Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, Kapithan said:

சிரியருக்கு அரியரின் படுதோல்வியை ஜீரணிக்க  முடியவில்லை. 

🤣

அப்படி இல்லை  இதை தோல்வி என்று சொல்வதை எற்க முடியாது   காரணம்  ஒருவர் தான் தெரிவு செய்யப்படுவார். ஆகவே  தமிழ் மக்கள் அரியத்துக்கு வாக்கு போடமால். விடலாம்  மாறாக  ரணில்  சஜித்  அனுர  .... போன்றோருக்கு வாக்கு போடலாம்   அப்படி போடும் வாக்குகள்.  

தமிழ் தேசியத்துக்கு எதிரானது இல்லை 

அரியத்துக்கு எதிராது இல்லை   

இணைந்து வாழலாம்” என்தற்கான. அங்கீகாரம்…………………… இல்லை 

தீர்வு வேண்டாம் என்று சொல்லவில்லை 

அரியம் தேர்தல் நடக்க முதலே தோல்வி அடைந்து விட்டார் ஆகவே அவரை தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கவில்லை 

பொது தேர்தல் 225 பேரை தெரிவு செய்ய நடக்கும் தேர்தல்   தமிழ் தரப்பு தோல்வி பெறும் வாய்ப்புகள் இல்லை   

சுமத்திரன்  மாவை.  விக்கி  சுரேஷ்.செல்வம் சித்தார்த்தர் போன்ற வயோதிபர்களை    களைத்து விட்டு  இளைஞர்களை  களத்தில் இறக்கினால். 25.  பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் 🙏🙏🤣🤣

  • Like 1
  • Replies 131
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

Justin

சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

பிழம்பு

// 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, island said:

வே. பிரபாகரன்

இவரை இதில் சேர்க்கப்பட்டது பிழை   ஏனென்றால் 

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக   சிங்களவர்கள்  தீர்வு தரமாட்டார்கள். என்று உறுதியாக சொன்னவர்   

உயிர் இருக்கும் வரை. சிங்களவர்களை நம்பவில்லை   அவர் எமாந்தது இல்லை    

அவர் செய்த பிழை   உங்கள் போன்றோருக்குக்காக. போராடியது தான்  🙏 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kapithan said:

உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும்  அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். 

இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். 

இரண்டு வாதங்களும்  ஒத்துப்போகிறது அல்லவா? 

🤣

இல்லை அரியம்.    எந்தவொரு வாக்கு எண்ணும் நிலையத்துக்கும். ஊள்புகவில்லை    ஒரு வேட்பாளர்  என்ன காரணங்களுக்குக்காக  வாக்கு எண்ணும் நிலையத்துக்கு போக வேண்டும்   ??

தமிழரசு கட்சியில். உள்ள ஒரு. கிருமி  சமத்திரன்.  தான்   

கட்சியை திட்டமிடப்பட்ட வகையில் நாசமாக்கி விட்டார்  இவரால் கட்சி அடைந்த நன்மைகள் என்ன?? ஒன்றுமில்லை 

ஆனால்  தமிழரசு கட்சியால். சுமத்திரன். எண்ணற்ற  நன்மைகள் பெற்றுள்ளார்.  அவர் கட்சியில்.  இணைந்தது அதற்காக தான்   

அவர் தமிழர்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்மை கட்சியிலிருந்து வெளியேறுவது மட்டுமே 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. 

தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 

2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? 

சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து  இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான  சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். 

தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 

4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? 

இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச்  சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 

5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? 

இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 

6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ"  என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  • Like 1
  • Thanks 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிந்த தேர்தலை தொட்டு மணக்க மணக்க நாற்றம் தான் வரும்.

அடுத்தடுத்த தேர்தல்களுக்கு நாளும் குறித்தாகி விட்டது.

அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்று பிரயோசனமாக பேசலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nunavilan said:

யாரும் கள்ளன் என கத்தியதாக தெரியவில்லை.😁

நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,......

இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣

என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா  கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில்  நடமாடினால்  போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு. 

திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/9/2024 at 17:10, ஏராளன் said:

1982 ஆம் ஆண்டு திரு.குமார் பொன்னம்பலம் 2.67% வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் திரு. அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை.

ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, ரஞ்சித் said:

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

நல்லதொரு விளக்கம்.

கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது.

24 minutes ago, Kapithan said:

நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,......

இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா?

நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Kapithan said:

நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,......

இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣

என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா  கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில்  நடமாடினால்  போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு. 

திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺

ஆம் நான் உங்கள் கத்தலை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் நீங்களும் பாவம். வந்த விடயம் நடக்காது விட்டால் கவலைப் படுவீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Eppothum Thamizhan said:

https://www.sundaytimes.lk/200809/columns/clash-at-jaffna-counting-centre-row-over-votes-for-sumanthiran-and-sasikala-411860.html

விடியற்காலை 1.30 ற்கு ஏன் அரசாங்க அதிபரை சந்திக்கபோனவர்.

கேக்கிறவன் கேனையனாய் இருந்தால் ......

தெரியவில்லை, "சுருட்டு பத்த வைக்க நெருப்பிருக்கிறதா?" என்று கேட்கப் போயிருப்பாரோ😂?

தெரிவத்தாட்சி அலுவலர் (யாழ் அரச அதிபர்) பணியில் இருந்தார். பணியில் இருக்கும் தெரிவத்தாட்சி அலுவலரை உத்தியோக பூர்வ வேட்பாளர்கள், அவர்களின் ஏஜெண்டுகள் யாரும் போய் சந்திக்கலாம். காரணம் உங்களுக்கும் எனக்கும் தெரியாமல் இருக்கலாம், அவர் சந்தித்தாலேயே ஏதோ கோல் மால் நடந்திருக்கிறது என்பதை "எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டுகிறது" என்பதை நம்பும் யாரும் நம்புவர்😎.

ஆனால், வாக்கு எண்ணும் இடத்தில் சுமந்திரன் இருந்ததாகச் சொன்ன சசிகலாவுக்கு, அதை இன்னும் காவித்திரிவோருக்கு தேர்தல், எண்ணும் நிலையம் என்பன பற்றி ஒன்றும் தெரியாது என்பது பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

அங்கே 

அதன் பின்னர் அரசியல் நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். எனவே...?

ஆம், இப்போது இங்கே சிலர் தம் தேவைக்காக வதந்திகளை வைத்து செய்கிற அரசியல் அப்போதும் நடந்தது.

 சம்பவம் நடந்து மறு நாள், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அங்கஜன் மூவரும் சசிகலாவை சந்தித்து "இதை நீங்கள் விடக் கூடாது, நாம் உயர் நீதிமன்றில் வழக்குப் போட உதவுகிறோம்" என்று உசுப்பேத்திய அரசியல் நடந்தது. இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், இந்த மூவரும் தேர்தல் வேட்பாளராக அனுபவம் கொண்டவர்கள். இந்த வாக்குகள் திருடிய விடயம் நடந்திருக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்த ஆட்கள். தங்கள் அனுபவ அறிவை ஓரமாய் சுருட்டி வைத்து விட்டு "சுமந்திரன் லவ்" காரணமாக சசிகலா அவர்களை மேலும் அசிங்கப் படுத்த முயற்சித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

முடிந்த தேர்தலை தொட்டு மணக்க மணக்க நாற்றம் தான் வரும்.

அடுத்தடுத்த தேர்தல்களுக்கு நாளும் குறித்தாகி விட்டது.

அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்று பிரயோசனமாக பேசலாமே?

இனி சுமந்திரன் ஐயாவின் அடுத்த அறிக்கை வரும்வரை இதற்குள் நின்று கும்மி அடிக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, nunavilan said:

யாரும் கள்ளன் என கத்தியதாக தெரியவில்லை.😁

தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக முறையிடுவதும் தேர்தல் ஆட்சேபனை வழக்கு தொடுப்பதும் தான் நடைமுறை. அதை விடுத்து தனது அல்லக்கைகளை வைத்து கள்ளா! கள்ளா! என்று கத்துவதல்ல. அது என்றுமே ஆதாரம் ஆகாது. 

ஒரு கருத்து களத்தின் மட்டுறுத்துனராக  பொறுப்பான இடதத்தில் இருக்கும் நீங்கள் இதை எழுதியது உண்மையில் ஆர்ச்சரியத்தை அளிக்கிறது. 

Edited by island
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை.

குமார் பொன்னம்பலம் ஜனாதிபதித் தேர்தலில் நின்ற பொழுது 22 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பெரும் வெற்றியை தமிழர்விடுதலைக்கூட்டணி வெற்றியடைந்த வேளையிலும் அவர்கள் சொன்'ன புறக்கணிப்பை தமிழ்மக்கள் ஏற்கவில்லை. .குமார் பொன்னம்பலம் வடகிழக்குப்பகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்குகளைப் பெற்றார்.1978 ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனாவை எதிர்த்தே இந்த அளவு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted
6 minutes ago, island said:

தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக முறையிடுவதும் தேர்தல் ஆட்சேபனை வழக்கு தொடுப்பதும் தான் நடைமுறை. அதை விடுத்து தனது அல்லக்கைகளை வைத்து கள்ளா! கள்ளா! என்று கத்துவதல்ல. அது என்றுமே ஆதாரம் ஆகாது. 

