Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபிக்கு சுவஸ்திகாவின் இயக்கம் கட்சி மக்கள் போராட்ட முன்னணி எதிரானது என்று கொழும்பில் இருப்பவர் நம்பிக்கையானவர் சொன்னார் அண்ணா.

அந்தர விஷ்ய வித்யாலய சங்கம - ‍ பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர்கள் அமைப்புக்களின் சம்மேளனம். இதன நடப்புத் தலைவர்தான் வசந்த முதலிகே. அந்தரேயின் பின்னால் நிற்பது மக்கள் விடுதலை முன்னணி.

அந்த அமைப்பின் முக்கியஸ்த்தர் ஒருவர் தமிழ் மக்களின், தமிழ் மாணவர்களின் இன்னல்களின்போது தமது அமைப்பு மெளனமாக இருந்தது உண்மைதான் என்று பி பி சி யிடம் கூறிய பேட்டி கீழே.

 
JVP student leader admits war silence
 
A police blockade against students protest (file photo by Elmo Fernando)
IUSF admits that it did not protest when human rights violations were committed against Tamil students but stresses it is 'not racist'
 
The leading student body in Sri Lanka has admitted that it did not protest when human rights violations were committed against Tamil students during the long conflict between the security forces and the LTTE.

The pro JVP Convenor of the Inter University Student Union (IUSF) told journalist KS Udayakumar that the biggest student union in Sri Lanka had to "keep quite" while students were abducted and killed in a period of war against "separatist terrorism".

However, he stressed that the student movement in Sri Lanka was "never racist".

"The situation was different then and today. There might have been human rights violations during the war and of course we had to keep silent at a time of war against a separatist terrorism. But the student movement never worked on a racist agenda," he said.

In TID custody

In a letter to President Mahinda Rajapaksa, the IUSF for the first time has urged the government to release a Tamil university student and other students detained in refugee camps.

 

5ea3e7590d674d9be4582cc6f6c8e86070157686
ed179769b45f49c9cdd68934f9e85c6a14033297 The situation was different then and today. There might have been human rights violations during the war and of course we had to keep silent at a time of war against a separatist terrorism. But the student movement never worked on a racist agenda
97a6cdf56b5f285dd05db8176f703373afdd4b6e
 
IUSF convenor, Udul Premaratne

It seeks immediate release of Rasaiah Dvaraka, an undergraduate at Peradeniya University.

The IUSF is widely regarded as being controlled by the Janatha Vimukthi Peramuna (JVP). Many former IUSF leaders have later become JVP parliamentarians and activists.

The IUSF also calls on the authorities to release all other school and university students currently in camps for internally displaced people (IDPs).

Addressing journalists in Colombo, the IUSF convenor Udul Premaratne said the continuous detention of Tamil students might result in Tamils being pushed towards separatism once again.

Udul Premaratne stressed that the IUSF will continue protests until Ms. Dvaraka, currently detained by police Terrorism Investigation Division (TID), released.

 

மக்கள் விடுதலை முன்னணி எனும் பூனையின் பாதங்களே பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் எனும் தலைப்பில் 2010 இல் வெளியான கட்டுரை.

 

IUSF JVP's cat's-paw

Disna MUDALIGE

Inter University Students Federation (IUSF) is used by the JVP to regain their declining power in the country by creating an artificial and unpleasant environment in Universities, said Sri Lanka Freedom Students Organization (SLFSO) Secretary Sumudu Wijewardena.

Addressing a media conference held at the Sri Lanka Foundation Institute yesterday, he noted that the intention of the IUSF powered by the JVP is to push the University administration to close the universities and to show off the international community that the country is in a severe crisis. This has become a nuisance to the university students.

He also said that hardly any student from second, third and final years has joined in these violent activities of the IUSF.

As a result the freshers have become innocent victims, and they are subjected to physical and mental intimidation, he explained. He also challenged the IUSF to organize a picketing or rally without first year students.

"Usually most of the violent incidents are reported during the time of freshers arrival. The IUSF has been unable to gather at least 100 students without the first years. There are peaceful means to find solutions to the existing problems of students. Without clashing with the Government all the time, these can be negotiated through the administrative level. But the IUSF always chooses the most aggressive mean even for the smallest issue," he said.

He also pointed out that due to disgraceful behaviour of the IUSF, an opinion in the country is emerging that the involvement of undergraduates in politics should be prohibited.

"As the SLFSO we are ready to line up students against the aggressiveness of the IUSF. We try to use peaceful means in this effort. There should be a dialogue between students and administration over the existing problems. We also request to increase the Mahapola scholarship to Rs 3,000 considering the present situation," he said.

SLFSO Deputy Chairman Awantha Amaraweera noted that the future of the Universities will be peaceful if the necessary legal actions are taken against those who provide leadership for the students to adhere in aggressive and violent activities. SLFSO Coordinating Secretary Gihan Madushanka and Media Secretary Deshapriya Ratnayake also spoke.

  • Replies 164
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

valavan

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, குமாரசாமி said:

அனுர சார்ந்தவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா,அவர்கள் அரசியல் எப்படியிருக்கும் என்பதை அடுத்த வருடங்களில் கவனிக்கலாம். அதற்கு முன் எந்த ஜோசியமும் சொல்ல முடியாது. இலங்கையில் இருப்பவர்களே அடுத்த அரசியல் கட்டம் எப்படியிருக்குமென ஊகிக்க முடியாத போது புலம்பெயர் தமிழர் ஆரூடம் சொல்வது வியப்பாக இருக்கின்றது.

பயங்கரவாத தடைச் சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது இதில் சிங்களவருக்கு தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர்கள் என்ற பாகுபாடு இல்லை. நாம் தான் நமது கதவை தட்டும் வரை?????

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

பயங்கரவாத தடைச் சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது இதில் சிங்களவருக்கு தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர்கள் என்ற பாகுபாடு இல்லை. நாம் தான் நமது கதவை தட்டும் வரை?????

தமிழர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு அடையாளமில்லாத அரசியல் வேண்டும்.

இதுதான் இன்றைய உலக நடைமுறையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/11/2024 at 23:57, குமாரசாமி said:

சிறிலங்காவில்  தமிழீழ விடுதலைப்புலிகள் சம்பந்தமாக எந்த அடையாளங்களும் இல்லாமல் மாவீரர் நாளை அனுஷ்டிக்கலாம் என அமைச்சக உத்தரவு உண்டு.

ஜேர்மனியில் இருந்து கொண்டு தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் தரவேற்றினாலே தூக்குகின்றார்கள். நிலைமை இப்படியிருக்க.....

