Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!

Mathivanan MaranUpdated: Monday, November 4, 2024, 14:38 [IST]

சென்னை: 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்; அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லும் போது எப்பவோ வந்த பிரமாணர்களை தமிழர்களே இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசிய பஞ்சாயத்தே முடியாத நிலையில் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது.

ஆரியர்கள் வருகை தந்தது உண்மை: பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.

அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: அதை எல்லாம் மறந்துவிட்டு தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. இவ்வாறு கஸ்தூரி பேசினார்.

சீமான் போல பேச்சு: நடிகை கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது சீமானைத் தொடர்ந்து தெலுங்கர்களை தமிழ்நாட்டு மன்னர்களின் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என நடிகை கஸ்தூரி பேசியிருப்பது புதிய பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.

https://tamil.oneindia.com/news/chennai/a-new-controversy-erupts-over-actress-kasturis-remarks-about-telugu-people-651735.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

ஒரு தோல்வி பட இயக்குனர் வெறுப்பரசியலை கையில் எடுத்து நல்ல சுக போகமாக இருப்பதை கண்ட மார்கெட் இல்லாத நடிகைக்கும் தானும் அதே போல் வாழ ஆசை வந்துள்ளது.

  • Replies 57
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • விளங்க நினைப்பவன்
    விளங்க நினைப்பவன்

    💯✅ வான் கோழி தனது சிறகை விரித்தாட அதை கண்ட கோழியும் தனது சிறகை விரித்து ஆடினது என்கிறீர்கள்

  • அப்படியே கான மயிலை டிலீட் பண்ணி போட்டு, கோழி, வான் கோழி எண்டிட்டியள்🤣. ஐ லைக் இட் யா.  

  • விசுகு
    விசுகு

    எங்கள் ஊரில் கந்தசாமி கோயில் பூங்காவனத்திருவிழா உபயகாரர்களான எங்கள் குடும்பத்தினுடையது. பூங்காவனத்திருவிழா அன்று இரவிரவாக இலங்கையின் அதி உச்ச நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் வந்து வாசிப்பது வழமை.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

டிஸ்கி

ஒரு தோல்வி பட இயக்குனர் வெறுப்பரசியலை கையில் எடுத்து நல்ல சுக போகமாக இருப்பதை கண்ட மார்கெட் இல்லாத நடிகைக்கும் தானும் அதே போல் வாழ ஆசை வந்துள்ளது.

💯

வான் கோழி தனது சிறகை விரித்தாட அதை கண்ட கோழியும் தனது சிறகை விரித்து ஆடினது என்கிறீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

வான் கோழி தனது சிறகை விரித்தாட அதை கண்ட கோழியும் தனது சிறகை விரித்து ஆடினது என்கிறீர்கள்

அப்படியே கான மயிலை டிலீட் பண்ணி போட்டு, கோழி, வான் கோழி எண்டிட்டியள்🤣. ஐ லைக் இட் யா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடார் அம்மணி ஏன் தொடர்ந்து பிராமணருக்ககக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்?

“மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே!”😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, வாலி said:

இந்த நாடார் அம்மணி ஏன் தொடர்ந்து பிராமணருக்ககக் குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றார்?

“மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே!”😂

அன்ரி நாடாரா?

நான் பிராமணர்…….வாலியடிங்க, வாயிலடிங்க…அந்தணர் என்றல்லவா நினைத்தேன்.

இவா கொஞ்ச காலம் ஜேர்மனியிலும் வசித்தவா….🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அன்ரி நாடாரா?

நான் பிராமணர்…….வாலியடிங்க, வாயிலடிங்க…அந்தணர் என்றல்லவா நினைத்தேன்.

இவா கொஞ்ச காலம் ஜேர்மனியிலும் வசித்தவா….🤪

https://tamil.oneindia.com/television/what-caste-are-you-the-person-who-asked-the-question-to-the-actress-kasthuri-531115.html

மேலுள்ள இணைப்பில் உள்ள ஸ்கிரீன் சொட்டில் பாருங்கள் ஆன்டி ரசிகரின் கேள்விக்கு மறுக்காமல் காமராசரின் வழித்தோன்றல்கள் என ஒப்புதல் கொடுக்கின்றார்.

