Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

எனது பிரான்ஸ் மீதான விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் சார்ந்த நக்கல் நையாண்டி கேள்விகளுக்கு,

அதன் மூலம் இது தான் என்பதை புரிந்து கொண்டேன்.

விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் ஜனநாயகம் சுதந்திரம் சார்ந்தவைகளை நக்கல் நையாண்டி செய்பவர்கள் ஒன்றும் ரஷ்யாவிலோ தமிழ்நாட்டிலோ வாழ்பவர்கள் இல்லை. அதே பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் தங்களுக்கு பாதுகாப்பான அரவணைப்பை தேடி கொண்டவர்கள் தான்.

  • Thanks 1
  • Downvote 1
  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

வீடியோவை கூர்ந்து கவனிக்காமலே  அது ஒரு வீடியோகேம் போன்ற சோடிக்கப்பட்ட காட்சி  என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திரம் கேட்டார்கள் என்பதற்காக சோவியத் காலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் உக்ரேனியர்களை பட்டி

valavan

1991இல்  சோவியத் உடைவிலிருந்து உக்ரேன் உருவானபோதே அமெரிக்கா உக்ரேனுடன் உறவினை ஏற்படுத்திக்கொண்டது, பின்னர் தனது தற்பாதுகாப்புக்காக உக்ரேன் மேற்குலகுடன் நெருங்கி சென்றது. ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்க

nunavilan

என்னது  உங்களை போன்றவர்களுக்கு பம்ம  வேண்டுமா.  மிகப்பெரிய நகைச்சுவையாக உள்ளது உங்களின் பாரிய பிரச்சனையே மற்றவர்களை மட்டம் தட்ட பார்ப்பது. நீங்கள் பிடித்ர்க முயகுக்கி 3 கால் என நிற்பது. இதனை நீங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த திரி ஜந்து பக்கம் வரை போய்விட்டது..இங்கும் என்னால் காணமுடியவில்லை.. வேறு செய்திகளிலும் என்னால் தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லை.. சண்டை தொடங்கி 3 வருசமாகிட்டது எண்டதால ஆரம்பகால செய்திகளையும் மறந்து போனன்.. எனது கேள்வி என்னவென்றால்

உக்கிரேனை முழுவதும் பிடிப்பதா ரஷ்யாவின் நோக்கம்? அப்படியாயின் பிடித்த பின் ரஷ்யாவுடன் சேர்த்துவிடுமா அல்லது மறு படியும் உக்கிரேனியர்களிடமே கொடுக்குமா அமெரிக்கா தனக்கு வேண்டாதவர்களை ஈராக்கில் அகற்றிவிட்டு மீண்டும் ஈராகியர்களை ஆளவிட்டதுபோல்..?

எங்காவது ரஷ்யா இதுபற்றி உத்தியோக பூர்வமாக குறிப்பிட்டிருக்க உக்கிரேனை கைப்பற்றிய பின்னான திட்டங்கள் குறித்து..?

யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா ப்ளீஸ்..

தற்போது உக்கிரேனின் இரஸ்சிய ஊடுறுவலுக்கே சரியான காரணம் தெரியவில்லை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

விசுவாசம் மற்றும் நன்றிக் கடன் ஜனநாயகம் சுதந்திரம் சார்ந்தவைகளை நக்கல் நையாண்டி செய்பவர்கள் ஒன்றும் ரஷ்யாவிலோ தமிழ்நாட்டிலோ வாழ்பவர்கள் இல்லை. அதே பிரான்ஸ் போன்ற மேற்குலக நாடுகளில் தங்களுக்கு பாதுகாப்பான அரவணைப்பை தேடி கொண்டவர்கள் தான்.

வணக்கம்!
சும்மா  கிழிந்த ரெக்கோர்ட் தட்டு ஒரே இடத்தில் நின்று சுற்றுவது போல் அவரவர் தனிப்பட்ட வாழ்விடத்தை  வைத்து ஒரே கருத்தை பகிராமல் நியாயபூர்வமாக வேறு ஏதாவது கருத்தை கூறுங்கள்.
எதெற்கெடுத்தாலும் ரஷ்யாவிற்கு சார்பாக எழுதுபவர்களை  மறுத்து எழுதுபவர்களுக்கு ஆமா,தாளங்கள் போடுகின்றீர்களே தவிர...... வேறேதும் ??????????