X த‌ள‌த்தில் பிர‌ச்ச‌னைக‌ள் இல்லை

 

என‌து முக‌ நூலில் இருந்து ப‌ல‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ளை போன‌ வ‌ருட‌ம் போட்டேன் உட‌ன‌ நீக்கினார்க‌ள் பிற‌க்கு ம‌று ப‌டியும் முக‌ நூல‌ திற‌க்குவில் அவ‌ர்க‌ள் கேட்க்கும் கேள்விக்கு ப‌தில் எழுத‌னுனும் தாத்தா...............அப்ப‌டி இருந்தும் மூளைய‌ க‌ச‌க்கி த‌லைவ‌ரின் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் போட்டு விட்டேன்

பையா கொக்கா.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக‌ நூலில் போட்டால் கைது கோடிக்கான‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்  பிரபாக‌ர‌ன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்🙏🥰.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரஞ்சித் said:

வசந்த முதலிகேயையும் மக்கள் விடுதலை முன்னணியையும் வேறு வேறாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன இங்கு. பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்புக்களின் சம்மேளனம் , சிங்களத்தில் அந்தரே என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மாணவர் அமைப்பின் பின்னால் இருப்பதே மக்கள் விடுதலை முன்னணி தான். 

சரி, விடயத்திற்கு வரலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டு வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்தார், சரி. இன்று நடப்பது அவரது மாணவர் அமைப்பின் பின்னால் இருக்கும் அரசுதானே? ஏன் நேரடியாக அரசிடமே இதனை நீக்குங்கள் என்று அவர் கேட்கக் கூடாது? ஆக, அவர் அன்றைக்கு வந்தது மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் செயற்படும் தனது அமைப்பிற்கெதிராக ரணிலும், ராஜபக்சேக்களும் எடுத்த நடவடிக்கைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்காகத்தான். ஆனால் இன்றோ நிலைமை வேறு, தனது கட்சியே ஆட்சியில் இருக்கிறது, ஆகவே தடைச் சட்டத்தை நீக்கவேண்டிய தேவை அவருக்கில்லை, ஆகவே அவர் அதுகுறித்து இனிமேல் பேசபோவதுமில்லை.

அடுத்தது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் "உங்களின் பிரச்சினை வேறு எங்களின் பிரச்சினை வேறு" என்று கூறினார்களாம். சரி, தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றுவரை கூறும் கட்சியின் பின்புலத்தில் செயற்படும் வசந்தவிடம் வேறு எதைத்தான் யாழ் மாணவர்கள் கூறுவது? இவ்வளவு காலமும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பேரினவாதிகளிடம் அடிபடும் பொழுது இவரோ, இவரது அமைப்போ அல்லது பின்னால் நின்று இயக்கும் கட்சியோ என்ன செய்தது? ஆக தமக்கு அடிவிழும்போது, தம்மீது தடைச் சட்டம் பாயும்போது தான் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

அடையாளம் துறந்து இலங்கையர்களாக மாறுவோம், சிங்களத் தேசியத்திற்குள் இணைவோம் என்று கூப்பாடு போடுவோர் தாங்கள் தமிழர் இல்லை, தமக்கென்று தனித்துவமான அடையாளம் இல்லை, தமக்கென்று தனியான கலாசாரமும், தேசமும், பண்பாடும் இல்லை என்று வெளிப்படையாக இங்கே கூறிவிட்டு அதனைச் செய்யட்டும், மீதியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். 

பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜேவிபிக்கு சுவஸ்திகாவின் இயக்கம் கட்சி மக்கள் போராட்ட முன்னணி எதிரானது என்று கொழும்பில் இருப்பவர் நம்பிக்கையானவர் சொன்னார் அண்ணா. கோத்த பையாவை அகற்றுவதற்காக போராடிய போது  பலர் ஒன்றாக போராடி இருக்கலாம்

மக்கள் விடுதலை முண்ணனி (JVP), மக்கள் போராட்ட முண்ணனி வேறு வேறு அமைபுகள் என நினக்கிறேன். 

பொது எதிரியான கோட்ட வை எதிர்க்கும் போது ஒன்றாக வேலை செய்தனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, விசுகு said:

முன்னைய போராட்டத்திற்கு தமிழர்களின் ஆதரவைக் கேட்டு, அனுமதி பெற்றா செய்தார்கள் தொடங்கினார்கள்???

அருமையான கேள்வி.

ஜே வி பி மனதார இந்த சட்டம் மோசமானது என காணில், 2/3 கூட தேவையில்லை, சாதாரண பெரும்பான்மையோடு ஒரு நாளில் சட்டத்தை ரத்து செய்யலாம்.

போர் முடிந்து 15 ஆண்டுகள் கழித்தும் இதை வைத்திருப்பது தமிழர்களின் சுயநிர்ணய குரல்களை மேலே செய்தது போல் நசுக்கவே.

The most radical revolutionary will become a  reactionary, the day after the revolution.

மிகவும் முற்போக்கான புரட்சிவாதி, புரட்சியின் மறுநாள் பிற்போக்குவாதி ஆகிவிடுவான் என்கிறார் ஹனா அரெண்ட்.

ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அனுர சார்ந்தவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா,அவர்கள் அரசியல் எப்படியிருக்கும் என்பதை அடுத்த வருடங்களில் கவனிக்கலாம்

ஜேவிபி….

இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும்.

இது ஆரூடம் இல்லை.

பட்டறிவு.

நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல

2 hours ago, குமாரசாமி said:

தமிழர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கு அடையாளமில்லாத அரசியல் வேண்டும்.

இதுதான் இன்றைய உலக நடைமுறையில் உள்ளது.

தமிழர்கள் எண்டாலே பயங்கரவாதிகள் என்ற போக்கை அவர்கள்தான் கைவிடவேண்டும்.

இதற்காக நீங்கள் என்ன குமாரதெவியோ என பெயரையா மாற்ற முடியும்.

அடையாளத்தை துறக்கும் படி வற்புறுத்துவதை விட மிக கொடிய அடக்குமுறை எதுவுமில்லை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, goshan_che said:

மக்கள் விடுதலை முண்ணனி (JVP), மக்கள் போராட்ட முண்ணனி வேறு வேறு அமைபுகள் என நினக்கிறேன். 

பொது எதிரியான கோட்ட வை எதிர்க்கும் போது ஒன்றாக வேலை செய்தனர்.

ஓம் அப்படி தான் இருக்க வேண்டும் எனக்கு சொன்னவர் கொழும்பு  தான் படித்தவர்.

20 minutes ago, goshan_che said:

ஜேவிபி புரட்சிக்கு முன்பே பக்கா இனவாதிகள், இவர்களாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாவது.

 (ஜேவிபி) நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல

சரியாக சொன்னீர்கள் 👍 விருப்பு அடையாளங்கள் முடிவடைந்து விட்டன

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, goshan_che said:

மக்கள் விடுதலை முண்ணனி (JVP), மக்கள் போராட்ட முண்ணனி வேறு வேறு அமைபுகள் என நினக்கிறேன். 

