Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?  

44 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, satan said:

நல்லாட்சி காலத்தில் வரைந்த சட்ட வரைபை நிறைவேற்றுவேன், என்று அனுரா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

👆👇

சாத்ஸ் ப்ரோ,

அனுர நிறைவேற்றுவேன் என சொன்ன அதே தீர்வைத்தான், நீங்கள் தேசியத்துக்கு ஆப்பு தரும் ஏக்க ராஜ்ய தீர்வு என்கிறீர்கள்.

அப்போ ஏன் அனுரவுக்கு காவடி எடுக்கிறீர்கள்?

அனுரவுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பம் என்பதன் மூலம் - நீங்களும் சுமந்திரன் போல் “தேசியத்துக்கு ஆப்பு” தரும் தீர்வை அல்லவா ஆதரிக்கிறீர்கள்.

43 minutes ago, satan said:

அப்போ, அந்த தீர்வில் என்ன இருக்கும்? "ஏக்கய ராஜ்ய" அதற்காக தான் போயே ஆகவேண்டும். முழுதாக தேசியத்துக்கு ஆப்பு.

 

1 hour ago, satan said:

கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள்

மறுபடியும் “வச்சு” என்ற சொல் மிஸ்ஸிங்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும்.

மல்வத்து, அஸ்கிரிய, ரமாண, அமரபுர மஹாநாயக்கர்களின் மனங்கள் துண்டு துண்டாக உடைந்து விட்டதாம்…அதை ஒட்டுவதற்கு பெருமளவு பெவிகோல் தேவை என இலங்கை அரசு அறிவித்துள்ளதாம்.

எம்மை கொத்து கொத்தாக சகல பார்வையாளர்களையும் வெளியேற்றி விட்டு கொன்றொழித்த போது, வதை முகாம்களில் இட்டு வாட்டிய போது, பால்மா ஈறாக தடை செய்து கொன்றபோது, உடையாத மனங்கள் 5 எம்பி சீட்டில் துண்டு துண்டாக சிதறி விட்டதாம்.

சேர் பொன் இராமநாதன் இன்னும் வாழ்கிறார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நியாயம் said:

மதம், சாதி, பிரதேசம் இவற்றை விட்டு வெளியில் வந்து அதேசமயம் இன, மொழி பற்றினை மட்டும்

கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்?

ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/11/2024 at 20:00, goshan_che said:

1. அரசியலமைப்பு என பார்த்தால் - தமிழரசு எம்பிகள் மிச்சம் எல்லாம் புஸ்வாணம்.  எனவே பயத்தில் அவர்களே சும்மின் கையை பிடித்து இழுப்பார்கள்.

2. சுமனாவது வீட்டில் இருப்பதாவது.

இனி ஒரு தேசியபட்டியல் நாடகம் அரங்கேறும். கிட்டதட்ட பொம்பிளை அழைப்பு போல.

கோஷான் சொல்றான்…சிவிகே செய்றார்🤣.

👆👇

12 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

👆👇

சாத்ஸ் ப்ரோ,

அனுர நிறைவேற்றுவேன் என சொன்ன அதே தீர்வைத்தான், நீங்கள் தேசியத்துக்கு ஆப்பு தரும் ஏக்க ராஜ்ய தீர்வு என்கிறீர்கள்.

அப்போ ஏன் அனுரவுக்கு காவடி எடுக்கிறீர்கள்?

அனுரவுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பம் என்பதன் மூலம் - நீங்களும் சுமந்திரன் போல் “தேசியத்துக்கு ஆப்பு” தரும் தீர்வை அல்லவா ஆதரிக்கிறீர்கள்.

 

மறுபடியும் “வச்சு” என்ற சொல் மிஸ்ஸிங்.

சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு?

