Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஏற்கனவே பகிரங்கமாக , ஆம் நான் மதுபானசாலை அனுமதிக்கு சிபாரிசு செய்தேன் என்று பகிரங்கமாக சொன்ன விக்னேஸ்வரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது?

இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

large.IMG_7854.jpeg.e428fd2e17542e2db1a7

  • Replies 108
  • Views 6.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • "நாய் விற்ற காசு குரைக்காது" என்பார்கள். ஆனால், நாய் விற்ற காசு பல சமயங்களில் விற்றவரின் பின்பக்கத்தை கவ்வும் என்பதே உண்மை. பார் விவகாரம் நடக்கும் தாயகத்தில் இருந்து பல்லாயிரம் மைல்கள் அப்பால், அ

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

large.IMG_7854.jpeg.e428fd2e17542e2db1a7

பாம்பு சாணாக்ஸ்? முதலை சுமன்?

———

விக்கியர் 1 (மேல் மாகாணத்திலும் இன்னொன்றாம் என கதை ஆனால் அவர் இன்னும் ஒத்து கொள்ளவில்லை) 

16 எண்டால் எப்படி ஒத்து கொள்வது? கொஞ்சமாவது மானம் ஈனம் இருக்கும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7854.jpeg.e428fd2e17542e2db1a7

இதில் எது நடக்குதோ இல்லையோ, ஆனால் தொங்கிக் கொண்டிருக்கின்ற மனுஷனின் வேட்டியை யாழ் களத்தில் இழுத்து அவிழ்த்துவிடுவார்கள்.................

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kavi arunasalam said:

இவரும் ஒத்துக் கொண்டிருந்தால், பிரச்சினை இப்போதுவரைக்கும் நீண்டிருக்காது. “நிரூபித்தால் எம்பி பதவியை துறப்பேன்“ என்று சொல்லிவிட்டு போட்டோவுக்கு நமட்டுச் சிரிப்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பதால் விடயம் அனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

large.IMG_7854.jpeg.e428fd2e17542e2db1a7

உண்மைதான், பட்டுவேட்டி ஜிப்பா துண்டு போட்டு நெற்றியில் பட்டை, சந்தண பொட்டு குங்கும பொட்டு எல்லாம் வைத்து சிவகடாட்சமாக தவறணைக்கு சிபாரிசுகடிதம் கொடுத்த உலகின் முதல் சிவ பக்தன் ஐயா விக்னேஷ்தான்,

ஓவியத்தில் மிகவும் விருப்புடைய எனக்கு அதில் தேர்ச்சிபெற முடியவில்லை, அருணாச்சலம் ஐயாவின் கருத்தோவியங்கள் சர்வதேச பத்திரிகளுக்கான உலக தரம்.

உடனடியாகவே சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் கொட்டி கிடக்கும் அசாத்திய திறமை உங்களுடையது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அதிகூடிய தண்டனைகள் எங்கள் நாட்டுச் சட்டத்திலும் இருக்கும், ஆனால் இதுவரை அப்படி ஒரு தீர்ப்பும் வந்ததாக நான் அறியவில்லை. இங்கேயும் அந்த தீர்ப்புகள் வராது என்றே நான் நினைக்கின்றேன்.

பலரின் கணிப்பும் அதுதான் யசோ,

பார்க்கலாம் புதிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்ற அநுரவின் ஆட்சி எந்த நோக்கில் நகரும் என்று

2 hours ago, Justin said:

இது அறம் சம்பந்தப் பட்ட விடயம், சட்டப் படி முறையாக சாராயக் கடை வைத்திருப்போரை எதுவும் செய்ய இயலாது. சாராயக் கடை திறப்பதை சட்ட விரோதமாக்க வேண்டுமானால் சாராயப் பாவனையை சட்ட விரோதமாக்க வேண்டும். இதை யாராவது செய்திருக்கிறார்களா?