Establishment

[edit]

The Inter-University Student Federation was established on 18 June 1969 at the University of Peradeniya. The first discussion was held at Ramanathan Hall, University of Peradeniya. It was financed by Vice Chancellor Prof. E. O. E. Pereira. Malcolm Wijesinghe of the Peradeniya University Students' Union was the first convener of the IUSF. He was also the President of the Sri Lanka Freedom Party's Progressive Students Union.

The IUSF became formally active in the mid-70s. This eventually culminated in the shooting and death of Rohana Weerasuriya by the police on November 12, 1976, at the University of Peradeniya. With the assassination of Weerasuriya, student groups loyal to the Janatha Vimukthi Peramuna (JVP) were able to gain control of the IUSF, which had previously been in the possession of the Ceylon National Students' Union of the Communist Party of Sri Lanka since 1972. The JVP Socialist Students Union's control over the IUSF lasted from 1976 to 2012.

Today, about 10 members of the JVP Socialist Students' Union and about 35 members of the Frontline Socialist Party's Revolutionary Students' Union are engaged in politics full time in universities.[17][18] With a formation of a leftist mass movement, Shantha Bandara, a student in the science faculty of University of Peradeniya, was elected as its convener after reforms in 1977.[19] The IUSF was officially recognized by the government on July 8, 1988, after its inception in 1969. Accordingly, the first official discussion was held on 23 July 1988, with the then-incumbent Minister of Higher Education, Abdul Cader Shahul Hameed, at the University Grants Commission in Sri Lanka.

Notable leaders

[edit]
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

ஜேவிபி….

இலங்கையின் பெளத்த-சிங்கள மனோநிலை பற்றி புரிந்த எவருக்கும் இது மிக இலகுவாக புரியும்.

இது ஆரூடம் இல்லை.

பட்டறிவு.

நெருப்பு சுடும் என கூறுவது ஆரூடம் அல்ல

பதவிக்கதிரை அல்லது ஆட்சி பீடம் ஏறுவதற்காக மட்டும் உணர்ச்சி அரசியல் பேசும்  அரசியல்வாதிகளின் பாதைகளை பல தடவைகள் பார்த்து விட்டோம்.

இந்த முறை புதிய முகத்துடன் அந்த இனவாதத்தையும் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

பதவிக்கதிரை அல்லது ஆட்சி பீடம் ஏறுவதற்காக மட்டும் உணர்ச்சி அரசியல் பேசும்  அரசியல்வாதிகளின் பாதைகளை பல தடவைகள் பார்த்து விட்டோம்.

இந்த முறை புதிய முகத்துடன் அந்த இனவாதத்தையும் பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

உண்மையிலே உங்கள் நிலைப்பாட்டை புரிய முடியவில்லை.

லைட்டரில் இருந்து வந்தாலும், நெருப்பு பெட்டியில் இருந்து வந்தாலும் - நெருப்பு, நெருப்புத்தான்.

இதை நெருப்பு (இனவாதம்) என நீங்களும் ஏற்கிறீர்கள்.

ஆனால் நெருப்பு சுடும் என எழுதினால் ஆரூடம் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரசாரம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து, மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பான LTTE அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் பேஸ்புக் சமூக வலைத்தள கணக்கின் ஊடாக பகிர்ந்துள்ளனர். கடந்த வருடங்களில் LTTE அமைப்பின் மாவீரர் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை இந்த வருடத்தின் கொண்டாட்டங்கள் எனக் கூறி முகநூல் சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196678

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் வாழும் தமிழருக்கு  ஒரு தமிழன்  சுயாட்சி வழங்குவானா??   இல்லை   ஒருபோதும் முடியாது 

ஒரு தமிழன் தீர்வை பெற்று தருவானா  ??இல்லை    

சர்வதேசம்  உலக நாடுகள்   அல்லது ஏதாகினும் ஒரு நாடு   இலங்கையுடன் பேச்சுவார்த்தை மூலம் அல்லது போர் மூலம்   சுயாட்சி  தமிழ் ஈழம்   பெற்று தருவார்களா??? 

கண்டிப்பாக இல்லை   கனவில் கூட நடக்காது”  இலங்கையில் தமிழருக்கு  சுயாட்சி வழங்கக்கூடிய. ஒரே சக்தி சிங்களவர்கள். மட்டும் தான்     இது சந்தர்ப்பவாதமில்லை 

உண்மை நிலை இது தான்   இல்லை உங்கள் கருத்துகள் பிழை என்று கருத்தை முன் வையுங்கள்   அதை விட்டுட்டு சந்தர்ப்பவாதம். என்பது அர்த்தமற்ற. சொல்லாகும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர் விடுதலை கூட்டணி  1977 ஆம். ஆண்டளவில்.  இந்த தமிழ் ஈழம்   ஆயுதப் போராட்டம் மூலம்  எடுக்கிறோம். என்று  ஊர் ஊராக.  மேடைக்கு மேடை   பேசி  அனைத்து இளைஞர்களையும்.  உணர்ச்சி வாசப்படுத்தினார்கள் ஆனால்  ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட  ஆயுதமேத்தி போராடவில்லை   பயிற்சி எடுக்கவில்லை   ஏன் இது உரிமைக்கான போராட்டம்   தமிழ் ஈழப்போராட்டம்.   என்று கூட சொல்லவில்லை     மாறாக பயங்கரவாதிகள் என்று சொல்லி உள்ளார்கள்   1977 இல். இவர்களை  சிறைப்படுத்தியே இருக்க வேண்டும்    

இளைஞர்கள் ஆயுதமேத்தியிருக்க. வாய்ப்புகள் இல்லை   

35  இலட்சம் மக்கள்  20 லட்சம் ஆக. குறைத்து இருக்காது 

மீண்டும்  ஒரு உணர்வு போராட்டம் எற்பட்டு   10 லட்சம் மக்களாக  மாற முடியாது   

உணர்வை தூண்டுவோர். கண்டிப்பாக கைது செய்யப்பட. வேண்டும்    🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வசந்த முதலி மக்கள் போராட்ட முன்னணியை சேர்ந்தவர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சி சார்பாக முதன்மை வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டிட்டவர். என்பிபி ஆட்சிக்கு  வந்த பின்னர் அந்த ஆட்சி மீது விமர்சனங்களை அக்கட்சி செய்கிறது. பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் கூட ஆளும் ஆட்சியை  வலியுறுத்துகிறது. 

பல்வேறு வித்தியாசமான பார்வைகளை கொண்ட அமைப்புகள் issue basis ஆக இணைந்து செயற்படுவது உலகில் இயல்பானது.  சற்று முரண்பட்டாலே துரோகி என்று போட்டு தள்ளிவிட்டு போகும் அரசியலுக்குள் ஊறி்த்திளைத்து இன்றும் அவ்வகையான அரசியலையே ஆதரிக்கும் வரட்டு தேசியவாத  பேர்வழிகள்  இவ்வாறு தமது வாழ்நாள் முழுவதும் பந்தி பந்தி புலம்புவதை பற்றி நாம் இங்கு அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.  