7 minutes ago, goshan_che said:

எம்மை கொத்து கொத்தாக சகல பார்வையாளர்களையும் வெளியேற்றி விட்டு கொன்றொழித்த போது, வதை முகாம்களில் இட்டு வாட்டிய போது, பால்மா ஈறாக தடை செய்து கொன்றபோது,

ம்.... எந்தச்சிங்களமும் இதைத்தான் செய்ய துடித்தது, சர்வதேசமும் கூட. ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். இந்த அனுர குழுவும் நம்மைப்போன்று பல துன்பங்களை அனுபவித்தவர்கள். சாரை தின்னி ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு. அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள். ஆனால் ஒன்று, மக்கள் விழிப்படைந்து ஊழல்களை கையிலெடுத்ததும் ஊழல்வாதிகளை விரட்டியதும் அனுராவுக்கு பிளஸ் பொயிண்ட். இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரிகளை மாற்றி, கொள்கைகள் சட்டங்களை மாற்றி அவர்களது மனநிலையை மாற்றி, அதன் பின்னே இந்த கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும். அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம்.

12 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்று காலை சி.வி.கே.சிவஞானம் சொல்லுறார் சுமந்திரன் சட்ட புலமைக்காக பாரளமன்றம் போ வேணுமாம்.சகத்தி செய்திகள

சிவஞானம் அங்கும் பாடி இங்கும் பாடி, விக்கினேஸ்வரன் காலத்திலிருந்து சுமந்திரனின் விசிறி.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, satan said:

சுமந்திரன் நினைக்கிறார், அத்தோடுதான் அனுர நிற்பார், ஆகவே தனது பங்கு முக்கியமானது அதனால் தனக்கு பிரதம மந்திரி பதவி அழைப்பு வருமென்று தேர்தலுக்கு முன்னதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அனுரா தரப்போ  சுமந்திரனுக்கு பதவி இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டது. ஆகவே இவரின் தேவை அங்கு அற்றது. அதை விட அனுராவின் இறுதி தேர்தலின் பின்னான முடிவு, இதுவரை காலமும் வரைந்த எல்லா வரைபுகளையும் ஆராய்ந்து, ஆலோசித்து, எல்லாமக்களுக்கும் சம உரிமை வழங்கக்கூடிய வரைபை அமுல்படுத்துவோம் என்பதே. இதில் சுமந்திரன் பங்கில்லாமலே நடக்கும். அதை விட சுமந்திரன் வரைபு நிறைவேற்றப்பட்டு அமுலுக்காக காத்திருப்பதாக பலதடவை சுமந்திரன் கூறியிருக்கிறார். பின்னர் ஏன் இவர் பாராளுமன்றம் போகவேண்டும்? வேறு தொழிலில்லையா இவருக்கு?

நான் சுமன் பற்றி எதுவும் கேட்கவில்லை.

 என் கேள்வியை மீள வாசிக்கவும்.

நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள்.

பின்னர் அதே பந்தியில் அந்த நல்லாட்ட்சி கால வரைபு “தமிழ் தேசியத்துக்கு ஆப்பு” என்று உங்கள் கருத்தை சொல்கிறீர்கள். 

நான் உங்களிடம் கேட்பது, 

அனுர தமிழருக்கு ஆப்பு அடிக்கும் தீர்வை அமல்படுத்துவேன் என சொல்லும் போது, நீங்கள் ஏன் அனுரவை ஆதரிக்கிறீர்கள் என்பதே.

11 minutes ago, satan said:

ஆனால் எங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களை விட்டு எங்கோ சென்று பதுங்கி விட்டார்கள். பின்னர் வந்து நாம் ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை, இங்கு நடந்து இனப்பிரச்சனையேயல்ல என்று அறிக்கை விட்டார்களே, அதை என்ன சொல்வது?

அவர்கள் துரோக அரசியல் செய்தார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே.

அதுக்காக நாம் ஏன் ஒரு கொள்கையாக தமிழ் தேசியத்தை, திம்புவை கைவிட வேண்டும்?

நீங்கள் டிசுவோடு கோவித்து கொண்டு, சுத்தம் செய்யாமல் விடும் ஆளா?

13 minutes ago, satan said:

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள்

யார் 25% யாழ் வாக்காளர்.

