Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Kapithan said:

இது அவரவர் தனிப்பட்ட விடயம் அதில் மூக்கை நுளைப்பது அழகல்ல.

அவரவர் தனிப்பட்ட விடயங்களை பொது வெளி ஊடகங்களில்பகிரப்படாது.

அப்படி பகிரும் போது குப்பன் சுப்பன் போன்றோர் வந்து  கொட்டன் இல்லாமலே கும்மியடிப்பர் என்பது  சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தே இருக்கும். 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

அவரவர் தனிப்பட்ட விடயங்களை பொது வெளி ஊடகங்களில்பகிரப்படாது.

அப்படி பகிரும் போது குப்பன் சுப்பன் போன்றோர் வந்து  கொட்டன் இல்லாமலே கும்மியடிப்பர் என்பது  சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தே இருக்கும். 😎

அவர்கள் public figures எல்லோ,.. தங்கள் privacy ஐ மதிக்கும்படி கேட்டிருக்கிறார்கள். 

😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இருவரும் மீண்டும் இணைந்து விட்டார்கள்   கேக்கும்.   வெட்டி கொண்டாட்டியாதாக. அறிகிறேன்    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்   🙏🙏🙏.   

குறிப்பு,...இனி எல்லோரும் பிரிந்து இணைய போகுறார்கள்.  🤣.  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து: முதல்முறையாக மவுனத்தை உடைத்த மோகினி தே

Kumaresan MNov 23, 2024 10:40AM
mohini-dey.jpg

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு அவரின்  மனைவி சாயிரா பானு பிரிவதாக சமீபத்தில் அறிவித்தார். சாயிரா பானுவின் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே அவரது இசைக்குழுவில் கிட்டாரிஸ்ட்டாக இருந்த மோகினி தே தனது கணவரைப் பிரிவதாக அறிவிக்க, பல கேள்விகள் எழுந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை பிரிய இவர்தான் காரணமாக இருப்பாரோ? என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சாயிரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, மோகினி தே கணவரை பிரிவதற்கும் ரஹ்மான் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுத்திருந்தார்.

இதற்கிடையே, ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோரும் வதந்தி பரப்புவோருக்கு  கண்டனம் தெரிவித்தனர். அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது தந்தையின் கண்ணியத்தையும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Screenshot-2024-11-23-103956-768x571.jpg

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மோகினி தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பேட்டி எடுக்க பல மீடியாக்கள் போட்டி போடுகின்றன. ஆனால், அதற்கெல்லாம் என்ன காரணம் என எனக்கு நன்றாகவே தெரியும். நான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை.

என்னை நேர்காணல் எடுப்பதற்காக அனுகியவர்களிடம்  முடியாது எனக் கூறிவிட்டேன். வதந்திகளுக்கு பதில் அளித்துக் கொண்டு அதன் பின்னால் ஓடி கொண்டிருக்க முடியாது. எனது, சக்தியையும் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. எனது தனியுரிமையும் சுதந்திரத்தையும் மதிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://minnambalam.com/cinema/mohini-dey-breaks-silence-on-her-divorce-rumours-of-ar-rahman/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

விசுகர்!
ஒரு சில தொழில்கள் குடும்ப வாழ்க்கைக்கு உதவாதவை. அந்த வேலையில் மண்டையை மூழ்கடித்தே ஆக வேண்டும்.நேரகாலம் இருக்காது.விடுமுறை காலங்கள் இருக்காது. சனி ஞாயிறு போன்ற ஓய்வு நாட்கள் இவர்களுக்கு இல்லை. 

வாலிப வயதில் எல்லாம் சரியாக  அமைந்தது போல் இருக்கும். வயது போகப்போக.... 

உண்மை அண்ணா. ஆனால் அது அவர்களின் கையில் தான் உள்ளது. பணம் புகழ் என்று ஓடி திரிந்து தேவைக்கு அதிகமாக சொத்தையும் புகழையும் சேர்த்த பின் நமக்கு கிடைத்த இந்த உலகில் நாம் வாழப் போகும் சில வருடங்களில் நம் வாழ்க்கையை நமக்காக வாழ்ந்தோமா என்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து......????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிந்தது ஏன்? : சாய்ரா பானு விளக்கம்!

Why did she break up with A.R. Rahman?: Saira Banu explains!

ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவித்ததை தொடர்ந்து, அவரது மனைவி சாய்ரா பானு ஆடியோ மூலம் இன்று (நவம்பர் 24) விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக உள்ளவர் இந்திய திரையுலகில் கோலோச்சுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

சமீபகாலமாக பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், அதில் ஏ.ஆர். ரகுமானும் இணைந்தார். தனது 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.  இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இதனையடுத்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பி எச்சரித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர். ரகுமான் குறித்து சாய்ரா பானு வெளியிட்டுள்ள இன்று ஆடியோ வெளியிட்டுள்ளார்.

உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர்!

அதில், “நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சிகிச்சைக்காக மும்பை வந்துள்ளேன்!

கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

ரகுமான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்!

என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்” இவ்வாறு சாய்ரா பானு அதில் பேசியுள்ளார்.

https://minnambalam.com/cinema/why-did-she-break-up-with-a-r-rahman-saira-banu-explains/

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

இவர்கள் சொல்லும் காரணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையை பேசுங்கள். அல்லது அறிக்கை விட்டு மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்றை பேசுவதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இங்கு ஒரு கருத்தை பதிந்தேன். காணாமல் போய்விட்டது. கருத்தை தூக்கியவருக்கு பேஸ் கிட்டார் பிடிக்காதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை.

சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்?  அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்?

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா

சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார்.

உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன,

நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம்.

அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை.

எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ  துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும்.

 பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே  இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று  எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு  உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல,

ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி  எதுவேணும் என்றாலும் சொல்லலாம்  எனும் பாணியில் இப்போது  சுமத்தப்படும் குற்றங்கள்  மிகவும் கண்ணியக்குறைவானது. 

 இவர்கள் செய்தி  உலகறிஞ்ச விஷயமானாலும்  இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது  ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, valavan said:

எனக்கும் இதே கேள்வி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இங்கே கருத்து எழுதும் பலர் depression வராதவர்கள் அல்லது depression வந்தவர்களோடு டீல் பண்ணாதவர்கள் என நினைக்கிறேன்.

சாய்ரா பானு கணவர், பிள்ளைகள் அவரவர் வாழ்க்கையில் பிசியாக இருக்க, தனிமை மூச்சு முட்டி, அதுவே மன அளுத்தமாகி, ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்பதே வரும் தகவல்களை வைத்து நான் ஊகிப்பது.

இப்போ தன் முடிவு ரஹ்மானின் பெயரை கெடுக்க அவரின் எதிர்பாளர்களால் பயன்படுவது கண்டு தானாகவோ அல்லது பிள்ளைகள் வேண்டியோ இந்த ஓடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த மன அளுத்தமே அவர் கூறும் மும்பை சிகிச்சைக்கு காரணமாக இருக்கலாம்.

எல்லாம் ஊகமே.

ஆனால்….

அவரே ரஹ்மான் மனிதருள் மாணிக்கம்,  அவர் மீது அவதூறு சொல்ல வேண்டாம் என சொன்னபின்,  நாம் இதில் மினகெடுவது தேவையில்லாதது.

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள், அவர்கள் படித்து முடிந்தது என்றால் பேரப்பிள்ளைகளை கொஞ்சுகள்🤣.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இவர்கள் சொல்லும் காரணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையை பேசுங்கள். அல்லது அறிக்கை விட்டு மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்றை பேசுவதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. 

அவர்கள் எங்கே உங்களை முட்டாள் ஆக்கினார்கள் அண்ணை?

முதலாவது அறிக்கையே மிக தெளிவாக “பரஸ்பர காதல் இருந்தும் இடைவெளி விழுந்து விட்டது”. என்பதை மட்டுமே சொன்னது.

நீங்களாகவே கண்ட கண்ட ஊத்தை கதைகளை எல்லாம் நம்பி விட்டு, இப்போ அது பொய் என்றவுடன் ஏன் அவர்கள் மேல் பாய்கிறீர்கள்.

அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே பிரிவுக்கு ஒரு காரணத்தை மட்டுமே சொன்னார்கள்.

சில வேளைகளில் மண/ன முறிவுக்கு, இடைவெளி மட்டுமே போதும்.

