Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 

 

ஏங்கோ! சிங்களத்துக்கு எழுபத்தைந்து வருடங்களாக வாக்குப்போட்டு நம்பிக்கையோடு இருந்த மூஞ்சிக்கு என்ன நடந்தது? அந்த மூஞ்சியில் கரியைப்பூசி அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது யார்?  

இது கூடத் தெரியாதா? சொல்கிறேன் கேளுங்கள்!   தமிழர் இனியும் வர்களை நம்பி இவர்கள் பின்னால் இவர்களுக்கு வாக்களிக்கத் தயாரில்லை என்கிற தரப்புக்குள் வரும்!  

குளத்தோடு கோவித்துக்கொண்டு  குண்,... கழுவாவிட்டால் நட்டம் குளத்துக்கல்ல.

 கழுவாதவன் நாறிப்போய்விடுவான். குழமும் வற்றிச் செல்கிறது,.. .☹️

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

விருப்ப வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்? 

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர். 

இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும். 

அதாவது, மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளில் அதாவது அந்த வாக்குச் சீட்டுகளில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமை பெற்றுள்ளனரா என்பது சரிபார்க்கப்படும். 

அநுர குமார திஸநாயக்கவுக்கு இரண்டாவது முன்னுரிமை அளிக்கப்பட்டால், அநுர குமார திஸநாயக்க பெற்ற வாக்குகளுடன் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும். சஜித் பிரேமதாசவுக்கு இரண்டாவது முன்னுரிமை என்றால், சஜித் பிரேமதாச பெற்ற வாக்கு எண்ணிக்கையில் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படும்.

மற்ற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குச் சீட்டில் அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச இரண்டாவது முன்னுரிமையைப் பெறவில்லை என்றால், அந்த வாக்குச் சீட்டுகளில் இருக்கும் மூன்றாவது முன்னுரிமை பரிசீலிக்கப்படும். அதேபோல, அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாச மூன்றாம் முன்னுரிமையைப் பெற்றிருந்தால், அவை அந்தந்த வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்க்கப்படும்.

அநுர குமார திஸநாயக்க அல்லது சஜித் பிரேமதாசவுக்கு கூடுதல் விருப்பத் தேர்வுகள் இல்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்.

சமநிலை ஏற்பட்டால், வெற்றியாளரைத் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை. 

நம்ம மண் விசுகர். 🥰

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு.

தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் 

இது போன்று தமிழ் மக்கள் சார்ந்து நீங்கள் நிறுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

இது உங்களுக்கு சந்தோஷம் போல

தமிழ் மக்களை பொது வேட்பாளர், உலகத்துக்கு செய்தி சொல்லுதல் என்று தவறான concept மற்றும் எந்த பிரயோசனத்தையும் தராத அழிவுகளை மட்டுமே கொடுத்த உசுப்பேற்றல்கள் தோல்வி அடைந்தது மிக்க மகிழ்சசியே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பொது வேட்பாளர்  என்பது இன்றைய தமிழரின் அபிலாசைகளை கருதி பிறந்த குழந்தை. அது உடனேயே ஓட்டப்போட்டியில் வெற்றி பெறவேண்டுமென நாம் நினைத்தால்; அது நமது தவறு. அதுவும் இரண்டுபட்ட தமிழரசுக்கட்சியை வைத்துக்கொண்டு எதிர்பார்ப்பது நமது அனுபவக்குறைவேயல்லாமல் வேறொன்றுமில்லை. அவர் வெற்றி பெறாததால் ஒன்றும் குடிமுழுக்கப்பபோவதில்லை. எமது தேவைகளை, அபிலாசைகளை முன்னிறுத்தியுள்ளது. அது சிங்களத்துக்கும் புரியும். அனுரா அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய பாதையில் பயணிப்பது முதலில் சிரமமாகத்தான் இருக்கும், போகப்போக அதன் ஏற்ற இறக்கங்கள் புரியும்.  

அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன்  கருவிலேயே  சங்கு ஊதப்பட்டுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

ர‌னிலின் தோல்விக்கு 

நாட்டை விட்டு விர‌ட்டி அடிக்க‌ ப‌ட்ட‌ ம‌கிந்தா கூட்ட‌த்துக்கு மீண்டும் பாதுகாப்பு கொடுத்த‌தால் தான் ப‌டு தோல்வி என்று த‌க‌வ‌ல் வ‌ருது

உண்மையா இருக்குமா த‌மிழ் சிறி அண்ணா..................

 

ந‌மால் ப‌டு தோல்வி அடைஞ்ச‌து பெரும் ம‌கிழ்ச்சி😁............................

ஒம் பையன். தமது வயிற்றில் அடித்த ரணிலை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை. அவர்களை பாதுகாத்த ரணிலை, பழி வாங்கி விட்டார்கள். 
ஆனால்… ரணிலுக்கும், பாராளுமன்றத்தில் அவர்களின் தயவு தேவைப் பட்டதால் அவாரால்… அவர்களை பகைத்துக் கொண்டு போக முடியவில்லை.

ரணில் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு ஜனாதிபதியானது ஒரு சாதனை எனறாலும், “அரகலய”  போராட்டக் காரர்கள் போட்ட பிச்சை அது. 

  • கருத்துக்கள உறவுகள்

அனுரவின் வெற்றி உங்கள் கருத்துக்கு  எதிராக இருக்கிறதே. அனுரவின் கட்சி வெல்லும் என கடந்த தேர்தல்களில் யாரும் நினைக்கவில்லை. தமிழரசுக்கட்சியிலுள்ள புல்லுருவிகளை களைந்தால் நமக்கு வெற்றி நிட்சயம். சளைக்க மாட்டோம். தமிழர் எல்லோரும் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சிக்கு மட்டுமா வாக்களித்தனர்?

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை.
தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪

அதை ஜீரணிக்க இங்குள்ள   சிலருக்கு   கஸ்ரமாக இருக்குது. 
அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. 
புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣

இது கவுண்டர் செந்திலின் ""அண்ணே  நான் எட்டாங்கிளாஸ் பாஸ் அண்ணே. நீங்க SLSC  பெயில் அண்ணே,.....Pass பெருசா Fail பெருசா,..?" போல இருக்கிறது சிறியரின் வாதம். 

சொல்லுங்க  சிறியர்,...

எனக்குத் தெரிந்த ஒருவர் பெரிய பந்தா காட்டிக்கொண்டு திரிவார். அவரைச் சந்தித்த ஒருவர் அவரிடம் "அண்ணா நீங்கள் பள்ளிக்கூடம் போகவே இல்லையாமே. மூன்றாம் வகுப்புத்தானே படித்தீர்களாம். உண்மையா என்று நையாண்டி செய்திருக்கிறார். அதற்கு அவர்,...,...இல்லை த் தம்பி நான் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தனான் " என்றிருக்கிறார். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அடுத்த 1000 வருடங்களுக்கு டமில் பொது வேட்பாளர் என யாரை நிறுத்தினாலும் அவர் தோல்வியடைவார் என்பது உறுதி. ஏனென்றால் அதன்  கருவிலேயே  சங்கு ஊதப்பட்டுள்ளது. 

ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. 

மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை. 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. 

மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் சாகப்போவதில்லை. 

 முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலையாட்டாவிட்டால் துரோகி என்று கூறுவது வழமையான செயற்பாடுதானே விசுகர்.

நீங்கள் அரியத்தாருக்கு கண்ணுக்குப் புலப்படாத விலையுயர்ந்த  ஆடையை அணிவித்து, நகர்வலம் வருவீர்கள்.  நான் அதைப் பார்த்து சிரிக்கிறேன். அது உங்களைக் கோபப்படுத்துகிறது. 

மக்கள் நிராகரித்த  பின்னரும் அதை ஏற்க மறுப்பது பாஸிசமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஒற்றுமை மற்றும் ஒன்றாதல் என்பது உங்கள் போன்றவர்களால் இல்லாமல் ஆக்கப்பட்டு முடிவுக்கு வந்தாச்சு. அதன் கடைசி முயற்சிதான் முடிந்துள்ளது. 

மற்றும்படி நீங்கள் சொல்வது போல் 1000 ஆண்டுகளுக்கு பின்னர் டமில் என்று ஒரு இனமும் இருக்க வாய்ப்பில்லை. அதையும் புலம்பெயர் தேசத்தில் அறுத்து விடாமல் நீங்கள் சாகப்போவதில்லை. 