அங்கே மொத்தமாக கூட்டினால் மிகுதி 60% க்கு மேல் தமிழ் தேசிய கொள்கைக்கு விழுந்ததை மறைத்து, வாக்களிப்பு வீதமே 55% என்பதையும் மறைத்து ….25% இன் அடிப்படையில் ஏன் எல்லோரையும் அனுரவின் பஸ்சில் ஏத்தி விட அந்தர படுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிழக்கு மாகாணத்தில் வாய்ப்பு 4 சீட்டுக்கே ஆனால் 5 தமிழ் தேசிய கட்சிகளுக்கு.

இவர்களை எந்த பஸ்சில் ஏத்தி விட உத்தேசம்?

18 minutes ago, satan said:

அப்படி இல்லாமல் கொள்கையோடு நின்ற விக்கிரமபாகு கருணாரத்ன, தன் கொள்கையை அரசியலுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்ததால் கொள்கையாளனாய் இறந்து விட்டா.ர் கொஞ்சம் இறங்கி அவர்களின் போக்கில் போய் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பின் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

எமக்காக கடைசிவரை போராடிய ஒரு மனிதனை பற்றி இப்படி எழுத உறுத்தவில்லை.

அன்றும் கூட வர்க அடிப்படையில் கூட ஒன்று சேராமல் அவரை இனவாதம் பேசி காயடித்த கட்சி ஜேவிபி. அதில் மிக முக்கிய புள்ளி அனுர, அப்போதும்.

21 minutes ago, satan said:

இன்று, அனுர சொல்வதை யாரும் எதிர்க்க திராணியற்று இருக்கிறார்கள்

அப்ப தமிழ் ஈழம் கொடுப்போம் என சொல்ல சொல்லி பார்க்கலாமே….

சரி அது கொஞ்சம் ஓவர்…

13 + கூட வேண்டாம்….

காணி அதிகாரத்தை முழுமையாக மாகாண சபைக்கு கொடுக்கிறோம் என சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்?

அனுர எதிர் க்கும் படி எதையும் சொல்லமாட்டார், அவர் பல்கலைகழகத்தில் பெளத்த சங்க தலைவர். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, satan said:

இப்போ உடனடியாக இராணுவத்தில் அனுர கைவைக்கப்போவதில்லை.

அவர்தான் தைரியமான ஆளேச்சே…யாருக்கும் எதிர்க்க திராணியில்லையே…

எல்லாரையும் வேண்டாம் ஒரு ஒற்றை சிப்பாய் மீது, வெறும் token gesture ஆக போர்கால அத்து மீறலுக்கு ஒரு வழக்கை போடட்டுமே..

ஒரே ஒரு அடி மட்ட சிப்பாய் மீது மட்டும்.

28 minutes ago, satan said:

அழிக்க ஒரு நிமிடம் போதும், ஆனால் அதை கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் வேண்டும். இது எழுபத்தைந்து வருடங்கள் புரையோடிப்போன விருட்ஷம்.

அதே போல் 75 வருடம் கட்டி எழுப்பிய இனவாதத்தை 2/3, நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஒரு நொடியில் அழிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவு தந்திரமாக சிங்களவர்களுடன் சேர்ந்து ஏமாற்றுகிறார்.

இதுக்கே டென்சன் ஆனா எப்படி…

அனுர ப்ரோ தரப்போவது இதுக்கும் மேலே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, goshan_che said:

 

அனுர ப்ரோ தரப்போவது இதுக்கும் மேலே இருக்கும்.

இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, goshan_che said:

நீங்கள் ஒரு இடத்தில் “நல்லாட்ட்சி கால வரைபை நிறைவேற்றுவேன்” என அனுர சொன்னார் என்கிறீர்கள்.

நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில்,  "அனுரா,தங்களால் நல்லாட்சி  2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்)  வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?

 

37 minutes ago, goshan_che said:

அவர்தான் தைரியமான ஆளேச்சே…யாருக்கும் எதிர்க்க திராணியில்லையே…

நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள்  தேவைப்படும்  மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும்.

54 minutes ago, goshan_che said:

எமக்காக கடைசிவரை போராடிய ஒரு மனிதனை பற்றி இப்படி எழுத உறுத்தவில்லை.

இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட  கொள்கையில்  உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு?  

