Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இஸ்ரேல் - ஹெஸ்பொலா
படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • 23 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான்.

2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.

முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.

ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார்.

ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.

ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மூத்த தளபதியின் இறுதிச் சடங்கில் ஹெஸ்பொலா துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம்.

கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்?

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலாவின் உயர்மட்ட தளபதி இப்ராஹிம் அகில் என்பவரின் இறுதிச் சடங்கில் அவர் கூறுகையில் : "நாங்கள் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம். இஸ்ரேல் செய்த எல்லாவற்றிருக்கும் திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது” என்றார்.

ஷேக் நதீம் காசிம் துக்கம் அனுசரிப்பவர்களிடம், "இஸ்ரேல் அதன் நோக்கங்களில் எதையும் நிறைவேற்றவில்லை. கடந்த மூன்று நாட்களாக, ஹெஸ்பொலா தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது" என்றார்.

இஸ்ரேல் குடியிருப்பாளர்கள், நாட்டின் வடக்கில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய அவர், ஹெஸ்பொலாவின் எதிர்ப்பையும் காஸாவுடனான தொடர்பையும் உடைக்க இஸ்ரேல் தவறிவிட்டது என்றும் கூறினார்.

இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள்.

இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது.

இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகில் தலைக்கு $7 மில்லியன் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்?

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார்.

“லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார்.

போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார்.

ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது.

தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஹைஃபாவின் பிரதான மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்

சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை

சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது.

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

"இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது.

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதிகரித்து வரும் மோதல்

இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

இரான் ஆதரவு குழுவான இராக் இஸ்லாமிய எதிர்ப்பு குழு, இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தியதாக கூறியது.

பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார்.

இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது.

பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

AFP__20240228__34KE8DQ__v3__Preview__Isr

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு!

லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான மற்றும் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் உயிரிழந்துள்ளனர்

இதேவேளை நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 35 சிறுவர்கள், 58 பெண்கள் மற்றும் இரண்டு மருத்துவர்களும் அடங்குகின்றனர்.

தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான லெபனானியர்கள் தெற்கிலிருந்து வெளியேறினர், மேலும் 2006 மோதலுக்கு பிறகு மிகப்பெரிய மக்கள் வெளியேற்றத்தை நாடு எதிர்கொள்ளும் நிலையில் பெய்ரூட் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தெற்கு துறைமுக நகரமான சிடோனின் முக்கிய நெடுஞ்சாலையில் கடுமையான நெரிசலுக்கு முகங்கொடுத்துள்ளது

இதற்கிடையில், ஹிஸ்புல்லா 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேலில் ஏவியது என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/2024/1400828

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லெபனானில் இஸ்ரேல் உக்கிரமான வான்தாக்குதல் - 500 பேர் பலி

24 SEP, 2024 | 11:32 AM
image

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதியிலும் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதல்களில் 492 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1650க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வான்வெளித் தாக்குதல்களால் முற்றாக அழிக்கப்பட்டுள்ள கட்டிடங்களின் சிதைவுகளிற்குள்  சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்புபணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், விமான இஸ்ரேலின் தாக்குதலில் சிக்குண்ட தொலைதூர பகுதிகளிற்கு செல்ல முயல்கின்றனர் என தெரிவித்துள்ள லெபான் அதிகாரிகள் இதன் காரணமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பு கடந்த 20 வருடங்களாக கட்டியெழுப்பியிருந்த அதன் உட்கட்டமைப்புகளை  இலக்குவைத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/194675

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

"இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது.

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார்.

மனித அழிவுகளைக் கணக்கிடும் அமைப்புகளாகவும், அறிக்கையிடுவோராகவும் மட்டுமே உள்ளனர். ஆனால் போரை விவாக்கம் செய்துவரும் இஸ்ரேலைக் கட்டுபடுத்தவோ தடுக்கவோ முடியவில்லையே. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தாக்குகின்றது என்பது தவறான கருத்து. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குகின்றன என்பதே யதார்த்தம். அமெரிக்கா இல்லை எனில் இந்த தாக்குதல் இப்படி நடைபெற முடியாது.

  • Like 1
Posted

கனடாவில், ஒன்ராரியோவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் மூன்று முஸ்லிம்களை கைது செய்துள்ளனர். அதில் இருவர் தந்தையும் மகனும்.

ஏன் கைது செய்தனர்?

ஏனெனில், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ததன் ஒரு வருட நிறைவு ஒக்டோபர் 07 அன்று வருகின்றது. அன்றைய தினம், பொது மக்களை இலக்கு வைத்து மோசமான தாக்குதலை செய்ய இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். கனடாவிலும் நியியோர்க்கிலும் இந்த தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டி இருந்தனர்.

போர் எங்கோ நிகழ்ந்து கொண்டு இருக்க அதற்கு சம்பந்தமில்லாத, முஸ்லிம்களை அரவணைத்து கொண்டு அனைத்து உரிமைகளையும் வழங்கிக் கொண்டு இருக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக எவராவது முக நூல் பதிவு போட்டாலே அவரை விசாரணைக்குட்படுத்தும் கனடா மண்ணில் தான் இவர்கள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

நாம் சிங்களவர்களுடன் இலங்கை மண்ணில் போர் புரினும், அதற்கு வெளியே அவர்களை தாக்க ஒரு போதும் நினைத்தது இல்லை. அதே போன்று பஞ்சாபிகள் (ஒரு விமான குண்டு வெடிப்பை தவிர), உக்ரேனியர்கள் என்று எவரும் போர் நிகழும் பிரதேசங்களுக்கு அப்பால் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை.

ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனப்படும் பயங்கரவாதிகள்?

இங்கேயே இப்படி திட்டமிடுகின்றவர்கள், இஸ்ரேல் மே ஒரு வருட நிறைவில் தாக்குதல்களை மேற்கொள்ள கண்டிப்பாக திட்டமிட்டு இருப்பினம். முக்கியமாக ஹிஸ்புள்ளா கடும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பார்கள். 

