Jump to content

தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilwin.com/article/kv-thavarasa-resigned-from-all-itak-posts-1728222873

தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

சுமந்திரனின் தன்னிச்சையான செயல் 

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போது அதில் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தினுடைய மற்றும் கொழும்பு வாழ் மக்களினுடைய கோரிக்கைக்கு அமைவாக தான் விண்ணப்பத்தை கொடுத்திருந்ததாகவும், அதனை எந்தவொரு காரணமும் இல்லாமல் சுமந்திரன் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு | Kv Thavarasa Resigned From All Itak Posts  

மேலும், சுமந்திரன் தான் சார்ந்த அணியை வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்து கட்சிக்காக தொடர்ச்சியாக பாடுபடுகின்ற மிக முக்கியமான திறமைசாலிகளை உள்ளெடுக்காததன் அடிப்படையிலும் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மக்களுக்கு பொறுப்புச் சொல்ல முடியாத ஒரு கட்டத்தினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தான்தோன்றித் தனமாக தமிழரசுக் கட்சியின் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் கட்சியை பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்தின் ஊடாக முழுச் செயற்பாடுகளையும் நிர்வகித்து வரும் சுமந்திரன் கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது.

இலங்கை தமிழரசுக் கட்சி வரலாற்றில் பல தியாகங்களாலும், வீரம் செறிந்த பல போராட்ட சரித்திரங்களாலும் உருவாக்கப்பட்டது.   2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்த் தேசியத் தலைவரின் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்த  வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி, தமிழரசுக் கட்சிகளின் தூண்களையும் வெளியேற்றி, மேலும் தென்னிலங்கையின் முகவர் அரசியல் செய்வதற்கு முற்படுகின்ற சுமந்திரனின் தான் தோன்றித் தனமான செயற்பாடு ஒட்டு மொத்த தமிழரசுக் கட்சியையும் அழிக்கும்.

துரோகத்திற்கு நான் தயார் அல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து,
இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவராசா இந்தியாவின் சொற்படி தேர்தலில் நிற்கப்போகிறார். 

🤣

4 hours ago, புலவர் said:

May be an image of 1 person and text that says 'யாழில் போட்டியிடுகிறார் சசிகலா! இலங்கை தமிழ் அரசு கட்சி யிலிருந்து விலகுகிறார்! இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் அரசியல் பழிவாங்களக்கு உள்ளாகும் சசிகலா ரவிராஜ் அந்த கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும். அவர் பிறிதொரு தரப்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்.'

ரவிராஜின் மனைவி என்பதைத் தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லாதவர். 

5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து,
இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.

நல்ல விடயம்தானே,.,.👍

ஒன்ம் பிரயோஜனம் இல்லாத அமைப்பு எமக்கு எதற்கு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் என்னும் கோடாலி காம்பு….. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து,
இப்போ… தமிழரசு கட்சியை சல்லி சல்லியாக உடைத்துக் கொண்டு இருக்கிறார்.

அவர் தமிழரசுக்கட்சிக்குள் செருகப்பட்டதே, தமிழ்த்தேசியம், தமிழரசு என்கிற கட்சிகளை இல்லாது  அழித்து, ஒரு ராச்சியம் என்பதை உருவாக்குவதற்கே. கிட்டத்தட்ட அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார். ஆனால், அவரை பணிக்கு நியமித்த எஜமானர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டுவிட்டனர். பாவம்! கூலி முழுவதுமாக பெறமுன் இப்படியாகிவிட்டதே. இப்போ அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள். அடித்து விரட்டினாலும், ஏதோ ஒன்றை சொல்லிக்கொண்டு அங்கேயே சுத்துவார். இனிமேல் சட்டாம்பி வேலைக்கும் யாரும் அமர்த்த மாட்டார்கள், சொல்வது முழுக்க பொய்யும் புழுகும். நச்சுப்பாம்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

அதே கொள்கையை தான் ஜெ.வி.பி யினர் தமிழர் விடயத்தில் விரும்புகின்றனர்...ஜெ.வி.பியின் யாழ் பிராந்திய செயல் பாட்டாளர் மருத்துவர் அருள் இள்ங்கோவன் ஒர் பேட்டியில் சொல்கின்றார் மாகாணசபை தேர்தலை அடுத்த வ்ருடம் நடத்தி அதன் பின்பு 13 ஆம் திருத்தசட்டத்தை அகற்ற முயற்சிப்பார்களாம்...காரணம் அது வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட விடயமாம்...

