Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு.

மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு  ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது?

கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள்.

அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள்.

https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#

முஸ்லீம்கள்  ஊமைக் குத்து விழுந்ததை, வெளியே சொல்ல முடியாமல்.. 
மனதுக்குள் வெதும்பிக் கொண்டு இருக்கின்றார்கள் என நினைத்தேன். 😂
இணைப்பிற்கு நன்றி கோசான். 👍

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு.

மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு  ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது?

கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள்.

அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள்.

https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#

கோசான்,
நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?  

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@goshan_che

(Nada)

Cabinet is not diverse. It should represent the minorities too. Hope this will be looked at.

 48        53 
சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று சொல்லியற்கு 48 பேர் விரும்பவில்லை.

#################   ##############   ###########

(Francis.)
First day in office laid the foundation for communal displeasure regardless of any reasons.

 88        26 

பதவிக்கு வந்த முதல் நாள், எந்தக் காரணமும் இல்லாமல் வகுப்புவாத அதிருப்திக்கு அடித்தளமிட்டது.

88 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 26 பேர் மட்டுமே ஆமோதித்து இருக்கின்றார்கள். 

###############    #############   ############

Many muslims voted but no even a single minister 

Are promises made correctly?

 9        17 

பல முஸ்லிம்கள் வாக்களித்தனர் ஆனால் ஒரு அமைச்சர் கூட இல்லை திங்கள், 

வாக்குறுதிகள் சரியாக கொடுக்கப்பட்டதா?

9 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

(Tamil voter)
Sri Lanka is A multicultural country? with just over 25% of the population are ethnic minorities however What AKD's cabinet evidently reflects is that minorities are RULED by majority. It further divides the country that is already polarised ethnically. Cabinet appointments explicitly shows that not everyone is equal in our country, one of the promises AKD was pontificating against before the election . Even the far right parities had few ministers from the minorities in the past just to show all Sri Lankans are inclusive in governing but NPP demonstrably exceeds those parties in terms of divide and rule. Tamils definitely feel let down by the appointments and those Tamils VOTED FOR AKD should now feel ashamed.
39        17 

இலங்கை ஒரு பன்முக கலாச்சார நாடு? மக்கள்தொகையில் வெறும் 25% க்கும் அதிகமான சிறுபான்மையினர் இன சிறுபான்மையினராக உள்ளனர், இருப்பினும் AKD இன் அமைச்சரவை தெளிவாக பிரதிபலிக்கிறது, சிறுபான்மையினர் பெரும்பான்மையினரால் ஆளப்படுகின்றனர். ஏற்கனவே இன ரீதியாக துருவப்படுத்தப்பட்ட நாட்டை மேலும் பிளவுபடுத்துகிறது. நமது நாட்டில் அனைவரும் சமமானவர்கள் அல்ல என்பதை அமைச்சரவை நியமனங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன, தேர்தலுக்கு முன்பு ஏகேடி அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. அனைத்து இலங்கையர்களும் ஆட்சி செய்வதில் உள்ளடங்கியவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவே கடந்த காலங்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த சில அமைச்சர்களை தீவிர வலதுசாரிகள் கூட பெற்றிருந்தனர், ஆனால் பிளவுபடுத்துதல் மற்றும் ஆட்சி செய்வதில் NPP அந்த கட்சிகளை விட அதிகமாக உள்ளது. இந்த நியமனங்களால் தமிழர்கள் நிச்சயமாக ஏமாற்றமடைகின்றனர், AKDக்கு வாக்களித்த தமிழர்கள் இப்போது வெட்கப்பட வேண்டும்.

39 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ☹️

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை.

100%
கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று….

அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று…..

அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்….

நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.

நீங்கள் கூறுவது போல பாலச்சந்திரனை கொலை செய்தவர்கள் ...ஜெயவீராவின் குடும்பத்துக்கு கடற்படை முகாமில் பாதுகாப்பு  கொடுத்தார்கள் ...
சங்கிலியனை கோவாவுக்கு அழைத்து சென்று தூக்கில் போட்டவர்கள்(சிங்களவர்கள் அல்ல பிறகு யாரவ்து வந்து பிழை பிடிப்பார்கள்) ...அரச பரம்பரைகளின் வாரிசுகளை அழித்து துவசம் பண்ணிய அதிகார /ஆட்சி மையங்கள் ..உலக ஒழுங்கு ..உலக ஒழுங்கு என கொள்ளைய்டிப்பதற்காகவே மக்களை பகடைகளாக்குவார்கள் ..

(நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.)

இன்று சொல்கின்றனர் பாராளுமன்றம் கல்விமான்களினால் நிரம்பியுள்ளது என ....யாவரும் சிங்களவ்ர்கள் ...ஆபத்தானது...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

எப்பவுமே ஓவர் பில்டப் கொடுப்பவர்கள் கடைசியில் கள்ளர் என்றே ஆகும்.

உண்மை தான், கோஷான்............. பாக்கு நீரிணைக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இப்படி எத்தனை எத்தனை பில்டப்புகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம்.................

அவர்களாகவே கொடுக்கும் பில்டப்புகள் போதாதென்று, இந்த ஊடகங்கள் இன்னும் சில படிகள் மேலால் போய், அவர்களை தேரில் ஏற்றி இழுத்துக் கொண்டு திரிகின்றன.

அநுர அவரது மாளிகைக்கு தினமும் வரும் மரக்கறிகளை வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று ஒரு பில்டப்பு..................🫣.

அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் உண்மையிலேயே இப்படியான ஒன்றைச் செய்திருந்தார். இப்போது அப்துல் கலாம் ஆகிவிட்ட அநுர, அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் ஆவார் எங்கள் ஊடகங்களில்..............   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, நீர்வேலியான் said:

கோசான்,
நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?  

இல்லை…

எனக்கும் அனுரவின் புஞ்சி அம்மேவுக்குமான திருமணப்பேச்சு சில சொல்லமுடியாத காரணங்களால் குழம்பி விட்டது அதுதான் காரணம்🤣.

57 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che

(Nada)

Cabinet is not diverse. It should represent the minorities too. Hope this will be looked at.

 48        53 
சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று சொல்லியற்கு 48 பேர் விரும்பவில்லை.

#################   ##############   ###########

(Francis.)
First day in office laid the foundation for communal displeasure regardless of any reasons.

 88        26 

பதவிக்கு வந்த முதல் நாள், எந்தக் காரணமும் இல்லாமல் வகுப்புவாத அதிருப்திக்கு அடித்தளமிட்டது.

88 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 26 பேர் மட்டுமே ஆமோதித்து இருக்கின்றார்கள். 

###############    #############   ############

Many muslims voted but no even a single minister 

Are promises made correctly?

 9        17 

பல முஸ்லிம்கள் வாக்களித்தனர் ஆனால் ஒரு அமைச்சர் கூட இல்லை திங்கள், 

வாக்குறுதிகள் சரியாக கொடுக்கப்பட்டதா?

9 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை.

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

இனி தமிழர் முஸ்லிம்கள் எதை கேட்டாலும்….

இலங்கையராக உணருங்கள், இனத்தின் அடிப்படையில் அன்றி நாட்டின் அடிப்படையில் சிந்தியுங்கள், woke, political correctness என சொல்லி வாயை அடைத்து விடுவார்கள்.

40 minutes ago, தமிழ் சிறி said:

39 பேர் அந்தக் கருத்தை ஏற்கவில்லை. ☹️

இது என்ன - அனுரவின் ஜனாதிபதி தேர்தல் முடிவு நேரம், என் பி பி, ஜேவிபி யினர் சிரச டிவியின் நேரலையில் பச்சை இனவாதமாக எழுதினார்கள். சிலர் வடக்கு கிழக்குக்கு மின்சாரம் கொடுக்க கூடாது, தொப்பிகளும் **** தெமிளோவும் திருந்த மாட்டார்கள் என எழுதினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு.

மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு  ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது?

கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள்.

அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள்.

https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#

அய்யா....இந்த தொப்பி போட்டாக்களுக்கு...தன் மானப் பிரச்சினை..இவ்வளவு காலமும் மார் தட்டி சொன்னவை....கிரிபத்தும் ,கட்டா சம்பலும் மாதிரி...கட்டா சம்பலை அவை வழித்தெறிந்தவுடன்...பிட்டும் தேங்காய்ப்பூவின் அருமை தெரியுது...என்றாலும் தன்மானப் பிரச்சினை வளைய இடம் கொடுக்குதில்லை..அவையடை பேப்பர் ...மெல்லவும் முடியாமல்,,,விழுங்கவும் முடியாமல் தவீக்குது...

