Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும்,  அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர்  அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்படும்.

அத்துடன் அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார். அவரது நோக்கம் என்னவென்பது தெரியவில்லை.

எனவே, அவரது சமூக ஊடக கணக்குகள் ஆராயப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” இவ்வாறு சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1409743

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Dr. அர்ச்சுனா விற்கு சபாநாயகரால் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இது.

Dr. ன் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவோருக்கு விழுந்துள்ள ஊமைக் குத்து. 

யாழ் களத்தில் Dr. ஐ தீவிர தமிழ்த்தேசியவாதியாகக் காட்டி,   அவரை பப்பாவில் ஏற்றுகிற வேலையைச் செய்து அவரைப் பிரச்சனையில் மாட்ட விரும்புகிற ஆட்களுக்கு  இது இன்னொரு  வாய்ப்பு. 

😏

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபாநாயகர் நடவடிக்கை எடுத்தது நல்லதே. தட்டி கேட்ட ஆளில்லை என்றால் தம்பி சண்டப்பிரண்டம் என்பது போல நடவடிக்கை எடுக்காது விட்டால் தொடர்ந்து இவ்வாறான குறளி வித்தைகளை காட்டிக்கொண்டே இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறார் அர்ச்சுனா😂. கஜேந்திரன் ரீம் போல 6 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, கையொப்பமிட்டு, பதவியேற்று விட்டு, வெளியே வந்து "இரு தேசம்" என்று தமிழ் பகுதிகளில் மட்டும் முழங்காமல் வெள்ளந்தியாக இருக்க முயன்றிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Justin said:

பிழைக்கத் தெரியாத ஆளாக இருக்கிறார் அர்ச்சுனா😂. கஜேந்திரன் ரீம் போல 6 ஆம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, கையொப்பமிட்டு, பதவியேற்று விட்டு, வெளியே வந்து "இரு தேசம்" என்று தமிழ் பகுதிகளில் மட்டும் முழங்காமல் வெள்ளந்தியாக இருக்க முயன்றிருக்கிறார்!

அவரை உசுப்பேற்றி பண உதவி செய்து தாயக அரசியலை  றிமூட் கொன்றோல் மூலம் கட்டுப்படுத்த முயன்ற ஒரு கூட்டத்துக்கு பீலா காட்ட முயன்று அதில் கொஞ்சம் ஓவரா பில்டப் காட்ட முற்பட்டதன் விளைவு. தேர்தல் செலவுக்கு பண உதவி செய் அந்த கூட்டத்தின. றீமூட் கொன்றோலுக்கும் இவர்  கட்டுப்படுவதில்லையாம். பாவம் அந்த புலம்  பெயர் பினாமிகள்.  கஷரப்பட்டு திருடிய பணத்தை தப்பான இடத்தில் இன்வெஸ்ட்  பண்ணீரினம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kapithan said:

Dr. அர்ச்சுனா விற்கு சபாநாயகரால் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இது.

Dr. ன் செயல்களுக்கு சப்பைக்கட்டு கட்டுவோருக்கு விழுந்துள்ள ஊமைக் குத்து. 

யாழ் களத்தில் Dr. ஐ தீவிர தமிழ்த்தேசியவாதியாகக் காட்டி,   அவரை பப்பாவில் ஏற்றுகிற வேலையைச் செய்து அவரைப் பிரச்சனையில் மாட்ட விரும்புகிற ஆட்களுக்கு  இது இன்னொரு  வாய்ப்பு. 

😏

 

ஊமை குத்தும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கம் சிரிச்சுக்கொண்டு பேஸ்புக்கில் பொன்மொழி, நேரலை லைப் என்று தூள் கிளப்பிக்கொண்டு உள்ளது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, நியாயம் said:

 

ஊமை குத்தும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கம் சிரிச்சுக்கொண்டு பேஸ்புக்கில் பொன்மொழி, நேரலை லைப் என்று தூள் கிளப்பிக்கொண்டு உள்ளது. 

இருந்து பாருங்கள்,? இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று இப்போதே எதிர்வு கூறுகிறேன். 

26 minutes ago, நியாயம் said:

 

ஊமை குத்தும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சிங்கம் சிரிச்சுக்கொண்டு பேஸ்புக்கில் பொன்மொழி, நேரலை லைப் என்று தூள் கிளப்பிக்கொண்டு உள்ளது. 

இருந்து பாருங்கள்,? இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று இப்போதே எதிர்வு கூறுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, Kapithan said:

இருந்து பாருங்கள்,? இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று இப்போதே எதிர்வு கூறுகிறேன்

பலர் எதிர்பார்க்கின்றார்கள். 