மேலதிகமாக கசமுசா, அஜால் குஜால் காரணங்கள் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

—————

தலைப்பிற்கு அறவே சம்பந்தம் இல்லாதது…ஆனால் சூழமைவு ஒத்துள்ளதால் இங்கே இதை எழுதுகிறேன்.

என் பாசமலர் @பாலபத்ர ஓணாண்டி விஜி அண்ணி விடயம் பரபாக ஓடிய காலத்தில், நானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துள்ளேன், எனக்கும் மகன்கள் உளர், எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது என எழுதினார்.

அப்போதே அவரிடம் கூறினேன், உறவு சேர்தல் போலவே உறவு பிரிதலும் இயல்பானது…ஆனால் நாம் உறவில் இருக்கும் சமயம் ஒரு பெண்ணை நடத்தும் விதத்தில் தங்கி இருக்கிறது, பிரிவில் அவள் நம்மை நடத்தும் முறை என்று.

இந்த ஆடியோ நான் சொன்னதுக்கு ஒரு நல்ல உதாரணம்.

பிரிவின் பின் அவர்கள் வெளியிடும் ஆடியோ, விஜி அண்ணி டைப் ஆடியோவா, சாய்ரா டைப் ஆடியோவா என்பது நாம் அவர்களை உறவில், பிரிவில் நடத்திய விதத்தில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள், அவர்கள் படித்து முடிந்தது என்றால் பேரப்பிள்ளைகளை கொஞ்சுகள்🤣.

இது எனக்குத்தான்🤣 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, விசுகு said:

இது எனக்குத்தான்🤣 

சாச்சா…🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, விசுகு said:

இவர்கள் சொல்லும் காரணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையை பேசுங்கள். அல்லது அறிக்கை விட்டு மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்றை பேசுவதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. 

தங்கள் நாலு அறைக்குள் இருக்கும் பிரச்சனையை சர்வதேச பொது ஊடகங்களில் பகிர்வது. அதன் பின் நிலமை மோசமாக அவர் தங்கப்பவுண் இவர் தங்கப்பவுண் என உளறித்தள்ளுவது. 😂

ஒரு மனிதனுக்கு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடு வந்து விட்டால் அது போதையை விட மோசமானது. அந்த போதைக்கு அது அதிக தனிமையை தேடும்.

இசைஞானி இளையராயாவின் குடும்பவாழ்க்கையை அவரின் பிள்ளைகளை கேட்டால் அவர்களே காறித்துப்புவார்கள். 😀

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, valavan said:

பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே  இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று  எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு  உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல,

பணம்,புகழ்,செல்வாக்கு இந்த மூன்றும் சாதாரண மனித வாழ்க்கைக்கு உதவாதவை.அந்த மூன்றும் குடும்ப வாழ்வை நிம்மதியாக வைத்திருக்காது. கடுமையான நோய்களை தீர்க்காது.

கஞ்சியை குடித்தாலும் நிம்மதியான வாழ்க்கை பொன்னானது.

தம்பி வளவன்! நான் எழுதிய எழுத்துக்கள் உங்களுக்கானது அல்ல. பொதுவாக எழுதினேன்.🙏

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, goshan_che said:

அவர்கள் எங்கே உங்களை முட்டாள் ஆக்கினார்கள் அண்ணை?

முதலாவது அறிக்கையே மிக தெளிவாக “பரஸ்பர காதல் இருந்தும் இடைவெளி விழுந்து விட்டது”. என்பதை மட்டுமே சொன்னது.

நீங்களாகவே கண்ட கண்ட ஊத்தை கதைகளை எல்லாம் நம்பி விட்டு, இப்போ அது பொய் என்றவுடன் ஏன் அவர்கள் மேல் பாய்கிறீர்கள்.

அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே பிரிவுக்கு ஒரு காரணத்தை மட்டுமே சொன்னார்கள்.

சில வேளைகளில் மண/ன முறிவுக்கு, இடைவெளி மட்டுமே போதும்.

மேலதிகமாக கசமுசா, அஜால் குஜால் காரணங்கள் தேவையில்லை.

என்ன சகோ

பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்??

யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.?

இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. 

தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே?

1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும். 

Edited by விசுகு
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

தலைப்பிற்கு அறவே சம்பந்தம் இல்லாதது…ஆனால் சூழமைவு ஒத்துள்ளதால் இங்கே இதை எழுதுகிறேன்.

