Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

இவ்வளவு வாக்குகளுடன் தெரிவானாரா?

அப்படித்தான் முடிவுகள் தெரிவிக்கின்றன.............. இந்த தேர்தல் முறையில் இப்படியும் நடக்கும்........

முதலில் கட்சி, பின்னர் கட்சிக்குள் இருப்பவர்கள்............

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!

  • கருத்துக்கள உறவுகள்

24-6670feb6983f4.webp

போன தேர்தலில்   மாவை சேனாதிராசாவை வீட்டுக்கு அனுப்பியவர்கள்,
இந்தத் தேர்தலில்  சுமந்திரனை  வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள். 😂
மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣 நல்லாய்  ஓய்வு எடுங்க ராசா.... 😂

animiertes-feuerwerk-bild-0003.gif    animiertes-feuerwerk-bild-0002   animiertes-feuerwerk-bild-0021  animiertes-feuerwerk-bild-0068

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வ கோளாறில், தேசிய பட்டியலில் சுமந்திரன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவாரா என கருத்து கணிப்பு ஒன்றினை ஆரம்பித்துள்ளேன், அதற்கு உங்கள் ஆதரவின நல்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

இவ்வளவு வாக்குகளுடன் தெரிவானாரா?

போனமுறை திலீபன் 3000 + வாக்குகளுடன் தெரிவானாரே. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகிடி said:

போனமுறை திலீபன் 3000 + வாக்குகளுடன் தெரிவானாரே. 

திலீபன் கட்சியின் முதன்மை வேட்பாளர் அல்லவே??
செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் என்பதால் தான் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

திலீபன் கட்சியின் முதன்மை வேட்பாளர் அல்லவே??
செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் என்பதால் தான் கேட்டேன்.

Ok 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசிய செயற்பாட்டாளர்கள் என்ற லேபலை  ஒட்டிக் கொண்டு இந்த  தேசிக்காய்கள் மக்களிடம் திருடிய பணத்தை வைத்து தாயக அரசியலில் தலையிட்டு குழப்பங்களை விளைவித்தால் அவர்களில் வாலை ஒட்ட நறுக்குமாறு ஜனாதிபதி அநுராவிடம் அன்பாக  வேண்டுகோள் விடுக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை. பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும் என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பார்க்க ஆவாலாக உள்ளது. அநேகமாகத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு சாணக்கியன் தான் பொருத்தமானவராக இருப்பார். கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் இருந்து 3 பேர் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் அதுதான் தார்மீகமாகவும் இருக்கும். இதற்கு சுமந்திரனும் அனுசரணை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இங்கு பார் சிறிதரன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானாலும் அவர் அதிகம் மகிழ்ச்சியடையப்போவதில்லை. அவர் பின்னுக்கு இருக்கும் பார் லைசன்சுகள் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கும். ஆட்சியமைக்க எவரின் தயவையும் தங்கியிராத என்பிபி அரசு எல்லா அரசியல்வாதிகளின் ஊழல்களையும் வெளிப்படுத்தும் என்பது திண்ணம். அதனால் பார் சிறிதரன் பாடு திண்டாட்டம்தான்.!

நல்ல கருத்து.

——————

இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன்.

1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம்.

பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம்

அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம்.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். 

டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம்.

நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு,  ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. 

இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது.

2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள்.

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

  • கருத்துக்கள உறவுகள்

467299275_122123660708380520_81875005483

உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான்.         Vic Jeyathevan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

467299275_122123660708380520_81875005483

உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான்.         Vic Jeyathevan

இந்த‌ வே*****

பிற‌ந்த‌ கொள்ளை கூட்ட‌த்தை மாவீர‌ர்க‌ளின் ஆன்மா ம‌ன்னிக்காது

அடுத்த‌ பிற‌ப்பு இவ‌ர்க‌ளுக்கு ந‌ர‌க‌மாய் அமைய‌னும்😡........................

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாலி said:

சுமந்திரனின் பாராளுமன்ற வாழ்க்கை இனி முடிவுக்கு வந்துள்ளது என நினைக்கின்றேன். என்பிபியின் 2/3 பெரும்பான்மையுள்ள பாராளுமன்றின் சுமந்திரன் செய்வதுக்கு எதுவும் இல்லை.

மைத்திரியின் நல்லாட்சியில் தயாரித்த தீர்வையே என்பிபி முன்வைக்கப் போவதாக சொன்னார்கள்.

அப்படியானால் சுமந்திரனே தமிழர்கள் தரப்பில் பங்கு கொண்டு எழுதியவர்.

ஆனபடியால் யார் விரும்பினால் என்ன விருப்பமில்லாவிட்டால் என்ன சுமந்திரனை உள்வாங்கியே தீர வேண்டும்.