வழக்கம் போல, இஸ்ரேல் இதனை சாதகமாக்கிக் கொண்டு தன் இனவழிப்பை லெபனானில் நிகழ்த்துகின்றது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நிழலி said:

இங்கும் அதே நிலைதான்.
போரில் சிக்கி சீரழிந்து வந்த  முஸ்லீம்களை அரவணைத்து வீடு, கல்வி, வேலை என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க… அதுகள் கத்திக்குத்து, பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல், சொந்த நாட்டுக்கு உரியவனை மதிக்காத குணம் என்று அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொள்கின்றார்கள். 😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இங்கே மட்டும் என்னவாம்.???? எல்லாத்தையும் ஒரு இடத்தில் கூப்பிட்டு விட்டு இந்த அணு சோதனையை செய்தால் தவிர....😡😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விசுகு said:

இங்கே மட்டும் என்னவாம்.???? எல்லாத்தையும் ஒரு இடத்தில் கூப்பிட்டு விட்டு இந்த அணு சோதனையை செய்தால் தவிர....😡😡

வெள்ளைக்காரன்…  இந்த விசயத்தில், முஸ்லீம்களை சரியாக கணிக்கத் தவறி விட்டான் என்றே நினைக்கின்றேன். 😥

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் அதே நிலைதான்.
போரில் சிக்கி சீரழிந்து வந்த  முஸ்லீம்களை அரவணைத்து வீடு, கல்வி, வேலை என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க… அதுகள் கத்திக்குத்து, பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல், சொந்த நாட்டுக்கு உரியவனை மதிக்காத குணம் என்று அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொள்கின்றார்கள். 😡

உண்மை, ஆனால் நாமென்ன செய்ய முடியும். வேலை செய்யும் தொழிலகத்தில் படிப்படியாகச் சிரியச் சோனகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பயமாக உள்ளது. அவர்களோடு எட்டிநின்றே பழகவேண்டியுள்ளது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nochchi said:

உண்மை, ஆனால் நாமென்ன செய்ய முடியும். வேலை செய்யும் தொழிலகத்தில் படிப்படியாகச் சிரியச் சோனகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பயமாக உள்ளது. அவர்களோடு எட்டிநின்றே பழகவேண்டியுள்ளது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

நொச்சி,  சிரியா சோனகரிடம்… மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
எவனின் இடுப்பில்… கத்தி இருக்குது என்றே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

நொச்சி,  சிரியா சோனகரிடம்… மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
எவனின் இடுப்பில்… கத்தி இருக்குது என்றே தெரியாது.

நன்றி, உண்மையில் தற்போது சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எப்போது கவி அருணாசலம் அவர்கள் எழுதிய சிரியர்களோடு தொடர்புடைய சம்பவமொன்றைப் படித்தேனோ, அப்போதிருந்து சற்று விலத்தியே இருந்துவருகின்றேன். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Posted
11 hours ago, தமிழ் சிறி said:

இங்கும் அதே நிலைதான்.
போரில் சிக்கி சீரழிந்து வந்த  முஸ்லீம்களை அரவணைத்து வீடு, கல்வி, வேலை என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க… அதுகள் கத்திக்குத்து, பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல், சொந்த நாட்டுக்கு உரியவனை மதிக்காத குணம் என்று அருவருக்கத்தக்க முறையில் நடந்து 

மிக நீண்ட காலமாக வசிக்கும்  துருக்கிகள் திருந்தி விட்டார்களா?  அல்லது அவர்களும் கத்தியும் கையுமாகவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, nunavilan said:

மிக நீண்ட காலமாக வசிக்கும்  துருக்கிகள் திருந்தி விட்டார்களா?  அல்லது அவர்களும் கத்தியும் கையுமாகவா?

துருக்கிகளின் அடுத்த தலைமுறையின் ஒரு பகுதி  நன்றாக கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். மற்றைய பகுதி முஸ்லீம்களுக்கே உரிய வியாபாரம், சிறு தொழிற்சாலைகள் என்று நிறுவி... பணம் கொழிக்கும் தொழிலை செய்கின்றார்கள். ஆனால்...அவர்களின் அடிப்படை முஸ்லீம் வாதம் என்றுமே  மாற மாட்டாது. என்றாலும்... சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற மோட்டு முஸ்லீம்களை விட அவர்கள் திறம். (ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்ததால்.. ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.) 

சிரியன் மாதிரி... கண்டவுடன் கத்தியை தூக்கும் பழக்கம் துருக்கிகளிடம் இல்லை. 
அப்படி செய்தால்.. ஜேர்மன் சட்டம் என்ன செய்யும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள். 

ஆனால்... என்னைப் பொறுத்தவுரை   எந்த இடத்திலும் .... ஒரு முஸ்லீம் தனியே இருந்தால், நல்லவன் போல் இருப்பான். இன்னொரு முஸ்லீம் அங்கு வந்து சேர்ந்தால் முதல் நின்றவனும் தனது மதத்தைப் பற்றி நியாயம் பிளக்க வெளிக்கிட்டுடுவான்கள். பிறகு அவங்களை கையிலேயும் பிடிக்க ஏலாது. 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 2

எனக்கும் துருக்கிய மற்றும் குர்திஷ் நண்பர்கள் உண்டு. ஆனால் மதம் என்று பிடித்து விட்டால் எல்லோரும் வெறியர்களே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொசாட் தலைமையகத்தை நோக்கி ராக்கெட் வீசிய ஹெஸ்பொலா - இஸ்ரேல் என்ன செய்தது?

இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஓர்லா குரின் மற்றும் ஹென்றி ஆஸ்டியர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்கள்
  • 23 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை நோக்கி முதன் முறையாக ஹெஸ்பொலா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை, ஹெஸ்பொலா அமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரை நோக்கி காலை வேளையில் பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஹெஸ்பொலா அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்தை குறிவைத்ததாக ஹெஸ்பொலா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறினார். லெபனானில் அண்மையில் நடந்த பேஜர் மற்றும் வாக்கிடாக்கி தொடர் வெடிப்புகளின் பின்னணியில் மொசாட் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கு இஸ்ரேலே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டாலும், இஸ்ரேல் அதற்கு பொறுப்பேற்கவில்லை.

டெல்அவிவ் மெட்ரோபாலிட்டன் பகுதியை ஹெஸ்பொலா குறிவைத்தது இதுவே முதன் முறை என்று இஸ்ரேலிய ஊடகமான ஹாரெட்ஸ் ஒய்நெட் கூறியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் தகவல்

டெல் அவிவ் நகரைச் சுற்றியும், மத்திய இஸ்ரேலிலும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. எனினும், அந்த ஏவுகணை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும், இதில் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

ஹெஸ்பொலா செலுத்திய ராக்கெட் ஒன்று டெல் அவிவ் பகுதியை வந்தடைந்தது இதுவே முதன் முறை என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். டெல் அவிவ் நகரும், அதன் சுற்றுப்புறமுமே இஸ்ரேலில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியாகும்.

அத்துடன், சிரியாவில் இருந்து வந்த டிரோன் ஒன்றையும் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. கலீலி கடல் பகுதியில் அந்த டிரோனை தங்களது போர் விமானங்கள் அழித்தாக இஸ்ரேல் ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் அதிக உயிரிழப்பு நடந்த நாள் இதுதான்.

2006-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு ஹெஸ்பொலா உருவாக்கியுள்ள ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இந்த தாக்குதல் காரணமாக லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடம் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.

அதேநேரத்தில், ஹெஸ்பொலா 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.

முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் அதிகரித்து வரும் சூழலில், இரு தரப்பும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இஸ்ரேல் தாக்குதலில் பலியான 492 பேரில் 35 பேர் குழந்தைகள், 58 பேர் பெண்கள் என்றும், 1,645 பேர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பது குறித்து எந்த விவரத்தையும் அது வெளியிடவில்லை.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா
படக்குறிப்பு, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் கரும்புகை எழுந்த காட்சி

ஞாயிற்றுக்கிழமை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்" என்றார். "இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதியைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கும்” என்றும் கூறினார்.

ஹெஸ்பொலா நினைத்துப் பார்க்க முடியாத பல தாக்குதல்களை அதன் மீது இஸ்ரேல் நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.

ஹெஸ்பொலா குழுவின் துணைத் தலைவர் நைம் காசிம், "அச்சுறுத்தல்கள் எங்களைத் தடுக்காது. அனைத்து சாத்தியமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட மூத்த தளபதியின் இறுதிச் சடங்கில் ஹெஸ்பொலா துணைத் தலைவர் ஷேக் நைம் காசிம்.

கொல்லப்பட்ட இப்ராஹிம் அகில் யார்?

இப்ராஹிம் அகில் இறுதிச் சடங்கின் போது, பெரியளவில் திரண்ட மக்கள் சவப்பெட்டியை ஏற்றி சென்ற டிரக்கை பின் தொடர்ந்தார்கள்.

இறுதிச் சடங்கில் துக்கம் மற்றும் கோபத்திற்கு மத்தியில், அமெரிக்கா எதிர்ப்பு உள்ளிட்ட முழக்கங்களை ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் எழுப்பினர்.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில் ஒரு சதுக்கத்தில் இறுதி சடங்கு நடந்தது.

இப்ராஹிம் அகில் மற்றும் அவருக்கு கீழ் இயங்கிய 15 பேர் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்ராஹிம் அகில் தலைக்கு சுமார் 58 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. 1980 களில் பெய்ரூட்டில் அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது.

லெபனானை போருக்குள் இழுக்கும் இஸ்ரேல்?

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குடும்பங்கள் உட்பட சுமார் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவம் நடந்த இடத்தில், உடல்கள் கண்டுபிடிக்கப்படும் என்று நம்பி ஒரு பெரிய பள்ளத்தின் விளிம்பில் இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய லெபனான் பொதுப்பணித்துறை அமைச்சர் அலி ஹாமி - இஸ்ரேல் எங்கள் பிராந்தியத்தை போருக்குள் இழுக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர் "லெபனான் போரை நாடவில்லை," என்றார்.

“லெபனான் மக்களும் கூட போரை விரும்பவில்லை. ஆனால் இஸ்ரேல் போருக்கு வாருங்கள் என்று எங்களை அழைக்கிறது” என்றார்.

போர் மூளும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. பார்ப்போம்" என்று பதிலளித்தார்.

ஹெஸ்பொலா லெபனானில் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல் மற்றும் ராணுவ அமைப்பு ஆகும். இந்த ஷியா முஸ்லீம் அமைப்பு சிறந்த ஆயுத பலம் கொண்டது. இது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் 2023-ஆம் ஆண்டு 8 அக்டோபர் 8-ஆம் தேதி அதிகரித்தது. காஸாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய மறுநாள், ஹெஸ்பொலா இஸ்ரேலிய நிலைகளை தாக்கியது.

தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதே நேரத்தில் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் 60,000 பேர் ஹெஸ்பொலாவின் தினசரி ராக்கெட் தாக்குதல்களின் விளைவாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, ஹைஃபாவின் பிரதான மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்

சர்வதேச தலைவர்கள் எச்சரிக்கை

சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்கள் சர்வதேச அளவில் புதிய கலக்கத்தை தூண்டியுள்ளது.

சிஎன்என் ஊடகத்திடம் பேசிய ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ், "லெபனான் மற்றொரு காஸாவாக மாற சாத்தியம் இருப்பதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

லெபனானில் உள்ள ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜீனைன் ஹென்னிஸ்-பிளாஷேர்ட் தனது எக்ஸ் பக்கத்தில், மத்திய கிழக்கு தற்போது `பேரழிவின் விளிம்பில்’ இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

"இரு தரப்பிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எந்த ராணுவ தீர்வும் தற்போதைக்கு இல்லை" என்று அவர் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஒரு பெரியளவிலான போர் வெடிக்காமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அமெரிக்கா செய்யும்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் இது "மிகவும் கவலைக்குரியது" என்று கூறியது.

பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி "உடனடியான போர் நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தார்.

இஸ்ரேல் - லெபனான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதிகரித்து வரும் மோதல்

இராக்கில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் உட்பட பல எறிகணைகள் சனிக்கிழமை ஒரே இரவில் இஸ்ரேல் மீது ஏவப்பட்டவை என்று அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்டு மருத்துவமனைகள் நோயாளிகளை நிலத்தடி தளங்களுக்கு நகர்த்தி வருகின்றனர். வடக்கு இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. பத்து நபர்களுக்கு மேல் வெளியில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்த உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹைஃபாவின் புறநகரில் உள்ள கிராய்ட் பியாலிக்கில் வசிக்கும் ஒருவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், "சுமார் 06:30 மணியளவில் ஒரு அலாரம் கேட்டது, பின்னர் உடனடியாக ஒரு மிகப் பெரிய வெடிப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து மூன்று அல்லது நான்கு வீடுகள் தள்ளி இது நிகழ்ந்தது. எங்கள் வீட்டில் பிரதான அறையில் ஜன்னல்கள் முற்றிலும் நாசமாயின" என்றார்.

இந்த வார தொடக்கத்தில், லெபனான் முழுவதும் இரண்டு நாட்களில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்ட பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

வியாழன் அன்று, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, தாக்குதல்களுக்கு இஸ்ரேலைக் குற்றம் சாட்டினார், இஸ்ரேல் "எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்டதாகக் கூறி இனி அவர்களுக்கு தண்டனை மட்டுமே பதில் சொல்லும்" என்றும் அவர் கூறினார். ஆனால் இஸ்ரேல் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.

இந்த மோதல் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது லெபனானில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை புதிய பயண ஆலோசனையை வழங்கியது.

பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம், "வணிக விமான சேவைகள் இருக்கும் போதே லெபனானை விட்டு வெளியேற வேண்டும்" என்று தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

அண்டை நாடான ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் அதன் குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. லெபனானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் வெளியேறுமாறு அது வலியுறுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நிழலி said:

கனடாவில், ஒன்ராரியோவிலும் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் மூன்று முஸ்லிம்களை கைது செய்துள்ளனர். அதில் இருவர் தந்தையும் மகனும்.

ஏன் கைது செய்தனர்?

