Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்..

வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக  உழைத்தவர்கள் பலர். 

எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது.

பிகு நான் JVP க்கு ஆதரவு கிடையாது.

பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம்.

ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம்.

வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.

  • Replies 909
  • Views 78.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

நிச்சயமாக JVP இன் முகம் மெல்ல வெளி வரும்..

வட கிழக்கை விட சிங்கள பிரதேசங்களில் JVP க்காக நீண்டகாலமாக  உழைத்தவர்கள் பலர். 

எப்படி எமது போராட்டம் வடக்கிலிருந்து வந்த போராளிகளால் கிழக்கில் கட்டமைக்கப்பட்ட/ உருவாக்கப்பட்டதோ அதே போல் தெற்கில் இருந்து வந்தவர்களால் JVP வடக்கு மற்றும் கிழக்கில் கட்டமைக்கப்பட்டது.

பிகு நான் JVP க்கு ஆதரவு கிடையாது.

சிறிலங்கன்ஸ் என்ற தேசிய உணர்வை உருவாக்க பல அரசுகள் ,பிராந்திய வல்லரசுகள் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் நீண்ட நாளாக செய்த ஒன்றின் பலனை இப்பொழுது ஜெ.வி.பி அனுபவிக்கின்றது..பல்கலைகழக அனுமதியில் நாட்டின் சகல மாவட்டத்தினரையும் பரவலாக்குதல்...அரசாங்க வேலைகளில் சிங்கள அதிகாரிகளை தமிழ் பகுதியில் நியமித்தல் ...குடியேற்றங்கள் சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைத்துவிடல்...சில சிங்கள கிராமங்களை தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் உருவாக்குதல்....

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பயப்படாதேங்கோ உங்களை அனுர பிரிகேட்டில் சேர்க்கமாட்டோம்.

ஆனால் ஆட்சி என்பதும் நாடு என்பதும் கட்சி அரசியலையும் தாண்டிய விடயம்.

வடக்கு-கிழக்கு தமிழர், முஸ்லிம்களுக்கு அவர்கள் பிரதேசத்தில் உரிமையை பகிர வேண்டும், அல்லது பெயரளவிலாவது மத்திய அரசில் இடம் கொடுக்க வேண்டும்.

...அந்த விடயத்தில் இடதுசாரிகள் தெளிவாக இருக்கின்றனர்...தேசிய இனங்களுக்கு உரிமை கொடுக்க தேவையில்லை என்பது அவர்களது கொள்கை....

வலதுசாரிகள் சும்மா பெயருக்காவது சொல்வார்கள் தேசிய இனங்களுக்கு  பிரச்சனை இருக்கு என்று அது போக சில அமைச்சுகளை கொடுப்பார்கள் ...குறைந்த பச்சம் இந்து கலாச்சார அமைச்சர் என்ற அமைச்சு கிடைக்கும்...

1970 களில் இருந்த அமைச்சரவை தான் இப்பொழுது உள்ளது சிறு மாற்றங்களுடன் ..

  • கருத்துக்கள உறவுகள்

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

இல்லை பொய்யானது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை.

2 hours ago, putthan said:

...அந்த விடயத்தில் இடதுசாரிகள் தெளிவாக இருக்கின்றனர்...தேசிய இனங்களுக்கு உரிமை கொடுக்க தேவையில்லை என்பது அவர்களது கொள்கை....

வலதுசாரிகள் சும்மா பெயருக்காவது சொல்வார்கள் தேசிய இனங்களுக்கு  பிரச்சனை இருக்கு என்று அது போக சில அமைச்சுகளை கொடுப்பார்கள் ...குறைந்த பச்சம் இந்து கலாச்சார அமைச்சர் என்ற அமைச்சு கிடைக்கும்...

1970 களில் இருந்த அமைச்சரவை தான் இப்பொழுது உள்ளது சிறு மாற்றங்களுடன் ..

