Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசி தாக்குதலை தொடர்ந்தது. இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என உலகத் தலைவர்கள் பலர் எச்சரித்தனர். இதற்கு ஈரான் நிச்சயம் பதிலளிக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார். தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், மேற்கத்திய நாடுகளை ஒருங்கிணைத்து ஈரானுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க தீவிர ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் ஈரானுக்கு எதிரான எவ்வித தாக்குதலிலும் தாங்கள் இணையப் போவதில்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மக்கள் மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்ததுடன், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமினிடமும் தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை கேட்டறிந்தார். மேலும், போர்ப் பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடனும் தொலைப்பேசியில் ஸ்டார்மர் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310282

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்...................

யாழில் வாலி அண்ண‌ ஈரான் செத்த‌ கிளி என்று ந‌க்க‌ல் அடித்தார்

ஈரானின் ஒரு அடியோட‌ பொத்திட்டின‌ம்

இவ‌ர்க‌ள் ப‌ய‌ப்பிடுவ‌து ஈரான் மீது கை வைத்தால் பெற்றோலுக்கு த‌ட்டு பாடு வ‌ரும் விலை ஏற்ற‌ம் கூடும் ........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல்காறன் போட்டு தாக்கப்போறான். இவர்கள் அந்த அழிவில் தங்கள் பங்கு இல்லை என்று பின்வாங்குவதே அழிவு எப்படி இருக்க போகிறது என்பதற்கு சான்று. ஈரானை போற்றுகிறவர்கள் பார்த்து நடவுங்கள். உலகம் அதிரப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈரான் மிசேல‌ ஏவி இர‌ண்டு நாள் ஆக‌ போகுது

இஸ்ரேல் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்க‌னுக்கு அடி ப‌னிந்து அமைதியாய் இருக்கின‌ம்

ஈரான் மீது இஸ்ரேல் கை வைத்தால் 200மிசேலுக்கு ப‌தில் 500 மிசேல் ஒரே நேர‌த்தில் இஸ்ரேல் எங்கும் வ‌ந்து விழும்

ஈரானின் மிசேல் தாக்குத‌லில் இஸ்ரேல் விமான‌த்த‌ள‌ம் உடைந்து விட்ட‌து

ச‌ட்லையிட் ப‌ட‌ம் மூல‌ம் உண்மை வெளியில் வ‌ந்து விட்ட‌து...................மொசாட் இருக்கும் இட‌ங்க‌ளும் சேத‌ம்😁...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். 
ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஊர்க்காவலன் said:

பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். 
ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம். 

இவ‌ர்க‌ள் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்காட்டி இஸ்ரேல் தானாக‌ திருந்தும்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
47 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர்க‌ள் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்காட்டி இஸ்ரேல் தானாக‌ திருந்தும்.......................

ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு  நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட.  

வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி. 

Edited by ஊர்க்காவலன்
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஊர்க்காவலன் said:

ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு  நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட.  

வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி. 

அவேன்ட‌ தொழிநுட்ப‌த்தை ஜ‌டோம்மை தான்டி போய் தான் இஸ்ரேலில் ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ள் விழுந்து வெடிச்ச‌து

ஈரான் ம‌ட்டும் தொழிநுட்ப‌த்தில் வ‌ள‌ர‌ வில்லையா......................ஈரானால் அணுகுண்டு செய்யும் திற‌மை அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் போது ஏன் அமெரிக்கா குறுக்க‌ ம‌றுக்க‌ போய் ஈரான் அணுகுண்டு செய்ய‌ கூடாது என்று ம‌ண்டியிடுகின‌ம்.....................................