பாவமாயிருக்கு சார்...நம்ம யூடியூபர் ..தவக்களையும்,மாரித்தவக்காயும் மட்டும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று ..புலம்புகினம் ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

உண்மை தான், கோஷான்............. பாக்கு நீரிணைக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இப்படி எத்தனை எத்தனை பில்டப்புகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம்.................

அவர்களாகவே கொடுக்கும் பில்டப்புகள் போதாதென்று, இந்த ஊடகங்கள் இன்னும் சில படிகள் மேலால் போய், அவர்களை தேரில் ஏற்றி இழுத்துக் கொண்டு திரிகின்றன.

அநுர அவரது மாளிகைக்கு தினமும் வரும் மரக்கறிகளை வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று ஒரு பில்டப்பு..................🫣.

அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் உண்மையிலேயே இப்படியான ஒன்றைச் செய்திருந்தார். இப்போது அப்துல் கலாம் ஆகிவிட்ட அநுர, அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் ஆவார் எங்கள் ஊடகங்களில்..............   

click bail - லைக்ஸ் கிடைக்கும் என்றால் தற்கொலை செய்து அதை வீடியோ போடுவார்கள்🤣.

இன்னொரு பில்டப் அனுர 5 வாகனத்துக்கு மேல் தொடராக போவதில்லை என. 

கிட்டதட்ட ரணில் போனது போலவே போகிறார்….ஆனால் வாகனங்கள் இடைவெளி விட்டு தொடருகிறன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

உந்த‌ கோதாரிபிடிச்ச‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை 2009ஓட‌ பார்ப்ப‌த‌ நிறுத்தி விட்டேன் குருநாதா ஹா ஹா.....................

👍.................

மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது.

அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்.............

ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.  

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

யாழ் க‌ள‌த்திலும் சில‌ விதிமுறைக‌ள் இருக்கு குருநாதா

அதாவ‌து சில‌ இணைய‌த‌ள‌ செய்திக‌ள் யாழில் இணைப்ப‌த‌ற்கு த‌டை...................

அந்த‌ லிஸ்ரில் நீங்க‌ள் சொல்லும் உப்பு ச‌ப்பில்லா அவ‌தூறு ப‌ர‌ப்பும் இணைய‌த‌ள‌ங்க‌ளின் பெய‌ரை நிர்வாக‌ம் நினைத்தால் த‌டை செய்ய‌லாம்

ச‌மாதான‌ கால‌த்தில் இருந்து 2009வ‌ரை புதின‌ம் ம‌ற்றும் ப‌திவு

இந்த‌ இர‌ண்டு இணைய‌த‌ள‌த்தையும் தான் பார்வையிடுவேன் அதில் வ‌ரும் செய்திக‌ள் 100/100 உறுதி ப‌டுத்த‌ ப‌ட்ட‌ உண்மை செய்திக‌ள்

2009ஓட‌ வாசிக்கும் ஆர்வ‌மும் குறைஞ்சு போச்சு அதோட‌ தொழிநுட்ப‌மும் வ‌ள‌ர‌ யூடூப் அச்சு ஊட‌க‌ங்க‌ளை பின்னுக்கு த‌ள்ளி சோச‌ல் மீடியாக்க‌ள் முன்னுக்கு வ‌ந்து விட்ட‌து....................

எங்க‌ட‌ கை அந்த‌க் கால‌ம் தொட்டு கிறுக்கின‌ கைதானே அத‌னால்  யாழில் எங்க‌ட‌ உற‌வுக‌ளோடு க‌ருத்து மோத‌ல் செய்வ‌து ச‌ண்டை பிடிப்ப‌தில் த‌னி சுக‌ம் இருக்கு குருநாதா ஹா ஹா😁................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இல்லை…

எனக்கும் அனுரவின் புஞ்சி அம்மேவுக்குமான திருமணப்பேச்சு சில சொல்லமுடியாத காரணங்களால் குழம்பி விட்டது அதுதான் காரணம்🤣.

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

இனி தமிழர் முஸ்லிம்கள் எதை கேட்டாலும்….

