Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!

August 17, 2024

இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்  நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PHOTO 2024 08 17 18 31 35 ஜனாதிபதித் தேர்தல் 2024 : 'தமிழ்ப் பொதுவேட்பாளர்' மாபெரும் பொதுக்கூட்டம்!

https://www.ilakku.org/ஜனாதிபதித்-தேர்தல்-2024-தமிழ/

  • Replies 82
  • Views 6.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து. அனால் இதில் புலம்பெயர்ஸ் செய்யும் அரசியல் என்பது புலத்திற்கு மனிதாபிமான உதவிகளைச்செய்வதும், லாபியிங் செய்து மூக்குடைபடுவதும், யாழில் பக்கம்பக்கமாக எழுதித்தள

  • தமிழன்பன்
    தமிழன்பன்

    சரி தமிழ் வேட்பாளருக்கு ஆதரவில்லத்தவர்கள் சொல்லுங்கள் . உங்கள் தெரிவு என்ன. றனிலா? சஜிதா ? சரி நீங்கள் ரணிலுக்கு போட சஜித் வென்றால் என்ன நடக்கும் ? அதே மாதிரி சஜித்துக்கு போட்டு ரணில் வென்றால் ? இந்த

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!

large.IMG_6928.jpeg.ddd75b94f3fd5f77470f

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழ் பொது வேட்பாளர் விஜயம்

18 AUG, 2024 | 04:28 PM
image
 
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் உட்பட மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று (18) காலை சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். 

இன்று காலை தந்தை செல்வா நினைவு சதுக்கத்துக்கு சென்ற பொது வேட்பாளர் மற்றும் குழுவினர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தும் ஆசி பெற்றனர்.

அத்தோடு, ஏனைய மத ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டு, மத தலைவர்களிடமும் ஆசி பெற்றனர்.

https://www.virakesari.lk/article/191371

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் 

Published By: VISHNU   18 AUG, 2024 | 06:25 PM

image
 
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்கள் முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அதன்பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் முதலாவது தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்

முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்களது தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் , செல்லம் அடைக்கலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் , முன்னாள் யாழ் மாநர மேஜர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.

IMG-20240818-WA0133.jpg

IMG-20240818-WA0111.jpg

IMG-20240818-WA0113.jpg

IMG-20240818-WA0114.jpg

IMG-20240818-WA0115.jpg

IMG-20240818-WA0116.jpg

IMG-20240818-WA0117.jpg

IMG-20240818-WA0119.jpg

IMG-20240818-WA0120.jpg

IMG-20240818-WA0121.jpg

IMG-20240818-WA0122.jpg

IMG-20240818-WA0128.jpg

IMG-20240818-WA0129.jpg

IMG-20240818-WA0131.jpg

https://www.virakesari.lk/article/191380

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த முயற்சி . இனவாதம் பிடித்த சிங்கள உதவாத அரசியல் தலைவர்களுக்கு பதிலாக இவருக்கு போட்டு எங்கள் சிங்கள எதிர்ப்பை காட்டவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் எல்லோருமே பெண்களாக இருக்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் பொதுக்கூட்டத்தை சிறிய வளவில் அமைந்த  சிறிய பந்தலுக்குள் மக்களை இருத்தி நடத்தி முடித்த அரியநேந்திரனுக்கு பாராட்டுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற கூட்டம் முற்ற வெளியிலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

கூட்டத்தில் எல்லோருமே பெண்களாக இருக்கிறார்களே?

தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம், 90 களில் சந்திரிக்கா கணவனை இழந்த குடும்பத்தலைவி என வாக்கு கேட்ட நேரம் வட கிழக்கில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயமாக எனது வாக்கு சந்திரிக்காக இருந்திருக்கும், தமிழ் வேட்பாளரை விட அந்த நேரம் அவர் மக்களிடம் அனுதாப அலையினைக்கொண்டிருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஏதோ சொல்வார்கள் அது போல் அவரும் மாறிவிடார், ஆனால் அவர் சொன்ன குழந்தைகளை இழந்த பெற்றோரின் வலி தனக்கு தெரியும் என்றது பொய்யில்லை என இப்பவும் நம்புகிறேன்.

29 minutes ago, விசுகு said:

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிவச்சமாதிரி எல்லாம் பெண்களாக இருக்கு. சொந்த பந்தங்களை ஏத்தி வந்து இறக்கி விட்டிருக்கினம்ப்போல..

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, vasee said:

தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம்,

ஜனதிபதி பொது தமிழ் வேட்பாளராக ஒரு பெண்ணை நிறுத்தியிருந்தால் அனுதாப வாக்ககளை பெற்று வெற்றி பெற்றிருக்கலாமே என்று  தந்திரோபாயதிட்டமிடல் ஆலோசனையை   Vasee  தமிழ் தேசிய பொது  கட்டமைப்புக்கு வழங்கி உள்ளார்

31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சொல்லிவச்சமாதிரி எல்லாம் பெண்களாக இருக்கு. சொந்த பந்தங்களை ஏத்தி வந்து இறக்கி விட்டிருக்கினம்ப்போல..

