Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

November 17, 2024  02:45 pm

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!

தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (17)  காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றன.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற் குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=196026

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தாலியக்கட்டு" இந்தத் சுமந்திரன் தேர்தல் திரி எங்க கிடக்கெண்று எனக்குத் தெரியேல்ல ........ காந்தப்புவிடம் விட்டதை இங்க பிடித்திட்டன் போலக் கிடக்கு . .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உடையார் கைத்தடியை அனுப்பியது போல் சும் தனது அல்லக்கையை அனுப்பியுள்ளார்.

தோல்லியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை என்ற சும்மின் வாதம் இன்று புஸ்வானம் ஆகியது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, MEERA said:

உடையார் கைத்தடியை அனுப்பியது போல் சும் தனது அல்லக்கையை அனுப்பியுள்ளார்.

தோல்லியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை என்ற சும்மின் வாதம் இன்று புஸ்வானம் ஆகியது.

சுமந்திரன்... கடைசி நிமிடம் மட்டும், பின் கதவால் பாராளுமன்றம் போக  போராடிப் பார்த்தார்.
ஸ்ரீதரன் கடுமையாக நின்று அதனை தடுத்து நிறுத்தியதை அடுத்து,
சுமந்திரனின் ஆள்.. சத்தியலிங்கம் தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

சுமந்திரனை பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததே பெரிய விடயம். animiertes-gefuehl-smilies-bild-0127
அப்பாடா... இப்ப தான், நிம்மதி. animiertes-gefuehl-smilies-bild-0234  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, MEERA said:

தோல்லியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை

“அது வேற வாய். இது ….வாய் “ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனை பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததே பெரிய விடயம். animiertes-gefuehl-smilies-bild-0127
அப்பாடா... இப்ப தான், நிம்மதி.

சிலவேளை என்பிபி இவரை சேர்த்துக் கொள்ளுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

சிலவேளை என்பிபி இவரை சேர்த்துக் கொள்ளுமோ?

யாராவது... வேலியில்   போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

யாராவது... வேலியில்   போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂

சின்ன கதிர்காமர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சத்தியலிங்கம் குறித்த தமிழரசு கட்சியின் தீர்மானம்: மன்னாரில் கடும் எதிர்ப்பு

தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க பெற்ற தேசியபட்டியல் ஆசனத்தை ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சத்தியலிங்கத்திற்கு வழங்குவதாக கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு மன்னார் உட்பட பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ப. சத்தியலிங்கம் 4033 வாக்குகளையே பெற்று தோல்வியுற்றுள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அவருக்கே தேசிய பட்டியலை வழங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிவித்திருந்தார். 

சுமந்திரனின் பின்புலத்தில் சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்குவதற்கான செயல்பாடு இடம்பெற்றுள்ள நிலையில் இம்முறை மக்கள் எதிர்பார்த்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 
 

முன்னதாகவே, மாகாண சபை ஆட்சி காலத்தில் சுகாதாரதுறையில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதற்காக அமைச்சு பதவியை இழந்த சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

சத்தியலிங்கம் குறித்த தமிழரசு கட்சியின் தீர்மானம்: மன்னாரில் கடும் எதிர்ப்பு | Mannar People Against Sathyalingam On Social Media

குறிப்பாக சத்தியலிங்கம் இம்முறை தேர்தலில் வெறும் 4033 வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்தார். அவரை விட மன்னார் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்ட இளம் சட்டத்தரணியான செல்வராஜ் டினேசன் தனது முதலாவது தேர்தலில் 6518 வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்களின் நிலைப்பாடு