ஏனெனில், ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் செய்ததன் ஒரு வருட நிறைவு ஒக்டோபர் 07 அன்று வருகின்றது. அன்றைய தினம், பொது மக்களை இலக்கு வைத்து மோசமான தாக்குதலை செய்ய இவர்கள் திட்டமிட்டு இருந்தனர். கனடாவிலும் நியியோர்க்கிலும் இந்த தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டி இருந்தனர்.

போர் எங்கோ நிகழ்ந்து கொண்டு இருக்க அதற்கு சம்பந்தமில்லாத, முஸ்லிம்களை அரவணைத்து கொண்டு அனைத்து உரிமைகளையும் வழங்கிக் கொண்டு இருக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக எவராவது முக நூல் பதிவு போட்டாலே அவரை விசாரணைக்குட்படுத்தும் கனடா மண்ணில் தான் இவர்கள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

நாம் சிங்களவர்களுடன் இலங்கை மண்ணில் போர் புரினும், அதற்கு வெளியே அவர்களை தாக்க ஒரு போதும் நினைத்தது இல்லை. அதே போன்று பஞ்சாபிகள் (ஒரு விமான குண்டு வெடிப்பை தவிர), உக்ரேனியர்கள் என்று எவரும் போர் நிகழும் பிரதேசங்களுக்கு அப்பால் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் செய்வதில்லை.

ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் எனப்படும் பயங்கரவாதிகள்?

இங்கேயே இப்படி திட்டமிடுகின்றவர்கள், இஸ்ரேல் மே ஒரு வருட நிறைவில் தாக்குதல்களை மேற்கொள்ள கண்டிப்பாக திட்டமிட்டு இருப்பினம். முக்கியமாக ஹிஸ்புள்ளா கடும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பார்கள். 

வழக்கம் போல, இஸ்ரேல் இதனை சாதகமாக்கிக் கொண்டு தன் இனவழிப்பை லெபனானில் நிகழ்த்துகின்றது.

நியூசிலாந்து கிறைஸ் சேர்ச் என்னுமிடத்தில் அவுஸ்ரேலியர் ஒரு மசூதியில் நிகழ்த்திய படுகொலைக்கு அந்த நாட்டு அரசு மிகவும் கடினமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது, இது போல் இனிமேல் நிகழ கூடாது என்பதற்காக அவரது பெயரை பிரபலப்படுத்தக்கூடாது எனுமளவிற்கு தீவிரமாக இருந்து,  அவர் எதிர்பார்த்த ஊடக விளம்பரத்தினை தடுத்திருந்தது, அத்துடன் நிற்காது அந்த் நாட்டு பிரதமர் இஸ்லாமிய முறைப்படி உடையணிந்து அவர்களது இறுதி நிகழ்வில கலந்து கொண்டார்.

என்னுடன் வேலை செய்யும் நியுசிலாந்து நண்பரிடம் பாகிஸ்தானிய பெண்மணி கூறினார் இவ்வாறு செய்திருக்காவிட்டால் லெபனானை சேர்ந்தவர்கள் அதற்கான பதிலை நியுசிலாந்திற்கு காட்டியிருபார்கள் என்றார், இருந்தும் இலங்கையினை சேர்ந்த தமிழர் ஒருவர் இஸ்லாம் மதத்தினை சார்ந்த இவர் தனனை தமிழராக அடையாளம் காட்டியிருந்தார் (அகதி கோரிக்கைகாக இருக்கலாம்), அவர் அங்கு கத்தி குத்தில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

அப்பாவி மக்களை தாக்குவதற்கு இவர்கள் நினைக்கும் காரணம் தமக்கு நடக்கும் அநியாங்களை தமது அரசுகளை தட்டி கேட் கவில்லை, அதனை செய்யும் தரப்புக்கு தார்மீக ஆதரவு, பொருளாதார உதவிகளை இந்த நாடுகள் செய்கின்றமை உடந்தையாக இருத்தல் எனும் அடிப்படையில், தமது வலிகளை இந்த மக்களும் உணரவேண்டும் எனும் அடிப்படையில் சிந்திக்கிறார்கள் என கருதுகிறேன்.

ஆனால் உண்மையில் இங்குள்ள மக்கள் அவர்களது வலிகளை புரிந்தவர்களாகவே இருக்கிறார்கள், அண்மையில் ஒரு ஐரிஸ் பின்னணி கொண்ட அவுஸ்ரேலிய பெண் கூறினார் அவர்களி படும் வலியினை பார்த்து தான் கண்ணீர் விட்டதாக கூறினார்.

நாங்கள் விரும்பியோ விரும்பமாலோ இந்த கொடுமைகளுக்கு பங்காளிகளாக இருக்கிறோம் என்பதனை யாரும் மறுக்க முடியாது, எம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் ஆதரவுடன் எமது வரிப்பணத்தின் உதவியுடன் தான் இந்த கொடுமைகள் நிகழுகின்றது.

போர் பின் புலத்திலிருந்து வரும் மக்கள் பல உளவியல் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள் அவ்வாறான  மனநலனற்றவர்களை மதம் எனும் பெயரில் அவர்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள், இதற்கு இவர்களது பிற்போக்கு தனங்களை கருவியாக பயன்படுத்டுகிறார்கள், இந்து சமயத்திலும் பல பிற்போக்குத்தனங்கள் இருந்தன அவற்றினை மக்கள் சிறிது சிறிதாக கைவிட்ட நிலைமையே தற்போதய நிலை ஆனாலும் இன்னும் பல பிற்போக்குத்தனஙகள் இந்து மதத்தின் பெயரால் இன்றும் பின்பற்றப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது.

இவ்வாறு சாதாரண மக்களை கொன்று தமது எதிர்ப்பை காட்ட விளையும் லெபனானியர்கள் லெபனானுக்கே சென்று  இஸ்ரேல் இராணுவத்திற்கெதிரான பதில் நடவடிக்கையில் ஈடுபடலாம், ஆனால் ஒரு மிக சொற்பமானவர்களே (விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்) செய்கிறார்கள் மற்றவர்கள் அவ்வாறல்ல என கூற முடியாது சிட்னியில் இவ்வாறு ஒரு பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு பலரை கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் போது அந்த பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை கடவுள் காக்க வேண்டி இஸ்லாமியர்கள் மத பிரார்த்தைனையில் ஈடுபட்டதாக 2GB எனும் வானொலி குற்றம் சாட்டியிருந்தது.

இந்த வகை செயற்பாடு அங்குள்ள மக்களுக்கு எந்த நன்மையினையும் செய்யாது இன்னும் தீமையினை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அமெரிக்கா - திரைமறைவில் என்ன நடக்கிறது?

