Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

11 minutes ago, goshan_che said:

எல்லாத்தையும் விடுங்கோ

பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ.

1. காணாமல் போனோர் விடயம். 

2. போர் குற்ற விசாரணை

3. மாகாண சபைக்கு காணி அதிகாரம்

4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்

5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்).

6. தமிழர் நிலத்தில் புத்த கோவில்

இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்?

இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?

முதல் 5 உம் கிடைக்கப் போவதோ நிகழப் போவதோ இல்லை.

6 ஆவது நிகழும் சாத்தியம் மிக குறைவு என நினைக்கிறேன்

இது எனக்கு மட்டுமல்ல, வாக்களித்த மக்களுக்கும் தெரியும்.

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதாரணத்துக்கு ஒண்டு- ஒருத்தர் ஒரு திரி திறந்து அநுராவை கெட்டவனாக காட்ட எழுதுனவர் அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிராகத்தான் பேசி இருந்தனர்.. ஓட ஓட அடித்திருந்தனர்..

ஓணாண்டி நீங்கள் @ரஞ்சித் தின் பதிவை தவறாக எடுத்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன்.

அவர் எழுதியது எதுவுமே அவராக எழுதவில்லை.

கடந்த காலங்களில் இவர்களை செய்ததை மட்டுமே நினைவு கூர்ந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ப்ரோ,

இந்த அருச்சுனா குரூப்பை தேத்தண்ணியோ கோப்பியோ வாங்கி கொடுத்து ஒரு யதார்தமான, ஊழலற்ற, மக்கள் நலன் பேணும் grass roots தமிழ் தேசிய சக்தியாக யாழில் வளர்தெடுக்க முடியாதா?

யாழில் இப்போ தமிழ் தேசிய எம்பி எவருமில்லை.

சிறி, பொன்னா போன்ற போலிகளும், என் பி பி யும்தான்.

There is a gap in the market.

காலம் உரியவர்களை காட்டும்..அவர் தன்னை தமிழ்தேசியவாதியாகத்தான் அடையாளம் காட்டி இருக்கிறார்.. அடுத்த ஜந்துவருடத்தில் அவர் தன்னை நிரூபித்தால் அதுவாக அவரை அசைக்கமுடியாத தமிழ்தேசியவாதி ஆக்கிவிடும்..காலத்தின் விசித்திர முடிச்சுக்களை யார் அறிவார்..

நீங்கள் சொன்னதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உண்டு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

மாகாணசபையே இல்லாமல்போகப்போறது போல

அப்புறம் எப்படித் தம்பி அதிகாரங்கள் வரும்.

இல்லை என்ற போதும் இன்றியமையாது…

தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது.

யாழில் 3/6, வன்னியில் 2/3, திருமலையில் 1/1, மட்டகளப்பில் 3/2, அம்பாறையில் 1/1 - எமது மக்களின் பெரும்பான்மை தெரிவு இன்றும் உரிமை அரசியல்தான்.

அதை ஆதரிக்க வேண்டியது எம் கடன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இல்லை என்ற போதும் இன்றியமையாது…

தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது.

யாழில் 3/6, வன்னியில் 2/3, திருமலையில் 1/1, மட்டகளப்பில் 3/2, அம்பாறையில் 1/1 - எமது மக்களின் பெரும்பான்மை தெரிவு இன்றும் உரிமை அரசியல்தான்.

அதை ஆதரிக்க வேண்டியது எம் கடன்.

இது மட்டுமல்ல.

அடுத்தடுத்து உள்ளூராட்சிசபை, மாகாணசபை என்று தேர்தல்கள் வரப் போகின்றன.

தமிழ்க் கட்சிகள் சுதாகரித்துக் கொள்வதற்குள் என்பிபி யில் போட்டியிட மக்கள் அலை மோதப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

முதல் 5 உம் கிடைக்கப் போவதோ நிகழப் போவதோ இல்லை.