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, putthan said:

மாகாணசபை தேர்தலை அடுத்த வ்ருடம் நடத்தி அதன் பின்பு 13 ஆம் திருத்தசட்டத்தை அகற்ற முயற்சிப்பார்களாம்...காரணம் அது வெளிநாட்டின் உதவியுடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட விடயமாம்...

இது அந்தக் கட்சியின் பின்னால் ஓடும் தமிழர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்துகொண்டு தான் இப்படி ஓடுகிறார்கள்? கேட்டால் எனக்கு இனவாதம் என்று சொல்வார்கள், எதுக்கு தேவையில்லாத பிரச்சினை. உப்பிடியே ஓடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

இது அந்தக் கட்சியின் பின்னால் ஓடும் தமிழர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்துகொண்டு தான் இப்படி ஓடுகிறார்கள்? கேட்டால் எனக்கு இனவாதம் என்று சொல்வார்கள், எதுக்கு தேவையில்லாத பிரச்சினை. உப்பிடியே ஓடட்டும்.

நமக்குள் இருக்கும் தடைக்கற்கள்,  ஒன்றாக சேர்ந்து ஒரு கொள்கைக்காக போராடாமை, காட்டிக்கொடுப்பது, எதிரியின் கொள்கைக்காக அவர்கள் பெயரில் இயங்குவது, நான், எனக்கு, என்னால்தான், எனக்குக் கீழ்த்தான். இப்படி ஒவ்வொருவரும் இயங்குவதால், எதிரி இலகுவாக நம்மை கூறுபோட்டு எதிரெதிராகவே வைத்து தன் நலத்தை பேணிக்கொள்கிறான். ஒருவேளை பதின்மூன்றை விட கூடுதலான அதிகாரம் கிடைக்க வாய்ப்பிருக்கலாம் என சொல்கிறாரோ என்னவோ......?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ரஞ்சித் said:

இது அந்தக் கட்சியின் பின்னால் ஓடும் தமிழர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்துகொண்டு தான் இப்படி ஓடுகிறார்கள்? கேட்டால் எனக்கு இனவாதம் என்று சொல்வார்கள், எதுக்கு தேவையில்லாத பிரச்சினை. உப்பிடியே ஓடட்டும்.

சீ சீ

அவர்கள் உங்கள் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கு. அங்கால கச்சையும் உருவப்படப்போவது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை புலிகள் மற்றும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு கண்ணாவது போனால் காணும். அவ்வளவு சிறீலங்கா விசுவாசம். 

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

சீ சீ

அவர்கள் உங்கள் பின்னால் ஓடத்தான் நேரம் இருக்கு. அங்கால கச்சையும் உருவப்படப்போவது தெரிய வாய்ப்பில்லை. எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை புலிகள் மற்றும் தேசியத்தை நேசிப்பவர்களுக்கு ஒரு கண்ணாவது போனால் காணும். அவ்வளவு சிறீலங்கா விசுவாசம். 

நீங்கள் எப்படி குட்டினாலும் எங்களுக்கு  வலிக்காது, நாங்கள் குனிந்து வாழத்தயார்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

இது அந்தக் கட்சியின் பின்னால் ஓடும் தமிழர்களுக்குத் தெரியுமா? அல்லது தெரிந்துகொண்டு தான் இப்படி ஓடுகிறார்கள்? கேட்டால் எனக்கு இனவாதம் என்று சொல்வார்கள், எதுக்கு தேவையில்லாத பிரச்சினை. உப்பிடியே ஓடட்டும்.

2010 க்கு தமிழ் தேசியபரப்பு செயல்பாட்டாளர்கள் தங்கள் பத‌விகள் நிரந்தரமானது என்ற நினைப்பில் இளைஞ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு இன்று அந்த இளைய சமுதாயம் முக்கியமாக பல்கலைகழக இளைய சமுதாயத்தை  கண்டுகொள்ளவில்லை...அந்த வெற்றிடத்தை யாழ் பல்கலைகழகத்தில் ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்...ஜெ,வி,பி யினர் சித்தாந்த/கொள்கை வகுப்புக்களை எடுத்துள்ளனர் ..இது எமது போராட்ட காலத்தில் 77களில் பின் நடந்த விடயங்கள். 2010 க்கு பின்பு சிங்கள இளைஞர்களின் வரவு அதிகமானது அவர்களுடன் ஜெ.வி,பி கொள்கையும் உள்வர தொடங்கிவிட்டது.

