Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். 

விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாகக் கூறி, அந்தப் பொறுப்பை சில நாட்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ரகுபதிக்கும், முன்னாள் போராளிகள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே ரகுபதி பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இதன்போது, இந்த கலவரத்தில் ஈடுபட்ட சில முன்னாள் போராளிகளையும் மைதானத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதாகவும் ரகுபதியை வெளியேற்றா விட்டால் தாம் விளையாட மாட்டோம் என சில வீரர்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://tamilwin.com/article/person-in-charge-is-sent-out-in-swiss-tamil-sports-1723301602

  • Replies 89
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தை

  • @Kapithan   அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள்  பயன்படுத்திய  உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில்  தமிழரின்  அரசியல் பலம்  உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்க

  • நிழலி
    நிழலி

    கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சூரிச் வின்ரர்தூரில் இரண்டாவது நாளாக கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பிற நாடுகளைப் போன்றே தாயகச் செயற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் வயதேறிக்கொண்டு போகின்றது. இளையோர் அரசியலைத் தவிர்த்து தமது விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.

எனினும் தலைவர் இருக்கின்றார் என்று இப்போதும் நம்பும் அளவிற்கு உலக நடப்பு தெரியாத சிலரும் இருக்கின்றார்கள் என்பதை காதில் விழுந்த கதைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது!

வந்தமா…  விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா..  என்று வெளியே வந்துவிட்டேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2024 at 19:26, கிருபன் said:

வந்தமா…  விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா..  என்று வெளியே வந்துவிட்டேன்!

அது😀

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள கைக்கூலிகளின் திட்டமிட்ட செயல் என சுவிஸ் அரசியல் புத்திஜீவிகள் கருத்து. 😉

On 11/8/2024 at 04:33, ஈழப்பிரியன் said:

சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். 

https://tamilwin.com/article/person-in-charge-is-sent-out-in-swiss-tamil-sports-1723301602

21ஆவது

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் பங்கு பிரிப்பு தகராறு தான்.  பொது மக்களிடம. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போதாவது நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம்.  அவங்களுக்குள் அது சகஜமப்பா. 😂

  • கருத்துக்கள உறவுகள்

கைக்கூலிகள் ?

இவர்கள் ஒன்றும் கைக்கூலிகள்  இல்லை தமிழ்மக்களிடம் கொள்ளையடித்து பெரும் பணக்கரர்களான கொள்ளைகாரர்கள்.
யாழ்பாணத்து சமுக அமைப்புக்களும் யூனி மாணவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தினார்கள் அந்த கட்சிகாரர்களே பொது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இல்லை  அதனால் அந்த கட்சி தலைவர்களை  கஜேந்திரன் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டினார் அவர்களும் கைக்கூலிகள்  இல்லை.தேசிய அரசியல் பேசி பெரும் பணக்கரர்களானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2024 at 11:28, Kavi arunasalam said:
On 11/8/2024 at 19:26, கிருபன் said:

வந்தமா…  விளையாட்டைப் பார்த்தமா.. கொத்துரொட்டியை சாப்பிட்டமா.. கூல் ட்றிங்க்ஸைக் குடித்தமா..  என்று வெளியே வந்துவிட்டேன்!

அது😀

அப்படி இருக்கக்கூடாது கவி அவர்களே! நீங்கள் வாழும் நாட்டையும் ஒருக்கால் உற்றுப் பார்க்கவேண்டும். அங்குதான் நானும் வாழ்கிறேன், நல்லசேதி வருமா???

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

கைக்கூலிகள் ?

இவர்கள் ஒன்றும் கைக்கூலிகள்  இல்லை தமிழ்மக்களிடம் கொள்ளையடித்து பெரும் பணக்கரர்களான கொள்ளைகாரர்கள்.
யாழ்பாணத்து சமுக அமைப்புக்களும் யூனி மாணவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தினார்கள் அந்த கட்சிகாரர்களே பொது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இல்லை  அதனால் அந்த கட்சி தலைவர்களை  கஜேந்திரன் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டினார் அவர்களும் கைக்கூலிகள்  இல்லை.தேசிய அரசியல் பேசி பெரும் பணக்கரர்களானவர்கள்.