100%
கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று….

அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று…..

அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்….

நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அனுமதி அளிப்பார். ஆனால் புலிகளை நேரடியாக நினைவு கூறும் பாடல், படங்கள், பதாதைகள், அவர்கள் கொள்கைகளை பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜயவீரவின் மகனை வாழ விட்டவர்கள், ஏன் பாலச்சந்திரன் வரை போய் அழித்தார்கள் என்பதில் இருக்கிறது இதற்கான விடை.

100%
கூடவே எமக்கு கண்ணுக்கு புலப்படும் ஜேவிபி ஒன்று….

அதை கட்டுப்படுத்தும் நிஜ தலைமை வேறு ஒன்று…..

அனுர…டில்வின் எல்லாம் பொம்மைகள்தான்….

நிஜ அதிகார மையம், கடும் வர்க்கவாத, இனவாத போக்குடையது.

ஆம் அத்துடன் முக்கியமாக தனிநாடு மற்றும் உரிமை சம்பந்தப்பட்ட பாடல்கள் மற்றும் கோசங்கள் மற்றும் பேச்சுக்கள் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். அதனை மீறுவோர் மீது எம் அடுத்த தலைமுறையே எதிர்ப்பை காட்டும். சுபம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

வடக்கு கிழக்கில் இருந்து எவரும் இல்லை …..ப்..பூ…ஹா…ஹா….

அந்த இருவருமே…தெற்கில் பிறந்து வளர்ந்த பெயரளவு தமிழரே….

வச்சு செய்தல் ஆரம்பம்🤣

கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... 
எனக்குத் தெரிந்து  ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில்  அனுர கட்சியில் இணைக்கப்  பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில்  முயற்சிக்கப் பட்டது.  நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.)

தேர்தலுக்காக   இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃
நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂

அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள  முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை  தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். 
நீங்கள்  இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃

"போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪
கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂
கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... 
எனக்குத் தெரிந்து  ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில்  அனுர கட்சியில் இணைக்கப்  படடவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில்  முயற்சிக்கப் பட்டது.  நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.)

தேர்தலுக்காக   இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃
நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂

அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள  முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை  தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். 
நீங்கள்  இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃

"போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪
கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂
கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣

அண்ணை,

அமைச்சரவை என்பது ஜேவிபி மத்திய குழு அல்ல. கட்சி சினியாரிட்டி பார்த்து பதவி கொடுக்க.

அது நாட்டில் உள்ள சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட ஒரு கூட்டு ஆட்சி பொறிமுறை (கூட்டாட்சி அல்ல).

நீங்கள் பின் கதவு என கேவலமாக எழுதும் தேசிய பட்டியல் இதற்காகவே அமைக்கப்பட்டது.

அதாவது ஒரு நிபுணத்துவம், அல்லது பிரதிநிதிதுவம் பாராளுமன்றில் அல்லது அமைச்சரவையில் தேவைப்படும் போது, தேர்தல் மூலம் வெல்லாத ஒருவரை உள்ளே கொண்டு வரும் முறை.

இங்கே வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிரதிநிதிதுவம் வழங்க நிபுணர்கள் இருவரை தேசியபட்டியல் மூலம் உள்ளே ஈர்த்திருக்கலாம். அல்லது சிறிபவாநந்தராஜாவுக்கு ஒன்றை கொடுத்திருக்கலாம்.

நாம் எல்லோரும் லங்கா மாதாவின் பிள்ளைகள், எல்லோருக்கும் நாட்டின் அரசாட்சியில் பங்கு உண்டு என மனதார நம்பும் கட்டி அப்படித்தான் செய்திருக்கும்.

ஆனால் ஜேவிபி அப்படி செய்யவில்லை. 

இவர்களில் லால்காந்த, ஹிரிணி, ஹேரத் தவிர மீதி அனைவரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்தான்.