இஸ்ரேல்-ஹெஸ்பொலா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் பேட்மேன்
  • பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், ஐ.நா.
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் நடைபெறும் போர், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற இடங்களுக்கு பரவிடாமல் தடுப்பேன் என்று அமெரிக்க அதிபர் பைடன் உறுதியை அளித்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் முடிவடைகிறது. அமெரிக்க அதிபராக ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆற்றிய கடைசி உரையில், இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல் குறித்து பேசிய போது அதே உறுதியை மீண்டும் அளித்தார்.

“ராஜிய ரீதியிலான ஒரு தீர்வு இப்போதும் சாத்தியம் தான். சொல்லப்போனால் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதுதான் ஒரே வழி” என்றார் பைடன். “முழு வீச்சிலான போர் யாருக்கும் நல்லதல்ல” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இஸ்ரேல்-லெபனான் சிக்கல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்ற நிலையே நீடிக்கிறது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் செய்து, பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற பைடனின் கோரிக்கை அரங்குகளில் மட்டுமே ஒலித்தது, களத்தில் கேட்கப்படவே இல்லை. அதே போன்று தான், இந்த கோரிக்கையும் அரங்கில் மட்டுமே கேட்கப்படுகிறது.

திங்கட்கிழமை, இஸ்ரேல் லெபனான் மீது தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் தாக்குதல்களில் 500 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலா, அந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த வாரம் லெபனானில் நடந்த தொடர் பேஜர் வெடிப்புகளால் பலத்த சேதங்களை சந்தித்த ஹெஸ்பொலா, வடக்கு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி வீடுகளை நொறுக்கி, தெருக்களைப் பற்றி எரியவைத்துள்ளது.

அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் தனக்கு இருக்கும் முக்கியமான நட்பு நாடான இஸ்ரேலை மீண்டும் கட்டுப்படுத்த நினைக்கிறது. தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும் ஒரு தூதாண்மை முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா வற்புறுத்துகிறது. ஆனால் அப்படி ஒரு முடிவை எடுக்க இரு தரப்பும் விரும்பவில்லை அல்லது எடுப்பதற்கான திறன் இல்லை.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானின் சேதமடைந்த வீடுகள்  

அமெரிக்கா கூறுவதை இஸ்ரேல் கேட்குமா?

ஹெஸ்பொலாவை வீழ்த்தி, தனது நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட மக்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. காஸாவில் பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை தடுக்கவே கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலை தாக்கி வருவதாக ஹெஸ்பொலா கூறி வருகிறது. இஸ்ரேல்-ஹெஸ்பொலா விவகாரத்தில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு தீர்மானங்களுக்கு வலுவளிக்கும் வகையில், பல மாதங்களாக அமெரிக்க தூதுவர் அமோஸ் ஹாக்ஸ்டைன் இருதரப்புக்கும் இடையே நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒன்றுமில்லாமல் போய்விட்டன.

ஒரு புறம், அமைதி நிலவ வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பைடன் பேசிக் கொண்டிருக்கும் போது மறுபுறம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஹெஸ்பொலாவை தொடர்ந்து தாக்குவோம் என்று தனது எக்ஸ் தளத்தில் வீடியோவை பதிவிடுகிறார். “தனது வீட்டு வரவேற்பறையில் ஏவுகணையும் கொல்லைப்புறத்தில் ராக்கெட்டும் கொண்டுள்ள எவருக்கும் வீடே இருக்காது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஹெஸ்பொலாவை தாக்குவதற்கான இஸ்ரேலின் உரிமையை வெள்ளை மாளிகை ஆதரிப்பதாக கூறுகிறது. ஆனால், இஸ்ரேல் தலைமையுடன் அரசியல் உறவுகள் சுமூகமாக இல்லை என்பது கடந்த சில வாரங்களில் மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது. பேஜர் வெடிப்பு தாக்குதல்கள், அதன் பின் நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் முழு அளவிலான போருக்கு வழி வகுக்குமோ என்ற கவலை அளிக்கிறது.

கடந்த வாரத்தில் சிக்கல் எழுந்த போது கூட, பைடன் மற்றும் நெதன்யாஹு இடையில் எந்தவித தகவல் பரிமாற்றம் குறித்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை. அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதல்களுக்கு பிறகு, அமெரிக்க செயலர் பிளிங்கன் அந்த பிராந்தியத்துக்கு பத்தாவது முறையாக சென்றார். ஆனால் முதல் முறையாக இஸ்ரேலுக்கு அவர் செல்லவில்லை.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு  

அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

அமெரிக்கா ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீது தாக்கம் செலுத்த வெள்ளை மாளிகையால் இயலவில்லை என்று நிர்வாகத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் விமர்சகர்கள், கூறி வருகின்றனர். ஆனால் இதை மறுக்கும் அமெரிக்கா இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவுவது தனது கடமை என்று கூறுகிறது.

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் 11 மாதங்களாக நடைபெற்று வரும் எல்லை தாண்டிய தாக்குதலில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படுவதை நோக்கி நகர்வது தான் என்று பைடன் எப்போதுமே நம்பிவந்துள்ளார். ஆனால் போர்நிறுத்தம் மிக கடுமையாக தடுத்து நிறுத்தப்படுகிறது. இரு தரப்பிலும் போர் நிறுத்தத்துக்கான விருப்பம் இருப்பதாக அறிகுறிகள் எதுவும் இல்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இதை எட்டுவதற்கான ‘அரசியல் விருப்பம்’ இல்லை பிளங்கன் சுட்டிக்காட்டியிருந்தார்.

தான் மேற்கொள்ளும் ராஜதந்திர நடவடிக்கைகள் பலனளிக்கப்போவதில்லை என்பதை அமெரிக்கா மறுக்கிறது. தனது பதவிக்காலம் முடிவடைய நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் அதிபர் பைடன், காஸாவில் போரை நிறுத்த ஒரு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை கைவிடவில்லை என்று கூறுகிறது. “இல்லை, அவர் நிச்சயமாக கைவிடவில்லை” என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்ஜேக் சுல்லிவன் கூறுகிறார்.

“இதில் சிரமங்களும் பின்னடைவுகளும் இருந்தன. (இஸ்ரேல்) பிரதமரை சம்மதிக்க வைப்பதில் சில சவால்கள் இருந்தன. ஹமாஸ் தலைவர் சின்வரை சம்மதிக்க வைப்பதில் சவால்கள் இருந்தன. ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வது என உறுதியாக இருக்கிறோம்” என்று சுல்லிவன் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்தார்.

“நியூ யார்க் நகரில் இந்த வாரம், பிற தலைவர்களுடன் கலந்து பேசி காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் குறித்த ஒரு ஒப்பந்தம் ஆகியவற்றை ஏற்படுத்த முயற்சி செய்வார். அதை விட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு வீச்சிலான போரை தடுத்து நிறுத்தவும் முயல்வார்” என்றார்.

இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன்  

திரைமறைவில் என்ன நடக்கிறது?

