Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
29 SEP, 2024 | 10:03 AM
image

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.   

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.     

அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,    

விசேடமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது.   

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.   

அத்துடன் ப.அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் சில விடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கத்தினை கேட்டுவிட்டு தீர்மானங்களை எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.   

அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இன்று விசேடமான அறிவிப்பு ஒன்றை மனம் உவந்து விடுக்கின்றோம்.  

தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கின்ற, விசேடமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கவேண்டும் என்று வினயமாக ஒரு அறிவிப்பு விடுக்கின்றோம்.   

சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து  இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்.  

அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும் தான் நாங்கள் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றொம்.   

அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிக விரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.  

அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக் கட்சி தனித்தும் போட்டியிடும். அத்துடன் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை ஒன்று வெளிப்படுத்தப்பட்டது.   

ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்ததந்த மாவட்டக் கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என தீர்மானித்திருக்கின்றோம்.   

அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளது  

தமிழ் பொதுக் கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்புகளும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க் கட்சி.   

இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வேறு பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலுமே தேர்தலில் போட்டியிட்டோம். அந்த வகையில் பிரதான கட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கின்றோம். 

வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.  தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு  எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றது.   

அது நல்ல விடயம். எனவே இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெறும்.   

அதனை ஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழு இறுதி முடிவுகளை எடுக்கும். மாவட்ட ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம்  என்றார்.  

https://www.virakesari.lk/article/195022

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

images?q=tbn:ANd9GcRhEBZ3aB6tM4YKfrKWm6O   M._A._Sumanthiran.jpg

ஒன்றாக இருந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பை...
கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர்  தான் சுமந்திரன். 

ஜனாதிபதி தேர்தலுடன்...  மக்கள் அவர்களுக்கு கொடுத்த  அடியுடன்  மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும்,  "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா?

இப்போ.... இருந்த  பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக  இருக்கலாம். மக்களும்  அப்படி இருப்பார்கள் என்று  எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி  தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல.

"இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

பிரிந்தவர்கள்  வந்து இணையுங்கள்.  இல்லாவிட்டால்  வழக்கு போடுவேன்னு  என்று சொன்னால் பயந்து வந்து இணையலாம்  😂🤣

சுமததிரனின். பழைய கட்சி  ஐக்கிய தேசிய கட்சி  அழிந்துவிட்டது   

சுமததிரனின்.  இப்போதைய கட்சி தமிழரசு கட்சியும. அழிந்துவிடும் அடுத்த பொது தேர்த்தலுடன். 

11. ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்   6 ஆக. வந்து விட்டது  இதுக்கு வழக்கு போடவில்லை     🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kandiah57 said:

நல்ல கைராசி.  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் போச்சுது. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

images?q=tbn:ANd9GcRhEBZ3aB6tM4YKfrKWm6O   M._A._Sumanthiran.jpg

ஒன்றாக இருந்த  தமிழ் தேசியக் கூட்டமைப்பை...
கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர்  தான் சுமந்திரன். 

ஜனாதிபதி தேர்தலுடன்...  மக்கள் அவர்களுக்கு கொடுத்த  அடியுடன்  மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும்,  "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா?

இப்போ.... இருந்த  பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக  இருக்கலாம். மக்களும்  அப்படி இருப்பார்கள் என்று  எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி  தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல.

"இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂

1 hour ago, தமிழ் சிறி said:

நல்ல கைராசி.  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் போச்சுது. 😂

தற்போதைய சூழலில் எல்லோரும் ஒன்று சேர்வதுதான் தமிழருக்கு உள்ள ஒரே தெரிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் தமிழரசுக் கட்சியில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

9 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.   

  • Like 1
Posted
7 hours ago, Kandiah57 said:

பிரிந்தவர்கள்  வந்து இணையுங்கள்.  இல்லாவிட்டால்  வழக்கு போடுவேன்னு  என்று சொன்னால் பயந்து வந்து இணையலாம்  😂🤣

இனிப்பு கொடுத்தால் இணைவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள் போல.😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன் - சி.வி.விக்கினேஸ்வரன்

Published By: VISHNU   29 SEP, 2024 | 07:28 PM

image

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன், 'அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும். ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'வாரம் ஒரு கேள்வி' பகுதியில், 'சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்களும் தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் நிற்பது அவசியம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் சேரும் வாய்ப்புக்கள் உள்ளதா?' என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கட்சிகளோ, கூட்டுக்களோ, சின்னங்களோ தமிழ்த் தேசியத்திற்கு முக்கியமல்ல. தமிழ்த்தேசிய சிந்தனை உடையவர்களே முக்கியம். அண்மையில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய சிந்தனையுடைய அரியநேத்திரனை 7 தேசியக் கட்சிகளும் 80 சிவில் சமூகத்தினரும் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுத்தினார்கள்.

நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இதற்கென வெளியில் வந்து பலவிதங்களில் அரியநேத்திரனுக்கு  உதவினேன். பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் கூட்டங்களில் பேசினேன். கொழும்பில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில் பேசினேன். கட்டமைப்பு பற்றிய பல கேள்விகளுக்குப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதில் இறுத்தேன்.

ஆனால் அரியநேத்திரனை முன்னிறுத்திய பின்னர் எமது ஏழு கட்சிகளில் அவர் சார்பாக வெளிப்படையாக வெளியே வந்து தமது ஆதரவைத் தெரிவித்தவர்கள் எத்தனை பேர்? பலர் இக்காலகட்டத்தில் காணாமல்போய்விட்டார்கள். ஒரு வைத்தியசாலையில் இருந்து நவீன பரிசீலனைகளை மேற்கொள்ள என்னை மற்றொரு வைத்தியசாலைக்கு அனுப்பியபோது இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நியமன நாளன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் அரியநேத்திரனுடன் நானும் சிற்பரனும் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.

