Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 

திருகோணமலையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் திசைகாட்டிக்கான வெற்றி  பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம்.

பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம்.

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை மக்களின் அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாமல், பொருளாதாரம் சீர்குலையாமல், நாட்டின் பாதுகாப்பு சீர்குலையாமல் பேணி வரவேண்டிய பொறுப்பு எம்மூவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது.

நவம்பர 14 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பெருமளவிலான உறுப்பினர்கள் மத்தியில் இருந்து இருபத்து ஐந்து பேருக்கு குறைவான அமைச்சரவையொன்றை அமைத்துக் கொள்வோம். இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடையாது. அமைச்சுப் பதவிகளுக்கு ஒத்துவரக்கூடியதாக பிரதியமைச்சர் பதவிகள் இருக்கும்.

அது முதல் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்பி இந்தப் பயணத்தை தொடருவோம். நிலவிய பாராளுமன்றம் மக்கள் அனைவரினதும் எதிர்ப்பிற்கு அருவருப்பிற்கு இலக்காகியிருந்தது. கொவிட் பெருந்தொற்றின் போது வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கூட அந்த எதிர்ப்பு மக்களிடமிருந்து தோன்றியது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கத்திகள், மிளகாய்த்தூளை எடுத்து வந்தார்கள். ஒருசிலர் புத்தகங்களை எறிந்து சண்டைபிடித்த விதத்தை நாங்கள் கண்டோம்.

எமது நாட்டில் மிருகக்காட்சிசாலை மக்களுக்கு தடைசெய்யப்படவில்லை. எனினும் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டது. அந்தப் பாராளுமன்றம் மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றமொன்று அல்லவென்பது அதன் மூலமாக வெளிப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தை சுத்தம் செய்து புதுப்பிக்க அணித்திரளுகின்ற வேளையில் முன்னாள் பாராளுமன்றத்திலிருந்த அறுபத்தியிரண்டு பேர் தன்னிச்சையாகவே நீங்கிச் சென்றிருக்கிறார்கள்.

திசைகாட்டியின் நேர்மையான, ஊழலற்ற, அதைப்போலவே மக்களுக்காக எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புங்கள். அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த பங்களிப்பினை பெற்றுக்கொடுங்கள். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாரிய சக்தி வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐயாயிரத்திற்கு குறைவான வாக்குகளே திசைகாட்டிக்கு கிடைத்திருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பதாயிரத்தை விட அதிகமானதாகும். அப்படியானால் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும்? ஏனைய கட்சிகள் தேர்தல் இயக்கத்தை தொடங்கும்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டன.

எமது நாட்டில் நிலவுகின்ற பல பிரதான சவால்களை வெற்றிக்கொள்ள திருகோணமலை மாவட்டத்திலிருந்து திசைகாட்டிக்கு பலம்பொருந்திய வெற்றி தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகாலமாக சந்தேகம், பகைமை, குரோதம், அவநம்பிக்கை பரப்பப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை நோக்கியும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளை நோக்கியும் தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் அந்தக் கட்சிகளின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வதற்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்துவந்தார்கள்.

திருகோணமலை நகரமும் மாவட்டமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்ற நிலைமைக்குப் பதிலாக மக்களை பிரித்து மோதல்களை ஏற்படுத்தி அவர்களின் ஆட்சியை கொண்டு நடத்தினார்கள்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கான கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாம் வெற்றிபெறுவோம் என நம்பவில்லை. அதனால் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு பிரவேசிப்பது நாங்கள் வெற்றிபெற்றுள்ள ஒரு பின்புலத்துடன்தான். அனைத்து மக்களும் ஒற்றுமைக்கான ஒரே குடையின் கீழ் வந்து நிழல் பெறவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனை சாதிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். 

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மீதான பாரிய எழுச்சி தோன்றியுள்ளது. நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிரிந்து ஒதுங்கியிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒற்றுமையைக் கொண்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டிய விசேட பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும். 

நாங்கள் நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்தை அமுலாக்குகையில் திருகோணமலையின் கனிய மணல் படிவை முறைப்படி பாவனைக்கு எடுத்து பெறுமதி சேர்க்கின்ற கைத்தொழிலாக மாற்றுவோம்.

அதைப்போலவே, எமது கண்ணெதிரே இற்றுப்போகின்ற எண்ணெய்க் குதங்களை புனரமைத்து தேசிய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்ற நிலைமைக்கு கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த எண்ணெய்க் குதங்களை சார்ந்ததாக தூய்மையகமொன்றை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம்.

மரபார்ந்த மீன்பிடித் தொழில்துறையை ஆக்கவிளைவுமிக்க தொழிலாக மாற்றும்பொருட்டு ஏற்கெனவே எரிபொருள் மானியம் வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே, கால்நடை வளங்களை விருத்தி செய்தவற்கான பாரிய வாய்ப்பு வளம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்றது. 

அதற்கு மேலதிகமாக 23 ஆயிரம் ஏக்கர் கரும்பு செய்கையைக் கொண்டதாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிலவியது. அந்த இயந்திர சாதனங்கள் அழிவடைந்து வருகின்றன. கரும்பு விளைநிலங்கள் யானைகளின் வாழிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர்களை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். கரும்புச் செய்கையை மீண்டும் ஆரம்பித்து தொழில்சாலையை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் வரை விவசாயிகள் இந்தக் காணிகளில் பயிர் செய்வார்கள். 

அதைப்போலவே, அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த வேளையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதில்லை என எமக்கு தெளிவாகியது. எமக்கும் அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் அடிப்படை அணுகுமுறையை தொடங்கினோம்.

