Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

226,343 வாக்குகளைப் பெற்றார் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Published By: VISHNU   22 SEP, 2024 | 07:41 PM

image

(நா.தனுஜா)

  • வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களில் யாழில் இரண்டாம் இடம்
  • ஏனைய மாவட்டங்களில் மூன்றாம், நான்காம் இடங்கள்
  • ஒப்பீட்டளவில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவு வாக்குகள்

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் வட, கிழக்கு தமிழ் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது செல்லுபடியான வாக்குகளில் 1.70 சதவீதமாகும்.

மிகக்காத்திரமானதாகக் கருதப்பட்ட இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த சில தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறக்கியிருந்தன.

தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்குக் கூறும் நோக்கில் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இப்பொதுவேட்பாளர் வட, கிழக்கு மாகாணங்களில் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்துக்கு மேல், அதாவது சுமார் 700,000 வாக்குகளைப் பெறவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் போட்டித்தன்மை மிக அதிகமான இத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மொத்தமாக 226,343 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதன்படி அவர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 116,688 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 36,377 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 31.39, 16.74 சதவீதம் ஆகும்.

அதேபோன்று அரியநேத்திரன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 18,524 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 36,905 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 9.985 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்திலும் இருக்கிறார். அவரால் பெறப்பட்ட இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 7.74, 11.58, 2.36 சதவீதம் ஆகும்.

 மேலும் அரியநேத்திரன் வட, கிழக்கு மாகாணங்களில் தொகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளை நோக்குகையில் வடக்கில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170 வாக்குகளையும், காங்கேசன்துறையில் 5,726 வாக்குகளையும், மானிப்பாயில் 11,587 வாக்குகளையும், கோப்பாயில் 11,410 வாக்குகளையும், உடுப்பிட்டியில் 8,467 வாக்குகளையும், பருத்தித்துறையில் 8,658 வாக்குகளையும், சாவகச்சேரியில் 9,159 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

 அடுத்ததாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னாரில் 10,757 வாக்குகளையும், வவுனியாவில் 11,650 வாக்குகளையும், முல்லைத்தீவில் 12,810 வாக்குகளையும் பெற்றிருக்கிறார்.

 கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் சேருவிலில் 2,412 வாக்குகளையும், திருகோணமலையில் 11,300 வாக்குகளையும், மூதூரில் 4,381 வாக்குகளையும் பெற்றிருக்கும் அரியநேத்திரன், மட்டக்களப்பு தேர்தல் மாவட்ட்ததில் கல்குடாவில் 10,890 வாக்குகளையும், மட்டக்களப்பில் 12,758 வாக்குகளையும், பட்டிருப்பில் 12,356 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். 

மேலும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டததில் அம்பாறையில் 28 வாக்குகளையும், சம்மாந்துறையில் 2,299 வாக்குகளையும், கல்முனையில் 2,623 வாக்குகளையும், பொத்துவிலில் 4,802 வாக்குகளையும் அரியநேத்திரன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/194550

  • Replies 109
  • Views 6.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெ

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை க

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை..  இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்த முட்டாப்பயல் எழுதுறான்👇

//

தேர்தல் முடிவு அறிவிக்க தொடங்கியதிலிருந்து முடிவு வரை ஒரு தமிழனின் பெயரும் அங்கே இருந்தது . 

#பா_அரியநேத்ரன்//

ஏண்டா முட்டாப்பயலுகளா இதுக்காடா அரியத்தை நிப்பாட்டின்னியள்..?

கடைசியாகக் கண்டது அது  ஒண்டுதான்.. பைத்தியங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண மாவட்டத்தில் 31 வீதம், வன்னி மாவட்டத்தில் 16 வீதம்,  தமிழர்கள் வாழும் 

திருகோணமலை தேர்தல்  தொகுதியில் 15 வீதம், திருமலை மாவட்டம் முழுவதும் 7 வீதம்,  அரியத்தின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் 11.5 வீதம் பெற்ற பொது வேட்பாளர்  எதைச் சர்வதேசத்துக்கு சொல்லப் போகிறார்?  