6 ஆவது நிகழும் சாத்தியம் மிக குறைவு என நினைக்கிறேன்

இது எனக்கு மட்டுமல்ல, வாக்களித்த மக்களுக்கும் தெரியும்.

நான் நிகழ்தகவை கேட்கவில்லை. மக்கள் பற்றியும் கேட்கவில்லை. 

சரி அதை விடுவோம்.

என்னை பொறுத்தவரை இந்த ஆறும்தான் இன்று தமிழ் தேசிய அடிப்படையின் தூண்கள்.

இதில் 6 ஐயும் விட்டு கொடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறாகள் என வெறும் யாழ்பாண மாவட்ட முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது.

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலம் உரியவர்களை காட்டும்.. அடுத்த ஜந்துவருடத்தில் அவர் தன்னை நிரூபித்தால் அதுவாக அவரை அசைக்கமுடியாத தமிழ்தேசியவாதி ஆக்கிவிடும்..காலத்தின் விசித்திர முடிச்சுக்களை யார் அறிவார்..

இதை நோக்கி அவரை, அவர் குழாமில் உள்ள ஏனையோரை இந்த வேணும். 

ஒரு கட்சியாகி, உள்ளூராட்சி தேர்தலில் இறங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya), முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa) சாதனையை முறியடித்துள்ளார். 

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, 655,289  என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்த வாக்கு எண்ணிக்கை

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக பிரதமர் ஹரிணி பெற்ற வாக்குகள் இடம்பிடித்துள்ளன. 

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி | 2024 Sri Lankan Parliamentary Election Result

இதற்கு முன்னர், நாடாளுமன்ற தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற இலங்கையின் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணப்பட்டார்.

அவர், கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் போது குருநாகல் மாவட்டத்தில் 527,364 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மகிந்தவின் சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் பிரதமர் ஹரிணி | 2024 Sri Lankan Parliamentary Election Result

இந்த நிலையில், குறித்த சாதனையை இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமர் ஹரிணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/2024-sri-lankan-parliamentary-election-result-1731673511

3 minutes ago, goshan_che said:

இதில் 6 ஐயும் விட்டு கொடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறாகள் என வெறும் யாழ்பாண மாவட்ட முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது.

1. யாழில் அனுரவுக்கு வாக்களித்தவர்களை விட, ஏனையவர்களுக்கு வாக்களித்தவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனா பிரிந்து நின்றமையால் ஒரு குறிப்பிட்ட தமிழ் கட்சியில் இருந்து தெரிவானவர்கள் குறைவு.

2. இந்த ஆறு தூண்களிற்காகத்தான் 2009 இல் இருந்து தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளை அள்ளிச் சென்றவர்களால் நடைமுறையில் செய்த விடயங்கள் எவை?

3. இந்த 6 உடன், பொருளாதார முன்னேற்றம், கல்வி நிலை மேம்படுதல், தொழில் வாய்ப்புகள், இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிலங்கள் மீண்டும் மக்களுக்கும் விவசாயத்துக்கும் வழங்குதல், வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தை குறைத்தல், போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்தல், வீதி + வாய்க்கால்கள் செப்பனிடுதல், மழை வெள்ளத்தை தடுத்தல் என்றும் இன்னபிற சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் 2009 இன் வந்த எந்த கட்சியினர் கவனத்திலாவது எடுத்தனர்?

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

சாண‌க்கிய‌ன் போலி த‌மிழ் தேசிய‌ வாதி என்று க‌டந்த‌ கால‌ங்க‌ளில் எழுதி இருந்தீங்க‌ள்

ஆனால் அவ‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வென்று விட்டார் 

உங்க‌ளின் ப‌தில் இத‌ற்க்கு என்ன‌வாய் இருக்கும்..................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நான் நிகழ்தகவை கேட்கவில்லை. மக்கள் பற்றியும் கேட்கவில்லை. 

சரி அதை விடுவோம்.