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞர்கள் அடிப்படை புரிதலின்றி உணர்ச்சிவசப்படும் செயல்பாடுகளில் இறங்குவது அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் துன்பத்தையே தரும்.

இலங்கையில் விடுதலைபுலிகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது, அப்படியிருக்க புலிகள் சம்பந்தமான பதிவுகளை தனி மனிதர்கள் சமூக ஊடகங்களில் பதிவது நிச்சயமா சிங்கள நாட்டு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமே.

ஏன் மனித உரிமைகளின் உச்சமென்று கருதப்படும் மேற்குநாடுகளில்கூட தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் புலிகளுக்காக நிதி சேர்ப்பது, ஆயுத போராட்டத்தை மீள் கட்டமைக்க முனைவது என்று யாரும் ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றமே.

ஒவ்வொரு மாவீரர்நாள் தினத்திற்கும் இதுபோன்ற முகநூல் பதிவுகளால் இளைஞர்கள் சிங்கள புலனாய்வு பிரிவிடம் சிக்கி கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

மைத்திரி கோத்தபாய ஆட்சியில்கூட தலைவர் பிறந்தநாள் வாழ்த்து, மாவீரர்தின பதிவுக்காக கொழும்புக்கு நாலாம் மாடிக்கு விசாரணக்கு அழைத்ததும் நினைவில் உண்டு, அவர்கள் என்ன ஆனார்கள் தொடர்ந்து சிறையிலா அல்லது விடுதலை செய்யப்பட்டார்களா தெரியவில்லை, விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் சிங்கள புலனாய்வின் பூரண கண்காணிப்பில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்பது உறுதி.

மாவீரர்களை நினைவுகூர கட்டுப்பாடின்றி பொதுவெளியில் அனுமதி தந்தால் அனைவரும் அங்கே ஒன்று கூடுங்கள் அதைவிடுத்து அதை தனியான முறையில் பதிவுகளிட்டு சிங்கள சட்டத்தில் சிக்கி கொள்ளாதீர்கள்.

தனிமனித ரீதியில் ஆவேசப்பதிவுகளீட்டால் ஒரு அரசாங்கம் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டும், தென்னிலங்கை சிங்கள இனவாதிகளுக்கு பதில் சொல்லவேண்டும், ஏன் அவர்கள் கட்சிக்குள்ளேயே குழப்ப,ம் வர வாய்ப்புண்டு.

என்னதான் அநுர வந்தான் இனவாதம் இனி இல்லையென்று நாம் பேசிக்கொண்டாலும், இனவெறி சிங்களவனுக்கு நம்மை பிடிக்காது என்பதை எப்போதும் தெளிவாக மனதில் வைக்க  வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இம்முறை சிங்கள கட்சி வென்றதால் யாழ் சகோதரர்களே என்று சமூக ஊடகங்களில் திடீர் பாசம் காட்டும்  சிங்களவர் ஒருவேளை யாழில் என்பிபி ஒரு சீட் கூட வென்றிருக்காவிட்டால் நாம் எப்போதும் கொட்டிதான் அவனுக்கு.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர் நாள் முகநூல் பதிவு சம்பந்தமாக மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றைய இருவரும் சிங்களவர்கள் ஆகும், ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் படங்களைப் போட்டு புலிகளின் மீள் வருகையென பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள். NPP அரசாங்கம் இரண்டு பக்க அதிதீவிர தேசியவாதிக்குக்கும் செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்கள்.

https://www.dailymirror.lk/breaking-news/Three-suspects-arrested-for-promoting-banned-LTTE-activities-via-social-media/108-297125#

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

கண்டிப்பாக இல்லை   கனவில் கூட நடக்காது”  இலங்கையில் தமிழருக்கு  சுயாட்சி வழங்கக்கூடிய. ஒரே சக்தி சிங்களவர்கள். மட்டும் தான்     இது சந்தர்ப்பவாதமில்லை 

மேலே நீங்கள் இல்லை, ஒரு போதும் இல்லை என கூறியவற்றை விட அறவே வாய்ப்பில்லை சிங்களவர் எமக்கு சுயாட்சி தர.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

தமிழர் விடுதலை கூட்டணி  1977 ஆம். ஆண்டளவில்.  இந்த தமிழ் ஈழம்   ஆயுதப் போராட்டம் மூலம்  எடுக்கிறோம். என்று  ஊர் ஊராக.  மேடைக்கு மேடை   பேசி  அனைத்து இளைஞர்களையும்.  உணர்ச்சி வாசப்படுத்தினார்கள் ஆனால்  ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கூட  ஆயுதமேத்தி போராடவில்லை   பயிற்சி எடுக்கவில்லை   ஏன் இது உரிமைக்கான போராட்டம்   தமிழ் ஈழப்போராட்டம்.   என்று கூட சொல்லவில்லை     மாறாக பயங்கரவாதிகள் என்று சொல்லி உள்ளார்கள்   1977 இல். இவர்களை  சிறைப்படுத்தியே இருக்க வேண்டும்    

இளைஞர்கள் ஆயுதமேத்தியிருக்க. வாய்ப்புகள் இல்லை   

35  இலட்சம் மக்கள்  20 லட்சம் ஆக. குறைத்து இருக்காது 

மீண்டும்  ஒரு உணர்வு போராட்டம் எற்பட்டு   10 லட்சம் மக்களாக  மாற முடியாது   

உணர்வை தூண்டுவோர். கண்டிப்பாக கைது செய்யப்பட. வேண்டும்    🙏

மிக மோசமாக இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனவாதத்துக்கு நன்றாக முட்டு கொடுக்கிறீர்கள் அண்ணை.

பிரித்தானியாவில் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து போகலாம் மக்கள் ஆதரவு இருப்பின்.

கியூபெக்கிலும் இதுவே நிலமை.

ஆனால் இலங்கையில் ஒரு பா உ, பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து பாராளுமன்றின் உள்ளே கூட இதை பேச முடியாது.

முடிந்தால் 6 ம் திருத்தத்தை நீக்கி விட்டு வரச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

பிரிந்து போகும் உரிமை கூட அல்ல, எமது மண்ணில் எம்மை நாமே ஆளவேண்டும் என்பதில், 13 ஐ முற்றாக அமல்படுத்துங்கள் என கோருவதில் எந்த உணர்சி அரசியலும் இல்லை.

அதே போல் அரசியல் தலைவரின் படத்தை தரவேற்றுவது உணர்சி அரசியல் என்றால் - ரோகண விஜேவீரா படத்தை ஏற்றுவோரும் கைதால வேண்டும்.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் நினைவு கூறுதலில் எந்த விதமான சட்டப்பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை படையினரை நினைவு கூறுவதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை, எதிர்க்க போவதுமில்லை, அது சாதாரண மனித பண்பு ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வலவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பற்றிய கடந்தகாலத்தினை மறந்து விடுவார்கள். 

