Jump to content

யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Anura-Kumara-Dissanayake-1.png

 

யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!!

#முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.

#பிறப்பு – 1968.11.24.

#பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.

#ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.

#உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.

குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.

1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.

#அரசியல் வாழ்க்கை!

#1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

#1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

#1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.

#2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

#2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.

#2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

#2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு….

#2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.

#2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.

#2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.

#ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

#அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.

#2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.

#2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

உண்மை உரைகல்

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தேர்தல் ஆணைக்குழுவின் கைகளில் அநுர குமாரவின் பதவியேற்பு 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என கணிக்கப்படும் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப் பிரமாண நிகழ்வு குறித்து தேசிய மக்கள் சக்தி (NPP) இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake), தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளதாக கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு விழா ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு விழாவை ஜனாதிபதி செயலகத்தில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்விற்கான திகதி மற்றும் நேரத்தை தீர்மானிக்கும் அதிகாரம் கட்சிக்கு இல்லை என தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல்களின் இறுதி முடிவுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்தார். பதவியேற்பு விழா இன்று மாலை நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்பது தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இறுதி முடிவுகளை அறிவித்த பிறகே முடிவு செய்யப்படும்.  பதவியேற்பு நேரம் தேசத்திற்கு மங்களகரமான நேரமாக இருக்கும்,'' என்றார். இறுதி முடிவு வெளிவந்த பின்னரே முடிவு வாக்கு எண்ணிக்கையின் வெளிப்படைத்தன்மை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகத் தெரிவித்த ரத்நாயக்க, தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுவது, இது வழக்கமான நடைமுறை என்பதால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். https://ibctamil.com/article/bimal-rathnayake-speaks-akd-s-swearing-in-plans-1726991747
    • @ரசோதரன் அண்ணை உங்க ஆசை நிறைவேறிவிட்டது!! இரண்டாம் சுற்று எண்ணப்படுகிறது.....
    • https://www.bbc.co.uk/news/articles/clyznjz3d78o Sri Lanka election goes to historic second count
    • அரியத்தாருக்கு 32 வீத வாக்களித்து நல்லூர் முதல் மரியாதை. 
    • ஜனாதிபதி தேர்தலில் திருப்பு முனை! இரண்டாம் விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்   புதிய இணைப்பு ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரின் அறிவிப்பு தாமதமாகலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணியை தேர்தல் ஆணையகம் ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் விருப்பு வாக்கு எண்ணப்படுமென தோ்தல் ஆணையாளா் தொிவித்தாா். இதன் காரணமாக வெற்றியாளரின் அறிவிப்பு இன்று பிற்பகல் அல்லது நாளை முற்பகல் வரை தாமதமாகலாம் என்றும் நம்பப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையேயான வாக்கு எண்ணிக்கை இடைவெளி குறைவடைந்து வருகிறது.  அத்துடன் வாக்குகள் 50.1 சதவீதத்தை எட்டாது என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகளை எண்ணும் பணி நடைபெற வேண்டும். எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளார் என்று தேர்தல் ஆணையகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கிடல் எப்படி நடக்கும்? 2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத்தேவையான ஐம்பது வீத வாக்குகளைப் பெறமுடியாது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரைத் தவிர மற்றவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அரசியலமைப்புச் சட்டத்தின்படி, எண்ணிக்கையின் முடிவில் எந்த வேட்பாளரும் 50% ஐ எட்டாதபோது, முதல் 2 வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் நீக்கப்பட்டு, நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டில் 2வது முன்னுரிமை எண்ணப்பட்டு, இரண்டு முன்னணி வேட்பாளர்களுடன் சேர்க்கப்படும்.  2வது விருப்பத்தேர்வுகள் நீக்கப்பட்ட மற்றொரு வேட்பாளருக்குக் குறிக்கப்பட்டிருந்தால், மூன்றாவது விருப்பத்தேர்வுகள் கணக்கிடப்பட்டு, முதல் இரண்டில் ஒருவருக்குப் போட்டால் அவை சேர்க்கப்படும்.  இறுதி வெற்றியாளர் இருவரில் அதிக எண்ணிக்கையைப் பெற்ற வேட்பாளர் ஆவார். பத்து சதவீத இடைவெளியைக் கருத்தில் கொண்டு, விருப்பத்தேர்வு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. ஆனால் இறுதி அறிவிப்புக்கு முன் இதற்கான செயல்முறை முடிக்கப்பட வேண்டும்.  முதலாம் இணைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி முடிவுகள் இன்று மாலைக்குள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளையும் மேலும் ஒரு வாக்குகளையும் அதிகமாக பெற்றிருக்க வேண்டும் ஒரு வேட்பாளர் அந்த சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், விருப்பு வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.   தேர்தல் முடிவுகள் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி யார் என்பது தொடர்பில், நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,200ஐ தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/election-total-voting-results-as-of-this-evening-1726982426
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.