என்னை பொறுத்தவரை இந்த ஆறும்தான் இன்று தமிழ் தேசிய அடிப்படையின் தூண்கள்.

இதில் 6 ஐயும் விட்டு கொடுக்கும் அரசியலை மக்கள் விரும்புகிறாகள் என வெறும் யாழ்பாண மாவட்ட முடிவை வைத்து தீர்மானிக்க முடியாது.

அதை விட 25% வாக்கு தான் என் பி பிக்கு விழுந்தது.நான் கேள்விப்பட்டவரையில் மாகாணசபையை இல்லாமலொழிக்கும்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. புது அரசியலமைப்பு வரேக்கை தான் தெரியும். அவர்கள் சொன்ன அரைவாசி வாக்குறுதியாவதுநிறைவேற்றுப்படும் அடுத்த தேர்தலுக்காகவாவது. ஒரேயொரு விசயம் யாரும் கவனிக்கவில்லை ஆட்சி மாறியதன் பின் வாள்வெட்டுக்குழுவின் கதையைப் பெரிசா காணேலை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

ஒரேயொரு விசயம் யாரும் கவனிக்கவில்லை ஆட்சி மாறியதன் பின் வாள்வெட்டுக்குழுவின் கதையைப் பெரிசா காணேலை

ஆமாம் நானும் இதைக்கவனித்தேன்.

இரண்டு நாட்கள் முதலும் இதைப்பறிறி எழுதியிருந்தேன்.

தாங்களாகவே முடங்கினார்களா?

பொலிசாரால் முடக்கப்பட்டதா?

தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உங்க எல்லாரையும் விட கொஞ்சம் கூட அரசியல் தெரியாத - பழக்க வழக்கம் தெரியாத அர்ச்சுனா எவ்வளவோ மேல் என்ட மக்கள்ட தீர்ப்பு  உங்கள மறந்தும் அரசியல் பக்கம் வரவேணாம்னு மக்கள் சொல்லுற கடைசி குரல்…

ஏற்கனவே உள்ள வழக்குகளையும் புதிதாக வரவுள்ள வழக்குகளையும் பார்க்கவே நேரம் போய்விடும்! ஐந்து வருஷத்திற்கு வேலை செய்யாமல் சம்பளம் கிடைக்கும்!

வாக்குப்போட்ட அப்பாவி சனமும், கூத்துப் பாக்கிற புலம்பெயர் பொழுதுபோக்கிகளும் ஆவெண்டு பார்க்கவேண்டியதுதான்🙂↕️

  • கருத்துக்கள உறவுகள்

* 1986 யூலை, மல்லிகையில், புதுவை இரத்தினதுரையால் எழுதப்பட்ட நீண்ட கவிதையின் ஒரு பகுதி ....செந் தோழர்களின் செவியில் விழவேண்டும்.. பாலைவனம் கடந்து வந்த மக்களின் பாதங்களை ஆறவைப்பீர்களா..!?

——————

தென்னிலங்கைத் தோழனுக்கு 

நண்பா!
நெடுங்காலம் நாங்கள் முகம் கண்டு 
முன்பு 
வருடத்தில் மே மாத முதல் நாளில் சந்திப்போம்.
'புதிய நகரசபை முன்றலிலே'
செங்கொடிகள் தாங்கித் திரிவோம் 
தலைவர்கள்,
எங்களுக்கு தெரியாத எத்தனையோ சொல்வார்கள் 
கைதட்டி ஆர்ப்பரித்து களிப்போம்.
பிரிந்திடுவோம்.
பொய்யில்லா இந்த 'புரட்சிக் கனவு' களில் மெய்மறந்து தூங்க மேமாதம் வரும்
அப்போ...
மீண்டும் சந்திப்போம்.