இலங்கையராக உணருங்கள், இனத்தின் அடிப்படையில் அன்றி நாட்டின் அடிப்படையில் சிந்தியுங்கள், woke, political correctness என சொல்லி வாயை அடைத்து விடுவார்கள்.

இது என்ன - அனுரவின் ஜனாதிபதி தேர்தல் முடிவு நேரம், என் பி பி, ஜேவிபி யினர் சிரச டிவியின் நேரலையில் பச்சை இனவாதமாக எழுதினார்கள். சிலர் வடக்கு கிழக்குக்கு மின்சாரம் கொடுக்க கூடாது, தொப்பிகளும் **** தெமிளோவும் திருந்த மாட்டார்கள் என எழுதினர்.

no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, வீரப் பையன்26 said:

எங்க‌ட‌ கை அந்த‌க் கால‌ம் தொட்டு கிறுக்கின‌ கைதானே அத‌னால்  யாழில் எங்க‌ட‌ உற‌வுக‌ளோடு க‌ருத்து மோத‌ல் செய்வ‌து ச‌ண்டை பிடிப்ப‌தில் த‌னி சுக‌ம் இருக்கு குருநாதா ஹா ஹா😁................................

🤣.............

ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள்............ அப்படியே எழுதிய விரல்களும் என்பதையும் அதனுடன் சேர்த்து விடவேண்டும்.............

கிறுக்குகின்ற புத்தி............🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

click bail - லைக்ஸ் கிடைக்கும் என்றால் தற்கொலை செய்து அதை வீடியோ போடுவார்கள்🤣.

இன்னொரு பில்டப் அனுர 5 வாகனத்துக்கு மேல் தொடராக போவதில்லை என. 

கிட்டதட்ட ரணில் போனது போலவே போகிறார்….ஆனால் வாகனங்கள் இடைவெளி விட்டு தொடருகிறன.

கோசான் நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் ஆனால் NPP யையும் அனுரவையும் போட்டு வாங்குகிறீர்கள். எனக்கு உண்மையிலேயே JVP யை பிடித்ததில்லை,  குறிப்பாக  வீரவன்சவின் முகத்தை பார்த்தாலே கோவம் வரும். 

இந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பித்ததில இருந்து எங்கட ஹாட்லி சீனியர்  ஒருத்தர்  திசைகாட்டி சப்போர்ட். அவரின் முகநூலிலே அவரின் பதிவுகளுடன் கண்டபடி சண்டை பிடித்திருக்கிறேன். ஆனால் போகப்போக இந்த NPP பழைய JVP யில் இருந்து வேறுபட்டு தெரிகிறார்கள். தமிழர்களிடம், இருந்த தெரிவுகளில் NPP மட்டுமே சிறந்த தெரிவு. 

2005 ஆம் ஆண்டு, நான் A/L படித்துக்கொண்டிருந்தேன். சமாதான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இயக்கம் அந்த மிகமுக்கிய ஜனாதிபதி தேர்தலில் ரணிலை புறக்கணித்து மகிந்தவை ஜனாதிபதியாக்கினார்கள். இதற்காக மகிந்த பெருமளவு பணத்தையும் கொடுத்திருந்தார். இறுதியில் நடந்தது என்ன. போராட்டமும் அழிந்து மக்களும் அழிந்ததுதான் மிச்சம். 

தனித் தமிழீழம் தற்போதைய சூழலில் ஒரு போதுமே சாத்தியப்படாத ஒன்று. தலைவர் காலத்தில் நடக்காதது எக்காலத்திலும் நடக்காது. அதைவிட ஒரு மாகாண சபையையே நிர்வகிக்கத் தெரியாத விக்கி மாதிரியினாவர்கள் இருக்கும்போது யாரை நம்பி  பொறுப்பைக் கொடுப்பது. ஒரு அரசியல் கட்சியையே ஒழுங்காக ஒற்றுமையாக நிர்வகிக்க முடியாதவர்கள்.    

வைத்தியர் அருச்சுனா அருந்தப்பிலே வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 17 வாக்குகளால். இவரால் எதுவுமே ஆகப்போவதில்லை. வாய்ச்சொல்லில் வீரர். இவரின் கட்சி ஒரு ஊடக சந்திப்பைக் கூட உருப்படியாக நடத்த முடியாதவர்கள். இவரின் மனநிலை எந்த நாள் எப்பிடி இருக்கும் என்று யாராலுமே சொல்ல ஏலாது. மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவர். 

