Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சீரற்ற வானிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும் வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறைந்த பின்னர் பயிர் சேதம் தொடர்பான விபரங்களை சேகரித்து நட்டஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அழிவடைந்த பயிர்களை மீள பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட பயிர்களுக்கு மேலதிகமாக மலையக மற்றும் தாழ்நில மரக்கறி விவசாயிகள் மற்றும் பழ விவசாயிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் கருணாரத்ன, அவர்களுக்கும் ஓரளவு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196627

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஏக்கருக்கு 40,000/= என்பது விவசாயிகள் செலவழித்த நாட்கூலிக்கே போதாது…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

ஒரு ஏக்கருக்கு 40,000/= என்பது விவசாயிகள் செலவழித்த நாட்கூலிக்கே போதாது…

இனி இப்படியான பொரிகள்,  பொதிகள் அள்ளி வழங்கப்படட்டு அவை யானைகளாக காட்சி(வீடியோ) பெரிப்பித்து ஊதப்படுவது தொடரும் ...

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

இனி இப்படியான பொரிகள்,  பொதிகள் அள்ளி வழங்கப்படட்டு அவை யானைகளாக காட்சி(வீடியோ) பெரிப்பித்து ஊதப்படுவது தொடரும் ...

இதிலும் நம்மவர்கள் முன்னாலும் பின்னாலும் __________ போல அலையினம்

Edited by alvayan
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விசுகு said:

இனி இப்படியான பொரிகள்,  பொதிகள் அள்ளி வழங்கப்படட்டு அவை யானைகளாக காட்சி(வீடியோ) பெரிப்பித்து ஊதப்படுவது தொடரும் ...

அது உண்மை வெறும் வாயாலேயே  இப்போ  ஊதுகிறார்கள்  வெள்ளத்தால் யாழ்பாணத்தில் சாப்பாட்டு பிரச்சனையே இல்லையாம் ஜேவிபி அரசு பாத்து பாத்து உதவி செய்கின்றதாம்

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களுக்கான நிர்வாகச் சுதந்திரம் அவர்களின் கைகளுக்கு வரும்போது அவர்களின் பொருளாதாரச் சுதந்திரமும், தன்னிறைவுப் பொருளாதாரமும் அவர்களின் கைகளுக்குத் தானாக வந்துவிடும். அப்படி வரக்கூடாது, தமிழர்கள் தெற்கையே எல்லாவற்றிற்கும் தங்கியிருக்க வேண்டும் என்ற‌ சிங்களப் பேரினவாதத்தின் கொள்கையின்படியே இவை யாவும் நடந்துவருகின்றன. தமிழர்களை பொருளாதாரத்தில் நலிந்தவர்களாக மாற்றி, பேரினவாதத்தின் கொடுங்கரங்களில் இருந்து தமக்கு ஏதாவது பிச்சை கிடைக்காதா எனும் ஏங்கும் நிலை திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று அநுர எனும் சிங்கள இனவாதிக்குக் காவடி தூக்கும் சில சந்தர்ப்பவாதிகள் இதனை நன்கு உணர்ந்துகொண்டே பின்னால் செல்கின்றனர். அவர்களைப்பொறுத்தவரையில் அவர்களது இலாபம் முக்கியம், இதில் மகிந்த ஆட்சியில் இருந்தாலென்ன, அநுர இருந்தாலென்ன‌, அவர்களுக்கு வித்தியாசம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது உண்மை வெறும் வாயாலேயே  இப்போ  ஊதுகிறார்கள்  வெள்ளத்தால் யாழ்பாணத்தில் சாப்பாட்டு பிரச்சனையே இல்லையாம் ஜேவிபி அரசு பாத்து பாத்து உதவி செய்கின்றதாம்

 

இது தான் சகோ 

சீமான் சொல்லும் அதிகாரம். அது எவன் கைவசம் இருக்கிறதோ அதுவே வேதம் தத்துவம் கட்டளை..

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம்,  இந்த  சிறு உதவி அவர்களுக்கு ஆறுதல்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஞ்ச ஏதோ பெருசா நடந்திருக்கு…நான் தான் மிஸ் பண்ணிட்டன்🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிரியா - இப்போதும் சிரியாவாக இருக்க, ஆட்சிக்கு வந்திருக்கிற கூட்டத்துக்கு  கிடைத்ததற்கு  - அசாத்தும், தகப்பனும் காரணம். அடு மட்டும் ஆள்ள - சிரிய சனத்தின்  மதத்தீவிர போக்கை முடக்கி, நவீனத்தை  நோக்கி நகர வைத்தது தகப்பனும், அசாத்தும். சிரியாவுக்கு 50 வருடங்களில் - எப்போதும் வெளிஅச்சுறுத்தல - முக்கியமாக வல்லூறினால். அசாத் வென்று  இருந்தால் தேடித் சென்று தோண்டி எடுத்து எரிக்கும் போக்கு அல்ல - இது தான் அசாத்துக்கும், இப்பொது வந்துள்ளதுக்கும்  உள்ள வேறுபாடு (முதலில் அசாத் பகுதியாக வென்று இருந்தார், எதிர்த்த உயிரோடு பிடிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை, கொலை உட்பட) மேற்கு, அதன் எதிரி என்பதால் சிறையை, அசாத்தின் இரும்பகர நசுக்கலை  தூக்கி பிடிக்கிறது.   (அசாத்தை போல புலிகள் செய்தது - மற்ற இயக்கங்களை போட்டு தள்ளியது - பின்பும் சந்தேகத்தில் குடும்பதோடு இரவோடு இரவாக  கைது செய்து  போட்டு தள்ளியது - குடும்பங்கள் விடுக்கப்ட்டது - ஆனால் பூதவடல்கள் கொடுக்கப்படவில்லை -  மறுக்க  முடியமா? பல்வேறு பின் சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மற்ற இயக்கங்களை புலிகள் போட்டதின் மிக முக்கிய காரணம் புலிகள் தலைமைக்கு அச்ச்சுறுத்தல், தலைமையை பாதுகாப்பது என்ற புலிகளின் (கிட்டத்தட்ட) paranoia - ஆட்சி / அதிகாரத்தில் இருக்கும் போடு தான் அந்த மனப்பிரமை எவ்வளவு யதார்த்தமாக தோன்றும் என்பது. மற்ற இயக்கங்கள் எதிர்ப்பு தொடர்ந்து  இருந்தால் ... நிலைமை எப்படி இருந்து இருக்கும்?) ஆட்சி என்பது சமநிலைப்படுத்தி தான் பார்க்க முடியும், பார்க்கப்பட வேண்டும்.
    • ChessMood  ·  Suivre 17 h  ·  The updated list of the World Chess Champions The reigning World Champion: Gukesh Dommaraju பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் . .......!   💐
    • இது ஒரு பிழையான கூற்றாகும், முதலில் சிங்களவரும், முஸ்லிங்களும் ஆகும், அதன் பின்னர் தான் தமிழர்கள் ஆவார்கள். மற்றவர்களை விட அநேகமான தமிழர்கள் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதினால் ( உண்டியல்) அதன் பயனை இலங்கை பெறுவதில்லை. 2021 இல் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகள் இருந்து இலங்கையிலிருந்து/இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணப் பரிமாற்றங்களின் மதிப்பு (மில்லியன் அமெரிக்க டாலர்களில்)   https://www.statista.com/statistics/1411921/bilateral-remittances-sri-lanka/#:~:text=For Sri Lanka%2C the top,India%2C Australia%2C and Canada.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.