ஆதாரங்கள் தகவல்கள்??????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த போர் தொட‌ங்கி இர‌ண்டு வ‌ருட‌மும் 6மாத‌மும் ஆகி விட்ட‌து..................உக்கிரேனுக்கு ஆத‌ர‌வாய் எத்த‌னை நாடுக‌ள்.................உக்கிரேன் இதுவ‌ரை அடைந்த‌ வெற்றி என்ன‌...................உக்கிரேன் பிடித்த‌ இட‌ங்க‌ளை மீண்டும் ர‌ஸ்சியா பிடித்து இருக்கு.....................இந்த செய்தியும் இன்னும் ஒரு கிழ‌மை விவாதிக்க‌ப் ப‌டும் பிற‌க்கு இதுவும் க‌ட‌ந்து போகும்😉.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, vasee said:

தற்போது உக்கிரேனின் இரஸ்சிய ஊடுறுவலுக்கே சரியான காரணம் தெரியவில்லை.

இப்புடியே போய்க்கிட்டிருந்துதென்டா அவங்கள் ரெண்டு பேருக்குமே எதுக்கு சண்டை புடிக்கிறோம் எண்டது மறந்துபோயிடும்... 🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புட்டின் தான் பேச்சு வார்த்தைக்கு த‌யார் என்று சொன்ன‌தை கேட்டு இருக்கிறேன் இரு நாடுக‌ளும் பேசி எப்ப‌வோ இந்த பிர‌ச்ச‌னைய‌ தீர்த்து இருக்க‌லாம்

பின்னால் நின்று பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா தான் இத‌ற்க்கு த‌டையாய் இருப்பாதாக‌ க‌ருதுகிறேன்....................ஜ‌ந்து வருட‌த்துக்கு முத‌ல் எப்ப‌டி இருந்த‌ உல‌க‌ம்.....................இடையில் கொரோனா பிற‌க்கு உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னை . பிற‌க்கு ப‌ல‌ஸ்தீன‌ இஸ்ரேல் பிர‌ச்ச‌னை

 

உக்கிரேன் ர‌ன்ஸ்சியா பிர‌ச்ச‌னையில் இழ‌ந்த‌ இராணுவ‌ம் ம‌ற்றும் பொது ம‌க்க‌ளை விட‌ 

 

ப‌ல‌ஸ்தீன‌த்தில் இற‌ந்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம்....................ஆர‌ம்ப‌த்தில் ஒரு சில‌ உக்கிரேன் பொது ம‌க்க‌ளும் சிறுவ‌ர்க‌ளும் இற‌ந்த‌துக்கு பொங்கி எழுந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் ப‌ல‌ஸ்தீன‌த்தில் 10மாத‌த்தில் இற‌ந்த‌வ‌ர்க‌ளுக்காக‌ மெள‌வுன‌ம் க‌டை பிடிக்கும் போது தெரியுது

ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ளின் ந‌டு நிலை...............................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்

16 AUG, 2024 | 10:28 AM
image

ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளது.

ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இராணுவ அலுவலகத்தை  திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகம் சட்டமொழுங்கை பேணுவதற்காகவும் மக்களின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும் இந்த அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வியாழக்கிழமை தனது படைகள் மேலும் முன்னேறியுள்ளதாக  உக்ரைன் தெரிவித்துள்ளது.

கேர்க்ஸ் பிராந்தியத்திற்குள் உக்ரைன் படையினர் உள்ளே முன்னேறியுள்ளனர், 12 குடியிருப்புகள் உட்பட 1500 சதுரகிலோமீற்றரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்  வைத்திருக்கின்றனர் என ஜெனரல் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் ரஸ்யாவின் பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் இல்லை என தெரிவிக்கும் உக்ரைன் ரஸ்யாவை சமாதானத்திற்கு இணங்கச்செய்வதற்காகவே இந்த நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191192

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளது.