என் பாசமலர் @பாலபத்ர ஓணாண்டி விஜி அண்ணி விடயம் பரபாக ஓடிய காலத்தில், நானும் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பிரிந்துள்ளேன், எனக்கும் மகன்கள் உளர், எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது என எழுதினார்.

அப்போதே அவரிடம் கூறினேன், உறவு சேர்தல் போலவே உறவு பிரிதலும் இயல்பானது…ஆனால் நாம் உறவில் இருக்கும் சமயம் ஒரு பெண்ணை நடத்தும் விதத்தில் தங்கி இருக்கிறது, பிரிவில் அவள் நம்மை நடத்தும் முறை என்று.

இந்த ஆடியோ நான் சொன்னதுக்கு ஒரு நல்ல உதாரணம்.

பிரிவின் பின் அவர்கள் வெளியிடும் ஆடியோ, விஜி அண்ணி டைப் ஆடியோவா, சாய்ரா டைப் ஆடியோவா என்பது நாம் அவர்களை உறவில், பிரிவில் நடத்திய விதத்தில் உள்ளது.

எந்த திரி,சம்பவங்கள்,வேறுபட்ட நிலமைகள் என்றாலும் குறிப்பிட்ட வக்கிரங்களுக்கு என்றும் பஞ்சமில்லை.

காவித்திரிய ஒரேயொரு வாளிதான் உள்ளது போல் தெரிகின்றது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

தங்கள் நாலு அறைக்குள் இருக்கும் பிரச்சனையை சர்வதேச பொது ஊடகங்களில் பகிர்வது. அதன் பின் நிலமை மோசமாக அவர் தங்கப்பவுண் இவர் தங்கப்பவுண் என உளறித்தள்ளுவது. 😂

ஒரு மனிதனுக்கு செய்யும் தொழிலில் அதிக ஈடுபாடு வந்து விட்டால் அது போதையை விட மோசமானது. அந்த போதைக்கு அது அதிக தனிமையை தேடும்.

இசைஞானி இளையராயாவின் குடும்பவாழ்க்கையை அவரின் பிள்ளைகளை கேட்டால் அவர்களே காறித்துப்புவார்கள். 😀

6 hours ago, விசுகு said:

என்ன சகோ

பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்??

யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.?

இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. 

தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே?

1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும். 

சாய்ரா அறிக்கை விட்டதும் பின் ஆடியோ விட்டதும் தவிர்த்திருக்க வேண்டியவையே.

நான் இதை அவர் மன அளுத்தத்தில் இருக்கிறார் என்ற கோணத்தில் அணுகுவதால் - அவரின் செயலை கடந்து போக முடியுமாய் இருக்கிறது.

அதே போல் தொழிலில் அதிகம் ஈடுபடுவோர் குடும்பத்தை புறக்கணிப்பதும் உண்மையே. விஞ்ஞானி நியூட்டன் போன்றோர் கூட இப்படித்தான் என முன்னர் படித்திருக்கிறோம்.

ஆனால் எமக்கு அதிக விடயங்கள் தெரியாது. உதாரணமாக 1999 காலத்தில் ரஹ்மான் இலண்டனுக்கு வசிக்க வந்தபோது அவருக்கு வாகனம் ஓட்டியவரின் பேச்சு படி, அவர் தன் முழு குடும்பத்தையும் இங்கே கூட்டி வந்து வாழ்ந்தார் என்றும் பிள்ளைகள் விடயத்தில் அக்கறைகோடு இருந்தார் என்றும் அறிகிறேன் (அப்போ கேள்விப்பட்டது).

அதே போல் ஏனைய மணமுறிவுகள் போல் இதில் பாலியலோ, பணமோ அதிக தாக்கம் செலுத்தியதாக நான் நினைக்கவில்லை.

கெளதம புத்தரின் மனைவிக்கு ஏற்பட்ட நிலைதான் சாராவுக்கு என. நினைக்கிறேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

எந்த திரி,சம்பவங்கள்,வேறுபட்ட நிலமைகள் என்றாலும் குறிப்பிட்ட வக்கிரங்களுக்கு என்றும் பஞ்சமில்லை.

காவித்திரிய ஒரேயொரு வாளிதான் உள்ளது போல் தெரிகின்றது. :cool:

எழுதும் போதே இந்த எதிர்வினையை எதிர்பார்தே எழுதினேன்.

