அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
149
கிருபன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
ஆண்டு சரியாக நினைவில்லை, தெரிந்தவர்கள் குறிப்பிடுவார்கள். ஜெனிவா கூட்டத்திற்கு நமது பிரச்சனைப்பற்றி கதைப்பதற்காக த. தே. கூட்டமைப்பு செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. அப்போது சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச்சாளராக இருந்தார். இந்த முடிவு எட்டியபின், சுரேஷ், அவருடன் சிலர் இந்தியா சென்றிருந்தனர். அந்த சமயம் சம்பந்தர், சுமந்திரன் கூடி ஜெனிவா போவதில்லை என முடிவெடுத்து வெளியிட்டனர். இது சுரேஷுக்கு தெரியாது. அவரை விமான நிலையத்தில் பேட்டி எடுத்த ஊடகவியலாளர், ஜெனிவா போவது பற்றி கேள்வி எழுப்பிய போது, நாம் செல்வோம் என்று பதில் கூறினார். அதற்கு பத்திரிகையாளர் சம்பந்தர் சுமந்திரனின் முடிவை கூறினார். இது சரியா? ஒரு கட்சி எடுத்த முடிவை இருவர் தன்னிச்சையாக, கட்சியோடு ஆலோசிக்காமல், தெரிவிக்காமல், முடிவெடுப்பது சரியா? உங்கள் வீட்டில், நீங்களும் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து, (உங்களுக்கு அந்த பந்தம் ஏற்பட்டிருக்கோ தெரியவில்லை, உதாரணத்துக்கு சொல்கிறேன். கோவிக்க வேண்டாம்!) எடுத்த முடிவை, உங்கள் மனைவி அதை உங்களுக்கு தெரியாமல் மாற்றி அதை இன்னொருவர் வந்து உங்களிடம் அறிவிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? அதுவும் உங்கள் குடும்பத்துக்கு பாதகமான முடிவை எடுக்கும்போது? இருக்கட்டும், அதன்பின் ஊடகவியலாளர்கள் இவரை அணுகி ஜெனீவாவுக்கு போவதாக எடுக்கப்பட்ட முடிவை ஏன் மாற்றினீர்கள்? எனக்கேட்ட போது, அமெரிக்கா சொன்னது, நீங்கள் வரவேண்டாம் அது நாங்கள் பாத்துக்கொள்கிறோம் என பதிலளித்தார். சொல்லுங்கள்! பாதிக்கப்பட்டது உங்கள் குடும்பம், வழக்கு நடக்கிறது, பாதிக்கப்பட்டவர் சார்பில் யாரும் இல்லாமல் வேறு ஒருவர் நமது துயரங்களை இழப்புகளை வலிகளை எடுத்துச்சொல்ல முடியுமா? நாமே அக்கறையில்லாமல் இருந்தால், விசாரிப்பவர்களுக்கு என்ன கரிசனை வந்துவிடப்போகிறது? சரி, அவர்கள் இழுத்தடிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதியை தேட வேண்டுமோ இல்லையோ? புலம்பெயர்ந்தோர் தவறாமல் போய் போராடுகிறார்கள். அவர்களையும் புலம்பெயர்ந்தோர் விருப்பத்திற்கு இங்கு அரசியல் செய்ய முடியாது என்றார். ஆனால் புலம்பெயர்ந்தவரிடம் ஏன் போகிறார்? இன்னொருதடவை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போது, இவர் அடிச்சு விழுந்து அமெரிக்காவுக்கு போய், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க வேண்டுமென்கிறார். எதற்கு? பிரச்சனையை அமெரிக்கா பாத்துக்கொள்ளும் என்றவர், இலங்கைக்கு அவகாசம் கொடுக்க ஏன் ஓடினார்? அதை அமெரிக்கா பாத்துக்கொள்ளாதா? பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதி, ஏன் அரசுக்காக ஓடுறார்? சும்மா வாயை வைச்சுக்கொண்டு இருக்க கூடாதா? முன்னாள் பிரித்தானிய பிரதமர் தமிழ் மக்களை, அவர்களின் பிரச்சனைகளை சந்திக்க, அரசாங்கத்தின் கெடுபிடிகளை, தடைகளையும் தாண்டி வருகிறார். மக்களின் பிரதிநிதிகள் அங்கில்லை. அப்போது, அவரது ஆங்கில புலமை, திறமை, சட்ட அறிவு, கோட்டு சூட்டு எங்கே போனது? அப்போ, மக்கள் இவரது புலமை, அறிவு, திறமை, இல்லாமல் தங்கள் சாதாரண உடையுடன் தங்கள் துயரங்களை பகிரவில்லையா? அல்லது டேவிட் கமரோன் அவர்கள் துயரங்களை கேட்க மறுத்தாரா? அவர் அந்த மக்களின் குடிசைகளை, வெள்ளம் நிரம்பிய பாதைகளை கடந்து சென்று, அவர்களோடு பேசினார். இவர் ஒருநாளாவது அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பாரா? தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் வருகிறதாம். அதற்கு நமக்கென்ன? அது தெரிந்துதானே அந்தக்கட்சியில் இணைந்தார், ஏன் இணைந்தார்? அதை இல்லாது செய்து சிங்களத்துக்கு மகழ்ச்சியை