சிங்கள அமைச்சர்கள் சிலரும், ஜேவிபி  உறுப்பினரே அல்ல. ஹிரிணி கூட என் பி பி உறுப்பினர் மட்டுமே. ஜேவிபி அல்ல.

இங்கே அமைச்சரான பலரை விட MH ஆக இருந்த சிறிபவாநந்தராஜா நிர்வாக அனுபவசாலி.

ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை - தமிழர் என்பதால்.

ஆனால் அவர் போய் வெட்கம் இல்லாமல் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

இது முகநூலில் இருந்தது. உண்மை / பொய் உறுதிப்படுத்த முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

இது முகநூலில் இருந்தது. உண்மை / பொய் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் சம்பளம் பெற்றுக் கொள்ளாது தமது கடமைகளை முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளனர் என கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

https://yarl.com/forum3/topic/297133-அநுர-அரசில்-சம்பளமின்றி-பணியாற்றவுள்ள-அமைச்சர்கள்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்/

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

👍   தகவலுக்கு நன்றி ஏராளன்.   animiertes-gefuehl-smilies-bild-0001

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, tea maker and text

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்  "மொமென்ட்".  😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣.

என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை................. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣.

என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை................. 

ஜேவிபி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார் அதனால தான் இணைத்தேன் அண்ணை. இருந்தாலும் சந்தேகம் வரும் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

அண்ணை,

அமைச்சரவை என்பது ஜேவிபி மத்திய குழு அல்ல. கட்சி சினியாரிட்டி பார்த்து பதவி கொடுக்க.

அது நாட்டில் உள்ள சகல தரப்பினரும் உள்ளடக்கப்பட்ட ஒரு கூட்டு ஆட்சி பொறிமுறை (கூட்டாட்சி அல்ல).

நீங்கள் பின் கதவு என கேவலமாக எழுதும் தேசிய பட்டியல் இதற்காகவே அமைக்கப்பட்டது.

அதாவது ஒரு நிபுணத்துவம், அல்லது பிரதிநிதிதுவம் பாராளுமன்றில் அல்லது அமைச்சரவையில் தேவைப்படும் போது, தேர்தல் மூலம் வெல்லாத ஒருவரை உள்ளே கொண்டு வரும் முறை.

இங்கே வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பிரதிநிதிதுவம் வழங்க நிபுணர்கள் இருவரை தேசியபட்டியல் மூலம் உள்ளே ஈர்த்திருக்கலாம். அல்லது சிறிபவாநந்தராஜாவுக்கு ஒன்றை கொடுத்திருக்கலாம்.

நாம் எல்லோரும் லங்கா மாதாவின் பிள்ளைகள், எல்லோருக்கும் நாட்டின் அரசாட்சியில் பங்கு உண்டு என மனதார நம்பும் கட்டி அப்படித்தான் செய்திருக்கும்.

ஆனால் ஜேவிபி அப்படி செய்யவில்லை. 

இவர்களில் லால்காந்த, ஹிரிணி, ஹேரத் தவிர மீதி அனைவரும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்தான்.

சிங்கள அமைச்சர்கள் சிலரும், ஜேவிபி  உறுப்பினரே அல்ல. ஹிரிணி கூட என் பி பி உறுப்பினர் மட்டுமே. ஜேவிபி அல்ல.

இங்கே அமைச்சரான பலரை விட MH ஆக இருந்த சிறிபவாநந்தராஜா நிர்வாக அனுபவசாலி.

ஆனால் வாய்ப்பு கொடுக்கவில்லை - தமிழர் என்பதால்.

ஆனால் அவர் போய் வெட்கம் இல்லாமல் பிக்குவின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்🤣

கோசான், சிறீபவானந்தராஜா கட்சியால் சிலகாரணங்களுக்காக கண்டனத்துக்குள்ளானவர் என்று தகவல்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣.

என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை................. 