அர்ச்சுனாவின் பதவியை எப்படியாவது பறித்து விட மாட்டார்களா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள்.
பதவி பறிப்பு நடைபெற முன்னர் என்ன நடக்கும் ?
சரி அவருடைய பதவி பறிக்கப்பட்டால் அடுத்து  என்ன நடக்கும் ?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, வாத்தியார் said:

பலர் எதிர்பார்க்கின்றார்கள். 

அர்ச்சுனாவின் பதவியை எப்படியாவது பறித்து விட மாட்டார்களா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள்.
பதவி பறிப்பு நடைபெற முன்னர் என்ன நடக்கும் ?
சரி அவருடைய பதவி பறிக்கப்பட்டால் அடுத்து  என்ன நடக்கும் ?🤣

அவருக்கு நிதனமோ பக்குவமோ இல்லை என்பது தெரிகிறது. Dr. என்றல்ல, பக்குவமற்ற நிதானம் அற்ற எவருக்கும் முடிவு அப்படித்தான் இருக்கும். இங்கே அப்படியான ஒருவருக்குப் பெயர் அர்ச்சுனா. அவ்வளவுதான். வடக்கரின் பிரதிநிதியைப் பார் என்று பிற இலங்கையர் எல்லோரும் எள்ளி நகையாடப் போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, Kapithan said:

நிதனமோ பக்குவமோ இல்லை

எது இருக்கின்றதோ இல்லையோ😅
அவரிடம் இருக்கும் ஒரு தனித்த தன்மை (கெத்து என்றும் சொல்லலாம்
பயம் இன்மை என்றும் சொல்லலாம்)  வேறு எந்தத் தமிழ்

பா உ க்களிடமும் நான் காணவில்லை
தேர்தலில் வென்று பத்து நாட்களில் இலங்கை முழுவதும் அவரது கருத்துக்கள் ஒலிக்கின்றன
இது ஒரு வரலாற்றுச் சாதனை 👌

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, island said:

அவரை உசுப்பேற்றி பண உதவி செய்து தாயக அரசியலை  றிமூட் கொன்றோல் மூலம் கட்டுப்படுத்த முயன்ற ஒரு கூட்டத்துக்கு பீலா காட்ட முயன்று

இப்ப அர்ச்சுனா இப்படி கோமாளி தனங்கள் செய்வது எல்லாம் அப்படியான  வெளிநாட்டில் உள்ளவர்களை சந்தோஷபடுத்த தான் என்றும் சொல்கின்றார்கள்.

 

1 hour ago, Kapithan said:

இவரது பதவி ஒழுங்காற்று நடவடிக்கையின் கீழ் பறிக்கப்படும் என்று

அவர் மீது  ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க இருப்பதை அறிந்து தான் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்றும் அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, Kapithan said:

வடக்கரின் பிரதிநிதியைப் பார் என்று பிற இலங்கையர் எல்லோரும் எள்ளி நகையாடப் போகிறார்கள்.

ஏதாவது பிரச்னை என்றால் ரிப்போர்ட் பட்டனை அழுத்தட்டாம்
நிர்வாகம் துரிதமாக நடவடிக்கையில் இறங்குமாம்🙏

இப்பவே அழுத்தட்டா அல்லது வெய்ட் பண்ணவா
என்று யோசிக்கின்றேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு

சம்சும் மற்றும் முன்னாள் கனல் மேடை பேச்சாளர் மாவை போல் அரசியல் செய்ய தெரியாத முழு முட்டாள் அர்ச்சுனா.....🤣
பாராளுமன்றம் போனமாம் அந்த மாதிரி சாப்பிட்டமாம் வீட்ட வந்து போர்த்துக்கொண்டு படுத்தமாம் எண்டில்லாமல்......😂

இப்பவெல்லாம் எனக்கு இந்த பாட்டு கேக்க கேக்க இனிமையாய் கிடக்குது...👇  😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன் அவர் கூறிய ஈழம் தொடர்பான கருத்து சத்தியப்பிரமாணத்துடன் முரண்படுவதாக உள்ளது. எவ்வாறாயினும், சத்தியப் பிரமாணம் செய்வதற்கு முன்னரே தாம் ஈழம் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததாக இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

🤣 நடந்தது புரிகிறதா?

சபாநாயகர் சரத்து 6 தூக்கி கொண்டு போக - நான் சொன்னது சத்திய பிரமாணத்துக்கு முன் என அருச்சுனா சொல்ல, சபா வாயடைத்து நின்றுள்ளார்🤣.

அருச்சுனா காரிய விசரன்.

கோமாளித்தனமாக தெரிந்தாலும்…இல்லை கோமாளித்தனமாக இருந்தாலும்….எல்லோரும் இலங்கையர் ஈரச்சாக்கை எதிர்க இது பயன்படுகிறது.

இருகிற இடம் தெரியாமல் இருக்கும் சாராயக்கடை சிறி, என் பி பி தமிழ் எம்பிகள் மத்தியில் - அருச்சுனா இப்போ தேவையான தெனாலி இராமன்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.