சிரமம் பாராமல் நாம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் வேட்பாளர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே ஆகும்.  இவ்வாறான ஆதரவையும் அனுசரணையையும் குத்து விளக்கை மையமாக வைத்து செயற்பட்டுவரும் கட்சிகளிடையே நாங்கள் காணவில்லை.

அவர்களின்  மனோநிலையைப் புரிந்துகொண்டதால் தான் நாங்கள் அவர்களின் கூட்டில் இருந்து வெளியேறி வந்தோம். அதேபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு அணியின் தலைவர் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணித்து ஒரு சிங்கள வேட்பாளருடன் சேரவேண்டும் என்றே ஒற்றைக் காலில் நின்றார். அவர் தமிழ்த் தேசிய வேட்பாளரை எதிர்த்தார்.

தமிழ்த் தேசியப் பற்றாளரான சிறிதரன் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பார்க்கும் இந்நபர் எவ்வாறு எம்மை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சேர அழைக்கலாம்? அழைத்தாலும் அவரின் உள் எண்ணம் பற்றி சந்தேகம் எழுகின்றது. தமிழ்த்தேசியத்தை உதட்டளவில் பாவிக்கப் பார்க்கின்றாரோ நானறியேன்.

மூன்றாவதாக பகிஷ்கரிப்பு அணியினர் சிங்கள வேட்பாளரை பகிஷ்கரிப்பதாகக்கூறி கடைசியில் தமிழ்த்தேசிய வேட்பாளரையும் பகிஷ்கரித்தனர். இவர்கள் யாவரும் தமிழ்த்தேசியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட சுயநல காரணங்களே அவர்களை இயக்கி வருவதாக நான் உணர்கின்றேன்.

எம் தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் முதியவர்கள் நாம் பின்னின்று இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியப் பாதையில் அவர்கள் பயணிக்க வழிவகுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். சிலர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ஒற்றுமை ஏற்படுத்த முனையலாம்.

ஆனால் அவர்களின் சிந்தனை தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டதா அல்லது சொந்த சுயநலத்தின் பாற்பட்டதா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல. சுயநல காரணங்களுக்காகவே ஆகும்.

அரியநேத்திரனின் சின்னத்தை சிலர் தமக்குப் பெற்றவுடன் தாமும் அரியநேத்திரனாக உருமாற்றம் பெற்றுவிடப்போவதாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது. உதயசூரியனை சின்னமாக முன்பு எடுத்தவர்கள் தாம் தேர்தலில் வெற்றி பெறப்போவதாகக் கற்பனை செய்தார்கள்.

ஆனால் எமது தமிழ் வாக்காளர்கள் அந்தச் சின்னத்துக்குப் பதில் குறித்த சின்னத்தில் கேட்டவர்களையே அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணித்தார்கள். சின்னம் பெற்றால் சுயநலவாதிகள் பொதுநலவாதிகளாக மற்றும் தமிழ்த்தேசியப் பற்றாளர்களாக உடனே மாறிவிடுவார்கள் என்று நினைப்பது மடமை. ஆகவே ஒற்றுமை வேண்டும்; நாம் ஒன்றுபட வேண்டும். இளைஞர், யுவதிகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். தமிழ்த்தேசியத்தை முழுமனதுடன் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் எந்தவித முரணான கருத்துக்கும் இடமில்லை.

ஆனால் அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும். சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும்.

ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது. வேண்டுமெனில் தமிழ்த் தேசியத்தில் உண்மையில் ஈபட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் எம் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில் சேர்ந்து பயணிக்க முடியும்.

https://www.virakesari.lk/article/195083

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது - என். சிறீகாந்தா

Published By: VISHNU   29 SEP, 2024 | 09:35 PM

image

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாக செயற்பட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தயாராக உள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன.

எதற்காக இணையுமாறு அழைப்பு விடுக்க படுகிறது ? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்துவைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்தகாலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் நாங்கள் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு ஆகும்.

முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

இலங்கை தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளோம். அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாக தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/195089

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக் கட்சியில் இருக்கும் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களே ஒரு பொருளில் ஒரே கருத்தில் ஒரே குறிக்கோளுடன் பேசுவதில்லை. இதில் மற்றவர்களையும் கூப்பிட்டு ....?

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

சுமந்திரனின் அழைப்பு அமைவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஒருபோதும் இணையமாட்டேன் - சி.வி.விக்கினேஸ்வரன்

image

பத்தோடு பதினொன்றாக இருந்து பொழுதுபோக்கு  அரசியல் குளறுபடி செய்யும் இப்படியான பட்டுவேட்டி சால்வை கள்ளர்களை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, தமிழ் சிறி said:

எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார்

ஏன் இவர் போய் அவையளுடன் இணைய மாட்டாரோ ...இவர் பெரிய அப்பாடக்கரோ.....தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு  தங்கள் கட்சி தான் தலமை தாங்குகின்றது என காட்ட முயல்கின்றனர்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முடிவு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம் தொடர்பான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

அதேவேளை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் பொருட்டு அம்பாறை மற்றும் திருகோணமலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இணைந்து போட்டியிட முடியும் என தெரிவித்தார்.
 
http://www.samakalam.com/முடிவு-செவ்வாய்க்கிழமை-அ/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து கள மிறங்குவோம் - சுமந்திரன் தெரிவிப்பு

Published By: DIGITAL DESK 7   30 SEP, 2024 | 05:02 PM

image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம். அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (30) மாலை மன்னாரில் வைத்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.

அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

ஆகவே நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள், யுவதிகள், ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/195158

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.