56 minutes ago, goshan_che said:

அதே போல் 75 வருடம் கட்டி எழுப்பிய இனவாதத்தை 2/3, நிறைவேற்று அதிகாரத்தை வைத்து ஒரு நொடியில் அழிக்கலாமே?

எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும்,  அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

யார் 25% யாழ் வாக்காளர்.

அவர் நாட்டில் இதுவரை காலமும் யாரும் பெறாத பெரும்பான்மையோடு வெற்றியீட்டியிருக்கிறார். அவர்க்கு பாரிய பொறுப்புண்டு இதற்குப்பின்னால்.

1 hour ago, goshan_che said:

காணி அதிகாரத்தை முழுமையாக மாகாண சபைக்கு கொடுக்கிறோம் என சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்?

முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்? அவர் இன்னும் பாராளுமன்றமே அமைக்கவில்லை, எதற்காக இத்தனை அவசரம்? ஜனாதிபதி தேர்தலில் கூட, வடக்கு மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை, இறுதி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றியதன் காரணத்தை விளங்க முடியும். மட்டக்களப்பில் கூட சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் மேல் சட்ட நடவடிக்கை கட்டாயம் எனும் செய்தி பரவியதால் மக்கள் அவர்களை தவிர்த்திருக்கலாம். அது தமிழசுகட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது அவ்வளவே. அதோடு கிழக்கின் விடி வெள்ளிகளால்  அனுராவிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற முடியாது என்பதும் மக்கள் புரிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, satan said:

அனுரா,தங்களால் நல்லாட்சி  2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்)  வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக."

அனுர   அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம்,....அவர்கள் இவரை அழைக்கவில்லையே !!

மாறாக இவர்களும் சேர்ந்து தான் நாட்டை நாசமாக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.  அது உண்மையும்கூட 

இவரின் திறமைக்கு சாட்சி தமிழரசு கட்சியின் இன்றைய நிலமை.  இவர் ஓய்வெடுத்தாலே சிறப்புமிக்கது மக்களின் தீர்ப்பு அது தான்   

இவரால் இலங்கை பாராளுமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது  இந்த தமிழ் கட்சிகளின்  ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள்   பாராளுமன்றத்தில் பேசலாம்  அதை அனுர அரசாங்கம் ஒரு பொருட்டாக. எடுக்க மாட்டார்கள்   அவரகளிடம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையவே உண்டு”   குறிப்பாக  மாத்தளையில்.  சரோஜா   என்ற தமிழ் பெண்ணை நியமித்து.  1 42 000 விருப்பு வாக்குகள் போட்டு வெற்றி பெற செய்துள்ளனர் இந்த வாக்குகள் சிங்களவருடைய வாக்குகள். ஆகும்   இது சிறந்த மாற்றம்  வரவேற்கிறேன் பாரட்டுகிறேன். மகிழ்ச்சி யுமளிக்கிறது.  

இங்கே யாழ்ப்பாணத்தில். அனுர  கட்சி   மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றதற்கு   ஏன் கவலைப்படவேண்டும்?? அடுத்த தேர்தலில் மூன்றை விட. கூடுதல் இடங்கள் பெற முயற்ச்சிப்பார்கள். தமிழ் மக்களின் தேவைகளை கவனிப்பின் மூலம்   அவர்களிடம் கதைக்க கேட்க   அனுர கட்சியில் பத்துக்கு. மேற்ப்பட்ட. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு”   இந்த சுமத்திரன். தேவையில்லை    ஒரு கட்சியை  வளர்த்து நல்ல நிலையில் பலமாக.  மக்களின் பூரண ஆதரவுடன் இருந்த கட்சியை   வழிநடத்தும் ஆற்றல் இல்லாதவர். எப்படி முஸ்லிம்கள். மலையக தமிழ் மக்கள்   வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்  எற்ககூடிய. ஒரு தீர்வை வரைவார். ??? 

அமுல் செய்வார்.?? முடியாது ஒருபோதும் முடியாது   

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kandiah57 said:

எப்படி முஸ்லிம்கள். மலையக தமிழ் மக்கள்   வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்  எற்ககூடிய. ஒரு தீர்வை வரைவார். ??? 