வயிற்றெரிச்சலால் சம்பந்தமில்லாமல் ஏதோ புலம்புகிறார் அவர், அவருக்கு நம் இழப்புகள், தேவைகள் தெரிவதுமில்லை, கவலையுமில்லை, இன உணர்வுமில்லை. விழுந்து போன தன் இனத்தை பார்த்து தோல்வியை எள்ளி நகையாடுபவர் அந்த இனத்துக்கு வேண்டியவருமில்லை. விடுங்கள் அவரை, அவர்பாட்டில் களைத்ததும் ஓய்ந்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்தரப்பின் ஒருசாரரால் கொண்டுவரப்பட்ட  பொதுவேட்பாளர் விடையத்தில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது இதில் இந்தியாவின் நேரடி கைத்தடியாக இருக்கும் மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேமச்சந்திரனது பிரசன்னம் இருக்கும்போதே அவதானித்த ஒன்றுதான்.

எனினும் யாழ் கருத்துக் களத்தில் வேறு ஒரு திரியில் "பொதுவேட்பாளரை முன்னிறுத்துவது வரலாற்றுப்பிழை" எனக்குறிப்பிட்டிருந்ததாக நினைவு.

வடக்குக் கிழக்கிலிருந்து வரும் தேர்தல் முடிவு நிலைகளின்படி அரியனேந்திரன் அவர்கள் பெற்ற வாக்குகள், தெற்கின் ஏனைய முண்ணணி வேட்பாளர்கள் வடக்குக் கிழக்கில் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையைவிடக் குறைவு என்பது புலப்படுகிறது.

இதன்மூலம் எதிர்வரும் காலங்களில் வடக்குக் கிழக்கின் தமிழ் மக்கள் தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் வைக்கும் கோரிக்கை எதுவும் மக்களின் ஆதரவுடன் இல்லாதது என சிங்களத்தரப்பு, இந்தியா, சர்வதேசம் ஆகியன நேரடியாகக் கூறாதுவிடினும் அதை எடுகோளாக வைத்தே அரசியல் காய்களை நகர்த்தும். இக்கட்டான சூழலில் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பதுபோல் பாவனை செய்தாலும் மேலும் மேலும் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி தமிழர் கோரிக்கைகளை மலினப்படுத்துவதற்கான முன்னேற்பாடே பொதுவேட்பாளர்.

காலம் காலமாக அதிகாரத்தில் வருபவர்கள் இரன்டு முக்கிய கட்சியிலிருந்து வந்தாலும் அவர்கள் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தி அவர்களது கோரிக்கைகளைச் சிறுக்கச்செய்யும் மூலோபாயத்துடன் நடந்துகொண்டது வரலாறு. இதன்மூலம் சிங்களத் தலைமைகளில் எவரும் தமிழர்க்கான உரிமை விடையத்தில் ஒரேமாதிரியான கொள்கையுடயவர்கள் என உலகம் அறிந்தாலும் தமிலர் தரப்பின் மீதான பிரித்தாளுகையின் காரணமான பலயீனம் எம்மை உய்யவிடாது.
மாறாக இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து இன்னுமொரு தரப்பு அதிகாரத்தில் வந்தாலும் அத்தரப்பும் எமக்கான உரிமைபற்றி கவனத்தில் எடுக்காது என்பதை நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பமாக ஜே வி பியின் அனுரகுமார தேர்தலில் வந்துள்ளார். ஆனால் அப்படியான் ஒரு நல்ல வாய்ப்பையும் தமிழர்தரப்பு இல்லாதொழித்து சயித் அல்லது ரணில் எனும் தெரிவிலிருந்து மாறாது மாறி மாறி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண் அல்லிப்போட்டது மட்டுமன்றி, "அரகலயவைத்" தொடர்ந்து ராஜபக்சேக்களைச் சிங்களவர்களது கோபத்திலிருந்து தப்பவைத்த ரனில் மேலிருந்த கோபத்தின் வெளிப்பாட்டின் காரணமாக முண்ணணிப்போட்டியாளராக வந்த அனுரவைத் தொற்கடிக்கக் காரணமாகி, சிங்கள இனம் இத்தீவில் வாலும் இன்னுமொரு இனம் எனினும் அவர்களது அபிலாசைகளிலும் மண் அல்லிப்போட்டுவிட்டார்கள்.

