Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பலஸ்தீன மக்களுக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீனியர்களின் போராட்டம்

பலஸ்தீனியர்களின் போராட்டம், சர்வதேச சட்டம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட அமைதியான மற்றும் சமத்துவமான தீர்மானத்தை பின்தொடர்வதில் இருந்து உலகம் பின்வாங்கக் கூடாது என்பதை நினைவூட்டுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம் : ஜனாதிபதி வலியுறுத்தல் | Palestinian Territories Unacceptable Anura

இந்த இக்கட்டான தருணத்தில் ஒருமித்த தீர்மானத்தை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் பிளவுகளை ஒதுக்கிவிட்டு, பகைமை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்த குரலில் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இந்த சவாலான காலகட்டத்திலும், 1967 ஆம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட,இரு நாடுகளின் தீர்வு உட்பட, தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/palestinian-territories-unacceptable-anura-1733028724

பாலஸ்தீனத்துக்கு சமஸ்டியை வலியுறுத்தும் ஜனாதிபதி அனுரா

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை வழங்குவாரா?

4 minutes ago, ஈழப்பிரியன் said:

பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

சரிக்கு சரியாக தமிழர்களுக்கும் இதே அழிவுகள் நடக்கும்போது ஜனாதிபதி தமிழர்களுக்காக குரல் கொடுக்கலையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தினியர்களுக்கு வந்தால் இரத்தம்

தமிழர்களுக்கு வந்தால் சட்னியா?

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

பாலஸ்தினியர்களுக்க வந்தால் இரத்தம்

தமிழர்களுக்கு வந்தால் சட்னியா?

இது புரிந்தால் குற்றம்???

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....

தோழர் தோழர் தோழர்.

  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர் அனுரவுக்கு தூரப்பார்வை.

அருகே இருப்பவை எதுவும் தெரியாது, சில ஆயிரம் மைலுக்கு அப்பால் எண்டால் கொதித்திடுவார், கொதித்து🤣

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா,..😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....

 இலங்கை பிரஜாவுரிமையும் இருக்கும் நாட்டு பிரஜாவுரிமையும் வைத்துக்கொண்டு,  பல லட்சம்  டாலர்களில்  சிங்கள நகரங்களிலே சொகுசு பங்களாக்கள், வியாபாரங்கள், வாகனங்கள் வைத்துக்கொண்டு

இலங்கைக்கு எந்த சீசனில் பிளட் டிக்கெட் மலிவாக கிடைக்கும் என்று அடிக்கடி  ஒன் லைலில் செக் பண்ணிக்கொண்டு,

சிங்கள அரசு அனுமதியை சிரித்தபடி பெற்று அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்து , ஐயா அம்மா யாழ்ப்பாண நண்டு, பருத்துறை வடை, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், தோலகட்டி நெல்லிரசம் வாங்கலியோ என்று  மேற்குலத்திலேயே பகிரங்க விளம்பரம் செய்துகொண்டு

இன வரிசையில்தான் இலங்கையில் இரண்டாமிடம் ஆனால் இலங்கை திறைசேரிக்கு  அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் இலங்கையின் முதலாவது இனமாக இருந்துகொண்டு

திருமணங்களும், சொகுசு பங்களாக்களும் பார்ட்டிகளும் ஒன்று கூடல்களுக்கும் , கோவில் திருவிழாக்களுக்கும் இலங்கையிலேயே அதிகமாக செலவிடும் இனமாக இருந்துகொண்டு

தமிழர்களிடம் வாக்கு வாங்கி சிங்கள அரசின் சொகுசு மகிழூந்து, தங்குமிடம்,ஒப்பந்தங்கள்,  வியாபாரத்திலிருந்து சாராய அனுமதிபத்திரம்வரை வாங்கி கொழுத்துக்கொண்டு

கடலுணவிலிருந்து லிருந்து விவசாய உற்பத்தி பொருட்கள் வரை சிங்கள தேசத்திலேயே சந்தை படுத்திக்கொண்டு

அதி சொகுசு பேரூந்துக்களில் இலங்கை முழுவதும் சுற்றுலா செய்துகொண்டு அதை ஆயிரக்கணக்கில் காணொலிகளாக இணையத்தில் தரவேற்றிக்கொண்டு

இலங்கை தமிழரும் பாலஸ்தீனமும் ஒன்று எங்களின்  சுய நிர்ணய உரிமையை ஏன் அங்கீகரிக்கவில்லையென்று கேட்டால், உலக தலைமை நாடுகள் கண்டிப்பாக தரும் வரிசையில் நில்லுங்க வாங்கிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....

யாழ் களத்தில் என்று அடிச்சு சொல்லுங்க....அந்தளவு அலை வீசுது..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

தோழர் தோழர் தோழர்.

தமிழ் தேசியர்கள் புரிந்து கொள்ள இது சாதாரண தோழமையல்ல 
அதையும் தாண்டி புனிதமானது.. ...😅

41 minutes ago, alvayan said:

யாழ் களத்தில் என்று அடிச்சு சொல்லுங்க....அந்தளவு அலை வீசுது..

