Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, putthan said:

சண்ணி முஸ்லீம்களின் மத கொள்கைப்படி சிலை வைத்தல்,மாபெரும் தப்பு....சியா தலைவர்களின்...சிலைகலை துவசம் பண்ணுகிறார்கள்

அப்படியும் இருக்கலாம்..........

சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே..........

தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌.

38 minutes ago, putthan said:

அரசியல் திடதன்மை அற்ற சிரியா தான் மேற்குலகுக்கும் ,இஸ்ரேலுக்கும் தேவை அதை நன்றாக செய்துள்ளனர்..

ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..
 

அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.

முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..

சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது.
முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது.
முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.

100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்....

ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?

இருவர் தான் முழு நேரம்.

நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣.

தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம்,  பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣.

எதை வைத்து சொல்கிறேன்?

யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து.

இது எல்லோரும் செய்வதுதான்.

எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம்.

சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை.

என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை.

நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, goshan_che said:

இருவர் தான் முழு நேரம்.

நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣.

தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம்,  பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣.

எதை வைத்து சொல்கிறேன்?

யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து.

இது எல்லோரும் செய்வதுதான்.

எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம்.

சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை.

என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை.

நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது....
இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், 
வலு  அவதானமாக இருக்க வேண்டும்.   
ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... 
சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்... 
எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣  animiertes-gefuehl-smilies-bild-0048

எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...  
சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂
இது... தான், தொழில் ரகசியம். animiertes-gefuehl-smilies-bild-0090

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது....
இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், 
வலு  அவதானமாக இருக்க வேண்டும்.   
ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... 
சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்... 
எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣  animiertes-gefuehl-smilies-bild-0048

எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...  
சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂
இது... தான், தொழில் ரகசியம். animiertes-gefuehl-smilies-bild-0090

இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும்.

சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்…

அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும்.

அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்

நீங்கள்  சீமான் அநுரகுமார திசாநாயக்கவை வலிந்து தேடி சென்று அவர்களால் முன்னேறி வசதியான பாதுகாப்பான வாழ்க்கை  வாழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கவில்லையே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது.

சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? 

புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? 

டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை.

சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.  

தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது.

இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். 

இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

Edited by ரஞ்சித்
Spelling
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/12/2024 at 01:05, goshan_che said:

இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா?

பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️.

@valavan @ரஞ்சித்

கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது.
இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. 

இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.