வெறும் உசுபேற்றல்களும் வீராப்பு  பேச்சுக்களும் என்றுமே அரசியல்  தீர்வை நோக்கிய நகர்வுக்கு உதவப்போவதில்லை. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

யாழ் கள டமில் தீவீர டமில் தேசியவாதிகளே இந்தப் பக்கத்தை பார்ப்பதில்லை போல கிடக்குது,..😁

அரியத்தின் வாக்குகளை சஜத்தும் ரணிலும் திருடி அவரை தோற்கடித்துவிட்டார்கள் என்று உருட்டினாலும் உருட்டுவார்கள். 😂  எலாக்கட்டத்தில் அப்படி உருட்டுவதும் வாடிக்கை தான். 😂😂

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக நின்றிருந்தால் 50 வீதம் சாத்தியமே. ஆனால்!??!

இனி அது சாத்தியமே இல்லை என்பதை இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

வடக்கு கிழக்கு வாக்காளர் எண்ணிக்கை:

2, 220, 311

செலுத்திய வாக்குகள் எண்ணிக்கை:

1, 626, 457

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:

55994

செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை: 1,570,463

அரியத்துக்கு கிடைத்தது: 218,479

சத விகிதம்:9.84

மொத்தத்தில் அரியத்தைத் தூக்கி கடாசியாகிவிட்டது.

JVP இனி மிகவும் சிம்பிளாகச் சொல்லும்,......  ஒரே நாடு ஒரே மக்கள். No 13 No 13 A or B ....... No வடக்கு கிழக்கு இணைப்பு,....

எந்த முகத்தோடு எம் அரசியல் வியாதிகள் இவர்களிடம் போவார்கள்? 

9 minutes ago, விசுகு said:

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக நின்றிருந்தால் 50 வீதம் சாத்தியமே. ஆனால்!??!

இனி அது சாத்தியமே இல்லை என்பதை இதிலிருந்தாவது புரிந்து கொள்ள வேண்டும். 

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

மொத்தத்தில் அரியத்தைத் தூக்கி கடாசியாகிவிட்டது.

JVP இனி மிகவும் சிம்பிளாகச் சொல்லும்,......  ஒரே நாடு ஒரே மக்கள். No 13 No 13 A or B ....... No வடக்கு கிழக்கு இணைப்பு,....

எந்த முகத்தோடு எம் அரசியல் வியாதிகள் இவர்களிடம் போவார்கள்? 

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

உங்களின் இந்த இரண்டு கருத்துக்களும் முரணாக உள்ளதே?

பொதுவேட்பாளர் தோற்றதால் இனி Jvp ஒன்றும் தராது எனும் நீங்கள் 50% எடுத்தாலும் பயன் இல்லை என்கிறீர்கள்?

Jvp தமிழர்களுக்கு எதுவும் செய்வதாக உறுதியளிக்கவில்லை…

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

50% ஐ எடுத்திருந்தால்கூட அந்த வாக்குகளால்  பயன் ஏதும் இல்லையே,..🥺

இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்.  தங்களது இரண்டுமாத Entertainment  காகவே இவர்கள் இதை செய்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, island said:

இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்.  தங்களது இரண்டுமாத Entertainment  காகவே இவர்கள் இதை செய்தார்கள். 

அப்படியானால் எப்போ சாத்தியம் என்று தாங்கள் சொல்லுணும் இல்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

உங்களின் இந்த இரண்டு கருத்துக்களும் முரணாக உள்ளதே?

1) பொதுவேட்பாளர் தோற்றதால் இனி Jvp ஒன்றும் தராது எனும் நீங்கள்

2) 50% எடுத்தாலும் பயன் இல்லை என்கிறீர்கள்?

1) தோற்றதால் அல்ல, எமது மக்கள் பிரிந்து நின்று ஒரு பகுதியினர்   JVP க்கு வாக்களித்ததால். 

2) அரியத்தார் 100% எடுத்திருந்தால் கூட பயனில்லை. ஏனென்றால் அவர் MP போல  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதி அல்ல. 

சரியோ பிழையோ நாம் யாருக்கு ஆதரவளித்திருந்தாலும்  எல்லோரும் ஒருசேர நின்றிருக்க வேண்டும். அதுதான் எமது பலம். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அப்படியானால் எப்போ சாத்தியம் என்று தாங்கள் சொல்லுணும் இல்லையா???

சாத்தியமே இனி இல்லை. இலங்கையில் சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் தமிழ் சிங்கள மக்கள் இருவரும் இணைந்தே அதை சாத்தியமாக்க முடியும். ஒருவரை ஒருவர் பாரிய சந்தேக கண்ணுடன் அச்சத்துடன்  பார்ககும் நிலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள்.  தங்களது இரண்டுமாத Entertainment  காகவே இவர்கள் இதை செய்தார்கள். 

