ஹிஸ்புள்ளா என்று ப‌ல‌ஸ்தீன‌த்துக்கு ஆத‌ர‌வான‌ போராட்ட‌ குழு க‌ள‌த்தில் உட‌ன‌ குதிச்ச‌வை இதே அவ‌ர்க‌ளின் ஒற்றுமைக்கு கிடைச்ச‌ பெரிய‌ வெற்றி🫡.........................

அப்பிடியே இந்த 3 நாடுகளும் சேர்ந்து ஆரம்பித்த தாக்குதலில் இஸ்ரேல் இழந்த நிலப்பரப்பு எவ்வளவு எண்டும் ஒருக்கா எழுதி விடுங்கோ😂!

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Justin said:

அப்பிடியே இந்த 3 நாடுகளும் சேர்ந்து ஆரம்பித்த தாக்குதலில் இஸ்ரேல் இழந்த நிலப்பரப்பு எவ்வளவு எண்டும் ஒருக்கா எழுதி விடுங்கோ😂!

உங்க‌ளுக்கு ஏற்க்க‌ன‌வே தெரியும் போது என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை😁😛..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

ஈரானுக்குள்ளும் முக்கிய தலைவரை காப்பாற்ற முடியவில்லை அராபியர்களால்

ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை.

ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளுக்கு ஏற்க்க‌ன‌வே தெரியும் போது என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை😁😛..........................

லொல்..ப்றோ😂!

பலஸ்தீனம் இன்று இருக்கும் நிலையையும்,இஸ்ரேலின் நிலையயும் மனதில் வைத்து இந்த வரலாற்றுத் துணுக்குகளை வாசித்துப் பாருங்கள்:

1. ஓட்டோமான் (பழைய துருக்கி தேசம்) வீழ்ந்த நேரம் இஸ்ரேலுக்கு பல்போர் பிரகடனம் மூலம் நிலத்தை பிரிட்டன் ஒதுக்கிக் கொடுத்தது. அந்த நேரம் பலஸ்தீன அரபுக்கள் நிராகரித்து வன்முறையை ஆரம்பித்தார்கள். இந்த வன்முறையை எதிர் கொள்ள யூதர்கள் உருவாக்கிய பராமிலிற்றரிக் குழு ஹகானா (Haganah) இஸ்ரேலிய இராணுவத்தின் (IDF) முன்னோடிப் படை இது தான்.

2. சேர்ச்சிலுக்கு யூதர், இந்தியர், ஆபிரிக்கர் ஆகிய  யாரையும் பிடிக்காது. அவர் பல்போர் பிரகடனத்தில் இருந்த இஸ்ரேல் நிலப்பரப்பைப் பிரித்து ஜோர்தான் நாட்டை உருவாக்கினார் (இதுவும் பலஸ்தீன அரபுக்களுக்குப் பிடிக்கவில்லையென்பது வேறு கதை).

3. 1947 இல், ஐ.நா வினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப் பட்ட போது, பல்போர் பிரகடனம் ஒதுக்கிய நிலப்பரப்பை விட குறைந்த நிலம் தான் இஸ்ரேலுக்கு வழங்கப் பட்டது. இப்போது ஹமாஸ் இருப்பது போல இஸ்ரேல் தரப்பில் இருந்த கடும்போக்காளர்கள் "இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, அடித்துப் பிடிப்போம்!" என்ற போது இஸ்ரேல் தலைவராக இருந்த டேவிட் பென்கூரியன் "ஒரு மேசைத்துணி அளவிலான நிலம் கூட சர்வதேச அங்கீகாரத்தோடு கிடைத்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று இஸ்ரேலை உருவாக்கினார்.

4. ஒருவாறாக இஸ்ரேலை உருவாக்கிய பின்னர் அதன் சனப்பரம்பலைப் (demography) பார்த்தால், இஸ்ரேல் நாட்டில் அரபுக்களுக்கும், யூதருக்கும் ஒரு லட்சம் சனத்தொகை அளவு தான் வித்தியாசம். அரபுக்களின் பிறப்பு வீதப் படி பார்த்தால், ஒரு தலைமுறையில் இஸ்ரேல் இன்னொரு அரபு நாடாகும் சாத்தியம் தெரிந்தது😂. இதைப் பார்த்து இஸ்ரேல் தலைவர்கள் கையைப் பிசைந்து யோசித்துக் கொண்டிருக்க, "இஸ்ரேலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று போரை ஆரம்பித்து இஸ்ரேலின் பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர் பலஸ்தீன அரபுக்கள்.