 கூடிய விரைவில்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுவெளியில் நாம் இப்போது விமர்சிக்கும் தமில் அரசியல்வாதிகளை அகற்றி தமில் மக்கள் ஜனநாயக முறையில் தங்களது பிரதிநிதிகளை தேர்வுசெய்து நாடாளுமன்றம் அனுப்பக்கூடிய சந்தர்ப்பத்தையும் இழந்து நிற்கிறது.

ராஜபக்சேக்களது அரசியலை முறியடித்து அவர்களைக் களத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடிய பழிவாங்கும் சந்தர்ப்பம் தமிழர்க்கு இருந்தும் அதைக் கோட்டைவிட்டுவிட்டதும் இத்தேர்தல்மூலம் நடந்துள்ளது.

ரணில் அல்லது சஜித் யாராவது பதவிக்கு வரவேண்டுமென்பது தமிழர்களது அடிப்படைப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நல்நோக்கத்துக்காக இல்லை, மாறாக குறுகியகாலநலஙளுக்கானதேயாகும்.

இங்கு புலம் பெயர் தமிழர்களாகிய நாங்கள் எவ்வளவு குத்திமுறிந்தாலும் அவர்களது நடைமுரை அரசியலை அவர்களே தீர்மானிக்கவேண்டும் என்பதே நியாயமானதும் நிதர்சனமானதுமாகும்.

எனினும் தொலைபேசிக்கும் கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாத வாக்களர்களையும் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை பியதாசாவே நினைத்துக் கவலைப்படுவார்.

எம்மால் எழுத்துக்களில் மீது விரல்களால் குத்தி எமது ஆதங்கத்தை மட்டும் தெரிவிக்கலாம். தீர்மானம் செய்யவேண்டியவர்கள் அவர்கள், 

நாம் அவர்களிலிருந்து விலத்தியிருப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி. எமது வளம்பெற்ற வாழ்க்கைக்கு உதிரம் சொரிந்த மாவீரநினைவேந்தலுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயக அரசியல் தமிலர் விடிவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதே தாயகத்தில் இருக்கும் எமது உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய உதவி.

ஆகவே இது ஒன்றும் பெருய விடையம் இல்லை. 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கும் முடிவு மாற்றமும்
  
அனுர— 5634915 - 42.31%
சஜித்— 4363035 -32.76%

கிட்டத்தட்ட 13 இலட்சம் வாக்குகள்(10%) இருவருக்கிடையிலான வேறுபாடாக உள்ளது. 
 இரண்டாவது விருப்பு வாக்கின் எண்ணிக்கையில் பின்வரும் காரணிகள் செல்வாக்குச் செலுத்தும். 
 1. எல்லோரும் விருப்பினைப் பதிவு செய்திருக்கமாட்டார்கள்
2. பதியப்பட்ட விருப்பு வாக்குகளில் இருவருக்கும் கிடைக்கும்.
3. சஜித்துக்குக் கூடக் கிடைத்
தாலும் 13 இலட்சம் + அனுர விருப்பு வாக்குகளின் கூட்டுத்தொகையை விஞ்சும் அளவுக்குக் கிடைப்பது அரிது. 
 எனவே அனுரவே ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

(முகநூல் பதிவு)

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text that says "Trollbatti2.0 0 ரோட்ல டல ல வச்சி கோட்டா எங்கள ஏமாத்தி... Gas & Petrol Q as&PetrolQ ல இருத்து தத்தெடுத்த ராசா... நாடு நாடா ஓடி ஓடி கடன் வாங்கி தந்த ராசா... அங்கர் பால கண்ணுல காட்டுன ஐயாதுரை."