வடக்கிருந்து பஸ்சில் வருவார்கள் தமிழர்கள்
கிழக்கிருந்து பஸ்சில் வருவார்கள் சோனகர்கள்
தெற்கிருந்து பஸ்சில் வருவார்கள் சிங்களவர்
எல்லோரும் சேர்ந்து 
மேமாத முதல் நாளில்
'வர்க்கப் போர்' பற்றி வாதிடுவோம்.
புரட்சி பற்றித்
தர்க்கங்கள் செய்வோம்
'சமவுடமைச் சமுதாயம்'
பற்றிப் பறைவோம்,
பஸ்சேறித் திரும்பிடுவோம்
கற்பனையில் மீண்டும் களிப்போம்.
இது வழக்கம்.
வடக்கே....
மாவலியின் வருகைக்கு காத்திருந்து துடக்காகிப் போனோம்.
தோழா! உன்முகத்தைக் 
கண்டு கனகாலம்
கவிதையிலே..... தேசிய நீர் 
மொண்டு குடித்ததுவும்,
மேதினத்திற் கூடியதும்,
உண்டன்றி,
வர்க்க உறவெல்லாம் கற்பனையா?
வந்து பார்.
எங்கள் வடக்கும், கிழக்கதுவும்
எந்தவிதமான இருள் சூழ்ந்து கிடக்கிறது 
அரச படைகளென்ற 
அரக்கர்களின் பிடியினிலே 
கரையும் தமிழ் நிலங்கள் 
கண்ணீரில் மிதக்கிறது.
வெள்ளம் போற் பாய்ந்தார்கள் 
வெறியர்கள்.
நாங்களதில் 
அள்ளுண்டு போனோம்.
அடக்கு முறைக் குள்ளானோம் 

பிச்செறியப்பட்ட பிரேதங்கள் 
எங்களது 
குச்சொழுங்கையெங்கும் 
குடல் சரிந்த சடலங்கள்.
பல்லாற் கடித்துப் பதம்பார்த்த முலைகளுடன் 
எல்லாம் இழந்துவிட்ட இளம் வயதுக் கன்னியர்கள் 
சொன்னால் விளங்காது
செவிக்குள் அடங்காது 
என்னென்று இதையெழுதி 
எப்படித்தான் புரியவைப்பேன்.
சீனாவில் இருந்து வந்த 'சிவப்புப் பிரசுரங்கள்'
'லெனினின் சிந்தனைகள்'
'மார்க்ஸின்' கட்டுரைகள்
என்னிடத்தில் இப்போது இல்லை
வீடெரிந்த,
அந்நேரம்.... அவையும் அனலிற் கருகியன 
உன்னிடத்தில் எல்லாம் உண்டு 
என எண்ணுகிறேன்....//
 
- புதுவை இரத்தினதுரை -

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

1. யாழில் அனுரவுக்கு வாக்களித்தவர்களை விட, ஏனையவர்களுக்கு வாக்களித்தவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். ஆனா பிரிந்து நின்றமையால் ஒரு குறிப்பிட்ட தமிழ் கட்சியில் இருந்து தெரிவானவர்கள் குறைவு.

2. இந்த ஆறு தூண்களிற்காகத்தான் 2009 இல் இருந்து தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளை அள்ளிச் சென்றவர்களால் நடைமுறையில் செய்த விடயங்கள் எவை?

3. இந்த 6 உடன், பொருளாதார முன்னேற்றம், கல்வி நிலை மேம்படுதல், தொழில் வாய்ப்புகள், இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நிலங்கள் மீண்டும் மக்களுக்கும் விவசாயத்துக்கும் வழங்குதல், வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தை குறைத்தல், போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்தல், வீதி + வாய்க்கால்கள் செப்பனிடுதல், மழை வெள்ளத்தை தடுத்தல் என்றும் இன்னபிற சங்கதிகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் 2009 இன் வந்த எந்த கட்சியினர் கவனத்திலாவது எடுத்தனர்?

1. ஆகவே ஒன்றாக நின்றிருப்பின் யாழ்பாணத்தில் கூட உரிமை அரசியல்தான் மக்கள் தெரிவு, என்பதை ஏற்கிறீர்கள். 