என்ன நடக்கிறது?? ஒரு நாட்டிற்குள் நுழைந்த வேற்று நாட்டு ரகசியமாக அல்லாமல் பகிரங்கமாக அலுவல் திறந்து அறிவித்தல் என்பது....???

ரசியாவின் ஓட்டைகள் அம்பலத்திற்கு வருகிறதா?

முழு உக்ரைன் இராணுவத்தையும் கொன்று விட்டோம் அடித்து துரத்தி விட்டோம் என்று ரசியா சொன்னது எல்லாம் சிறீலங்கா பாணியிலா???

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேர்ஸ்க்ல்  ரஷ்யாவால் தாக்கி அழிக்கப்பட்ட அமெரிக்க ரக இராணுவ வாகனங்கள்.

Ausgebrannte ukrainische Armee-Fahrzeuge in der Region Kursk

Ein umgekipptes Fahrzeug der ukrainischen Armee in Kursk. Die getöteten Soldaten zeigt BILD nicht

ஆதாரம் 👈

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவுக்கு உள்ளே ராணுவ அலுவலகத்தை அமைத்த யுக்ரேன், குடியிருப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பு - என்ன நடக்கிறது எல்லையில்?

ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ளது யுக்ரேனிய படைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் எல்லைக்குள் ஊடுருவிய யுக்ரேன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், இயன் ஐக்மேன், ஜோனத்தன் பீலே
  • பதவி, பிபிசி செய்திகள் & பாதுகாப்புத்துறை செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை யுக்ரேன் ராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் யுக்ரேனின் மூத்த ராணுவ தளபதி.

அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார்.

யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவ தளபதி சிர்ஸ்கி, "யுக்ரேன் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய பிராந்தியத்தில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது," என்று கூறுவதை சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் காண முடிந்தது.

அந்த பிராந்தியத்தில் உள்ள மக்களை "பாதுகாக்க" ரஷ்யா தன்னுடைய படைகளை அனுப்பும் என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்த்ரேய் பெலவ்சோவ் கூறியுள்ளார்.

அமைதியை நிலை நாட்டவே இந்த படையெடுப்பு - யுக்ரேன்

வியாழக்கிழமை அன்று, யுக்ரேனிய படை ரஷ்ய பிராந்தியத்தில் முன்னேறி வருவதாக யுக்ரேன் ராணுவம் அறிவித்தது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனிய துருப்புகள் 35 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி கூறுகிறார்.

2022ம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு, கடந்த 10 நாட்களாக யுக்ரேனிய படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது.

ஆனால் யுக்ரேன் இது குறித்து பேசும் போது, ரஷ்ய பிராந்தியத்தை ஆக்கிரமிக்க ஆர்வம் ஏதும் காட்டவில்லை என்கிறது.

ஆகஸ்ட் 14ம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய யுக்ரேனின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளார் ஹெயோரி துகேய், இந்த பதில் தாக்குதல் அமைதியை நிலைநாட்ட ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான முயற்சியாகும் என்றார்.

 
ரஷ்யாவின் எந்தெந்த பிராந்தியங்களை யுக்ரேன் கைப்பற்றியுள்ளது?

ரஷ்யா கூறுவது என்ன?

யுக்ரேன் ஊடுருவிய பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள உள்கட்டமைப்பை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் ரஷ்ய அதிகாரிகள்.

ரஷ்ய பாதுகாப்பு துறையின் டெலிகிராம் சேனலில் வெளியான வீடியோ ஒன்றின் படி, குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அருகே உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள துருப்புகளை சரியாக நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

பெல்கோரோட் மட்டுமின்றி யுக்ரேனின் எல்லையில் அமைந்துள்ள குர்ஸ்க் மற்றும் ப்ரையான்ஸ்க் பிராந்தியத்திலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டெர்ஃபாக்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பெல்கோரோட் பிராந்தியத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது ரஷ்யா. திங்கள் கிழமை அன்று 11 ஆயிரம் நபர்கள் அந்த பிராந்தியத்தில் அமைந்திருக்கும் க்ரஸ்னயா யருகா பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது ரஷ்யாவின் அரசு ஊடகமான டாஸ்.