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேர‌டி மோத‌ல் வ‌ந்தால் இஸ்ரேலும் பெருத்த‌ அழிவை ச‌ந்திக்கும்

போன‌ வ‌ருட‌ம் இஸ்ரேல் அர‌சிய‌ல் வாதி சொல்ல‌ வில்லையா அணுகுண்டு வீச‌னும் என்று.....................கோழைக‌ள் தான் அணுகுண்டை கையில் எடுப்பார்க‌ள்😁..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, வீரப் பையன்26 said:

இந்த அணுகுண்டு பூச்சாண்டி எல்லா நாடும் எல்லா காலங்களிலும் செய்யிறது தான். அவ்வளவு முட்டாள்தனமாக எந்த நாடும் அணுகுண்டு பாவனைக்கு போகாது. இது முழு உலகத்தையும் எதிர்ப்பதற்கு சமன். 

இந்த சமாச்சாரம் சாதாரண மனிதர்கள் யூகிக்க மட்டுமே முடியும். ஒரு போதும் "இப்படி தான்" என்று உறுதியாக சொல்லமுடியாது. உதாரணமாக அமெரிக்க இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே எச்சரித்திருந்தது. அப்படியிருந்தும் இதை இஸ்ரேல் அனுமதிருக்கிறது. யுகத்தின் அடிப்படையில் வேண்டும் என்றால் இஸ்ரேல் உலக நாடுகளிடம் அனுதாபம் தேடுவதற்கு வேண்டும் என்றே இந்த தாக்குதலை நிகழ்த்த விட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். 

அதேவேளை ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அந்த ஹெலிகாப்டர் பேரிச்சம் பழத்திற்கு போடும் அளவு கண்டிசனில் இருந்தது நமக்கு தெரியும். இந்த சம்பவத்தை வைத்துகூட ஈரானின் நவீன ஆயுத பலத்தை யுகத்தின் அடிப்படையில் கணக்கிட முடியும். 

வெளியில் வாய்ப்பேச்சில் எல்லோரும் வீரர்கள் தான். உள்ளே நிலைமை எப்படியென்று சண்டை வரும் போதுதான் தெரிய வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஊர்க்காவலன் said:

வெளியில் வாய்ப்பேச்சில் எல்லோரும் வீரர்கள் தான். உள்ளே நிலைமை எப்படியென்று சண்டை வரும் போதுதான் தெரிய வரும். 

👍.............

ஈரான் விழுந்த அந்த பழைய ஹெலிகாப்டருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தானா இவர்கள் என்று நினைக்க வைத்தனர் அன்று. பின்னர் இரவில் இருட்டில் தேட முடியாது என்றனர். உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் ஈரானியர்கள் என்றும் சொல்லியிருந்தனர், ஆனால் விழுந்ததை கண்டுபிடித்தது துருக்கியின் ட்ரோன்களே, ஈரானின் ட்ரோன்கள் அல்ல.

எவரும் அயன் டோமை சில தடவைகள் தர்க்கமுடியும். ஹமாஸ் கூட தற்போதைய சண்டையின் முதலாவது நாளில் - அக்டோபர் 07, 2023 அன்று - அயன் டோமை மீறி இஸ்ரேலிற்குள் ஏவுகணைகளை விழுத்தியது. அயன் டோமியின் சக்தியை மீறி அதிக ஏவுகணைகளை மிகக் குறுகிய நேரத்திற்குள் செலுத்தினால், அயன் டோமால் வரும் எல்லா ஏவுகணைகளையும் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு ஏவுகணைகளை தொடராகச் செலுத்துவதற்கு எவரினதும், எந்த நாட்டினதும் பொருளாதாரமும் வளங்களும் இடம் கொடுக்காது. அத்துடன் அயன் டோமின் வலுவையும் இஸ்ரேலும் அதிகரிக்கும், எதிர் ஏவுகணைகளின் எண்ணிக்கையக் கூட்டுவதன் மூலம். அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இப்படியான "திட்ட வட்டமான அறிவிப்பு" எங்கே வெளியிடப் பட்டதாம்? யாராவது இணைப்பைத் தர முடியுமா?

