Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. [எ]

அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, பிழம்பு said:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தபால் பெட்டி சின்னத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தார்.

"ஜனநாயக தேசிய கூட்டணி"யின் தலைவர் யார் என்று தெரியுமா? இது சிங்கள கட்சியா ? 
"ஜனநாயக தமிழ்  தேசிய கூட்டணி" என்று, ஒன்று... சித்தார்த்தன் தலைமையில் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது.
பல கட்சிகள்... கிட்டத்தட்ட ஒரே பெயரில் உள்ளதால் ஒரே குழப்பம். 
மக்கள் எப்படி, குழம்பாமல்  வாக்களிக்கப் போகின்றார்கள் என்று பார்ப்போம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

எல்லாரும் படத்தை நல்லாப் பார்த்து புள்ளடி போடிவினம்!

“யானைக்கு எதிரே புள்ளடி” என்று சின்ன வயதில் போஸ்ரர் பார்த்த நினைவு. இப்ப சங்கு, தபால்பெட்டி, வீடு, மான், சைக்கிள், திசைகாட்டி என்று கலாதியாக இருக்கு😂

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

தேசிய பட்டியலில் எம்.பி பதவி கிடைக்கும் என் நினக்கின்றனர் போலும் ..4000 வாக்குகள் எடுத்தாலும் சில சமயம் கிடைக்க கூடிய சந்தர்ப்பம் உண்டு ...என் நினைக்கினம் போல
தேசிய பாரளுமன்றம் சென்று சிறிலங்கா தேசியத்தில் வென்றால் சிறிலங்கா தேசியமும் ,தமிழ் தேசியத்தில் வென்றால் தமிழ் தேசியமும் பேசலாம் என எண்ணுகின்றனர் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, putthan said:

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

இப்படி தலைசுற்றி விழுவதைவிட

தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.    

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி தலைசுற்றி விழுவதைவிட

தெரிந்த வீட்டுக்கும் சைக்கிளுக்கும் போடுவம் என மக்கள் எண்ணுகிறார்களோ தெரியாது.    

வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, putthan said:

வீட்டுக்கு சங்கு ஊதுவம் எண்டு சனம் நினைக்குதோ தெரியவில்லை😅

தமிழில் உள்ள ஒரு  பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழில் உள்ள ஒரு  பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, putthan said:

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

ஒருவேளை பிசாசுகளுடன் கூட்டணி அமைக்க வேண்டி வந்தால் வேப்பிலையை எடுக்க முடியாதே.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nochchi said:

ஒருவேளை பிசாசுகளுடன் கூட்டணி அமைக்க வேண்டி வந்தால் வேப்பிலையை எடுக்க முடியாதே.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது ....
பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, putthan said:

இந்த பிசாசுகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை அந்த பூசாரிக்கு வராது என நினைக்கிறேன், ...அப்படி கூட்டணி வைத்தால் அவர் ஒர் நல்ல பூசாரியாக இருக்க முடியாது ....

வெளியுலகப் பிசாசுகளுடன் டீல் போகிறது. இனிப்பெரும்பாலும் உள்ளூர் பிசாசுகளையும் அரவணைக்கவே வாய்ப்புள்ளது. ஒருவேளை 113 கிடைத்தால் உள்ளூர் பிசாசுகளைத் தேடார். தமிழரைத் தீர்க்கும் வழிதேடுவார்.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி
 
5 minutes ago, putthan said:

பிசாசுகள் பூசாரியை விரட்டி விடுங்கள்😅

உண்மை. கோட்டாவுக்கு அறகலய போல் இவருக்கு அனுரகலய என்று வந்தாலும் ஆச்சரியப்படமுடியாது.
நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

தமிழர்கள் பயமில்லாமல் பிசாசுகளையும் அனுப்பலாம் காரணம் அங்கு பேய் ,பிசாசுகளை விரட்டியடிக்கிற பூசாரி வெப்பமிலையுடன் இருக்கிறார் ...😅

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

எல்லாரும் படத்தை நல்லாப் பார்த்து புள்ளடி போடிவினம்!