அதனால்தான் நெடிய பீடிகையோடு அந்த கருத்தை எழுதினேன்.

சீமானை இந்த திரியில்தான் அடிக்க வேண்டும் என்பதில்லை எனக்கு. அதற்கு போதிய அளவு யாழில் திரிகள் உள்ளன. இது இந்த ஒப்பீட்டை தெளிவுபடுத்த தகுந்த இடமாக தெரிந்தது.

இல்லை இது வாளி காவல்தான் என நீங்கள் நினைத்தால் - அதையிட்டு அதிகம் அலட்டி கொள்ளாமல் அப்படியே விட்டு விடலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

தொழிலில் அதிகம் ஈடுபடுவோர் குடும்பத்தை புறக்கணிப்பதும் உண்மையே. விஞ்ஞானி நியூட்டன் போன்றோர் கூட இப்படித்தான் என முன்னர் படித்திருக்கிறோம்.

அதெண்டால் உண்மைதான்....
யாழ்களத்துக்குள்ள வந்து சும்மா அலட்டுற எனக்கே அந்தநேரம் தனிமை தேவைப்படுது எண்டால் உவ்வளவு மியூசிக்க அடிச்சு தள்ளுற ரகுமானுக்கு....? 😂 🤣

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர்.  We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report https://m.jpost.com/middle-east/article-833382
    • புதிய விடியல் யாழ்ப்பாணம் reodotsSpn1uf91acm3a21h3ic28hh9t1lc300th6 8cch81787i63ah3fi0  ·  வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் . விமர்சன ரீதியான பார்வை...... ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு வழக்கினை தெரிவித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான குண இயல்பு ஆளுமை அனைவரது பார்வையையும் பெற்றது .மாவட்ட ஒருங்இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது. இடத்தில் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னார் இவரைப்போல பல கேள்விகளைக் கேட்கின்ற பொழுது தான் அரசாங்க நிறுவனங்களை சரியாக நெறிப்படுத்த முடியும் எனவே இவ்வாறானவர் தேவை எனவும் கருத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஊழல் தொடர்பான முறைகேடுகள், முறைப்படுகள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆளுநருக்கு தெரியும் என்பதால் பல்வேறு பட்ட விடயங்களை உற்று நோக்கிய வண்ணமே வட மாகாண ஆளுநர் காணப்பட்டார். இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பல்வேறுபட்ட விடயங்களில் திறம்பட செயல்பட கூடியவர் எனவே எதிர்வரும் காலங்களில் அவரது நிர்வாக ரீதியான பல திறமையான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம். அத்துடன் சில இடங்களில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்புடைய செயற்பாடுகளை நேரடியாக வைத்தியர்Mp Ramanathan Archchuna விமர்சித்தார். அங்கிருந்தவர்கள் பலர் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பான ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் அவரை அவதானித்தவாறும் காணப்பட்டனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் நிறுவன ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறுகின்ற இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் Mp அர்ச்சுனா என்று உணர்த்திவிட்டார். அதன் செயற்பாடுகள் அபிவிருத்தி சார்ந்ததாக இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு திணைக்களங்களையும் அதன் செயற்பாடுகளையும் சரியான விதத்தில் இயங்குகின்றதா??? என மேற்பார்வை செய்வது கேள்வி கேட்கின்ற உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை இன்று உணர்த்தினார். இவ்வளவு காலமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கும் இன்று NPP அரசாங்கம் மற்றும் வைத்தியர் Mp அர்ச்சுனா கூட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணமாகும் . இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தினார். எனவே அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் ஒரு வரைவை கொண்டு வருவதற்கு வைத்தியர்Mp அர்ச்சுனா முன்மொழிய அதனை சந்திரசேகர் தலைமையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் என்ன விடயம் சிறப்பானது என்றால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதே அதேபோல் அனைத்து விடயங்களும் இவ்வாறு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எமது பிரதிநிதித்து முன்னேற்ற முடியும் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த விடயம் இவ்வளவு காலமும் ஏன் இடம்பெறவில்லை??? உண்மையிலேயே NPP அரசாங்கம் ஒரு சிறந்த அரசாங்கம் என்பதை இந்த இடத்தில் பொது மக்களாகிய நாங்கள் பார்க்கின்றோம். அதேபோல் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கை