தெரியவில்லையே அண்ணை. தினக்குரல் ஏதும் தவறாக மொழிபெயர்த்துவிட்டதோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரசோதரன் said:

👍.............

ஈரான் விழுந்த அந்த பழைய ஹெலிகாப்டருக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையே காரணம் என்றும் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தானா இவர்கள் என்று நினைக்க வைத்தனர் அன்று. பின்னர் இரவில் இருட்டில் தேட முடியாது என்றனர். உலகில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்தவர்கள் ஈரானியர்கள் என்றும் சொல்லியிருந்தனர், ஆனால் விழுந்ததை கண்டுபிடித்தது துருக்கியின் ட்ரோன்களே, ஈரானின் ட்ரோன்கள் அல்ல.

எவரும் அயன் டோமை சில தடவைகள் தர்க்கமுடியும். ஹமாஸ் கூட தற்போதைய சண்டையின் முதலாவது நாளில் - அக்டோபர் 07, 2023 அன்று - அயன் டோமை மீறி இஸ்ரேலிற்குள் ஏவுகணைகளை விழுத்தியது. அயன் டோமியின் சக்தியை மீறி அதிக ஏவுகணைகளை மிகக் குறுகிய நேரத்திற்குள் செலுத்தினால், அயன் டோமால் வரும் எல்லா ஏவுகணைகளையும் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறு ஏவுகணைகளை தொடராகச் செலுத்துவதற்கு எவரினதும், எந்த நாட்டினதும் பொருளாதாரமும் வளங்களும் இடம் கொடுக்காது. அத்துடன் அயன் டோமின் வலுவையும் இஸ்ரேலும் அதிகரிக்கும், எதிர் ஏவுகணைகளின் எண்ணிக்கையக் கூட்டுவதன் மூலம். அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது. 

உண்மை தான் ஈரான் பொருளாதாரத்தால் பிந்த‌ங்கிய‌ நாடு.............ஆனால் 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் அமெரிக்காவின் வேவு பார்க்கும் விமான‌த்தை த‌ங்க‌ளின் தொழிநுட்ப‌ம் மூல‌ம் த‌ரை இற‌க்கின‌வை இது அப்பேக்க‌ பெரிதாக‌ பேச‌ ப‌ட்ட‌து.................உங்க‌ளுக்கும் நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்......................

ர‌ஸ்சியாவுக்கு ப‌ல‌ ரோன்க‌ளை ஈரான் தான் கொடுத்த‌து அந்த‌ ரோன‌ செய்ய‌ அமெரிக்க‌ டொல‌ர் 1000 போதுமாம் ஆனால் அதை சுட்டு வீழ்த்த‌ பாவிக்கும் ஏவுக‌னையின் பெறும‌தி அதிக‌ம் 

ஈரான் பொது உல‌கிற்க்கு பெரிசா காட்டுவ‌தில்லை த‌ங்க‌ளிட‌ம் என்ன‌ ஆயுத‌ங்க‌ள் இருக்கென்று

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத‌த்தை அள்ளி கொடுப்ப‌தால் அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு ஆடுகின‌ம்....................அமெரிக்கா ம‌ட்டும் இல்லை என்றால் இந்த‌ போர் பேச்சு வார்த்தையில் தான் போய் முடிந்து இருக்கும்

உல‌க‌ம் அமைதியாய் இருப்ப‌தை அமெரிக்கா விரும்பாது ஏதேனும் நாட்டுட‌ன் போர் செய்ய‌னும் அவ‌ர்க‌ளின் நாட்டின் இய‌ற்க்கை வ‌ழ‌ங்க‌ளை சுரன்ட‌னும் ஆயுத‌த்தை வித்து அதில் காசு பார்க்க‌னும்

இப்ப‌டி போர்க‌ளை ஊக்கி வித்தா தானே அமெரிக்காவுக்கு ந‌ல்ல‌ வ‌ருமான‌ம் கிடைக்கும்😁............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஏராளன் said:

தெரியவில்லையே அண்ணை. தினக்குரல் ஏதும் தவறாக மொழிபெயர்த்துவிட்டதோ?!

அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவோடு சேர்ந்து ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டித்தன என்பது தான் இந்த விடயத்தில் வந்த கடைசித் தகவல்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வீரப் பையன்26 said:

அந்த‌ ப‌ய‌ம் இருக்க‌னும்...................

யாழில் வாலி அண்ண‌ ஈரான் செத்த‌ கிளி என்று ந‌க்க‌ல் அடித்தார்

ஈரானின் ஒரு அடியோட‌ பொத்திட்டின‌ம்

இவ‌ர்க‌ள் ப‌ய‌ப்பிடுவ‌து ஈரான் மீது கை வைத்தால் பெற்றோலுக்கு த‌ட்டு பாடு வ‌ரும் விலை ஏற்ற‌ம் கூடும் ........................................

பையன் அண்ணா செத்தகிளி இரான் இல்லை. செத்தகிளியின் தோஸ்த் தான் இரான்.

இரானுக்கு பொங்கல் இருக்கி கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வாலி said:

பையன் அண்ணா செத்தகிளி இரான் இல்லை. செத்தகிளியின் தோஸ்த் தான் இரான்.

இரானுக்கு பொங்கல் இருக்கி கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க!😂

ஏன் தாம‌த‌ம் அண்ணா 

யூத‌ர்க‌ளுக்கு யாரும் அடிச்சா ம‌று க‌ன்ன‌த்தில் திருப்பி அடி என்ப‌து பொய்யா ஹா ஹா....................

இஸ்ரேலுக்கு ஏதும் ந‌ட‌ந்தா ஏன் அமெரிக்கா தொட்டு இங்லாந் முன்னுக்கு போய் நிக்கின‌ம்

இஸ்ரேலுக்கு த‌னிய‌ நிக்க‌ ப‌ய‌மா 

இப்ப‌டி ஆயிர‌ம் கேள்விக‌ள் இருக்கு......................நெத்த‌னியாகு ரொம்ப‌ ப‌ய‌ந்த‌ ந‌ப‌ர் அவ‌ரின் வீர‌ம் தொலைக் காட்சியில் தான்....................

சின்ன‌ ஹ‌வூதிஸ் ப‌டைய‌ கூட‌ இவ‌ர்க‌ளால் அழிக்க‌ முடிய‌ வில்லை ஈரானை அடிப்பின‌மாம்

ம்ம்ம்ம்ம்ம்ம்....................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வீரப் பையன்26 said:

இன்னும் நீங்கள் 7 - 8 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் தம்பி!

"ஒண்டிக்கு ஒண்டி வா" என்று போக இதென்ன கள்ளுத் தவறணைச் சண்டையா?  ரஷ்யாவுக்கே ஈரானும், வடகொரியாவும் ஆயுதம் கொடுத்துத் தான் முட்டுக் குடுத்திருக்கிற நிலையில, இஸ்ரேல் தனிய நிற்க வேணும், வெல்ல வேணுமெண்ட கதையெல்லாம், என்ன மொக்குத் தனமான கதை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, வாலி said:

நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை!😂

இஸ்ரேலுக்கு லேசா அடி விழுந்த‌தும் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா இந்தா அனுப்புகிறேன் போர் க‌ப்ப‌லை இந்தா அனுப்புகிறேன் விமான‌த்தை

இந்த‌ மான‌ம் கெட்ட‌ அவ‌மான‌ம் இஸ்ரேலுக்கு தேவையா😁........................

4 minutes ago, Justin said:

இன்னும் நீங்கள் 7 - 8 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மாதிரியே இருக்கிறீங்கள் தம்பி!

"ஒண்டிக்கு ஒண்டி வா" என்று போக இதென்ன கள்ளுத் தவறணைச் சண்டையா?  ரஷ்யாவுக்கே ஈரானும், வடகொரியாவும் ஆயுதம் கொடுத்துத் தான் முட்டுக் குடுத்திருக்கிற நிலையில, இஸ்ரேல் தனிய நிற்க வேணும், வெல்ல வேணுமெண்ட கதையெல்லாம், என்ன மொக்குத் தனமான கதை?