“யானைக்கு எதிரே புள்ளடி” என்று சின்ன வயதில் போஸ்ரர் பார்த்த நினைவு. இப்ப சங்கு, தபால்பெட்டி, வீடு, மான், சைக்கிள், திசைகாட்டி என்று கலாதியாக இருக்கு😂

5 hours ago, Kapithan said:

மக்களைக் குழப்புவதற்காகத்தானே இத்தனை கட்சிகள். தேசியத்தின் மீதான பற்றுதலிலா இவர்கள் போட்டியிடுகிறார்கள்? 

3 hours ago, putthan said:

சத்தியாமா சொல்லுறன் ...எனக்கும் இந்த குழப்ப நிலை தான் ...நான் இங்க கேட்பம் எண்டு இருந்தேன் நீங்கள் கேட்டுவிட்டீர்கள் ...செய்திகளை பார்க்கிற எங்களுக்கே குழப்பமா இருக்கு என்றால் ...செய்திகளை  வாசிக்காமல் ஐந்து வருடத்த்திற்கு ஒருக்கா வாக்கு சாவடிக்கு போகும் நம்ம பொதுஜனங்கள் பாடு எப்படியிருக்க போகுது....

முன்பு தேர்தல் என்றால்…. ஐந்து அல்லது ஆறு கட்சிகள்தான் போட்டியிடும். அவை மக்களுக்கு பழக்கமான கட்சிகள் என்ற படியால், மக்கள் குழம்பாமல் வாக்கு போட்டு விட்டு சென்று விடுவார்கள். 

இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. 

ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, தமிழ் சிறி said:

ரெலிபோனுக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத யாழ்ப்பாண மக்கள்தான் பாவம். 😂 🤣

யாழ்ப்பாணத்தாரின் அடி மடியிலேயே கைவைக்கும் சிறியரை நான்  வன்மையாகக் கண்டிக்கும்,...🥱

1 hour ago, ஈழப்பிரியன் said:

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

நாலைந்து வருடங்களுக்கு முன்னர் அவரை கனடாவில் பார்க்கப் போயிருக்கும்போதே அவருக்கு மூச்சிரைக்கத்  தொடங்கியிருந்தது. இப்போது நிலைமை அவருடைய வயதுக்கு ஏற்ப இன்னும் இயலாமையை  கூட்டியிருக்கும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குட்டையை குழப்பி மீன் பிடித்து விடலாம் என்று கணக்கு போடுபவர்களுக்கு, மீன்கள் குழப்பத்தில் குட்டையை விட்டு வெளியேறி வேறொரு குட்டையையோ, நீர்நிலையையோ தேடஆயத்தமாகி விட்டன என்பது தெரியாமலிருக்கலாம். எந்த சின்னம் எந்த கட்சிக்கு என்று தெரியாமல் குழப்பமாக இருந்தாலும், தங்களுக்கு வேண்டாத சின்னம், தங்களை ஏமாற்றிய சின்னம், தங்களால் தூக்கி எறியப்படவேண்டிய சின்னம் எது  என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அதிலொரு குழப்பமுமில்லை மக்களுக்கு. இப்போ முளைத்த சின்னத்தால் தமக்கு எதுவும் நடக்காது ஆகவே அந்த சின்னத்தையோ வேட்பாளரையோ பற்றியோ   மக்கள் நினைவில் வைத்திருக்கவோ சிந்திக்கவோ மாட்டார்கள். இவர்கள் செய்யும் கூத்து, ஒரே ஒரு சின்னம், அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேர்தல் திணைக்களமும் திணறப்போகுது, போட்டியிடும் கட்சிகளின் தொகை வாக்களிக்கும் மக்களின் தொகைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என. இதில் யாரும் மக்களுக்காக சேவை செய்ய விரும்பவில்லை, மக்களை ஏமாற்றி தங்களை சிறப்பிக்க, சும்மா இருந்து சுக வாழ்வு அனுபவிக்க விரும்புகிறார்கள் என்பது. இதற்கு அனுரா ஒரு முடிவு கட்டவேண்டும். ஒரு பதவியை வகிப்பவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதுபோல், இதற்கும் ஒரு வரையறை கொண்டுவந்து இவர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான பொறுப்புக்கூறல் செய்ய வைக்க வேண்டும். அதன் பின் தகுதியற்றவன் அரசியல் பக்கம் தலைவைத்து படுக்கவே மாட்டான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இம்முறை என்றும் இல்லாத அளவு புற்றீசல் போல் கட்சிகள் கிளம்பி அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களையே குழப்பி விட்டுள்ள நிலைமைதான் தெரிகின்றது. 