ஆனால் தமிழர்கள் மட்டும் தாம் சார்ந்தவர்களை நினைவு கூறுவதற்கும் மற்றவர்களின் அனுமதியினை கோரும் நிலையில் உள்ளார்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முனையும் தரப்பிடமிருந்து நியாயம் கிடைக்கும் என நம்பும் நிலையில் நாம் இருக்கின்றோம்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, zuma said:

மாவீரர் நாள் முகநூல் பதிவு சம்பந்தமாக மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றைய இருவரும் சிங்களவர்கள் ஆகும், ஏற்கனவே சில வருடங்களுக்கு முதல் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் படங்களைப் போட்டு புலிகளின் மீள் வருகையென பிரச்சாரம் செய்திருக்கின்றார்கள். NPP அரசாங்கம் இரண்டு பக்க அதிதீவிர தேசியவாதிக்குக்கும் செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்கள்.

https://www.dailymirror.lk/breaking-news/Three-suspects-arrested-for-promoting-banned-LTTE-activities-via-social-media/108-297125#

1. சிங்களவர்கள் இருவரும் பழைய புலிகளின் சின்னம் பொறித்த நிகழ்வுகளை வீடியோவை பகிர்ந்து - இப்போ நடக்கிறது என பொய் வதந்தி பரப்பி உள்ளனர்.

2. சுன்னாக ஆள் பற்றி தெரியவில்லை, ஆனால் மற்றையவர் நினைவுகூரும் விதமாக தலைவர் படத்தை ஏற்றியுள்ளார்.

3. இரெண்டும் ஒன்றல்ல. ஆனால் அனுர ஆதரவாளர்கள் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கி, அரசு நடுநிலையாக நடப்பது போல் காட்டவிழைகிறார்கள்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்ரேலியாவில் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமது பாரம்பரிய கிறிஸ்மஸ் நிகழ்வினை கைவிடும் நிலை போல இலங்கையில் உள்ல மக்கள் தம்து உறவுகளை நினைவு கூறுவது சட்ட விரோதமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, vasee said:

இறந்தவர்களை அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியான முறையில் நினைவு கூறுதலில் எந்த விதமான சட்டப்பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, பல இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற இலங்கை படையினரை நினைவு கூறுவதனை தமிழர்கள் எதிர்க்கவில்லை, எதிர்க்க போவதுமில்லை, அது சாதாரண மனித பண்பு ஒருவர் உயிருடன் இருக்கும் போது எவ்வலவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்கள் இறந்த பின்னர் அவர்களை பற்றிய கடந்தகாலத்தினை மறந்து விடுவார்கள். 

ஆனால் தமிழர்கள் மட்டும் தாம் சார்ந்தவர்களை நினைவு கூறுவதற்கும் மற்றவர்களின் அனுமதியினை கோரும் நிலையில் உள்ளார்கள், அதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிகளிலும் முனையும் தரப்பிடமிருந்து நியாயம் கிடைக்கும் என நம்பும் நிலையில் நாம் இருக்கின்றோம்.

 

மிகச்சரியான கூற்று வசி.

கீழே இருப்பது 2019 மாவீரர்நாள். கோட்ட அபய பதவிக்கு வந்த 10 நாளில் மக்கள் நினைவேந்தியது.

எம் உறவுகளை நினைவுகூற எவரின் அனுமதிக்கும் எம் மக்கள் காத்து நின்றதில்லை.

இதை அனுர அனுமதிக்கவும் இல்லை. அனுமதிக்காவிடினும் நடந்திருக்கும்.

இது ஏதோ புதுவிடயம் போல் சிலர் அனுரவுக்கு காவடி எடுக்கிறனர்.

 

 

 