  • கருத்துக்கள உறவுகள்

 

அனுராவுக்கு 58 வீதம் எதிர்ப்பு வாக்குகள் இருக்கின்றன.பாரளுமன்றத்தைக் கலைத்தால்  அவருக்கு சார்பான ஆட்சி அமைவது சாத்தியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

பொது வேட்பாளருக்கு ஓட்டு பெற வவுனியாவில் ஆளுக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேல் செலவளித்து உள்ளார்கள். இதில் கூட்டத்துக்கு ஏத்தி இறக்குதல், உணவு, கைக்காசு எல்லாம் அடக்கம். ரணில் தரப்பு ஐயாயிரம் சொச்சம் செலவளிச்சதாம் தலைக்கு.

தமிழர் தமிழ்த்தேசியத்தை நிலைநிறுத்தியும், சிங்களவர் பொருளாதாரத்தை மையப்படுத்தியும் வாக்களித்து உள்ளார்கள் என சும்மா உங்கள் திருப்திக்கு எழுதி மகிழுங்கள். 😁

விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பதை நிறுவுவதற்கு இனி ஆளாளுக்கு புதிய சமன்பாடுகளுடன் ஆய்வுக்கட்டுரைகளை அவிப்பார்கள். 

பாராளுமன்ற தேர்தல் வரும்போது இன்னும் அதிக அதிர்ச்சிகள் கிடைக்கலாம்.

எங்கையிருந்து இந்தக்காசு வந்தது? 
ஏன் குவாடரையும் கோழிப்புறியாணியையும் மறந்துவிட்டார்கள்?  
வெற்றிலையை வைத்து குழதைமேல் சத்தியம் வாங்கினார்களா?

இனிமேல் தமிழ்நாட்டு மக்களை விமர்சிக்க எவருக்கும் யோக்கியதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text

  • கருத்துக்கள உறவுகள்

அநுர குமார வென்றதில் மகிழ்ச்சி! இலங்கையில் ஏற்படும் மாற்றம் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்களிப்பில்லாமல் நிகழவேண்டும் என்பது எனது விருப்பம். இப்ப சஜித் வென்றிருந்தால் அவர்கள் 5 இற்கு மேற்பட்ட அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்பர்கள்.

அடுத்தது ரணிலின்  படுதோல்வி!  2002 இல் சமாதான காலத்தில் நரித்தனமாக புலிகள் அமைப்பை பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால். இவரின் சனாதிபதிக் கனவு 2005 இலேயே நனவாகியிருக்கும்.  இப்ப தானும் அழிந்து கட்சியையும் அழித்து, சுதந்திரக் கட்சியையும் அழித்து கேவலப்பட்டு நிற்கின்றார். இவர் எப்போதும் பின்கதவால் வந்த சனாதிபதியாகவே இலங்கை வரலாற்றில் பார்கப்படுவார்.

அடுத்து பப்பாவில் ஏறிய அரியம்.  வடக்கு கிழக்கு தமிழர் சங்கை அழகாக எடுத்து இனிமையாக ஊதியிருக்கிறார்கள். 😂

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன் மாஸ்டரின் அடுத்த கட்டுரைத் தலைப்பு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நிலாந்தன், யதீந்திரா, சோதிலிங்கம், தமிழரசு என்றொரு வரிசையை நான் கண்டேன் அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல இன்று நானும் ஏமாந்தேன்!😂

  • கருத்துக்கள உறவுகள்

அரியநேந்திரனுக்கு வடக்கில் (யாழ்ப்பாணம் - வன்னி தேர்தல் தொகுதிகளில்) கிடைத்த வாக்குகளாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 65 வாக்குகளை பெற்றிருக்கிறார்... இவருக்கு எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள வாக்குகள் 4 லட்சத்து இரண்டாயிரத்து 228… தமிழ் பொதுவேட்பாளருக்கு வழங்கிய வாக்குகளைவிட தமிழ் மக்கள் சிங்களக் கட்சியினருக்கு வழங்கியுள்ள வாக்குகள் கிட்டத்தட்ட முன்று மடங்கு அதிகம்… 

 கிளிநொச்சியில் (யாழ்ப்பாணத்தில்தான் கொஞ்ச முஸ்லீம் சிங்கள மக்கள் இருக்கிறார்கள் ஆனால் கிளிநொச்சியில் தூய தமிழ் ஏரியா) தமிழ்ப் பொது வேட்பாளரைவிட (20348) சிங்களக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகள் இரண்டு மடங்கு அதிகம் (40558)..

