Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன்

அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று  கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ...

எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள்,  இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன்

பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள்.

மா

எலுமிச்சை 

அவகாடோ

தக்காளி & கத்தரி ஒட்டுமுறை 

பப்பாசி 

கொய்யா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, valavan said:

எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள்,  இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன்

மிகவும் அழகாக இருக்கின்றது........... அதனாலேயே நம்ப முடியாமல் இருக்கின்றது.

ஒட்டு நாவல் மரம் ஒன்று இங்கு வீட்டில் வைத்திருக்கின்றோம். முதல் வருடத்திலிருந்தே நன்றாகவே காய்க்கின்றது, தாய் மரம் வேறொரு வீட்டில் காய்த்துக் கொண்டு நின்றதே. ஆனாலும் வீட்டில் மரத்தின் புதிய கிளைகள் சவண்டு சவண்டு விழுகின்றன. அந்த மரத்தை ஓரளவு தான் எங்களால் ஏமாற்ற முடிந்துள்ளது போல...............🤣

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

உங்களுடையதா..மிகவும் அழகாக இருக்கிறது.✍️🖐️

எது யாயினி என்னோடதா?

நானெல்லாம் வைச்சா ஒரு நக காளான்கூட முளைக்காது அவ்வளவு ராசி.

அந்த யூடியூப் தளக்காரர் ஏராளமான பதிய முறை மற்றும் ஒட்டுமுறையை தரவேற்றியிருக்கிறார். பிரமிப்பாகவும் அனைத்தையும் பார்வையிடவேண்டுமென்ற ஆவலையும் தூண்டியது.

19 minutes ago, ரசோதரன் said:

ஒட்டு நாவல் மரம் ஒன்று இங்கு வீட்டில் வைத்திருக்கின்றோம். முதல் வருடத்திலிருந்தே நன்றாகவே காய்க்கின்றது, தாய் மரம் வேறொரு வீட்டில் காய்த்துக் கொண்டு நின்றதே. ஆனாலும் வீட்டில் மரத்தின் புதிய கிளைகள் சவண்டு சவண்டு விழுகின்றன

அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அமெரிக்காவிலா யசோதரன்? ஆச்சரியமாக உள்ளது.

என்னுடைய வீடு தென் கலிஃபோர்னியாவில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு நகரில் இருக்கின்றது, வளவன். குளிர் மிகவும் குறைந்த, பல மாதங்கள் வெப்பமான உலர் காலைநிலை உள்ள இடம், பனி விழுவதே இல்லை. ஓரளவிற்கு எங்களின் ஊர் போலவே.

இங்கு பலரின் வீடுகளில் எங்களின் மரங்கள், தாவரங்கள், பூச்செடிகள் பலவும் உள்ளன.

பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன.............  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

பெரிய இரண்டு முருங்கைகள், மா, பலா, கொய்யா, வாழை, நாவல், மாதுளை, பப்பாசி, கறி வேப்பிலை, தேசி என்று பல மரங்கள் இங்கு என் வீட்டில் நிற்கின்றன..........

சொல்லவே இல்லை.

இதுக்காகவே வரணும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பயிரிடு முறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்

ஆனால் கொக்கோகோலாவிற்குள் வைத்து அதிவேகமாக எலுமிச்சை மரத்தை உருவாக்கலாம் என்று இவர் சொல்கிறார் , புதுசா இருக்கு. 

கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது  தப்பென்பதால் இணைக்கிறேன். 

இது வாழை மரம்

Edited by valavan
மேலும் ஒரு காணொலி சேர்ப்புக்காக.,,

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பலனுள்ள பதிவுகள் சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது, முன்பு சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி அது சரிவரவில்லை, இந்த காணொளிகளை பார்த்துவிட்டு தற்போது முதற்தடவையாக இந்த ஒட்டு வேலை செய்வதற்கான கத்தியினை இணையத்தில் வாங்கியுள்ளேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, vasee said:

சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது

நீங்கள் சொல்வது உண்மைதான் வசீ ,

சில செடிகள்  பயன்தரு மரங்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் இறுதிவரை பயன் தராமலே கருகி போய்விடுகின்றன ,இவர்கள் தகவல்கள் முயற்சிகள் வேறு தரத்திலுள்ளன. முயன்றுதான் பார்ப்போமே என்று எண்ண தோன்றுகிறது.