அடுத்த பொதுத் தேர்தலில் சஜித்தும் JVP யும் சேர்த்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம். 

பார்ப்போம் எமது அரசியல் வியாதிகள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று,. 😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுகட்சி ஆதரவு தெரிவித்து வென்ற சஜித் ,தேர்தலை புறக்கணிக்க சொன்ன  கட்சியின் ஆதரவாளர்களின் வாக்கு என பார்த்தால் தமிழ் தேசியம் வடக்கு கிழக்கில் இன்னும் நிலைத்து நிற்கின்றது .....

நடை பெற்ற சகல ஜனாதிபதி தேர்தலிலும் வடக்கு கிழக்கு மக்கள் வெற்றியடைந்த ஜனாதிபதிக்கு வாக்கு போடாமல் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்....இட் சில சிறிலங்கா தேசிவாதிகளுக்கு சகிக்க  முடியாத விடயம் ..தமிழ் வாக்காளர்கள் என்றும் நிதானமாக சிந்தித்து செயல் படுகின்றனர்...

36 minutes ago, விசுகு said:

அப்படியானால் எப்போ சாத்தியம் என்று தாங்கள் சொல்லுணும் இல்லையா???

மேற்கில் சூரியன் உதிக்கும் பொழுது ......

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

சாத்தியமே இனி இல்லை. இலங்கையில் சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் தமிழ் சிங்கள மக்கள் இருவரும் இணைந்தே அதை சாத்தியமாக்க முடியும். ஒருவரை ஒருவர் பாரிய சந்தேக கண்ணுடன் அச்சத்துடன்  பார்ககும் நிலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமே இல்லை. 

அப்படியானால் சாத்தியம் அற்ற ஒன்றை என் பிள்ளையிடம் எப்படி நான் கடத்த முடியும்,??

சாத்தியமே அற்ற ஒன்றை சாத்தியமற்றது என்று அரியம் நிரூபித்து விட்டார் என்பதற்காக நீங்கள் ஏன் பொங்க வேண்டும்?? அப்படியானால் பொய்யர் நீங்கள் தானே????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு பொதுவேட்பாளருக்கு முட்டுக்குடுத்த முட்டாப்பயல் எழுதுறான்👇

//

தேர்தல் முடிவு அறிவிக்க தொடங்கியதிலிருந்து முடிவு வரை ஒரு தமிழனின் பெயரும் அங்கே இருந்தது . 

#பா_அரியநேத்ரன்//

ஏண்டா முட்டாப்பயலுகளா இதுக்காடா அரியத்தை நிப்பாட்டின்னியள்..?

கடைசியாகக் கண்டது அது  ஒண்டுதான்.. பைத்தியங்கள்...

அதுசரி, அரியத்தை நிற்பாட்டியிராவிட்டால் பின்கதவு சுமந்திரன் தயவுடன் சஜித் ஜனாதிபதியாக வந்திருப்பார் அப்படித்தானே. அனுராவிற்கு, அரியத்திற்கு ஆதரவு கொடுத்தோரிடம் அவ்வளவு கோபம் இருக்காது. ஆனால் சஜித்துக்கும் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தோரை வச்சு  செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் கண்டது.. எழுதிய  வித்துவானைத் தெரியாது..

—-

அனுரவின் வெற்றியும் தமிழரசுக் கட்சி ஆதரித்த சஜித்தின் தோல்வியும்.

அனுரகுமாரவின் வெற்றி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதில் குத்திமுறிய ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே அனுர வெற்றிபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில், தமிழ் பொது வேட்பாளருக்கான திருகோணமலை கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது நடந்திருக்கின்றது. ஆனால் நாங்கள் கணித்தது போன்றே அனுரகுமார திசாநாயக்க ஜம்பது விகித ஆதரவில்லாமல் வெற்றிபெற்றிருக்கின்றார். இந்த அடிப்படையில், ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக அனுர பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரல்ல. ஒரு தோல்வியடைந்த வேட்பாளராகவே அவர் ஜனாதிபதியாகியிருக்கின்றார். எனவே அவரால் அதிகம் எதனையும் செய்துவிட முடியாது. முக்கியமாக அவர் தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்தப்போவதில்லை. ஒரு வேளை சஜித் வென்றிருந்தாலும் இதே நிலைமைதான்.