இப்படியானவர்கள் இருக்கும்போது தமிழர்கள் NPP யை தெரிவு செய்ததில் என்ன பிழை?  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Thumpalayan said:

போகப்போக இந்த NPP பழைய JVP யில் இருந்து வேறுபட்டு தெரிகிறார்கள். தமிழர்களிடம், இருந்த தெரிவுகளில் NPP மட்டுமே சிறந்த தெரிவு.

டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! 

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣

வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு…

2020- தேர்தல் 
அங்கஜன்(SLFP)- 49,373
டக்ளஸ்(EPDP)- 45,797
          மொத்தம்=95,170

2024- தேர்தல்
அங்கஜன் கட்சி- 12,427
டக்ளஸ் கட்சி- 17,730
       மொத்தம்=30,157

அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) -                              95,170-30,157
   மொத்தம் =65,013

2024-JVP 80,830 -65013
                  =15,817
15817-853(JVP-2020)
 = 14,964

இந்த 14,964 வாக்குகளும் 
ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள  முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது.
ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. 

மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன.
(2020)132,329- 127,354(2024)= 4,975

 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில்
 சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன்,
அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை.

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 
2015-58,043
2020-27,834
2024-15,039

தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். 

இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம்
இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க..

என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள்.
(கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 

2015-58,043
2020-27,834
2024-15,039

சுமந்திரனுக்கு…  2015’ம் ஆண்டிலிருந்து, 2024’ம் ஆண்டுவரை,
ஓவ்வொரு தேர்தலிலும் 50 % மான வாக்குகள் குறைந்தே வந்துள்ளது. 😁

வருகின்ற தேர்தலில்… சுமந்திரன் போட்டியிடும் ஐடியா இருந்தால், இப்பவே மூட்டை கட்டி வைப்பது நல்லது. 😂
இல்லாட்டி…. 7,500 வாக்கு எடுத்து, கட்டுக் காசும் இழக்க வேண்டி வரும். 🤣

அதை விட சிங்கள பியதாச, யாழ்பாணத்தில்  கூட வாக்கு எடுத்து விடுவார். 😁 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Thumpalayan said:

கோசான் நீங்கள் ஒரு சிறந்த கருத்தாளர் ஆனால் NPP யையும் அனுரவையும் போட்டு வாங்குகிறீர்கள். எனக்கு உண்மையிலேயே JVP யை பிடித்ததில்லை,  குறிப்பாக  வீரவன்சவின் முகத்தை பார்த்தாலே கோவம் வரும். 

இந்த ஜனாதிபதி தேர்தல் ஆரம்பித்ததில இருந்து எங்கட ஹாட்லி சீனியர்  ஒருத்தர்  திசைகாட்டி சப்போர்ட். அவரின் முகநூலிலே அவரின் பதிவுகளுடன் கண்டபடி சண்டை பிடித்திருக்கிறேன். ஆனால் போகப்போக இந்த NPP பழைய JVP யில் இருந்து வேறுபட்டு தெரிகிறார்கள். தமிழர்களிடம், இருந்த தெரிவுகளில் NPP மட்டுமே சிறந்த தெரிவு. 

2005 ஆம் ஆண்டு, நான் A/L படித்துக்கொண்டிருந்தேன். சமாதான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இயக்கம் அந்த மிகமுக்கிய ஜனாதிபதி தேர்தலில் ரணிலை புறக்கணித்து மகிந்தவை ஜனாதிபதியாக்கினார்கள். இதற்காக மகிந்த பெருமளவு பணத்தையும் கொடுத்திருந்தார். இறுதியில் நடந்தது என்ன. போராட்டமும் அழிந்து மக்களும் அழிந்ததுதான் மிச்சம். 

தனித் தமிழீழம் தற்போதைய சூழலில் ஒரு போதுமே சாத்தியப்படாத ஒன்று. தலைவர் காலத்தில் நடக்காதது எக்காலத்திலும் நடக்காது. அதைவிட ஒரு மாகாண சபையையே நிர்வகிக்கத் தெரியாத விக்கி மாதிரியினாவர்கள் இருக்கும்போது யாரை நம்பி  பொறுப்பைக் கொடுப்பது. ஒரு அரசியல் கட்சியையே ஒழுங்காக ஒற்றுமையாக நிர்வகிக்க முடியாதவர்கள்.    

