Jump to content

Recommended Posts

Posted

இவருக்காக நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். 

இவர் எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கவில்லை, நம்பி கெடுக்கவில்லை, திருமணம் முடிக்கின்றேன் என்று ஏமாற்றவில்லை. 

இவர் செய்த பிழை என்னவெனில் நம்பிக்கை தரும் அளவுக்கு தன்னுடன் கதைத்த ஒரு பெண்ணை நம்பியதுதான். 

புலம்பெயர் சமூகத்தில் இவரைப்போல பல நூற்றுக்கணக்கானவர்களை நாம் காண முடியும். வந்த காலத்தில் இருந்து நரை முடி  காலம் வரைக்கும் உறவுகளுக்காக சகோதரர்களுக்காக உழைத்து அழைத்து ஈற்றில்  இளமை தொலைந்த பின் திருமணம் முடித்த நிம்மதி இல்லாத பலரை காண முடியும்.

வெறுமனே உடல் தேவைக்காக இப்படியானவர்கள் இந்த சதிகளுக்குள் மாட்டுப்படுவதில்லை.

ஆதரவாக கதைக்கும் ஒருவர் கூட அருகில் இல்லாமல் அவரை வெறுமனே பணம் கறக்கும் இயந்திரமாக பாவிக்கும் நெருங்கிய உறவுகள் இருப்பவர்கள் இப்படியாக ஏமாற்றுகின்ற கூட்டத்திடம் அகப்பட்டு எந்த நிம்மதிக்காக கதைக்க தொடங்கினார்களோ அந்த நிம்மதியை தொலைத்து விடுகின்றார்கள்.

இந்த வழியான மோசடிக்கு பெயர் sextortion. வயதான எளிதில் இலக்கு வைக்கபடக் கூடிய நபர்களை கண்டறிந்து ஏமாற்றும் ஒரு சைபர் கிரைம். 

நாம் இந்த குற்றங்களுக்கு இலக்கானவரை திட்டிவிட்டு இந்த குற்றத்தை புரிந்தவரை நியாயப்படுத்துகிறோம், கலாச்சார காவலர்கள் என்ற போர்வையில். 

குற்றம் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லை எறியட்டும் என்று இயேசுநாதர் சொன்னது போல் இங்கு திருமணம் முடித்தபின் வேறு எந்த பெண்ணையும் மனசால் கூட ஆசைப்படாத ஒரு ஆண் இங்கிருந்தால் அவர் சொல்லட்டும் இவர் செய்தது தவறு என்று. 

இங்கு நடப்பதும் victim blaming தான்.

  • Like 11
  • Thanks 1
  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் படியாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தால் பரிதாபத்திற்குரியவராக அல்லாமல் சமுதாயத்திற்கு ஆபத்தானவராக மட்டுமே பார்க்க முடியும். 

புலம்பெயர் நாடுகளில் இவர் போன்றவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய சட்டப்படி  அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. அதிலும் பணமும் இருந்து விட்டால்????

மேலும் திருமணம் செய்யவேண்டும் அதிலும் தமிழ்ப்பெண் தான் வேண்டும் என்றால் இவரது வயதுக்கு தகுந்த எத்தனையோ பேர் போர் அவலங்களில் சிக்கி வாழ்விழந்து தவிக்கிறார்கள் தாயகத்தில். அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, விசுகு said:

அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

விளங்கவில்லை   ...    ஒரு வயோதிபர்   அல்லது 52 வயது நபர்.  

புதிய கார் வேண்ட முடியும் 

புதிய வீடு வேண்ட முடியும்  

புதிய உடுப்புகள்.  அணிய முடியும் 

ஒரு 23. வயது பெண் விரும்பினால் ஏன் திருமணம் செய்ய கூடாது???   

வெளிநாட்டில் பல முதியோர்கள் இளம்பெண்களைத்  திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் 🤣😂🙏

Posted
32 minutes ago, விசுகு said:

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் படியாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தால் பரிதாபத்திற்குரியவராக அல்லாமல் சமுதாயத்திற்கு ஆபத்தானவராக மட்டுமே பார்க்க முடியும். 

அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா?

Quote

மேலும் திருமணம் செய்யவேண்டும் அதிலும் தமிழ்ப்பெண் தான் வேண்டும் என்றால் இவரது வயதுக்கு தகுந்த எத்தனையோ பேர் போர் அவலங்களில் சிக்கி வாழ்விழந்து தவிக்கிறார்கள் தாயகத்தில். அதை விடுத்து இவர் ஏன் 25யை தேடவேண்டும்?? அதனால் தான் ஆபத்தானவர் என்கிறேன்.

எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
 
  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, Kandiah57 said:

விளங்கவில்லை   ...    ஒரு வயோதிபர்   அல்லது 52 வயது நபர்.  

புதிய கார் வேண்ட முடியும் 

புதிய வீடு வேண்ட முடியும்  

புதிய உடுப்புகள்.  அணிய முடியும் 

ஒரு 23. வயது பெண் விரும்பினால் ஏன் திருமணம் செய்ய கூடாது???   

வெளிநாட்டில் பல முதியோர்கள் இளம்பெண்களைத்  திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார்கள் 🤣😂🙏

இருவருக்கும் ஒரே பதில் தான்.

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

20 minutes ago, நிழலி said:

அவர் தன் வயதை 25 என்று சொல்லாமல், தன் உண்மையான வயதான 55 என்று சொல்லி இருந்து பழகியிருப்பார் என நம்புகின்றேன், ஏனெனில் அதனால் தான் ஒழித்து இருக்காமல் ஊருக்கு வந்து முறையிட்டு இருக்கின்றார். இவ்வாறு இவர் தன் வயதை 55 என்று சொல்லி பழகியிருப்பின் அதனை தவறு என்பீர்களா? அல்லது 55 வயதான ஆண் 25 வயதான பெண்ணை திருமணம் செய்ய முற்படுவது தவறு என்பீர்களா?

எல்லாவற்றையும் விட, ஒருவர் தன் தெரிவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது?
 
Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, விசுகு said:

இருவருக்கும் ஒரே பதில் தான்.

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

ஆமாம்  எற்றுகொள்கிறேன் 🙏🙏🙏

ஒரு சின்ன கேள்வி விரும்பினால் பதில் தருங்கள்.  கேள்வி பிழை எனில்  தயவுசெய்து மன்னியுங்கள் 🙏

அதாவது உங்களை ஒரு 30 வயது இளம்பெண்  விரும்பினால்  திருமணம் செய்து கொள்வீர்களா??  தமிழ் பெண் 🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kandiah57 said:

ஆமாம்  எற்றுகொள்கிறேன் 🙏🙏🙏

ஒரு சின்ன கேள்வி விரும்பினால் பதில் தருங்கள்.  கேள்வி பிழை எனில்  தயவுசெய்து மன்னியுங்கள் 🙏

அதாவது உங்களை ஒரு 30 வயது இளம்பெண்  விரும்பினால்  திருமணம் செய்து கொள்வீர்களா??  தமிழ் பெண் 🙏🤣

இதையெல்லாம் தாண்டி வந்து கன காலமாச்சண்ணா. 

ஆனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் தரவேண்டும் என்றால் இல்லை. ஆம் என்று சொல்லும் அளவுக்கு  சுயநலம் இல்லை. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

ஏனெனில் எனக்கு இதே வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அதனால் ஆபத்தை உணர்கிறேன். 

ஆண் பெண் அவர்களுடைய வயது முதல் வருமானம் சொத்து என்பன தொடர்பாக தெளிவு படுத்தி இருவரும் இணைந்து வாழ விரும்பினால் வயது ஒரு தடையாக நாம் எண்ணக் கூடாது. 18 வயது நிறைவடைந்த இருமனம் விரும்பி திருமணம் செய்தால் மறுக்க முடியாது தானே அண்ணை. 

20 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்த பலரை அறிவேன். அதே போல வயது குறைந்த ஆணை திருமணம் செய்த பலரையும் அறிவேன். அவை தனிமனித சுதந்திரம் என எண்ணுகிறேன்.

