Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D++%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21

இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். 

அரசாங்கம் அரிசி இறக்குமதி விடயத்தில் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளது. 

தற்போது கட்டுப்பாட்டு விலையில் சதொச ஊடாக அரிசி வழங்கப்பட்டாலும், அங்கு வழங்கப்படும் அரிசி தொகை போதுமானதாக இல்லை. 

அரிசிக்கான தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் விரைவாகச் செயற்பட்டு அரிசியை இறக்குமதி செய்திருக்க வேண்டும். 

அரசாங்கம் ஏதேனும் சில காரணங்களுக்காக அரிசியை இறக்கமதி செய்யவில்லை என்பது புலப்படுவதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார்.
 
https://www.hirunews.lk/tamil/390112/இந்தியாவிலிருந்து-வெங்காயத்தை-இறக்குமதி-செய்வதற்குக்-கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால்  மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். 

'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்..............

அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣.

நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

இதைககேட்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இலங்கை ஒரு விவசாயநாடு.முன்பு சிறமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்த பொருளாதாரதடை காரணமாக அதிகளவான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அரசசேவையில் இருப்போர் கூட பகுதியளவில் விவசாயம் சிறுதோட்டங்கள் போனறவற்றைச் செய்து தமக்கான உணவுத்தேவையையையும் பணத்தேவையைுயும் பூர்த்தி செய்து கொண்னர்.அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சின்ன வெங்காயம் அதிக செலவில்லாத குறகிய காலத்தில் 2-3 மதங்களில் பணத்தை ஈட்டக் கூடிய பயராக இருந்தது. மாரிப்போகம் என்றால் தண்ணீர் இறைக்க வேண்டிய தேவையும் இருக்காது.யா;ப்பாணத்தில் வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து வெங்காயத்தைக் கொளவனவு செய்தார்கள்.கார்த்திகை மாதம் அளவில் நட்டு இருதடவை புல்லுப் பிடுங்கி யூரியாவையும் 2 தடவை போட்டு விட்டால் தைை மாசிமாதமளவில் அறுவடைசெய்து உடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அன்று வெங்காயம் வசய்த தோட்டங்களில் இப்பொழது வெங்காயம்பயரிடப்படுவதில்லை. கேட்டால் வேர் அழுகல் நோய் வருவதால்  மாரிப்போக் செய்ய முடியாமல் இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள். விவசாய அமைச்சு இதற்கான ஈராய்ச்சிகளைச் செய்து அதைதடுப்பதற்கான வழிமுறைகளை இலகுவான முறையில் விளங்கப்படுத்தி வெங்காயச் செய்னகயை ஊக்குவிக்க வேண்டும்.அந்தக் காலத்தில்1977 இற்கு முதல் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை இன்று அரிசிக்கும் வெங்காயத்திற்கும் கையேந்துகின்ற நிலமையில் இருக்கிறார்கள்.வெங்காயம் நடுவதற்கும் புல்லுப்பிடுங்குவதற்கும் அறுவடைசெய்வதற்கும் ஒரே நேரத்தில் பல 10-15 கூலிஆட்கள் தேவைப்படுகிறார்கள். இலகுவான வேலை என்பதால் பெண்களே இந்த வேலைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இப்டபொழுது வேலை ஆட்கள் பிடிப்பது மிகவும் கடினம் விவசாயிகள் சொல்கிறார்கள். ஆகவே இப்படியான டீவலைகளுக்குரிய இயந்திரங்களைக் கண்டு பிடித்து அற்முகப்படுத்த வேண்டும். 

இந்தியாவிலிருந்து பம்பாய் வெங்காயம் இறக்குமதி செய்ய கூடாது என போரடியவர்கள் ஜெ.வி.பி யினர் அவர்களிடமே போய் இறக்குமதி செய் எண்டு கேட்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்..............

அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣.

நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜

தட்டுப்பாடு நிகழலாம் என கருத்து உருவானால் இலங்கை தற்போதுள்ள பொருளாதார சூழ் நிலையில் அது பெரிய அழுத்தத்தினை உருவாக்கலாம், இதனை யாரோ திட்ட மிட்ட முறையில் செய்கிறார்கள் எனக்கருதுகிறேன், இதனால் பாதிக்கப்படுவது மக்கள் எனும் அடிப்படை புரிதல் இல்லாமல் வெறும் அரசிய்ல் நோக்கில் செயல்படுகிறார்களோ என தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

இப்போதைய அரிசித் தட்டுப்பாடு என்பது இரண்டு வாரங்களுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். அரிசி மாஃபியாக்கள் இதை திட்டமிட்டு பல வருடங்களாகவே செய்து வருகின்றனர். போன வருடம் என்று நினைக்கின்றேன், பர்மாவிலிருந்து அரிசியை அவசரமாக இறக்கினார்கள். அது தரமற்றது, அத்துடன் பர்மா அதிக விலைக்கு அதை இலங்கைக்கு விற்றது என்ற குற்றச்சாட்டுகளுடன் அது முடிந்தது.