வைத்தியர் அருச்சுனா அருந்தப்பிலே வென்றிருக்கிறார். கிட்டத்தட்ட 17 வாக்குகளால். இவரால் எதுவுமே ஆகப்போவதில்லை. வாய்ச்சொல்லில் வீரர். இவரின் கட்சி ஒரு ஊடக சந்திப்பைக் கூட உருப்படியாக நடத்த முடியாதவர்கள். இவரின் மனநிலை எந்த நாள் எப்பிடி இருக்கும் என்று யாராலுமே சொல்ல ஏலாது. மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாதவர். 

இப்படியானவர்கள் இருக்கும்போது தமிழர்கள் NPP யை தெரிவு செய்ததில் என்ன பிழை?  

நீங்கள் சொன்ன எதிலும் முரண்பாடில்லை.

ஆனால் இப்படி ஒரு தலைமைதுவம் இல்லாதா வங்குரோத்து இனமாக நாம் திட்டமிட்டு 2009 இருந்து ஆக்கப்பட்டுள்ளோம்.

இந்த சதியின் முக்கிய, முடிவு அங்கமே ஜேவிபி.

அருச்சுனாவின் இயலுமையில் எனக்கும் அதிக நம்பிக்கை இல்லை, ஆனால் இவர்கள் எல்லோரையிம் விட அருச்சுனா அணியில் நேர்மையான, இளமையான, கறைபடியாத இளைஞர்கள் இருந்தார்கள்.

அவர்களை இனம் கண்டு வாக்கு போட முடியாத அளவுக்கு எமக்கு கூட்டாக மூளை மழுங்கி விட்டதே என்ற ஆதங்கம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாக இந்திய வம்சாவளி மலையக பெண்கள் 3 பேர் தேர்வு

ஹரினி அமரசூரிய

பட மூலாதாரம்,HARINI AMARASURIYA FB

படக்குறிப்பு, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரினி அமரசூரிய, இந்தத் தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண் வேட்பாளராகவும் திகழ்கின்றார்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவிலான பெண் உறுப்பினர்கள் தெரிவான தேர்தலாக இந்த முறை நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளில் பிரகாரம், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு 21 பெண்கள் தெரிவாகியுள்ளனர்.

இவ்வாறு தெரிவான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்கள், இந்த முறை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்த பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

பதுளை மாவட்டத்திலிருந்து அம்பிகா சாமுவேல், நுவரெலியா மாவட்டத்திலிருந்து கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் மாத்தறை மாவட்டத்திலிருந்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் மலையகத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்.

இலங்கை அரசு சபை 1931-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, முதல் பெண் பிரதிநிதியாக அடெலின் மொலமுரே தெரிவானார்.

பின்னர் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தெரிவானார்.

இலங்கை வரலாற்றில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றமை தற்போது படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பெண் பிரதிநிதித்துவத்தில், 1989-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சற்று அதிகரிப்பு காணப்பட்டாலும், இந்த முறை நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டு, தற்போது பிரதமராக பதவி வகித்து வருவதுடன், இம்முறை தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண் வேட்பாளராகவும் அவர் திகழ்கின்றார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண்ணாகவும் ஹரினி அமரசூரிய வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது

இந்த முறை தெரிவான பெண் பிரதிநிதிகளின் விபரங்கள்

கொழும்பு மாவட்டத்திலிருந்து ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலிருந்து ஹேமாலி குணசேகர தெரிவாகியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்திலிருந்து நிலந்தி கொட்டஹச்சி, ஓஷானி உமங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலிருந்து சமிந்திராணி கிரியெல்ல, துஷாரி ஜயசிங்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

மேலும், மாத்தளை மாவட்டத்திலிருந்து தீப்தி வாசலகே, ரோஹிணி குமாரி கவிரத்ன ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்திலிருந்து அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன, கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

காலி மாவட்டத்தில போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நிலுஷா லக்மாலி மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து சாகரிக்கா கங்காணி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.

அத்துடன், தேசிய பட்டியல் ஊடாக தேசிய மக்கள் சக்தி சார்பில் லக்மாலி காஞ்சனா ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பிகா சாமுவேல்

பட மூலாதாரம்,AMBIKA SAMUVEL FB

படக்குறிப்பு, பதுளை மாவட்டத்திலிருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அம்பிகா சாமுவேல்

‘மலையக தோட்டத் தொழிலாளியின் மகள்’

இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்ணான கிருஸ்ணன் கலைச்செல்வி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

''நான் மலையகத்தில் பிறந்த தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்ற ரீதியில், மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற பாரிய பிரச்னைகள் இருக்கின்றது. மலையக மக்கள் இந்த நாட்டில் மனிதர்களாக உள்வாங்கப்படாத நிலைமையே இவ்வளவு நாளும் இருந்தது. இந்த நாட்டிற்கு உழைத்து கொடுக்கும் மக்களாக மாத்திரமே எங்களை அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.” என்று கூறுகிறார் கலைச்செல்வி.

தொடர்ந்து பேசிய அவர், “பெரிய சவால் ஒன்று இருக்கின்றது. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இலகுவான காரியம் அல்ல. மிகவும் கடினமான காரியம். அதை கட்டாயமாக நாங்கள் செய்வோம். சவால் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கட்டாய தேவை இருக்கின்றது.” என்கிறார்.

இந்த மக்களின் பிரச்னையை தான் தனியாக தீர்க்க போவதில்லை என்று கூறும் கலைச்செல்வி, “எங்களுடைய அமைப்பினால் இந்த மக்களின் பிரச்னையை நாங்கள் தீர்ப்போம். மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது" எனக் கூறுகின்றார்.

மலையகத்தில் முதல் தடவையாக பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கிருஸ்ணன் கலைச்செல்வி பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

''பெண்கள் மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள ஆண்கள், இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. மலையகத்தில் படித்த இளைஞர், யுவுதிகள் தகுதியான வேலை வாய்ப்பின்றி, புடவை கடைகள், இரும்பு கடைகளில் வேலை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.”

கல்வி, சமூக, கலாசார, சுகாதார உள்ளிட்ட சகல பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கானவே நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். என்று கூறும் கலைச்செல்வி, ''பெண்களுக்கு உழைப்பு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். வேலைகள் செய்வதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சமூக ரீதியாகவும். பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்ற பெண்களை பாதுகாக்க வேண்டும். இதற்கான அனைத்து திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்." என்று கூறுகின்றார்.

சிங்கள பெரும்பான்மை மாவட்டத்திற்கு முதல்முறையாக தமிழ் பிரதிநிதி

சரோஜா சாவித்திரி போல்ராஜ்

பட மூலாதாரம்,SAROJA POLLRAJ FB

படக்குறிப்பு, சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதேவேளை, பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் வாழ்கின்ற மாத்தறை மாவட்டத்தில் இந்த முறை முதல் தடவையாக தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ் பெண்ணான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மாத்தறை மாவட்டத்தில் தெரிவான முதலாவது தமிழ் மக்கள் பிரதிநிதியாக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக, தனது திட்டங்கள் குறித்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிபிசி தமிழுக்கு எடுத்துரைத்தார்.

''பெண் பாதுகாப்புடைய சமுதாயம் என்ற வகையில், பாலியல் ரீதியான விடயங்களிலிருந்தான பாதுகாப்பு மாத்திரம் அல்ல. ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டால், அவரை பொருளாதாரத்தில் பலப்படுத்த வேண்டும். பொருளாதார பாதுகாப்பு இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார் சரோஜா.

மேலும், “சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சமூக பாதுகாப்பும் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் உள்ள சமுதாயம் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே பாலியல் ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இல்லாவிட்டால், இந்த பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்.” என்கிறார் அவர்.

பெண்களின் பாதுகாப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மை காரணத்தினால் மாத்திரமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார் சரோஜா

பாதுகாப்பு இல்லாத சமூகமும், பொருளாதாரத்தில் பாதுகாப்பு இல்லாத தன்மை காரணமாகவும் வேறொருரை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் சரோஜா, “பெண்கள் சமுகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், பொருளாதார உரிமைகளை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.

பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மை காரணத்தினால் மாத்திரமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார் சரோஜா.

“எல்லா தனிப்பட்ட நபர்களுமே ஒரு சுயாதீன நபர்களாக இருக்கும் போது, திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா, தனியாக வாழ முடியுமா இல்லையா, தன்னுடைய கல்வியை தீர்மானிக்க முடியுமா? நாங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வோமா? இல்லையா? இதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு தான் இருக்கின்றது.” என்கிறார் அவர்.

“அதனை தீர்மானிக்கும் உரிமையை இன்னொருவருக்கு வழங்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட காரணம் பொருளாதார ரீதியில் சுயாதீனமாக இல்லாததால்தான், எனவே அதை வழங்க வேண்டியுள்ளது." என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/11/2024 at 09:16, goshan_che said:

பெளத்த சாசனத்துக்கு தனி அமைச்சு.

ஆனால் அதில் பெயருக்கும் ஏனைய மத அமைச்சுக்கள் சேர்க்கப்படவில்லை.

May be an image of golf and text

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

சிங்கள பெரும்பான்மை மாவட்டத்திற்கு முதல்முறையாக தமிழ் பிரதிநிதி

இவரின் கணவர் சிங்கள இன சத்திரச்கிச்சை நிபுணரான ஹசித்த ஆவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/11/2024 at 01:40, கிருபன் said:

டக்‌ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! 

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣

வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு…

2020- தேர்தல் 
அங்கஜன்(SLFP)- 49,373
டக்ளஸ்(EPDP)- 45,797
          மொத்தம்=95,170

2024- தேர்தல்
அங்கஜன் கட்சி- 12,427
டக்ளஸ் கட்சி- 17,730
       மொத்தம்=30,157

அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) -                              95,170-30,157
   மொத்தம் =65,013

2024-JVP 80,830 -65013
                  =15,817
15817-853(JVP-2020)
 = 14,964

இந்த 14,964 வாக்குகளும் 
ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள  முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது.
ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. 

மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன.
(2020)132,329- 127,354(2024)= 4,975

 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில்
 சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன்,
அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை.

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 
2015-58,043
2020-27,834
2024-15,039

தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். 

இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம்
இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க..

என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள்.
(கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)

அத்துடன் இந்த தேர்தலில் 60 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன.

அதிலும் ஏறத்தாள 10 வீதம் செல்லுபடியற்றவை.

எனவே 50 வீதமான வாக்குகளே விழுந்துள்ளன.

அவை நிச்சயமாக தமிழ்தேசியத்துக்கான வாக்குகளே.

அவர்களின் குளறுபடிகளால் போடாமல் விட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 4 people and text

கௌசல்யாவிடம், சுமந்திரன்...  படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.  

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 19/11/2024 at 06:40, கிருபன் said:

 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில்
 சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன்,
அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை.

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 
2015-58,043
2020-27,834
2024-15,039

ஜீ உங்களுக்கும் சும்மில் லவ் தான்🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, MEERA said:

ஜீ உங்களுக்கும் சும்மில் லவ் தான்🤣🤣🤣

அஞ்சு வரியத்தில் அஞ்ஞாத வாசம் முடிய இன்னும் பெருகும்😍

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதேபோல் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தையும் கொண்டுவந்தால், நாய்க்கடி, விசர் நாய்க்கடிகளால் சிறுவர்கள், வயோதிபர்கள் பாதிக்கப்படுதல் , கும்பல் கும்பலாய் அலையும் நாய்களால் தொரத்தப்பட்டு மோட்டார் சைக்கிள் சைக்கிள்களில் திரிவோர் குப்புற விழுந்து முழங்கால் பெயர்தல்,  உணவின்றி வத்தலும் தொத்தலுமாய் அலையும் நாய்களையும், ஒழுங்கைகள் தெருக்களில் கூட்டமாய் அலையும் நாய்களால் போக்குவரத்து பாதிக்கப்படலையும் தவிர்க்கலாம். நாய்களை முற்றாக அழிக்க தேவையில்லை இனப்பெருக்கலை மட்டுப்படுத்தினால் நாய்களினதும்  நமதும் எதிர்காலத்துக்கு சிறப்பு.
    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.