Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, goshan_che said:

நான் செய்யலாம், செய்யவேண்டியது என சொல்லுவது எதுவுமே நாம் இருக்கும் நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது அல்ல.

செய்யுங்கள்    வாழ்த்துக்கள்    🙏

49 minutes ago, goshan_che said:

ஏன் உருவாக்க முடியாது - நாம் இருக்கு நாடுகளில் இருந்து ஆரம்பிக்கலாம்.

மேற்கில் இலங்கையின் இந்த நட்புவட்டம் ரஜீவ் கொலை, 1994 இல் கதிர்காமர் வருகையோடுதான் கட்டி எழுப்பபட்டது.

ஏன் நம்மால் மட்டும் முடியாது.

அப்படி முடியுமானால். ஏன் இதுவரை செய்யவில்லை  

போற போக்கை பார்த்தால்  தமிழ் ஈழம். எடுப்போன். என்பீர்கள். போல். உள்ளது” 🤣🙏🤣🙏🤣🙏🤣🙏🤣

  • Replies 145
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

சங்கு சின்னத்தில் அரியத்தாரை நிற்பாட்டும் போது, இப்படியான லூசுத்தனமான வேலைகளை செய்தால் சனம் தமிழ் அரசியல் கட்சிகளை கைவிட்டு, தேசியக் கட்சிகள் பக்கம் போகும், முக்கியமாக அனுரவின் / ஜேவிபியின் வெற்றி  இத

valavan

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒ

ரஞ்சித்

இங்கு அநுரவிற்காகக் காவடி தூக்கு சந்தர்ப்பவாதிகள் கூறுவது போல வெறுமனே மாவீரர்களின் புகைப்படத்தை வைத்திருந்தமைக்காக மட்டுமே காணொளி வெளியிடுவோர் இராணுவத்தால் கைதுசெய்யப்படவில்லை. மாறாக தமிழர் நலன் தொடர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, Kandiah57 said:

செய்யுங்கள்    வாழ்த்துக்கள்    🙏

அப்படி முடியுமானால். ஏன் இதுவரை செய்யவில்லை  

போற போக்கை பார்த்தால்  தமிழ் ஈழம். எடுப்போன். என்பீர்கள். போல். உள்ளது” 🤣🙏🤣🙏🤣🙏🤣🙏🤣

🤣 நான் செய்வேன் என எங்கே எழுதினேன்.

நான் தேத்தண்ணி கடை வாங்கில் இருந்து கதைக்கும் மனிதன்.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்கள், நிற்பதாக காட்டி கொள்பவர்கள் இப்போ செய்வதை விட்டு விட்டு, நான் சொல்வதை செய்யலாம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

🤣 நான் செய்வேன் என எங்கே எழுதினேன்.

நான் தேத்தண்ணி கடை வாங்கில் இருந்து கதைக்கும் மனிதன்.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்கள், நிற்பதாக காட்டி கொள்பவர்கள் இப்போ செய்வதை விட்டு விட்டு, நான் சொல்வதை செய்யலாம்.

🤣. சொல்வது சுகம் சுலபம்  இலகுவனது    உடம்பில் நோகாது   செலவுமில்லை    ஆனால் 

செய்வது  கடினம்     கஷ்டம்   உடம்பில் நோகும்.   செலவு கூட    நேரமும் வேண்டும்      யாழில் மேயவே நேரமில்லை     

முதலில் நீங்கள் செய்து காட்டுங்கள்   அதைப்பார்த்து   செய்கிறேன்     

குறிப்பு,....எதையும் பார்த்து செய்வது தான் எனது வழக்கம்   

யோசித்து  செய்வது அறவே இல்லை  பிடிக்காது    🤣🤣🤣🤪🥰😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Kandiah57 said:

நான் உங்களையும் செய்யுங்கள் என சொல்லவில்லை அண்ணை.

தேத்தண்ணி கடை வாங்கில் எனக்கு பக்கத்தில் இருந்து கதைக்கும் இன்னொரு ஆள்தான் நீங்களும்,  என்பது எனக்கும் தெரியும்.