பின்னர் நடந்தது வரலாறு!

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, கிருபன் said:

ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை.

ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!

மத ரீதியாக அவர்கள் பார்க்காது விட்டால் எதற்காக இஸ்ரேலை பகைக்க வேண்டும்?? இஸ்ரேலின் பகையாளிகளுக்கு இஸ்ரேலை  தாக்க இடமளிக்க வேண்டும்???? வாங்கி கட்ட வேண்டும் என்று தெரிந்தும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

ஈரானியர்கள் பாரசீகர்கள். அரேபியர்கள் இல்லை.

ஈரான் எதுவும் செய்யமுடியாது. ரஷ்யாவுடன் கூட்டுவைத்தாலும் இஸ்ரேலின் துல்லியமான தாக்குதல்கள் மூலம் முக்கியமானவர்களை தொடர்ந்தும் இழக்கத்தான் போகின்றது. போருக்கு வெளிக்கிட்டால் தெஹ்ரான் முல்லாக்கள் மூட்டைமுடிச்சோடு வெளியேறவேண்டிவரும். ஆனாலும் இஸ்ரேல் பலஸ்தீனிய பொதுமக்களை பாரிய அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும், பட்டினி போடுவதும், கேவலமாக நடத்துவதும் மிலேச்சத்தனமான செயல்கள். இவற்றை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ ஒருவரும் இல்லை!

கிட்ட‌ த‌ட்ட‌ 10மாத‌த்தில் 

ஹ‌மாஸ்சின் பெரிய‌ த‌லைவ‌ர்க‌ளை இஸ்ரேல் போட்டு த‌ள்ளிட்டு............................

சுர‌ங்க‌த்தை திட்ட‌ம் போட்டு செய்து சாதிச்ச‌வ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ளின் இருப்பிட‌ங்க‌ளை எதிரிக்கு தெரியாம‌ ர‌க‌சிய‌மாய் வைத்து   இருக்க‌ தெரிய‌ வில்லை😒.................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, valavan said:

ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா?

அதிக பிரச்சனைகள் பலஸ்தீனத்தை அடிப்படையாக கொண்டது என்று மட்டும் தான் சொன்னேன். எல்லா பிரச்சனைகளும் என சொல்லவில்லை.மற்றும் படி  அவைகள் மதத்துக்குள் நடக்கும் குழுச்சண்டைகள். பலஸ்தின பிரச்சனை போன்று சர்வதேச பிரச்சனை அல்ல.அதை விட தங்களுக்குள் அடிபட்டாலும் பலஸ்தீன பிரச்சனையில் ஒரு கோட்டில் தான் நிற்கின்றார்கள்.

2 hours ago, valavan said:

ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும்  நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது.

2 hours ago, valavan said:

அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், 

அரபு வசந்தத்தை சிரியா எதிர்த்து நின்றது.அதுதான் மேற்குகிற்கு பிரச்சனை.அது சரி சிரியாவிலும் லிபியாவிலும் நேட்டோவிற்கு என்ன வேலை? உலகில் எத்தனையோ போர் அகதிகள் இருக்கும் போது மேற்குலகு சிரிய அகதிகளுக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்து வரவேற்க என்ன காரணம்?

2 hours ago, valavan said:

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அவர்களின் போக்கும் குணங்களும் சரியென நான் எங்கும் வாதாடியதில்லை.

ஆனால் சதாம் ஹுசைனும் கடாபியும் அசாத்தும் மேற்குலகிற்கு என்ன செய்தார்கள்? ஏதாவது கேடுகள் விளைவித்தார்களா? அவர்கள் நாடுகளில் அகதிகள் உருவாக யார் காரணம்?

2 hours ago, valavan said:

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா?

வினை விதைத்தவர்கள் வினைதான் அறுக்க முடியும் தினை அறுக்க முடியாது.

2 hours ago, valavan said:

பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள்.

அதெப்படி உங்களால்  இப்படியொரு தீர்க்கதரிசனமான முடிவை சொல்ல முடிகின்றது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டால் தமிழ்நாடும் பிரிந்துவிடும்,சிங்களவர்களும் கடலுக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்பது மாதிரி......