எத்தனையோ அலை வந்து போய்விட்டது ...பார்ப்போம் இந்த அலை எவ்வளவு காலம் எண்டு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

 இலங்கை பிரஜாவுரிமையும் இருக்கும் நாட்டு பிரஜாவுரிமையும் வைத்துக்கொண்டு,  பல லட்சம்  டாலர்களில்  சிங்கள நகரங்களிலே சொகுசு பங்களாக்கள், வியாபாரங்கள், வாகனங்கள் வைத்துக்கொண்டு

இலங்கைக்கு எந்த சீசனில் பிளட் டிக்கெட் மலிவாக கிடைக்கும் என்று அடிக்கடி  ஒன் லைலில் செக் பண்ணிக்கொண்டு,

சிங்கள அரசு அனுமதியை சிரித்தபடி பெற்று அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஏற்றுமதி இறக்குமதி செய்து , ஐயா அம்மா யாழ்ப்பாண நண்டு, பருத்துறை வடை, ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், தோலகட்டி நெல்லிரசம் வாங்கலியோ என்று  மேற்குலத்திலேயே பகிரங்க விளம்பரம் செய்துகொண்டு

இன வரிசையில்தான் இலங்கையில் இரண்டாமிடம் ஆனால் இலங்கை திறைசேரிக்கு  அந்நிய செலாவணியை அள்ளிக்கொடுக்கும் இலங்கையின் முதலாவது இனமாக இருந்துகொண்டு

திருமணங்களும், சொகுசு பங்களாக்களும் பார்ட்டிகளும் ஒன்று கூடல்களுக்கும் , கோவில் திருவிழாக்களுக்கும் இலங்கையிலேயே அதிகமாக செலவிடும் இனமாக இருந்துகொண்டு

தமிழர்களிடம் வாக்கு வாங்கி சிங்கள அரசின் சொகுசு மகிழூந்து, தங்குமிடம்,ஒப்பந்தங்கள்,  வியாபாரத்திலிருந்து சாராய அனுமதிபத்திரம்வரை வாங்கி கொழுத்துக்கொண்டு

கடலுணவிலிருந்து லிருந்து விவசாய உற்பத்தி பொருட்கள் வரை சிங்கள தேசத்திலேயே சந்தை படுத்திக்கொண்டு

அதி சொகுசு பேரூந்துக்களில் இலங்கை முழுவதும் சுற்றுலா செய்துகொண்டு அதை ஆயிரக்கணக்கில் காணொலிகளாக இணையத்தில் தரவேற்றிக்கொண்டு

இலங்கை தமிழரும் பாலஸ்தீனமும் ஒன்று எங்களின்  சுய நிர்ணய உரிமையை ஏன் அங்கீகரிக்கவில்லையென்று கேட்டால், உலக தலைமை நாடுகள் கண்டிப்பாக தரும் வரிசையில் நில்லுங்க வாங்கிக்கலாம்.

சகலதும் உண்மை ...ஆனால் பலஸ்தீனர்களும் நீங்கள் சொல்லும் சகலதையும் செய்கின்றனர் ...மத்திய கிழக்கு நாடுகளில் மேற்குலக நாடுகளில் ...நீங்கள் கூறிய எம்மவர்கள் செய்யும்  சகல செய்ல்களையும் செய்கின்றனர்...இஸ்ரேலுக்கு சென்று தான் பலஸ்தீன மேற்கு கரைக்கு செல்ல வேண்டும் அண்மையிலும் பல்ஸ்தீனர்கள் அவுஸ்ரேலியாவிலிருந்து செல்கின்றார் ...ஆயுத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இஸ்ரேலுக்கு மறைமுகமாக  எவ்வளவு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றனர் ....ஜெருசலத்திற்கு செல்கின்றனர் ...வருமானம் இஸ்ரேலுக்கு போகின்றது ...

அவர்களுக்கு மட்டும் சுயநிணய உரிமை உண்டு ...அவ‌ர்கள் இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்ய தேவையில்லை
ஆனால் ஈழத்தமிழருக்கு சுயநிர்ணய் உரிமையில்லை,இலங்கையருடன் இணக்க அரசியல் செய்ய வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல 

பலஸ்தீனர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் ஒரு பழைய பெண்ஸ் கார் வாங்கி ஓடாமல் விடமாட்டார்கள் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/12/2024 at 21:48, putthan said:

இந்த திரியே ஒடவில்லை அவ்வளவவுக்கு அனுரா விசுவாசிகள் களத்தில் உண்டு போல ....

என் வீடு சரியில்லை. அதாவது என் அரசியல்வாதிகள் நூறுவீதம் சரியில்லை.

அப்படியிருக்க நான் ஏன் எதிரியின் வேலியை எட்டிப்பார்க்க வேண்டும்? 

எதிரியே பல தடவைகள் உங்கள் அரசியல்வாதிகள் சரி இல்லை என சொல்லிவிட்டான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அநுர அரசு பாலஸ்தீன பிரதேசத்தில் குடியேறிய அரபிக்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜேவிபியைப் போல ஜனநாயக வழிக்கு வருமாறு கோரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

என் வீடு சரியில்லை. அதாவது என் அரசியல்வாதிகள் நூறுவீதம் சரியில்லை.

அப்படியிருக்க நான் ஏன் எதிரியின் வேலியை எட்டிப்பார்க்க வேண்டும்? 

எதிரியே பல தடவைகள் உங்கள் அரசியல்வாதிகள் சரி இல்லை என சொல்லிவிட்டான். இதற்கு மேல் என்ன விளக்கம் வேண்டும்?

எதிரி பலதும் சொல்வான் ..அதற்காக தாயகத்தில் உள்ள தமிழர்கள்  ஒதுங்கவில்லை தமிழ் தேசியம் என்ன என்பதை மாவீரர் தினத்தில் மக்கள் நன்றாகவே உணர்த்தியுள்ளனர் .தமிழ் அரசியல்வாதிகளின் சொத்து அல்ல தமிழ் தேசியம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, putthan said:

எதிரி பலதும் சொல்வான் ..அதற்காக தாயகத்தில் உள்ள தமிழர்கள்  ஒதுங்கவில்லை தமிழ் தேசியம் என்ன என்பதை மாவீரர் தினத்தில் மக்கள் நன்றாகவே உணர்த்தியுள்ளனர் .தமிழ் அரசியல்வாதிகளின் சொத்து அல்ல தமிழ் தேசியம்...

ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.