மருத்துவ ரீதியாக இடம்பெற்ற பிழைகள் ஊழலை உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும் என் இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படுவதற்கு முதலாவது மணி ஆக இதனை அடிக்க வேண்டும் . அத்துடன் ஊழல்வாதிகள் வைத்திய துறையில் இருக்கின்ற ஊழல்வாதிகள் களையப்பட வேண்டும் உண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய மாபியா என்று சொல்லப்படுகின்றது இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் இதற்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்து கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் தற்பொழுது கடமையில் இருக்கின்ற பனிப்பாளர் உரிய தகைமைகள் இன்றி வந்தவர் என்பதையும் சபையில் சுட்டிக்காட்டிய Archchuna Ramanathan என் போஸ்ட் என்று சொல்லப்படுகிற முறையில் மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். இதனைத் தெளிவு படுத்தியதன் மூலம் இது ஒரு அரசியல் சார்ந்த நியமனம் என்பதையும் சபையில் ஒரு வகையில் மறைமுகமாக தெரியப்படுத்தினார். உண்மையில் ஒவ்வொரு பொதுமகனும் செலுத்துகின்ற வரி பணத்தின் அதன் பெறுமதியை உணர்ந்தால் போல வைத்திய அர்ச்சுனா அனைத்து திணைக்கள ரீதியான கணக்கு வழக்குகளையும் மிகவும் துல்லியமாக சிறிய நேரங்களில் பார்த்து செலவழித்த பணம் எவ்வளவு செலவழிக்காத பணமும் எவ்வளவு என விழாவாரியாக கேள்விகளை கேட்டார். ஒரு கட்டத்தில் பத்து நாட்களுக்கு இவ்வளவு மில்லியன் பணத்தை நீங்கள் செலவழிப்பீர்களா எனவும் கேட்டார். அந்த இடத்தில் தான் அனைவரது எதிர்ப்பும் கிளம்பியது என்று கூறலாம் உண்மையில் அரச அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை சரியாக செலவழிக்க வேண்டும் அவசரப்பட்டு திட்டங்களை நிறைவேற்றி வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் வருடம் முடிகின்றது என்று திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றாமல் பூரணமாக செவ்வனே அந்த வேலை இடம்பெறாது என்ற உண்மையாயின் சபையில் போட்டு உடைத்தார் . பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக செலவழித்து 100 நிறைவைக் காட்டுகின்றார்கள் என்பதை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் உணர்த்தினார் . இங்கே அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் செயல்பாடுகள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் பலர் டக்ளஸ் DCC தலைவராக இருந்த காலத்தில் இவ்வாறு கதைத்தால் எம்பி அர்ச்சனாவை பிடித்து வெளியில் விட்டிருப்பார் என்று முன்பு இருந்த அரசாங்க காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லாமை தொடர்பாக கதைத்துக் கொண்டனர். இருந்த பொழுதிலும் அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான முறையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சரியான விதத்தில் அதன் செயற்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதன் மூலமாக பிழையான விதத்தில் வீண் செலவு செய்யாமல் பணத்தினை உரிய பெறுமதியோடு காத்திரமான செயற்பாடுகளை செய்வதை விரும்புவதாக காணப்பட்டார் என்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது . பல ஊழல்வாதிகளை தூக்கி வாரி போட்டது. சிறந்த ஒரு முன்மாதிரியான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக கருதலாம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகஸ்தர்கள் அரசு அதிகாரிகள் பலர் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க போகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது ..... உண்மையில் வேலை செய்யாமல் பணத்தினை பெறுவது இதன் மூலம் தான் நமது நாடு அகல பாதாளத்திற்கு சென்றது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இனி வரும் காலங்களில் எதுவும் சரிவராது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது . இப்படிக்கு ஏழை தமிழ் மகன் நீலன். முடிந்தவரை இதனை பகிருங்கள் இதன் மூலம் பல ஊழல்வாதிவாதிகளுக்கு இன்றைய செய்தியானது இறுதி மணியாக ஒலிக்கட்டும்.
    • Mr. Minus, போராட்ட காலப்பகுதியில்  இடம்பெற்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அதுபோல புலம்பெயர்ஸ் டமில் வியாபாரிகளின் சுருட்டல்களையும் கண்டும் காணாது  கடந்து போக வேண்டும் என்கிறீர்களா,.?  😏  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.