உந்த‌ கோதாரிபிடிச்ச‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை 2009ஓட‌ பார்ப்ப‌த‌ நிறுத்தி விட்டேன் குருநாதா ஹா ஹா.....................

இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌ம் மூல‌ம் உண்மைய‌ க‌ண்டு அறிய‌லாம்

எங்க‌டைய‌ல் ஏன் உதுக்கு நேர‌த்தை ஒதுக்குவான் என‌ க‌ட‌ந்து செல்வ‌து...................

ரிவிட்ட‌ரில் யூடுப்பில் உண்மைக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும்....................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

AKD மாவீரர்நாள் நினைவேந்தல்களுக்கு அனுமதியளித்ததாக Whatsapp இல்  பரவிவரும் அறிக்கை உண்மையானதா? 

May be an image of 1 person and text

பொய்ச் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

ஜேவிபி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார் அதனால தான் இணைத்தேன் அண்ணை. இருந்தாலும் சந்தேகம் வரும் தான்!

👍............

சம்பளத்தை வாங்குங்கோ.............. ஆனால் 16 சமையல்காரர்களும் கூடவே வேண்டும் என்று அடம்பிடிக்காதேங்கோ என்று தான் மக்கள் சொல்லியிருக்கின்றார்கள்...........🤣

ஜெயலலிதா தனக்கு மாதம் ஒரு ரூபா சம்பளம் போதும் என்று ஒரு தடவை சொல்லிச் செய்திருந்தார். பின்னர் அவரும் சசிகலாவும் நின்ற அந்த ஒரு படத்தில் போட்டிருந்த நகைகளே பல கிலோ கணக்காக இருந்தது.......... 

இப்படி எத்தனையோ பேர்கள் வந்து போய்விட்டனர். எவரும் தியாகிகளாக மாற வேண்டும் என்றில்லை.... சாதாரணமாக இருந்து விட்டுப் போனாலே போதும்.......... 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text

பொய்ச் செய்தி.

இந்த‌ போலி த‌க‌வ‌லை யார் ப‌ர‌ப்பி இருக்க‌ கூடும் என்று நினைக்கிறீங்க‌ள் த‌மிழ்சிறி அண்ணா........................

மாவீர‌ர் நாள் ப‌ற்றி அனுரா இன்னும் வெளிப்ப‌டையாக‌ ஒரு க‌ருத்தும் கூர‌ வில்லை

இனி வ‌ரும் மாவீர‌ நாள் சில‌ த‌ட‌ங்க‌ல்க‌ள் வ‌ர‌லாம் சில‌து வ‌ராம‌லும் இருக்க‌லாம்

இன்னும் சில‌ நாட்க‌ள் இருக்கு தானே அர‌சாங்க‌த்திட‌ம் இருந்து அறிக்கை வ‌ரும் என‌ நினைக்கிறேன்

அட‌க்குமுறைய‌ ஏவா மாட்டார் என‌ நினைக்கிறேன் ஏவீனால் என்ன‌ செய்வ‌தென்று தெரியாது அண்ணா.............................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

என்னுடைய சந்தேகம்... பக்கத்து சகுனி நாடு.
போனவருடம் மாவீரர் நாட்களை முன்... துவாரகா உயிருடன் உள்ளார்கள் என்றவர்கள், இப்போ... இப்படி ஒன்றை வெளியிட்டு... தமிழ் / சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

என்னுடைய சந்தேகம்... பக்கத்து சகுனி நாடு.
போனவருடம் மாவீரர் நாட்களை முன்... துவாரகா உயிருடன் உள்ளார்கள் என்றவர்கள், இப்போ... இப்படி ஒன்றை வெளியிட்டு... தமிழ் / சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள் போலுள்ளது.

அந்த‌ நாச‌ம் அறுத்த‌ நாடாய் தான் இருக்கும்😡.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

கோசான், சிறீபவானந்தராஜா கட்சியால் சிலகாரணங்களுக்காக கண்டனத்துக்குள்ளானவர் என்று தகவல்

அப்படியா? பகிர கூடிய காரணமா?