இல்லை அண்ணா

நான் 2024க‌ளில் ந‌ட‌ப்ப‌தை தான் எழுதுகிறேன்

அது உங்க‌ளுக்கு த‌வ‌று என்று ப‌ட‌லாம்......................

ஈரானுக்கும் ந‌ட்ப்பு நாடுக‌ள் இருக்கு அவ‌ர்க‌ள் ஒரு போதும் ஒன்றாக‌ நின்று போர் செய்த‌தில்லையே

ஏப்பிர‌ல் மாத‌ம் ஈரான் ஏவிய‌ மிசேல்க‌ளை அமெரிக்கா இராணுவ‌மும் சுட்டு வீழ்த்திய‌து............................

Posted
2 hours ago, Justin said:

அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவோடு சேர்ந்து ஈரானின் இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கண்டித்தன என்பது தான் இந்த விடயத்தில் வந்த கடைசித் தகவல்.

நான் வாசித்த பிரெஞ்சுச் செய்த்திகளிலும் இப்படித்தான் இருந்தது. ஈரானை வன்மையாகக் கண்டிப்பதோடு  இஸ்ரெயிலின் பக்கம் நிற்பதாகப் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, இணையவன் said:

நான் வாசித்த பிரெஞ்சுச் செய்த்திகளிலும் இப்படித்தான் இருந்தது. ஈரானை வன்மையாகக் கண்டிப்பதோடு  இஸ்ரெயிலின் பக்கம் நிற்பதாகப் பிரான்ஸ் தெரிவித்திருந்தது.

பிரான்ஸ்ச‌ ந‌ம்ப‌ முடியாது

ம‌க்ரோன் ஒன்றை சொல்லி விட்டு பிற‌க்கு ட‌வுள் கேம் ஆடுவார் இணைய‌வ‌ன் அண்ணா...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வீரப் பையன்26 said:

பிரான்ஸ்ச‌ ந‌ம்ப‌ முடியாது

ம‌க்ரோன் ஒன்றை சொல்லி விட்டு பிற‌க்கு ட‌வுள் கேம் ஆடுவார் இணைய‌வ‌ன் அண்ணா...........................

சிலவேளைகளில் பிரெஞ்சு செய்திகளுக்கு பிரெஞ்சில் ஒன்றைச் சொல்லிவிட்டு தினக்குரலுக்கு சொல்லும்போது வேறொன்றைத் தமிழிற் சொல்லி டவுள் கேம் ஆடுகிறார் போலுள்ளது!😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

அமெரிக்கா தான் அதிக எதிர் ஏவுகணைகளை கொடுக்க வேண்டும், அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியே இரண்டு பக்கமும் 'போதும்..... கணக்கு சரி.....' என்று ஒதுங்குவது தான் உலகிற்கும் அவர்களுக்கும் நல்லது. 

இருவரையும் உங்கள் பிரச்சினையை நீங்களே பாருங்கள் என்று உலகு ஒதுங்கினாலும், அமெரிக்கா விடவேணுமே. இஸ்ரேல் தொழில் நுட்ப முன்றேன்றம் இனங்களை அழிப்பதனற்கானதாயின் அது ஒரு முன்னேற்றமா? தமிழினத்தையும் அழிக்கக் கொடுத்த ஆலோசனைகள் தற்போதுவரை அமுல்படுத்தப்படுகிறது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப என்ர மனசில எழும்புற கேள்வி என்னவெண்டால்.....? மேற்குலக மச்சான்ஸ்மார்!
ஈராக்,லிபியாவுக்கு சாத்தின மாதிரி ஏன் ஈரானுக்கு சாத்தவில்லை? சனம் செத்துப்போகும் எண்டு யோசிக்கினமா? இல்ல அங்கை அடிக்க இஞ்ச வெடிக்கும் எண்டு பயப்பிடினமோ? 😂