ஒரு கருத்து களத்தின் மட்டுறுத்துனராக  பொறுப்பான இடதத்தில் இருக்கும் நீங்கள் இதை எழுதியது உண்மையில் ஆர்ச்சரியத்தை அளிக்கிறது. 

நடைமுறையில் நடப்பதை யாரும் எழுதலாம். உங்களுக்கு ஆச்சரியம் அளித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. 

தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 

2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? 

சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து  இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான  சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். 

தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 

4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? 

இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச்  சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 

5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? 

இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 

6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ"  என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்தப் பந்திகளில் இது வரை எழுதாத எதையும் நீங்கள் புதிதாக எழுதவில்லை! ஆனால், இங்கே சிலர் காதில் அமிர்தமாகக் கேட்க விரும்பும் வசவுகளைச் சேர்த்து எழுதியிருக்கிறீர்கள்😂!

தேர்தலில் உங்கள் நிலைப்பாடு- என் புரிதலின் படி- வாக்காளர்கள் பயனற்றது என்று கருதியதால் தோற்றிருக்கிறது. அவ்வளவு தான் விடயம். இதனால் இப்போது உங்கள் நிலை apoplectic ஆக இருக்கிறது.

உங்கள் நிலைப்பாடு , வருகின்ற பொதுத் தேர்தலிலும் பொது வேட்பாளர் தோற்ற அதே காரணங்களுக்காகத் தோற்கும். தாயக மக்களின் கரிசனைகள், நோக்கங்களில் இருந்து வெகு தூரத்தில் நிற்கிறீர்கள் என்பதை எப்ப தான் உணரப்  போகிறீர்களோ தெரியவில்லை! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனின் கருத்துக்கு தமிழர் தரப்பலிருந்து எழுந்த கேள்வி

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்கள் பொருட்படுத்தியது யாரை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் மோதிய நிலையில், சிங்கள பேரின வாதம் கீழ் நிலைக்கு சென்றுள்ள பின்னணியில் பேரம் பேசலுக்கு இந்த அதிகார பகிர்வு போட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும், அதற்கு மாறாக அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக சுமந்திரனின் கருத்து அமைந்துள்ளது.

நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகிறோம், சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சஜித் பிரேமதாசவிடம் பேசிய பேரம் பேசலின் இன்றைய நிலவரம் என்ன?

தயவு செய்து சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தமிழ் தேசியம் பேசுகிற அனைவரும் விடைகொடுக்க வேண்டும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி விடை கொடுக்க வேண்டும்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்.....

https://ibctamil.com/article/tamil-candidate-issue-itak-politics-sumanthiran-1727267179

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, nunavilan said:

நடைமுறையில் நடப்பதை யாரும் எழுதலாம். உங்களுக்கு ஆச்சரியம் அளித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

கள்ளா! என று தெருவில் சிலர் கத்தியது மட்டுமே  முக்கிய ஆதாரம் போன்று நீங்கள் எழுதியது தங்களுக்கு சாதாரணமான விடயமாக தோன்றி இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

சுமந்திரனின் கருத்துக்கு தமிழர் தரப்பலிருந்து எழுந்த கேள்வி

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கிய அரியநேத்திரனை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்கள் பொருட்படுத்தியது யாரை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சித் தலைவர் என்.சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்கள் மோதிய நிலையில், சிங்கள பேரின வாதம் கீழ் நிலைக்கு சென்றுள்ள பின்னணியில் பேரம் பேசலுக்கு இந்த அதிகார பகிர்வு போட்டி பயன்படுத்தியிருக்க வேண்டும், அதற்கு மாறாக அரியநேத்திரனை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாக சுமந்திரனின் கருத்து அமைந்துள்ளது.

நாங்கள் ஒன்றை கேட்க விரும்புகிறோம், சுமந்திரனும் அவரை சேர்ந்தவர்களும் சஜித் பிரேமதாசவிடம் பேசிய பேரம் பேசலின் இன்றைய நிலவரம் என்ன?

தயவு செய்து சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தமிழ் தேசியம் பேசுகிற அனைவரும் விடைகொடுக்க வேண்டும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி விடை கொடுக்க வேண்டும்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்.....

https://ibctamil.com/article/tamil-candidate-issue-itak-politics-sumanthiran-1727267179

இது பதிலடி😂?

இதற்கு சும் பதில் சொல்ல முதல் பொது வேட்பாளராக சிறிகாந்தா அவர்கள் ஏன் நிற்க முன்வரவில்லை என்பதற்கு பதில் கொடுத்து விட்டாராமா😎? பலியாடு போல அரியநேத்திரன் அவர்களை முன்னிறுத்தி விட்டு, வரும் பொதுத் தேர்தலில் இவர்கள் போன்றோர் நின்று, வென்று பாராளுமன்றக் கன்ரீனில் திண்டு கொழுக்கிற பிளானில் இருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் இந்த அர்த்தமில்லாத கேள்விகள் வேற?