இதற்கு மத்தியில், யுக்ரேன் ஆக்கிரமித்த சில பகுதிகளை ரஷ்யா மீட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள க்ருபெட்ஸ் குடியிருப்பை மீட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 
ரஷ்யா - யுக்ரேன் போர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,யுக்ரேனின் ஊடுருவல் குறித்து ஆலோசிக்கும் ரஷ்ய பாதுகாப்புதுறை உயர்மட்ட குழுவினர்

பிரிட்டனின் ஆயுதங்களை பயன்படுத்தும் யுக்ரேன்

யுக்ரேனுக்கு பிரிட்டன் வழங்கிய பீரங்கி வாகனங்களை யுக்ரேன் இந்த ஊடுருவலுக்கு பயன்படுத்தியுள்ளதை பிபிசியிடம் பிரிட்டன் உறுதி செய்தது.

பிரிட்டனின் பாதுகாப்பு துறை அமைச்சகம், பிரிட்டனின் எந்த போர் ஆயுதம் யுக்ரேன் படையால் பயன்படுத்தப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், "ரஷ்யாவின் சட்டத்திற்கு புறம்பான தாக்குதலுக்கு எதிராக தங்களை தற்காத்து கொள்ள," பிரிட்டன் வழங்கிய ராணுவ ஆயுதங்களை பயன்படுத்திக் கொள்ள யுக்ரேனுக்கு முழுமையான உரிமை உள்ளது என்று கூறியது பாதுகாப்பு அமைச்சகம்.

யுக்ரேனுக்கு நவீன போர் ஆயுதங்களை வழங்கிய முதன்மையான நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. 14-சேலஞ்சர் வகை பீரங்கி வண்டிகள் இரண்டை கடந்த ஆண்டு பிரிட்டன் யுக்ரேனுக்கு வழங்கியது. ஆனால் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களின் பகுதிகளை மீட்கவே இவைகள் வழங்கப்பட்டன.

இந்த கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று பிரிட்டனின் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி

பட மூலாதாரம்,FACEBOOK / VOLODYMYR ZELENSKY

படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி வழங்கிய ஆயுதங்களையும் இந்த ஊடுருவலின் போது யுக்ரேன் பயன்படுத்தியுள்ளது.

ஆனால் எந்த நாடுகளும், ரஷ்யா மீது படையெடுக்க இந்த ஆயுதங்களை பயன்படுத்தியதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவில்லை. இந்த படையெடுப்பு ரகசியமாக நடத்தப்பட்டிருக்கின்ற நிலையில், யுக்ரேனின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே சில நாடுகளுக்கு தெரிந்திருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என்று மேற்கத்திய நாடுகள் கவலையுடன் இருக்கின்றன. யுக்ரைன் கணிசமான இழப்புகளைச் சந்தித்து, இன்னும் ஆயுதங்களை அதிகமாகக் கேட்டு மீண்டும் வருவது மட்டுமின்றி, இதற்கு ரஷ்யா எப்படி பதிலளிக்கும் என்ற வகையிலும் சிலர் இந்த சூழலைக் கண்டு வருத்தம் அடைந்துள்ளனர்.

தங்களுடைய பிராந்தியத்தில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் மேற்கத்திய நாடுகள் இருக்கின்றன என்று ஏற்கனவே ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. உண்மை என்னவென்றால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை களத்தில் பார்க்க முடிகிறது.

அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தல் என்பது எப்போதும் கவலைக்குரியதாக இருக்கும். மேலும் ரஷ்யா எப்போதாவது தனது அணு ஆயுதத்தை காட்டி பயமுறுத்தலில் ஈடுபடுவது குறித்து கவலைப்படப்போவதில்லை.