ஆன்டி சங்கி என்பதாலும் அதன் காரணமாக பிராமணர்களின் எச்சிற்றட்டினைக் கழுவிச் சுத்தஞ்செய்வதினாலும் தவறாக பிராமணராகப் புரிந்துகொள்ளப்படுகின்றார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

ஆதாரம் சேர் தகவலுக்கு நன்றி வாலி சார்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாலி said:

மேலுள்ள இணைப்பில் உள்ள ஸ்கிரீன் சொட்டில் பாருங்கள் ஆன்டி ரசிகரின் கேள்விக்கு மறுக்காமல் காமராசரின் வழித்தோன்றல்கள் என ஒப்புதல் கொடுக்கின்றார்.

அவர் சொல்லுவது, திராவிடத்தை எதிர்த்தவரின்  (அதில் முக்கியமானவர் காமராசர்) வழித்தோன்றல் என்பது.

காமராசரின் உறவோ, அல்லது தொடர்பு சந்ததிகளில் ஒன்று என்பது பொதுவான கருத்து அல்ல. 

(உ.ம்.ஆக பிரபாவின் வழித்தோன்றல் என்றால் என்ன பிரபாவின் உறவு, தொடர்பு சந்ததி என்று அர்த்தமா?)  

அனால், அவர் எதை  குறித்து சொன்னார் என்பது தெளிவில்லாமல் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

நேற்றைய அவர் பேச்சில் நாம், நாம் என பிராமணரை சொல்வதாக தெரிகிறது.

ஒருவேளை பெற்றாரில் ஒருவர் நாடார், ஒருவர் பிராமணராக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 19:05, வாலி said:

https://tamil.oneindia.com/television/what-caste-are-you-the-person-who-asked-the-question-to-the-actress-kasthuri-531115.html

மேலுள்ள இணைப்பில் உள்ள ஸ்கிரீன் சொட்டில் பாருங்கள் ஆன்டி ரசிகரின் கேள்விக்கு மறுக்காமல் காமராசரின் வழித்தோன்றல்கள் என ஒப்புதல் கொடுக்கின்றார்.

ஆன்டி சங்கி என்பதாலும் அதன் காரணமாக பிராமணர்களின் எச்சிற்றட்டினைக் கழுவிச் சுத்தஞ்செய்வதினாலும் தவறாக பிராமணராகப் புரிந்துகொள்ளப்படுகின்றார்!

உங்களுக்கு சர்க்காரிதமே புரிவதில்லையா..?

1 hour ago, goshan_che said:

நேற்றைய அவர் பேச்சில் நாம், நாம் என பிராமணரை சொல்வதாக தெரிகிறது.

ஒருவேளை பெற்றாரில் ஒருவர் நாடார், ஒருவர் பிராமணராக இருக்கலாம்.

நீங்கள் வாலி இணைச்ச ஸ்கிறின் சார்ட்டை பார்த்துவிட்டா இப்படி எழுதுகிறீர்கள் அல்லது பார்க்கவில்லையா..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்களுக்கு சர்க்காரிதமே புரிவதில்லையா..?

நீங்கள் வாலி இணைச்ச ஸ்கிறின் சார்ட்டை பார்த்துவிட்டா இப்படி எழுதுகிறீர்கள் அல்லது பார்க்கவில்லையா..?

பார்த்தேன். ஆனால் அதில் நீங்கள் கண்ட சார்க்கஸ்த்தை நான் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நேற்றைய அவர் பேச்சில் நாம், நாம் என பிராமணரை சொல்வதாக தெரிகிறது.

ஒருவேளை பெற்றாரில் ஒருவர் நாடார், ஒருவர் பிராமணராக இருக்கலாம்.

தேடிப் பார்த்ததில், அப்பா ஒரு நாயர் என்றும், அம்மா ஒரு பிராமணர் என்றும் இருக்கின்றது, கோஷான்.

அப்புறம் நாயருக்கும், நாடாருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குதா என்று தேடியதில்........ அப்படி ஒன்றும் இல்லை என்பதுடன், நாயர்கள் நாடார்களை விட அடுக்கில் சில படிகள் மேலே என்ற அற்புதமான தகவல்களும் அங்கங்கே கொட்டிக் கிடக்கின்றது.

பூமி முழுவதும் அடிவரை எரிந்து, மீண்டும் உயிர்கள் தோன்றினாலும், இந்திய நிலத்தில் இது எங்கேயாவது அழியாமல் ஒட்டியே இருக்கும் போல..............   