 2009 க்கு முன்பே நான் இப்படித்தான்.  

சொந்த வாழ்விலேயே உலக மகா சோம்பேறியான என்னை நீங்கள் இனத்துக்கு வழி காட்ட சொன்னால் - இது நடக்கிறகாரியமா?

என்னால் முடியுமானது - எழுதுவது, ஒற்றுமையாக கூட்டம் போட்டால், போராடினால் அதில் ஒரு தலையாக போய் நிற்பது, தேவை என படின் என்னால் ஆன நிதியை கொடுப்பது.

ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை.

கள்ளர்களினதும், புலனாய்வு ஏஜெண்ட்களினதும், மொக்கர்களினதும் தலைமைதுவ கேடால் - அவர்கள் விலகி போய்விட்டார்கள்.

இப்படியான செயல்வீரர்களுக்குத்தான் நான் எழுதும் செய்தி.

யாழில் எழுதும் என்னை, உங்களை போன்ற விசைப்பலகை வீரருக்கு அல்ல.

நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, goshan_che said:

தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம்.

ஒன்றாகப் பயணித்து இருந்தால் சிலவற்றையாவது அடைந்து இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்துகள் எதுவுமில்லை, கோஷான்.

ஆனால் இரண்டு விடயங்கள் என்றுமே சிக்கலாக இருக்கின்றன.

முதலாவது, புலம்பெயர் சமூகத்தின் எல்லையும், பங்களிப்பும். புலம்பெயர் சமூகம் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்ற தோரணையில் தாயக மக்களுடன் பயணிப்பதை அவர்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. எந்தப் பிரதேச மக்களும் இன்னொரு பிரதேச மக்களின் அதிகாரப் போக்கை ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். சூழ்நிலைகளால் சிலவேளைகளில் அவர்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில்  ஏற்றுக் கொள்கின்றார்கள் போன்று தெரியலாம், ஆனால் இது நீடிக்காது. இன்று இதுவே அங்கு நடக்கின்றது. 

இரண்டாவது, புலம்பெயர் சமூகம் கேட்கும் சுயநிர்ணய கோட்பாட்டின் அதிகார அலகு. கோட்பாடு என்ற வகையில் இதில் தப்பேதும் இல்லை, ஆனால் விளைவாக நடைமுறைச் சாத்தியம் அற்ற அதிகார அலகு ஒன்றை தீர்வாக முன்வைப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. உதாரணமாக, இங்கு அமெரிக்காவில் இருக்கும் சில சிவில் அமைப்புகள் சில மாதங்களின் முன் சமஷ்டி தீர்விற்கு உடன்படோம், தனிநாடு மட்டுமே தீர்வு என்று கையெழுத்து வாங்கினார்கள். இதை என்னவென்று சொல்வது....................     

Posted
4 hours ago, goshan_che said:

நாம் அந்த வேலைக்கு சரிவரமாட்டோம் என்பது எனக்கு எப்பவோ தெரியும்🤣

நானும் இதில் என்னையும் இணைத்துக் கொள்கின்றேன்.

இந்த விசைப்பலகை வீரம் கூட தேத்தண்ணியில் ஊறிய மலிபன் பிஸ்கட் போல கொஞ்சம் கொஞ்சமாக நமுத்துப் போய்க் கொண்டு இருக்கு இப்ப.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஓகோ... கதவை தட்டினத்திற்கே பதுங்கிய வீர மறவர்கள் தான் 
புலிக்கொடியை போர்த்திக்கொண்டு முகநூலில் பயர் விடுகினமா.      

பிறநாடுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அமெரிக்காவில் கதவைத் தட்டியவுடன் கதை முற்றும் முடிந்துவிடுகின்றது. அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்.................

பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்.............🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

ஆனால் புலம்பெயர் தேசத்தில் பல வினைதிறனான செயல்வீரகள் இருக்கிறார்கள். 2009 உடன் அவர்கள் எல்லாரும் செத்து விடவில்லை

அவர்கள் செத்து விடவில்லை,.ஆம்,.ஆனால்  அவர்களுக்கு கட்டளை இடும். கட்டளைப்பீடம்   பூண்டோடு இறந்து விட்டது”   அத்துடன் இவர்களின் வினைத்திறனும். இறந்து விட்டது   

இறுதியில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் ஒற்றுமையாக செய்ய முடியாது   எனபது மிக மிக உறுதியாகியுள்ளது  நன்றி வணக்கம்…   🙏🙏 நீங்கள் தேனீரை குடியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, goshan_che said:

ஜேவிபி நாட்டை ஒட்டு மொத்தமாக கியூபா போல், ஜனநாயகமற்ற ஒரு கம்யூனிச நாடாக்க போராடினார்கள்.

புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தமிழீழ குடியரசாக்க போராடினார்கள்.

சோசலிச ஜனநாயக இலங்கை குடியரசின் இருப்புக்கு இரெண்டு போராட்டங்களும் ஏற்படுத்திய ஆபத்து ஒரே மாதிரியானதே.

ஆனால் வேறுபாடு

ஒன்று பெளத்த சிங்கள மேலாண்மையை பேணும்,

மற்றையது நாட்டின் வட-கிழக்கில் இந்த மேலாண்மைக்கு சாவு மணி அடிக்கும்.

இந்த வேறுபாடுதான், இருவரையும் வேறு விதமாக கையாள அடிப்படை காரணம்.

புலிகளை போல, ருகுணு தனிராச்சியம் கோரி தெற்கில் ஒரு சிங்கள் குழு போராடி இருந்தால் -அதுவும் கூட ஜேவிபி போல் மன்னிக்கப்பட்டிருக்கும்.

ஜனநாயகமற்ற  நாட்டை என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்..அவர்களிடம் நாட்டை அந்த நேரம் கொடுத்திருந்தால் சில நேரம் எமது நாடு சிங்கப்பூராய் மாறி இருக்கும்...அதே  நேரம் கடும் இன வாதிகளாய் இருந்த இவர்களை இல்லாமல் அழித்ததும் சிங்கள அரசும் ,மக்களும் என்பதை மறந்து விட கூடாது.

இவர்கள் செய்ததை விட நூறு மடங்கு ஆபத்து புலிகள் செய்ய நினைத்தது.....முற்றாக அழித்த பின்னர் கூட துவாராக உருவாக்கி இருக்கிறா ...தலைவர து பிள்ளைகள் உயிரோடு இருந்தால் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ரதி said:

ஜனநாயகமற்ற  நாட்டை என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்..

🤣 இரெண்டு புரட்சிகளின் போதும் எப்படி பட்ட ஒரு நாட்டை தாம் கட்டமைக்கப்போகிறோம் என அவர்கள் கூறியது இப்போதும் எழுத்தில் இருக்கிறது தேடி படியுங்கள்.

நிச்சயம் அவர்கள் ஒரு கியூபா, சோவியத் பாணியிலான அரசை அமைக்கவே போராடினார்கள்.

29 minutes ago, ரதி said:

எமது நாடு சிங்கப்பூராய் மாறி இருக்கும்.

எமது நாடு கியூபா போல மாறி இருக்கும்.

அதுவும் கெடுதல் இல்லை - உலக தரமான இலவச மருத்துவம் உள்ள நாடு கியூபா.

ஆனால் விஜேவீரவின் ஜேவிபி நாட்டை சிங்கப்பூர் போல ஒரு போதும் ஆக்கியிராது.

31 minutes ago, ரதி said:

இவர்கள் செய்ததை விட நூறு மடங்கு ஆபத்து புலிகள் செய்ய நினைத்தது.....

இல்லை. புலிகளும், ஜேவிபியும் ஆபத்தை விளைவிக்க நினைக்கவில்லை.