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

Donald Trumb  June 24th 1946

Melania Trumb April 26Th 1970

40 minutes ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

மிலானியா பாவமா?இல்லையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, ஈழப்பிரியன் said:

Donald Trumb  June 24th 1946

Melania Trumb April 26Th 1970

மிலானியா பாவமா?இல்லையா?

திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது.
நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமூக வலை உலகம் குப்பையாகி விட்டது. பெண்கள் ஆண்கள்..பல விதத்திலும் பணம் பார்க்க பாவிக்கிறார்கள். உடலைக் காட்டி பிழைப்பது அதிகரித்துவிட்டது.. அது உடலை விற்றுப் பிழைப்பதை விட பாதுகாப்பானது என்றாகி இருப்பதால்... பலரும் களமிறங்கி விட்டார்கள். 

ஆனாலும்.. வெளிநாடுகளில் இருக்கும் எம்மவர்கள் பணம் வரும் வழிமுறை உணராமல் கண்டபடிக்கும் ஊருக்கும் தெற்காசியா தென்கிழக்கு ஆசியா நோக்கியும் பணத்தை வீசிவருகின்றனர்.

அவர்கள் உழைப்பு தானே என்று விட்டாலும்.. இதனால் மற்றவர்களும் ஊரில் உள்ளவர்களும் தேவைக்கு அதிகமான செலவை செய்து பல அத்தியாவசிய.. சேவைகளை தேவைகளை நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதில் புலம்பெயர் தமிழர்களின் தாந்தோன்றித்தனமான கண்மூடித்தனமான செலவழிப்பு போக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது.
நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣

ரொம்ப கொடுமை சார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???

  • Like 1
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இதை கொடுமை என்று சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது???

ஆடு நனையுதென்று ஓநாய் அழுவுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

அதுகும்… வளர்ப்பு மகளை திருமணம் செய்யும் துணிவு,
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  ட்ரம்புக்கும் வருமா….
தந்தை பெரியாருக்கு வந்ததே… கெத்து சார். 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

உங்களிடம் ஒரு கேள்வி.

பிரான்சின் ஜனாதிபதியை அவரது துணைவியாருடன் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றுவதை ஒழிக்காமல் சொல்லுங்கள். 

Brigitte Macron: French president's wife to be subject of new TV drama

ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை.

4 hours ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும்

அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

Brigitte Macron: French president's wife to be subject of new TV drama

ஜோடிப் பொருத்தம் நல்லா இல்லை என்பது தான் என் மனதில் படுவது. ஆனால் அவர்களுடைய சொந்த விருப்புகளில் நாம் மூக்கை நுழைக்க முடியாது தானே அண்ணை.

அவருடைய ஆசிரியரைத் திருமணம் செய்தவர் என நினைக்கிறேன் அண்ணை.

வாழ்வு வாழ்வதற்கா கட்டிக் கொண்டு அழுவதற்கா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

70 வயது நபர் 25 வயசு பொண்ணுடன் கதாநாயகனாக ஒரு படம் நடித்தால் அதை பார்த்து மகிழக்கூடியவர்கள் 52 வயது நபர் 25 வயசு பெண்ணிடம் மயங்குவதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்?

நமது 52 வயசு சுவிஸ் கீரோவை எங்கள் யூரியூப் தம்பிமார் பேட்டி கண்டு இணைத்தால் பலருக்கும் பிரயோசனப்படும். 

பல் உள்ளவன் பகோடா சாப்பிடுறான். 

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

வாழ்வு வாழ்வதற்கா கட்டிக் கொண்டு அழுவதற்கா??

அவரைப் பார்த்தால் அழுவது போல் தெரியவில்லை அண்ணை!
அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.
நாங்கள் எமது சமூக வரைமுறைகளைத் தாண்டிய விடயங்களை ஒவ்வாமையுடன் நோக்குகிறோம் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சோழ பேரரசன் ராஜராஜ சோழன்  பல வயதுகளில் பல மனைவிகளை கல்யாணம் செய்து தனது வாழ்வை அவர் களுடன் இன்பமாக அனுபவித்தான்.  அவன் மகள் ராஜேந்திர சோழனும் அதையே செய்தான். 