பொறுப்பற்ற கருத்து.

தேசியத்துக்காக நீங்கள் ஒன்றும் இதுவரை செய்ததில்லை. இப்பொழுதும் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. 😰

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பொறுப்பற்ற கருத்து.

தேசியத்துக்காக நீங்கள் ஒன்றும் இதுவரை செய்ததில்லை. இப்பொழுதும் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. 😰

உதவிபுரிந்தவர்கள் நிறைகுடமாக இருப்பார்கள். தளம்பமாட்டார்கள்.😌  

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:

எல்லாம் பங்கு பிரிப்பு தகராறு தான்.  பொது மக்களிடம. கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிக்கும் போதாவது நியாயமாக நடந்து கொண்டிருக்கலாம்.  அவங்களுக்குள் அது சகஜமப்பா. 😂

14 hours ago, விளங்க நினைப்பவன் said:

கைக்கூலிகள் ?

இவர்கள் ஒன்றும் கைக்கூலிகள்  இல்லை தமிழ்மக்களிடம் கொள்ளையடித்து பெரும் பணக்கரர்களான கொள்ளைகாரர்கள்.
யாழ்பாணத்து சமுக அமைப்புக்களும் யூனி மாணவர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தினார்கள் அந்த கட்சிகாரர்களே பொது தமிழ் வேட்பாளரை ஆதரிக்க தயாராக இல்லை  அதனால் அந்த கட்சி தலைவர்களை  கஜேந்திரன் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டினார் அவர்களும் கைக்கூலிகள்  இல்லை.தேசிய அரசியல் பேசி பெரும் பணக்கரர்களானவர்கள்.

3 hours ago, விசுகு said:

பொறுப்பற்ற கருத்து.

தேசியத்துக்காக நீங்கள் ஒன்றும் இதுவரை செய்ததில்லை. இப்பொழுதும் இல்லை என்பது மட்டும் தெளிவாகிறது. 😰

போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 

நீங்கள் ஏன் அவர்கள்  எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? 

உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும்? 

தெரியாமல் போவதற்கு நியாயம் இல்லையே?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே

கடைசி ஆறு மாதங்களும் இன்னும் சிறிது காலங்கள் தான் உள்ளது அதற்குள் சுருட்டுவதை சுருட்டிவிட வேண்டும் என்ற அவசரத்தில் தான் நிதி திரட்டல் வேகப்படுத்தப்பட்டது. மக்களுக்கு  திட்டமிட்டு உணர்சசி உருவேற்றி பல நாடகங்களை நடத்தி மின்னல் வேகத்தில் பணதிரட்டல் நடந்தது.  கடைசி நேரத்தில் பணம் திரட்டிய முக்கியமான நபர்கள் பலருக்கு இனி அங்கு எல்லாம் முடியபோகிறது என்பது தெளிவாக தெரிந்தே  இருந்தது.  அதனால் ஏற்பட்ட  மனஸ்தாபங்களே இன்றைய குழப்பத்திற்கு அத்திவாரம்.  

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, island said:

விசுகர் இதற்கெல்லாம் பதில் தருவாரென்று நான் நம்பவில்லை. 

@விசுகு

4 hours ago, Kapithan said:

விசுகர் இதற்கெல்லாம் பதில் தருவாரென்று நான் நம்பவில்லை. 

@விசுகு

கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலாஸ் எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)

அடுத்த முறை கனடா வரும் போது பார்ப்போம்.  .

இவர் வவுனியா பகுதியில் எதோ ஒரு அமைப்புக்கு இரண்டு மூன்று லட்சம் நன்கொடை.  வழங்கியவர்    செய்தியில் பார்த்தேன் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

அடுத்த முறை கனடா வரும் போது பார்ப்போம்.  .