ஆனால், தகுதிவாய்ந்த அவருக்கு தேசியபட்டியல் ஆசனம் வழங்காது ஊழல் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை சேர்த்து பல கோடிகள் செலவு செய்து தனது பிள்ளைகளை ரஷ்யாவில் மருத்துவ கற்கைக்காக அனுப்பி வைத்துள்ள சத்தியலிங்கத்திற்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வன்னியில் வாக்குகள் குறைந்துள்ள நிலையில் அடுத்த தேர்தலில் மொத்தமாக வாக்குகளை இல்லாமல் ஆக்குவதற்கு சத்தியலிங்கம் போன்ற ஊழல்வாதிகளுக்கு சுமந்திரனின் உதவியுடன் தேசிய பட்டியல் வழங்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், சத்தியலிங்கத்திற்கு தேசியபட்டியல் வழங்கும் செயற்பாட்டுக்கு தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மாத்திரம் இல்லாமல் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உட்பட பலர் எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
https://tamilwin.com/article/mannar-people-against-sathyalingam-on-social-media-1731853320



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரு பெண் உறுப்பினருக்கு போனால் நன்று.   இவர்களின் குதறலை அடுத்த தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும்.
    • புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர். இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது.   அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில், நிலமட்டத்தோடு, சீமெந்தாலான குழாய் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது; இருபக்கத்திலும் முறையே நான்கு போடப்பட்டது.  சில மீற்றர் தூரத்தில் சிங்களப் படையினர் காவலரண் அடித்து இருப்பான். இந்த ஒரு கல்லை - இவ்விடம் கண்டக்கற்கள் நிறைந்த பகுதியாகையால் - நாங்கள் நிலத்திலிருந்து வெட்டும்போது கொந்தாலி ஓசை கேட்டால் தலைக்கு மேலால் பகைவரின் சன்னம் கூவிச் செல்லும். எங்கள் மிகுதி சாப்பாட்டுக்கு காகம் வந்தாலும் இதே கதிதான்.  பதுங்ககழிகள் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் பாடசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டன.   இந்த பதுங்ககழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள். ஒருமுறை யாழ்பாணத்திலிருந்த பரவலறியான பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள். மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள். அவர்களில் பிழையில்லை; அவர்கள் களமுனை வாழ்விற்கு பழக்கப்படாதவர்கள் என்பதோடு எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்களாவர்.  அங்கு காவலிற்கு நின்ற போராளிகள் மாணவர்களை சமாளித்து பார்த்தார்கள். அவர்களால் இயலவில்லை. எனவே பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் அறிவிக்கப்பட்டது. அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படுத்த முற்படும்போது சொன்னார், "தம்பியவை எங்கட போராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பாடு வந்திடும் பொறுங்கோ!". அவர் கூறியதைக் கேட்ட மாணவர்கள் சொன்னார்கள், "உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள்." என்று. பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார், "அது காலைச் சாப்பாடு" என்று. மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை! 1991ஆரம்ப பகுதியில் பதுங்ககழியின் பின்பகுதியால் வந்து சிங்களப் படைத்துறை கைப்பறியது. நேரடியாக அடித்து பிடிக்க முடியாது பிற்பகுதியால் சுற்றிவளைத்தபோது பதுங்ககழியில் இருந்த போராளிகளை பின்வாங்கச்சொல்லி பிரிகேடியர் பானு அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் பின்வாங்கினர்.   தகவல் வழங்குநர்: "நிக்சன்"  (இவர் பதிந்திருந்த யூரியூப் கருத்தை, அவரது முதல் தர அனுபவமாகையால், இங்கே வரலாற்று ஆவணக் காப்பிற்காக பதிவாக மாற்றி இடுகிறேன்).  தொகுப்பு & வெளியீடு: நன்னிச் சோழன்        
    • தூக்கம் ரொம்ப நல்லது . ......விலங்குகள் உயிர் வாழ்வதற்கு . ........!  😂
    • கஸ்தூரியும் கணவரும் பிரிந்து 20 வருடம் இருக்கும் என நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை மட்டும் என நினைவு. பிற்சேர்க்கை - ஒரு ஆண் குழந்தையுமாம். அதை ஏன் மறைத்து வளர்க்க வேண்டும். நுணலும் தன்வாயால் கெடும்.   இருக்கலாம்.  எழுத்து நடை பாரதிதாசன் போலவே உள்ளது. @Kavi arunasalam உங்களுக்கு தெரியுமா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.