அரிசி மாஃபியாக்கள் எவ்வாறு நெல்லை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றார்கள், அதை எவ்வாறு பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் கூட பகிரங்கப்படுத்துவிட்டன. ஆனாலும், அரசால் அவர்களின் கொள்வனவை தடுக்கவே அல்லது பதுக்கலை தடுக்கவோ முடியவில்லை. இப்போது இந்த பதுக்கல் முதலாளிகளில் ஒருவர் சஜித்தின் கட்சியினூடாக, தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக ஆகியும் விட்டார்.............🫣.

நீங்கள் இன்னொரு அரிசித் திரியில் எழுதியிருப்பது போல ஒரு நீண்டகாலத் திட்டம் வகுக்கப்படவேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்..............

அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣.

நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜

அவசரப்பட்டு ஆரூடம் கூறுகிறீர்கள்.

அரிசி, வெங்காயம் இல்லாமல் ஒரு ஐந்து வருடம் பொறுத்து கொள்ள முடியாதா உங்களால்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

இப்போதைய அரிசித் தட்டுப்பாடு என்பது இரண்டு வாரங்களுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். அரிசி மாஃபியாக்கள் இதை திட்டமிட்டு பல வருடங்களாகவே செய்து வருகின்றனர். போன வருடம் என்று நினைக்கின்றேன், பர்மாவிலிருந்து அரிசியை அவசரமாக இறக்கினார்கள். அது தரமற்றது, அத்துடன் பர்மா அதிக விலைக்கு அதை இலங்கைக்கு விற்றது என்ற குற்றச்சாட்டுகளுடன் அது முடிந்தது.

அரிசி மாஃபியாக்கள் எவ்வாறு நெல்லை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றார்கள், அதை எவ்வாறு பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் கூட பகிரங்கப்படுத்துவிட்டன. ஆனாலும், அரசால் அவர்களின் கொள்வனவை தடுக்கவே அல்லது பதுக்கலை தடுக்கவோ முடியவில்லை. இப்போது இந்த பதுக்கல் முதலாளிகளில் ஒருவர் சஜித்தின் கட்சியினூடாக, தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக ஆகியும் விட்டார்.............🫣.

நீங்கள் இன்னொரு அரிசித் திரியில் எழுதியிருப்பது போல ஒரு நீண்டகாலத் திட்டம் வகுக்கப்படவேண்டும்.  

பெரிய அரிசிமில் முதலாளியே...மைத்திரியின் சகோதரன்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

அவசரப்பட்டு ஆரூடம் கூறுகிறீர்கள்.

அரிசி, வெங்காயம் இல்லாமல் ஒரு ஐந்து வருடம் பொறுத்து கொள்ள முடியாதா உங்களால்?

🤣............

பாண், பருப்பு, அரிசி, வெங்காயம், பெட்ரோல்,................ இவை போன்றவை தான் எங்கள் நாட்டில் தலையாயவை .............

இவை இருந்தால், பின்னர் அரசியல் தீர்வு, புரட்சி, மறுமலர்ச்சி இப்படியானவற்றை பற்றி எல்லோரும் அங்கே கதைப்பார்கள்.

இவை போதியளவு, நியாய விலையில் கிடைக்காவிட்டால், நேரே காலிமுகத்திடல் தான்.................🤣.

படித்தவர்களுக்கு என்றே சில பிரத்தியேக பிரச்சனைகள் இருக்கின்றன........... தலையை விட்டுவிட்டு வாலைப் பிடித்து இழுஇழுவென்று இழுப்பது..................😜. தேசிய மக்கள் சக்தி பட்டுத் தெளியும் என்று நினைக்கின்றேன்..............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பாண், பருப்பு, அரிசி, வெங்காயம், பெட்ரோல்,................ இவை போன்றவை தான் எங்கள் நாட்டில் தலையாயவை .............

இவை இருந்தால், பின்னர் அரசியல் தீர்வு, புரட்சி, மறுமலர்ச்சி இப்படியானவற்றை பற்றி எல்லோரும் அங்கே கதைப்பார்கள்.

இவை போதியளவு, நியாய விலையில் கிடைக்காவிட்டால், நேரே காலிமுகத்திடல் தான்..............

இதுதான் சிங்களவர்களின் பிரச்சினை. ஆனால் தமிழர்களுக்கு இவற்றுடன் கூடவே இனப்பிரச்சினையும் அதன் உபபிரச்சினைகளான காணாமல்போனோர் பிர்சினை>காணிவிடுவிப்பு பிரச்சினை.குடியேற்றப்பிரச்சனை.தமிழ்ப்புகுதிகளில் அத்துமீறிக்கட்டப்படும் விகாரைகள் தொடர்பான பிரச்சினைமாவீரர்களை நினைகூருதல்தொடர்பான பிரச்சினை>அரசியல்கைதிகள் தொடர்பான பிரச்சினை>தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினை>போர்குற்ற விசாரணை தெடர்பான பிரச்சினை முஸ்லிங்கள் தெடர்பான பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

May be an image of 2 people and text
 
வந்திருப்பது சகோதரயாக்களின் ஆட்சி…

அவர்களுக்கு market forces என்றாலே நவதுவாரங்களிலும் “எரியுதடி மாலா”தான்.

ஆகவே இது கொஞ்சம் சிக்கலாக போகும் போலத்தான் இருக்கு.

