Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்

Minnambalam Login1Nov 08, 2024 11:58AM
tvk vijay wishes seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 😎 பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

Screenshot-2024-11-08-111341.png

இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

 

https://minnambalam.com/political-news/tvk-vijay-wishes-seeman-on-his-birthday/

  • Replies 93
  • Views 4.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு.. சீமான் வெல்லாமல் போகலாம்

  • நீங்கள் குறிப்பிடுவது புலிகளை என்றிருந்தால்.... பேச்சு பேச்சு என்று அழைத்து சென்று  சர்வதேச நாடுகள் முன்னிலையில்  புலிகளுடன் மேசைக்கு வந்து தனக்கிருக்கும் சர்வதேச ஆதரவை வைத்து  புலிகளின் ஆயுத களை

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.     🎂 💐 🎉 🍬 🍭

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவசரப் படுகிறார். விஜய் சரியாக சிந்திக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீமான் சகோ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்

large.IMG_7456.jpeg.bb507e9488bd60e74e68

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளை அழிக்க எத்தனையோ வழிகள் உண்டு……

முதல் வழி மன்னிப்பு.

———-

இனத்தால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டு அரசியலில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பிகு

பிறந்த நாளில் இயற்பெயரில் சொல்லும் வாழ்த்து மட்டுமே பலிக்கும் என்பது ஐதீகம்🤣

46 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7456.jpeg.bb507e9488bd60e74e68

அண்ணன் கொடுத்த கூமுட்டையை வாங்கி அதை கொண்டே அண்ணனுக்கு கேக் அடிச்சு குடுத்திட்டாப்பல🤣.

முன்னர் திக வில் இருந்து திமுக பிரிந்த போது, இப்படித்தானம் பெரியார் கடுமையாக திமுக/அண்ணாவை எதிர்த்தார்.

ஆனால் அண்ணா எதிர்வினை எதுவும் காட்டாமல், தொடர்ந்தும் பெரியாரை கண்ணியமாக நடத்த, பெரியாரின் எதிர்ப்பு பிசு பிசுத்து போனது என்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.    ☘️

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சீமான் என்கின்ற சைமன் செபஸ்டியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தப்பு தப்பு! 

யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல.  

பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன். 

என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம்  வ உ சி வரை  இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர்  தனது சொந்த பாட்டன் யக்கோப்பு  பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

தப்பு தப்பு! 

யக்கோப்பு செபஸ்ரியான் சைமன் என்று பாட்டன் பெயரையும் சேர்தது சொல்லுமல்ல.  

பூர்வீகம் மலையாளியாக இருந்தாலும் தமிழ் நாட்டை ஆள துடிப்பது தவறில்லை. ஏனென்றால் இன்று உத்தியோகபூர்வமாக அவர் தமிழ்நாட்டு குடிமகன். 

என் பாட்டன் என்று இராவணன், ராஜராஜசோழன் தொடக்கம்  வ உ சி வரை  இரவல் பாட்டன் பெயரை பட்டியல் போடுபவர்  தனது சொந்த பாட்டன் யக்கோப்பு  பெயரை கேட்டால் பம்முவார் நெளிவார் கூச்சப்படுவார். 😂

ஒத்து கொள்கிறேன்.

மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே!

சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள்.

அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும்.

ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்  தலைவா…    

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஒத்து கொள்கிறேன்.

மொழிவாரி பிரிப்பின் போது தமிழகத்தில் தங்கிவிட்ட, அதன் பின் தமிழகத்தை தன் தாய் நிலமாக, தமிழை தன் இன அடையாளமாக மனதார ஏற்கும் சீமான் ஒரு தமிழரே!

சீமானை தமிழர் இல்லை என்பவர்கள் இனத்தூய்மைவாதிகள்.

அதேபோல் எப்படி விஜை, ஜோச்சப் விஜை என்பது எனக்கு பொருட்டல்லவோ அதே போலத்தான் சீமான், சைமன் என்பதும்.

ஆனால் தன் சொந்த அடையாளங்களை மறுதலிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் உண்டு.

சொந்த அடையாளங்களை மறுப்பது மட்டுமல்ல இனதூய்மைவாதம், இனவெறி  என்ற நச்சு விதையை தமிழ்நாட்டில்  தனது மலிவான அரசியலுக்காக விதைக்க முற்படும் கேவலமான மனிதர்.  ஏற்கனவே இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழரின் பிணங்களை பயன்படுத்தி இனவாதத்தை தூண்டிவருவது எவ்வளவு கேவலமான செயல்.  சுயநலத்திற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்க கூடியவர் என்பதை புரிந்து கொண்ட  தமிழ் நாட்டு மக்கள் இவரைத் தோற்கடித்தே வருகின்றனர்.   

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்  தலைவா…    

கந்தையா அண்ணை பெட்டி வாங்கீட்டார்🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

அரசியலில் நீ வெற்றி பெறுகிறாயோ இல்லையோ, அதிகாரத்தை பிடித்து தமிழர்களுக்கு நல்லது செய்யறியோ இல்லையோ, ஆனால் ஒன்று நீ தூவிய தமிழ் தேசிய விதைகள் தமிழர் வாழும் மண்ணெல்லாம் முளைக்கத் தொடங்கி விருட்சமாக வளர்கிறது......