அத்துடன் என்பிபி விரும்பாவிட்டாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்துள்ளார்கள்.

வெளியே இருந்து ஜனாதிபதி முறைமையை கட்சி தாவுதலை ஒழிப்போம் என்றவர்கள் இப்போது சாட்டுச் சொல்லவே முடியாது மாட்டிக் கொண்டார்கள்.

எனவே சட்டரீதியான பிரச்சனைகள் பல இருக்கும் போது சுமந்திரன் தமிழர் தரப்பில் முக்கியமாகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அம்மட்ட உடு..(அதான் எனக்கு தெரியும்)

அடோ வழி த?🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

நல்ல கருத்து.

——————

இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன்.

1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம்.

பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம்

அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம்.

அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். 

டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம்.

நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு,  ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. 

இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது.

2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள்.

வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.

நன்றி சகோ 

உண்மையில் இப்பொழுது தான் நாம் அதிகம் செயற்படவேண்டும் விழித்திருக்கணும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த பாராளுமன்றத்தில் தேசிய பட்டியலிலாவது பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால் சுமந்திரனின் அரசியல் வாழ்க்கை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துவிடும் என்றே கருதுகிறேன்.

அது அவரிற்கும் தெரிந்திருக்கும்

சுமந்திரன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

https://vm.tiktok.com/ZGdFxDf8k/

பயணிகள் கவனிக்கவும் 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

நன்றி சகோ 

உண்மையில் இப்பொழுது தான் நாம் அதிகம் செயற்படவேண்டும் விழித்திருக்கணும். 

இனவாதம் தற்காலிகமாக அடங்கி கிடக்கும் நேரம்….

என் பி பி 2/3 பெரும்பான்மை - தமது தேனிலவு முடியும் முன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சர்வசன வாக்கெடுப்புக்கு விட முயற்சிக்க கூடும்.

உண்மையில் இந்த நேரத்தில் நாம் 12/14 தமிழ் தேசிய எம்பிக்களை கொண்டு, நமது மக்களின் ஏக குரலாக கதைத்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போதும் மோசமில்லை, கிழக்கின் தயவில் 10/14 தமிழ் தேசிய எம்பிக்கள் உளர்.

கஸ்மீரிகள் செய்வது போல் ஒரு ஹூரியத் கூட்டம் போட்டு - அனைவரும் ஓரணியில் திரண்டு முட்ட வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புகளும் சேர வேண்டும்.

முதலில் நாம் ஓரணியில் திரண்ட பின், முஸ்லிம்களுக்கு நாமாகவே ஒரு நிலத்தொடர்பற்ற அலகை கொடுப்பதாக கூறி, அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மிதவாத முகமூடி போட்ட என் பி பி யை இப்படி நெருக்கலாம். 

யூதன் எம் நிலையில் இருந்தால் இப்படித்தான் செயல்படுவான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எல்லோரும் ..அனுர போல் இருக்கமாட்டார்கள்..அதேநேரம் மேடைப்பேச்சுப்போல் செயற்பாடும் இருக்காது...வெற்றி வெரியில் இருப்பவர்களுக்கு நம்ம்வர் தூசுதான்...இது போகப் போக தெரியும்..அதனை இதனைவிட அழகான அஎஉமையான செயல்பாட்டாளராக இருந்த பிரதம்ரையே மாற்றச் சொல்கின்ற கோசம் அங்கு எழத்தொடங்கிவிட்டது...இது ஆரம்பம் சார் ..பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லது நடந்தால்

நானும் வரவேற்பேன்...வெள்ளைவேட்டி மைத்திரியாலிம்..வெள்ளைச்சாறீ சந்திரிக்காவாலும் மோசம் போனவர்கள் நாமென்பது மறக்கவில்லைத்தானே

பொருளாதார விடிவிற்கே வாக்குகள் விழுந்துள்ளன என நினைக்கின்றேன். பொருளாதாரம் முன்னேறும்போது வாக்களிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். அடுத்த தேர்தலில் நாட்டின் சூழ்நிலை வேறுபாடான தெரிவை தோற்றுவிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

சுமந்திரன் இல்லையாதலால் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப்போராளிகள் இன்னொரு போராட்ட இலக்கு ஒன்றினைத் தேடவேண்டும்.  இனி புலம்பெயர் பட்டாசு கோஷ்டிகள் பாடு திண்டாட்டம்தான்!