என்ன கந்தையர் மலையாள சேச்சிகளைப் பார்க்க கனடா போகிறீர்களா?

கேரளத்துக்கு போனால் கோவில்களையும் பார்க்லாம்.

1 hour ago, நிழலி said:

அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan   அவசர நிதி சேகரிப்புக்கு இந்த மாபியாக்கள்  பயன்படுத்திய  உத்திகள், நாடகங்கள் பல உண்டு. உண்மையில்  தமிழரின்  அரசியல் பலம்  உயரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்ட அப்பாவி மக்களே இவர்களின் இலக்காக இருந்தது.  மக்களின் வீடுகளுக்கு சென ற இவர்களுக்கு அந்த வீட்டுகாரர் பணம் வழங்கக்கூடிய  நிதி நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தும் கடன்வாங்கி தருமாறு வற்புறுத்துவார்கள்.  உங்கள் வீட்டுக்கு ஒரு  பிரச்சனை வந்தால் கடன் வாங்கி அந்த பிரச்சனையை தீர்ப்பதில்லையா, அது போல் இப்போது உங்கள் நாட்டிற்கு கஷ்ரம் வந்துள்ளது என்றெல்லாம் சென்றிமென்ற் கதையளந்து அவரின் மனத்தை இளகப்பண்ணி அந்த பலவீனமான நேரத்தில் கடன் பத்திரத்தில் கையொப்பமிடப்பண்ணி அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுவிடுவார்கள். அதைவிட  இன்னொரு தந்திரம் நாடகம் அரங்கேற்றப்பட்டது.   வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும்  அன்பான வற்புறுத்தலை செய்து கொண்டிருக்கும் போது  அந்த விவாதம்தே நடைபெறும் போது  அந்த தேசிய  செயற்பாட்டாளருக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வரும்.  அவர் தொலை பேசியை ஸபீக்கரை ஓன் செய்து பேசுவார். மறுமுனையில் ஒருவர் மிகுந்த கோபத்துடன், என்ன அவசரகால நிதி சேகரிக்கின்றீர்களாம் ஏன் என்னிடம் வரவில்லை என்று சத்தமிடுவார். உடனே இவர் பம்மிக்கொண்டு இல்லை  அண்ணை நீங்கள் இப்ப  முன்று மாதத்துக்கு முதல் தானே பத்தாயிரம் தந்தனீங்கள் அது தான் உங்களிடம் வரவில்லை என்று கூற மறு முனையில் இருப்பவர் இன்னும் கோபத்துடன் அதை விடுங்கோ. இப்ப நாடு  இருக்கிற நிலைக்கு அந்த பத்தாயிரம் எந்த மூலைக்கு காணும்  இந்த நேரம் நான் உதவி செய்யாமல்  விட்டால் நான் தமிழனாய் இருக்க என்ன  தகுதி இருக்கு,   எனது காரை நேற்றே விற்று பணத்தை வீட்டில் வைத்துள்ளேன் வாங்கோ வந்து பெற்றுகொள்ளுங்கோ கொஞ்ச நாளைக்கு கார் இல்லாமல் இருந்தால் நான் குறைஞ்சா போயிடுவன்  இண்டைக்கு எமது இறுதி யுத்தத்திற்கு  நிதி தராமல் விட்டால் இன்று என்னால் இரவு  நித்திரை கொள்ளமுடியாது உடனே வாங்கோ என்று கூறுவார்.  இந்த உரையாடல் அந்த செயற்பாட்டாளரால் ஏற்கனவே  திட்டமிட்ட நாடக  உரையாடல் என்பதை அறியாத அந்த  வீட்டுகாரர் குற்ற உணர்சியில் பலவீனமாகி தனது பொருளாதார நிலைக்கு பன்மடங்கு மேல் வங்கியின்  தனது பெயரில் கடன் பெற கையொப்பமிடுவார். இவ்வாறாக பல சம்பவங்கள் 2009 இன்  கடைசி ஆறு மாத காலத்தில் நடந்தன.   இவ்வாறான படு மோசமான செயற்பாடுகளே இன று மக்களின் நம்பிக்கையை இழக்கவைத்தது. இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து  அது தொடர்கிறது.  மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

இந்த மாபியாக்கள் சுயநலத்தால் பல துண்டுகளாக உடைந்து  அது தொடர்கிறது.  மக்களை ஏமாற்றி பணம் பிடுங்கி பல காலம் வாழ்ந்து ருசிப்பட்ட இந்த கும்பல்களில் ஒரு பிரிவே துவாரகா நாடகத்தையும் நடத்தியது. 

எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தைகளைக் காணாமலேயே போய்விடும் என்றார். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

எனது ஒன்றுவிட்ட அண்ணர் பல ஆயிரங்களை 2009 ஆரம்பத்தில் கொடுத்தவர். இப்போதும் இரண்டு வேலைகளைச் செய்து இந்தக் கடன்களை கட்டிக்கொண்டுதான் இருக்கின்றார். இரண்டு வேலைகள் என்பதால் வாரத்தில் 4-5 நாட்கள் குழந்தைகளைக் காணாமலேயே போய்விடும் என்றார். 

இதனால் பிரிந்த குடும்பங்கள் பல. தாயகத்தில் முள்ளிவாய்கால் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொள்ள  ஐரோப்பாவில் மக்களை இலக்குவைத்து  ஒரு  இவ்வாறான   தாக்குதலை தேசிய செயப்பாட்டாளர்களாக வலம் வந்த மாபியா குறூப் செய்து அதில் வெற்றியும் கண்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

விசுகர் இதற்கெல்லாம் பதில் தருவாரென்று நான் நம்பவில்லை. 

@விசுகு

சற்றும் மனம்  தளராத விக்கிரமனாக நீங்கள் கேள்வி கேட்டாலும்,   இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் அதை கூறாமல் விட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று அம்புலிமாமாவில் வரும் வேதாளம் கேட்டால் பதில் வரலாம். 😂 எப்படியும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

போராட்டத்திற்காக சேர்க்கப்பட்ட நிதியை யார் யாரெல்லாம் சுட்டார்கள், கொள்ளையடித்தார்கள், பதுக்கி வைத்திருக்கிறார்கள், சுருட்டினார்கள் என்று உங்களுக்குத்ப்தெரிந்திருக்க வேண்டுமே. 

நீங்கள் ஏன் அவர்கள்  எல்லோரையும் வெளிக்காட்ட முடியாது? 

உங்கள் கை சுத்தமானது என்கிறீர்கள். சரி. ஒப்புக்கொள்கிறோம். ஆனால் யார் யாருடைய கைகள் எல்லாம் அழுக்குப் படிந்தவை என்று தங்களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும்? 

தெரியாமல் போவதற்கு நியாயம் இல்லையே?  

உங்கள் அழுகை ஆட்டின் மீதான ஓநாயின் அழுகை என்பது பலமுறை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது 

2004 இல் இருந்து நான் இயக்கத்தின் எந்த உறுப்பினராகவும் இல்லை. ஆனால் பெரும் பங்களிப்பாளி. இதை இங்கே பலமுறை எழுதியாச்சு. 

ஆனால் உங்களுக்கு தேவை புலிகள் மற்றும் அவர்களது சேவையாளர்கள் அனைவரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தல் மட்டுமே. அதற்குள் என்னையும் போட்டு யாழில் இருந்து கலைப்பது. அதற்காக தான் புலிகளின் மீதான அத்தனை சேறடிப்பு திரிகளுக்குள்ளும் என்னை இழுத்து விடுவது.