  • கருத்துக்கள உறவுகள்

300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லுகின்றனர் என்றவா தனது சிறகை விரித்து ஆடிய நடன முயற்ச்சி  தோல்வியில் முடிந்ததும் இப்போது  குடும்பம் போன்ற எனது தெலுங்கு மக்களை புண்படுத்துவது காயப்படுத்துவது தனது நோக்கமல்ல என்று வருத்தம் தெரிவித்து இருக்கின்றாவாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

தேடிப் பார்த்ததில், அப்பா ஒரு நாயர் என்றும், அம்மா ஒரு பிராமணர் என்றும் இருக்கின்றது, கோஷான்.

அப்புறம் நாயருக்கும், நாடாருக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குதா என்று தேடியதில்........ அப்படி ஒன்றும் இல்லை என்பதுடன், நாயர்கள் நாடார்களை விட அடுக்கில் சில படிகள் மேலே என்ற அற்புதமான தகவல்களும் அங்கங்கே கொட்டிக் கிடக்கின்றது.

பூமி முழுவதும் அடிவரை எரிந்து, மீண்டும் உயிர்கள் தோன்றினாலும், இந்திய நிலத்தில் இது எங்கேயாவது அழியாமல் ஒட்டியே இருக்கும் போல..............   

சந்தேகமே இல்லை.  மூக்கும் சளியும் போலதான் இதுவும் 🥺.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 20:49, goshan_che said:

டிஸ்கி

ஒரு தோல்வி பட இயக்குனர் வெறுப்பரசியலை கையில் எடுத்து நல்ல சுக போகமாக இருப்பதை கண்ட மார்கெட் இல்லாத நடிகைக்கும் தானும் அதே போல் வாழ ஆசை வந்துள்ளது.

எல்லாம் சரி 
ஓங்கோல் சின்னமேளம் மேல யாரு கை வச்சாலும் எதுக்கு அண்ணனுக்கு மூக்கு வேர்த்து பத்திக்கிட்டு வருது  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

எல்லாம் சரி 
ஓங்கோல் சின்னமேளம் மேல யாரு கை வச்சாலும் எதுக்கு அண்ணனுக்கு மூக்கு வேர்த்து பத்திக்கிட்டு வருது  🤔

என்னவா இருக்கும்?

கோஷானும் அதே சாதியா என நினைக்கிறீர்களா?

பின்புல விளக்கம்

ஓங்கோல் என்பது ஆந்திராவில் ஒரு பகுதி.

சின்னமேளம்  என்பது தெலுங்கு வம்சாவளி நட்டுவர் சாதிக்கு கொடுக்கப்படும் சாதிய வசவு சொல்.

கருணாநிதி இந்த சாதியை சேர்ந்தவர். தெலுங்கு நட்டுவர்/ சின்னமேளம் என்பதை இசை வேளாளர் என பெயர் மாற்றினார்.

இவர்கள் தேவதாசி முறையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதைத்தான் ஒரு தேர்தலில் வைகோ, “குலத்தொழில்” என கூறி பின் மன்னிப்பு கேட்டார்.

தம்மை முற்போக்காளராக காட்டி கொள்ளும் உள்ளே சா-தீய எண்ணம் உள்ள பலர், கருணாநிதியை பழிக்க, தூற்ற ஆயிரம் காரணம் இருந்தாலும், அதை எல்லாம் விட்டு விட்டு,  இந்த சாதிய வசவில் தொங்கி கொண்டிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஓங்கோல் என்பது ஆந்திராவில் ஒரு பகுதி.

சின்னமேளம்  என்பது தெலுங்கு வம்சாவளி நட்டுவர் சாதிக்கு கொடுக்கப்படும் சாதிய வசவு சொல்.

சின்னமேளம் என்பது இலங்கை கோவில்களில் பழைய காலங்களில் நடக்கும் நடனங்களை சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.
ஓங்கோல் சின்னமேளம் என்பது சாதி வெறி வர்மம் கொண்ட வசவு சொல் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2024 at 21:15, ரசோதரன் said:

தேடிப் பார்த்ததில், அப்பா ஒரு நாயர் என்றும், அம்மா ஒரு பிராமணர்

இது சரி, நாயரும் (நம்பூதிரி) பிராமணரின்  ஒரு கிளை. 