நாமெல்லாம் தண்டுகள் விதைகளை  வைத்தே சில செடிகளை உருவாக்குவோம், ஆனால் இலைகளை வைத்தே மாமரம் கொக்கோகோலா உதவியுடன் மிகவும் குள்ளமாக உருவாக்கலாமென்று இவர் கூறுகின்றார் 

இது இன்னொருமுறை

குள்ளமான செடிகளென்பதால் குளிர்காலங்களில் வெயில் படும்படியா வீட்டினுள்ளே வைத்தும் பரமரிக்கலாம் போல இருக்கிறது

இது வேகமாக ஆரோக்கியமான ரோஜாக்களை உருவாக்கும்முறை, வீடியோவின் இறுதியில் அவர் தனது குழந்தைகளை அணைத்தபடி நின்றபோது எது ரோஜா எது குழந்தைகள்  என்று குழப்பமா போனது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

பூவரசு மரமும் கத்தரியும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைகள் அல்ல, சுண்டைக்காய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் Solanaceae family குடும்பத்தினை சேர்ந்தது, சும்மா நீங்கள் என்னைக்கலாய்க்க இவ்வாறு கூறுகிறீர்கள் என கருதுகிறேன், நான் உங்களவிற்கு படித்த நபர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2024 at 05:41, valavan said:

கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது  தப்பென்பதால் இணைக்கிறேன். 

பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣.

குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது.

இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக்  கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன.

சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்..............

இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............             

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/11/2024 at 01:49, ஈழப்பிரியன் said:

சொல்லவே இல்லை.

இதுக்காகவே வரணும்.

துலைஞ்சான் ரசோதரன்.....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

பூவரசு மரமும் கத்தரியும் ஒரே குடும்பத்தினை சேர்ந்தவைகள் அல்ல, சுண்டைக்காய், தக்காளி மற்றும் கத்தரிக்காய் Solanaceae family குடும்பத்தினை சேர்ந்தது, சும்மா நீங்கள் என்னைக்கலாய்க்க இவ்வாறு கூறுகிறீர்கள் என கருதுகிறேன், நான் உங்களவிற்கு படித்த நபர் அல்ல.

சுண்டைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டுவதன் நோக்கம் ஒட்டுக்கத்தரி சுண்டைங்காய் மரம் போல பெரிதாக வளர்ந்து 3 அல்லது 4 வருடங்கள் வரை பயன் தரும், அதே போல தக்காளியினையும் ஒட்டலாம்.

3 hours ago, குமாரசாமி said:

படிச்ச அறிவ வைச்சு நான் சின்ன வயசிலை பூவரசம் மரத்தோட  கத்தரி மரத்தை ஒட்டிப்பார்த்தன் சரி வரேல்ல. இதை பார்த்த அண்ணர் மூளாய் ஆஸ்பத்திரியை பற்றி ஏதோ கதைக்க அடுத்த திட்டத்த கை விட்டுட்டன். 😎

பூவரசினை ஒட்ட முடியாது எனவே கருதுகிறேன், நீங்கள் விளையாட்டாக கூறுவதாக முதலில் நினைத்தேன் ஆனால் உண்மையாக நீங்கள் முயன்றிருக்ககூடுமோ என  தற்போது கருதுகிறேன், எந்த முயற்சியும் தவறல்ல ஒரு அனுபவம் மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, vasee said:

நீங்கள் விளையாட்டாக கூறுவதாக முதலில் நினைத்தேன் ஆனால் உண்மையாக நீங்கள் முயன்றிருக்ககூடுமோ என  தற்போது கருதுகிறேன்,

உவன் செய்தாலும் செய்யக்கூடிய ஆள் எண்ட பீலிங்...😂

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2024 at 07:24, ரசோதரன் said:

பலத்த சந்தேகம் தான், வளவன். வாழைப்பழத்திலிருந்து வாழையா............ ஆனாலும் சோடாவைக் குடித்தால் உடம்பு கெடும் என்கின்றார்கள்............. சோடாவை வாழைப்பழத்திற்கு கொடுத்துப் பார்ப்போமே என்ன நடக்கிறது என்று............🤣.

குட்டி வாழையில் குலைகளை பார்த்தவுடன் பன்றி வாழை நினைவும், இங்கு நடந்த ஒரு நிகழ்வும் நினைவில் வருகின்றது.