ஆனால் உங்களை போன்ற ஆயிரம் பேருக்கு மேல் கண்டாச்சு. மேய்ச்சாச்சு. விலகிப் போய் அதற்கும் விடாமல்?????. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்  தாஜ்மஹாலை காட்டி இது தான் காதலின் சின்னம் என்பது போன்று வெளிநாடுகளில் தமிழர்கள் ஒரு தமிழ் கடையை காட்டி  தமிழர் பணத்தை கொள்ளை அடிந்து கட்டி எழும்பிய கடை தான் இது என்று   சொல்லும் நிலைமையை இன்று காணலாம். இந்த நிதி சேகரிப்பு கொள்ளையர்களை தமிழர்கள் உண்டியல்காரர்கள் என்றும் கிண்டலாக சொல்வார்கள் ☹️

2 hours ago, island said:

வீடுகளுக்கு சென்று மக்களிடம் பணத்தை பிடுங்கும்  

இது பற்றி பலர் பேசினார்கள் நானும் மற்றவர்களும் நினைத்தது உண்டு கொள்ளையர்கள் இவ்வளவு மோசமாக ஏமாற்றுவதற்கு தமிழர்கள் அவ்வளவு அப்பாவிகளாக இருந்தார்களா அல்லது அவ்வளவு மூடர்கள்களாக மோட்டு மக்களாக இருந்தார்களா☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

1) உங்கள் அழுகை ஆட்டின் மீதான ஓநாயின் அழுகை என்பது பலமுறை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது 

2) 2004 இல் இருந்து நான் இயக்கத்தின் எந்த உறுப்பினராகவும் இல்லை. ஆனால் பெரும் பங்களிப்பாளி. இதை இங்கே பலமுறை எழுதியாச்சு. 

3) ஆனால் உங்களுக்கு தேவை புலிகள் மற்றும் அவர்களது சேவையாளர்கள் அனைவரையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளராக்கி சேறடிப்புக்களை தொடர்தல் மட்டுமே.

4) அதற்குள் என்னையும் போட்டு யாழில் இருந்து கலைப்பது. அதற்காக தான் புலிகளின் மீதான அத்தனை சேறடிப்பு திரிகளுக்குள்ளும் என்னை இழுத்து விடுவது.

5) ஆனால் உங்களை போன்ற ஆயிரம் பேருக்கு மேல் கண்டாச்சு. மேய்ச்சாச்சு. விலகிப் போய் அதற்கும் விடாமல்?????. 

உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். போராட்டத்திற்கென சேகரிக்கப்பட்ட பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? 

அதற்கு உங்கள் பதில் ஆம் அல்லது இல்லை என்பதாக இருக்க வேண்டும். 

நீங்களோ தலையைச் சுற்றி மூக்கத் தொட நினைக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட இங்கே பொற்கரையில் வைத்து மே  2009  இல் இதே கதை சொல்லி வந்தவர்களிடம் ஒரு தொகை கொடுத்திருந்தேன் .
19ம் திகதி எல்லாமே முடிந்து விட்டது என்ற செய்தி வந்ததும் , அவர்கள் சேர்த்த தொகை , சேர்ப்பிற்கு சொல்லிய காரணத்திற்கு சென்று சேர்ந்திருக்கக் கூடிய சந்தர்ப்பமே இல்லை என்று தெரிந்து போயிற்று. 
சேர்த்தவர்கள் தாமாகவே வந்து சேர்த்த தொகைக்கு என்ன நடந்தது என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் 
நம்மவர்களா..??    மூச் ....

  • கருத்துக்கள உறவுகள்

வேறொன்றும்  ஞாபகம் வருகிறது.

திருகோணமலையில் பேச்சுவார்த்தை நடந்தகாலகட்டம் .
அவர்கள் நிதி சேகரிப்பிற்காக டிக்கெட் அடித்து , அலுவலகங்களில் கொடுத்திருந்தார்கள் .
அலுவலக சிற் ஊழியரிடம்  கொடுத்து விருப்பமானவர்களிடம் கொடுத்து பணத்தை சேர்த்து வைக்கச் சொல்லியிருந்தேன் ( பொடியங்கள்  என்ன கேட்டாலும் செய்து கொடுக்கும்படி அரச மேலிடத்து உத்தரவு அமுலில் இருந்த நேரம் அது ) .