Edited by goshan_che
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 11) விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து தாம்பரம் சென்று திருச்சி செல்வதாக அவரது பயணத் திட்டம் இருந்தது. இதன்பிறகு நடந்த சம்பவங்களை பிபிசி தமிழிடம் விவரித்தார், தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன். "காலை 9.45 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த வசந்தா மாரிக்கண்ணு, அங்கு நின்றிருந்த ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்காக ஏறியுள்ளார். வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோவில் இரண்டு பக்கமும் இருந்த ஸ்க்ரீனை டிரைவர் இறக்கிவிட்டுள்ளார்." ஆனால், ஆட்டோ தாம்பரம் செல்லாமல் குரோம்பேட்டை அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே திரும்பி, பச்சை மலை வழியாகச் சென்றுள்ளது," என்று தெரிவித்தார் உதவி ஆணையர் நெல்சன். அங்கு ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, வசந்தா மாரிக்கண்ணு அணிந்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை அந்த நபர் மிரட்டிப் பறித்ததோடு, அதன்பிறகு வசந்தாவை கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறினார். சிரியாவில் அசத்தின் வீழ்ச்சி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல் பற்றி அரபு நாடுகள் என்ன சொல்கின்றன?11 டிசம்பர் 2024 குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 தந்தையை போலீஸில் ஒப்படைத்த மகன் பட மூலாதாரம்,HANDOUT இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வசந்தா மாரிக்கண்ணு, தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் என்ற ஆட்டோ டிரைவரை அழைத்துக் கொண்டு அவரது மகன் ராமச்சந்திரன் வந்துள்ளார். இதுதொடர்பாக, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தான் திருடிய நகைகளை விற்று குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தனது மகளிடம் கணேசன் கூறியதாகவும், இதை அறிந்த அவரது மகன் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் தனது தந்தையை ஆஜர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வசந்தாவிடம் இருந்து திருடப்பட்டதாகச் சொல்லப்படும் பத்து பவுன் நகை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 நீலகிரியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி - 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!8 மணி நேரங்களுக்கு முன்னர் தனது தந்தையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமச்சந்திரன், "புதன்கிழமை காலையில வீட்டுக்கு வந்ததும் என் அப்பா நகைகளைக் காட்டினார். 'இந்த நகை எப்படி வந்தது?' எனக் கேட்டபோது, வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்ததாகச் சொன்னார். 'நம்மை நம்பி ஆட்டோவில் ஏறும் ஒருவரிடம் இப்படியெல்லாம் செய்வது தவறு" எனக் கூறி வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தம் போட்டேன். அவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்" என்றார். இதன்பிறகு கணேசனை பின்தொடர்ந்து சென்ற ராமச்சந்திரன், அவரை தாம்பரம் காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். "காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்று என் தந்தை கெஞ்சினார். அதைப் பொருட்படுத்தாமல் நான் கூட்டிப் போனேன்" என்றார், ராமச்சந்திரன், மேலும், குடிபோதையில் இப்படித் தொடர்ந்து செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசிய அவர், "தவறுக்கு எப்போதும் உடன்பட மாட்டேன். அவர் செய்தது மிகத் தவறான காரியம் என்பதால் போலீசில் ஒப்படைத்தேன். அது என் தம்பி, தங்கையாக இருந்தாலும் இதைத்தான் செய்வேன்" என்றார். யுக்ரேன் போரில் காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வுக்கு உதவும் பெண்5 மணி நேரங்களுக்கு முன்னர் அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, திருடப்பட்ட நகை கஞ்சா விற்றதாக தாம்பரம் மற்றும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கணேசன் மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறார் காவல் உதவி ஆணையர் நெல்வன். அதுகுறித்துப் பேசியவர், "கஞ்சாவை புகைத்துவிட்டுப் பலமுறை கணேசன் தகராறு செய்துள்ளதால், மறுவாழ்வு மையத்திலும் அவரைச் சேர்த்துள்ளோம். ஆனால், அங்கு முறையாக சிகிச்சை பெறாமல் திரும்பிவிட்டார்" என்றார். கணேசனின் மனைவி சிங்கப்பூரில் வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைப்பதற்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. "கணேசனின் மனைவியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு இந்த நகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்கிறார் நெல்சன். ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்9 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த ராமச்சந்திரன், "உண்மைதான். இதற்காக நானும் கடன்களை வாங்கி ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அதற்காக திருடுவதை எப்படி அனுமதிக்க முடியும்?" என்கிறார். இந்த வழக்கில் கணேசன் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவு 304(2)இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் உதவி ஆணையர் நெல்சன், "பொதுவெளியில் பயணிக்கும்போது வசந்தா மாரிக்கண்ணு எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வந்துள்ளதாகக் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த அன்று மழை பெய்ததால் அவர் கோட் அணிந்துள்ளார். 'இதனால் நகைகள் அணிந்திருப்பது வெளியில் தெரியாது' எனத் தான் அலட்சியமாக இருந்துவிட்டதாக" கூறுகிறார். விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியே வரும் பயணிகள், மொபைல் செயலி மூலம் பதிவு செய்துவிட்டு வெளி வாகனங்களில் பயணித்தால் ஆட்டோ டிரைவரின் பெயர், வாகனம் ஆகியவற்றை அறிய முடியும். "அவ்வாறு இல்லாமல் தெருவில் செல்லும் எதாவது ஒரு வாகனத்தைத் தேர்வு செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். தங்களது உறவினர்களுக்கு வாகனத்தின் எண், டிரைவரின் அடையாளம் ஆகியவற்றைத் தெரிவித்துவிட்டுப் பயணிப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்வன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cm2exyp63j0o
    • கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல் 12 DEC, 2024 | 02:46 PM முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, விசாரணைக்காக  இன்று வியாழக்கிழமை (12) எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (ஓ எம் பி ) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, ஓஎம்பி அலுவலகத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது, இன்று (12) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர். அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று  குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது எனக் கூறியிருந்தார். இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்க தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201088
    • இதில் விளங்க என்ன இருக்கிறது. எவ்வளவு மிலேச்சதனமான அரசாக இருந்தாலும்… ஒரு மதச்சார்பற்ற அரசை - மதம்சார் அரசால் பிரிதியீடு செய்வது சம்பந்தபட்ட, படாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஆபத்து என்பது என் கருத்து. அதேபோல் ஒரு நாட்டில் தலையிடும் போது, தலையிட்ட பின் அந்த நாடு புதிய மாற்றங்களுக்கு தயாராக இல்லை எனில் தலையிடாமலே விடலாம். இதனால்தான் ஈராக் யுத்தத்தை எதிர்ர்த்தேன். லிபியாவில் தலையிட்டதையும் எதிர்த்தேன். இது ரஸ்யா சிரியாவில் தலையிட்டமைக்கும் பொருந்தும். ஆனால் இப்போ சிரியாவில் தலையிட்டுள்ளது துருக்கி. மேற்கு அல்ல. துருக்கியிடம் நோஸ் கட் வாங்கும் அளவுக்கு கிளி செத்துவிட்டது என்பது சோகம்தான், வாட் டு டூ🤣.