இங்கு ஒரு கல்யாண வீட்டிற்காக என் வீட்டிலிருந்து இரண்டு வாழைகளை வெட்டிக்  கொடுத்தேன். பெரிய வாழைகளை முக்கால்வாசிக்கும் மேல் வெட்டிக் கொடுத்தேன். அப்படித்தான் அவர்கள் கேட்டிருந்தனர். பின்னர் மிகுதியாக இருந்த இரண்டு கால் வாழைகளிலிருந்தும் குருத்துகள் வந்தது. ஏதோ சரியான கவலையாகப் போய்விட்டது. இப்படி செய்திருக்கவே கூடாது என்றும் தோன்றியது. வாழைகள் கொஞ்சம் உயிர் கூடிய மரங்கள் போல தோன்றுகின்றன.

சில வாரங்களில் அதில் ஒன்று குலை தள்ளப் போகின்றது என்று தெரிந்தது. புதிதாக வந்த மெல்லிய தண்டு, அதனுள்ளே வாழை மொத்தி, பின்னர் குலை............. கடவுளே, இது எப்படி அதைத் தாங்கும் என்று ஒரே யோசனை............... ஆனால், நான் அதைக் காப்பற்றி எடுத்தேன்..............

இங்கே மனிதர்கள் கேட்டுக்கேள்விகள் இல்லாமல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பயல் ஒரு வாழைக்கும், அதன் குலைக்கும் பரிதாபப்படுகின்றானே என்று தோன்றினால்............... எனக்கும் தோன்றியது............. ஆனாலும் அந்த வாழை தான் வென்றது. அதன் அடிகள் இன்னமும் வீட்டில் நிற்கின்றன.............             

வாழை பொத்தி வெளி வரும் போது, சாம்பல் அல்லது பொட்டாசியம், தேயிலை சாயாம் இவற்றை  வாழைக்கு ஊத்திவிடுங்கள் நன்றாக குலை தள்ளும்👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

வாழை பொத்தி வெளி வரும் போது, சாம்பல் அல்லது பொட்டாசியம், தேயிலை சாயாம் இவற்றை  வாழைக்கு ஊத்திவிடுங்கள் நன்றாக குலை தள்ளும்👍

👍...............

பயன்படுத்திய தேயிலையை ஒரு சின்ன மலையாக வீட்டில் குவித்து வைத்திருக்கின்றார் பொறுப்பாளர்...... இப்பொழுது தான் காரணம் புரிகின்றது...............🤣.  

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2024 at 08:01, vasee said:

நல்ல பலனுள்ள பதிவுகள் சில நம்ப முடியாதளவிற்கு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது, முன்பு சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி அது சரிவரவில்லை, இந்த காணொளிகளை பார்த்துவிட்டு தற்போது முதற்தடவையாக இந்த ஒட்டு வேலை செய்வதற்கான கத்தியினை இணையத்தில் வாங்கியுள்ளேன். 

thumbnail-IMG-0262

thumbnail-IMG-0263.jpg

சுணடைக்காய் மரத்தில் கத்தரி ஒட்டி உள்ளேன், இது 10 நாள்களுக்கு முன்னர் செய்யப்பட்டது, இந்த இலை அரும்பு நிலையில் 1 CM அளவில் இருந்தது, தற்போது 4-5 CM வரை வளர்ந்துள்ளது, இரவு நேரத்தில் இலேசாக  வாடுகிறது (ஒளிச்சேர்க்கை இல்லாமல் ஆரம்ப நிலையில் இன்னமும் பூரணமாக குணமாகத நிலையில் உள்ளது) 2 அல்லது 3 வாரத்தில் சரியாகிவிடும் என கருதுகிறேன், தற்போது சிட்னியில்  கோடைகாலம்.

கத்தரியினை சுண்டங்காய் மரத்தில் ஒட்டினால் நோய் எதிர்ப்பு சக்தியுடன்  3 - 5 வருடங்கள் வரை கத்தரி பலன் தரும்.

முன்னர் 45 பாகையில் ஒரு வெட்டு கத்தரியிலும் அதே போல் சுண்டைங்காய் மரத்திலும் அதற்கேற்ப வெட்டி இணைத்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது 'V' வெட்டு மூலம் பொருத்தியுள்ளேன், ஒட்டும் பகுதியினை துணியினால் முன்னர் சுற்றிய நினைவுள்ளது தற்போது காற்று புகாத cling wrap (cling wrap தான்) போன்ற ஒட்டுக்குரிய நாடா பாவித்துள்ளேன்.