2 hours ago, valavan said:

அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா  இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள்.

அமெரிக்கா, யூதம், மேற்குலகு உட்பட முஸ்லீம் நாடுகளுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என சொல்ல வருகின்றீர்கள்??

2 hours ago, valavan said:

நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை.

அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி  எப்போதுமே!

நான் முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை. ஆனாலும் மேற்குலகத்தினர் சாதுக்கள் அல்ல.

  • Like 1
Posted
6 hours ago, Justin said:

35 வருடங்களுக்கு முன்னரே அவர் தேர்ந்து கொண்ட பாதை, இப்படித் தான் முடியுமென்று அவருக்கே தெரிந்திருக்கும் - occupational hazard. நிலைமை இப்படி இருக்க ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு "அனுதாபங்கள்" என்று கண்ணீர் உகுப்போரைப் பார்த்து இந்த மரண வீட்டிலும் சிரிப்பே வருகிறது😂.

இஸ்ரேல் ஒக்ரோபர் தாக்குதலுக்குப் பதிலடியாக இதைப் போன்ற குறி வைத்துப் போட்டுத் தள்ளும் வேலைகளைத் தான் செய்திருக்க வேண்டும், காசாவில் 40K மக்களைக் கொன்றதால் எதையும் இஸ்ரேல் அடையவில்லை. அதைச் செய்திருக்காமல் இப்படியான வேலைகளைத் தொடர்ந்தால் பயன் பல மடங்கு இருக்குமென நினைக்கிறேன். 

கடந்த 70 வருடங்களாக இஸ்ரேல் பலஸ்தீன மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்தது கமாஸ் , PLO போன்றவர்கள் தான் வேண்டாம் என்று சொல்லி உள்ளார்கள்.🙂

9 hours ago, valavan said:

இப்போது கியூபாவை தொட்டுகொள்கிறீர்கள், பின்பு ரஷ்யா,இந்தியா என்றும் தொடரும் வாய்ப்பிருக்கிறது,

நாங்கள் பாலஸ்தீன தலைவர் பலி தொடர்பான திரியில் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம் அதனால் அவர்பற்றி பேசினேன், கியூபா பற்றிய செய்திகளாயிருந்தால் கண்டிப்பாக அதே கூடையில்தான் கியூபா  தலைமையும்  போடப்படும் என்பதில் மாற்றமில்லை.

எனது இனத்தின் அழிவை கொண்டாடியவர்களுக்கு முன்னால் நடு நிலமை என்பது ஒருபோதும் இல்லை.

பலஸ்தீனியர்கள் ஒரு போராடும் குழு. கியூபா ஒரு காலத்தில் போராடிய நாடு என்ற வகையில் கியூபாவை இழுத்தேன்.

4 hours ago, valavan said:

யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்  வெளியேற்றப்பட்டது  90ம் ஆண்டு.

அதற்குமுதல் எந்த முஸ்லிம்நாடுகள் எமக்கு ஆதரவும் ஆயுதமும் தந்தன? எந்த முஸ்லீம்நாடுகள் எமக்கு ஆயுதங்கள் தரும் வாய்ப்பு இருந்தன?

இன்று பாலஸ்தீன பிரச்சனையில் வலிமைமிக்க சவுதி,எகிப்து,குவைத்,ஜோர்டான் அமீரகம், துளிகூட சக முஸ்லீம்கள்மேல் கருணை காட்டவில்லை, 

எகிப்து காசா முஸ்லீம்களுக்காக தமது எல்லைகளை திறந்திருந்தால் பொதுமக்கள் இறப்பு சில நூறுகளிலேயே இருந்திருக்கும், 40 ஆயிரம்பேர் இறப்பும் ஒரு லட்சம்பேர் அங்கவீனமாயும் போயிருக்க மாட்டார்கள். மாறாக இஸ்ரேல் தாக்குதலில் அவர்களை முழுமையாக கொல்ல எல்லைகளில் தற்காலிக பெரும் தடுப்பு சுவர்களை போட்டு அதனை தாண்டி ஒருவேளை எவராவது வந்தால் போட்டு தள்ள டாங்கிகளையும் நிறுத்தியிருப்பார்கள்.