மேற்கத்திய நாடுகள், யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கக் கூடாது என்று ரஷ்யா எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கை முழுவதுமாக கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால் தற்போது வரை ஒரு தடை மட்டும் தொடர்கிறது. தொலைதூரத்தை இலக்காக கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்த எந்த ஒரு மேற்கத்திய நாடும் யுக்ரேனுக்கு பச்சைக் கொடியை அசைக்கவில்லை.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த ஆயுதங்களையும் வழங்கியுள்ளது. ஆனால் அது, 2014ம் ஆண்டு சட்டத்திற்கு புறமாக ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட க்ரிமியா உள்ளிட்ட பிராந்தியம் உட்பட யுக்ரேனுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவை வழங்கப்பட்டன.

அந்த நிபந்தனையை நீக்க வேண்டும் என்று யுக்ரேன் அதிபர் வேண்டுகோளை முன்வைத்தார்.

Posted

NORD GAS LINE - உக்ரேனின் சதி - அமெரிக்காவை நம்பி நாட்டை அழித்த ZELENSKY! - Major Madhan Kumar

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவுக்குள் உக்ரைனின் இராணுவ தளம் அமைப்பு

gayanAugust 17, 2024
12_3-1.jpg

ரஷ்யாவில் தன்னுடைய ஊடுருவலை உக்ரைன் இராணுவத்தினர் தொடரும் சூழலில் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் இராணுவ நிர்வாக மையத்தை அமைத்துள்ளதாக உக்ரைன் மூத்த இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் அங்குள்ள மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை ஆக்கிரமித்துள்ளனர் என்றும் தளபதி சிர்ஸ்கி தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர், கடந்த 10 நாட்களாக உக்ரைன் படைகள் ரஷ்யாவில் முன்னேறி வருகிறது.

 

https://www.thinakaran.lk/2024/08/17/world/79075/ரஷ்யாவுக்குள்-உக்ரைனின்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை.

போச்சா.…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

உக்ரைனிய துருப்புகள் 35 கிலோமீற்றர் தூரம் வரை உள்ளே சென்றுள்ளனர் என்றும் 82 குடியிருப்பு பகுதிகள் உட்பட 1,150 சதுர கிலோ மீற்றர் பரப்பை.

போச்சா.…

இனியென்ன அடுத்தது மொஸ்கோ தான்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, குமாரசாமி said:

இனியென்ன அடுத்தது மொஸ்கோ தான்....

சீ

அது இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசியா விட்ட புழுகு? 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

20 hours ago, nunavilan said:

NORD GAS LINE - உக்ரேனின் சதி - அமெரிக்காவை நம்பி நாட்டை அழித்த ZELENSKY! - Major Madhan Kumar

 

மேற்கு கைவிட்டால் இரஸ்சியாவிற்கு செலன்ஸ்கி போகக்கூடும், ஆனால் அப்படி மேற்கு செய்யாது, செலன்ஸ்கிக்கு மேற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அழித்து மத்திய கிழக்கு போன்ற ஏதேனும் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம்.

ஆனால் திடீரென பழைய விடயங்களை மேற்கு தூசு தட்டுகிறது, கோத்தாவிற்கு நிகழ்ந்த மாதிரி நிகழலாம், அவசரத்திற்கு எல்லை ஓரமாக இருக்கிற இந்த கேர்க்ஸ் பிராந்தியம் வசதியாக இருப்பதால் இந்த ஊடுருவல் நடவடிக்கையாக இருக்கலாம், எதற்கும் ஒரு கை காவலா😁.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, விசுகு said:

சீ

அது இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசியா விட்ட புழுகு? 

 

மூண்டு நாள்ல உக்ரேனை பிடிப்பம் எண்டதைத்தானே சொல்லுறியள்?

4 minutes ago, vasee said:

மேற்கு கைவிட்டால் இரஸ்சியாவிற்கு செலன்ஸ்கி போகக்கூடும், ஆனால் அப்படி மேற்கு செய்யாது, செலன்ஸ்கிக்கு மேற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அழித்து மத்திய கிழக்கு போன்ற ஏதேனும் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம்.

