Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, putthan said:

சண்ணி முஸ்லீம்களின் மத கொள்கைப்படி சிலை வைத்தல்,மாபெரும் தப்பு....சியா தலைவர்களின்...சிலைகலை துவசம் பண்ணுகிறார்கள்

அப்படியும் இருக்கலாம்..........

சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே..........

தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌.

38 minutes ago, putthan said:

அரசியல் திடதன்மை அற்ற சிரியா தான் மேற்குலகுக்கும் ,இஸ்ரேலுக்கும் தேவை அதை நன்றாக செய்துள்ளனர்..

ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..
 
அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, goshan_che said:

வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.

முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, putthan said:

ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..

சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது.
முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு குறை நினைக்கக்கூடாது.
முஸ்லீம் நாடுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் வெகுதூரம். அடக்க ஆள் இல்லை என்றால் ஆளுக்கொரு சிந்தனை,கருத்துக்களுடன் வருவார்கள். மந்தைகளை அடக்க ஒரு மேய்ப்பன் தேவையோ அது போல் இவர்களை அடக்கவும் ஒரு சர்வதிகாரி தேவை.

100% உண்மை ...அதை நன்றாக பாவிக்கின்றனர் மேற்கும் அமேரிக்காவும்....

ரஸ்யாவுக்கும் அமேரிக்காவுக்கும் ஆயுத வியாபாரம் அமோகமா நடை பெற இவர்களின் சித்தாந்தம் ,கொள்கைகள் நன்றாகவே உதவுகின்றது ..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

முழுநேர மேற்குலகு எதிர்ப்பாளர்கள் என எதை வைத்து குற்றம் சாட்டுகின்றீர்கள்?

இருவர் தான் முழு நேரம்.

நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣.

தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம்,  பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣.

எதை வைத்து சொல்கிறேன்?

யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து.

இது எல்லோரும் செய்வதுதான்.

எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம்.

சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை.

என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை.

நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது....
இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், 
வலு  அவதானமாக இருக்க வேண்டும்.   
ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

அத்துடன்... எல்லாத்தையும், வலு  உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... 
சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து  பக்காவாக செய்யும் போது தான்... 
எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம்  கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான்.  🤣  animiertes-gefuehl-smilies-bild-0048

எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...  
சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂
இது... தான், தொழில் ரகசியம். animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும்.

சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்…

அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும்.

அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்

நீங்கள்  சீமான் அநுரகுமார திசாநாயக்கவை வலிந்து தேடி சென்று அவர்களால் முன்னேறி வசதியான பாதுகாப்பான வாழ்க்கை  வாழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது.

சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? 

புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? 

டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை.

சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.  

தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது.

இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். 

இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

Edited by ரஞ்சித்
Spelling

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2024 at 01:05, goshan_che said:

இதை யாழ்களத்தில் fact-check பண்ண, மறுத்துரைக்க ஒருவரும் இல்லையா?

பழையகாய் ஒன்று பச்சை வேறு குத்தியுள்ளார்🤷‍♂️.

@valavan @ரஞ்சித்

கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது.
இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. 

இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டிலை எறிந்தவுடன் கெளவுவதற்கு மீன்கள்  ஆயத்தமாக உள்ள.

😁

2 hours ago, ரஞ்சித் said:

அடித்தால் மொட்டை விட்டால் குடுமி. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது.
இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. 

இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

மிக்க நன்றி ரஞ்சித்.

யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம். 
 
உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏.

நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன்.

அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம்.

ஏனையவர்களின் பிரச்சனை வேற.

அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம்.

அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி.

இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம்.

பார்க்கலாம்….

We are fighting a good fight, keep at it👍

8 hours ago, தமிழ் சிறி said:

எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்...  
சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂

இது எம்போன்றோருக்கு சரி…

ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்…

அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது.
இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. 

இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா 

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, ரஞ்சித் said:

ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை.

எதையும் சொல்லவும்.

ஆனல், நான் குறிப்பாக நடந்ததை, விபரத்தை சொல்லி இருக்கிறேன்.

தயவு செய்து  திரிக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2024 at 16:44, ரசோதரன் said:

'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்..............

தமிழ் நாட்டில் நடந்தது என்று அறிநது - எல்லா இயக்கங்களும் தமிழ் நாட்டில் பலவிதமாக உதவி  செய்தவரும், புலிகளுக்கு எந்த விதத்திலும் எதிர்ப்பு இல்லாதவரும, உண்மையில் ஆதரவாளரும் சொல்லியது. பெயர் கூட சொன்னார். இதனால் தான் (வேறு ஒருவர் சொல்லியது) விபரம்  நான் சொல்ல இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை.

எத்தனை முறை நிருபிப்பது ?

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பந்தி பந்தியாக புலிகளுக்கு எழுதியதை , புலிகளின் சிந்தனை ஓட்டத்தின் ஆசிரியர், பொறுப்பானவர் ஓரூ வரியில் சொன்னது தவிடுபொடியாக்கி விட்டது.

வெளிநாட்டு நிருபர் பாலசிங்கத்திடம் கேட்டது, சுதாரிக, சிந்திக்க  நேரம் இல்லாமல் (சிக்க வைக்கும் பேட்டி உத்தியுடன்) கேட்டது . பாலசிங்கமம் எந்த வித சுதாகரிப்பும், அவகாசமும்  இன்றி பிளந்தே வைத்தார் புலிகளின் சிந்தனை ஓட்டத்தை.

"big fish swallow(s)  small(er) fish." (இதன் உட்கருத்து தெரியா விட்டால் தேடிப்பார்க்கவும்)  

நான் சொன்னதையே சொல்லி இருக்கிறார். மிகவும் பகிரங்கமாக.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இரு தூண்டில் மீன்கள் மிக இலகுவாக வஞ்சகப் புகழ்ச்சியில் வீழ்கிறார்கள். 

கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள், தங்களை பப்பாவில் ஏற்றிவிடுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு  தூண்டிலில் மாட்டாது இயல்பாக இருக்கிறார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா 

கொள்ளையடித்தவர்கள், இயக்கக் காசை, மக்களின் காசை ஆட்டையைப் போட்டவர்களை மூடிமறைக்காது வெளிக்காட்டி நேர்மையாக  இருப்பவர்கள் எல்லோரும் என் தோழரே.  - கப்பித்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

ஓட்டத்தை.

"big fish swallow(s)  small(er) fish." (இதன் உட்கருத்து தெரியா விட்டால் தேடிப்பார்க்கவும்)  

நான் சொன்னதையே சொல்லி இருக்கிறார். மிகவும் பகிரங்கமாக.

இந்த பேட்டியின் நகலை அல்லது வீடியோவை இணைத்தால் - தொடர்ந்து அது ஆதாரமா இல்லையா என அனைவரும் பேட்டியை வாசித்து விட்டு அல்லது பார்த்து விட்டு கருத்து எழுதலாம்.

இப்படி மொட்டையாக எழுதினால் -செல்லாது…செல்லாது.

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha

கட்டுரையின் 12 ஆவது பந்தி, இறுதி வரிகள்… 

“”Tiger ideologue Anton Balasingham once gave this explanation for the internecine massacres: “Down the history of liberation struggles all over the world, the big fish swallows the smaller fish. In the end, only the big fish remains.””

https://www.lankaweb.com/news/items/2009/05/22/sharpened-claws-about-ltte-from-time-magazine-1998/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கொள்ளையடித்தவர்கள், இயக்கக் காசை, மக்களின் காசை ஆட்டையைப் போட்டவர்களை மூடிமறைக்காது வெளிக்காட்டி நேர்மையாக  இருப்பவர்கள் எல்லோரும் என் தோழரே.  - கப்பித்தான் 

ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும். 

புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும்  உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும். 

(நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர் கவனத்துக்கு!

இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது.

இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை.

லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.

மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை:

ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை.

நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது.

அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம்.

இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட  பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர்.

ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/12/2024 at 10:01, goshan_che said:

நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣.

தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம்,  பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣.

எதை வைத்து சொல்கிறேன்?

யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து.

எனக்கு இது செட்டாகவில்லை. இன்றைய பொன்மாலைப் பொழுதில் எனது நிலைப்பாட்டை சுருக்கமாக விளக்குகின்றேன். டண் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வாசகர் கவனத்துக்கு!

இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது.

இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை.

லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.

மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை:

ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை.

நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது.

அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம்.

இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட  பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர்.

ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.

1 hour ago, goshan_che said:

வாசகர் கவனத்துக்கு!

இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது.

இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை.

லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான்.

மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை:

ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை.

நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது.

அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம்.

இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட  பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர்.

ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.

இந்த பாலசிங்கம் சொன்ன விடயம் - தலைவர் பற்றிய கட்டுரை ஒன்றில் பிரித்தானிய ஊடகமான இண்டிபெண்டெண்டிலும் வந்துள்ளது.

To explain the Tiger's internecine massacres, the English-speaking Tamil Tiger ideologue Anton Balasingham once remarked: "Down the history of liberation struggles all over the world, the big fish swallows the smaller fish. In the end, only the big fish remains." Prabhakaran was determined to make sure that he was the only big fish around.

ஆனால் இதுவும் இந்த கட்டுரையாளருக்கு சொன்னதாக இல்லை. இதிலும் எந்த பேட்டியில் சொல்லப்பட்டது என்ற தகவல் இல்லை.

என்ன சூழமைவில் சொல்லப்பட்டது என்ற தகவலும் இல்லை.

“உலக சுதந்திர போராட்ட வராலாறுகளின் நெடுகிலும் பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும், இறுதியில் பெரிய மீன் மட்டுமே மிஞ்சும்”. இதுதான் பாலசிங்கம் சொன்னதா சொல்லப்படும் வசனம்.

இதில் அவர் இயக்க முரணை குரிப்பிட்டார் என்பது கட்டுரையாளரின் வியாக்கியானம்.

இதன் சூழமைவு இவர்கள் சொல்வது போல் எனினும்

இதில் இருந்து புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தமைக்கு தலைவரின் இருப்பு, பாதுகாப்பு பற்றிய மனபிராந்தியே காரணம் என கூற முடியாது.

நேதாஜியும், காந்தியும் போராடினார்கள். காந்தி என்ற பெரிய மீன் நேதாஜியை விழுங்கி விட்டது.

பட்டா வும் ஹமாசும், ஹமாஸ் என்ற பெரிய மீன் பட்டாவை விழுங்கியது.

லெனினும் டிரோஸ்கியும் போராடினார்கள் ஆனால் ஸ்டாலின் என்ற திமிங்கிலம் டிரொஸ்கியை விழுங்கியது.

இந்த அடிப்படையில்தான் புலிகள் பலரின் கைப்பொம்மைகளாக இருந்த அமைப்புக்களை தடை செய்து - தாம் ஏக பிரதிநிதிகள் ஆகினர்.

இதுதான் பாலசிங்கம் (சொல்லி இருந்தால்) சொன்னதன் சூழமைவு.

https://www.independent.co.uk/news/obituaries/velupillai-prabhakaran-leader-of-the-tamil-tigers-1687239.html

பிகு

ஆதார சுட்டலுக்கு நன்றி 🙏

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.