தமிழ் தேசிய நிலைப்பாடு, தேசமாக சிந்தித்தல் என்னும் நிலைப்பாட்டின் கீழ் நோக்கினால், தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு திருப்திகரமானதல்ல. சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகளை கூட்டினால் தமிழ் நிலைப்பாடு என்று, நாங்கள் குறிப்பிடும் விடயங்களுக்கு வெளியில்தான் அதிக மக்கள் இருக்கின்றனர். உண்மைகளை புறம்தள்ளி எப்போதும் சிந்திக்கக் கூடாது. ஆனால் பல்வேறு உள் எதிர்ப்புக்கள், உட் சதிகளுக்கு மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் திருப்தியை தருகின்றது. அனைத்து தமிழ்த் தேசிய தரப்புக்களும் ஒன்றிணைந்து, ஒரு இலக்கில் செயற்பட்டிருந்தால், நான்கு லட்சத்திற்கு மேலான வாக்குகளை தொட்டிருக்க முடியும். ஆனால் இது ஒரு படிப்பினை. அதே வேளை, இவ்வாறானதொரு அணுகுமுறை சாத்தியம் என்பதை, செயலால் நிரூபித்திருக்கின்றோம். ஆரம்பத்தில் எங்களுடைய முயற்சியை ஏளனமாக நோக்கிய ராஜதந்திர தரப்புக்களுக்கும் ஒரு செய்தி சொல்லப்பட்டிக்கின்றது. 

சஜித் பிரேமதாசவை ஆதரிக்கச் சொன்னவர்கள் மோசமான தோல்வியை சந்தித்திருக்கின்றனர். ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பதாக கூறிய சுமந்திரன் தரப்பு, இறுதியில் தென்னிலங்கையில் தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கூறியதில் என்ன புத்திசாலித்தனம் உண்டு? 
ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக வாக்குகளை தருமாறு கோரிய பொது வேட்பாளரரை நிராகரித்து, தோல்விடையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததில் என்ன பெருமையுண்டு. தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்தனமாகத்தான் சிந்திப்பார்கள் என்பதைக் காண்பித்ததை தவிர வேறு என்ன நடந்திருக்கின்றது?  

தமிழரசு கடச்சியின் மத்திய குழுத் தீர்மானம் முட்டாள்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் குகதாசனுக்கு பங்கில்லை என்றால், அதனை பொது வெளிகளில் குறிப்பிடும் வல்லமையை காண்பிக்க வேண்டும். பொது வேட்பாளர் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருப்பார் - இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் இனி எதைச் சொல்வார்கள்? அதே போன்று, முட்டாள்தனமாக சிந்திப்பதில் பிரபல்யமான கஜாக்களின் அணியான சைக்கிள் அணியினரின் தமிழ்த் தேசியமும் புஸ்வானமாகிவிட்டது. 

சஜித் பிரேமதாசவை ஆதரித்ததில் என்ன நன்மையுண்டு? பகிஸ்கரிப்புக் கதையில் என்ன நன்மையுண்டு? சஜித்திற்கு வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு வேளை, சஜித்தான் வெற்றிபெறப் போகின்றார் என்னும் எண்ணத்தில் வாக்களித்திருக்கலாம் ஆனால் ஒரு தோல்வியாளருக்கு வாக்களித்ததன் மூலம் மீண்டும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதியற்றுப் போயிருக்கின்றது. அந்த வாக்குகளை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்திருந்தால், அந்த வாக்குகளுக்கு ஒரு பெறுமதியிருந்திருக்கும். சிங்கள மக்கள் மத்தியில் நிலவும் அரசியல் விழிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. விடுதலைப் புலிகளை அழித்ததாக மார்தட்டிக் கொண்டிருந்த ராஜபக்ச குடும்பத்தை, சிங்கள மக்கள் இப்போது எந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றனர்? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான். கட்சி மற்றும் தனிநபர்களை புறம்தள்ளி தமிழ் மக்கள் தங்களின் சொந்தப் புத்தியில் இயங்க வேண்டும். 

இந்தத் தேர்தல் முடிவுகள் எதனை உணர்த்துகின்றது? சிங்கள பெரும்பாண்மைக்குள் எழுச்சி ஏற்பட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையற்றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. 2019இலும் இது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் 2024இல் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அனுரகுமார ஜம்பது விகிதத்தை பெறாத போதிலும் கூட, சிங்கள மக்களின் தனி ஆதரவில் வெற்றிபெற்றிருக்கின்றார். தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற சஜித்திற்கும் அனுரவிற்கும் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசம். 