    • 12 DEC, 2024 | 01:11 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் கோட்டபய ராஜபக்ஷவின் கதியே தற்போதைய ஜனாதிபதிக்கும் ஏற்படும் என இலங்கை மின்சார பொதுசேவை சங்கத்தின் தலைவர் மாலக விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள மின்சார பொது சேவை சங்கத்தின் காரியாலயத்தில்  வியாழக்கிழமை (12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்சார சபை ஊழியர்கள் எவரும் போனஸ் கொடுப்பனவை கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடியாது என்று அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருந்தது. பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாங்களும் போனஸ் கோரி போராட்டத்தில் ஈடுபடவில்லை. மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார தொழிற்சங்கம் தான் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டது. மின்சார சங்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் ரஞ்சன் ஜயலாலுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இடமளிக்காத காரணத்தால் அவர் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை தற்போது  குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆட்சிமாற்றம் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கிறது. நீர்மின்னுற்பத்தி துறையின் ஊடாக மின்சாரம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பின்னணியில் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது. மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்பாவனையாளர்களுக்கு ஒருபோதும் நிவாரணமளிக்க முடியாது. அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் சேவை கட்டமைப்பில் உள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாவிடின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/201077
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிரியாவில் நடைபெறும் மோதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபாதிமா செலிக் பதவி, பிபிசி செய்திகள், துருக்கி சிரியாவில் 13 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதல் தற்போது தீவிரமடைந்து வந்தாலும், ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS), கடந்த வார இறுதியில் அலெப்போ மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றிய பிறகு அந்த மோதல் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்துவிட்டது. சிரியா அதிபர் பஷர் அல் அசத்துக்கு எதிரான அமைதியான கிளர்ச்சி, 2011 ஆம் ஆண்டு முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறியது. இதன் காரணமாக, சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பிராந்திய நாடுகள், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இது ஒரு மறைமுக போராகவும் மாறியுள்ளது. அதிபர் அசத்தின் ஆட்சி, ஆயுதக் குழுக்கள், வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் விசுவாசங்களைக் கொண்ட நிறுவனங்கள் என பல்வேறு தரப்புகளின் கட்டுப்பாட்டில், சிரியா இன்று நான்கு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் எந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது போரின் தொடக்கத்திலிருந்து மாறி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பல்வேறு பகுதிகளை இழந்த அதிபர் அசத்தின் ஆட்சி, 2015 முதல் ரஷ்யாவின் ஆதரவைப் பெற முடிந்தது. சமீபத்தில் அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் வரை, சிரியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை ரஷ்யா ஆதரவுடனேயே அசத்தின் ஆட்சி மீட்டெடுத்தது. சிரியாவின் வடக்கு எல்லையில் துருக்கி இருக்கிறது. அங்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள், தாங்களாகவே கட்டுப்பாட்டை வரையறுத்துக்கொண்ட சிரியா பகுதிகளும் இருக்கின்றன.   "சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் கிழக்கிலிருந்து யூப்ரடீஸ் நதி வரை இருக்கும் பகுதிகளில் இரானின் செல்வாக்கு உள்ளது," என்று ப்ரோஸ் & கான்ஸ் செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் அனாலிசிஸ் சென்டரைச் சேர்ந்த செர்ஹாட் எர்க்மென் கூறுகிறார். "மத்தியதரை கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் வரை உள்ள பகுதிகளும், சிரியாவின் தெற்கு பகுதிகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன," என்று அவர் மேலும் கூறுகிறார். இரானும் ரஷ்யாவும் அசத் அரசாங்கத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால், சமீபத்தில் இப்பகுதியில் நடந்த நிகழ்வுகள் காரணமாக, சிரியாவின் கட்டுப்பாட்டின் நிலை மாறியுள்ளது. மேலும், இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆயுதக்குழு இஸ்ரேலுடனான மோதலிலும், ரஷ்யா யுக்ரேனுடனான தனது போரிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நாடுகள் அனைத்தும் அசத் அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் அந்நாடுகளின் ஆதரவு தளர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அலெப்போ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஹமா மாகாணத்தின் சில பகுதிகள் இப்போது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மத்தியதரைக் கடலில் உள்ள சிரியாவின் முக்கிய துறைமுகமான லதாகியா, அசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம்: சட்டமன்ற தீர்மானத்தால் என்ன நடக்கும்? மத்திய அரசின் சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?11 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 இட்லிப்பைக் கட்டுப்படுத்துவது யார்? சிரியாவின் வடக்கு எல்லையை நோக்கி 120 கிமீ தொலைவில் இட்லிப் மாகாணம் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து, இந்த பகுதியின் கட்டுப்பாட்டை அரசாங்கப் படைகள் இழந்ததில் இருந்து, பல எதிர் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருக்கின்றது. இப்போது இட்லிப் பெரும்பாலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. "ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது, பலருக்கு அந்த பெயர் தெரிந்திருக்கும். ஏனென்றால் அது சிரியாவில் அல்கொய்தாவின் கிளை அமைப்பாக இருந்தது", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவின் ஜிஹாதி ஊடக நிபுணர் மினா அல்-லாமி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது அல்கொய்தா என்ற பெயரின் காரணமாக உள்நாட்டில் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதால், அல்கொய்தாவுடனான தனது உறவை முறித்துக் கொள்வதாக 2016 ஆம் ஆண்டு நுஸ்ரா முன்னணி அறிவித்தது. "எல்லோரும் அல்கொய்தா என்ற பெயரைக் கண்டு பயந்தனர். எனவே, அதிலிருந்து விலகுவதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அறிவித்தது," என்கிறார் மினா அல்-லாமி. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இனி தனித்து செயல்படும் என்றும் எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லை என்றும் அது வலியுறுத்தினாலும், அதற்கு உலகளாவிய ஜிஹாதி லட்சியங்கள் இல்லை என்று கூறினாலும், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை, அதனை அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுவாகக் கருதி, ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பட்டியலிட்டன. சீன உய்குர் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜிஹாதி குழுவான துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி போல ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல குழுக்கள் இங்கு இருப்பதாக, சிரியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சார்கிஸ் கசார்ஜியன் கூறுகிறார். பெரும்பாலான துருக்கி ஆதரவு போராளிகளை இட்லிபில் இருந்து வெளியேற்றிய பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இந்த பகுதியை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. "இந்த குழுவில் அமைச்சகங்களும் இருக்கின்றன. அதன் அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் செயல்படுகிறார்கள், புதிய திட்டங்களைத் தொடங்குகிறார்கள், புனரமைப்பு செய்கிறார்கள், பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்" என்று மினா அல்-லாமி கூறுகிறார். "இட்லிப் தன்னை ஒரு தனி நாடாக கருதி, சொந்தமாக மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், உலக நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது". சிரியா அரசாங்கத்தையும், சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரானையும் துருக்கி எதிர்த்து வந்தது. 