அப்போ ஏன் வேட்பாளாராக நிறுத்தி எம் தலையில் கட்டினார்கள்?

39 minutes ago, ரசோதரன் said:

👍............

சம்பளத்தை வாங்குங்கோ.............. ஆனால் 16 சமையல்காரர்களும் கூடவே வேண்டும் என்று அடம்பிடிக்காதேங்கோ என்று தான் மக்கள் சொல்லியிருக்கின்றார்கள்...........🤣

ஜெயலலிதா தனக்கு மாதம் ஒரு ரூபா சம்பளம் போதும் என்று ஒரு தடவை சொல்லிச் செய்திருந்தார். பின்னர் அவரும் சசிகலாவும் நின்ற அந்த ஒரு படத்தில் போட்டிருந்த நகைகளே பல கிலோ கணக்காக இருந்தது.......... 

இப்படி எத்தனையோ பேர்கள் வந்து போய்விட்டனர். எவரும் தியாகிகளாக மாற வேண்டும் என்றில்லை.... சாதாரணமாக இருந்து விட்டுப் போனாலே போதும்.......... 

எப்பவுமே ஓவர் பில்டப் கொடுப்பவர்கள் கடைசியில் கள்ளர் என்றே ஆகும்.

உலகில் அரசியல்வாதிகள் அதிக சம்பளம் எடுக்கும் ஊர் சிங்கப்பூர்.

அப்போதான் கை நீட்டமாட்டார்கள் என்பதால்.

இவர்கள் ஒண்டும் சுத்தம் இல்லை - அனுரவுக்கு என கொடுத்த மாடிவெல வீட்டில், எம்பி இல்லாத லால்காந்த பலவருடம் வாழ்ந்தார்.

இதுவும் ஊழல்தான்.

இதுவரை இந்த சின்ன ஊழலுக்குத்தான் வாய்ப்பு எனவே அதை செய்தனர். 

இனித்தான் உண்மையில் கைசுத்தமா என தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ‌ர் நாட்டை க‌ட்டி எழுப்புவார்
ஊழ‌ல் இல்லாத‌ நாடாய் மாற்றுவார் என‌ நினைத்து தான் ம‌க்க‌ள் அதிக‌ அள‌விலான‌ ஓட்டு அனுரா க‌ட்சிக்கு போட்டார்க‌ள்

அனுராவின் பிர‌ச்சார‌மும் அப்ப‌டி தான் இருந்த‌து

அங்க‌ங்க‌ எம்ம‌வ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் மாவீர‌ நாள் செய்த‌து போல் செய்ய‌ விட‌னும்
 காவ‌ல்துறைய‌ வைச்சு அராஜ‌க‌ம் செய்தால் இவ‌ர் மீதான‌ ந‌ம்பிக்கை அத்தோடு போய் விடும்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... 

நான் சிரித்தது …..ஒரு வடக்கு-கிழக்கு அமைச்சர் கூட இல்லை என்பதற்கு.

மக்கள் மாற்றம் விரும்பி முதல் முறையாக ஒரு சிங்கள கட்சிக்கு வடக்கின் இரு தேர்தல் மாவட்டங்களையும் அள்ளி கொடுத்தமைக்கு  ஒரு சமிஞ்ஞை கூடவா காட்ட முடியாது?

கீழே உள்ள செய்தித்திரியில் அனுர ஆதரவு தமிழர், முஸ்லிம்களின் கதறலை - கொமெண்ட்ஸ்சில் போய் வாசியுங்கள்.

அவர்களின் கதறலை -woke, political correctness என சொல்லி அடித்து மூடுகிறார்கள் இனவாதிகள்.

https://www.dailymirror.lk/top-story/President-retains-Defence-Finance-and-Digital-Economy-Ministries/155-296203#

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.