தமிழ் மக்கள் பொதுச் சபை மற்றும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு என்பது சர்வலோக நிவாரணியல்ல – அனைத்தும் குறைபாடுகள் உள்ள அமைப்புக்கள்தான். யுத்தத்திற்கு பின்னர் தோற்றம் பெற்ற அனைத்து அமைப்புக்களும் குறைபாடுகள் உள்ளவைதான். முன்னர் இருந்தவையும் புனித அமைப்புக்கள் அல்ல. அங்கும்குறைபாடுகள் ஏராளம். ஆனால் முடிந்தவரையில் ஒரு விடயத்தை செய்வதற்காக ஒன்றுபடுதல் என்பதிலிருந்துதான் முன்னேற்றங்களை நோக்க வேண்டும். செயலால்தான் குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மனிதர்களால் உருவாக்கப்படும் அனைத்திலும் மனிதர்களின் பலவீனங்களின் நிழல் தொடரும்தான். 

அனுரவை ஆதரித்த சிங்கள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துத்தான் திரண்டிருக்கின்றனர். இப்படித்தான 2019இலும் திரண்டனர் இறுதியில் ஏமாற்றமடைந்தனர். அந்த ஏமாற்றம் அவர்களுக்கு மீண்டும் கிடைக்குமா? அனுரவின் இலங்கைகையும் பார்ப்போம். அறகலயவில் கொடிபிடிப்பது இலகுவானது ஆனால் நாட்டை கொண்டு நடத்துவது?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

வாட்ஸப்பில் கண்டது.. எழுதிய  வித்துவானைத் தெரியாது..

யதீந்திராதான் எழுதிய வித்துவான்!

https://www.facebook.com/share/JXanQwQr5LuWsQiY/?mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

அப்படியானால் சாத்தியம் அற்ற ஒன்றை என் பிள்ளையிடம் எப்படி நான் கடத்த முடியும்,??

சாத்தியமே அற்ற ஒன்றை சாத்தியமற்றது என்று அரியம் நிரூபித்து விட்டார் என்பதற்காக நீங்கள் ஏன் பொங்க வேண்டும்?? அப்படியானால் பொய்யர் நீங்கள் தானே????

அரியமோ அவரை களத்தில் இறக்கிய நிலாந்தினோ யதீந்திராவோ எதையும் நிரூபிக்கவில்லை. அவர்களை நிராகரித்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.😂 

46 minutes ago, Eppothum Thamizhan said:

அதுசரி, அரியத்தை நிற்பாட்டியிராவிட்டால் பின்கதவு சுமந்திரன் தயவுடன் சஜித் ஜனாதிபதியாக வந்திருப்பார் அப்படித்தானே. அனுராவிற்கு, அரியத்திற்கு ஆதரவு கொடுத்தோரிடம் அவ்வளவு கோபம் இருக்காது. ஆனால் சஜித்துக்கும் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தோரை வச்சு  செய்ய சந்தர்ப்பம் இருக்கிறது.

ஓகே சரி. சஜித்துக்கு ஆதரவளித்த சுமந்திரனை அனுரா வச்சு செய்யட்டும். நமக்கென்ன அதில் வந்தது.😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழரசுகட்சி ஆதரவு தெரிவித்து வென்ற சஜித் ,தேர்தலை புறக்கணிக்க சொன்ன  கட்சியின் ஆதரவாளர்களின் வாக்கு என பார்த்தால் தமிழ் தேசியம் வடக்கு கிழக்கில் இன்னும் நிலைத்து நிற்கின்றது .....

