Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 DEC, 2024 | 04:19 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை  சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து  நீக்கப்பட்டது.

பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்  கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது  பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார்.

முதலில் யாழ். வைத்தியசாலை தொண்டர்  அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் தெளிவாக பேசிய அர்ச்சுனா பின்னர், தடம் மாறி நிலையியற்கட்டளைகளுக்கும் சபைக்கு முரணாகவும் பேசத் தொடங்கினார். அப்போது சில தடவைகள் குறுக்கிட்ட சபாநாயகர், விசேட கூற்று தொடர்பான ஆவணத்தில் என்ன இருக்கின்றதோ அதை மட்டும் பேசுமாறு வலியுறுத்தியபோதும் அர்ச்சுனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

யாழ். போதனா  வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.பி. அர்ச்சுனா, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோரையும்  கடுமையாக  விமர்சித்தார்.  இதன்போது சபாநாயகரால் அர்ச்சுனா எம்.பி.க்கு மீண்டும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும் அரச தரப்பினரும் அர்ச்சுனா எம்.பி.யுடன் முரண்படத் தொடங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்து விடயத்துக்கு முரணாகவே கூச்சலிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, அர்ச்சுனா எம்.பி. யாழ். வைத்தியசாலை தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்கின்றார்.  ஆனால், விசேட கூற்றை முன்வைப்பதாயின் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த கூற்று தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு     அறிவிக்கப்படவில்லை. ஆகையால், இவருக்கு பாராளுமன்ற செயலாளர் எவ்வாறு கூற்றை முன்வைக்க அனுமதித்தார் எனக் கேட்கின்றேன் அத்துடன், இவர் விடயத்துக்கு முரணாக பேசும் விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரின்  நிலையியற்கட்டளைகளுக்கு முறையான கருத்துக்களை ஹன்சாட்  பதிவிலிருந்து நீக்குமாறு   சபாநாயகர் அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/201578

  • கருத்துக்கள உறவுகள்

வடையும் போச்சா? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:
 
இவ்வாறு சபை முதல்வர் கூறிக்கொண்டிருந்தபோதும் அர்ச்சுனா எம்.பி. கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்.

'கங்குவா' படம் தான்.............🫣.

மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை  இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

சரியாக உணர்ச்சிவயப்படுகின்றார், கவுன்சலிங் தேவை. 

இது உளவள ஆலோசனையினால் தீர்க்க இயலாத பிரச்சினை. இது நடத்தைப் பாதிப்பு என்பதை விட நடத்தைக்குக் காரணமான மூளையில் இருக்கும் organic disorder இன் வெளிப்பாடு. இதை வைத்து யூ ரியூபர்களும் வாக்களித்த வினோத விரும்பிகளும் மகிழ்ச்சியடையாமல் அர்ச்சுனாவை சும்மா இருக்க விடுவதே தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

அரச்சனாவுக்கு பாராளுமன்ற நடை முறைகளோ நிலையியற் கட்டளைகள் பற்றியோ, பன்மைத்துவ அரங்கில் எப்படி உரையாற்ற வேண்டும் என்பதோ தெரியாது என்றில்லை. ஆனால்  இவரது Fan group  இற்கும் இவரை தேர்தெடுத்தவர்களுக்கும் இது பற்றிய அறிவு கிஞ்சித்தும் கிடையாது என்பதை நன்றாக அறிந்து அவர்களை திருப்திப்படுத்த மட்டுமே உரையாற்றுகிறார்.   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

ஊரிலை “உசார் மடையன்” எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.  ஆளை ஊரிலை உள்ள வப்புகள் எல்லாஞ்சேர்ந்து உசாரேத்தி பப்பாமர உச்சியிலை  ஏத்திவிட்டிருவானுகள். ஏறின ஆளுக்கு ஏறினாப் பிறகுதான் தெரியும் தனக்கு இறங்கத் தெரியாது எண்டு. இப்ப கீழை பார்த்தால் உசார் ஏத்தின வப்புகள் எல்லாம் (கொழும்புக்கும் வெளிநாட்டுக்கும்) எஸ்க்கேப் ஆயிருப்பானுகள்

ஏற்றும்போது விசில் அடித்து கத்தியையும் குடுத்து தானே ஏத்துறது.

பிறகு, பாபா காய் குலுங்கும் தண்டு பகுதியை வெட்டி பார் கீழே போடு என்று ...  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா 
அமீரையும் திட்டுறானுவள்
சம்பந்தனையும் திட்டுறானுவள்
சுமந்திரனையும் திட்டுறானுவள்
சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள்
சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள்
சாணக்கியனையும் திட்டுறானுவள்
தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள்

ஏன்....

எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்.....

அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா 
அமீரையும் திட்டுறானுவள்
சம்பந்தனையும் திட்டுறானுவள்
சுமந்திரனையும் திட்டுறானுவள்
சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள்
சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள்
சாணக்கியனையும் திட்டுறானுவள்
தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள்

ஏன்....

எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்.....

அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣

இதற்கு பெயர் Inorganic Disorder போல. யாருக்கு தெரியும். 🤷‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, நியாயம் said:

இதற்கு பெயர் Inorganic Disorder போல. யாருக்கு தெரியும். 🤷‍♂️

எல்லாம் முடிஞ்சி இப்ப அனுரவ திட்டுற நிகழ்காலம்..😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

'கங்குவா' படம் தான்.............🫣.

மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை  இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............

பேச்சு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா.  ?? அல்லது பகுதி அளவு 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

பேச்சு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா.  ?? அல்லது பகுதி அளவு 

பொதுவாக முழுவதையும் நீக்குவதில்லை. சில பகுதிகளை, சொற்களை மட்டுமே நீக்குவதாக சொல்லுவார்கள். 'அவைக்குறிப்பிலிருந்து இந்தச் சொல் நீக்கப்பட்டது............' என்று தமிழ்நாட்டுச் செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அர்ச்சுனா முறையான அனுமதியே இல்லாமல் அந்த விடயத்தை பேசினார் என்று வரும் போது, முழுவதையும் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை. 

100 மில்லியன் ரூபாய்கள் கேட்டு சத்யன் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்............... இந்த நிலையில் அவைக்குறிப்பு இல்லாமல் போனாலும் நல்லது தான்..............  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

இந்த வழக்கு இழுபடும்போது வழக்கு போட்டவர்தான்   காசு கட்ட வேண்டி வரும்      செய்த ஊழல்  எல்லாம் ஒவ்வொன்றாக. வெளிவரும்      ...இப்படி ஊழல்கள் செய்தவருக்கு மானம் இருக்க முடியாது     

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இந்த வழக்கு இழுபடும்போது வழக்கு போட்டவர்தான்   காசு கட்ட வேண்டி வரும்      செய்த ஊழல்  எல்லாம் ஒவ்வொன்றாக. வெளிவரும்      ...இப்படி ஊழல்கள் செய்தவருக்கு மானம் இருக்க முடியாது     

ஊழல்கள் வெளிவந்தால் நல்லது.

ஆனால், அர்ச்சுனா இந்த ஊழல்களைச் சொன்னதால் அல்ல இந்த வழக்கு. கேதீஸ்வரன் மீது போதை வஸ்துக் குற்றம் சுமத்தியது போல சில விடயங்கள் சொல்லியிருக்கிறார். எனவே, வழக்கு இழுபட்டாலும் சத்தியமூர்த்திக்குப் பாதிப்பிருக்குமென நினைக்கவில்லை.

இதனால் தான் சொல்வது, தேவையில்லாமல் வாய் வார்த்தையை சென்சேஷன் வேண்டுமென்பதற்காக விடக் கூடாது. அப்படி விடும் போது, அதை விட சென்சேஷனான பதிலை - இப்போது சத்தியமூர்த்தி செய்திருப்பது போல -வெளிவரவைத்து, உண்மையான ஊழல் எல்லாம் அமுங்கிவிடும்.

மொத்தத்தில், அர்ச்சுனா சத்தியமூர்த்திக்கு உதவி செய்திருக்கிறார். இப்படிப் பலருக்கு அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

மொத்தத்தில், அர்ச்சுனா சத்தியமூர்த்திக்கு உதவி செய்திருக்கிறார். இப்படிப் பலருக்கு அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்😂

ஆமாம் நிச்சயமாக செய்வார்        முன்பு துணிவுடன்.  ஊழல்கள் செய்தார்கள் இப்போது பயப்படுகிறார்கள்.   

இது மக்களுக்கு செய்த ஒரு நன்மை தான்      பொறுந்து.  இருந்து பார்ப்போம்    மக்களுக்குக்காக. ஊழலுக்கு. எதிராக குரல் கொடுப்போர்.  ஒருபோதும் தோற்ப்பதில்லை.  😀

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமூத்தியை எதிர்க்கிறேன் என்று போய், சத்தியமூத்தியின் கையில் பொல்லைகொடுக்கிறாரே? அவசர காரனுக்கு புத்தி மத்திமம்.

"யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."

சந்தர்பத்திற்கேற்ப பேசத்தெரியவில்லை. வலி நிறைய அனுபவித்திருப்பார் போல்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சந்தர்பத்திற்கேற்ப பேசத்தெரியவில்லை. வலி நிறைய அனுபவித்திருப்பார் போல்.

தங்கத்தின் மீதான  ஜேர்க்    🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தப்பிள்ளையை விடுங்கோ! நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டுமென்கிற நிலையில், அவரின் எதிர்காலம் பாழாகப்போகுது.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்னப்பா 
அமீரையும் திட்டுறானுவள்
சம்பந்தனையும் திட்டுறானுவள்
சுமந்திரனையும் திட்டுறானுவள்
சாராயக்கடை சிறியையும் திட்டுறானுவள்
சிவாஜிலிங்கத்தையும் திட்டுறானுவள்
சாணக்கியனையும் திட்டுறானுவள்
தம்பி அர்ச்சுனாவையும் திட்டுறானுவள்

ஏன்....

எங்கையோ கிடக்கிற சீமானையும் திட்டுறானுவள்.....

அடேய்களா என்னதான் வேணும் உங்களுக்கு? 🤣

வன்மையாக கண்டிக்கிறேன் ...நம்ம சிறியருக்கு மட்டும் சாராயக்கடை சிறியர் என பட்டம் போட்டிருப்பதை ...ஏன் மற்றவர்களுக்கு போடவில்லை ....hee hee hee 

எப்ப அர்ஜூனாவை பாராளுமன்றிலிருந்து நீக்குவார்கள்?😅

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

வன்மையாக கண்டிக்கிறேன் ...நம்ம சிறியருக்கு மட்டும் சாராயக்கடை சிறியர் என பட்டம் போட்டிருப்பதை ...ஏன் மற்றவர்களுக்கு போடவில்லை ....hee hee hee 

எப்ப அர்ஜூனாவை பாராளுமன்றிலிருந்து நீக்குவார்கள்?😅

மாகணசபைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் அவர் தானாக விலகி முதலமச்சராக வருவாராம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரசோதரன் said:

'கங்குவா' படம் தான்.............🫣.

மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை  இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............

இந்த படத்திற்கு கொடுக்கும் இப்படியான மறைமுக விளம்பரத்தினை  பார்த்துவிட்டு படத்தினை பார்க்க முயற்சிக்கிறேன் (சிறிது சிறிதாக), இதுவரை 15 நிமிட படம் பார்த்துள்ளேன் ஆனால் பெரிதாக கூச்சல்கள் இல்லை (அமேசனில்).

  • கருத்துக்கள உறவுகள்

ஹன்சார்ட்டினின் பதிவுகளைப்பார்க்க 2 கிழமையாவது காத்திருக்க வேண்டுமாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

பேச்சு முழுவதும் நீக்கப்பட்டுள்ளதா.  ?? அல்லது பகுதி அளவு 

ஒரே ஒரு சொல் மாத்திரம் நீக்கப்பட்டதாம்.

According to the Arjuna’s Facebook post 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

இந்த படத்திற்கு கொடுக்கும் இப்படியான மறைமுக விளம்பரத்தினை  பார்த்துவிட்டு படத்தினை பார்க்க முயற்சிக்கிறேன் (சிறிது சிறிதாக), இதுவரை 15 நிமிட படம் பார்த்துள்ளேன் ஆனால் பெரிதாக கூச்சல்கள் இல்லை (அமேசனில்).

🤣............

திண்மம், திரவம், வாயு என்று மூன்று பொருட்களும் இந்த இரண்டு வரிகளுக்குள் அடங்கி இருக்கின்றது போல, வசீ............................😜.

இந்தப் படத்தால் (இனிமேல் பெயரைச் சொல்லமாட்டேன்.............🤣) சூர்யா நடிப்பதாக இருந்த மிகப்பெரிய ஒரு பான் - இந்திய திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா மும்பையில் குடியேறியதற்கு இந்த புதிய முயற்சியும் ஒரு காரணம்............... ஆனால் இப்பொது எல்லாம் வீணாகப் போய்விட்டது...............

படம் வெளியாகி அடுத்த நாளே தியேட்டர்களில் சத்தத்தின் அளவை குறைக்கச் சொல்லும்படி தயாரிப்பாளார்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது........... ஆனாலும் நடந்த சேதம் சேதம் தான்......... 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.