ஆமாம் பல நூறு ஆண்டுகளாக நாம் அடிமையானவர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்து வரும் தமிழர் இன கூட்டத்தை சாட்டையால் அடித்து, 
நீ பெருமைமிகு தமிழ் இனத்தின் மகன் என்றும்....
உன் தாய்மொழி உலகில் ஆக சிறந்தது என்றும்........
நீ நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவன் என்றும்.....
உன் முன்னோர்கள் அறத்திலும் வீரத்திலும் மாண்பிலும் ஆகப் பெரும் தலைவர்கள் என்று உணர்த்தி இருக்கிறாய்...
அந்த நன்றி கடனோடு உன்னை வாழ்த்துவதில் மகிழ்வே...
தமிழர் வரலாற்றில் நீயும் பேசப்படுவாய்...
வாழ்த்துக்கள் சீமான் அண்ணா💐💐💐

குகன் அருமைநாட்டார்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜனிகாந்த் எண்ட பெயரில ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வெளிக்கிட்டவர். அப்ப ஒரு சனமும் ஒரு கதையும் இல்லை.  😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ரஜனிகாந்த் எண்ட பெயரில ஒருத்தர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வெளிக்கிட்டவர். அப்ப ஒரு சனமும் ஒரு கதையும் இல்லை.  😁

அப்ப... கோமாவில் இருந்திருப்பார்களோ... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் பலரே மறந்துகொண்டும் போகும் ஒரு தலைவனை அவன் தத்துவத்தை வெல்வம் தோற்பம் என்பதற்கு அப்பால் மக்களிடம் விதைத்து பரப்பி முளைவிட செய்துகொண்டிருக்கும் சீமானுக்கு..

சீமான் வெல்லாமல் போகலாம் அவன் தமிழகத்தில் விதைப்பது ஈழத்தில் எங்கள் தலைவன் விதைத்தது.. தமிழ் தேசியம்.. அந்த தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெற்ற விஜய் போன்றவர்கள்கூட உச்சரிக்கவைத்த முன்னத்தி ஏர் சீமானுக்கு…

இனிய அகவை தின வாழ்த்துக்கள்..

சீமான் பாடியதில் எனக்கு மிகப்பிடித்தது👇

விதைத்துக்கொண்டிருங்கள்.. இன்று விஜைபோல் இன்னும் பல விருட்சங்கள் தமிழ்தேசியத்தை பேசட்டும்..🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அப்ப... கோமாவில் இருந்திருப்பார்களோ... 🤣

இல்லை இதே போல் யாழில் ரஜனியையும் “சனம்” கிழித்து தொங்கத்தான் விட்டது.

அவர்கள் அல்ல அவற்றை வாசித்தும் வாசிக்காதது போல் நடிக்கும் ஓரிருவருக்குத்தான் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்.

#மெடுலா ஓப்பலங்கேட்டா

# என்னது முட்டை ஆம்லெட்டா🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7456.jpeg.bb507e9488bd60e74e68

🤣...............

கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியத்தை மக்கள் மயப்படுத்திய சீமான் சுடச் சுடரும் பொன்போல திகழ்ந்திட வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி உள்ளார் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் ஜயா பெ மணியரசன்..

மற்றும் சீமானை வாழ்த்தியோர்👇

https://youtu.be/ka4p_4uJ9e0?si=PtvBXlDKyzzXw2Oz

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣...............

கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.

அன்னாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூட, விஜை வாழ்த்துச்சொன்னார் என்ற செய்தியின் கீழ்த்தான் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அன்னாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூட, விஜை வாழ்த்துச்சொன்னார் என்ற செய்தியின் கீழ்த்தான் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து மகிழ்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். 

🤣............

உண்மையிலேயே விஜய் வாழ்த்துச் சொன்னார் என்ற செய்தியினால் தான் சீமானின் பிறந்தநாள் என்பது எனக்குத் தெரியவந்தது. சீமான் இணைய உலகில் ஒரு அரசன், ஆனால் விஜய் அதே இணைய உலகில் ஒரு சக்கரவர்த்தி. இவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒரு மூச்சு விட்டாலே இணையம் கலகலக்கின்றது.....

விஜய்யின் காலண்டரை யாரோ நிரப்பி வைத்திருக்கின்றார்கள் போல. தற்போதைய நிலையில் சசிகலாவின் பிறந்தநாளுக்கு கூட ஒரு வாழ்த்து சொல்லி வைத்துக் கொள்வார்...........

'எந்த ஏழு பேர்...............' என்று ரஜனி போல 'லூஸ் டாக்' எதுவும் விடாமல் கவனமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றார்.............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

உண்மையிலேயே விஜய் வாழ்த்துச் சொன்னார் என்ற செய்தியினால் தான் சீமானின் பிறந்தநாள் என்பது எனக்குத் தெரியவந்தது. சீமான் இணைய உலகில் ஒரு அரசன், ஆனால் விஜய் அதே இணைய உலகில் ஒரு சக்கரவர்த்தி. இவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒரு மூச்சு விட்டாலே இணையம் கலகலக்கின்றது.....

பாவம் 200 ரூபா ஊபிஸ் இலங்கை அரசு நியமித்த பட்டதாரி அபிவிருத்தி அதிகாரிகள் போல், வேலைக்கு போவது மட்டும்தான் வேலை இப்போ அவர்களுக்கு🤣.

 

1 hour ago, ரசோதரன் said:

'எந்த ஏழு பேர்...............' என்று ரஜனி போல 'லூஸ் டாக்' எதுவும் விடாமல் கவனமாகத்தான் போய்க் கொண்டிருக்கின்றார்.............

நம்ம தலைவர் ரேஞ்சே வேற, ஒருகாதை குரு மூர்த்தி கடிக்க, ஒரு காதை லதா கடிக்க, அடிக்கடி வைரமுத்து போனில் வந்து உருட்ட, சொல்புத்தியும் இல்லாமல், சுயபுத்தியும் இல்லாமல் - கடைசியில் “ஒரு கணம் தலை சுத்திடிச்சு” என உண்மையை ஒத்து கொண்டார் 🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.