நீங்கள் சொல்வது சரி ஜஸ்டின் நானும் அறம் சார்ந்த விஷயமாகவே அந்த கருத்தை வைத்தேன் மற்றும்படி மதுவிலக்கை நான் வலியுறுத்தவில்லை, அது சாத்தியமும் இல்லை,

எடுத்ததுக்கெல்லாம் தலையை வெட்டும் ஆனானப்பட்ட சவுதியிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் திருட்டுதனமாக பழங்களை கொண்டு வடி சாராயம் காய்ச்சுவதை அறிந்திருக்கிறேன்.

1 hour ago, ரதி said:

அரசு இந்த விபரங்களை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை ஏதோ ஒரு விடயத்தில் அடி பணிய வைக்க பயன்படுத்தும் 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு அரசானது எவருக்கும் அடிபணிந்து போகவோ அடி பணிய வைக்க சூழ்ச்சிகள் செய்யவோ தேவையில்லை ரதி , அரசு சொல்வதை பிறர் கேட்டே ஆகவேண்டிய பலம் அவர்களோடது.

அதை ஆரோக்கியமான விஷயங்களுக்கு பாவிப்பார்களா என்பதே காலமும் மக்களும் எதிர்பார்க்கும் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரசோதரன் said:

இதில் எது நடக்குதோ இல்லையோ, ஆனால் தொங்கிக் கொண்டிருக்கின்ற மனுஷனின் வேட்டியை யாழ் களத்தில் இழுத்து அவிழ்த்துவிடுவார்கள்.................

கொட்டாப்பட்டி போட்டிருக்காரோ என்னமோ🤣

@valavan

இவர்களுக்கு குற்றவியல் தண்டனை கொடுக்க, நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றம் நிரூபிக்க படல் வேண்டும். இது மிக கடினம்.

அப்படி என்றாலும் இலஞ்சமாக அனுமதி கொடுத்த ரணில்தான் முதலில் உள்ளே போவார்.

மகிந்த, ரணிலை உள்ளே போட்டால் அனுரவுக்கு தில் என்பதை நானும் ஏற்பேன்.

எம் அரசியல்வாதிகளை பொறுத்தமட்டில் ஓரளவு மக்கள் நம்பும் படி ஆதாரம் வந்தால் - அடுத்த தேர்தலில் வாக்குகள் குறையும். தோற்பார்கள் என சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கொட்டாப்பட்டி போட்டிருக்காரோ என்னமோ🤣

ஏன் இன்னொருவர் இந்த வெயிலிலும் கோட் சூட் போட்டுக்கொண்டு திரிகின்றார் என்று கேட்டோமே........ அவருக்கு இப்படி நடக்கும் என்று அப்பவே தெரிந்திருக்கின்றது...............🤣.

ரணிலின் மூளை தன்னந்தனியாகவே இந்த மாதிரி ஆட்களை கவிழ்க்கும் வழிகளை யோசிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது தான், ஆனால் வேறு எவரும் ஆலோசனைகள் வழங்கியும் இருப்பார்களோ..................😜.  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

இதன் மூலம் தமிழரசு இந்த இருவரிடமும் இருந்து விடுபட்டால், ரணில் எமக்கு செய்த ஒரே நல்ல விசயமாக அது இருக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மகிந்த, ரணிலை உள்ளே போட்டால் அனுரவுக்கு தில் என்பதை நானும் ஏற்பேன்.

அநுரவைப் பொறுத்த மட்டில் மஹிந்தவை விட ரணில் ஆபத்தானவர். எனவே ரணிலின் குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்காகத்தான் இந்த பார் உரிமம் குறித்து தோண்டுகிறார்கள். பாவம் ரணிலுக்கு வைச்ச வெடியில் பார் சிறிதரனும் ஆப்பிட்டுக்கொண்டார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இதில் எது நடக்குதோ இல்லையோ, ஆனால் தொங்கிக் கொண்டிருக்கின்ற மனுஷனின் வேட்டியை யாழ் களத்தில் இழுத்து அவிழ்த்துவிடுவார்கள்.................

