Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா
—————————————————————-
சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது!
லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள்.

சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை  அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல்.
அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள்.

கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில்  செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார்.
ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி  பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும்.

அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. 
உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை.
அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!!


இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர்.

இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன?

குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன?

புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.
இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? 


அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! 
இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை!
ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர...

ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்!
JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.
தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!!
 
ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்!

அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம்.

நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு!

நன்றி
மதுசுதன்
23.09.2024

WhatsApp பகிர்வு

  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையாகவே புலம்பெயர் சிங்கல மக்கள் இலங்கையில்  சிறந்த தலைமை ஒன்றை கொண்டுவந்து விட்டனரா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் ஒரு தலைவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலை கஸ்டம் என்று எல்லாமே சேர்ந்து தற்போதைய அரசியல்வாதிகளை ஒதுக்கவிட்டது.

புலம் பெயர்ந்த சிங்கள மக்கள் தாங்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் தமிழர்களை தாங்களாகவே இருக்க இந்தியாவோ இலங்கையோ விடுவதில்லை.

கோத்தபையனுக்கும் இதே புலர்பெயர்ந்த சிங்கள மக்கள் வாக்கு போடவென்றே பல லட்சம் செலவு செய்து வாக்குகளைப் போட்டு அழகு பார்த்தார்கள்.

அந்தநேரம் கொள்ளைக்காரரை கண்ணுக்குத் தெரியவில்லையோ?

ஜேவிபியை கண்ணுக்குத் தெரியலையோ?

இப்போதும் ரணிலின் பேராசையால்த் தான் அனுரா ஜனாதிபதியாகியிருக்கிறார்.

எத்தனை வருடம் நீடிப்பார்?அடுத்தடுத்து வருவாரா?

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Like 2
Posted

இப்போது தேன் நிலவு காலம் என உறுதியாக நம்புகிறேன். 6 மாதம் வரை நிலைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படிப் பார்த்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொலைவில் இல்லை என்று நம்பலாமா.?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கள டயஸ்போராக்கள்  துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு விளம்பரபடுத்தி இப்போது இவர் எடுத்தது  42.31வீதம். சிங்கள டயஸ்போராக்கள் முன்பு செயல்பட்டு கோத்தபையா  எடுத்தது 52.25 வீதம்
தமிழில் பிரசாரம்என்று நினைக்கிறேன் வீடு நிலம் உறவுகள் அங்கே நாங்கள் ஏன் இங்கே  இலங்கையில் புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள நிலையில் சொந்த மண் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழர்கள்.

Posted
1 hour ago, vanangaamudi said:

அப்படிப் பார்த்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொலைவில் இல்லை என்று நம்பலாமா.?

இல்லை . தனி தவில் அடிக்க கூடிய ஒரு ஜனாதிபதியாக  அனுர இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசை அனுர நிறுவுவார் என மக்கள் நம்பவில்லை. இது ஒரு எதிர்வு கூறல் மட்டுமே. பிறகு என்னை போட்டு தாக்க வேண்டாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nunavilan said:

இல்லை . தனி தவில் அடிக்க கூடிய ஒரு ஜனாதிபதியாக  அனுர இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசை அனுர நிறுவுவார் என மக்கள் நம்பவில்லை. இது ஒரு எதிர்வு கூறல் மட்டுமே. பிறகு என்னை போட்டு தாக்க வேண்டாம். 

 

இவரால் எந்த மாற்ற்த்தினையும் இலங்கையில் ஏற்படுத்த முடியாது, இதுவும் ஒரு இனவாத சிங்களத்தின் தம்மை தக்கவைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி, கோட்டபாய அரசினை ஆட்சிக்கு கொண்ட வந்த போது அவர்களுக்கு இஸ்லாமியர்களால் அவர்களது இருப்பிற்கு பாதிப்பு இருப்பதாக எண்ணினார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவது தமக்கான இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படையிலே இருந்தார்கள் இருக்கின்றார்கள்.

அவர்கள் ஆட்சிக்கொண்டு வந்த கோட்டபாய இலங்கையினை இன்னமும் ஒரு படி கீழிறக்கி விட்டுள்ளார்.

தற்போது இவர், இவருக்கு பொருளாதார, அரசியல், சமூக, வெளிவிவகாரம் என பல முனைகளில் பிரச்சினை உள்ளது, இவரும் ரணில் போல ஒரு ஆட்சியினையே வழங்க முடியும் அதிக பட்சமாக அதற்கு மேல் இவரால் எதுவும் செய்ய முடியாது குறிப்பாக ஊழலை ஒழிக்க முடியாது, நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பூகோள அரசியல் ரீதியாகவும் இலங்கை ஒரு இருண்ட கால கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த தீவிர இடது சாரி பிரச்சாரங்களை மேடை பேச்சோடு வைத்தால்  ஓரளவிற்கு சிறிது காலம் தாக்கு பிடிக்கக்கூடும்.