நேரடியான சூரிய வெளிச்சத்தினை இம்முறை தவிர்த்துள்ளேன், மற்றும் முன்னர் பிளாஸ்ரிக் இனால் மூடி கட்டியிருந்தேன் தற்போது வலவன் இணைத்த காணொளிகளில் குறிப்பிடும் கொக்க கோலா போத்தில் பாவித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள் @valavan @vasee @உடையார்

@குமாரசாமி @ரசோதரன்

வீட்டில் உள்ள கறுத்தக் கொழும்பான் மரம் 2008 நிசா புயலில் விழுந்தது, அதன் கிளைகளை வெட்டி ஓரளவு நிமிர்த்தி இப்போதும் சுவையான மாம்பழம் காய்க்கிறது. ஆனால் மரம் நன்றாக சரிந்து உள்ளதால் பெரும் மழைக்காலம், பலத்த காற்று நேரம் தப்புமோ என அச்சமாக இருக்கும். அதன் கிளையில் கன்று உருவாக்க முடிந்தால் என்ற எண்ணத்தில்தான் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள்

ஏராளன், இப்படிச் செய்யலாம் என்று ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லுகின்றார்கள். வீடியோவின் கீழே பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் வாசிக்கவும். 

இது மட்டும் வேலை செய்தது என்றால், மண்கும்பான் முழுவதையும் கறுத்தக் கொழும்பான் ஆக்கிவிடலாம்..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......!  😁

🤣................

எனக்கு முன் வீட்டில் சில வருடங்களின் முன்வரை ஒருவர் குடியிருந்தார். மிகவும் வயதானவர். நல்ல வேடிக்கையாகக் கதைப்பார்............ சுவி ஐயா போலவே........

அவர் வைக்கும் செடிகள், தாவரங்கள் சிலது அவ்வளவாக வளரவில்லை. இங்கே மெக்சிக்கோ அல்லது தென் அமெரிக்க நாடுகளிலிருந்து வந்த மக்களே தோட்டவேலைகளில் உதவி செய்கின்றனர். ஒரு தடவை அவர் சொன்னார், 'நான் எதை வைத்தாலும் அது வளருதேயில்லை. ஆனால் அவர்கள் மரத்தை தலைகீழாக நட்டாலும் அவை செழித்து வளர்கின்றன................' என்று...........🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

மாமரத்தின் கிளைத் தடியை பூவரசந்தடி நடுவதை போல தமிழ்நாட்டில் ஒருவர் நட்டு வளர்ப்பதாக வாசித்திருந்தேன். இது சம்பந்தமான விபரம் ஏதும் தெரிந்தால் இங்கு பகிருங்கள் @valavan @vasee @உடையார்

@குமாரசாமி @ரசோதரன்

வீட்டில் உள்ள கறுத்தக் கொழும்பான் மரம் 2008 நிசா புயலில் விழுந்தது, அதன் கிளைகளை வெட்டி ஓரளவு நிமிர்த்தி இப்போதும் சுவையான மாம்பழம் காய்க்கிறது. ஆனால் மரம் நன்றாக சரிந்து உள்ளதால் பெரும் மழைக்காலம், பலத்த காற்று நேரம் தப்புமோ என அச்சமாக இருக்கும். அதன் கிளையில் கன்று உருவாக்க முடிந்தால் என்ற எண்ணத்தில்தான் கேட்கிறேன்.

வளவன் இணைத்துள்ள இந்த காணொளியில் உள்ளதனை போல செய்து பாருங்கள் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட 90 % மேல் உள்ளது, இவ்வாறு முன்பு பல தாவரங்களை பதியம் செய்துள்ளேன், ஊரில் நான் வெறும் லக்ஸ்பிறே பையினை பயன்படுத்தியதாக நினிவுள்ளது எந்த பையாக இருந்தாலும் பயன்படுத்தலாம், அத்துடன் மண்ணும் அந்த மண்ணை தொடர்ச்சியாக ஈரப்பதனில் வைத்திருப்பதற்காக பிளாஸ்ரிக் போத்தலில் ஊசி துளையிட்டு தண்ணீர் மிக மெதுவாக சொட்டும் வண்ணம் பதியத்தின் மேல் இணைத்திருந்தேன்.

