Jump to content

மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT
புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே?

வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்?

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நிலைமை மோசமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள அதிகாரப்பூர்வ பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்பதை அங்குள்ள பிபிசி செய்தியாளர் உறுதி செய்துள்ளார்.

நிலைமை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாவதை உணர்ந்த அவர், தனது சகோதரியுடன் வங்கதேசத்தை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன் சென்றிருப்பதாக பிபிசி பங்களா செய்தி வெளியிட்டிருந்தது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியதாக தகவல்

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதரண சூழல் எதிரொலியாக நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தரையிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஹிண்டர் விமானப்படை தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

ஹசீனா இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க தீர்மானித்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் நாட்டிற்கு செல்லப் போகிறாரா என்பதை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், அவர் லண்டன் செல்லப் போவதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல.

பிரதமர் இல்லத்தை சூறையாடிய போராட்டக்காரர்கள்

வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர்.

அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன. சில வீடியோக்களில், பிரதமர் இல்லத்தில் இருந்து நாற்காலிகள், சோஃபா போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச் செல்லும் காட்சிகள் உள்ளன.

வங்கதேச பிரதமர் ராஜினாமா
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,CHANNEL 24

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,CHANNEL 24

இடைக்கால அரசு - ராணுவ தளபதி

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையிநிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வங்கதேசத்தில் அமையவிருக்கும் இடைக்கால அரசுக்கு யார் தலைமையேற்பார் என்பதில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.

வங்கதேசத்தின் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய ராணுவ தளபதி உறுதியளித்தார். அங்கே, கடந்த சில வாரங்களாக நீடிக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.

வங்கதேசம், ஷேக் ஹசீனா
படக்குறிப்பு,வங்கதேச ராணுவ தளபதி வகெர்-உஸ்-ஜமான்

ஷேக் ஹசீனா இந்தியா வந்தது ஏன்?

வங்கதேசத்தில் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி இந்தியா செல்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாகவே, வங்கதேசத்திற்கு இந்தியா முக்கிய கூட்டாளியாக திகழ்ந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுமே பலன் பெற்றுள்ளன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் வங்கதேசம் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் நட்பான அரசு அமைவது இந்தியாவுக்கு பலன் தரும் ஒன்று.

ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராளிக் குழுக்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதிகார மட்டத்தில் நட்பை பலப்படுத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து பொருட்களை வங்கதேசம் வழியாக எடுத்துச் செல்ல அவர் அனுமதி கொடுத்தார்.

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,EPA

ஷேக் ஹசீனா 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக தேர்வான போதே இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். இந்தியா - வங்கதேசம் இடையே நெருக்கமான உறவு நிலவ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

2022-ஆம் அண்டு இந்தியாவுக்கு வருகை தந்த போது, இந்தியா, இந்திய அரசு, இந்திய மக்கள் மற்றும் இந்திய ராணுவம் ஆகியவை 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலையில் முக்கிய பங்காற்றியதை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவுக்கு இருந்த நெருக்கமான உறவு, அவரை இந்தியா ஆதரித்தது ஆகியவை வங்கதேச எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தியா, வங்கதேச மக்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கக் கூடாது என்பது அவர்களது நிலைப்பாடு.

போராட்டங்கள் மீண்டும் வெடித்தது எப்படி?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் ஆட்சியின் தவறான அரசியல் நடவடிக்கைகள் நிலைமையை மோசமாக்கியது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஹசீனா தற்போதைய ஒதுக்கீட்டு சீர்திருத்த முறையைக் குறிப்பிட்டு, அதை விடுதலைக்கு ஆதரவான மற்றும் விடுதலைக்கு எதிரான சக்திகள் என இருவகையாக ஒப்பிட்டார். கடந்த காலக்கட்டத்தில் அவரது கட்சி அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திய கதை இது.

அவர் கூறுகையில்: "சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேரக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், ரசாக்கர்களின் பேரப்பிள்ளைகள் (பாகிஸ்தான் ஒத்துழைப்பாளர்கள்) ஒதுக்கீடு பெற வேண்டுமோ? அதுதான் எனது கேள்வி." என்று பேசினார்

அவர் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், பல்வேறு வளாகங்களில் மாணவர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத் தொடங்கினர்.