 அது சரி நேட்டோ சும்மாதானே திரியுது. போய் ஒருக்கால் ஈரானோட உரசி பாக்கிறது? 😋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nochchi said:

இருவரையும் உங்கள் பிரச்சினையை நீங்களே பாருங்கள் என்று உலகு ஒதுங்கினாலும், அமெரிக்கா விடவேணுமே. இஸ்ரேல் தொழில் நுட்ப முன்றேன்றம் இனங்களை அழிப்பதனற்கானதாயின் அது ஒரு முன்னேற்றமா? தமிழினத்தையும் அழிக்கக் கொடுத்த ஆலோசனைகள் தற்போதுவரை அமுல்படுத்தப்படுகிறது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

எல்லா முன்னேற்றங்களாலும் அழிவுகள் இருந்தன, இருக்கப் போகின்றனதானே, நொச்சி. பலநாடுகள் தங்கள் பலங்களால், நுட்ப வளர்ச்சிகளால் அழிவுகளை உலகெங்கும் நடத்திக் கொண்டும் இருக்கிறதுதானே. 

போன வருடம் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பித்த சண்டையே இன்றுவரை தொடர்கின்றது. இப்போது வேறு சில களமுனைகளுக்கும் இது பரவியுள்ளது. அது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை இல்லை. ஹமாஸ் புதிய ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கை அது. அன்றும் பலர் இஸ்ரேல் முடிந்தது என்றனர், இஸ்ரேல் வாங்கிக் கட்டுகின்றது என்றனர், ஹமாஸின் பலம் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பினர்.

ஆனால் அந்த ஒரு நிகழ்வே அமெரிக்காவிற்கு போதுமானதாக இருந்தது. எல்லா நாடுகளுமே தங்கள் சுய ஆதாயத்தைத் தான் உலகெங்கும் தேடுகின்றனர். பலம் இருக்கும் நாடுகள் பாய்ந்து பாய்ந்து தேடுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் பதுங்கி பதுங்கித் தேடுகின்றன. உள்ளே வந்த ஊர்ப்பிடாரி வெளியே இலேசில் போகமாட்டார். அவரை உள்ளே வர விடாமல் பார்ப்பதே உத்தமம்.

ஈரான் எதற்காக ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் மற்றும் மேற்குக் கரையில் இன்னும் பல சின்ன குழுக்களையும் கட்டி வளர்க்கின்றது........... உலகில் சமாதானம் வர வேண்டும் என்பதற்காகவா....... இல்லை தானே, தங்களை அந்தப் பிரதேசத்தில் ஒரு வல்லரசு என்று காட்டுவதற்காகவே இந்த துணைப்படைகள். ஈரானும் அயலவர்களுக்கு அடிக்கும், அவர்களைக் கொல்லும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்க உதவும்.

இலங்கை அரசுக்கு இஸ்ரேல் மட்டுமா ஆலோசனைகளும், ஆயுதங்களும், சேவைகளும் வழங்கியது....... அமெரிக்கா வழங்கியது, இந்தியா வழங்கியது, ரஷ்யா வழங்கியது, உக்ரேன் வழங்கியது, பாகிஸ்தான் வழங்கியது.......... இது இன்றைய உலகில் ஒரு மிக இலாபகரமான விற்பனை. இதில் தர்மம், நெறி எல்லாம் எவரும் பார்ப்பது கிடையாது.

மேலே சொன்ன எதுவுமே எந்த ஒரு நாட்டையும், அதன் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு அல்ல. பலமானவர்கள் செய்வது ஒரு சாராருக்கு மிக அநியாயமாகவே முடிந்து கொண்டிருக்கின்றது என்ற நிஜத்தை தான் நான் சொல்ல முயன்றிருக்கின்றேன்.  

  • Like 5
  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.