அதற்கு யாழில் நடக்கும் போட்டியில் வரிசையில் நிற்கவும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

அநுரவைப் பொறுத்த மட்டில் மஹிந்தவை விட ரணில் ஆபத்தானவர். எனவே ரணிலின் குடியுரிமையைப் பறிக்கவேண்டும் என்பதே அவரது எண்ணம். அதற்காகத்தான் இந்த பார் உரிமம் குறித்து தோண்டுகிறார்கள். பாவம் ரணிலுக்கு வைச்ச வெடியில் பார் சிறிதரனும் ஆப்பிட்டுக்கொண்டார்!😂

இருக்கலாம்…எமக்கு முள்ளிவாய்க்காலால் மகிந்த மீது கோவம். ஜேவிபிக்கு பட்டலந்த வால் ரணில் மீது கோவம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 12:38, ஏராளன் said:

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியல் இன்று மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பார் அனுமதி பெற்றவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தகவலை வெளியிட்டார்.

https://thinakkural.lk/article/313167

இன்னும் லிஸ்ட் வரவில்லையா ?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, விசுகு said:

அதற்கு யாழில் நடக்கும் போட்டியில் வரிசையில் நிற்கவும் 🤣

நீங்கள் சிரித்தாலும், உங்களின் மனக்கவலை புரிகின்றது, விசுகு ஐயா. அதை நீங்கள் எழுதியும் இருக்கின்றீர்கள்.

உங்களைப் போலவே இங்கு ஒரு அண்ணன் இருக்கின்றார். 'உன்னட்ட நான் இப்ப விளக்கம் கேட்கல்ல, நீ இதை இப்ப செய்வியோ அல்லது மாட்டியோ..............' என்று சொல்லி இடைக்கிடை ஏதாவது செய்யச் சொல்லிக் கேட்பார்.........

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அவர்களது விபரங்கள் வெளி வராது ...அரசு இந்த விபரங்களை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளை ஏதோ ஒரு விடயத்தில் அடி பணிய வைக்க பயன்படுத்தும் 

இதுதான் நடக்கபோகுது .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த சிங்கள சிற்றறிவுக்கு, யாழ், கிளிநொச்சி மாவட்ட மாதுபான அனுமதி பத்திர விபரங்களை மொழி மாற்றம் செய்துள்ளேன். இந்த விபரங்களை வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.

May be an image of text

May be an image of text that says "கிளிநொச்சி மாவட்டம் 2024-02-06 A9 வீதி, கிளிநொச்சி 2024-02-21 2024-04-09 பூநகரி கே ஜெயக்குமார் 09.நந்தாவில் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு கொக்குவில் அலெக்சாண்டர் நிசான் 14/5 வஜிர வீதி, கொழும்பு -04 சங்குப்பிட்டி பிரைவேட் வேட் லிமிடெட், 49 உதயநகர் மேற்கு, கிளிநொச்சி முத்துசாமி சந்திரமௌலீசன் நல்லூர்.யாழ்ப்பாணம் கனகசுந்தரம் ஜீவனேஸ்வரன் 114 பசார் வீதி, வவுனியா A9 வீதி, கரடிப்போக்கு, கிளிநொச்சி 2024-04-10 2024-04-10 2024-04-10 முல்லைத்தீவு வீதி, குமாரசாமிபுரம், விஸ்வமடு நியூ வைன் ஸ்டோர்ஸ் 31,A9 வீதி, கரடிப்போக்கு. கிளிநொச்சி 683/685/687. A9 வீதி கரைச்சி, கிளிநொச்சி 2024-04-10 துமி பிரைவேட் வேட் லிமிடெட் 207/24, 2/1 தர்மபால மாவத்தை, கொழும்பு-0 4 பிரபந்திரம் 888 திருநகர் வடக்கு கிளிநொச்சி விதுரசன் வின்சனுடராஜன் 185, கோவில் வீதி, நல்லூர், wn யாழ்ப்பாணம் 2024-04-10 05, கனக்புரம் வீதி, உதயநகர். 160 மைல் போஸ்ட், 09 வீதி, பரந்தன், கிளிநொச்சி"