காவல்துறை மற்றும் உயரடுக்கு பாதுகாப்பு படை, ரேபிட் ஆக்ஷன் பட்டாலியன் (RAB) படையுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு பதிலடி கொடுத்தது. ஆளும் கட்சியின் மாணவர் பிரிவும் அவர்களின் தாக்குதலில் இணைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

அடுத்த 72 மணி நேரத்தில், வங்கதேசத்தின் பல இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்தது. தேசிய தொலைக்காட்சி கட்டிடம் எரிக்கப்பட்டது. ஒரு சிறைச்சாலையின் வாயில் உடைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பியோடினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வங்கதேசப் போராட்டம்

ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை

ஷேக் ஹசீனாவுக்கு இது மிகப்பெரிய சோதனை.

வங்க தேசத்தின் பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சாதாரண மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணான ஹசீனாவின் வலிமையை அசைத்து பார்த்தனர்.

பதினாறு ஆண்டுகளாக, பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்தார்.

அவரின் ஆட்சியில் சர்வாதிகார தலைமை போக்கு இருந்தபோதிலும் தேசத்தில் நிகழ்ந்த பெரிய முன்னேற்றங்களுக்கு அவரே காரணம் என்று சிலர் கூறுகிறார்கள்.

பெரிய பிரச்னைகள் ஏற்பட்ட போதிலும் அவரை யாராலும் அசைக்க முடியவில்லை. ஆனால் இம்முறை அவரின் சக்தியை மாணவர் சக்தி அசைத்துவிட்டது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அமைதியின்மை, கலவரம் மற்றும் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளன.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ஜூலை 21, 2024 அன்று டாக்காவில், அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மோதல்களின் போது தீ வைத்து எரிக்கப்பட்ட சேதமடைந்த வாகனங்களை ஒருவர் கடந்து செல்கிறார்.

'இது பிரஷர் குக்கர் திடீரென வெடிப்பது போன்ற நிலை'

ஆசியாவில் சர்வாதிகாரம் பற்றி விரிவாக ஆய்வு செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் முபாஷர் ஹசன், இது ஒரே இரவில் ஏற்பட்ட போராட்டம் அல்ல, மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோவம் அதிகரித்து, "பிரஷர் குக்கர் திடீரென வெடித்தால் எப்படி இருக்கும் அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது" இது என்று விவரித்துள்ளார்.

டாக்டர் ஹசன் பிபிசி பங்களாவிடம் கூறுகையில் : "நினைவில் கொள்ளுங்கள், பத்திரிகை சுதந்திர குறியீட்டில் ரஷ்யாவிற்கும் கீழே இருக்கும் ஒரு நாட்டைப் பற்றி இங்கே பேசுகிறோம்.

"ஷேக் ஹசீனா மற்றும் அவரது கட்சியினரின் விடுதலைப் போரின் உணர்வை அதிகமாக அரசியலாக்குவது, குடிமக்களுக்கு ஆண்டுதோறும் அடிப்படை வாக்குரிமை மறுப்பது மற்றும் அவரது ஆட்சியின் சர்வாதிகாரத் தன்மை ஆகியவை சமூகத்தின் ஒரு பெரிய பிரிவினரை கோபப்படுத்தியுள்ளன.”

"துரதிர்ஷ்டவசமாக, அவர் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமராக நடந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு குழுவுக்கு மட்டுமே தலைவராக இருந்தார்."

வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக நடக்கும் நிகழ்வுகளால் டாக்டர் ஹசன் வியப்படையவில்லை.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

கடந்த மாதம் சர்ச்சைக்குரிய இந்த ஒதுக்கீட்டு முறையை உயர்நீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்திய போது எதிர்ப்புகள் அதிகரித்தன, ஆளும் கட்சியினர், போராட்டக்காரர்களைத் தாக்கியபோது போராட்டம் வன்முறையாக மாறியது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, வங்கதேச உச்ச நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையை மீண்டும் நிறுவிய மற்றும் மாணவர் போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது.

வங்கதேசப் போராட்டம் : ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவரான ஷேக் ஹசினாவை மாணவர் சக்தி அசைத்துவிட்டதா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,ராணுவ வீரர்கள் ஊரடங்கு உத்தரவின் இரண்டாவது நாளில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா

05 AUG, 2024 | 02:58 PM
image
 

பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி  பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல்  வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/190330

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்...! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் - நாட்டை விட்டு தப்பியோட்டம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) பதவி விலகல் செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.  

இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ உலங்கு வானூர்தி

இதனையடுத்து பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்...! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் - நாட்டை விட்டு தப்பியோட்டம் | Bangladesh Prime Minister Sheikh Hasina Resigned

பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு 

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தீ வைக்கப்பட்ட ஷேக் ஹசீனா அலுவலகம்...! பதவி விலகிய பங்களாதேஷ் பிரதமர் - நாட்டை விட்டு தப்பியோட்டம் | Bangladesh Prime Minister Sheikh Hasina Resigned

நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது. 

இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/bangladesh-prime-minister-sheikh-hasina-resigned-1722851699

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ..நம்ம சிறீலங்காவுக்கு .. கடன் கொடுத்த மனுசியை இப்படிச் செய்திடீங்களே..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, alvayan said:

அட ..நம்ம சிறீலங்காவுக்கு .. கடன் கொடுத்த மனுசியை இப்படிச் செய்திடீங்களே..

கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂
கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஒரு இரணுவ முகாமில் இறங்கியுள்ளார். இவரின் சகோதரி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்திற்கு சென்று இனி சகோதரியுடன் தங்குவதே இவரின் தற்போதைய முடிவு என்று சொல்லப்படுகின்றது.

இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த நாடாவது கொஞ்சமாவது உருப்படுவது போலத் தெரிந்தால், அடுத்த கணமே அந்த நாடு அதல பாதாளத்திற்கு தள்ளப்படும். அதற்கேற்ப அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் முன் யோசனையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத முடிவுகளை எதேச்சதிகாரமாக எடுத்து, பிராந்திய வல்லரசின் வேலையை இலகுவாக்கிக் கொடுப்பார்கள்.    

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அட ..நம்ம சிறீலங்காவுக்கு .. கடன் கொடுத்த மனுசியை இப்படிச் செய்திடீங்களே..

கடன் குடுத்த நன்றிக்கடனுக்காகவாவது சிரிலங்கா அதிபர் மனிசியை கூப்பிட்டு தன்னோட வைச்சிருக்க வேணும். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
பதவி  கவிழ்க்கப்பட்டதற்கான பின்புலம் இதுதான்.  👇
 
(இதையெல்லாம் BBC யிடம் எதிர்பார்க்க முடியாது)
👇
1)  பங்களாதேஸ் மற்றும் மியன்மாரின் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றிணைந்து புதிய கிறிஸ்தவ நாடு /பிரதேசம் ஒன்றை உருவாக்க US  முற்படுகிறது. 
In May, she accused the US of seeking to create a “Christian state” by partitioning pieces of Bangladesh and Myanmar.
 
2) மனித சஞ்சாரம் அற்ற St. Martin தீவில் இராணுவத் தளம் அமைக்க மேற்குநாடு ஒன்று கேட்டதாகவும் அதற்குப் பிரதியுபகாரமாக தேர்தலில் இலகுவாக வெற்றியடைய வழி செய்வதாகவும் தான் அதனை மறதாதுவிட்டதாகவும்  அவர் கூறியுள்ளார்......... 
The same month, she revealed that she had been offered an easy victory in elections held in January in exchange for permission to an unnamed Western power to build up an airbase on Bangladesh's St. Martin’s Island in the Bay of Bengal.
 
Her government rejected the proposal, sticking with its longstanding “malice to none” foreign and security policy, which rules out joining any military blocs.
 
Western media including State Department media arm Voice of America actively played up Bangladeshi opposition parties’ move to boycott the January vote, which Hasina’s Grand Alliance Party subsequently swept.
 
3) State Department spokesman Mathew Miller consequently claimed the election was "not free or fair."
 
In the run-up to the vote, Russia accused US Ambassador Peter Haas of interfering in Bangladesh's internal affairs by aiding anti-government rallies and meeting with opposition leaders.
 
Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

கடன் குடுத்த நன்றிக்கடனுக்காகவாவது சிரிலங்கா அதிபர் மனிசியை கூப்பிட்டு தன்னோட வைச்சிருக்க வேணும். 