பாடசாலை சீருடையை தைத்து வழங்கல்….

12 வயதுக்கு கீழ் விளம்பர படங்களில் நடித்தல் ஆகாது என கொஞ்சம் கொஞ்சமாக தம் நனைத்துச் சுமக்கும் பொருளாதார அணுமுறையை புகுத்துகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 07:58, ரசோதரன் said:

இப்போதைய அரிசித் தட்டுப்பாடு என்பது இரண்டு வாரங்களுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். அரிசி மாஃபியாக்கள் இதை திட்டமிட்டு பல வருடங்களாகவே செய்து வருகின்றனர். போன வருடம் என்று நினைக்கின்றேன், பர்மாவிலிருந்து அரிசியை அவசரமாக இறக்கினார்கள். அது தரமற்றது, அத்துடன் பர்மா அதிக விலைக்கு அதை இலங்கைக்கு விற்றது என்ற குற்றச்சாட்டுகளுடன் அது முடிந்தது.

அரிசி மாஃபியாக்கள் எவ்வாறு நெல்லை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றார்கள், அதை எவ்வாறு பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் கூட பகிரங்கப்படுத்துவிட்டன. ஆனாலும், அரசால் அவர்களின் கொள்வனவை தடுக்கவே அல்லது பதுக்கலை தடுக்கவோ முடியவில்லை. இப்போது இந்த பதுக்கல் முதலாளிகளில் ஒருவர் சஜித்தின் கட்சியினூடாக, தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக ஆகியும் விட்டார்.............🫣.

நீங்கள் இன்னொரு அரிசித் திரியில் எழுதியிருப்பது போல ஒரு நீண்டகாலத் திட்டம் வகுக்கப்படவேண்டும்.  

உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள்.

அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்).

நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும்.

இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும்.

இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly).

இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம்.

நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 12:13, goshan_che said:

அரிசி, வெங்காயம் இல்லாமல் ஒரு ஐந்து வருடம் பொறுத்து கொள்ள முடியாதா உங்களால்?

ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார்  அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது. 

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது ரணில், ரணில் 2.0 தயாராகக்கூடும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது அனுர விடயத்தில் உண்மையாகி விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார்  அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது. 

அம்பாந்தோட்டையில்.  20 லட்சம் தொன்   நெல் 20 லட்சம் தொன்  அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா???  சிங்கப்பூர் இல் 100 %   இறக்குமதி தான்   அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப

பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும்   இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும்    

உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.  

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கமும் பொருளாதார சவால்களும்
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

தற்போது ரணில், ரணில் 2.0 தயாராகக்கூடும், சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது அனுர விடயத்தில் உண்மையாகி விடக்கூடாது.

ஆரம்ப தளம்பல்களின் பின், ஆட்சியாளர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன்.

4 hours ago, Kandiah57 said:

அம்பாந்தோட்டையில்.  20 லட்சம் தொன்   நெல் 20 லட்சம் தொன்  அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா???  சிங்கப்பூர் இல் 100 %   இறக்குமதி தான்   அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப

பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும்   இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும்    

உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.  

தனியார் முதலாளிகளின் அரிசிக் குடோன்கள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு இரகசியத் தகவல் அல்ல. ஆனால், அவற்றை அரசு கையகப்படுத்தலாமா, இல்லையா என்பதே சட்டச் சிக்கல்.  

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்திடமிருந்து வெங்காயம் இறக்குமதி,......😁

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லா விளைச்சலிலும் முன்னிலை வகித்தது தமிழர் பிரதேசம். தமிழரை அழிக்கிறோம், அவர்களின் பொருளாதாரத்தை இடிக்கிறோம்என்று கங்கணம் கட்டி ,நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டு, இப்போ வேறு நாட்டை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதுதான் இனவாதத்தின் வெற்றி.

13 hours ago, Kandiah57 said:

அம்பாந்தோட்டையில்.  20 லட்சம் தொன்   நெல் 20 லட்சம் தொன்  அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா???  சிங்கப்பூர் இல் 100 %   இறக்குமதி தான்   அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப

பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும்   இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும்    

உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.  

பதுக்குவோர்தான் பொருள் தட்டுப்பாடை ஏற்படுத்துவது. மக்களிடையே  இல்லாமையை ஏற்படுத்தி தாம்  பிழைப்பது. பறிமுதல் செய்ய வேண்டும் அல்லது வேறு வழியில் பிரச்சனையை கையாண்டு, அவர்களது பதுக்கிய  பொருள் அழிவடைய விட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

இவையெல்லா விளைச்சலிலும் முன்னிலை வகித்தது தமிழர் பிரதேசம். தமிழரை அழிக்கிறோம், அவர்களின் பொருளாதாரத்தை இடிக்கிறோம்என்று கங்கணம் கட்டி ,நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டு, இப்போ வேறு நாட்டை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதுதான் இனவாதத்தின் வெற்றி.

இந்த உண்மை அரசுக்கோ...அது சார்ந்த மக்களுக்கோ உணரும் தன்மை இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.