Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
24 SEP, 2024 | 03:00 PM
image
 
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/194696

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் இலங்கையின்... இரண்டாவது பெண் பிரதமர் என நினைக்கின்றேன்.  வாழ்த்துக்கள்.

Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இவர் இலங்கையின்... இரண்டாவது பெண் பிரதமர் என நினைக்கின்றேன்.  வாழ்த்துக்கள்.

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். 

இடையில், சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோ வுக்கு ஏதோ ஒரு பதவி கொடுத்து இருந்தார்கள் அல்லவா? அது எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, நிழலி said:

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். 

இடையில், சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோ வுக்கு ஏதோ ஒரு பதவி கொடுத்து இருந்தார்கள் அல்லவா? அது எது?

இலங்கையின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தான் இலங்கையின் முதல் பெண் பிரதமர் அத்துடன் அவர்தான்.. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் பெற்று இருந்தார். 

சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோவுக்கு பதவி கொடுத்தது நினைவில் உள்ளது,
ஆனால் என்ன பதவி என்று எனக்கும் தெரியவில்லை நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, சுவைப்பிரியன் said:

இவர் 3 வது பெண் பிரதமராம்.

சரி: 1. சிறிமாவோ, 2. சந்திரிக்கா. இவர் இப்போது 3 வது பெண் பிரதமர்.

Posted

விஜித ஹேரத் பல அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சராக பதவியேற்று இருக்கின்றார். அதில் ஒன்று பெளத்த மதத்துக்கான அமைச்சு.

சமூக நீதி எனும் முகமூடியை போட்டுக் கொண்டு வந்துள்ள அனுரவின் அமைச்சுகளிலும், மற்ற எல்லா சனாதிபதிகளின் அமைச்சரவையைப் போல் பெளத்ததுக்கு என ஒரு அமைச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

இடையில், சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோ வுக்கு ஏதோ ஒரு பதவி கொடுத்து இருந்தார்கள் அல்லவா? அது எது?

12 minutes ago, சுவைப்பிரியன் said:

இவர் 3 வது பெண் பிரதமராம்.

6 minutes ago, Justin said:

சரி: 1. சிறிமாவோ, 2. சந்திரிக்கா. இவர் இப்போது 3 வது பெண் பிரதமர்.

ஹரினி அமரசூரிய மூன்றாவது   பிரதமர் என்பதே சரி.
சந்திரிகா.. 1994´ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள்  பிரதமராக இருந்து  ஜனாதிபதி ஆகியவுடன்... தான் வகித்த  பிரதமர் பொறுப்பை, தாயார் ஸ்ரீமாவோவிடம் ஒப்படைக்க  அவர் 1994 நவம்பர் மாதத்தில் இருந்து 2000´ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தார்.

இலங்கையில் 18  வருடங்கள் பிரதமராக பதவி வகித்து சாதனை படைத்ததும்  ஸ்ரீமாவோ தான். மனிசி பல சாதனைகளை படைத்து விட்டுத்தான் போயிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, நிழலி said:

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். 

இடையில், சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோ வுக்கு ஏதோ ஒரு பதவி கொடுத்து இருந்தார்கள் அல்லவா? அது எது?

1994 ஆகஸ்ட் மாதம்   பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா சிறிது காலம் பிரதமராக இருந்து விட்டே பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார் என நினைக்கிறேன். என் ஞாபகம்  சரி என்றால்  இவர் மூன்றாவது பெண் பிரதமர்.  

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

விஜித ஹேரத் பல அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சராக பதவியேற்று இருக்கின்றார். அதில் ஒன்று பெளத்த மதத்துக்கான அமைச்சு.

சமூக நீதி எனும் முகமூடியை போட்டுக் கொண்டு வந்துள்ள அனுரவின் அமைச்சுகளிலும், மற்ற எல்லா சனாதிபதிகளின் அமைச்சரவையைப் போல் பெளத்ததுக்கு என ஒரு அமைச்சு.

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையில் தான் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று அநுர தேர்தலிற்கு முதல் வாரம் சொல்லியிருந்தார்.  இதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் Article 9 இல் ஒரு மாற்றமும் கிடையாது என்று உறுதி வழங்கியிருந்தார்.