ரணிலாலை முடியுமா  சாமி😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலவர படங்களை பார்த்தால் அதே இலங்கையில் நடந்த கலவரம் போன்று உள்ளது  கொள்ளை அடிப்பது தான் முக்கியமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:
1)  பங்களாதேஸ் மற்றும் மியன்மாரின் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றிணைந்து புதிய கிறிஸ்தவ நாடு /பிரதேசம் ஒன்றை உருவாக்க US  முற்படுகிறது. 
In May, she accused the US of seeking to create a “Christian state” by partitioning pieces of Bangladesh and Myanmar.

அமெரிக்கா அப்பிடி ஒரு நாளும் செய்யாது. நீதி நேர்மையாகத்தான் நடக்கும்.பலஸ்தீனா,உக்ரேனில் பார்க்கவில்லையா? 😂
அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீதி நேர்மை நியாயம்.:cool:

அமெரிக்காவால் தான் ஈழத்தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂
கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣

Bild

Bild

Bild

பெரிய கூத்தெல்லாம் நடக்குது போல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

Bild

இந்த படங்களை நானாக பிரசுரிக்கவில்லை. உலக ஊடகங்களில் பரவியிருக்கின்றது.

பட உதவி இத்தாலிய நண்பர்.
அவரும் யாழ்கருத்துக்கள உறவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

தேடித்தான் பிடித்திருகிறான்கள்... எத்தினை எடுத்தவையம்...என்றாலும் கோத்தாவின் மனுசி கெட்டிக்காரி...ஒன்றுகூட பிடிபடாமல் செய்துபோட்டுது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் ஆதரவு கட்சிதான் இந்த போராட்டத்தை மாணவரகளுக்கூடாக எடுத்துள்ளது. இதன் மூலம் பங்களாதேஸ் பாக்கிஸ்தான் ஆதரவு நாடாக இருக்கும். நேபாளம் இப்ப communist கட்சியின் பிடியிலிருப்பதால் இது சீன ஆதரவாக இருக்கும் இதன் மூலம் இந்தியாவை சுத்தி Pakistan/China ஆதரவு நாடுகளிருந்து இந்தியாவிற்கு தலையிடி குடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bild

Bild

இந்த படங்களை நானாக பிரசுரிக்கவில்லை. உலக ஊடகங்களில் பரவியிருக்கின்றது.

பட உதவி இத்தாலிய நண்பர்.
அவரும் யாழ்கருத்துக்கள உறவுதான்.

 

இரஷ்யாவுக்கு கிடைக்கும் வெற்றி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

’உள்ளாடைகளை’ அள்ளிய வன்முறையாளர்கள்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்றது. ஒரு சிலரோ ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. 

இடஒதுக்கீட்டை எதிர்த்து போராடிய மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வங்கதேசத்தின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா , 16 ஆண்டுகள் அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடி வந்தார். முதலில் திரிபுரா சென்ற ஷேக் ஹசீனா பின்னர் இந்திய விமானப் படை பாதுகாப்புடன் டெல்லி அருகே உள்ள காசியாபாத் விமான படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனிடையே டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் ஒன்றுவிடாமல் கொள்ளையடித்துச் சென்றது. இதில் படுகேவலமாக ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகளையும் விட்டுவைக்கவில்லை.  R

image_850f193200.jpg
 

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உள்ளாடைகளை-அள்ளிய-வன்முறையாளர்கள்/50-341669

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

பங்களாதேஷில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது.

விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், பங்களாதேஷிற்கு வருகைத்தரும் சில விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2024/1394872

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேச பிரதமரை நாட்டை விட்டே துரத்திய மாணவர் போராட்டம் நடந்தது எப்படி?

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தின் மீது ஏறி நிற்கும் போராட்டக்காரர்கள்
5 ஆகஸ்ட் 2024

வங்கதேசத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு கடந்த ஜூலையில் வெடித்த மாணவர் போராட்டம் முடிவு கட்டியுள்ளது. மாணவர் போராட்டத்தால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே வெளியேறிவிட்டார். அவர் எங்கே செல்லப் போகிறார்? அவரது எதிர்காலத் திட்டம் என்ன? என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என்று ராணுவ தளபதி அறிவித்துள்ளார். வங்கதேச அரசியலில் 2 தசாப்தங்களாக கோலோச்சிய ஷேக் ஹசீனாவை ஆட்சி, அதிகாரத்தில் இருந்து அகற்றிய மாணவர் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும் புகைப்படங்களைப் பார்க்கலாம்.

வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஷேக் ஹசீனா நாட்டை விட்டே வெளியேறியதை டாக்காவில் கொண்டாடும் போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் நாடாளுமன்ற கட்டடம் அருகே குழுமியுள்ள போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்தின் மீது ஏறி நிற்கும் போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திற்குள் செல்ஃபி எடுத்த போராட்டக்காரர்கள்
வங்கதேச பிரதமர் ராஜினாமா

பட மூலாதாரம்,CHANNEL24

படக்குறிப்பு,பிரதமர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்ற போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டாக்காவில் வங்கபந்து (Bangabandhu) நினைவு அருங்காட்சியகத்திற்கு தீ வைத்து, பொருட்களை சூறையாடி செல்லும் போராட்டக்காரர்கள்.
வங்கதேச போராட்டம் 2024
படக்குறிப்பு,பிரதமரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் நிறுவப்பட்டிருந்த ‘வங்கதேச தந்தை’ என போற்றப்படும், ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை உடைத்த போராட்டக்காரர்கள்
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்கதேச போராட்டக்களத்தில் சக போராட்டக்காரருடன் கண்ணீர் மல்க கட்டியணைத்து தனது உணர்வை வெளிப்படுத்திய நபர்.
வங்கதேச போராட்டம் 2024

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வங்கதேச போராட்டக்களத்தில், மக்கள் இராணுவ வீரர்களுடன் கை குலுக்கும் காட்சி
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தீக்கிரையான வாகனத்தில் இருந்து எழுந்த புகையை கட்டுப்படுத்தும் தீயணைப்பு துறையினர்
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்க விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வம்சாவளிக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை நடத்தினார்கள்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆகஸ்ட் 4ம் தேதி அன்று மாணவர்கள் போராட்டத்தின் போது பாதிப்புக்கு ஆளான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக வளாகம்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாணவர்கள் போராட்டத்தின் போது பாதிப்புக்கு ஆளான பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள்.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கலக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் காவல்துறையை சேர்ந்த நபர்களும் உயிரிழந்துள்ளனர். சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல்நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தாக்கியதாகவும், இதில் 13 காவல் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்கதேசத்தையே உலுக்கியுள்ள மாணவர் போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.
வங்கதேசம் மாணவர்கள் போராட்டம் 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கின்ற சூழலில், அந்நாட்டு பிரதமர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். பதட்டமான சூழலில் அடுத்த என்ன நடக்க உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

eb145a90-5330-11ef-8f0f-0577398c3339.jpg

 

454044857_896886549142985_55840196187907

 

454199806_896385882526385_71170488464184

 

454237514_896844805813826_48692477247172

 

454237504_896845875813719_83588209820417

 

454041361_896885879143052_24414657997890

 

454443347_896852609146379_43646266223459

கோத்தா போல்... குப்பைத் தொட்டிக்குப் போன வங்கதேச பிரதமர். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் தானும் முன்நேற மாட்டான்.மற்றவனையும் விடான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்…

August 6, 2024

தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது.

கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 300- பேர்வரையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்தான் நீக்கியது. ஆனாலும், தொடர்ந்த போராட்டம் அரசுக்கு எதிரானதாக மாறி ஒரு கட்டத்தில் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரும் கிளர்ச்சியாக மாறிவிட்டது.

இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஷேக் ஹசீனா லண்டனுக்கு புறப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதுகுறித்து வங்கதேசத்தின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறியிருப்பதாவது:

வங்கதேச மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பிஎன்பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு வங்கதேச போராட்டத்தை வழிநடத்தினார். இவர் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.

வங்கதேச மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர் என்று மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு திரும்ப மாட்டார் என்று அவரது மகனும் தலைமை ஆலோசகருமான சஜீப் வஜீத் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/இந்தியாவில்-தஞ்சம்-அடைந்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, சுவைப்பிரியன் said:

இந்தியன் தானும் முன்நேற மாட்டான்.மற்றவனையும் விடான்.

எங்கள் விடயத்தில் முழுக்க உண்மை இலங்கையை நாமாக்கியதே இந்தியா வங்கதேசத்தில் இப்போது நடந்ததில் அதன் பங்கு இல்லை என்றே அறியமுடிகின்றது

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா வீட்டிற்கு தீ வைப்பு!

bangladesh.jpg
 

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அவாமி லீக் கட்சியின் எம்.பி-யுமான மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மேலும், அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளை குறிவைத்து மாணவர்கள் தாக்கி வருகின்றனர்.