சந்திக்கு சந்தி தேத்தண்ணி கடை போட்ட பழக்கம் தமிழர்களின் அடி நாதமான அரசியலிலும் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

சந்திக்கு சந்தி தேத்தண்ணி கடை போட்ட பழக்கம் தமிழர்களின் அடி நாதமான அரசியலிலும் வந்து விட்டது.

குமாரசாமி அண்ணை, உண்மையில்… பல கட்சிகள் உருவாக தமிழரசு கட்சியின் செய்கைகளும் முக்கிய காரணம்.
ஆனால்… அதை பலர் இங்கு மூடி மறைத்துக் கொண்டு கருத்து எழுதுகின்றதை பார்க்க சிரிப்பாக இருக்குது. 😂
அது சரி…. வெள்ளை அடிக்கிற வேலையில் இறங்கியவர்களிடம் வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். 🤣

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

பட்டையும் கொட்டையுமாக இருக்கும் பூசாரி களமிறங்கவில்லை.

 Exit the  spirituals

Enter the spirit 

வழமையா என்னை போல் ஆட்கள் மாறி செய்வினம் வயது வயது போக போக ஸிப்ரிட்டை விட்டு  ஸ்ப்ரிட்யுவலுக்கு 😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

அனுராவின் சின்னத்தை, அனுராவை நோக்கி மக்களை தள்ளுகிறார்கள் என்றே நினைக்கிறன்.

இந்தப் பெருமளவிலான சுயேச்சைகளின் களமே அனுராவை நோக்கிய மடைமாற்றத்திற்காகவும் இருக்கலாம். யாரறிவார்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை. ஆளும் தரப்பினருடன் சேர்ந்து விட்டால் சுகம் அனுபவிக்கலாம் என வௌவால் போல தொங்கும் கூட்டம், தங்கள் பழைய எஜமானரையும் கட்சியையும் துறந்து வேறொரு பிறப்பெடுக்க முயற்சிக்கின்றனர். புதிய மொத்தையில் பழைய கள் குடுக்க முயற்சிக்கின்றனர், குடிப்பவர் யார்? அனுரா குடிப்பாரானால் முன்னையவர்கள் துரத்தியடிக்க பட்டிருக்க மாட்டார்களே.

மாற்றத்தை வேண்டித்தான் மக்கள் இவரை நாடினர், அது அவருக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் அவாவை நிறைவேற்றி வைக்க வேண்டியது இவரின் கடமை. இது இவருக்குள்ள பாரிய பொறுப்பு, இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டால் இவர்களுக்கோ, வேறு யாருக்கோ இப்படிப்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பம் இவர்களே நினைத்தாலும் திரும்பி வராது. சந்திரிக்கா நழுவ விட்டு இப்போ புலம்புகிறார். மஹிந்த மனதுக்குள்ளேயே குமுறுவார், நான் செய்த தவறு அவர்களின் தலைவரை கொன்றதுதான் என்று வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தாங்கள் செய்யாததை வேறொருவர் செய்து புகழடைவதை விரும்பவில்லை, தடைக்கற்களாக இருக்கிறார்கள்.  தங்கள் வாரிசுகள், சொத்துக்களுக்காக பொன்னான நாட்டை அடகு வைத்து அழிக்கிறார்கள். கண் கெட்டபின் நீலிக்கண்ணீர் வடித்து, நமஸ்காரம் செய்வதில் பயனில்லை. காலம் ஓடிக்கொண்டே இருக்கும், அது யாருக்காகவும் தன் ஓட்டத்தை நிறுத்தப்போவதில்லை. 

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
    • இசை அரசனும்..... நடிப்பு அரசனும்....  
    • திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.