இஸ்லாமியர்கள் ஒரு விநோதமானவர்கள், அவர்கள் எந்த சமூகத்துடனும் உளபூர்வமாக ஒற்றுமையாக வாழாதவர்கள், ஏன் தமக்குள்லேயே நாட்டுக்கு நாடு ஒற்றுமையில்லாதவர்கள்,

இன்றைய பாலஸ்தீன பிரச்சனையில்கூட  பொருளாதாரமும் ஆயுதபலமும் கொண்ட  அரபுநாடுகள் தமது வலிமையை வைத்தே உலகை பெரும் அழுத்ததிற்குள் கொண்டு வந்திருக்கலாம், பெட்ரோலிய வழங்கலை வைத்தே ஒரு அச்சுறுத்தலை உலகத்திற்கு கொடுத்திருக்கலாம்,

மாறாக ஏமனில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு தமது வான் பரப்பை அனுமதித்ததன் மூலம்  சவுதியும், இஸ்ரேலை தாக்க ஈரான் அனுப்பிய ஈரான் ஏவிய ஏவுகணைகள் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதன்மூலம் ஜோர்டானும் இஸ்ரேலுக்கு மறைமுக ஆதரவு வழங்கின.

பாலஸ்தீன பிரச்சனையில்  பாலஸ்தீனம் புலிகள் இலங்கை முஸ்லீம்களுடன் நடந்து கொண்டமாதிரி ஏனைய அரபுநாடுகளுடன் நடந்து கொண்டனவா அதனால்தான் அவர்களின் ஆதரவு வர்களுக்கு கிடைக்கவில்லையா? இல்லையென்றால் அந்த அரபுநாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாய் இருந்திருக்குமா?

இலங்கை போரின்போது முஸ்லீம்களுடன் கைகோர்த்து நின்ற சிங்களவனுக்கே குண்டு வைத்த சஹ்ரான் சிங்களவர்கள் எந்த முஸ்லீம்களை வெளியேற்றியதால் அந்த கொடூரத்தை பண்ணினான், அது அரசியல் சதியென்று மழுப்பமுடியாது, அடுத்தவன் சொன்னால் தம்மோடு கூட நின்றவர்களுக்கே மதத்தின் பெயரால் குண்டு வைப்பவர்கள் கூலிபடை என்று ஆகிவிடுவார்கள்.

அமெரிக்காவிற்கு பயந்து ஆதரவு வழங்கவில்லையென்று கடந்து சென்றுவிட முடியாது இன்று  மேற்குலகுடன் ஒருவித முறுகல் போக்கை கொண்டிருந்து பாலஸ்தீனத்திற்கு பெரும் ஆதரவு வழங்கும் துருக்கி அமெரிக்க நேசநாடு மட்டுமல்ல, நேட்டோவின் அக்கத்துவநாடும்கூட.

ஈரானும் ஈராக்கும் மோதிக்கொண்டது, ஈராக்கும் குவைத்தும் மோதிக்கொண்டது,பாகிஸ்தானும் ஈரானும் மோதல் நிலையில் உள்லது, இந்தியாவும் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும், சவுதியும் ஏமனும் மோதல் நிலையில் உள்ளது இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலஸ்தீன பிரச்சனைகள்தானா?

ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமுமே பாலஸ்தீனத்தை கைவிட்ட நிலையில் ரஷ்யா மட்டுமே உறுதியாக அவர்கள் பக்கமும் ஈரான் பக்கமும்  நின்ற வல்லரசு , அவர்களையே போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே இரு தடவை இஸ்லாமிய பயங்கரவாதம் கொன்று குவித்திருக்கிறது தேவாலயத்தில் புகுந்து மதகுருவை வெளியே இழுத்துவந்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறது, அரங்கம் ஒன்றில் புகுந்து பெண்கள் குழந்தைகளென நூற்றுக்கணக்கில் கொன்று குவித்திருக்கிறது.