நாங்கள் கார்ல் மார்க்ஸை நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ தெரியவில்லை........... அவர் இறந்து, அவரின் கதை பூமியில் எப்பவோ முடிந்து விட்டது................🤣.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரசோதரன் said:

இதில் மாற்றம் செய்யும் தைரியம் யாருக்கும் இல்லை என்றுதான்நினைக்கிறேன். அப்பிடிச் செய்யநினைத்தால் அடுத்தநாளே வீட்டை போகவேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரசோதரன் said:

நாங்கள் கார்ல் மார்க்ஸை நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ தெரியவில்லை........... அவர் இறந்து, அவரின் கதை பூமியில் எப்பவோ முடிந்து விட்டது................🤣.   

இல்லை முடியவில்லை   இவரின்  தத்துவம் /கொள்கை உலகம் எங்கும் பல்கலைக்கழகங்களில். படிப்பிக்கப்படுகிறது 

இவர் ஜேர்மானியர் திருமணம் செய்தது. வயது கூடிய பெண்ணை 

ரொம்ப கஸ்டப்பட்டார்கள். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

இவர் ஜேர்மானியர் திருமணம் செய்தது. வயது கூடிய பெண்ணை 

👍............

அவரைப் பற்றி மூன்று வரிகள் எழுதினால் அதில் ஒரு வரியாக மேலே உள்ளது ஆகிவிடுமளவிற்கு இன்று தேய்ந்து போய்விட்டார்...............🤣.

அரைக்கோளத்திற்கு ஒரு காலத்தில் ஒளியாகத் தெரிந்தவரின் இன்றைய நிலை இது.........   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன?

ஹரிணி அமரசூரிய

பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அமந்திகா குரே
  • பதவி, பிபிசி சிங்கள மொழிச் சேவை
  • 16 நிமிடங்களுக்கு முன்னர்

சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்குமுன் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு, அரசியல் குடும்பப் பின்னணி இல்லாமல் பிரதமரான ஹரிணி அமரசூரிய யார்?

இளமைக்காலம் மற்றும் கல்வி

1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கொழும்பில் பிறந்தார் ஹரிணி. அவருக்கு இரண்டு உடன்பிறந்தவர்கள் உள்ளனர்.

கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வியை முடித்த அவர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் முடித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2011-இல், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேசச் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஹரிணி அமரசூரிய

பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA

படக்குறிப்பு, ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்

சமூகப் பணிகள்

கடந்த 10 ஆண்டுகளால, ஹரிணி அமரசூரிய இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார்.

பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஈடுபட்ட அவர், 2016 முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அவர் சமூக நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளிலும் ஆர்வலராக இருந்துள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கையில் பெண்கள் மற்றும் பாலினம் குறித்த ஆராய்ச்சி நிறுவனமான CENWOR-இல் பதவி வகித்துள்ளார்.

ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹரிணி அமரசூரிய

பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA

படக்குறிப்பு, ஹரிணி, 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்

ஆசிரியர் சங்கங்களில் ஈடுபாடு

ஹரிணி, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016-இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர், 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி, சமீபகாலமாக இலவசக் கல்வி தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தலைமையில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

அரசியலில் வாழ்க்கை

ஹரிணி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், 2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றிபெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் அந்தப் பதவியில் பணியாற்றி வருகிறார்.

அந்த நேரத்தில், அவர் 389 நாட்களில் 269 நாட்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் வகித்த பதவிகள் பின்வருமாறு:

  • இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றம்
  • இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஆராய்வதற்கும் அதன் பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கும் பாராளுமன்ற சிறப்புக் குழு
  • சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு
  • இலங்கையில் சிறார் போஷாக்குக் குறைபாடு அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற விசேஷ குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, விரைவாக நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள்
  • குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலினம் மீதான துறைசார் கண்காணிப்புக் குழு
  • விலங்குகள் நலம் தொடர்பான நாடாளுமன்றக் கணக்குக் குழு
  • நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழு
  • கல்விக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு

‘manthri.lk’ என்ற இணையதளம் வெளியிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையின்படி, அவர் 225 எம்.பி-க்களில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 14 தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றில், அவர் பெரும்பாலும் கல்வி, உரிமைகள், பிரதிநிதித்துவம், சுகாதாரம், பொருளாதாரம், மற்றும் நிதி தொடர்பான தலைப்புகளில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஹரிணி அமரசூரிய

பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA

தேர்தல் பரப்புரைக்காக 21,500 கி.மீ பயணம்

அநுர குமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரையின் போது முனைவர் ஹரிணி அமரசூரியவின் பங்கு தனித்து தெரிந்தது. தேர்தலுக்கு முன்பு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் ஹரிணி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 21500 கி.மீ பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

"எங்கள் தேர்தல் பரப்புரையின் போது, நான் 21,500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியிருப்பேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்திருப்பேன். என்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான அதே நேரத்தில் அதிகம் சோர்வடைய வைத்த காலகட்டம் அது," என்று முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

அரசியல் பின்னணியை சாராத முதல் பிரதமர்

உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தேர்வு செய்யப்பட்டவரே. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கே கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கே பிரதமராக பொறுப்பேற்றார்.

அவரை தொடர்ந்து அவரின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரதுங்கா 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாறு காணாத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பிரதமர் பொறுப்பு வகித்து வந்த தங்களின் கணவர்கள், தந்தைகள் இறந்த பின்னரே அந்த பொறுப்பிற்கு வந்தனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்று தெற்காசியா முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை காண இயலும். இந்த நாடுகளில் உருவான பெண் தலைமைகள் அனைவரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.

ஆனால் ஹரிணியை பொறுத்தமட்டில் இவர் ஒருவர் தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணி ஏதுமின்றி பிரதமர் ஆன முதல் பெண்ணாவார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர்

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படலாம்- புதிய பிரதமர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நிழலி said:

விஜித ஹேரத் பல அமைச்சுகளுக்கு பொறுப்பான அமைச்சராக பதவியேற்று இருக்கின்றார். அதில் ஒன்று பெளத்த மதத்துக்கான அமைச்சு.

சமூக நீதி எனும் முகமூடியை போட்டுக் கொண்டு வந்துள்ள அனுரவின் அமைச்சுகளிலும், மற்ற எல்லா சனாதிபதிகளின் அமைச்சரவையைப் போல் பெளத்ததுக்கு என ஒரு அமைச்சு.

புத்தசாசன பிரிவின் கீழ் தான் கீழே உள்ள அனைத்து பிரிவுகளும் வருகின்றன
பௌத்த அலுவல்கள் திணைக்களம்
முஸ்லீம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம்
இந்துசமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
தேசிய அரும்பொருள் காட்சியக திணைக்களம்
தேசிய சுவடிகள் திணைக்களம்
மத்திய கலாசார நிதியம்

Art council of Sri Lanka,  National Heritage division, Department of Archeology ... 
இப்படி இன்னும் பல

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரதமர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் எல்லோரும் பதவி விலகிக் கொண்டு இருக்கின்றார்கள்.
குத்தியன் டக்ளஸ்… கல்லுளி மங்கன் மாதிரி தனது அமைச்சுப் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறான்(ர்) 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

👍............

அவரைப் பற்றி மூன்று வரிகள் எழுதினால் அதில் ஒரு வரியாக மேலே உள்ளது ஆகிவிடுமளவிற்கு இன்று தேய்ந்து போய்விட்டார்...............🤣.

அரைக்கோளத்திற்கு ஒரு காலத்தில் ஒளியாகத் தெரிந்தவரின் இன்றைய நிலை இது.........   

அவர்கள் உலகில் சிறந்த காதல் சோடி  இன்பத்திலும். துன்பத்திலும்  இணைபிரியாமால்  

இருந்தார்கள்  வயதை என்னத்துக்கு   அது ஒரு எண் அவ்வளவு தான்   வயதை பார்த்து  / முக்கியம் கொடுத்து திருமணம் செய்வது பைத்தியகரத்தனம்    மனம் ஒத்துப்போனால்.  திருமணம் செய்யலாம்  வயது வாழ்வதில்லை 🤣🤪 மனம் தான் வாழ்வது 🙏

குறிப்பு.    பிரான்ஸ் ஐனதிபதி தம்பதியினரைப் பாருங்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

👍......