ஒவ்வொரு மேடையிலும் போய் நின்று, தமிழ் இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை, அது உங்களுக்கே நடந்தது, அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று சத்தியம் செய்வார். மலையகத்தமிழரிடம் போய் வேறொன்று சொல்லி ஒன்றோடொன்று கொழுவி எதிரிகளாக்கி விட்டு, நான் சிங்களத்தோடேயே இருப்பேன், அது எனது அதிஷ்ட்டம் என்பார் கோமாளி. எல்லாம் சுபமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும்- தர்மலிங்கம் சித்தார்த்தன் !

By Shana
 
JOTHI_TOP_01.jpeg

 

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தேசியப் பட்டியல் ஆசனமொன்றும் கிடைத்துள்ளது.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டவராக உள்ளார். அவருடன் இணைந்து நானும் செயற்பட்டிருந்தேன்.

அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் அவரது வகிபாகம் முக்கியமானது, கடந்த அரசியலமைப்புக்கான உருவாக்கச் செயற்பாடுகளில் ‘ஏக்கிய ராஜ்ய’ ஒருமித்தநாடு என்ற விவகாரத்தினை தவிர ஏனைய விடயங்களில் அவர் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தார்.

ஆகவே புதிய அரசியலமைப்பு விடயத்தினை கையாள்வதற்கு பொருத்தமானவராக அவரை நான் பார்கின்றேன். அந்த வகையில் அவருக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்புரிமை வழங்குவது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

எனினும் அவர்களின் கட்சியே எதிர்காலத்தினை மையப்படுத்தி அந்த தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்றார்.
 

https://www.battinews.com/2024/11/blog-post_253.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  பஞ்சாயத்து முடிஞ்சுது.  

தமிழ் தேசியத்தை காப்பாற்ற புலம் பெயர் தேசிக்காய்கள் புதிய வில்லனை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஐயகோ தாய புலம்பெயர் பலாக்காய்கள் இனி என்ன செய்வார்கள்…

உண்ணிகள் இனி கழன்று கொள்ளவார்கள்.

தோற்கடிக்கப்பட்ட சும்மின் தலைமையில் தமிழ் தேசியத்தை காப்பாற்ற போரட வேண்டியது தான்.

Edited by MEERA
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, satan said:

கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?

ஏன் என்றால் அந்த ஏக்க ராஜ்ஜிய வரைபை கூட தர ரணிலோ கடந்த பாராளுமன்றோ தரத்தயாரில்லை.

ஏக்க ராஜ்ய வரைபு காணாது என குதிக்கும் உங்களுக்கு அனுர அதை கூட தரமாட்டார் என்பது ஏன் விளங்குது இல்லை?

8 minutes ago, island said:

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  பஞ்சாயத்து முடிஞ்சுது.  

தமிழ் தேசியத்தை காப்பாற்ற புலம் பெயர் தேசிக்காய்கள் புதிய வில்லனை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம். 

மிக நல்ல முடிவு….

யாராவது சுமனை வெளிநாட்டுக்கு எடுத்து விடுங்கப்பா…

கட்சியும், இனமும் தப்பட்டும்.

5 hours ago, satan said:

நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள்  தேவைப்படும்  மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும்.

இதெல்லாம் உங்கள் கற்பனை இப்படி மாற்றங்கள் எதையும் செய்யும் எண்ணம் அனுரவிற்கோ கட்சிக்கோ துளியும் இல்லை.

அவர் இராணுவத்தை எதுவும் செய்யப்போவதே இல்லை. 

நீங்களும் அடுத்த 5 வருடம் ஆக்க ஆற என கதைவிட்டு காலத்தை ஓட்டுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

 

யாராவது சுமனை வெளிநாட்டுக்கு எடுத்து விடுங்கப்பா…

கட்சியும், இனமும் தப்பட்டும்.

சும்மா இருங்க கோசான்…

இங்க வந்து நிம்மதியாய் இருக்கிற எங்களுக்கும் ஆப்பு வைப்பார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, satan said:

முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்?