அளிக்கவா? அதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்? தன் மக்களுக்கு நடந்த அனிஞாயங்களுக்கு தீர்வு இல்லை, ஆறுதல் சொல்ல யாருமில்லை, முஸ்லீம் மேடையில் இருந்து முழங்குகிறார். இவர் யாரின் பிரதிநிதி, யாருக்காக பேச வேண்டும்? சிங்கள மக்களுடன் வாழுவது தனது அதிஸ்ட்டமாம். இருக்கட்டுமேன். யார் இவரை தட்டு வைத்து அழைத்தார்கள் தமிழரோடு வாழுங்கள் என்று? அங்கேயே வாக்கையும் சேகரிக்க வேண்டியதுதானே. இப்போ மக்கள் இவரை நிராகரித்து சிங்கள மக்களோடு வாழுங்கள் என்று அனுப்பிவிட்டனர். போகிறாரா மனிசன்? இன்னும் கூவிக்கொண்டு இங்கேதான் திரிகிறார். ஏனென்றால்; எம்மக்கள் ஏமாளிகள், முட்டாள்கள், நேரம் செலவிட்டு அடிமேல் அடிஅடித்தால் நகருவார்கள் என அவர்களின் இயலாமையை பாவிக்க நினைக்கிறார். எம்மக்கள் இழப்பிலே துவளுகிறார்கள் இறந்தவர்களை நினைவு கூர முடியாமல். இவர் பொப்பி பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போகிறார். கேட்டால், இராணுவத்தினருக்கு மரியாதையாம். ஒன்று அவர்கள் பக்கம் இருக்க வேண்டும் எங்களை விட்டு விலகி. நல்லாட்சி கலைக்கப்பட்டபோது இவர் ரணிலுக்காக நீதிமன்றம் போய் எதை சாதித்தார்? இருந்த ஒரு, மக்கள் அளித்த எதிர்க்கட்சி கதிரையும் பறி போனது. சரி, எங்களுடைய அரசியல் கைதிகள் எங்களை மீட்பார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், இவர்களுக்காக இவர் என்ன செய்தார்? இரண்டொரு வருடத்திற்கு முன் தியாகி திலீபனின் நினைவு கூரலுக்கு நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய தடை அறிவித்தது. இதுபற்றி ஊடகவியலாளர் சுமந்திரனிடம் கேட்ட போது, அவர் சொன்ன பதில், போனதடவை ஆர்னோல்ட் என்னை கேட்ட படியால் நான் நீதிமன்றம் போய் அனுமதி பெற்றேன். இந்தமுறை அவர் என்னை கேட்கவில்லை, (அவர் ஏன் கேட்கவில்லை என்பது அவர்களிருவருக்குந்தான் தெரியும்). நீதிபதி தடையுத்தரவு அளித்துவிட்டார், இது தாமதமாகிவிட்டது என்றார். சொல்லுங்கள்! அந்த மக்களின் பிரதிநிதி, அவர்களுக்காக தானாக ஒன்றும் செய்ய மாட்டார், யாராவது கேட்கவேண்டும், தட்ஷணை வைக்கவேண்டும். இலங்கைக்காக அமெரிக்கா ஓடுகிறார், ரணிலிக்காக நீதிமன்றம் செல்கிறார். இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு? ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ஒன்று நக்குண்டார் நாவிடார், சுயநலம், அவரைப்பற்றி முழுமையாக தெரியாமை, அவரது குணாதிசயங்களோடு ஒத்தமை. அனுமதிப்பத்திரம் வழங்கிய செய்தி வந்தவுடன், அவர்கள் பெயர் அறிவிக்காமல், இவர் எப்படி பெயர் சுட்டி பிரச்சாரம் செய்தார்? ஏன் அனுமதி வழங்கிய ரணிலுக்கெதிராக ஏதும் கூவவில்லை? அதை தெரிந்தே மக்கள் குறிப்பட்டவர்களுக்கு வாக்களித்தார்கள், அதோடு அந்தப்பிரச்சனையை கைவிட வேண்டியது அல்லது சமூகபொறுப்புணர்ச்சி இருந்தால் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது மக்களுக்கு. செய்ய வேண்டியதை செய்யாமல், தனக்கு வேண்டியதை மட்டும் செய்தால், அது அவர் வீட்டில் செய்ய வேண்டும். ஏன், தேர்தலுக்கு முன்னர் என்ன சொன்னார்? நான் தனிப்பட்ட சந்திப்பை நடத்தி ரணில் எங்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார் என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டார். அடுத்தநாள், தான் யாருக்கும் எந்த உறுதியும் அளிக்கவில்லை எண்டு ரணில் பகிரங்கப்படுத்தியபின் வேறு கட்சிக்கு ஆதரவு என்றார். ஏன் இவ்வளவு அவசரம்,அபிமானம், பாசம் தனது மக்களை தவிர? இவரை இவ்வளவு காலமும் அரசியலில் இருக்க விட்டதே மக்களின் பெருந்தன்மை! இந்த வசனம் உங்களது அனுபவம் என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது. ஆனாலும் என்னை சிக்க வைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ தெரியவில்லை. எனக்கு அவரோடு எந்த தனி கொடுக்கல் வாங்கலுமில்லை, நடந்ததை சொல்லியிருக்கிறேன். முதல் முன்னாள் விக்கினேஸ்வரனுடன் சமராடினார். அவர் பதவி