என்ன கதை சொல்லி ஏத்திகொண்டு வந்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.

அதே.

நாம் நமது குறைகளை நமது பலவீனங்களை களையாமல் மீட்சி இல்லை இல்லை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் சார்பில் தலைமை தாங்குபவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை பேசும் ஒற்றுமை என்பது ஆட்டு மந்தைகள் போன்ற ஒற்றுமை.  எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை.  உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என்ன கதை சொல்லி ஏத்திகொண்டு வந்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்

கூட்டத்துக்கு வாறாக்களுக்கு வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,வெள்ள அழிவுக்கு காசு எல்லாம் உள்ளுக்கால கதச்சு எடுத்து தருவம்.. பிள்ளையளுக்கு சமுர்த்தி வேலை எல்க்ற்றி சிற்றி போர்ட்டில வேலை, ஜீஎஸ் வேலை உள்ளுக்கால எடுத்து தருவம்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கூட்டத்தில் எல்லோருமே பெண்களாக இருக்கிறார்களே?

சில ஆண்களும் இருக்கிறார்கள். அது தனியாக ஒரு கூட்டம்.

IMG-6938.jpg

2 hours ago, விசுகு said:

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

அதனால்தான் ‘மாபெரும் பொதுக் கூட்டம்’ என்று முதலிலேயே சொல்லிட்டாங்களே

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kavi arunasalam said:

சில ஆண்களும் இருக்கிறார்கள். அது தனியாக ஒரு கூட்டம்.

IMG-6938.jpg

அதனால்தான் ‘மாபெரும் பொதுக் கூட்டம்’ என்று முதலிலேயே சொல்லிட்டாங்களே

இது சாதாரணமாக அறிவித்தலில் போடப்படும் வாசகம். இது கூட தெரியாமலா பேனாவை கையில் எடுத்தீர்கள்?? நாசமாய் போச்சு. 😭

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு வந்த மக்களை விட அதிக மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

ஐயா சம்பந்தரின் இறுதி அஞ்சலியின் போதுகூட இவ்வளவு மக்கள் கலந்து கொள்ளவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கூட்டத்துக்கு வாறாக்களுக்கு வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,வெள்ள அழிவுக்கு காசு எல்லாம் உள்ளுக்கால கதச்சு எடுத்து தருவம்.. பிள்ளையளுக்கு சமுர்த்தி வேலை எல்க்ற்றி சிற்றி போர்ட்டில வேலை, ஜீஎஸ் வேலை உள்ளுக்கால எடுத்து தருவம்..

ஜனாதியாகவே வரமாட்டார். எப்படி இந்த உறுதி மொழிகளை அளித்திருக்க முடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கூட்டத்துக்கு வாறாக்களுக்கு வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,வெள்ள அழிவுக்கு காசு எல்லாம் உள்ளுக்கால கதச்சு எடுத்து தருவம்.. பிள்ளையளுக்கு சமுர்த்தி வேலை எல்க்ற்றி சிற்றி போர்ட்டில வேலை, ஜீஎஸ் வேலை உள்ளுக்கால எடுத்து தருவம்..

ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை.

இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓணாண்டி இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலை.

இங்கே வாக்குரிமை இல்லாத நாஙடகதான் பொதுவேட்பாளருக்கு எதிராக குத்தி முறிகிறோம்.

நான் நினைக்கிறேன் அவர் டக்ளசின் கூட்டங்களுக்கு செல்பவராக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜனதிபதி பொது தமிழ் வேட்பாளராக ஒரு பெண்ணை நிறுத்தியிருந்தால் அனுதாப வாக்ககளை பெற்று வெற்றி பெற்றிருக்கலாமே என்று  தந்திரோபாயதிட்டமிடல் ஆலோசனையை   Vasee  தமிழ் தேசிய பொது  கட்டமைப்புக்கு வழங்கி உள்ளார்

11 hours ago, island said:

தமிழர் சார்பில் தலைமை தாங்குபவர்கள் அன்றில் இருந்து இன்றுவரை பேசும் ஒற்றுமை என்பது ஆட்டு மந்தைகள் போன்ற ஒற்றுமை.  எந்த பிரயோசனமும் அற்ற சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஒற்றுமை.  உண்மையில் ஒற்றுமை என்பது அதுவல்ல.  

இந்த ஆட்டு மந்தை செயற்பாடு ஆபத்தானது, ஆனால் இந்த பொது வேட்பாளர் கருத்தினை முதலில் முன் வைத்தது எந்த தமிழ் அரசியல்வாதிகளும் அல்ல, யாழ்கலத்தில் ரஞ்சித் இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார், அதன் பின்னரே இது தமிழ் அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாகி இருந்ததாக உணர்கிறேன்.

