Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 DEC, 2024 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை  சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து  நீக்கப்பட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.

முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

யாழ். போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரையும்  கடுமையாக  விமர்சித்தார்.  இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.  ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு     அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின்  நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட்  பதிவிலிருந்து நீக்குமாறு   சபாநாயகர் அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/201578

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடையும் போச்சா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஏராளன் said:
 

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்.

'கங்குவா' படம் தான்.............🫣.

மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை  இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, RishiK said:

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லதா கெட்டதா என்று நோண்டிப் பார்க்க அவரகளுக்கு பணம் சேர்ந்திடுமே? அந்த நம்பிக்கையிலேயே எதையும் நம்பிபோட்டு பணம் பண்ணுகிறார்கள்.
    • மன்னிக்கவும், உதவி அரசாங்க அதிபர் வேலும்மயிலின் சகோதரம் திருவடிவேல் (கொழும்பில் பிரபல பல் சிகிச்சை நிபுணர்), திருவவடிவேலின் மனையின் வழி உறவினர், மனைவியின் தகப்பனாகவும் இருக்கலாம். அவர்கள், பிசினஸ், கொஞ்சம் வசதி சராசரியிலும்  கூட,  அவரை , கிந்திய  படை காலத்தில் அளம்பில் காட்டில் பிடித்து வைத்து காசு கேட்டது - உறவினர் சென்று பார்க்க முடியாது ஏனெனில், காடு, ஹிந்தியை படைகள், புலிகள் காட்டில் இடம் மாறுவது .. என்று  ஹிந்தியை படைகள் வெளியேறி கட்டுக்குப்பதில் அந்த பின் இரண்டாவது தடவையும், அப்போது யாழில் தான் பிடித்து வைத்து இருந்ததாக. 
    • ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂
    • போராட்டத்தின் நிதி நெருக்கடி காலத்தில் கிழக்கு மாகாணத்தைவிட பல மடங்கு அதிகமாக வடக்கில் நிதி அறவீடுகள் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன, வரிகள் விதிக்கப்பட்டன, வெளிநாட்டில் இருப்பவர்களின் குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டன, அப்பிளுக்கு கூட வரி விதிக்கப்பட்டது, அதனால் பலர் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளானார்கள், இதில் மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. இந்த நிதி அறவீட்டில் வசதியுள்ள மாவீரர் குடும்பங்களும் தப்பவில்லை.  அதற்கு உதாரணமாக ஒரே குடும்பத்தில் புலிகளின் முக்கியஸ்தர்களாக இருந்து மாவீரர்களான ஜேம்ஸ் , வாசு, சுந்தரி குடும்பமும் அடக்கம். போராளிகள் சுயமாக நிதி வசூலிப்பில் ஈடுபடுவதில்லை, தலைமைபீடம், தளபதிகளின் கட்டளைப்படியே செயல்பட்டிருக்கிறார்கள், அக்காலத்தில் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவின் மீது இந்த நிதி வசூலிப்பு தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? தலைமைப்பீடத்தின் உத்தரவுப்படி கருணா செயற்பட்டார் என்று சடைந்து விடாதீர்கள், தலைமைப்பீட உத்தரவுப்படிதான் அவர் காலம் முழுவதும் செயற்பட்டார் என்றிருந்தால் போராளிகளையே