ஆனால் திடீரென பழைய விடயங்களை மேற்கு தூசு தட்டுகிறது, கோத்தாவிற்கு நிகழ்ந்த மாதிரி நிகழலாம், அவசரத்திற்கு எல்லை ஓரமாக இருக்கிற இந்த கேர்க்ஸ் பிராந்தியம் வசதியாக இருப்பதால் இந்த ஊடுருவல் நடவடிக்கையாக இருக்கலாம், எதற்கும் ஒரு கை காவலா😁.

எரிவாயு குண்டுவைப்பு சம்பந்தமாக சகலதும் செலென்ஸ்கி அவர்களுக்கு  ஏற்கனவே தெரியும் என ஜேர்மனி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, குமாரசாமி said:

மூண்டு நாள்ல உக்ரேனை பிடிப்பம் எண்டதைத்தானே சொல்லுறியள்?

எரிவாயு குண்டுவைப்பு சம்பந்தமாக சகலதும் செலென்ஸ்கி அவர்களுக்கு  ஏற்கனவே தெரியும் என ஜேர்மனி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

இது சும்மா தட்டி வைப்பது மாதிரி, உண்மையில் செலன்ஸ்கியினை ஒன்றும் மேற்கால் செய்ய முடியாது, மேற்கு சித்துவிலையாட்டுகள் எல்லாம் சிங்கனுக்கு தெரியும் (மேற்கின் குடும்பி இப்போது செலன்ஸ்கியின் கையில்).

இந்த காணொளியில் கூறுவதுமாதிரியெல்லாம் மேற்கு செய்ய முடியாது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவின் இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டது

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரெய்ன் ஊடுருவி வரும் நிலையில், இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்படட வான்வழி காட்சிகளை உக்ரெய்னிய இராணுவம் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விநியோக பாதைகளை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாக உக்ரெய்னிய விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/308077

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ரஷ்யாவின் இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டது

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரெய்ன் ஊடுருவி வரும் நிலையில், இரண்டாவது மூலோபாய பாலம் அழிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்படட வான்வழி காட்சிகளை உக்ரெய்னிய இராணுவம் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விநியோக பாதைகளை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டதாக உக்ரெய்னிய விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

துல்லியமான வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://thinakkural.lk/article/308077

3 பாலங்கள் தகர்க்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன், சரியாக தெரியவில்லை.

உக்கிரேன் துருப்புக்கள் குறைந்த பயிற்சியுடன் இந்த சாதனைகளை செய்கிறார்கள்? கைது செய்யப்பட்ட உக்கிரேன் துருப்புகள் ஒரு வாரத்திற்கும் குறைவான பயிற்சியுடன் முன் களங்களில் சண்டை இடுகிறார்கள்.

இரன்டு தரப்பிலும் தொடரும் இப்போரினால் பெருமளவானவர்கள் கொல்லப்படுகிறார்கள், இரு தரப்பும் குறைந்த பயிற்சியுடன் பல அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்கிறார்கள், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரினால் பெருமளவான ஆண்கள் இறந்தமையால் இரஸ்சிய ஆண்களின் தொகையினை விட 4 மடங்கு பெண்கள் உள்ளதாக கூறுகிறார்கள்.

தற்போது உக்கிரேன் தரப்பு பெருமளவில் ஆளணிப்பற்றாக்குறையில் திண்டாடுகிறது, இந்த போரை நிறுத்தாமல் தொடர்ந்தால் எதோ ஒரு பகுதி தோற்றுவிடும், இதில் இந்த இரு தரப்பிற்கும் எந்த பெரிய இலாபமும் இல்லை, நட்டம் மட்டுமே மிஞ்சும் அரசியல்வாதிகள் எங்காவது ஒரு நாட்டில் இந்த போரினால் வந்த காசில் உள்ளாசமாக இருப்பார்கள் ஆனால் போரிட்டவர்கள் உடல் உள ரீதியான பாதிப்புடன் காலம் முழுவதும் வாழவேண்டியதுதான்.

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.