விலகவேண்டும் என்று போற வாற இடம், தெருக்கோடி எல்லாம் கூவினார், சவால் விட்டார், ஆட்களை கூட்டி விரட்டினார். பின்னர் வேறொரு கதை சொன்னார், அதை சொல்வதற்கு இவர் யார்? முடிந்தால் இந்தக்கட்சியை விட்டு வேறொரு கட்சியில் நின்று வென்று காட்டுங்கள் என்றார். அவர் செய்து காட்டினார். இன்னும் விடுகிறாரா அவரை? இவர் ஒரு தனி ரகம் சார்! தான் தான் எங்கும் எதிலும் முன்னுக்கு நிக்க வேணும் என்று அடம் பிடிப்பார். எதிர்ப்பவர் யாரும் இருந்தால், அவர்களை நாறடிச்சிடுவார். இதற்கு மேல் என்னால் தொடர முடியவில்லை தெரிந்தவர்கள் தொடர்வார்கள். நீங்கள் ஒன்றும் தெரியாமல் கேட்கவில்லை, ஆனாலும் கேட்டபடியால் சிலதை மட்டும் கூறியிருக்கிறேன். நேரில் சில சம்பவங்கள் அண்மைய காலங்களில் நடக்கின்றன சாட்சியாக. அவை உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை, அதை நீங்கள் நம்பமுடியாவிட்டால் நான் சொல்வதையும் விளங்கி தெளியும் என நான் நம்பவில்லை. விளங்குகிறது. நான் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரித்து, இன்னொருவரை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதில்லை. மக்களுக்கு எதிராக செயற்படும் யாரையும் சாடுகிறேன், விமர்ச்சிக்கிறேன். அதை நீங்கள் காணத்தவறி விட்டீர்கள், அல்லது விரும்பவில்லை என நினைக்கிறன். சிலர் எனது கருத்தை மேலோட்டமாக வாசிப்பார்கள். காரணம் பந்தி. நான் எழுதும் கருத்துக்கு ஆதாரம் கொடுக்கும்போது பந்தியாகிறது, கொடுக்காவிட்டால் உங்களைப்போல், மூர்க்கத்தனமாக எதிர்க்கிறேன் என்பார்கள். நான் அனுராவை புகழ்வது கோஸானை சீண்டுவதற்கே. எல்லாத்திரிகளிலும் நான் சொன்னதை இழுத்துக்கொண்டு ஓடி வருவார், அதை நான் ரசிப்பதுண்டு. முக்கியமாக "அனுரா தெய்யோ, கண்ணை குத்திப்போடுவார்." போராடி களைத்த, இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை, ஆதரிக்க யாருமில்லை என ஏங்கும் என் இனத்துக்கு, கடைசி நட்சேத்திரம் அனுரா ஏதும் செய்ய மாட்டாரா என்கிற எதிர்பாப்பும் ஏக்கமும் பிரார்த்தனையும் இருக்கிறது. நன்றி வணக்கம்!
-
By goshan_che · Posted
ஒரு போனை போட்டு…சார் நீங்க சும்மா தாஸா இல்ல லார்ட் லபக்கதாஸா எண்டு கேளுங்கோ🤣 -
மெளனம் சம்மதம்! மட்டும் இல்ல! பொருளும் கூட ! ஒரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார். அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார். அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் கேட்டார். அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார். இதனால் கோபமடைந்த மன்னர், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?” என்று கேட்டார். அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!” என்றார். உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்!” என்றான். அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்!” என்றார். மன்னர் வாயடைத்துப் போனார். ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது!
-
By goshan_che · Posted
என்ன அண்ணை சுமந்திரன் மாரி கதைக்கிறியள்🤣. இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன? 1. காணாமல் போனோர் போராட்டத்தை கைவிட வேண்டும். ஆம்? இல்லை? 2. நிலம் மீளளிப்பு கோரிக்கையை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 3. யுத்த குற்ற விசாரணையை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 4. காணி அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? 5. பொலிஸ் அதிகாரம் கோரலை கைவிட வேண்டும்? ஆம்? இல்லை? இது உங்களுக்கு மட்டும் அல்ல. புதுசா எதுவும் பண்ணுவோம் எண்டு சொல்லும் சகலரும் விடையளிக்கலாம். -
By goshan_che · Posted
🤣 ரைட்டு…நாமதான் இந்த லொஜிக் விளங்காமல் கிடந்து புரண்டிருக்கிறம்🤣
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts