Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, vasee said:

இங்கு தமிழ் பொது வேட்பாளரை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும், தமிழ் மக்கள் ஒரு செய்தியினை சொல்லிவிட்டார்கள், இது ஒரு வகையில் தெளிவான செய்திதான் அனைத்து மக்களும் இலங்கையராக பயணிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவானால் தமிழ் மக்களும் எந்த் வித தய்க்கமுமின்றி இணைந்து பயணிக்க தயாரக உள்ளார்கள் என்பதே, இது ஒட்டு மொத்த இலங்கைக்கும் கூறப்பட்டுள்ள செய்திதானே? இந்த பொது வேட்பாளரால் ஏற்பட்ட நன்மை எனக்கொள்ளலாம் (பொது வேட்பாலரை ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்).

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதனை புரிந்து புலம்பெயர் தமிழர்களும் செயற்படுவார்கள்தானே?

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. 

புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். 

தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி. 

புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும். 

தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

என்னதான் சொன்னாலும் அதுகளுக்கு உறைக்காது புதுப்புது கெட்டப்பில் வந்து தாயக மக்களுக்கு அரியண்டம் குடுத்துக்கொண்டே நிக்குங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

8 hours ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.

 

7 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான்.
அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார். 

சுமந்திரனின் குலுமாசு:

"இலங்கை வாக்காளர்,  தேர்தல் மேடைகளில் நான் கொடுத்த சைகையை சரியாக பயன்படுத்தி, எனது கருத்துக்களைப் கேட்ட பின்னரே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்ததாக நான் நம்புகிறேன், அதை நீங்களும் முன்னைய தேர்தலில் அவதானித்திருப்பீர்கள், இது எங்களின் ராஜதந்திரம்." "இதை தாங்கள் கவனத்தில்  எடுத்து எனக்கு பதவியளித்தால், அதை நீங்கள் எனக்களிக்கும் கெளரவமாகக் கருதுகிறேன்."    

கண்டிப்பாக இப்பவே வாழ்த்து என்கிற  பெயரில் அழைப்பெடுத்து கோரிக்கை விடுத்து காத்திருப்பார்கள், இனி அனுராவை புகழ்ந்தே பேசுவார்கள், ஆனால் இந்த வௌவால் கூட்டத்தை அனுரா சேர்த்துக்கொண்டால் மற்றவர்களைப்போலவே இவரின் ஆட்சியும் குப்பையாக மாறும். இவரின் கொள்கை மாற்றமடையும், இவருக்கு கிடைத்த இந்த அருமையான  வாய்ப்பை இவர் தவற விட்டால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படாது என்பதை அவர் அறிவார். ஆகவே கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பின்னர்,  எங்களின்  கொள்கை சரியானது அதை நிறைவேற்ற மக்கள் எங்களுக்கு ஆணை (சந்தர்ப்பம்) தரவில்லை என்று பின்னாளில் புலம்புவதில் பயனில்லை. சொல்லும் செயலும் ஒன்றானதா என்பதை இவர்களின் அமைச்சரவையிலிருந்து புரிந்து  கொள்ளலாம்.

7 hours ago, தமிழ் சிறி said:

ரணில்…. இரண்டாவது இடத்திற்குத்தான் போவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால்… மூன்றாம் இடத்திற்குப் போனது படு தோல்வி என்றே கருத வேண்டும்.
ஊழல் வாதிகளான ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய கோபம் சிங்கள மக்களிடம் இருந்திருக்கலாம். அதுதான்…. ரணிலுக்கு நெற்றியில் அடித்து சொல்லி இருக்கின்றார்கள்.

ராஜா பக்க்ஷக்களுக்கு  எதிராக தொடங்கிய அரகலியாவை அடக்கி அதை தன் தோளில் சுமந்து அவர்களை காப்பாற்றியவர் ரணில். அதன் எதிரொலிதான் இந்த தேர்தல் பெறுபேறுகள்!

7 hours ago, தமிழ் சிறி said:

நாமலின் தேர்தல் பிரச்சாரம் அம்பாந்தோட்டையில் நடந்த போது… கல்லெறியும் விழுந்தது. 😂

அது நாமலின்  தவறு.. இவர்கள் வேண்டாமென்றுதானே மக்கள் இவர்களை விரட்டியடித்தாகள், அந்த வெறுப்பு ஆறுமுன், எனக்கு வாக்கு போடுங்கள் என்று வெட்கமில்லாமல் மேடையேறியது யார் தவறு?  அந்த இடத்தில் மஹிந்த இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இது அவருக்கு பெருத்த அவமானமாக இருந்திருக்கும். அவர் தப்பித்துக்கொண்டிருந்தார். தமிழரை அழித்த கையோடு, அதை விழாவாக எடுத்து எக்காளம் ஊதிக்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம், தப்பித்து துயரை தாங்கமுடியாது தவித்தவர்களிடம் வெட்கமேயில்லாமல் வாக்கு கேட்டவரின் புதல்வாராயிற்றே நாமல்!

6 hours ago, தமிழ் சிறி said:

உளறுவாய் மாவை… தன்னுடைய தலையிலேயே மண் அள்ளிப் போட்டு விட்டார். 😂

நுணலும் தன் வாயாற் கெடும். இவர்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளல்லர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்துடன்  இவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுவது இவர்களுக்கு நல்லது. இல்லையேல், பாராளுமன்றத்தேர்தலில்  தகுந்த பாடம் அளிக்கப்படும். இவர்களின் வழமையான போலி வாக்குறுதிகளும் நாடகங்களும் இனியும் எடுபடாது. இவர்கள் தமிழரை வைத்து நகைச்சுவை செய்திருக்கிறார்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு முட்டாள்தனம்.

6 hours ago, கிருபன் said:

தபால் மூல வாக்களிப்பில் சிங்களவர்கள் எல்லாம் பாத்துப் பாராமல் அநுர குமாரவுக்குப் போட்டிருக்கின்றார்கள்!

இந்த இனவாத அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர் மட்டுமல்ல சிங்களவர்களும், நாட்டின் பொருளாதாரமுந்தான் ஏப்பமிடப்படுள்ளது  எனும் உண்மையை  புரிந்து கொண்டுள்ளார்கள்.

6 hours ago, Kapithan said:

இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? 

தமிழர் தரப்பு எதற்குள் வரும் ?  👉

முட்டாள், மோடன், மட்டி, மடையன்,..? 

ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?  

இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்!   தமிழர் இனியும் வர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்!  

5 hours ago, புலவர் said:

சிங்களதேசம் மற்றத்துக்கு தயாராகி விட்டுது.ஜனநயக முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளை தண்டிக்கத்தயாராகிவிட்டது.ஆனால் தமிழர்கள் எந்த சிந்தனையுமின்றி இலு்கிறார்கள்.

இனவாதம் பேசுவோரை விரட்டியடிக்க தொடங்கியதோடு புதிய கொள்கைக்கு இடம் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். அனுரா அதை சரியாக பயன்படுத்தினால் சரி, இல்லையென்றால் அவருக்கும் இதே கதிதான். இந்த நாட்டை கட்டியெழுப்புவது, ஊழலை ஒழிப்பது சாதாரண விடயமல்ல, விடவும் மாட்டார்கள். அவர்களின் சும்மா இருந்து பணம் உழைக்கும் வழி இது. தமது ஊழலையும் சிறை வாழ்வையும் தக்க வைக்க எந்த நிலைக்கும் போவார்கள்.

5 hours ago, நிழலி said:

நல்லூரிலாவது 50 வீதம் அரியத்துக்கு கிடைக்கும் என நினைத்திருந்தேன்.

 எழுபத்தைந்து வருடங்களாக வாக்குபோட்டுப்பழகிய பழக்க தோஷம், செம்மறிகூட்டங்களாக கேள்வி கேட்காமல் தலையாட்டிய கூட்டம், உடனடியாக புது பாதையை தெரிவது கொஞ்சம் சிரமம். ஆனாலும் முதல் தரத்திலேயே மக்கள் ஏற்றுக்கொண்டது பெரும் சாதகமே! இது தொடர்ந்து  மக்களோடு பயணித்தால்; வெற்றியடையலாம்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

கனநேரமா ஒன்றையும் காணோம்.

நரி விளையாட்டைக் காட்டுதோ?

நரி, ஆபத்து நேரமெல்லாம் மஹிந்த கொம்பனிக்கு கை கொடுத்து ஒற்றையாட்சி கொள்கையை காப்பாற்றியதன் விளைவு; தன் வாலை இழந்து நிக்குது. இனி இந்த கிழட்டு நரி அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லது.

அனுரா கட்சிக்கு அரகலியா ஏற்படுத்திக்கொடுத்த அரிய வரப்பிரசாதம். இது கடைசியும் முதலுமானது, இதை இவர்  சரியாக பயன்படுத்திக்கொண்டால் இனவாதிகளையும் அவர்களின் அரசியலையும் முற்றாக   ஒழித்து நாட்டை முன்னேற்றலாம். இவர் சரியாக தமிழரை அணுகினால் முதலீடுகளை பெறலாம். இல்லையேல் இந்தக் கட்சிக்காக உயிரை தியாகம் செய்த இளைஞரை அவமதிப்பதோடு எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக ஒருபோதும் அரசியல் செய்ய  இடமளிக்கப்படாது. 

  • கருத்துக்கள உறவுகள்

2வது சுற்று எண்ணவேண்டி வரும் போல

  • கருத்துக்கள உறவுகள்

அநுரவே வெல்லட்டும்.......... ஆனால் முதல் எண்ணிக்கையில் 50% கீழேயே எடுக்கட்டும். நாங்களும் எங்கள் வாழ்நாளில் இந்த இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவதை ஒரு தடவையாவது பார்த்து விடுவோம்..........

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

 ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........

ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

நம்ம பெரியண்ணனின் ஜெம்ஸ்போன்ட் (அஜித் டோவல்)வந்தார் ..இருந்தும் .இந்தியாவின் புலனாய்வு தோல்வியடைந்து விட்டது... இந்தியா தன்னுடைய அயல்நாடுகளில் செல்வாக்கை இழந்து வருகின்றது ...இந்த லட்சணத்தில்  கனடா,யுக்ரேயின் போன்ற நாடுகளின் அர்சியலில் மூக்கிஅ நுழைக்கின்றது....

தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣.

சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன.

ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர்.

இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும்.

நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன.

அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, satan said:

ரணிலை மிதப்படுத்தி பேசியதெல்லாம் பொய் என மக்களுக்கு புரியும் என்பது தெரியாமலேயே அவிழ்த்துவிட்டு காத்திருந்தனர். எந்த வைத்தியராலும் அவரை காப்பாற்ற முடியாது, எந்த மருத்துவமனையிலும் அவருக்கு இடமில்லை. ஏற்கெனவே அவர் ஒரு தனிமரம், அது தெரியாமல் தோப்பாக நினைத்தார், தான் இருந்த மரத்திலிருந்தே சறுக்கி விழுந்து விட்டார். இனி ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மொட்டுக்கட்சி மெல்ல மெல்ல சரியும். நாமல் எக்காலத்திலும் ஜனாதிபதியாக முடியாது!

நீங்கள் என்ன ஒரு கடுங்கோப முனிவர் சாபம் போடுவது போல அள்ளித் தெளித்துவிட்டீர்கள்............🤣.

நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், இந்த மூன்று கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன.

நாமலின் நிலை தான் ஆகக் கவலைக்கிடம்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்!

கோப்பாய்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 2,541 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 62,449 ஆகும்.

2,817 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 37,287 ஆகும்.

மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40,104 ஆகும். 

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

உடுப்பிட்டி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,467 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,996 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,259 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 1,670 வாக்குகளை பெற்றுள்ளார்.   

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

மானிப்பாய்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 11,609 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11, 587 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,871 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 2,886 வாக்குகளை பெற்றுள்ளார். 

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

வட்டுக்கோட்டை

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,170 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,749 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,367 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 1,887 வாக்குகளை பெற்றுள்ளார்.     

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna   

ஊர்காவற்றுறை

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 5,726 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,155 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 3,687 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 593 வாக்குகளை பெற்றுள்ளார்.       

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

பருத்தித்துறை

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,658 வாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 6,100 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,162 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 1,806 வாக்குகளை பெற்றுள்ளார். 

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna   

காங்கேசன்துறை

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 8,708 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 8,365 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,587 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 1,935 வாக்குகளை பெற்றுள்ளார்.   

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

சாவகச்சேரி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 10,956 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9,159 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,160 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 2,692 வாக்குகளை பெற்றுள்ளார்.  

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

கிளிநொச்சி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 30571 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 20348 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7182 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 2805 வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

தபால் மூல வாக்குகள் - யாழ்ப்பாணம் 

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9277 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7640 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4207 வாக்குகளை பெற்றுள்ளார்.    

அநுரகுமார திஸாநாயக்க 2250 வாக்குகளை பெற்றுள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

 

 

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7494 வாக்குகளை பெற்றுள்ளார்.  

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 26,028  ஆகும்.

1,242 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 24,786 ஆகும்.

மேலும், 37,355 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்! | Presidential Election Postal Results Jaffna

நல்லூர்

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்  10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.    

https://tamilwin.com/article/presidential-election-postal-results-jaffna-1726944188

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரசோதரன் said:

அநுரவே வெல்லட்டும்.........

சோக காலம் ☹️

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள்,   மலையகத் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் மாவட்டங்களில் அநுர 50% க்கு குறைவாக எடுத்திருக்கின்றார். ஆனால் சிங்கள மாவட்டங்கள் அனைத்திலும் 50% க்கு அதிகம் எடுத்துள்ளார்.

மூன்றாவதாக வந்த ரணிலுக்குப் போட்டவர்களின் வாக்குகளில் இரண்டாவது தெரிவாக உள்ளவரை எண்ணினாலே வெற்றியாளரைத் தீர்மானிக்கலாம். அநுரவை சஜித் மேவுவது முடியாது போலுள்ளது!

All Island Results - Cumulative

NPP.png
Anura 

41.87%

Votes - 1,686,167

SJB.png
Sajith 

30.97%

Votes - 1,258,248

IND16.png
Ranil 

16.69%

Votes - 672,162

IND9.png
Ariyanethiran 

4.32%

Votes - 174,197

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்படி இழுபடுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போது வரையான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

elec-official.jpg

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் கீழுள்ள இணையத்தளத்தில்

https://results.elections.gov.lk/

  • கருத்துக்கள உறவுகள்

460840090_930069862491320_29898564288403

 

460722760_929629215868718_19260798670844

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன இப்படி இழுபடுது.

நீங்கள் நித்திரை கொள்ளப் போகின்றேன் என்று போய் விட்டீர்கள்............. நாங்கள் இப்படியே இது இழுபடுவதை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

1,825,817 Votes

41.73%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 

1,387,067 Votes

31.70%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

733,157 Votes

16.76%

candidate-image

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

174,484 Votes

3.99%

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:
Ariyanethiran 

4.32%

174,530
3.83%

சர்வதேசம் இனி நடவடிக்கை எடுக்க போகின்றது

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

அநுரவிற்கு இவர்கள் எவரும் தேவையில்லை, இவர்கள் எவரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்தால் இன்னும் அதிக தமிழ் வாக்குகள் இவருக்கு அடுத்த தடவை கிடைக்கும்........👍.

ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......

பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில்.  ஆட்சி அமைக்க ஆதரவு தேவை   யாரை பிடிப்பார்.?? 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில்.  ஆட்சி அமைக்க ஆதரவு தேவை   யாரை பிடிப்பார்.?? 

கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

பாராளுமன்ற தேர்தலில் அனுர பெரும்பான்மை பெறுவாரா. ??பெறவிடில்.  ஆட்சி அமைக்க ஆதரவு தேவை   யாரை பிடிப்பார்.?? 

அனுர ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்தவுடன்....
நிச்சயம் தற்போது இருக்கும் பாராளுமன்றை கலைத்து,
புதிய பாரளுமன்றத்துக்கு தேர்தலை நடத்துவார் என்று எதிர் பார்க்கலாம்.
இப்ப இருக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு அவர் ஆட்சி நடத்துவதை மக்கள் கூட விரும்பமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது.

நாம் பெற்ற இன்பம் 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.