எமது போராட்டம் மெளனிக்கப்பட்ட பின் எமது அரசியல் போராட்டத்தை இளைஞர்கள் மத்தியில் எடுத்து செல்லாமல் விட்டது எமது பிழை ..அந்த வெற்றிடத்தை ஜெ.வி.பி நன்றாக பயன்படுத்தியுள்ளனர்...

மருத்துவர் அருள் சொல்கின்றார் தான் 2016 யாழ் மருத்துவ பீடத்திற்கு சென்றராம் ,ஜெ.வி.பியினரின் 
 வகுப்புக்களுக்கு  சென்று அந்த கொள்கைகள் தனக்கு பிடித்தமையால்   முழுநேர அரசியல் செயல் பாட்டில் இறங்கி விட்டாராம்...
 
  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

மருத்துவர் அருள் சொல்கின்றார் தான் 2016 யாழ் மருத்துவ பீடத்திற்கு சென்றராம் ,ஜெ.வி.பியினரின் 
 வகுப்புக்களுக்கு  சென்று அந்த கொள்கைகள் தனக்கு பிடித்தமையால்   முழுநேர அரசியல் செயல் பாட்டில் இறங்கி விட்டாராம்...

நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

உண்மை ....தமிழனை வைத்தே தமிழ் தேசியத்தை அழிக்க முயல்கின்றனர் ....... ஜெ.வி.பி க்கு பின் சென்று எமது அடையாளங்களை இழந்த பின்பு ஜெ.வி.பி யினரை தோற்கடிக்க சிங்கள வலதுசாரி இனவாதிகள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை... மீண்டும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்...எம் இனத்தின் இருப்பு கேள்விக்குறி தான் ... ஜெ.வி.பி யினர் எந்த வித சட்டபூர்வமான அங்கிகாரமும் எமக்கு தரப்போவதில்லை என தெரிகிறது 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

ஜெ.வி.பி யினர் எந்த வித சட்டபூர்வமான அங்கிகாரமும் எமக்கு தரப்போவதில்லை என தெரிகிறது

உண்மை, ஆனால் இன்று அவர்கள் பின்னால் காவடி தூக்கும் தமிழர்களுக்கு உரிமையோ, நாடோ, நீதியோ, தீர்வோ அல்லது இனம் சார்ந்த எதுவுமோ தேவைப்படுவதாகத் தெரியவில்லை. வரிசையில் நிற்காமல் பெற்றொலும், எரிவாயுவும், பாணும் கிடைத்தாலே போதும் என்கிற நிலையில்த்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

உண்மை ....தமிழனை வைத்தே தமிழ் தேசியத்தை அழிக்க முயல்கின்றனர் ....... ஜெ.வி.பி க்கு பின் சென்று எமது அடையாளங்களை இழந்த பின்பு ஜெ.வி.பி யினரை தோற்கடிக்க சிங்கள வலதுசாரி இனவாதிகள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை... மீண்டும் வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால்...எம் இனத்தின் இருப்பு கேள்விக்குறி தான் ... ஜெ.வி.பி யினர் எந்த வித சட்டபூர்வமான அங்கிகாரமும் எமக்கு தரப்போவதில்லை என தெரிகிறது 
 
நாங்கள்தான் தெரியாம நிக்கிறம். யாழிலை வழுக்கியாறு நிறைந்து பாயுதாமே. 
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

உண்மை, ஆனால் இன்று அவர்கள் பின்னால் காவடி தூக்கும் தமிழர்களுக்கு உரிமையோ, நாடோ, நீதியோ, தீர்வோ அல்லது இனம் சார்ந்த எதுவுமோ தேவைப்படுவதாகத் தெரியவில்லை. வரிசையில் நிற்காமல் பெற்றொலும், எரிவாயுவும், பாணும் கிடைத்தாலே போதும் என்கிற நிலையில்த்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரலாம் ...இடதுசாரி கொள்கை சிறிலங்காவில் நிலைத்து நிற்குமோ தெரியவில்லை ...காலம் பதில் சொல்லட்டும்...
காவடி தூக்காத தமிழர்களும் இருக்க தான் செய்வார்கள் ...52 வருட போராட்டத்தின் பின் இடதுசாரி ஆட்சிக்கு வந்துள்ளனர் அவர்களும் வலதுபாதி  இடதுபாதி  சேர்ந்த கவையாக தான் ஆட்சி செய்ய வேண்டி வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு

நல்லதொரு முடிவு. இவர் அங்கையொண்டும் புடுங்கிப் போடப்போவதில்லை. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதைதான் இவரது. தனக்கு தேர்தலில் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய எங்கண்ட வெடி கோஷ்டி போல வாய்பாத்துக்கொண்டு நிண்டிருக்குது மனிசன். கடைசில சங்கூதியிட்டானுகள்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழரசு கட்சிக்கு,  சுமந்திரன்.... இறுதிக் கிரியை நடத்துகின்றார். 😂
டணக்கு.... டணக்கு... டாங்கு  டக்கு.....
 
 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இளைஞ சமுதாயத்தை கண்டு கொள்ளாமல் விட்டதின் விளைவு இன்று அந்த இளைய சமுதாயம் முக்கியமாக பல்கலைகழக இளைய சமுதாயத்தை  கண்டுகொள்ளவில்லை

உண்மை. ஊரிலும் சரி புலம்பெயர்ந்த நாடுகளிலும் சரி எங்களுடைய இளைய சமுதாயத்திற்கு அவர்களது இனம், தாயகம் பற்றி சரியான அறிவை கொடுக்கவில்லை, தனியே மொழியையும் விழாக்களையும், விடுமுறைக்கு ஊருக்குப் போய் வருவதை மட்டும் சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்துள்ளதன் விளைவும், தமிழ் பாரம்பரிய கட்சிகளில் சேர்வதற்கு அரசியல் பின்புலம் ஒன்று இருந்தால் மட்டுமே சேரலாம் என்ற நிலையும் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன். 

உண்மையில் இந்த தமிழ்கட்சிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அவர்கள் உண்மையாக எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் இன்று எங்களது நிலை இந்தளவுக்கு வந்திருக்காது. மக்களை குழப்புவதை நன்றாகவே செய்துவருகிறார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவையளுக்கு இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சிக்குட்பட்ட பாராளுமன்றத்துக்குள்ள போனால்தான் தமிழ்த்தேசியம் பேசலாமாம்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்,

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுமாறு பல்வேறு கட்சிகளாலும் சுயேட்சைக்குழுக்களாலும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களினுடைய பாரம்பரிய கட்சிகளில் ஒன்றான கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக்கட்சியின் ஊடாக வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்தேன். ஆயினும் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக என்னுடைய நண்பர்களுடனும் நலன்விரும்பிகளுடனும் கலந்துரையாடியபோது, பலர் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் போட்டியிடவேண்டாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர் என்பதுடன் நான், தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதானது உண்மையான தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்தும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இருந்த போதிலும் என்னுடைய நலன்விரும்பிகளின் விமர்சனங்களையும் மீறி, தமிழரசுக்கட்சி ஊடாக போட்டியிடுவது என்று தீர்மானித்திருந்தேன். கடந்த காலங்களில் அந்தக் கட்சி எம்மவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியிலும் சர்வதேச அரங்கிற்கும் கொண்டு செல்லப்பட்ட கட்சியாகும். அந்த அடையாளத்தை நாங்கள் பிரதிபலிக்கவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

ஆனாலும்,

கடந்த சில நாட்களாக கட்சி சார்ந்து நடைபெறுகின்ற சங்கடம் தருகின்ற விடயங்கள் அந்தக் கட்சி ஊடாக பயணிப்பதன் ஊடாக எங்கள் மக்கள் சார்ந்து எதிர்காலத்தில் பணியாற்ற முடியுமோ? என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியுள்ளது. 

நான் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், மக்கள் சார்ந்த பணியில் முடிந்த அளவிற்கு கடந்தகாலங்களில் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ந்தும் பணியாற்றுவேன். என்னுடைய மக்கள் சார்ந்த பணிக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி 

அன்புடன், 

வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் LL.B, LL.M

சட்டத்தரணி.

https://www.facebook.com/share/p/AKTNU6d1pZhZAgxb/

Link to comment
Share on other sites

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி! 

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.