இவர் ஒரு சாதாரண நபர். 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

அவரைப் பார்த்தால் அழுவது போல் தெரியவில்லை அண்ணை!
அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.
நாங்கள் எமது சமூக வரைமுறைகளைத் தாண்டிய விடயங்களை ஒவ்வாமையுடன் நோக்குகிறோம் என எண்ணுகிறேன்.

எண்பது வயதை கடந்த ஒரு பெண்ணுடன் 46 வயதான ஒருவர் வாழ்தல் என்பது தாம்பத்ய குடும்பம் அல்ல அதற்கு வேறு பெயர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இதனுடைய பின் விளைவுகள் மற்றும் விளையாட்டுகள் பற்றி பின்னர் பேசப்படும்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

எண்பது வயதை கடந்த ஒரு பெண்ணுடன் 46 வயதான ஒருவர் வாழ்தல் என்பது தாம்பத்ய குடும்பம் அல்ல அதற்கு வேறு பெயர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இதனுடைய பின் விளைவுகள் மற்றும் விளையாட்டுகள் பற்றி பின்னர் பேசப்படும்???

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல.  மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. 

அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. 

மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. 

கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள். 

Edited by நியாயம்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஈழப்பிரியன் said:

ரொம்ப கொடுமை சார்.

இதை தான் அறியாமை என்பார்கள்,.........வயோதிபர்கள்.  அனுபவசாலிகள்.   அனைத்து விடயங்களிலும்   ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்யும் இளைஞன்   அவளை திருப்தி படுத்துவதை. விட   ஒரு வயோதிபன்.  பூரணமாக திருப்தி படுத்துவன். அனுபவம் கண்ட பெண்கள் ஒருபோதும் கிழவனை தட்டி விடமாட்டார்கள். 😂🤣 

இதில் கொடுமை எதுவும் இல்லை  இங்கு மேறகு நாடுகளில் நிறைய கிழவர்கள். இளம்பெண்களைத் திருமணம் செய்துள்ளார்கள். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நியாயம் said:

மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல.  மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. 

அது சரி நீங்கள் ஏன் ஏதோ உங்களை எண்பது வயது பெண்ணுக்கு வாழ்க்கைப்பட வைத்தது போல் பீல் பண்ணுகின்றீர்கள்? அது போலவே உங்கள் இருபத்து ஐந்து வயது மகள் விடயத்திலும் பீதி அடைகின்றீர்கள்? உலகத்தில் ஆயிரத்து பத்தாயிரத்து ஐநூற்று ஏழு விடயங்களும் அதற்கு மேலேயும் காணப்படும். அனைத்தையும் நமது வாழ்க்கை நிலமையில் ஒப்புவமை, கற்பனை செய்ய தேவை இல்லையே. 

மற்றும் ஆண், பெண் இரு பாலினரிடையேயும் வயதுக்கு மீறிய ஈர்ப்புக்கள் எமது சமூகத்தில் ஒன்றும் புதியவை அல்ல. 

கிளுகிளுப்பு உணர்ச்சிகளை தாராளமாக கொடுத்து படைத்தவனும் என்ஜோய் பண்ண சொல்கின்றான். சட்டமும் போதியளவு இடம் கொடுக்கின்றது. இந்த நாட்டாண்மைகள் கொஞ்சப்பேர் குத்தி முறிகின்றார்கள். 

எனக்கு எங்கள் ஜனாதிபதியை பார்க்க எவ்வளவு பாவமாக இருக்கிறதோ அதை விட பலமடங்கு பாவமாக இருக்கிறது நியாயம் என்று பெயர் வைத்து விட்டு நீங்கள் அதை நிரூபிக்க கருத்து எழுத எப்படி எல்லாம் ஓட வேண்டி இருக்கிறதே என்பதை காண்கின்ற போது....???🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.