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

இந்த விபரங்களை வைத்து கொண்டு எப்படி பார் சிறியை அடித்து துவைத்து காயபோடுவது ? பார் ஸ்ரீயின் சொந்த கம்பனிகளையும் போட்டு விடுங்க அப்பத்தான் சும்மை மறுபடியும் கொண்டுவரலாம் பீல்டில் .

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, zuma said:

எனக்கு தெரிந்த சிங்கள சிற்றறிவுக்கு, யாழ், கிளிநொச்சி மாவட்ட மாதுபான அனுமதி பத்திர விபரங்களை மொழி மாற்றம் செய்துள்ளேன். இந்த விபரங்களை வெளியிடாமல் தமிழ் ஊடகங்கள் கள்ள மௌனம் காப்பதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.

May be an image of text

May be an image of text that says "கிளிநொச்சி மாவட்டம் 2024-02-06 A9 வீதி, கிளிநொச்சி 2024-02-21 2024-04-09 பூநகரி கே ஜெயக்குமார் 09.நந்தாவில் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு கொக்குவில் அலெக்சாண்டர் நிசான் 14/5 வஜிர வீதி, கொழும்பு -04 சங்குப்பிட்டி பிரைவேட் வேட் லிமிடெட், 49 உதயநகர் மேற்கு, கிளிநொச்சி முத்துசாமி சந்திரமௌலீசன் நல்லூர்.யாழ்ப்பாணம் கனகசுந்தரம் ஜீவனேஸ்வரன் 114 பசார் வீதி, வவுனியா A9 வீதி, கரடிப்போக்கு, கிளிநொச்சி 2024-04-10 2024-04-10 2024-04-10 முல்லைத்தீவு வீதி, குமாரசாமிபுரம், விஸ்வமடு நியூ வைன் ஸ்டோர்ஸ் 31,A9 வீதி, கரடிப்போக்கு. கிளிநொச்சி 683/685/687. A9 வீதி கரைச்சி, கிளிநொச்சி 2024-04-10 துமி பிரைவேட் வேட் லிமிடெட் 207/24, 2/1 தர்மபால மாவத்தை, கொழும்பு-0 4 பிரபந்திரம் 888 திருநகர் வடக்கு கிளிநொச்சி விதுரசன் வின்சனுடராஜன் 185, கோவில் வீதி, நல்லூர், wn யாழ்ப்பாணம் 2024-04-10 05, கனக்புரம் வீதி, உதயநகர். 160 மைல் போஸ்ட், 09 வீதி, பரந்தன், கிளிநொச்சி"

May be an image of text

நன்றி சுமா.

சிறிதரனின் அடிப்பொடிகளுக்கு பேதி ஆரம்பமாகி விட்டது, யாழ்களத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு லிஸ்ட் வந்ததுமே🤣.

இனி நிக்காம போகும் என நினைக்கிறேன்🤣.

பல பெயர்கள் இரெண்டு தரம் எடுத்துள்ளார்கள்.

விக்கி கடிதம் கொடுத்தது போல ஏனைய எம்பிகளும் கடிதம் கொடுத்திருந்தால் மாட்டுவார்கள் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சிறிதரனின் அடிப்பொடிகளுக்கு பேதி ஆரம்பமாகி விட்டது, யாழ்களத்தில் உங்கள் மொழிபெயர்ப்பு லிஸ்ட் வந்ததுமே🤣.