இலங்கையில் இருந்த நிலையை மாற்ற (வேறுபட்ட நிலைகளில்) முயன்றார்கள்.

அதாவது இலங்கையில் நிலவிய status quo வை மாற்ற விழைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, ரதி said:

முற்றாக அழித்த பின்னர் கூட துவாராக உருவாக்கி இருக்கிறா ...தலைவர து பிள்ளைகள் உயிரோடு இருந்தால் 

உருவாகியது போலி துவாரகா -அவர் ரோவின் பொம்மை. 

ஆனால் புலித்தேவனும் நடேசனும் இப்போ இருந்திருந்தால் - சமஸ்டி நோக்கிய ஒரு அரசியலைதான் முந்தள்ளி இருப்பார்கள் என நினைக்கிறேன்.

2 hours ago, Kandiah57 said:

இறுதியில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் ஒற்றுமையாக செய்ய முடியாது   எனபது மிக மிக உறுதியாகியுள்ளது  நன்றி வணக்கம்…   🙏🙏 நீங்கள் தேனீரை குடியுங்கள். 

இதுதான் மருந்து குடியுங்கள் என சொல்லத்தான் முடியும். 

இல்லை நாண்டு கொண்டு நிண்டு சாவோம் என்றால் தேனீரை ஆற முதல் குடிப்பதை தவிர வழியில்லை.

3 hours ago, ரசோதரன் said:

முதலாவது, புலம்பெயர் சமூகத்தின் எல்லையும், பங்களிப்பும். புலம்பெயர் சமூகம் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்ற தோரணையில் தாயக மக்களுடன் பயணிப்பதை அவர்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. எந்தப் பிரதேச மக்களும் இன்னொரு பிரதேச மக்களின் அதிகாரப் போக்கை ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். சூழ்நிலைகளால் சிலவேளைகளில் அவர்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில்  ஏற்றுக் கொள்கின்றார்கள் போன்று தெரியலாம், ஆனால் இது நீடிக்காது. இன்று இதுவே அங்கு நடக்கின்றது. 

இரு தரப்பும் bigger picture ஐ யோசித்து நெகிழ்வு போக்கை கடைபிடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

இரண்டாவது, புலம்பெயர் சமூகம் கேட்கும் சுயநிர்ணய கோட்பாட்டின் அதிகார அலகு. கோட்பாடு என்ற வகையில் இதில் தப்பேதும் இல்லை, ஆனால் விளைவாக நடைமுறைச் சாத்தியம் அற்ற அதிகார அலகு ஒன்றை தீர்வாக முன்வைப்பதால் ஆகப்போவது எதுவுமில்லை. உதாரணமாக, இங்கு அமெரிக்காவில் இருக்கும் சில சிவில் அமைப்புகள் சில மாதங்களின் முன் சமஷ்டி தீர்விற்கு உடன்படோம், தனிநாடு மட்டுமே தீர்வு என்று கையெழுத்து வாங்கினார்கள். இதை என்னவென்று சொல்வது....................     

இந்த மொக்குதனத்தை புலம்பெயர் அமைக்புகள் கைவிடுவதோடு, கஜேசையும் கைவிட வலியுறுத்த வேண்டும்.

இப்போ கூடாரம் காலியாகி அனுரா பக்கம் போவதை கண்டதும் புலம்பெயர் தமிழர்+கஜே தம் நிலைப்பாட்டில் இருந்து இறங்க தயாராகி விட்டனர் என நினைக்கிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, goshan_che said:

@Kandiah57 @ரசோதரன்

புலிகள் ஆயுதத்தை மெளனித்த போது….

புலம் பெயர் மக்களே எம் கொடியை தூக்கி செல்லுங்கள்…. என்றோ…

புலம்பெயர் மக்களே எம்மை உலக அரங்கில் புனிதர்களாக்குங்கள் என்றோ கேட்டகவில்லை.

அவர்கள் தாம் உலக அளவில் ஒரு toxic brand ஆக வந்து விட்டோம் என்று தெரிந்தே…அத்தோடு நிறுத்தினார்கள்.