எனக்கும் இந்த தேசியம் பேசி மக்களை கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகளை பிடிப்பதில்லை, ஆனால் அவர்களால் முன் மொழியப்பட்ட இந்த பொது வேட்பாளரால் என்ன நன்மை வரும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; ஆனால் தொடர்ந்து இணக்க அரசியல் என்று குண்டு சட்டியில் குதிரை  ஓட்டும் அரசியலால் எந்த மாற்றமும் இல்லாததால் (இது பற்றி விரிவாக ரஞ்சித் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்) ஒரு மாற்று முயற்சியினை எதற்காக அந்த அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை (Bias) என்பதற்காக ஸ்ரியோ ரைப்பாக எதிர்க்க வேன்டும்?

இதுதான் எனது புரிதல் உங்களுக்கு மேலதிகமாக இதில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு அதனை எதிர்த்தால் எனக்கு புரியும்!

3 minutes ago, vasee said:

இந்த ஆட்டு மந்தை செயற்பாடு ஆபத்தானது, ஆனால் இந்த பொது வேட்பாளர் கருத்தினை முதலில் முன் வைத்தது எந்த தமிழ் அரசியல்வாதிகளும் அல்ல, யாழ்கலத்தில் ரஞ்சித் இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார், அதன் பின்னரே இது தமிழ் அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாகி இருந்ததாக உணர்கிறேன்.

இல்லை. ஏப்ரலில் இந்த பொது வேட்பாளர் தொடர்பான முயற்சி பற்றிய அறிவித்தல் வெளியான பின்னரே ரஞ்சித் இது தொடர்பாக, ஆதரித்து ஆழமாக எழுதியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இல்லை. ஏப்ரலில் இந்த பொது வேட்பாளர் தொடர்பான முயற்சி பற்றிய அறிவித்தல் வெளியான பின்னரே ரஞ்சித் இது தொடர்பாக, ஆதரித்து ஆழமாக எழுதியிருந்தார்.

தகவலுக்கு நன்றி, இந்த பொது வேட்பாளர் முயற்சி வெற்றி அளிக்குமா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு(அதற்கு காரணம் வேட்பாளர்கள் அல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பின்பற்றும் இனவாத போக்கு), ஆனாலும் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என மிதவாத அரசியல்வாதிகள் வரலாறு முழுவதும் கூறும் குற்றச்சாட்டிற்கு நாம் ஏன் உடந்தையாக வேண்டும், மறுவளமாக இலகுவாக அரசியல் தீர்வு கிடைத்தால் சந்தோசம்தான்.

ஆனால் இந்த முயற்சியினை எதிர்ப்பவர்களும் இந்த மிதவாத அரசியல்வாதிகள்தான், இவர்கள் தான் 13 ஏற்காமல் விட்டதனை தவறென மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுபவர்கள்.

இந்த மிதவாத அரசியல்வாதிகளுக்கிடையேயான ஒற்றுமையின்மையினை குறிப்பிட்டிருந்தேன், இது ஒரு முரண்நகையாக உள்ளதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

எனக்கும் இந்த தேசியம் பேசி மக்களை கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகளை பிடிப்பதில்லை, ஆனால் அவர்களால் முன் மொழியப்பட்ட இந்த பொது வேட்பாளரால் என்ன நன்மை வரும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; ஆனால் தொடர்ந்து இணக்க அரசியல் என்று குண்டு சட்டியில் குதிரை  ஓட்டும் அரசியலால் எந்த மாற்றமும் இல்லாததால் (இது பற்றி விரிவாக ரஞ்சித் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்) ஒரு மாற்று முயற்சியினை எதற்காக அந்த அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை (Bias) என்பதற்காக ஸ்ரியோ ரைப்பாக எதிர்க்க வேன்டும்?

எனக்கும் இதைப்பற்றி சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் உள்ளது.

அட இவ்வளவு காலமும் இவர்களுக்கு தானே தமிழ்மக்கள் வாக்குகளைப்  போட்டார்கள்.அதற்கான நன்றி கூட இல்லாமல் எவ்வளவு துரோகங்கள் கண் முன்னே செய்கிறார்கள்.

இவர் நல்லவர் அவர் நல்லரென்று சொல்வதற்கு எவருமே இல்லை.

இப்போது என்ன செய்யலாம்?

அடுத்து தேர்தலென்று வரும்போது இதே பொதுக்கட்டமைப்பை வைத்து புதிய கட்சியொன்று ஆரம்பித்து இளையோர்களை உள்வாங்கி தற்போதுள்ள கட்சிகளுக்கு சாவுமணி அடிக்க வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.