புதிய பிரதமர் ஹரினி நேர்மையானவர், துணிச்சலானவர் என்று சொல்கின்றனர். எக்கச்சக்கமாகப் படித்தவர், ஆனால் கள அனுபவம் உள்ளவரா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அரவிந்த் கெய்ரிவால் போல நடைமுறைகள் தெரியாமல், சிக்கலில் அவரும் மாட்டி, மக்களையும் மாட்டிவிடக் கூடாதல்லவா...... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

பிரதமர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள் எல்லோரும் பதவி விலகிக் கொண்டு இருக்கின்றார்கள்.
குத்தியன் டக்ளஸ்… கல்லுளி மங்கன் மாதிரி தனது அமைச்சுப் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறான்(ர்) 😂

அவர் கலவரையற்ற அமைச்சர்     🤣🤣🤣🤣.   எந்த அரசாங்கம் ஆட்சி செய்கிறதே   அதனுடைய  கொள்கை தான் அவரது கொள்கை 🤣🤣

அவருக்கு என்று கொள்கை. எதுவும் கிடையாது   

புலிகள் ஆண்டிருந்தாலும். விழுந்து கும்பிட்டு அமைச்சர் ஆகி இருப்பார்   அந்த நேரம் புலிகளின். கொள்கை தான் அவரது கொள்கை     எதிர் கட்சியில்.  அவர் இருந்து இருக்கிறாரா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

அவர் கலவரையற்ற அமைச்சர்     🤣🤣🤣🤣.   எந்த அரசாங்கம் ஆட்சி செய்கிறதே   அதனுடைய  கொள்கை தான் அவரது கொள்கை 🤣🤣

அவருக்கு என்று கொள்கை. எதுவும் கிடையாது   

புலிகள் ஆண்டிருந்தாலும். விழுந்து கும்பிட்டு அமைச்சர் ஆகி இருப்பார்   அந்த நேரம் புலிகளின். கொள்கை தான் அவரது கொள்கை     எதிர் கட்சியில்.  அவர் இருந்து இருக்கிறாரா??

டக்கிக்கு.. நெடுக வெள்ளி திசை அடிக்காது.
இனி…இறங்கு முகம் தான். 
நாலு சனிக்கிழமை விரதம் பிடித்து… எள்ளெண்ணை எரித்தால் சிலவேளை பலன் கிடைக்கலாம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம மந்திரி ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும். எனவே பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமாவை கையளித்த உடனையே  டக்லஸ் தனது  தானாகவே இழந்துவிட்டார்.  தனியே ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, island said:

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம மந்திரி ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும். எனவே பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமாவை கையளித்த உடனையே  டக்லஸ் தனது  தானாகவே இழந்துவிட்டார்.  தனியே ராஜினாமா செய்ய வேண்டியதில்லை. 

தகவலுக்கு நன்றி. 🙂

ஓ…. நான் அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.
பிரதமர் இல்லாத இடத்தில்… அமைச்சருக்கு அங்கு என்ன வேலை. 😁

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி. 🙂

இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிய மீண்டும் அமைச்சாக அவர் முயலக் கூடும். ஆனால், அநுரவிடம் இவரின் பாச்சா பலிக்காது என்றே நினைக்கிறேன். 

அநுராவுக்கு மண்டை பிழை என்று பிள்ளையான் கூறிய காணொளி வேறு சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையில் தான் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று அநுர தேர்தலிற்கு முதல் வாரம் சொல்லியிருந்தார்.  இதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் Article 9 இல் ஒரு மாற்றமும் கிடையாது என்று உறுதி வழங்கியிருந்தார்.

நாங்கள் கார்ல் மார்க்ஸை நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ தெரியவில்லை........... அவர் இறந்து, அவரின் கதை பூமியில் எப்பவோ முடிந்து விட்டது................🤣.   

உண்மை,
கார்ல் மார்க்ஸை பின்பற்றுவதாகப் படம்காட்டும் தென்னமெரிக்க மற்றும் ஆசிய நாடுகள்தான் ஐ.நா.மனித உரிமைச் சபையிலே தமிழின அழிப்பு எதிரான போர்க்குற்ற விசாரைணையை நிராகரித்துவருவதோடு, வெளிநாட்டு விசாரணைகள் தேவையில்லை என்று கூறிவரும் நாடுகளாகும். இதுதான் இவர்களது கார்ல் மார்க்ஸைப் பின்பற்றும் தன்மை. இதில் தீவிர இந்திய எதிர்ப்பாளராக, சீன ஆதரவாளராக, பௌத்த சாசனத்தை மீறாதவராக ஒரு புதிய இலங்கையைக் கட்டமைக்கப்(?) போகிறார் புதிய சனாதிபதி என எப்படி நாம் ஒரு வெள்ளாந்தித் தனமாக நம்புகின்றோம்??????????????  
நட்பார்ந்த நன்றியுடன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.