நியூ யார்க்கில் திரைமறைவில், ராஜதந்திர நடவடிக்கைகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசு அதிகாரி, அமெரிக்கா தனது நட்பு நாடுகளிடம் இஸ்ரேல்-ஹெஸ்பொலா மோதலை தீர்ப்பதற்கான திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

“சில தீர்க்கமான யோசனைகள் உள்ளன, அவற்றை நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இந்த வாரம் ஆலோசித்து, இந்த விவகாரத்தில் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசுவோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த ‘தீர்க்கமான யோசனைகள்’ என்னவென்று கேட்டதற்கு பதிலளிக்காத அவர், அமெரிக்கா ஹெஸ்பொலாவுடன் நேரடியாக பேசாத போதும், நியூ யார்க்கில் கூடியுள்ள அதன் நட்பு நாடுகள் சில பேசுகின்றன என்று சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு, “ஹெஸ்பொலா என்ன நினைக்கிறது என்பது குறித்து மேலும் தெளிவான பார்வை இருக்கலாம். அதன் மூலம் இந்த யோசனைகளை பரிசோதித்துப் பார்க்கலாம்” என்றார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை அவர் வலியுறுத்தினார். ஹெஸ்பொலாவுடனான மோதலை தீவிரப்படுத்துவது மூலம், ஹெஸ்பொலாவை ஒரு ராஜ தந்திர ஒப்பந்ததுக்கு கட்டாயப்படுத்தலாம் என்றும், அதன் மூலம் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் இஸ்ரேல் நம்புவதாக கூறப்படுகிறது. இந்த உத்திக்கு ‘தீவிரப்படுத்துதல் மூலம் மட்டுப்படுத்துதல்’ என்று பெயர்.

“எனக்கு தெரிந்தவரையில், குறைந்தபட்சம் சமீபக் காலத்தில், எந்தவொரு தீவிரப்படுத்தும் நடவடிக்கையும் மட்டுப்படுத்துதல் அல்லது நிலைமை சீராகும் நிலைக்கு இட்டுச் சென்றதாக நினைவில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்லெபனான் மீது மீண்டும் கடும் தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல் - 15 பேர் பலி

25 SEP, 2024 | 04:57 PM
image
 
தென்லெபனான் மற்றும் பெக்காவின் மீது புதிய தீவிர தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தென்லெபானின் நெபட்டியா நகரின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்லெபானை சுற்றியுள்ள நகரங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/194785

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் படைத்தளபதி உயிரிழப்பு

லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை படைத்தளபதி வான் வெளி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஒபரேஷன் நார்த்தன் ஆரோஸ் என்ற பெயரில் லெபனான் நாட்டில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில், 492 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லா அமைப்பின் ஏவுகணை மற்றும் ராக்கெட் பிரிவின் படைத்தளபதி இப்ராஹிம் முகமது கபிசி உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எனினும், ஹெஸ்பொல்லா அமைப்பின் மூத்த தலைவரான அலி கராக்கியை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதாவும், அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஹெஸ்பொல்லா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் ஹைஃபா நகர் மீது ஹெஸ்பொல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவத்தினர் வானிலேயே தடுத்து அழித்தனர்.

2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் – ஹெஸ்பொல்லா இடையே பெரிய அளவில் மோதல் நடைபெற்று வருவதால், லெபனானின் தென் பகுதியில் உள்ள மக்கள் நாட்டின் மற்ற இடங்களுக்கு சாரை சாரையாக புலம் பெயர்ந்து வருகின்றனர்.

https://thinakkural.lk/article/309961

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன?

லெபனான், காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரிமி போவன்
  • பதவி, சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி நியூஸ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹெஸ்பொலா மீதான தாக்குதலால் இஸ்ரேல் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வாக்கி-டாக்கி மற்றும் பேஜர் வெடிப்பில் தொடங்கிய இத்தாக்குதல், தற்போது தீவிரமான வான்வழித் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் அதற்குப் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “இன்று (செப்டம்பர் 23) நடந்தது மிகப்பெரிய சாதனை. ஹெஸ்பொலா உருவானதிலிருந்து இந்த வாரம் அதற்கு மிக மோசமான வாரமாக அமைந்தது. அதையே இந்தத் தாக்குதலின் முடிவுகள் உணர்த்துகின்றன,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் அழிக்கப்பட்டன,” என்றார்.

இந்நிலையில், இஸ்ரேலியத் தாக்குதல்களில் 50 குழந்தைகள் உட்பட 550 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2006-இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஒரு மாதமாக நீடித்த போரில் லெபனானில் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.

லெபனான் எப்படி வேறுபட்டது?

இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் மூலமாக தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஹெஸ்பொலாவை கட்டாயப்படுத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் இரானில் உள்ள அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள், எதிர்ப்பின் விலை மிக அதிகம் என்று முடிவு செய்யும் அளவுக்கு இஸ்ரேல் பாதிப்புகளை ஏற்படுத்த விரும்புகிறது.

இஸ்ரேல் தலைவர்களுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் வெற்றி அவசியமாக இருக்கிறது. காஸாவில் ஓராண்டாக நடைபெற்று வரும் போர் சிக்கலானதாக உள்ளது. ஹமாஸ் குழுவினர் சுரங்கப்பாதைகளிலிருந்து வெளிவந்து, இஸ்ரேல் படையினரை கொல்கின்றனர், காயம் ஏற்படுத்துகின்றனர். இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் இன்னும் விடுவிக்கவில்லை.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேலை ஆச்சர்யப்படுத்தியது. அதற்கு முன்பு, இஸ்ரேலியர்கள் ஹமாஸை பெரிய அச்சுறுத்தலாக கருதாததால், அது அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

ஆனால், லெபனான் வேறுபட்டது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மற்றும் மொசாட் உளவு முகமை 2006-இல் போர் நடைபெற்றதிலிருந்து ஹெஸ்பொலா மீது போர் தொடுக்கத் தயாராகிவருகிறது.

தற்போது நடைபெறும் தாக்குதல் ஹெஸ்பொலாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தங்கள் இலக்கை அடைய உதவும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார்.

இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவுவதை ஹெஸ்பொலா நிறுத்த வேண்டும் என நெதன்யாகு விரும்புகிறார். எல்லையிலிருந்து ஹெஸ்பொலாவைத் திருப்பி அனுப்ப விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மேலும், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ராணுவத் தளங்களை அழிக்கவும் இஸ்ரேல் ராணுவம் விரும்புகிறது.

செப்டம்பர் 23 அன்று இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செப்டம்பர் 23 அன்று இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தியது

மற்றொரு காஸாவா?

லெபனானில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள், ஓராண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவூட்டின. காஸாவில் தாக்குதல் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேறுமாறு எச்சரித்தது போன்று தற்போதும் இஸ்ரேல் எச்சரித்தது. குடிமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாக ஹமாஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டையே தற்போது ஹெஸ்பொலா மீதும் இஸ்ரேல் சுமத்துகிறது.

இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் முறையாக வழங்கவில்லை எனவும் குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற போதிய நேரம் வழங்கவில்லை என்றும் இஸ்ரேலின் எதிரிகளும் விமர்சகர்களும் கூறுகின்றனர். ஒரு நாட்டின் குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ராணுவ பலத்தை கண்மூடித்தனமாக உபயோகிக்கக் கூடாது எனவும் போர் விதிகள் கூறுகின்றன.

ஹெஸ்பொலாவின் சில தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் குறிவைக்கப்பட்டன. இது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகள மீறுவதாக இருந்தது. ஹெஸ்பொலா இஸ்ரேல் ராணுவத்தையும் குறிவைத்தது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஹெஸ்பொலாவை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன.

தங்களது ராணுவம் போர் விதிமுறைகளைக் கடைபிடிப்பதாக இஸ்ரேல் வலியுறுத்திக் கூறுகிறது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இப்பிரச்னை இன்னும் தீவிரமாகியுள்ளது.

பேஜர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் ஹெஸ்பொலா அமைப்பினர்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, பேஜர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் ஹெஸ்பொலா அமைப்பினர்

பேஜர் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?

சமீபத்திய பேஜர் தாக்குதலை எடுத்துக்கொள்வோம்.

ஹெஸ்பொலாவைச் சேர்ந்தவர்களது பேஜர்களைக் குறிவைப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், பேஜர்கள் வெடிக்கும்போது அருகே யார் இருப்பார்கள் என்பது இஸ்ரேலுக்குத் தெரியவில்லை. அதனால்தான் வீடுகளில் இருந்த குழந்தைகள், கடைகள், மற்றும் பொது இடங்களில் இருந்த மக்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.

ஹெஸ்பொலா படையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே வித்தியாசத்தை உணராது இஸ்ரேல் கொடிய தாக்குதலை நடத்துவதாகவும் இது போரின் விதிகளுக்கு எதிரானது என்றும் பிரபல வழக்கறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், 1980-களில் துவங்கியது. ஆனால், சமீபத்திய எல்லை போர் 2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பின்னர் துவங்கியது. ஹமாஸுக்கு ஆதரவாகக் கட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் தினசரித் தாக்குதலுக்கு ஹசன் நஸ்ரல்லா உத்தரவிட்டதால், இஸ்ரேல் ராணுவம் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இஸ்ரேலின் போர் விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலின் போர் விமானம்

கடந்த காலப் படையெடுப்புகள்

சமீபத்திய தாக்குதல்களின் தாக்கத்தை 1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுடன் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்புப்படுத்துகின்றன. 1967-இல் இஸ்ரேல் எகிப்து மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் எகிப்து வான் படை மோசமாக பாதிக்கப்பட்டது. அதன் விமானங்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேல், அடுத்த ஆறு நாட்களில், எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டானை தோற்கடித்தது. இந்த வெற்றி தற்போதைய நெருக்கடிக்கு வடிவம் கொடுத்துள்ளது. அதன்பின் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா முனை மற்றும் கோலன் குன்றுகளை ஆக்கிரமித்தது.

இது சரியான ஒப்பீடு அல்ல. லெபனான் மற்றும் ஹெஸ்பொலாவுடனான போர் இரண்டும் வெவ்வேறானவை. இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஆனால், இன்றுவரை ஹெஸ்பொலாவின் தாக்கும் திறனை தடுத்து நிறுத்தவில்லை.

இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலாவுடனான கடந்த காலப் போர்களில் இருதரப்பிலும் உறுதியான வெற்றி இல்லை. சமீபத்திய போரிலும் அப்படித்தான் இருக்கும். எனினும், இஸ்ரேல், அதன் உளவு முகமைகள் மற்றும் ராணுவம் ஆகியவை கடந்த வாரத் தாக்குதல்களால் திருப்தியடைந்துள்ளன.

ஹெஸ்பொலா தோற்கடிக்கப்பட்டு, எல்லையிலிருந்து பின்வாங்கி, இஸ்ரேல் மீதான சண்டையை நிறுத்தும் என்ற அனுமானம் அல்லது ஒரு சூதாட்டத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்துகிறது. இப்பிரச்னையை உற்றுநோக்கும் பலரும் ஹெஸ்பொலா சண்டையை நிறுத்தாது என நம்புகின்றனர். இஸ்ரேல் உடனான சண்டையே ஹெஸ்பொலாவின் இருப்புக்கு முக்கிய காரணமாகும்.

வடக்கு இஸ்ரேலில் பறந்த இஸ்ரேலிய ஜெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செவ்வாய்கிழமை வடக்கு இஸ்ரேலில் பறந்த இஸ்ரேலிய ஜெட்

ஹெஸ்பொலா பணியாவிட்டால் என்ன நடக்கும்?

ஹெஸ்பொலா இதை நிறுத்தாவிட்டால் போருக்கான வாய்ப்பை இஸ்ரேல் இன்னும் விரிவாக்கும். மற்றொரு புறம், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலில் தங்கள் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மக்களை மீண்டும் அப்பகுதிக்கு திரும்பிவருவதை அனுமதிக்காது. அப்போது, தரைவழி மூலம் தாக்குதல் நடத்துவது குறித்து நெதன்யாகு ராணுவம் முடிவுசெய்யும். ஒருவேளை, இஸ்ரேல் ராணுவம் அதன் ஒருபகுதியை கூட கைப்பற்றலாம்.

இதற்கு முன்பும் லெபனானில் இஸ்ரேல் நுழைந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டில் இஸ்ரேலுக்குள் பாலத்தீன தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, இஸ்ரேல் படைகள் பெய்ரூட் வரை சென்றது. பின்னர் இஸ்ரேலின் லெபனான் கூட்டாளிகள் பெய்ரூட்டின் சப்ரா மற்றும் ஷாதிலா அகதிகள் முகாம்களில் பாலத்தீன மக்களை படுகொலை செய்தனர். இந்த நடவடிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது.

லெபனான் எல்லைக்கு அருகே உள்ள பகுதியின் பெரும்பரப்பை 1990-ம் ஆண்டு வரை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்தது. தற்போது இஸ்ரேல் ராணுவத்தில் ஜெனரல்களாக உள்ளவர்கள் அப்போது இளம் வீரர்களாக இருந்தனர். அவர்கள் ஹெஸ்பொலாவுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹுட் பராக் 2000-ம் ஆண்டில் ராணுவத்தை அங்கிருந்து திரும்ப பெற முடிவு செய்தார். அப்பகுதியில் நீடித்திருப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்றும் இதற்காக அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேல் வீரர்கள் தங்கள் உயிர்களை இழப்பதாகவும் கருதினார்.