வடக்கு கிழக்கு என்று பிரித்திருக்கமாட்டார். ஒரு ஆயுத போராட்ட போர் காலத்தில்  தவறுகள் இல்லாமல் எதுவுமே ,எங்குமே அனைவரின் விருப்பப்படியே எல்லாம் நடந்தது என்று உலகின் ஒரு மூலையில்கூட நீங்கள் உதாரணம் காட்ட முடியாது. வசூலித்த விதங்கள் தவறுதான், ஆனால் வசூலித்த பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? பயன் படுத்தப்பட்டிருந்தால், உலகிலேயே வசதியானவர்கள் வரிசையில் புலிகளின் அமைப்பும் சிங்களவனுக்கு கால் கழுவியபடி இன்று உயிருடன் இருந்திருக்கும். போராளியை கம்பியால் குத்தி உயிர் ஊசலாட ஜீப்பில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே சேர்ந்து ஜெயவேவா என்று கோஷம்போட்டு மகிழ்ந்து ஆரவாரித்ததா? கேட்கும்போதே புல்லரிக்கிறது, சரி ஊர் ஊராக சுற்றி வளைத்து கொத்து கொத்தாக எம்மக்களை சிங்களவன் கொன்று குவித்தபோது என்ன சொல்லி ஆரவாரித்தார்கள்? கண்கண்ட சாட்சியான நீங்கள் இதையும் கண்டிருக்க வாய்ப்புண்டு அதனால் கேக்கிறேன். கப்பம் வசூலித்த போராளி கிழக்கில் எத்தனை பங்களாக்கள் கட்டியுள்ளார் என்று ஏதாவது தகவல்கள் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பகிர்ந்து கொள்ளூங்கள் அதுவும்  உங்கள் சாட்சிகளில் ஒன்றாய் அமையும். ஜேவிபி ஆயுத போராட்டத்தின்போது மிக குறுகிய காலத்தில்  வகை தொகையின்றி சிங்கள இளைஞர்கள், அவர்கள் குடும்பங்கள் வகை தொகையின்றி இலங்கை பாதுகாப்பு படைகளால் கொன்று குவிக்கப்பட்டனர், ஆனால் எந்த சிங்களவனும் புலிகளால் இலங்கை ராணுவம் கொன்று குவிக்கப்பட்டபோது, தமிழில் வெற்றி வெற்றி என்று முழங்கவில்லை, மாறாய் இலங்கையின் ஆளும்கட்சிகளைவிட ஜேவிபியே தமது ராணுவத்தின் பக்கம் உறுதியாக நின்றது, காரணம் ஒன்றேதான், போராட்டகாலத்தில் தவறுகள் இருக்கத்தான் செய்யும் ஆனால் எமது இனம் எமது ராணுவம் என்ற ஒன்றை அவர்கள் எதற்காகவும் விட்டுகொடுக்க  தயாரில்லை, சொல்லபோனால் தன்மானத்தில் சிங்களவன் நம்மைவிட சிறிது உயரம் அதிகம்தான். நிதி அறவீட்டில் அவர்களின் பொறுப்பாளர்கள் சொன்னதை தவறானமுறையில் அணுகிய போராளி செய்தது குற்றமே. அதேநேரம் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட என்று போனவன் தோலை உரித்து லாண்ட்மாஸ்டரில் கட்டி இழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மிக சிறந்த பழிவாங்கல் என்றால்  , அவ்வாறான இனமான போராளிகளின் சாவில் மகிழ்கிறவர்கள், புலிகளால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, ராணுவத்தால் பலிவாங்கப்பட்டிருந்தாலோ, இனவிடுதலைபோராட்டத்தை நேசித்த மக்கள் , மிக சிறந்த பழிவாங்கல் என்றே எடுத்துக்கொள்வார்கள். அதுதான் கடந்தகால வரலாறு, அதை புலிகள் பொதுமக்களை கொன்றார்கள் என்று தாம் செய்த தவறை வெளியே சொல்லாமல் சாயம் பூசி இன்றுவரை மறைப்பவர்கள் பலர்.   புலி போராளிகள் கொல்லப்பட்டது சிறப்பான சம்பவம் என்று  ரோஷமுள்ள மக்கள் சொல்வதில்லை என்பதற்கு முற்றுமுழுதான ராணுவகட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வருஷம் வருஷம் மாவீரர்நாள் அனுஷ்டிக்கும் பல லட்சம் மக்களே அதற்கு சாட்சி. அதுபோதும் நம்மை விட்டு சென்றவர்கள் தவறுகள் செய்திருந்தாலும் சரியான ஒரு இலட்சியத்திற்கு போராடியபோதே ஒரு சில தவறுகளும் இழைத்தார்கள் என்று சாட்சி சொல்ல,
    • பாஸ்பண்னினாலும் பெயில் விட்டாலும் பாடசாலைக்கு போறமாதிரி ஒரு பழக்கதோசம்தான்😀 உங்களின் கருத்துக்கு உளமார்ந்தநன்றிகள். அன்போடு நன்றிகள் அக்கா 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.