நாங்க ஒன்றும் ஸ்ரீயின் அடி பொடி இல்லை முதலில் உங்க சுமத்து யாருக்கு பார் லைசன்ஸ் வாங்கினார் என்று பாருங்க இல்லை என்றால் ....................................................................................?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனுக்கு சிறி வந்த போது சாரதி போல் வளைந்து நெழிந்து சேவை செய்த, வன்னியில் வசித்த,  ஆனால் யாழை பூர்வீகமாக கொண்ட ஒருவரின் உறவினர்களின் பெயரில் ஒரு பார் அனுமதி பத்திரம் கிளிநொச்சியில் வழங்கப்பட்டதாக ஊகம் ரெட்டை கட்டி பறக்கிறது.

யார் அந்த பெரு…ச்சாளி

பிகு

சுமனை போட்டு அடிப்பது, எமனுக்கு கவர் எடுக்கவே🤣

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த பிரச்சனை இன்னும் முடியலையா????

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நான் யார் என்ன செய்கிறன் என்ற விபரங்கள் உங்களிடம் இருக்கு ஆனாலும் யாழில் என்னை பற்றி எழுதும்போது வேறு விதமாகத்தான்  எழுது கிரியல் அதுக்கு நன்றி பாஸ் .

Just now, MEERA said:

அட இந்த பிரச்சனை இன்னும் முடியலையா????

முதலில் அந்த சன்ரைஸ் பப் காணாமல் போகணும் 😄

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

பலரின் கணிப்பும் அதுதான் யசோ,

பார்க்கலாம் புதிய மாற்றத்தை கொண்டுவருவேன் என்ற அநுரவின் ஆட்சி எந்த நோக்கில் நகரும் என்று

நீங்கள் சொல்வது சரி ஜஸ்டின் நானும் அறம் சார்ந்த விஷயமாகவே அந்த கருத்தை வைத்தேன் மற்றும்படி மதுவிலக்கை நான் வலியுறுத்தவில்லை, அது சாத்தியமும் இல்லை,

எடுத்ததுக்கெல்லாம் தலையை வெட்டும் ஆனானப்பட்ட சவுதியிலேயே புலம்பெயர் தொழிலாளர்கள் திருட்டுதனமாக பழங்களை கொண்டு வடி சாராயம் காய்ச்சுவதை அறிந்திருக்கிறேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட ஒரு அரசானது எவருக்கும் அடிபணிந்து போகவோ அடி பணிய வைக்க சூழ்ச்சிகள் செய்யவோ தேவையில்லை ரதி , அரசு சொல்வதை பிறர் கேட்டே ஆகவேண்டிய பலம் அவர்களோடது.

அதை ஆரோக்கியமான விஷயங்களுக்கு பாவிப்பார்களா என்பதே காலமும் மக்களும் எதிர்பார்க்கும் செய்தி.

உதாரணத்திற்கு பிள்ளையான் இந்த தடவை வென்று விடக் கூடாது என்பதற்காய் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு குற்ற புலனாய்வு பிரிவினர் அழைத்தனர் ...அதே மாதிரி இந்த விபங்களையும் பொறுத்தமான நேரம் வரும் போது பயன்படுத்துவர்  என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானசாலை அரசியல்

December 7, 2024
 
வடக்கு, கிழக்கில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு, தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பியிருந்தார். சரி நாங்கள் நாளையே வெளியிடுகின்றோம் என்று அரசாங்க அமைச்சரும் தெரிவித்திருந்தார்.

அதன்படி எந்த மாவட்டத்துக்கு எத்தனை மதுபானசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்னும் தகவல்கள் வெளியாகியிருக்கி;ன்றன. வடக்கு, கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்புக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான பிரச்னைகள் தொடர்பில் குரல் எழுப்பி வந்த, தமிழ் (தேசிய) அரசியல்வாதிகள் இன்று வடக்கு, கிழக்கிற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதனை யாருக்கு வழங்கினார்கள் என்னும் தகவல்களை கோரிவருகின்றனர்.