ஒரு மாதங்களின் பின்னர் உங்களால் ஆதன் வேர்களை பார்க்கலாம் (3 மாதத்தின் பின்னர் பதியத்தினை மரத்திலிருந்து வெட்டி வேறாக்கலாம்) 1 மீட்டர் உயரமான தாவரங்களைக்கூட இதனால் உருவாக்கலாம், சில வேளை வேர்கள் பூரணமாகாவிடில் அல்லது தாவரம் (பதியம்) பெரிதாக இருந்து அதன் இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அந்த வேர்களினால் வளங்க முடியாமல் தாவரம் சோர்ந்து போகுமாயின் தாவரத்தினை நேரடி சூரிய ஒளி பரவுவதை தடுத்தல், இலைகளை குறைத்தல் செய்யலாம் (சிறிய தாவரமானால் பெரிய பொலிதீன் பையினால் அதனை மூடிநீர் இழப்பினை தவிர்க்கலாம்).

6 hours ago, ரசோதரன் said:

ஏராளன், இப்படிச் செய்யலாம் என்று ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லுகின்றார்கள். வீடியோவின் கீழே பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் வாசிக்கவும். 

இது மட்டும் வேலை செய்தது என்றால், மண்கும்பான் முழுவதையும் கறுத்தக் கொழும்பான் ஆக்கிவிடலாம்..................🤣.

ரசோதரன் இணைத்த இணைப்பில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றுவதன் நோக்கம் பங்கஸ் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு, ஒட்டுத்தாவரத்தினை  பொலித்தீனால் மூடும் போது ஒட்டு பகுதியில் அந்த பங்கஸ் தாக்கம் ஏற்படலாம் (காயம் உள்ள பகுதி).

தாவரங்களை ஒட்டும் போது ஒட்டப்படும் தாவரத்திற்கும் ஒட்டும் தாவரத்தின் வளர்ச்சி திசுக்களின் தொடுகை இருந்தாலே அந்த ஒட்டு வெற்றி அடையும், தாவரத்தின் பட்டையினை அடுத்து உள்ள பகுதியில் இந்த வளர்ச்சி திசுக்கள் உண்டு, பொதுவாக இரண்டு தண்டுகளும் ஒரே அளவில் இருப்பது இரண்டு வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை அதிகரிக்கும், எனது இந்த கத்தரி ஒட்டில் கத்தரியின் தண்டு சுண்டைங்க்காய் மரத்தின் தண்டினை விட பெரியதாக இருந்தது அதனால் 'V' வடிவ வெட்டினை செய்து அதிக வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை ஏற்படுத்த முயன்றேன்.

இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை இடைநிலை பாடசாலை விஞ்ஞான புத்தகத்தில் உள்லதாக நினைவுள்ளது, இணையத்திலும் இது தொடர்பான விபரங்கள் இருக்கும் என கருதுகிறேன்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

ஏராளன், இப்படிச் செய்யலாம் என்று ஒரு யூடியூப் வீடியோவில் சொல்லுகின்றார்கள். வீடியோவின் கீழே பதியப்பட்டிருக்கும் பின்னூட்டங்களையும் வாசிக்கவும். 

இது மட்டும் வேலை செய்தது என்றால், மண்கும்பான் முழுவதையும் கறுத்தக் கொழும்பான் ஆக்கிவிடலாம்..................🤣.

11 hours ago, suvy said:

நானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......!  😁

6 hours ago, vasee said:

வளவன் இணைத்துள்ள இந்த காணொளியில் உள்ளதனை போல செய்து பாருங்கள் வெற்றி வாய்ப்பு கிட்டதட்ட 90 % மேல் உள்ளது, இவ்வாறு முன்பு பல தாவரங்களை பதியம் செய்துள்ளேன், ஊரில் நான் வெறும் லக்ஸ்பிறே பையினை பயன்படுத்தியதாக நினிவுள்ளது எந்த பையாக இருந்தாலும் பயன்படுத்தலாம், அத்துடன் மண்ணும் அந்த மண்ணை தொடர்ச்சியாக ஈரப்பதனில் வைத்திருப்பதற்காக பிளாஸ்ரிக் போத்தலில் ஊசி துளையிட்டு தண்ணீர் மிக மெதுவாக சொட்டும் வண்ணம் பதியத்தின் மேல் இணைத்திருந்தேன்.