அப்போ ரஷ்யாவும் பாலஸ்தீன பிரச்சனையில் எதிராக நின்றதுதான் அந்த தாக்குதலுக்கு காரணமா? சிரியபோரின்போது விமானங்களை அனுப்பி முஸ்லீம்களை மீட்டு தமது நாட்டிற்கு கொண்டு வந்து ரோஜாபூக்களை வழங்கி நிரந்தர அனுமதியும் வழங்கி தாங்கு தாங்கென்று தாங்கியது மேற்குலகம், 

வந்து ஓரிரு மாதங்களிலேயே வாழ்வு தந்த நாடுகளின் பெண்கள்மீது வல்லுறவும், கத்திக்குத்து, லொறி ஏத்தி நசுக்கி கொல்வது, துப்பாக்கி சூடுஎன்று  வகை வகையாக நன்றிக்கடன் தீர்த்தார்கள்  அதற்கு தம் குடிமக்களை பெரிதும் காவு கொடுத்தது பிரான்சும் ஜேர்மனியும் பிரிட்டனுமே.

அதற்கும் பாலஸ்தீன பிரச்சனைகள்தான் காரணமா?

பாலஸ்தீன பிரச்சனையை தீர்த்துவிட்டால் முஸ்லீம்கள் அடங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது ஒரு மாயை, அது தீர்தால் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள், இல்லாவிட்டால் தமக்குள்ளேயே பிரச்சனைகளை உருவாக்கி தமது பள்ளிவாசல்களுக்குள்லேயே குண்டு வைப்பார்கள் ஏற்கனவே பலதடவை வைத்திருக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை முஸ்லீம் என்று வந்தால் அவர்கள் எது செய்தாலும் சரி என்றே வாதிடுவார்கள், வக்காலத்து வாங்குவார்கள், அதையும் மீறி அவர்கள் செயல்கள் அவர்களுக்கே கொடூரமா  இருந்தால் அதெல்லாம் அமெரிக்க யூத சதி என்று அடுத்தவர்மேல் பழி போடுவார்கள்.

நாம் தவறே செய்யாதவர்களா என்று யாரும் கேட்கலாம், நாம் தவறு செய்யும் போது அதனை முதலில் சுட்டிக்காட்டுவதும் தவறென்று வாதிடுவதும் நாங்களே. எமது இனம் மதம் என்பதற்காக வக்காலத்து வாங்குவதில்லை.

அவர்கள் அப்படி அல்ல, இப்போது மட்டுமல்ல இனி  எப்போதுமே!

உப்பிடி பார்த்தால் ஒரு பில்லியன் முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக அல்லவா இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

எப்படி இருந்த புட்டின்

புட்டின் முன்னர் எப்படி இருந்தார்? இப்போது எப்படி இருக்கின்றார்?

3 hours ago, விசுகு said:

எப்படி இருந்த ரசியா

15 வருடங்களுக்கு மேலாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்திருக்கின்றார்கள். அந்த நாடு யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை. போருளாதாரத்தில் சீரழியவும் இல்லை.
உக்ரேன் யுத்தத்தின் பின் ஐரோப்பிய நாடுகளில் தான் அதிக பிரச்சனை உருவாகியுள்ளது.பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வருகின்றன.சிறிய தொழில் நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்கின்றன.அல்லது மூடு விழாக்கள் நடக்கின்றன.மருந்து தடட்டுப்பாடுகள் உருவாகிக்கொண்டு வருகின்றது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் மெல்ல மெல்ல தமது விமர்சனங்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களை விட சீன உற்பத்தி மின்சாரகார்கள் அரை விலைக்கு விற்க தயாராகி விட்டார்கள். இதற்கு காரணம் பற்ரரி உற்பத்திக்கு காரணமான மூலப்பொருள் ரஷ்யாவிலிருந்தே தருவிக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை சீனா நன்றாகவே பயன்படுத்துகின்றது.

3 hours ago, விசுகு said:

எப்படி இருந்த குமாரசாமி அண்ணா....????😭

அன்றும் இன்றும் குமாரசாமிக்கு தெரிந்தது நேர்மை,கண்ணியம்,நியாயம்,வெளிப்படை இது என்றும் இருக்கும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

அன்றும் இன்றும் குமாரசாமிக்கு தெரிந்தது நேர்மை,கண்ணியம்,நியாயம்,வெளிப்படை இது என்றும் இருக்கும். 😎

எந்தக் குமாரசாமியை சொல்லுகிறீர்கள்.?????? அந்த பலகாரங்கள் . கடத்தியவரையா??🤣

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி கிருபன்,  யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு.  🤣
    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.