Posted
1 hour ago, Kapithan said:

நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,......

இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣

என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா  கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில்  நடமாடினால்  போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு. 

திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺

டொரண்டோவில் இருந்து கத்தினால் ஒரு வேளை  றோவுக்கு கேட் க கூடும்.🙃
இங்கு நான் மக்களை கேட் கும் போதும் அதனையே கூறுகிறார்கள். 
உள்ளாளும் கள்ளாலுமாக களவு செய்தால் நிரூபிப்பது ரொம்ப கஸ்டம்.
உங்களுக்கு நல்ல மண்டை உள்ளது என்ற.  நினைப்போ??!😅

4 minutes ago, island said:

கள்ளா! என று தெருவில் சிலர் கத்தியது மட்டுமே  முக்கிய ஆதாரம் போன்று நீங்கள் எழுதியது தங்களுக்கு சாதாரணமான விடயமாக தோன்றி இருக்கிறது.  

உங்களுக்கு சாதகமில்லாததால் குமுறுகிறீர்கள். நான் வாக்களித்த மக்களின் மண்ணில் உள்ள மக்களிடம் விசாரித்து அதே மண்ணில் இருந்து எழு துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரஞ்சித் said:

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. 

தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 

2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? 

சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து  இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான  சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். 

தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 

4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. 

இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? 

இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச்  சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 

5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. 

அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? 

இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 

6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ"  என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். 

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அருமையான பதில் ரஞ்சித்.
சுத்து மாத்து சுமந்திரனுக்கு மட்டுமல்ல இங்கு அரைகுறை அரசியல் அறிவுடன் நுனிப்புல் மேய்கின்ற அதி மேதாவிகளுக்கும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். 

அவர்கள் எப்பவும் இருட்டுக்குள் யானையை பார்த்துவிட்டு வந்து அவித்து இறக்குகின்ற ஆட்கள் தானே.. 😂 

  • Like 1
  • Haha 2
Posted

ஒரு  கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம்.  என்ன ஒரு  ரெளடிசம்.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, nunavilan said:

டொரண்டோவில் இருந்து கத்தினால் ஒரு வேளை  றோவுக்கு கேட் க கூடும்.🙃
இங்கு நான் மக்களை கேட் கும் போதும் அதனையே கூறுகிறார்கள். 
உள்ளாளும் கள்ளாலுமாக களவு செய்தால் நிரூபிப்பது ரொம்ப கஸ்டம்.
உங்களுக்கு நல்ல மண்டை உள்ளது என்ற.  நினைப்போ??!

அறிவியல்   விஞ்ஞானம்,  Common sense க்கும்,  எந்தவித ஆதாரமும் இன்றி கதை விடுபவர்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான்  எதிர்பார்ப்பது இல்லை. 

கள்ளன் கள்ளன் என்று சுமந்திரனுக்கு  கூக்குரலிடுவதும்,  RAW agent என்று என்னை எந்தவித ஆதாரமுமின்றி வெறுப்பின் அடிப்படையில்  கூறுவதும்  ஒன்றுதான்.  

எவற்றிற்குமே ஆதரம் தேவை இல்லை. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, nunavilan said:

ஒரு  கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம்.  என்ன ஒரு  ரெளடிசம்.?

மத்திய குழுவில் எத்தனை பேர்? வவுனியா கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

13 minutes ago, தமிழ் சிறி said:

அருமையான பதில் ரஞ்சித்.
சுத்து மாத்து சுமந்திரனுக்கு மட்டுமல்ல இங்கு அரைகுறை அரசியல் அறிவுடன் நுனிப்புல் மேய்கின்ற அதி மேதாவிகளுக்கும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். 

அவர்கள் எப்பவும் இருட்டுக்குள் யானையை பார்த்துவிட்டு வந்து அவித்து இறக்குகின்ற ஆட்கள் தானே.. 😂 

இருட்டுக்குள் சும் நடந்து போக "கள்ளா" என்று கத்தின ஒரு நிமிட வீடியோவை வைத்துக் கொண்டு இப்பவும் நம்புகிறீர்கள் ஒரு வதந்தியை! நிச்சயம் "வேரோடு புல்லை மேய்ந்திருக்கிறீர்கள்" என நம்புகிறேன்😂!

Posted
2 minutes ago, Justin said:

மத்திய குழுவில் எத்தனை பேர்? வவுனியா கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?

43

23

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.