இந்த நாயர் கேரளத்தில் இருந்த நாகர்களில் இருந்து இவர்களின் தோற்றம் என்பது ஒரு கதை.

அனால், நம்பூதிரிகளின் முதல் மகனுக்கு உள்ள சந்ததி நம்பூதிரிகள் என்றும், மற்ற  மகன்களின் சந்ததிகள் நாயர் என்றும்  பிரிந்ததாக,

அப்படியான ஒரு முறை இருந்து இருக்கிறது.

ஏனெனில், நம்பூதிரிகளிடம் ஒரு தாம்பதிய  முறை இருந்தது - முதல் மகனின் மனைவி நம்பூதிரியாக இருக்க வேண்டும் முதல் மகன் உடன் மட்டுமே தாம்பத்திய  உறவு. 

மற்ற மகன்களின் மனைவிகள் நாயராக அல்லது நம்போதிரிகளாக இருக்கலாம்,  அவர்களின் கணவனை தவிர கணவனின் மற்ற ஆண் சகோதரத்துடன் தாம்பத்திய  உறவு வைக்க வேண்டும் என்று.

இதில் (மற்ற மகன்களுக்கு) வந்த சந்ததிகள் தான் நாயர் என்றும், மனைவிகள் நம்பூதிரிககள் என்றாலும்.

இதில் தெரிவது, (வட) பிராமண வருகை (ஏனெனில் நம்பூதிரிகளின் தோற்றம் நர்மதா ஆற்றங்கரையில் என்ற நம்பிக்கை), பின் உள்ளூர் மக்களுடன் (சாதிகளுடன்) கலப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.
ஓங்கோல் சின்னமேளம் என்பது சாதி வெறி வர்மம் கொண்ட வசவு சொல் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். நன்றி.

இசை வேளாளர் சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர். சின்ன மேளம், பெரிய மேளம் மற்றும் நட்டுவாங்கம் என்பவை இச்சாதியின் உட்பிரிவுகளாகும். 

சின்னமேளம் என்பது இசை வேளாளர் என்று எழுபதுகளில்  களில் மாற்றப்பட்ட தேவதாசி/மேளக்காரர்கள் சாதியின் உட்பிரிவாகும்.

தேவரடியார்கள் இசை வேளாளர்கள் ஆனா பிறகு அதில் தமிழர்களும் தெலுங்கர்களும் இருந்தனர். அதில் பெரிய மேளம் பிரிவினர் தமிழ் பேசும் தமிழர்கள் ஆவார்கள். சின்ன மேளம் பிரிவினர் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆவார்கள்.பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியால் தமிழரையும்,தெலுங்கரையும் ஒன்றாக இணைத்து குழப்பம் ஏற்படுத்தினார்கள். இந்த குழப்பம் பல சாதிகளில் உள்ளன வாக்கு வங்கிக்காக அரசியல் லாபத்திற்காக வரலாற்றை திரித்து தமிழர் தெலுங்கர் என அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரே சாதிகளாக மாற்றிவிட்டனர். 1971 ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி சின்னமேளம்,பெரிய மேளம்,நட்டுவாங்கம் ஆகிய மூன்று சாதியினரையும் ஒன்றாக சேர்த்து இசை வேளாளர் என அறிவித்தார்.

இங்கே தான் நம்ம சின்ன மேளம் தமிழர் தெலுங்கர்களை ஒன்றாக சேர்த்து ஒரே சாதியாக அறிவித்து தனது ஜில்மாட்டை காட்ட, இதனை முற்றிலுமாக மறுத்தவர்கள் இல்லை நீ சின்னமேளம் தான் என்று ஆணிவேரை நோண்ட. கடுப்பேறிய சா தீய எதிர்ப்பாளர்கள் இதனை ச தீய வசவுச்சொல்லாக மாற்ற முக்குரினம்.  நம்ம அண்ணனுக்கு சின்னமேளம் மேல் ஒருதலைக்காதல் என்பதால் நைசா அவருடைய  சா-தீய ஒதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட மிக்ஸரை உள்ள சொருகுகிறார்.   

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சின்னமேளம் என்பது இலங்கை கோவில்களில் பழைய காலங்களில் நடக்கும் நடனங்களை சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்

அன்று பல மேள வாசிப்புக் காரர்கள் வாய்ப்புத் தேடி இலங்கை வந்து இங்குள்ள நட்டுவருடன் கலந்து விட்டதாக ஒரு கதை கேள்விப்பட்டுளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

சின்னமேளம் என்பது இலங்கை கோவில்களில் பழைய காலங்களில் நடக்கும் நடனங்களை சொல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன்.