2. இந்த 6 ஐயும் அவர்கள் சும்மா வாக்கு வாங்கும் விடயங்களாக பாவித்தார்கள். இது அவர்களின் பிழை. 6 தூண் கொள்கையின் பிழை அல்ல. இது கருணாநிதியின் பிழைக்கு திராவிட கொள்கையை பிழை சொல்வது போன்றது. குளத்தில் தான் பிழை, ****யில் அல்ல. அதை கழுவலாம்.

3. இல்லை ஆளும் தரப்பு இல்லாமல் பெரிதாக செய்ய முடியாது ஆனாலும் மக்கள் மயப்பட்டு பலதை செய்திருக்கலாம். யூடியூப்பர்ஸ் போல வெளிநாட்டு காசை எடுத்து கூட எதுவும் செய்ய எத்தனிக்கவும் இல்லை. ஆனால் இதுவும் இவர்களின் பிழையே. கொள்கையின் பிழை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

அரசியலமைப்பு விடயத்தில் என் பி பி  தமிழ் எம்பிகள்  உட்பட எவரையும் அனுரா பைல் தூக்கவும் விடுவாரா என்பது சந்தேகமே.

ஆனால் மாகாணசபையை விட மட்டமான ஒரு கடும் ஒற்றையாட்சி முறையை கொண்டு வந்து அதை தமிழரும் ஏற்கிறார்கள் என யாழின் 50% எம்பிகளை கொண்டு சாதிக்கப்பார்ப்பார்

நீங்கள் கூறியது போல் நடை பெறாது என்று உங்களுடன் நான் பந்தயம் கட்ட போவதில்லை. 

 நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறினேன்.  காற்றுள்ள போதே தூற்றி கொள் என்று.  Recruit பண்ணிய ஒரு தலைமுறையினரின் தியாகங்களை  அடுத்த தலைமுறைக்கு பயன்பெற செய்ய வேண்டிய அரசியல் தீர்மானங்களை உரிய வேளையில் எடுத்து செயற்படாமல்  விட்டுவிட்டு இப்போது மீண்டும்,  உயிர் தமிழுக்கு, உடல் மண்ணிற்கு என்று அடுத்த தலைமுறையையும் நாசம் செய்ய முனையும்  வரட்டு தேசியம் எமக்கு உதவப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

இப்பொழுது ஒரு வீடியோ பார்த்தேன் மக்கள் டக்ள்சை சுற்றி வளைத்து தாக்குகின்றார்கள்

அது ஒரு பழைய காணொளி 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

@goshan_che

சாண‌க்கிய‌ன் போலி த‌மிழ் தேசிய‌ வாதி என்று க‌டந்த‌ கால‌ங்க‌ளில் எழுதி இருந்தீங்க‌ள்

ஆனால் அவ‌ர் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வென்று விட்டார் 

உங்க‌ளின் ப‌தில் இத‌ற்க்கு என்ன‌வாய் இருக்கும்..................

நான் சாணக்ஸை பற்றி இப்படி எழுதவில்லை.

உங்களுக்கு சில நாட்களுக்கு முன் தந்த பதிலில் அவரும் 2010 இல் மகிந்தவுடன் இருந்தார், பின் சம்ப்ந்தன் அவரை தமிழரசுக்கு கூட்டி வந்தார். சம்பந்தன் தமிழரசுக்கு செய்த அபூர்வமான நல்ல விடயங்களில் இது ஒன்று. சாணாக்கியன் இல்லை என்றால் மட்டகளப்பிலும் தமிழ் தேசிய வாக்கு 1 எம்பி ஆகி இருக்கும் என எழுதினேன்.