ஏன் என்றால் அவர்கள் எதுவும் தரமாட்டார்கள் என முழு தமிழ் இனத்துக்கும் தெரிந்திருந்தது.

ஆனால் இவரைத்தான் உங்கள் போன்றோர் ஏதோ தரப்போறார் என விம்பம் எழுப்பி மக்களையும் இவருக்கு போட வைத்துள்ளீர்கள்.

1948 இல் இருந்து இதுவரை வந்த அத்தனை ஜனாதிபதிகளிலும், திம்பு அடிப்படையான உரிமை கோரலுக்கு மிகவும் ஆபத்தானவர் அனுர.

3 minutes ago, MEERA said:

சும்மா இருங்க கோசான்…

இங்க வந்து நிம்மதியாய் இருக்கிற எங்களுக்கும் ஆப்பு வைப்பார்.

ஏதாவது ஒரு கோயில் கொமிட்டியில சேர்த்து விடுவம் - வச்சு செய்யட்டும்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, satan said:

இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட  கொள்கையில்  உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு? 

தவறு… அவர் இனவாதமற்ற கொள்கையில் உறுதியாக நிண்டது அதனால் சாதிக்க முடியாமல் போனது அவரின் பிழை என்ற தொனியில் எழுதியது.

பிழை அவரது அல்ல, அவரை. அவரின் கொள்கைகளை சிங்கள மக்களுக்கு “சிங்கள கொட்டி” என பிழையாக எடுத்து போன ஜேவிபி உட்பட இனவாத கட்சிகளும் அதன் அனுர போன்ற தலைவர்களிலும்தான் பிழை.

ஒரு காலத்தில் வீரவன்ச ஜேவிபி பேச்சாளராக கக்கிய அத்தனை இனவாத விசத்தையும் ஆமோதித்து அருகில் இருந்தவர்தான் உங்கள் ஆபத்தாண்டவர் அனுர.

புலிகள் கேட்ட இடைக்கால நிர்வாக அலகு உட்பட சகலதையும் மூர்க்கமாக எதிர்த்தவர் - பேச்சு வார்த்தைகளில் ஒரு இம்மி தன்னும் சிங்கள தரப்பு விட்டு கொடாமல் பார்த்து கொண்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, goshan_che said:

யாராவது சுமனை வெளிநாட்டுக்கு எடுத்து விடுங்கப்பா…

கட்சியும், இனமும் தப்பட்டும்.

ஜேர்மனி,  பிரான்ஸ்... சுமந்திரனுக்கு விசா கொடுக்காது.
அத்துடன் சுமனுக்கு.... ஜேர்மன், பிரான்ஸ் பாசையும் தெரியாது.
அவர் இங்கிருந்து கஸ்ரப் படுவதை விட...
இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியாக்காரர் சுமந்திரனை தத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கோ. 😂

அப்பாடா.... ஒரு தொல்லை விட்டது. 😃
இன்று ஏழரை கழிந்த நாள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, MEERA said:

ஐயகோ தாய புலம்பெயர் பலாக்காய்கள் இனி என்ன செய்வார்கள்…

உண்ணிகள் இனி கழன்று கொள்ளவார்கள்.

தோற்கடிக்கப்பட்ட சும்மின் தலைமையில் தமிழ் தேசியத்தை காப்பாற்ற போரட வேண்டியது தான்.

தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமா?  இரண்டு தலைமுறையை பலியாடுகள் ஆக்கி தின்று கொழுத்த தமிழ் தேசியத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்தவர்களே அதனை அம்போ என்று  போட்டு  உடைத்துவிட்டு போன பின் எந்த தமிழ் கட்சியாலும் தலைவர்களாலும் அதை காப்பாற்ற முடியாது.  அதை அப்படியே போகிற போக்கில்   காலாவதியாக  விட்டு தமிழ் மக்கள்  நிம்மதியாக வாழட்டும். 

புலம் பெயர் தேசிக்காய்கள் தேசியம் என்று மக்களை முறுக்கேற்றி  வைத்து உழைத்தது போதும். உழைத்த பணத்தை வைத்து அவர்களும் நிம்மதியாக வாழட்டும்.  




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.