தொடர்ந்து புலம்பெயர் சமூகம் ஒரு பொறுப்பான சிவில் கட்டமைப்பை நிறுவி, அதில் 2009 மே யிற்கு முற்பட்ட எதையும் கலக்காமல் - தாயக அரசியலையும் கூட்டிணைத்து பயணித்து இருந்தால் 15 வருடத்தில் பலதை சாதித்திருக்கலாம்.

ஆனால் நடந்தது இதற்கு நேர் எதிரானது.

இனியும் திருந்தவாய்ப்புள்ளது.

வாய்ப்பை பிடிப்பதும் விடுவதும் நம் கையில்தான் உண்டு.

அருமையான கருத்து. எனது பாணியில் நான் கூறுவதற்கும் இதற்கும் கருதியலில் வேறுபாடு இல்லை. நன்றி. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/12/2024 at 18:00, ரதி said:

பவனிசன், பயங்கரவாத சட்டம் பற்றி கடைசியாய் ஒரு காணொளி போட்டு இருந்தார் ...பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

@ரதி யை மீண்டும் கண்டது சந்தோஷம்🥰

யூடியூப்பர்களை எல்லாம் பின்தொடர்ந்துகொண்டிருந்தால் ஏன் என்று தெரியாமலேயே ஸ்குரோல் செய்வீர்கள். இது brain rot என்று சொல்லப்படுகின்றதாம். மீண்டும் யாழுக்கு வந்து அறிவார்ந்தவர்களுடன் உரையாட ஆரம்பித்தது நல்ல சகுனம்☺️

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ரசோதரன் said:

இரண்டு விடயங்கள் என்றுமே சிக்கலாக இருக்கின்றன.

முதலாவது, புலம்பெயர் சமூகத்தின் எல்லையும், பங்களிப்பும்......

உண்மை அவற்றை நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

4 hours ago, ரசோதரன் said:

பிறநாடுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அமெரிக்காவில் கதவைத் தட்டியவுடன் கதை முற்றும் முடிந்துவிடுகின்றது.

இங்கு பல நாடுகளில்  யாரும் கதவை தட்டாமலே  அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன்  தமிழ்ஈழம் கதையே முடிந்துவிட்டது

3 hours ago, ரதி said:

அவர்களிடம் நாட்டை அந்த நேரம் கொடுத்திருந்தால் சில நேரம் எமது நாடு சிங்கப்பூராய் மாறி இருக்கும்.

இல்லை அவர்கள் கொள்கைபடி கியூபா வெனிசுலா கம்போடியா போன்ற நாடாக தான் இலங்கை உருவாக்கபட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரதி said:

அவர்களிடம் நாட்டை அந்த நேரம் கொடுத்திருந்தால் சில நேரம் எமது நாடு சிங்கப்பூராய் மாறி இருக்கும்...அதே  நேரம் கடும் இன வாதிகளாய் இருந்த இவர்களை இல்லாமல் அழித்ததும் சிங்கள அரசும் ,மக்களும் என்பதை மறந்து விட கூடாது.

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு?

அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை.

Untitled.png

2 hours ago, ரதி said:

இவர்கள் செய்ததை விட நூறு மடங்கு ஆபத்து புலிகள் செய்ய நினைத்தது.....முற்றாக அழித்த பின்னர் கூட துவாராக உருவாக்கி இருக்கிறா ...தலைவர து பிள்ளைகள் உயிரோடு இருந்தால் 

அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது  உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா?

தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?

  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, valavan said:

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு?

அப்பப்போ பாட்ஷா ரஜனிமாதிரி வந்து உருட்டிபோட்டு ஓடிறீங்கள் அதுதான் தமிழ் மக்கள் மனசில் உள்ள கவலை.