இது சரி தான்    சின்ன மேளம்      மேளத்தை குறிக்காது    

இளம்பெண்கள் நடனத்தைக் குறிக்கும்   உதாரணமாக சினிமாவில் குத்தாட்டம் போடுறது போல்   தனியாக இரண்டு இளம்பெண்கள் ஆடுவார்கள்   1970. ஆம் ஆண்டு பார்த்து உள்ளேன்    கைதடியில்.  ஒரு திருமண நிகழ்வில்   நாலாவது சடங்கு அன்று   மணமக்கள் முன்னிலையில் ஆடினார்கள்.   முல்லைத்தீவு சேர்ந்த சின்ன மேளக் கோஸ்டி 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

இசை வேளாளர் சாதியினர் மேளக்காரர் என்ற பெயரிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை அழைக்கப்பட்டனர்.

இசை வேளாளர் என்று முன்பே வந்துவிட்டது. 

இதன்  வரலாறு சுருக்கமாக.

இசைவேளார் என்பவர்கள் தமிழர்கள்.

ஏனெனில், சோழர் காலத்தில் வீட்டிலொரு பெண் பிள்ளையை கோயிலுக்கு தனமாக கொடுப்பது பெருமையாக கருதப்பட்டது.

ஏனெனில், அன்று அந்த பெண்கள் பெண் தெய்வம்  என்ற (சமூக) நிலையிலேயே வைக்கப்படுவதற்கு சோழ  அரசு நிலையை ஏற்படுத்தி  இருந்தது. 

எல்லா சாதியினரும் கொடுத்தனர், அவரவரின் பெருமையை கொண்டாடுவதற்கு 

இந்த பெண்களே, அவர்களின் அடி  தேவதாசியினர்.

இது விஜயநகர பேரரசின் கீழும் தொடர்ந்தது.

ஆங்கிலேயர் அல்லது ஒல்லாந்தர் (எந்த காலம் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது) இதை தடை செய்தனர், சமயத்தை கொண்டு விபச்சாரம் நடப்பதாக. 

தடை செய்ததால், அவர்களின் உழைப்பும் இல்லாமல் போக, அனாதைகளாக,கோயில் (எல்லா விதத்திலும் பாதுகாத்த, ஆதரவளித்த பிரமணராலும்), சொந்த குடும்பங்களாலும் கைவிடப்பட்டனர். 

இவர்களே முதலில் இசை வெள்ளாளர் என்று, தமது அடையாளத்தை மறைக்க, அவர்களுக்கு அவர்களே சாதியாக சூட்டிக்கொண்ட பெயர். 

முக்கியமாக இரண்டு சாதிகள் பெண் பிள்ளளையை கோயிலுக்கு தானம் கொடுத்தனர் - வெள்ளாளர், செங்குந்தர்.

அதில் தொகையில் வெள்ளாளர் பெண்கள்,  மற்றும் அடி (ஏனெனில், அவர்கள் கலந்து இருக்க முடிந்தது பிராமணருடன் மட்டுமே) அதிகம் என்றும்.

அந்த பெயருக்கும் (இசை வெள்ளாளர்) இது ஒரு காரணம் என்றும்.

(இந்த ஆயு செய்தது Mattison Mines, The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India (Studies in Economic History and Policy) )

அனால், இசை வெள்ளாளர் பற்றிய  1970 - 1980 ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க  வெள்ளாளர் மட்டும் முற்றாக மறுத்து  விட்டனர்.  

வேறு ஆய்வுகளும் இதையும், சோழர் கால பெண் பிள்ளை தானத்தையும் தொட்டு செல்கிறது.

மிக கொடூரமான வரலாறு.   

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of 2 people and text

//கஸ்தூரி என்ன பேசினாலும் எமோசன் ஆகாத, 
இல்லேனா  நாம தெலுங்கு கூட்டம் என்று தெரிந்திடும்.//

மூடிக்கிட்டு இரு... மூமென்ட். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kadancha said:

இசை வேளாளர் என்று முன்பே வந்துவிட்டது. 

இதன்  வரலாறு சுருக்கமாக.

இசைவேளார் என்பவர்கள் தமிழர்கள்.