சட்டத்தை அமுலாக்குவதைப் பார்க்கிலும் புரிந்துணர்வு முக்கியமானது. நாட்டில் அரிசி தட்டுப்பாடு கிடையாதென்பதால் சுற்றுலாத் தொழில்துறைக்கு அவசியமான அரிசியை தவிர்ந்த வேறு அரிசி மணி ஒன்றைக் கூட இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரூபா 15 ஆயிரமாக நிலவிய உரமானியத்தை ரூபா 25 ஆயிரமாக அதிகரித்தது அதற்காகத்தான். அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதமளவில் எங்களுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு குறுங்கால ரீதியாக மானியங்களை வழங்குவோம். அதன் பின்னர் நீண்டகால ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் மக்களை சுயசக்தியுடன் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவோம்.  உலகில் விசேடமான ஒரு நிலைமை உருவாகாவிட்டால் 2025 ஆம் ஆண்டை இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வருகை தந்த நாடாக மாற்றுவோம்.

அதேவேளையில் எதிரிகள் அரசாங்கம் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் வீழ்ந்து விடுவதாக சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்ப ஆட்சி சிதைவடைந்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள்.

மக்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் முன் சமமானவர்களாக மாற்றுவோம். 2015 நல்லாட்சி அரசாங்கம் மோசடிப்பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு பதிலாக வெறும் காட்சிக்காக மாத்திரம் செயலாற்றி வந்தது. அந்த நிலைமையை மாற்றியமைத்து எல்லா விதத்திலும் நிறைவான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை திசைகாட்டியின் பிரதிநிதிகளால் நிரப்புங்கள். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ் தோழர் ஒருவரை, முஸ்லிம் தோழர் ஒருவரை, சிங்கள தோழர் ஒருவரை என்ற வகையில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒரே கொடியின் நிழலில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்தும் செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/196973

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்து விட்டது ....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

காலம் கடந்து விட்டது ....

அது திருகோணமலையில்??

யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் 

அனுராதபுரத்தில் 

மாத்தறையில் 

பார்க்கலாம்....,?

1 hour ago, விசுகு said:

அது திருகோணமலையில்??

யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் 

அனுராதபுரத்தில் 

மாத்தறையில் 

பார்க்கலாம்....,?

கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில்.

கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது  வித்தியாசமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும்

நான் இலங்கையன் என்னும் எண்ணம் எனக்கு எப்போது வரும்?

இது ஒரு முரண்பாடான கேள்வியாகவும் இருக்கலாம்

அல்லது ஒரு சுலபமான கேள்வியாகவும் இருக்கலாம்

சுலபமான கேள்விக்கு சரியான பத்தில்
சிங்கள அரசு தமிழ் மக்களின் உரிமைகளை மதிக்கின்றதா
என்ற கேள்விக்குள் அடங்கியுள்ளது

முரண்பாடான  கேள்விக்கான பதில்
சிங்கள அரசு தமிழ் மக்களின் உரிமைகளைத்   தருமா  என்ற கேள்விக்குள் அடங்கியிருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில்.

அடிப்படையில் இவ்வாறு சிந்திப்பது  நல்ல முன்னேற்றகரமான விடயம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில்.

கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது  வித்தியாசமாக இருந்தது.

நிழலியும் வீழ்ந்துட்டார்😄

42 minutes ago, சுவைப்பிரியன் said:

நிழலியும் வீழ்ந்துட்டார்😄

நடந்ததை நேர்மையாக சொல்வதும் பகிர்வதும் வீழ்ந்து விட்டார் வகையில் வராது என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

அது திருகோணமலையில்??

யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் 

அனுராதபுரத்தில் 

மாத்தறையில் 

பார்க்கலாம்....,?

அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....‍ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் ....

இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி...

செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர்  செய்தார்..

சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்...
கியூபா ஜனாதிபதி வருகின்றார் ..
பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ...

பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்...
கியூபா ஜனாதிபதி வருகின்றார் ..
பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ...

பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல

இதை விட இறக்குமதி பொருளாதாரம் என்ற வகையில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழகமான அரசியல் ஜனாதிபதிகள் போலவே ஆப்பு கொடுக்கிறார் கொஞ்ச காலம் பொறுத்து பாருங்க என்கிறார்கள் ஆரம்பத்தில் தமிழரசு கட்சியில் பின்கதவால் சும் வந்தபோது அதை எதிர்த்து யாழில் அரசியல் கருத்துக்கள் எழுதி பலரிடமும் வாங்கி கட்டினேன் இப்போ 14 வருடத்தில் நடப்பது என்ன ?

அதே போல் இடது சாரியையும் நச்சு பாம்பையும் கண்டால் முதலில் இடதை அடி என்ற கொள்கையாளர்கள் கூட அவரின் பேச்சை நம்புகிறார்கள் அவர்களிடம் ஒரு கேள்வி பார் லிஸ்ட் இந்தா வருது அந்தா வருது என்றார்களே அது எங்கே போச்சு ? அதை தடுத்தவர்கள் யார் ? என்ற கேள்விகளை கேட்டு பாருங்க பதில் வராது .

சும்மா ஊடகங்களும் யூடுப் அண்ணாவிகளும் அடித்து விடுகினம் ஆ ஊ என்று அரசியல்வாதியும் ரெயிலும் ஒன்று ரெயில் வழக்கமான தண்டவாளத்தில் தான் பயணிக்கும் அதே போலத்தான் அரசியல்வாதியும் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.