Untitled.png

அதாவது இலங்கைக்குள் புலிகள் தனிநாடு உருவாக்க நினைத்தது ஜேவிபியைவிட ஆபத்தான செயலா? அப்போ கொழும்பில் இருந்தவனையெல்லாம் 58/77/83ல் அடிச்சு மட்டக்களப்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் சிங்களவன் விரட்டிவிட்டு அது உங்கள் இடம் ஓடுங்கோடா என்று கலைச்சுவிட்டது  உங்கநாடு இதுதான் என்று சிங்களவன் சொன்னது மாதிரி இல்லையா?

தனிநாட்டை முதலில் கோடு போட்டு காட்டியது சிங்களவனா தமிழனா?

பின்னூட்டத்தின் முதல் பகுதியை வாசித்து இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, valavan said:

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை 

நன்றாக சொன்னீர்கள் ஜேவிபியின்கொள்கை படி சிங்கப்பூர் ஏகாதிபத்திய முதலாளித்துவ சுரண்டல் நாடு. கம்யூனிச ஆட்சியால் ஒரு நாடு நன்றாக வரும் என்றால் ஈழ தமிழர்கள் அங்கே தான் இருப்பார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இங்கு பல நாடுகளில்  யாரும் கதவை தட்டாமலே  அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன்  தமிழ்ஈழம் கதையே முடிந்துவிட்டது

ஆச்சரியம் தான், நம்மவர்கள் அநுர மீது காட்டும் பரிவும், ஆதரவும்.

நான் மானசீகத் தேர்தலிலும், களத் தேர்தல் போட்டியிலும் அநுரவையே தெரிந்தெடுத்திருந்தேன். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியையே தெரிந்தெடுத்திருந்தேன். அப்படித்தான் நடக்கும் என்று முற்றாக நம்பியும் இருந்தேன். நம்மவர்கள் அநுரவை தள்ளியே வைப்பார்கள் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பவை தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன.................😶.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கம்யூனிச ஆட்சியால் ஒரு நாடு நன்றாக வரும் என்றால் ஈழ தமிழர்கள் அங்கே தான் இருப்பார்கள்.

🤣..............

அதெல்லாம் கரெக்டா பார்த்து, கரெக்டான இடங்களில் இருந்து கொள்வோம்..................

இப்ப கூட செவ்வாய் கிரகம் தான் திறம் என்று சொன்னார்கள் என்றால், எலான் மஸ்க்கின் ராக்கெட்டுக்குள்ளே அவருக்கே தெரியாமலேயே நாங்கள் இருப்போம்.............. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, valavan said:

சரி ஆசைப்பட்டபடி இப்போ அதே ஜேவிபியிடம் நாடு போய்விட்டது இன்னும் எத்தன வருஷத்தில் இலங்கை சிங்கப்பூராகும் என்று உங்க தீர்க்க தரிசனத்தால் சொல்லிவிடுங்க

கம்யூனிச ஆட்சியால் சிங்கப்பூராக மாறிய உலகின் ஒருநாட்டை சொல்லுங்கள் ரதி அறிந்துகொண்டால் அண்டா அளவு மகிழ்ச்சி.

அதவிட முக்கியம் சிங்கப்பூரே முதலாளித்துவநாடாச்சே அப்போ கம்யூனிஸ்ட்டுக்களிடம் நாட்டை கொடுத்தால் சிங்கப்பூர்போல முதலாளித்துவ நாடு ஆக்கிடுவார்களா? அப்புறம் எதுக்கு கம்யூனிச கொள்கை அவர்களுக்கு?

சிங்கப்பூர் முதலாளித்துவ நாடுதான். ஆனால் அங்கே கம்யூனிச ஆட்சியை விட சட்ட திட்டங்கள் மிக கட்டுப்பாடானது.
சீனாவிலும் முதலாளித்துவ கொள்கை உண்டு. ஆனால் சட்ட திட்டங்கள் கம்யூனிச  கொள்கை போன்றே இருக்கும்.

சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஜனாதிபதி மகனுக்கு மன்னிப்பு கொடுக்கும் சட்டதிட்டங்கள் இல்லை. மக்கள் கஷ்ரப்பட கொரோனா பார்ட்டி எல்லாம் வைக்க முடியாது.மனித வாழ்விற்கு இயல்பில்லாத ஒலிம்பிக் கண்காட்சிகள் இடம் பெறாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேள்வி ஜேவிபி செய்யமுனைந்தது கம்யூனிஸ புரட்சி, ஆனால் சிங்கப்பூரில் நடந்தது ஜேவிபி வெறுத்த, ஜே ஆர் விரும்பிய திறந்த பொருளாதார புரட்சி என்பதை பற்றியது.

நீங்கள் சீனாவை கொண்டு வந்து மரத்தில் கட்டி இருக்கிறியள்.

பாப்பம் இதை வல்லவன் எப்படி கையாள்கிறார் என🤣.

1 hour ago, குமாரசாமி said:

சிங்கப்பூர் முதலாளித்துவ நாடுதான். ஆனால் அங்கே கம்யூனிச ஆட்சியை விட சட்ட திட்டங்கள் மிக கட்டுப்பாடானது.
சீனாவிலும் முதலாளித்துவ கொள்கை உண்டு. ஆனால் சட்ட திட்டங்கள் கம்யூனிச  கொள்கை போன்றே இருக்கும்.

சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் ஜனாதிபதி மகனுக்கு மன்னிப்பு கொடுக்கும் சட்டதிட்டங்கள் இல்லை. மக்கள் கஷ்ரப்பட கொரோனா பார்ட்டி எல்லாம் வைக்க முடியாது.மனித வாழ்விற்கு இயல்பில்லாத ஒலிம்பிக் கண்காட்சிகள் இடம் பெறாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

கேள்வி ஜேவிபி செய்யமுனைந்தது கம்யூனிஸ புரட்சி, ஆனால் சிங்கப்பூரில் நடந்தது ஜேவிபி வெறுத்த, ஜே ஆர் விரும்பிய திறந்த பொருளாதார புரட்சி என்பதை பற்றியது.

🤣.

இதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே எழுதி வருகிறேன். ஜேவிபியால் ஒரு போதும் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள வைக்க முடியாது என்று. 

ஏனெனில் அவர்களது கொள்கை அதற்கு எதிர்மறையானது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, விசுகு said:

இதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே எழுதி வருகிறேன். ஜேவிபியால் ஒரு போதும் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள வைக்க முடியாது என்று. 

ஏனெனில் அவர்களது கொள்கை அதற்கு எதிர்மறையானது. 

விருப்பு அடையாளம்  முடிவடைந்துவிட்டது

எல்லாவிதத்திலும் எதிர்மறையான கொள்கை கொண்ட ஜேவிபியை தமிழர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் கற்பனை பண்ணி பிரசாரமும் செய்து மகிழ்கிறார்களே ஒன்றுமே விளங்குது இல்லை 🙄

இதுவும் ஒன்று
ஜேவிபியும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் போன்று ஜேவிபிக்கு தமிழர்களின் வலி தெரியுமாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

விருப்பு அடையாளம்  முடிவடைந்துவிட்டது

எல்லாவிதத்திலும் எதிர்மறையான கொள்கை கொண்ட ஜேவிபியை தமிழர்கள் தங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் கற்பனை பண்ணி பிரசாரமும் செய்து மகிழ்கிறார்களே ஒன்றுமே விளங்குது இல்லை 🙄

இதுவும் ஒன்று
ஜேவிபியும் இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் போன்று ஜேவிபிக்கு தமிழர்களின் வலி தெரியுமாம்

இது தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாகும். இதை வைத்து கொஞ்ச நாளைக்கு தமிழ் தேசியத்தை வறுக்கலாம் வெருட்டலாம் என்ற கற்பனை தான்.

ஆனால் மாவீரர் நாளில் தாயகம் இவர்களை வெட்கப்பட வைத்துவிட்டது.

Edited by விசுகு

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.