இதுவும் ஒரு மண்குதிர்தான்.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

நூற்றுக்கு மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசை அனுர நிறுவுவார் என மக்கள் நம்பவில்லை.

அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி.

நாங்கள் இன்னமும் தமிழர்களின்  சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப்  பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில்  இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி  நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும்.

யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச்  செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான்.

தமிழர் ஒருங்கிணைப்பானது  விடுதலைப் புலிகளின் சகல  நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம்புலிகள் புராணம்பாடுவதைத் தவிர வேறு  பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால்  தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன்.

இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான்.
 
அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா?
அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும்.
இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை.
 
இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில்
IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.
IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது.
 
அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது.
 
இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான்.

எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. 

மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை. 

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றால் அது பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் ஆதரிக்கப் படும் ஒரு ஜனாதிபதியாலேயே/ கட்சியாலேயே முடியும் 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவர்கள் நினைத்தால் மட்டுமே தமிழர்களிற்கு நன்மை கிடைக்கும் என்பது தான் இனவாதம். இதை ஒருவருக்கு ஒரு ஓட்டு உள்ள பல்லினங்களை கொண்ட நாடுகளில் இந்த இனவாதத்தை வேறு வழிகளில் சரி செய்வார்கள். பெரும்பாலும் பாராளமன்ற அமைப்பின் மூலம் நடைபெறும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/9/2024 at 17:23, Kavi arunasalam said:

தேவைக்கு ஏற்ற பதிவு நிழலி.

நாங்கள் இன்னமும் தமிழர்களின்  சங்ககாலத்து வீரம், ஆளுமை போன்ற பழைய காலத்துப்  பெருமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோமே தவிர, இப்பொழுது எந்த நிலையில்  இருக்கின்றோம் அடுத்து என்ன செய்யப் போகின்றோம் என்பதைப் பற்றி  நாங்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.

மற்றைய நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் யேர்மனியைப் பற்றி என்னால் ஓரளவு சொல்ல முடியும்.

யேர்மனியில், தாயகத்துக்காக, தமிழர்களின் மீட்சிக்காக செயற்படும் அமைப்புகளைக் காண முடிவதில்லை. தமிழ் அமைப்புகள் என்று தொடங்கப்படும் பல அமைப்புகள் நீண்ட காலங்களுக்குச் செயற்படுவதும் இல்லை. ஒரு காலத்துக்குப் பின் அவை முடங்கிப் போய்விடுகின்றன. ஓரளவுக்கு நீண்ட காலங்களாகச்  செயற்படும் அமைப்பு என்றால், விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டு உலகத் தமிழர் இயக்கமாக மாறி இன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒன்றைத்தான் சொல்ல முடியும். இவர்களின் இருப்புக்குக் காரணமே யேர்மனியில் உள்ள தமிழ் பாடசாலைகள்தான்.

தமிழர் ஒருங்கிணைப்பானது  விடுதலைப் புலிகளின் சகல  நிகழ்வுகளைகளையும் மேடை ஏற்றுகிறது. அதில் உள்ளவர்கள் கோட் சூட், கறுப்பு- வெள்ளை, மஞ்சள்-சிவப்பு ஆடைகளை அணிந்து வந்து நிகழ்ச்சிகளை அலங்கரிக்கிறார்கள். கோயில்களை நிர்வகிக்கிறார்கள். தமிழ் பாடசாலைகள் நடத்துகிறார்கள். இதில் இவர்கள் நடத்தும் பாடசாலையில் கல்விப் பாடப் புத்தகங்கள் சரியானதில்லை, தமிழர்களது வரலாற்றைக் கொச்சைப் படுத்துகிறது என சில அதிருப்தியாளர்கள் சேர்ந்து வேறு ஒரு அமைப்பைத் தனியாகத் தொடங்கி பாடசாலைகளை நடாத்துகிறார்கள். போட்டிக்கு கோயில்களை உருவாக்குகிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது புலிகள் அமைப்பே தங்களுக்குள் பிரிந்து நிற்கிறார்கள் என்பதே. இவர்களிடம்புலிகள் புராணம்பாடுவதைத் தவிர வேறு  பொது நோக்கு என்று எதுவுமே இல்லை என்பது வருத்தத்துக்குரியது.

தமிழர் ஒருங்கிணைப்பில் இருப்பவர்களிடம் தமிழ் உணர்வு இருக்கும் அளவுக்கு அரசியல் பற்றிய பெரிய அறிவுகள் கிடையாது என நினைக்கின்றேன்.ஆனால்  தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கின்றேன்.

இப்பொழுது நொச்சியை நான் கருத்துக்கள் தர அழைக்கிறேன்

 

நொச்சி வரமாட்டார். ஏனெனில் அவர் மதில் மேல் பூனை அல்ல. 

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.