கடந்த 2006-ம் ஆண்டு இஸ்ரேலிய துருப்புகள் அதிகம் இருந்த எல்லைப் பகுதியை ஹெஸ்பொலா தாக்கியது. இஸ்ரேல் வீரர்கள் பலர் இதில் இறந்தனர், சிலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். போர் முடிவடைந்த பின்னர், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் என தான் முன்பே அறிந்திருந்தால் இந்த சண்டையை அனுமதித்திருக்க மாட்டேன் என நஸ்ரல்லா கூறியிருந்தார். அதன்பின், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எமுட் அல்மெர்ட் போரை அறிவித்தார்.

இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை தங்களின் வான்படை மூலம் தடுத்து நிறுத்த முடியும் என முதலில் இஸ்ரேல் நம்பியது. ஆனால், அது நடக்காத போது, டேங்க்குகளும் படையினரும் நிலைநிறுத்தப்பட்டனர். அந்த போர் லெபனான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஆனால், போரின் கடைசி நாளில் ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஹெஸ்பொலாவின் பலம்

காஸாவைக் கடப்பதை விட, சரமாரியான ராக்கெட்டுகளின் மத்தியில் லெபனானைக் கடப்பது ஒரு பெரிய ராணுவ சவாலாக இருக்கும் என்பதை இஸ்ரேலிய தளபதிகள் அறிவார்கள். ஹெஸ்பொலாவும் 2006 முதல் திட்டங்களை வகுத்து வருகிறது. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சண்டையிடுவார்கள். தெற்கு லெபனானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் நிலைமைகள் ஹெஸ்பொலாவுக்கு சாதகமாக இருக்கும். அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு கொரில்லா உத்திக்கு ஏற்றதாக உள்ளது.

காஸாவில் ஹமாஸின் அனைத்து சுரங்கப்பாதைகளியும் இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை. தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளில், ஹெஸ்பொலா கடந்த 18 ஆண்டுகளாக திடமான பாறைகளின்வழி சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது. ஹெஸ்பொலா இரானால் வழங்கப்பட்ட ஒரு வலிமையான ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் போலல்லாமல், சிரியா வழியாக ஆயுதங்களை மீண்டும் அவற்றுக்கு வழங்கமுடியும்.

வாஷிங்டன் டிசியில் உள்ள சிந்தனை மையமான ஸ்டிராட்டஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையம், ஹெஸ்பொலாவிடம் 30,000 பேர் செயலில் இருப்பதாகவும் 20,000 பேர் தயார்நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கிறது. இவர்களுள் பெரும்பாலானோர் தரைப்படையின் சிறிய பிரிவுகளாக பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், பலருக்கு போரில் நல்ல அனுபவம் உள்ளது. இந்த மக்கள் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட்டுள்ளனர்.

ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இருப்பதாக பெரும்பாலான மதிப்பீடுகள் கூறுகின்றன. பல இஸ்ரேலிய நகரங்களை சேதப்படுத்தும் ஆயுதங்களும் இதில் அடங்கும்.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நிகழ்த்திவருகிறது. இதனால் கிர்யோட் ஷ்மோனா போன்ற வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தாக்குதல் நிகழ்த்திவருகிறது. இதனால் கிர்யோட் ஷ்மோனா போன்ற வடக்கு இஸ்ரேலில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

இஸ்ரேலிய விமானப்படை காஸாவிற்கு செய்ததை லெபனானுக்கு செய்து விடுமோ என்று பயந்து, மொத்த நகரங்களையும் இடிபாடுகளாக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில், ஹெஸ்பொலா அந்த அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தாது என்று இஸ்ரேல் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். லெபனான் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை இரான் விரும்பவில்லை. இரான் தனது அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறது.

இது மற்றொரு சூதாட்டம். இந்த ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்கும் முன் ஹெஸ்பொலா அவற்றை பயன்படுத்த நினைக்கலாம்.

காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்தால், அது மூன்றாவது போர்முனையைத் திறக்கும். இஸ்ரேலிய வீரர்கள் உந்துதல் பெற்றவர்களாகவும், நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், ஆயுதம் ஏந்தியவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு வருடப் போரினால் சோர்ந்து போயிருக்கலாம்.

கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கிலான வான்வழி தாக்குதல்களை லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்கிலான வான்வழி தாக்குதல்களை லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ளது

அமைதியான தீர்வை அடைவதில் உள்ள சவால்கள்

அமெரிக்கா தலைமையிலான இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஹெஸ்பொலாவுடனான இஸ்ரேலின் போரை அதிகரிக்க விரும்பவில்லை. இந்த நாடுகளும் லெபனானுக்குள் நுழைவதற்கு ஆதரவாக இல்லை. ராஜதந்திர வழிமுறைகள் மூலம் மட்டுமே எல்லைகளைப் பாதுகாக்க முடியும், குடிமக்கள் நாடு திரும்ப முடியும் என்று இந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. 2006-இல் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஐ.நா பாதுகாப்பு தீர்மானம் 1701-இன் அடிப்படையில் அமெரிக்கத் தூதுவர் ஒருவர் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துள்ளார்.

ஆனால், காஸாவில் போர் நிறுத்தம் இல்லாததால், ராஜதந்திர ரீதியான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும்போதுதான் ஹெஸ்பொலாவும் தாக்குதலை நிறுத்தும் என்கிறார் நஸ்ரல்லா. தற்போது, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பாலத்தீனக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், காஸாவில் போர்நிறுத்தம் செய்வதற்குமான உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் உடன்படவில்லை.

ஏற்கனவே பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் லெபனானின் சாமானிய குடிமக்களின் வேதனை, இஸ்ரேலின் தாக்குதல்களால் மேலும் அதிகரித்துள்ளது. எல்லையில் இருபுறமும் அச்சம் நிலவுகிறது. ஹெஸ்பொலா கடந்த ஆண்டை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இஸ்ரேலியர்களுக்கும் தெரியும்.

ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்து எல்லையில் இருந்து ஹெஸ்பொலாவை பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இஸ்ரேல் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல், திறம்பட ஆயுதம் ஏந்திய, சினம் கொண்ட படைகளை எதிர்கொள்கிறது. ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான நெருக்கடி இதுவாகும். தற்போது நிலைமை மோசமடைவதைத் தடுக்க யாராலும் முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/9/2024 at 00:25, விசுகு said:

எனக்கும் துருக்கிய மற்றும் குர்திஷ் நண்பர்கள் உண்டு. ஆனால் மதம் என்று பிடித்து விட்டால் எல்லோரும் வெறியர்களே.

குர்திஷ்காரரும் அப்பிடியா? அவர்களிடம் மதவெறி குறைவு என்று நினைத்திருந்தேன்

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.