ஒரு மாதங்களின் பின்னர் உங்களால் ஆதன் வேர்களை பார்க்கலாம் (3 மாதத்தின் பின்னர் பதியத்தினை மரத்திலிருந்து வெட்டி வேறாக்கலாம்) 1 மீட்டர் உயரமான தாவரங்களைக்கூட இதனால் உருவாக்கலாம், சில வேளை வேர்கள் பூரணமாகாவிடில் அல்லது தாவரம் (பதியம்) பெரிதாக இருந்து அதன் இலைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அந்த வேர்களினால் வளங்க முடியாமல் தாவரம் சோர்ந்து போகுமாயின் தாவரத்தினை நேரடி சூரிய ஒளி பரவுவதை தடுத்தல், இலைகளை குறைத்தல் செய்யலாம் (சிறிய தாவரமானால் பெரிய பொலிதீன் பையினால் அதனை மூடிநீர் இழப்பினை தவிர்க்கலாம்).

ரசோதரன் இணைத்த இணைப்பில் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றுவதன் நோக்கம் பங்கஸ் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு, ஒட்டுத்தாவரத்தினை  பொலித்தீனால் மூடும் போது ஒட்டு பகுதியில் அந்த பங்கஸ் தாக்கம் ஏற்படலாம் (காயம் உள்ள பகுதி).

தாவரங்களை ஒட்டும் போது ஒட்டப்படும் தாவரத்திற்கும் ஒட்டும் தாவரத்தின் வளர்ச்சி திசுக்களின் தொடுகை இருந்தாலே அந்த ஒட்டு வெற்றி அடையும், தாவரத்தின் பட்டையினை அடுத்து உள்ள பகுதியில் இந்த வளர்ச்சி திசுக்கள் உண்டு, பொதுவாக இரண்டு தண்டுகளும் ஒரே அளவில் இருப்பது இரண்டு வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை அதிகரிக்கும், எனது இந்த கத்தரி ஒட்டில் கத்தரியின் தண்டு சுண்டைங்க்காய் மரத்தின் தண்டினை விட பெரியதாக இருந்தது அதனால் 'V' வடிவ வெட்டினை செய்து அதிக வளர்ச்சி திசுக்களின் தொடுகையினை ஏற்படுத்த முயன்றேன்.

இந்த விடயங்கள் அனைத்தும் இலங்கை இடைநிலை பாடசாலை விஞ்ஞான புத்தகத்தில் உள்லதாக நினைவுள்ளது, இணையத்திலும் இது தொடர்பான விபரங்கள் இருக்கும் என கருதுகிறேன்.

நான் வாசித்ததில் பூவரசங்கதியால் நட்டு வளர்ப்பது போல பெரிய உரப்பை போன்ற பாக்கில் எருவூட்டப்பட்ட மண்ணைப்போட்டு அங்கே கதியால் போன்ற பெரிய மாந்தடியை நட்டு வளர்ப்பதாக படத்தோடு குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் மூலம் குறுகிய காலத்தில் மாம்பழங்களை பெறலாம் என்பதும் ஒரு காரணம்.

எனக்கு உங்களது காணொளிப் பகிர்வின்படி மாந்தடியை வெட்டி வேர்வளர்ச்சியைத் தூண்டும் பொடி அல்லது கத்தாளைப்பசையை பூசி நட்டு வளர்த்துப் பார்க்கும் எண்ணம் பிறந்துள்ளது. ஏற்கனவே பெரியம்மாவின் மகன்(தம்பி) மூலம் மாந்தடி நட்டுப் பார்த்து வெற்றி பெறவில்லை. வேர்வளர்ச்சியை தூண்டும் முறையும் தெரியவில்லை, வெட்டி 2/3 நாளின் பின்னர் தான் மாந்தடி நடப்பட்டது.

7 POWERFUL FREE HOMEMADE ROOTING HORMONES| Natural Rooting Hormones

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஏராளன் said:

வளர்ச்சியினை தூண்டும் பொடி தேவையில்லை, மரத்தில் இருக்கும் ஒரு கொப்பில் ஒரு அங்குலத்திற்கு மோதிரம் போல பட்டையினை நீக்கும் போது மரத்திலிருந்து குறித்த கொப்பிற்கு தேவையான நீர் மற்றும் சத்துக்கள் செல்லாது ( கீழ் மரத்திற்கும் கொப்பிற்குமிடையே பட்டை மூலமான தொடர்பற்ற நிலையில் கொப்பிற்குத்தேவையான நீர் மற்றும் சத்துக்களை பெறுவதற்காக வேர்கள் உருவாகும்).

3 மாத காலத்தில் மரத்திற்கு தேவையான அளவில் வேர்கள் அந்த மண் பையினுள் உருவாகிவிடும், வளவனின் காணொளியில் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.