புலிகள் பணத்தை கொள்ளை அடித்த புலம் பெயர் கோஷ்டிகளின் நிலை பரிதாமமானது 

சுமந்திரன் தோல்வியை கொண்டாடுவம் என்று பார்த்தால்  சாணக்கியனின் வெற்றி உறுதுகின்றது, ஓட்டுக் குழுக்களும், தமிழ் இன வியாபாரிகளும் கைப்பற்ற நினைத்து ஏலாமல் விட்டோடிய பின்னும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தான் இப்பொழுதும் அதிகப் படியான வாக்குகளை மற்றும் கதிரைகளை தமிழர் தரப்பில் பெற்று இருக்கிறது, சிங்கள தமிழ் இனவாதத்தை முதலிடாக வைத்து போகும் உயிர்களை எரித்து அதில் குளிர் காய்வோம் என்று நினைத்தால் தமிழ் மக்கள் சிங்கள கட்சிக்கே அதிக பிரதிநிதிகளைக் கொடுத்து இருக்கிறார்கள். 

பாவம் இவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதன் மூலம் அவரின் அத்தனை தவறுகள் மற்றும் தான் தோன்றிக்தனமான செயற்பாடுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நீங்கள் சுமந்திரனின் சாதகமான பக்கத்தை பார்க்கவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

பார் சிறிதரனும் கஜே-கயே கோஷ்டித் தலைவரும்

இந்த ஒரு BAR லைசன்ஸை வைத்து, ஒட்டு மொத்த தமிழ் தேசிய அரசியலையும், பெரும்பாலும் ஊழல் இல்லா அல்லது சிங்களத்ததோடு ஒப்பீட்டளவில் ஊழல் குறைந்த அரசியல் செய்த தமிழ் அரசியல்வாதிகளையும் இன்று இப்படி அவதூறோடு பார்க்க வைப்பதில் சிங்கள அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இனவாதம் தற்காலிகமாக அடங்கி கிடக்கும் நேரம்….

என் பி பி 2/3 பெரும்பான்மை - தமது தேனிலவு முடியும் முன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சர்வசன வாக்கெடுப்புக்கு விட முயற்சிக்க கூடும்.

உண்மையில் இந்த நேரத்தில் நாம் 12/14 தமிழ் தேசிய எம்பிக்களை கொண்டு, நமது மக்களின் ஏக குரலாக கதைத்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போதும் கிழக்கின் தயவில் 10/14 தமிழ் தேசிய எம்பிக்கள்தான்.

கஸ்மீரிகள் செய்வது போல் ஒரு ஹூரியத் கூட்டம் போட்டு - அனைவரும் ஓரணியில் திரண்டு முட்ட வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புகளும் சேர வேண்டும்.

முதலில் நாம் ஓரணியில் திரண்ட பின், முஸ்லிம்களுக்கு நாமாகவே ஒரு நிலத்தொடர்பற்ற அலகை கொடுப்பதாக கூறி, அவர்கள் மறுக்க முடியாத ஒரு offer ஐ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

மிதவாத முகமூடி போட்ட என் பி பி யை இப்படி நெருக்கலாம். 

யூதன் எம் நிலையில் இருந்தால் இப்படித்தான் செயல்படுவான்.

நிச்சயமாக.

என்ன தான் பெரிய வெற்றியை பெற்றாலும் நிதி நெருக்கடி பெரிய தலையிடியாக தொடரும்.  பல சொற்றாடல்களை முன் வைத்து  ஆட்சியை கைப்பற்றி இருக்கும் இவர்களுக்கு அதுவே இவர்களது முடிவுரையையும் எழுதி விடும் என்பதும் தெரிந்திருக்கும். எனவே தமிழர்களின் அதிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே மீள்ச்சி. இதை உணர்ந்து சந்தர்ப்பத்தையும் நேர்காலங்களையும் உணர்ந்து தமிழர் தரப்பும் கடும் போக்கை கைவிட்டு சூழ்நிலையை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லொழி கிடைக்க வழி பிறக்கும். இதுவே எனது பிராத்தனைகள்..

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

எனவே சட்டரீதியான பிரச்சனைகள் பல இருக்கும் போது சுமந்திரன் தமிழர் தரப்பில் முக்கியமாகிறார்.

உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை.

24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣.

கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல்.

கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர்.

மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு.

The man is hurting and it’s showing 🤣.

தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். 

முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்….

அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும்.

சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ரின் அப்பா த‌மிழீழ‌ காவ‌ல்துறையில் இருந்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது உண்மையா

அல்ல‌து வ‌த‌ந்தியா

உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் சொல்லுங்கோ🤔...............................

doctor.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ரின் அப்பா த‌மிழீழ‌ காவ‌ல்துறையில் இருந்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ருது உண்மையா

அல்ல‌து வ‌த‌ந்தியா

உண்மை நில‌வ‌ர‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் சொல்லுங்கோ🤔...............................

doctor.jpg

நடேசன் ஐயாவுடன் வேலை செய்தவர் என அவரே சொல்லி இருக்கிறார், பல மாதங்கள் முன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.