தங்களுக்குள் இருக்கும் சிலரை தோற்கடித்து, அவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காகத்தான் அதனையும் கோருகின்றனர் – மக்களின் நன்மைக்காக அல்ல – ஏனெனில் தேர்தல் காலத்தில் தங்களின் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மது பானம் வழங்குவதையும் மக்கள் அறிவார்கள். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், இன்று மதுபான சாலைகள் தொடர்பில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் – இது யாருடைய கெட்டித்தனம். ரணில் விக்கிரமசிங்க அதிகார அரசியலிலிருந்து வெளியேறினாலும் கூட, அவரால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அதிர்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளால் இன்னும் விடுபட முடியவில்லை – தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.

மதுபான சாலைகள் தொடர்பான விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன? ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் அரசியல் வாதிகளை தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கில் சலுகையாக, மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை ரணில் வழங்கியிருக்கின்றார். அது ஒரு வகையில் அரசியல் கையூட்டுத்தான். ஆனால் இலங்கைத் தீவின் அதிகார அரசியலில் இவ்வாறான அரசியல் கையூட்டுக்கள் முதலும் அல்ல – அதேபோல் இறுதியுமல்ல. நாடாளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் மதுபானசாலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாக அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருந்தார்.

ஆனால் வடக்கு, கிழக்கில் குறித்த மதுபான சாலைகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்னும் தகவல் ஆதாரபூர்வமாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு வகையில் ரணிலின் தந்திரத்தை இன்னொரு வகையில் அநுர தொடர்கின்றார் போன்றே தெரிகின்றது. அநுரகுமார திஸநாயக்க எண்ணினால் குறித்த விவரங்களை வெளியிடுவது சாதாரண விடயம். ஆனாலும் குறித்த சில தமிழ் அரசியல்வாதிகள், தங்களுடைய எதிர்கால நகர்வுகளுக்கு தேவைப்படலாம் என்பதாலேயே, அநுர குமார விடயங்களை வெளிப்படுத்தாமல் தாமதித்துவருகின்றார்.

அநுர இந்த விடயத்தில் தாமதிப்பதை அல்லது தவிர்ப்பதை வேறு எந்த அடிப்படையில் விளங்கிக்கொள்வது? மதுபானசாலைகள் தொடர்பில் தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகள் அடிக்கடி பேசுவதானது, தமிழ் சமூகத்துக்கு பெருமையல்ல – உண்மையில் சிறுமை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை முதலீடு செய்து, கட்டிக்காப்பாற்றிய தமிழர் விடுதலை அரசியலானது, இன்று எந்த இடத்தில் வந்து நிற்கின்றது? ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மதுபானத்திற்குள் முடக்கியிருப்பதும் கூட, சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றிதான்.
 
https://eelanadu.lk/மதுபானசாலை-அரசியல்/

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. அவை சட்டரீதியாக அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக வழங்கப்பட்டவை.

கடந்த அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை. இந்த  அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம்.

நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. சில எம்.பி.க்கள் பார் உரிமம் பெற சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால்தான் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கான மதுபானசாலைகள் உள்ளன.

இன்னும் 300 உரிமங்களை வழங்கவிருந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம்.  இவற்றில் வருமானம் சேர்க்கப்பட்டால் எவ்வளவு?

கலால் வரி வருவாய் நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். இவற்றை மறைத்து பொய்யான தகவல்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
 
https://oruvan.com/i-was-going-to-issue-300-more-bar-permits-ranil/

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில்

கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. அவை சட்டரீதியாக அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக வழங்கப்பட்டவை.

இவர் இதை தேர்தலுக்கு முன்னர் சொல்லி இருந்தால்...??

இருப்பினும் தமிழ் தலைவர்கள் மீது விழுந்த வீண் பழி தீர்ந்தது. தமிழினம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.