ஒவ்வொரு தொகுதியிலும் இதுதான் நிலமை…

அவ்வளவு பந்தி எழுத்துக்கள் இணைய பத்திரிகை பிரச்சாரங்கள் புலம்பெயர்ஸ் பலரின் ஆதரவு நிதிபங்களிப்பு பிரச்சாரம், பெரிய தமிழ் அரசியல்கட்சிகள் பலவற்றின் அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பிரச்சாரம் இவற்றுடன் வலம் வந்து அரியம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுகையில் எந்தப் பிரச்சாரமும் செய்யாத - யாருமே ஆதரவளிக்காத - சிவாஜிலிங்கம் 2019 தேர்தலில் பெற்ற வாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம்... வடக்கு கிழக்கிலுள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்குகளில் அரைவாசிக்கு மேலாவது எடுத்திருக்கவேண்டாமா அரியம்? இவரைவிட சிவாஜி  பெற்றவாக்குகள் 12 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் தர்மப்படி அதிகம்..

பொதுவேட்பாளர் கோமாளிகள் இல்லாவிட்டால் அனுராவின் வெற்றி கடினமாகி இருந்திருக்கும்.. அனுரா தரப்பு யுத்தத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதது.. யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று தரப்பையும் அரசியலில் இருந்து அகற்றியாச்சு.. 

இனிமேல் ஆட்சியில் இருப்பவர்களை போரின் பங்காளிகளாக விரல்காட்டி நீதிகோரும் அழுத்தங்களை வழங்கமுடியாது…

சிங்களத் தரப்பினர் தமிழர்கள் விடயம் உட்பட சகலதிலும் புதிய அணுகுமுறையோடு களத்திற்கு வந்திருக்கிறார்கள்…

யுத்தமும் அதன் பின் நீண்ட ஒன்றரை சகாப்தமும் முடிந்து இப்பொழுது சிங்களதேசம் கடந்தகால யுத்தங்களை, வெற்றிகளை பேசி உசிப்பேத்த முடியாத( ஏனெனில் அதில் பங்கெடுக்காத படியால்) ஒருதரப்பை ஆட்சியில் அமர்த்தி இருக்கிறது..

இவர்களுக்கும் கடந்தகால போருக்கும் போர்க்குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சர்வதேசத்துக்கும் தெரியும்..

ஆக இன்று பெரும் இக்கட்டில் மாட்டியிருப்பது தமிழர் தரப்பு… மாட்டவைத்ததில் பொதுவேட்பாளர் கோமாளிகளின் பங்கும் உண்டு.. 

தமிழ் தேசியத்தின் வீழ்ச்சிக்கான முதல் ஆணியை பொதுவேட்பாளர் கூட்டம் அடிச்சு விட்டிருக்கு..

அது இருக்க இங்கு யாழில் பொதுவேட்பாளருக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இவர்கள் பொதுவேட்பாளர்கள் தரப்பு சந்திக்கப்போகும் சர்வதேசம் யார் என்று சொல்லிட்டு போங்க… யார் யார் அந்த செய்தியை கொண்டு போகப்போறாங்க..?

இந்த பொதுவேட்பாளர் கூட்டே இந்த தேர்தலுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு சேர்ந்த கூட்டு.. இன்றுடன் அந்த ஒப்பந்தங்களும் காலாவதியாகின்றன.. இனிமே இந்த பொதுவேட்பாளர் கூட்டில் யார் இருப்பார்கள்..? அதன் எதிர்காலம்..??

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

குளத்தோடு கோவித்துக்கொண்டு  குண்,... கழுவாவிட்டால் நட்டம் குளத்துக்கல்ல.

 கழுவாதவன் நாறிப்போய்விடுவான். குழமும் வற்றிச் செல்கிறது,.. .☹️

ஒரு விடயம் தொடர்பாக இது சரிவராது, இது சரிவராது என்று ஒருவர் அடிக்கடி சொல்கிறார் என்றால், அது சரிவராது என்று அர்த்தம் அல்ல. அது சரிவரக்கூடாது என்பது அவரது விருப்பமாகவும், தெரிவாகவும் இருக்கிறது என்று அர்த்தம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.