இந்த வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில்தானா தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா எனக் கணிப்பீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு தமிழ்தேசியம் பற்றி எள்ளளவும் கவலையில்லை.  சுமந்திரன் இவர்களின் பேச்சுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிப்பதில்லை எனவே சுமந்திரனுக்கெதிராக தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல பல வடிவங்களில் பலிக்கடாக்களை அனுப்புகின்றார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபடுவதுதான் மிச்சம். ஆனால் சுமந்திரனோ அந்த வேதாளம் போல இந்த விக்கிரமன்களை எள்ளி நகையாடுவதும் வழக்கம். தமிழ்த் தேசியம் என்பது இந்த விக்கிரமன்களுக்கும் வேதாளத்துக்கும் இடையில் பிணம்போல் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது! இனி அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது விக்கிரமன்கள் புதிய அவதாரம் எடுத்துவிடுவார்கள் ஆனால் அந்த வேதாளமோ ஒன்றுதான்!👀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை தோற்கடிப்பதாக கூறிய சுமந்திரன் தரப்பு, இறுதியில் தென்னிலங்கையில் தோல்வியடையப் போகும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கூறியதில் என்ன புத்திசாலித்தனம் உண்டு? 
ஒரு கொள்கை நிலைப்பாட்டுக்காக வாக்குகளை தருமாறு கோரிய பொது வேட்பாளரரை நிராகரித்து, தோல்விடையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்ததில் என்ன பெருமையுண்டு. தமிழ் மக்கள் தொடர்ந்தும் முட்டாள்தனமாகத்தான் சிந்திப்பார்கள் என்பதைக் காண்பித்ததை தவிர வேறு என்ன நடந்திருக்கின்றது?  

தமிழரசு கடச்சியின் மத்திய குழுத் தீர்மானம் முட்டாள்தனமானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் குகதாசனுக்கு பங்கில்லை என்றால், அதனை பொது வெளிகளில் குறிப்பிடும் வல்லமையை காண்பிக்க வேண்டும். பொது வேட்பாளர் கணக்கிலெடுக்கப்படாத ஒருவராக இருப்பார் - இருக்க வேண்டும் என்று கூறியவர்கள் இனி எதைச் சொல்வார்கள்? அதே போன்று, முட்டாள்தனமாக சிந்திப்பதில் பிரபல்யமான கஜாக்களின் அணியான சைக்கிள் அணியினரின் தமிழ்த் தேசியமும் புஸ்வானமாகிவிட்டது. 

வித்துவான் எழுதியதில் இது தான் சும்மா நச் என்று இருக்கு 
கூத்தமைப்பு தோற்றுப்போகும் அரசியல் வியாதிகளை டமிலர் தலையில் கட்டுவதற்கு பெயர்போனது 
இப்படி டமிளர்கள் தோற்றுகொண்டே இருந்தால்தான் அவர்களது வண்டியை ஓட்டலாம். அம்பிகா ஆன்டி ஒரு சீட்டு எடுத்து பாராளுமன்றம் போவதற்கு முதல் டமில் தேசிய கூத்தமைப்பு மொத்த கூடாரமும் காலியாகிவிடும்போல. அம்பிகா அன்றியும் ப்லோட்டி இடியட்ஸ் என்று ஏசிவிட்டு அவுஸிற்கு நடையை கட்டவேண்டியதுதான்    

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இந்த வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில்தானா தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டதா எனக் கணிப்பீர்கள்? 

நிச்சமாக வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இல்லை என்பது எனது நிலைப்பாடு..
இனவாத நாட்டில் 5ஒ வருடமாக தமிழ்தேசியம் நிலைத்து நிற்பது பெரிய சாதனை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா ஆன்டி ஒரு சீட்டு எடுத்து பாராளுமன்றம் போவதற்கு முதல் டமில் தேசிய கூத்தமைப்பு மொத்த கூடாரமும் காலியாகிவிடும்போல. அம்பிகா அன்றியும் ப்லோட்டி இடியட்ஸ் என்று ஏசிவிட்டு அவுஸிற்கு நடையை கட்டவேண்டியதுதான்    

வருகின்ற எலக்சனில் அம்பிகா ஆன்ரி பாராளுமன்றம் போகவேண்டும். ☺️

1 hour ago, putthan said:

நிச்சமாக வாக்காளர் எண்ணிக்கையில் தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இல்லை என்பது எனது நிலைப்பாடு..
இனவாத நாட்டில் 5ஒ வருடமாக தமிழ்தேசியம் நிலைத்து நிற்பது பெரிய சாதனை

அரியம் மட்டக்களப்பில் முழுக்க முழுக்க தமிழர்கள் உள்ள பட்டிருப்புத் தொகுதியில் கூட நான்காவதாகத்தான் வந்தார்! கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியம் முற்றாகவே காணாமல் போய்விட்டது. வன்னியிலும், வடக்கிலும் ஊசலாடுகின்றது. இப்போதைய அரசியல் தலைமை எப்படியும் விரைவில் கொள்ளி வைத்துவிடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.