சாணக்ஸ் மட்டும் அல்ல மட்டுவில் 4 தமிழ் எம்பிகள், அதில் மூவர் தமிழ் தேசிய கட்சி என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

ஏற்கனவே உள்ள வழக்குகளையும் புதிதாக வரவுள்ள வழக்குகளையும் பார்க்கவே நேரம் போய்விடும்! ஐந்து வருஷத்திற்கு வேலை செய்யாமல் சம்பளம் கிடைக்கும்!

வாக்குப்போட்ட அப்பாவி சனமும், கூத்துப் பாக்கிற புலம்பெயர் பொழுதுபோக்கிகளும் ஆவெண்டு பார்க்கவேண்டியதுதான்🙂↕️

அப்படி ஒருவேளை உங்கல் ஆசை நடந்தால்கூட பருவாயில்லை.. பொய்யர்களுக்கு வாக்களித்து கலியாணம் கட்டியும் வாழவெட்டியாய் வாழும் பெண்போல இதுவரை இருந்தோம்.. இன்னும் ஒரு ஜந்து வருடம் இருந்திட்டு போவம் இந்த பொய்யன்களை அர்ச்சுனாவை வச்சு அடிச்சோம் என்ற சந்தோசத்துடன்..30 வருசம் வாழவெட்டியாய் இருந்தவர்களுக்கு 5 வருசம் பெருசல்ல.. ஆனால் அதுக்கு பிறகு வறப்போற தேர்தல்களில் இந்த மரண அடி ஞாபகம் வந்துகிட்டு இருக்கும் போலிகளுக்கு கனவிலும்.. 

இதை நிகழாவிடாமல் தடுப்பதுதான் உங்கள் போன்றவர்களின் பெரு விருப்பு..

Edited by பாலபத்ர ஓணாண்டி

2 minutes ago, goshan_che said:

1. ஆகவே ஒன்றாக நின்றிருப்பின் யாழ்பாணத்தில் கூட உரிமை அரசியல்தான் மக்கள் தெரிவு, என்பதை ஏற்கிறீர்கள். 

ஓம், ஆனால் தேசியக் கட்சி ஒன்று பல தொகுதிகளில் வெல்வது என்பதும் ஒன்றுக்கு மேற்பட்ட பா.உ.க்களை பெறுவது என்பதும் தமிழ் தேசிய கட்சிகளை மக்கள் நிராகரிக்கத் தொடங்கி விட்டனர் என்பதன் ஆணித்தரமான அடையாளம்.

4 minutes ago, goshan_che said:

3. இல்லை ஆளும் தரப்பு இல்லாமல் பெரிதாக செய்ய முடியாது ஆனாலும் மக்கள் மயப்பட்டு பலதை செய்திருக்கலாம். யூடியூப்பர்ஸ் போல வெளிநாட்டு காசை எடுத்து கூட எதுவும் செய்ய எத்தனிக்கவும் இல்லை. ஆனால் இதுவும் இவர்களின் பிழையே. கொள்கையின் பிழை அல்ல.

எனவே தான் ஆளும் தரப்புக்கு வாக்களித்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

நீங்கள் கூறியது போல் நடை பெறாது என்று உங்களுடன் நான் பந்தயம் கட்ட போவதில்லை. 

 நான் ஏற்கனவே ஒரு பதிவில் கூறினேன்.  காற்றுள்ள போதே தூற்றி கொள் என்று.  Recruit பண்ணிய ஒரு தலைமுறையினரின் தியாகங்களை  அடுத்த தலைமுறைக்கு பயன்பெற செய்ய வேண்டிய அரசியல் தீர்மானங்களை உரிய வேளையில் எடுத்து செயற்படாமல்  விட்டுவிட்டு இப்போது மீண்டும்,  உயிர் தமிழுக்கு, உடல் மண்ணிற்கு என்று அடுத்த தலைமுறையையும் நாசம் செய்ய முனையும்  வரட்டு தேசியம் எமக்கு உதவப் போவதில்லை. 