ஏனெனில், சோழர் காலத்தில் வீட்டிலொரு பெண் பிள்ளையை கோயிலுக்கு தனமாக கொடுப்பது பெருமையாக கருதப்பட்டது.

ஏனெனில், அன்று அந்த பெண்கள் பெண் தெய்வம்  என்ற (சமூக) நிலையிலேயே வைக்கப்படுவதற்கு சோழ  அரசு நிலையை ஏற்படுத்தி  இருந்தது. 

எல்லா சாதியினரும் கொடுத்தனர், அவரவரின் பெருமையை கொண்டாடுவதற்கு 

இந்த பெண்களே, அவர்களின் அடி  தேவதாசியினர்.

இது விஜயநகர பேரரசின் கீழும் தொடர்ந்தது.

ஆங்கிலேயர் அல்லது ஒல்லாந்தர் (எந்த காலம் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது) இதை தடை செய்தனர், சமயத்தை கொண்டு விபச்சாரம் நடப்பதாக. 

தடை செய்ததால், அவர்களின் உழைப்பும் இல்லாமல் போக, அனாதைகளாக,கோயில் (எல்லா விதத்திலும் பாதுகாத்த, ஆதரவளித்த பிரமணராலும்), சொந்த குடும்பங்களாலும் கைவிடப்பட்டனர். 

இவர்களே முதலில் இசை வெள்ளாளர் என்று, தமது அடையாளத்தை மறைக்க, அவர்களுக்கு அவர்களே சாதியாக சூட்டிக்கொண்ட பெயர். 

முக்கியமாக இரண்டு சாதிகள் பெண் பிள்ளளையை கோயிலுக்கு தானம் கொடுத்தனர் - வெள்ளாளர், செங்குந்தர்.

அதில் தொகையில் வெள்ளாளர் பெண்கள்,  மற்றும் அடி (ஏனெனில், அவர்கள் கலந்து இருக்க முடிந்தது பிராமணருடன் மட்டுமே) அதிகம் என்றும்.

அந்த பெயருக்கும் (இசை வெள்ளாளர்) இது ஒரு காரணம் என்றும்.

(இந்த ஆயு செய்தது Mattison Mines, The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India (Studies in Economic History and Policy) )

அனால், இசை வெள்ளாளர் பற்றிய  1970 - 1980 ஆய்வுகளுக்கு ஒத்துழைக்க  வெள்ளாளர் மட்டும் முற்றாக மறுத்து  விட்டனர்.  

வேறு ஆய்வுகளும் இதையும், சோழர் கால பெண் பிள்ளை தானத்தையும் தொட்டு செல்கிறது.

மிக கொடூரமான வரலாறு.   

இசை வேளாளர்களை 'மேளக்காரன்' சாதி என்று தென்னிந்திய குலங்களும் குடிகளும் நூலில் (1855) எட்கர் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.

Dēvadāsis are dancing-girls attached to the Tamil temples, who subsist by dancing and music, and the practice of ‘the oldest profession in the world'. The dancing-girl castes, and their allies the Mēlakkārans, are now practically the sole repository of Indian music, the system of which is probably one of the oldest in the world.- Castes and Tribes of Southern India, Volume 2, 1855, By Edgar Thurston)

மேலேயுள்ள ஆதாரத்தின் படி இவர்கள் மேளக்காரர்கள் என்று தான் அழைக்கப்பட்டிருக்கிறாார்கள்.

அதிலும் இந்த நட்டுவாங்கப்பிரிவினர் பெண் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி தேவதாசிகளாக்கினர் என்று ஒரு திராவிட தளத்தில் தேடும் போது சிக்கியது. போதுமான ஆதாரம் கிடைக்கவில்லை. வலி மிகுந்த வரலாறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து காலவொட்டதில் பிரிந்தன என்றால் எல்லோரும் ஒரே மரபு இன மக்கள்  தானே. இதிலென்ன தமிழ் பெரிய மேளம், தெலுங்கு சின்ன மேளம் என பிரிப்பு என்பது புரியவில்லை.

எமக்கு தொடர்பில்லாத பக்கத்து நாட்டில் சாதிப்பிரிவினைகளை ஊக்குவிக்கும் கதையாடல்களை மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ள நாம் எமது நாட்டில் இன ஒடுக்குமுறை என்று ஒலமிடுவது முரண்பாடாக தெரியவில்லையா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.