அடுத்த கிழமை பேச்சுவார்த்தை முறிந்து , பொடியங்களும் பெருவாரியான தமிழ் மக்களும் ஊரை காலி செய்து வடக்கு நோக்கி நகர , நம்மை போல போக இயலாத எஞ்சிய சிலர் தங்கியிருந்து , அரச படையின் அடடூழியத்திற்கு ஆளாகி பலர் அழிந்து சிதைந்து போக எஞ்சியோர் பல மாதங்களின் பின்னர் அலுவலக வேலைகளை ஆரம்பித்தனர் .

ஊரைக் காலி செய்து போன அந்த சிற்றூழியர்  சிலகாலம் கழித்து திரும்பி வந்து, என்னிடம் தயங்கி தயங்கி வந்து , " ஐயா , அந்த டிக்கெட் அடிக்கட்டைகளும் சேர்த்த பணமும் பத்திரமாக , வீட்டு கூரையில் செருகி வைத்தபடியே இருக்கு , என்ன செய்ய " என்று கேட்டார் .
பணம் கொடுத்திருந்த ஆகக்குறைந்தது  ஒரு சக ஊழியரை மிக்க கொடுமையான முறையில் ஆமிக்காரர் கொன்று போட்டதை நானறிவேன்.  

நான் சொன்னேன் , கொடுத்தவர்களிடம் தேடி திரும்பக் கொடுப்பது பிரச்சினையான விடயம் , யார் யார் என்ன மனநிலையில் இருக்கினம் என்று தெரியாது , தொகைகளும்  பெரிதில்லை .  அப்படியே கோயில் உண்டியலில் போட்டு விடுங்கள் என்று ,,,   

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

கபி, உங்கு மார்க்கம் & Steeles பகுதியில் பூரணி விலா எனும் கடை வைத்திருப்பவரை உங்களுத் தெரியுமா? அவர் இறுதி யுத்த காலத்தில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் 2500 தாருங்கள், 2011 இல் தலைவர் தலைவர் தமிழீழக் கொடியை ஏற்றிய பின் வட்டியுடன் தருவேன் என்று கேட்டும் மிரட்டியும் வாங்கி இன்று கோடீஸ்வராக இருக்கின்றார் என்பது தெரிந்து இருக்கும் என நினைக்கின்றேன் (அவர் கடையில் நல்ல வடிவான மலையாள சேச்சிகள் வேலை செய்கின்றனர்)

அந்தக் கடைக்காறரை எனக்கு கண்ணிலேயும் காட்டக்கூடாது. கடையில் வேலை செய்வோரை நடாத்தும் விதம் அப்படி. 

GTA Square ல் உள்ள ஒரு நகைக்கடைக்காறர் M,.S எனத் தொடங்கும் பெயர் கொண்ட நிறுவனம், போராட்ட காலங்களில் கழுதைக்கு பணம் அனுப்பும் முகவராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர். இறுதி யுத்தத்தின்போது அனுப்பும்படி கொடுக்கப்பட்ட பணத்தில் ஒருபகுதியைச் சுருட்டிக்கொண்டார் என்று கதை. அவருடைய மகளின் திருமண் கொழும்பில் நடைபெற்றது. பிரதம விருந்தினர் ராசபக்ஸ குடும்பம். 

🥺

7 hours ago, island said:

சற்றும் மனம்  தளராத விக்கிரமனாக நீங்கள் கேள்வி கேட்டாலும்,   இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் அதை கூறாமல் விட்டால் உன் தலை வெடித்து சிதறிவிடும் என்று அம்புலிமாமாவில் வரும் வேதாளம் கேட்டால் பதில் வரலாம். 😂 எப்படியும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். 😂

கேள்வி கேட்டால் பதில் நீ துரோகி  என்பதாக இருக்கிறது. 

உங்கு தேசியத்திற்காகக் குரல் கொடுக்கும் பலருக்கு உண்மை நிலவரம் துலாம்பரமாகத் தெரியும் . ஆனால் அவர்கள் வாயே திறவார்கள,..🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.