நான் மேலே கூறிய 6 இல் எதை வரட்டு தேசிய கொள்கை என்பீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்படி ஒருவேளை உங்கல் ஆசை நடந்தால்கூட பருவாயில்லை.. பொய்யர்களுக்கு வாக்களித்து கலியாணம் கட்டியும் வாழவெட்டியாய் வாழும் பெண்போல இதுவரை இருந்தோம்.. இன்னும் ஒரு ஜந்து வருடம் இருந்திட்டு போவம் இந்த பொய்யன்களை அர்ச்சுனாவை வச்சு அடிச்சோம் என்ற சந்தோசத்துடன்..30 வருசம் வாழவெட்டியாய் இருந்தவர்களுக்கு 5 வருசம் பெருசல்ல.. ஆனால் அதுக்கு பிறகு வறப்போற தேர்தல்களில் இந்த மரண அடி ஞாபகம் வந்துகிட்டு இருக்கும் போலிகளுக்கு கனவிலும்.. 

கலகலப்பு பிரேக்

https://www.facebook.com/share/r/1AXrWNfJDL/?mibextid=WC7FNe

https://www.facebook.com/share/v/15PuYQTeso/?mibextid=WC7FNe

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

எனவே தான் ஆளும் தரப்புக்கு வாக்களித்தனர்.

எதிர் பாத்து பாத்து களைத்த மக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

2 minutes ago, கிருபன் said:

5 வருடங்களுக்கு இந்த அரைவேக்காட்டின் கூத்துகளை பாக்க வேண்டி வரப் போகின்றதே...! 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் சாணக்ஸை பற்றி இப்படி எழுதவில்லை.

உங்களுக்கு சில நாட்களுக்கு முன் தந்த பதிலில் அவரும் 2010 இல் மகிந்தவுடன் இருந்தார், பின் சம்ப்ந்தன் அவரை தமிழரசுக்கு கூட்டி வந்தார். சம்பந்தன் தமிழரசுக்கு செய்த அபூர்வமான நல்ல விடயங்களில் இது ஒன்று. சாணாக்கியன் இல்லை என்றால் மட்டகளப்பிலும் தமிழ் தேசிய வாக்கு 1 எம்பி ஆகி இருக்கும் என எழுதினேன்.

சாணக்ஸ் மட்டும் அல்ல மட்டுவில் 4 தமிழ் எம்பிகள், அதில் மூவர் தமிழ் தேசிய கட்சி என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. 

சீமான் . சாண‌க்கிய‌ன் ம‌ற்றும் சில‌ரின் பெய‌ரை குறிப்பிட்டு சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் எழுதி நீங்க‌ள் இவ‌ர்க‌ள் போலி த‌மிழ் தேசிய‌ வாதிக‌ள் என்று Bro

என‌க்கு ந‌ல்லா நினைவு இருக்கு🤔..................

1 minute ago, நிழலி said:

5 வருடங்களுக்கு இந்த அரைவேக்காட்டின் கூத்துகளை பாக்க வேண்டி வரப் போகின்றதே...! 

இப்ப‌வே இவ‌ர்ட்ட‌ புல‌ம்ப‌ல்க‌ளை பார்க்க‌ இவ‌ர் அர‌சிய‌லுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌மாட்டார் என்று ந‌ன்றாக‌ தெரியுது அண்ணா........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நடிகர் விஜகாந் மாதிரி.. விஜகாந்தையும் மக்களுக்கு பிடிக்கும்.. ஆனால் மெத்த படித்தவர்கள் பார்வையில் அவர் கோமாளி.. ஆனால் சாதரணமக்கள் தங்களில் ஒருவராக எளியவர் படிப்பறிவற்றவர் எண்டு பாத்தனர்.. 

உங்களுக்கு சாதாரணமக்களின் உளவியல் புரியல.. ஆட்டோ ஓட்டுறவன் மரக்கறி சந்த்தைக்காறனுக்கு இவ்வளவு படிச்சமனுசன் ஆனாலும் தங்களமாதிரி இருக்கே எண்டுதான் பார்ப்பார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.