இந்தநிலையில், நரில் தொகுதி அவாமி லீக் எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான  மஷ்ரஃப் பின் மோர்தசா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் நடந்தபோது, மஷ்ரஃப் பின் மோர்தசா அவரது வீட்டில் இருந்து தப்பிச்சென்றார்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என 117 போட்டிகளில் மஷ்ரஃப் பின் மோர்தசா வங்கதேச அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 36 டெஸ்ட் மேட்ச், 220 ஒருநாள் போட்டிகள், 54 டி20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மஷ்ரஃப் பின் மோர்தசா,  அவாமி லீக் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து நரில் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 

https://minnambalam.com/political-news/protesters-set-ex-bangladesh-cricketer-mashrafe-mortaza-house/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளில் 1000 இந்துக்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படங்களை இங்கே இணைக்க முடியாத கொடூரம்.
தேவாலயங்களையும் தாக்கி சேதமாக்குகின்றார்கள்.

Bild

Bild

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழரசுக் கட்சியினதும் அரியத்தை இறக்கினவர்களினதும் குறிக்கோள் ரணிலுக்கு தமிழர் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதுதான். அதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்!    
    • இப்ப தான் பொய்ண்டுக்கு வந்திருக்கிறீங்கள்! சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது வாக்குகளைப் பிரிப்பதற்காக. அது போலவே அரியமும் போட்டிடுவது தமிழர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு போகாமல் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே! நிலாந்தன் மாஸ்டர் கஸ்டப்பட்டு எழுதின விஞ்ஞாபனம் எல்லாம் வேஸ்ட்டாப் போச்சே!😂
    • 09 SEP, 2024 | 05:26 PM   யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இதன்போது அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 43 வயதுடைய   குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,   குறித்த பகுதியின் புதிதாக கட்டுமானம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்படும் கட்டுமானத்திற்கு அருகாமையில் சடலமானது மீட்கப்பட்டுள்ளது.  சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் அடி காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுமானத்தில் இரத்த கறைகளும் காணப்பட்டுள்ளன.    இந் நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்படுகின்றது.   மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  https://www.virakesari.lk/article/193251
    • நடக்காது நடக்காது நடக்கவே முடியாது என்று சொல்கிறோமே தவிர  அதற்கு காரணம் நாம் நமது ஒற்றுமை இன்மை என்பதை உணர மறுக்கிறோம். அது இனி இல்லை என்றால் இளம் தலைமுறையினர் அதை தீர்மானிக்கட்டுமே.  எமது பலவீனங்களை உணராது அதை களையாது அதை ஒழித்து வைத்து விளையாடலாம் என்பது எவ்வகையில் நியாயம்??? எதிர்காலத்திற்கு உகந்தது???? இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக்கிளை, நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை ஏகமனதாக எடுத்திருந்தது.   மாவட்ட கிளையினுடைய தீர்மானத்தை அங்கீகரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் மூலக் கிளைகள் பிரதேசக் கிளைகள் மாவட்டக் கிளை உட்பட்ட தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பொதுச்சபையினர் கூடி நுணுகி ஆராய்ந்து மாவட்ட கிளையினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் தொடர்ந்து அதை நோக்கிய பணிகளை மாவட்டக்கிளை தீர்க்கமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர் சிறீதரன் சிவஞானம்  https://www.facebook.com/share/p/7hLfFwWsHpAMCRCa/
    • சுமந்திரனும் சாணக்கியனும்  சகித்துக்கு ஆதரவு தேடி எப்படி தமிழரின் ஒற்றுமையை உறுதியாக்குவார்கள் என அறிய ஆவல். சிறிலங்காவில் ஒரு மலைய தமிழர், இரு முஸ்லிம்கள் ஜனாதிபதி போட்டியில் ஈடுபடுவது போல் கிழக்கில் இருந்து ஒரு தமிழர்  ஜனாதிபதி போட்டியில் போட்டியிடுகிறார். இதில் வெளிநாடு எப்படி சிந்திக்கும் என்று நாம் கவலைப்படுவது ஏன் என்று புரியவில்லை. நாம் தமிழீழம் கேட்டு பொதுவாக்கெடுப்பு நடாத்தவில்லை.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.