2017 ஆம் ஆண்டில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்த பேச்சுவார்த்தையில், மோதலை நிறுத்தும் நோக்கில் இட்லிப் உட்பட பிற பகுதிகளில் போரின் தீவிரத்தைக் குறைக்கும் மண்டலங்களை அமைக்க துருக்கி ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. அதற்கு அடுத்த ஆண்டு, அங்குள்ள கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அரசாங்கப் படைகளைப் பிரிப்பதற்காக, ரஷ்யாவும் துருக்கியும் இட்லிப் மாகாணத்தில் ஒரு ராணுவ பாதுகாப்பு மண்டலத்தை (buffer zone) உருவாக்க ஒப்புக்கொண்டன. நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் - மனைவி, மகனை காப்பாற்ற உயிர்விட்ட தந்தை10 டிசம்பர் 2024 அஃப்ரினை கட்டுப்படுத்துவது யார்? சிரியாவின் வடமேற்கில் ஒரு காலத்தில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அஃப்ரின், இன்று துருக்கியின் ஆதரவு பெற்ற அசத்தின் எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில், குர்திஷ் ஒய்பிஜி (YPG) போராளிகளைக் கொண்ட ஒரு எல்லைப் பாதுகாப்புப் படையை அமைப்பதற்கான அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, எல்லையின் மறுபக்கத்தில் உள்ள குர்திஷ் படைகள் மீது துருக்கி மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது. குர்திஷ் ஒய்பிஜி போராளிகளை, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியின் தென்கிழக்கில் போரை நடத்திய பிகேகே (PKK) என்ற போராளிக் குழுவின் ஒரு பகுதியாகவும் துருக்கி கருதியது. அப்போதிலிருந்து, துருக்கி மற்றும் அதன் சிரிய ஆதரவு குழுக்கள் இப்பகுதியை கட்டுப்படுத்தி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2017 இல் துருக்கி, தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரிய தேசிய ராணுவம்' என்ற பெயரில் ஒன்றிணைத்தது "2017 ஆம் ஆண்டு, துருக்கி தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரியா தேசிய ராணுவம்' (SNA) என்ற பெயரில் ஒன்றிணைத்தது. இதற்கு முன்பு அது சுதந்திர சிரியா ராணுவம் (FSA) என்ற பெயரில் அழைக்கப்பட்டன. 'சிரியா தேசிய ராணுவம்' ஆனது துருக்கி ராணுவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட குழுக்கள் அல்லது சுல்தான் முராத் பிரிவு போன்ற உளவு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் இயக்கம் (Muslim Brothers), கத்தாருடன் இணைந்த பிற குழுக்களை உள்ளடக்கியது. "எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த குழுக்கள் ஜிஹாதி குழுக்களுடன் இணைந்து செயல்படவில்லை, ஆனால் துருக்கியின் கொள்கைகள், பிராந்தியத்தின் முன்னுரிமைகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றது. எனவே, அவர்கள் குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகளுக்கும், சிரியா அரசாங்கப் படைகளுக்கும் கடும் எதிராக உள்ளனர்", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவை சேர்ந்த மினா அல்-லாமி கூறுகிறார். துருக்கியின் ஆதரவுடன் சிரியா தேசிய ராணுவம், இன்று அஃப்ரின் முதல் ஜராப்லஸ் வரையிலும், யூப்ரடீஸ் நதியின் மேற்கில் உள்ள பகுதிகளையும், டெல் அபியாட் முதல் கிழக்கில் ராஸ் அல்-அய்ன் வரையிலான பகுதிகளையும் கட்டுப்படுத்துகிறது. நவம்பர் 30 ஆம் தேதியன்று, அவர்கள் அலெப்போவின் வடக்கில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலை தொடங்கினர் மற்றும் முன்னர் குர்திஷ் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட டெல் ரிஃபாத் நகரம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினர். சிரிய தேசிய ராணுவமானது சிரிய இடைக்கால அரசாங்கம் என்ற பெயரிடப்பட்ட சிரிய நிர்வாக அதிகாரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் துருக்கி அரசாங்கமும் ராணுவமும் இந்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு10 டிசம்பர் 2024 தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் சென்னை அங்காடித் தெருவின் கதை9 டிசம்பர் 2024 மன்பிஜியை கட்டுப்படுத்துவது யார்? வடக்கில் இருக்கும் மற்றொரு முக்கியமான குழு, `சிரியா ஜனநாயகப் படை' (SDF) ஆகும். குர்திஷ் மற்றும் அரபு போராளிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களின் இந்த கூட்டணி யூப்ரடீஸ் நதியின் கிழக்கில் இருந்து இராக் எல்லை வரையிலும் மற்றும் மேற்கில் மன்பிஜ் நகரம் வரையிலும் உள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில், சிரியா ஜனநாயகப் படை வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் (Autonomous Administration) என்ற பெயரில் ஒருதலைப்பட்சமாக ஒரு நிறுவனத்தை அறிவித்தது. இது சிரியா பிராந்தியத்தின் கால்வாசி பகுதியை கட்டுப்படுத்துகிறது. மேலும், இங்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய ராணுவ தளங்களும் இருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிரியா ஜனநாயகப் படைகள் ஐஎஸ் குழுவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாகக் கருதப்படுகின்றனர் "சிரியா ஜனநாயகப் படை (SDF), மற்ற கிளர்ச்சிக் குழுக்களில் இருந்து வேறுபட்டு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா வழியாக இரண்டு நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி, ஒரு சர்வதேச சட்டபூர்வமான ஆட்சியை நிறுவ முயற்சிக்கிறது" என்கிறார் பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹாட் எர்க்மென். "ஒருபுறம், அவர்கள் சிரியாவின் நல்ல எதிர்காலத்திற்காக சிரியா அரசாங்கத்துடன் எவ்வாறு ஒருங்கிணைய முடியும் என்பதை தீர்மானிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம், அவர்கள் சிரியா கடுமையாக எதிர்க்கும் அமெரிக்காவுடன் நெருக்கமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பையும் பராமரிக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார். துருக்கி எல்லையில் சிரியா ஜனநாயகப் படையின் (SDF) இருப்பு துருக்கிக்கு முக்கிய கவலையாக உள்ளது. பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அலெப்போவிற்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறியதற்கான நோக்கங்களில் ஒன்று, வடக்கில் இருக்கும் ராணுவ நடவடிக்கையற்ற இடைப்பட்ட பகுதி தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த அசாத் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது தான். அமெரிக்காவில் ரூ.237 கோடிக்கு ஏலம் போன ஒரு ஜோடி காலணி - அதில் என்ன சிறப்பு?9 டிசம்பர் 2024 பிரெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? அதில் என்ன இருக்கிறது?7 டிசம்பர் 2024 சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதா? அரபு மொழியில் `ஐஎஸ்ஐஎஸ்' அல்லது`தைஷ்' என்றும் அழைக்கப்படும் தங்களை ஐ.எஸ் அமைப்பு என்று கூறுகின்றனர். ஐஎஸ் அமைப்பு 2014 ஆம் ஆண்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பற்றி அறிவித்தது மற்றும் பல ஆண்டுகளாக சிரியா மற்றும் இராக்கின் பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் அமைப்பின் தோற்றம் சிரியாவில் போரின் போக்கை மாற்றியது. மேலும், இந்த அமைப்பை தோற்கடிக்க 70க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான ஒரு கூட்டணி உருவாவதற்கு வழிவகுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த கூட்டணி சிரியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பை முற்றிலுமாக வெளியேற்றியது. ஆனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடுப்பு முகாம்களில் ஐ.எஸ் குழுவினர் என்று சந்தேகிக்கப்பட்டுபவர்களுடன், ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் "அது ஒரு கிளர்ச்சிக் குழுவாக உருமாறியுள்ளது,`ஹிட் மற்றும் ரன்' (திடீரென தாக்குதல் நடத்தி, உடனடியாக பின்வாங்குதல்) வகையில் தாக்குதல்களை நடத்துகிறது. சிரியாவில் அதன் பலம் மிகவும் தீவிரமாக உள்ளது, மேலும் இந்த ஆண்டு அதன் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன" என்று மினா அல்-லாமி கூறுகிறார். சிரியா ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் விடுவிக்கப்பட்டால், சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு மீண்டும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். ஐ.எஸ் தோல்வியடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. சுமார் 11,500 ஆண்கள், 14,500 பெண்கள் மற்றும் 30,000 குழந்தைகள் குறைந்தது 27 தடுப்பு மையத்திலும் அல்-ஹோல் மற்றும் ரோஜ் ஆகிய இரண்டு தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளனர். "ஐ.எஸ் அமைப்பு அந்த முகாம்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கிறது. அந்த முகாம்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படுகிறதா, பாதுகாப்பு பலவீனமாகிறதா என்ற நிலைவர அது காத்திருக்கிறது. அப்போது, இந்த முகாம்கள் மற்றும் சிறைகளுக்குள் நுழைந்து அவர்களால் அங்குள்ள மக்களை விடுவிக்க முடியும்" என்கிறார் மினா அல்-லாமி. "வடக்கு சிரியாவில் துருக்கி தலைமையிலான ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஐஎஸ் எதிர்பார்க்கும் அந்த நெருக்கடி வரும். ஒருவேளை குர்திஷ் படைகளுக்கு எதிராக அல்லது சிரியாவில் ஷியா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தாலும் அங்கு நெருக்கடி ஏற்படும்" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cp31yxy2l4qo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.