Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
23 DEC, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. 

இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். 

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. 

எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள்.

உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு  மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/201981

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட,
அவரை...
"பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட,
அவரை...
"பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣

அது என்ன ""தட்டிக் கேட்டல் ""? 

அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். 

அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். 

அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர். 

இதே Formula,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 
இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம்  சுமந்திரனுக்கும்  பொருந்தி வர வேண்டும் என்பதே 
எனது நத்தார்  கால  பிரார்த்தனை. 😂 animiertes-weihnachten-smilies-bild-0234

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:
23 DEC, 2024 | 04:46 PM
 
இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

https://www.virakesari.lk/article/201981

இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, alvayan said:

இந்த உண்மையை ...ஊர் சென்றாபோது அனுபவத்தில் உணர்ந்தேன்...பதவி கிடைத்தால் போது..ஆட்களை மதிப்பதுமில்லை..அசமந்தப்போக்கும் ..அதிகாரவெறியும்

மனிதரை மனிதராக மதிக்கும் பண்பைவிட்டு வர்ணாச்சிரம முறையைப் பின்பற்றி வாழ்வோர் இலங்கை வடபகுதியில் அதிகமாக இருப்பதினால் இருக்கும் நிலையிது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7929.jpeg.22916152fa58962893ff

ஓம் கவி 

லண்டனில் சேவை செய்த போது

IMG-2991.png

கனடாவில் சேவை செய்த போது

IMG-2992.jpg

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kapithan said:

அது என்ன ""தட்டிக் கேட்டல் ""? 

அர்ச்சுனா ரமநாதனின் தகுதியை இங்கே ஒருவரும் குறை சொல்லவில்லை. அவரது நடத்தையைத்தான் எல்லோரும் குறை சொல்கிறார்கள். 

அவர் நிதானமாக நடந்துகொண்டாரென்றால் அவரை எல்லோரும் பாராட்டுவர். 

உண்மை .....படித்தவர்,மக்கள் செல்வாக்கு உள்ளவர் நிதானமாக செயல்பட வேண்டும் ...

9 hours ago, ஏராளன் said:

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

இதை தான் 2009 முல்லைதீவில் இல் கடமையாற்றிய இரு மருத்தவர்களும் சொன்னார்கள் ...நேற்றிஅய் ஐ.பி.சி. பேட்டி ஒன்றில் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

இதே Formula,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 
இந்நாள் வக்கீலும் ஆகிய ஆபிரகாம்  சுமந்திரனுக்கும்  பொருந்தி வர வேண்டும் என்பதே 
எனது நத்தார்  கால  பிரார்த்தனை. 😂 animiertes-weihnachten-smilies-bild-0234

சுமந்திரனுக்கு டமில் தேசிக்காய்களிடம் அரசியல் செய்யத் தெரியாது.  அவர் எதனையும் மறைக்காது நேராகப் பேசுவது  என்பது  எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் இலங்கையின் அதி உயர் மன்றத்தில், பிரதிநிதிகள் எல்லோரும்,  தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களைப் பார்த்து சிரிக்கும்படி செய்யவில்லை. 

சிறீதரன் போன்று வாயைத் திறக்காமல் (அவருக்கு வாயைத் திறக்கத் தெரியாது என்பது வேறு  😉) நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி 20 Bar Licence எடுத்து விற்றிருந்தால் உந்த புலன் பெயர் சமூகம் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். உந்தத் திருவிளையாடல் உவருக்குத் தெரியாமல் போனது சுமந்திரனின் துரதிஸ்ரமே. 

48 minutes ago, putthan said:

உண்மை .....படித்தவர்,மக்கள் செல்வாக்கு உள்ளவர் நிதானமாக செயல்பட வேண்டும் ...

இதை தான் 2009 முல்லைதீவில் இல் கடமையாற்றிய இரு மருத்தவர்களும் சொன்னார்கள் ...நேற்றிஅய் ஐ.பி.சி. பேட்டி ஒன்றில் 

அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. 

அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. 

அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான். 

உண்மை ....உயிருடன் இருப்பது பெரிய விடயம் ..ஒரு சிலர் தப்பி பிழைத்து விடுகிறார்கள் ...

சிறிஙகனில் அப்படி தப்பி பிழைத்தவர் தோழர் அணுரா ...சிங்கள வலதுசாரிகளுக்கும் ,இந்திய பெரியண்ணருக்கும் பெரிய தலை இடியிடியாக இருக்கின்றார் இருப்பார் ...கொஞ்ச காலத்திற்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, putthan said:

உண்மை ....உயிருடன் இருப்பது பெரிய விடயம் ..ஒரு சிலர் தப்பி பிழைத்து விடுகிறார்கள் ...

சிறிஙகனில் அப்படி தப்பி பிழைத்தவர் தோழர் அணுரா ...சிங்கள வலதுசாரிகளுக்கும் ,இந்திய பெரியண்ணருக்கும் பெரிய தலை இடியிடியாக இருக்கின்றார் இருப்பார் ...கொஞ்ச காலத்திற்கு 

தப்பிப்பிழைத்ததால் தான் சிலருக்கு சத்யன் மேல் சந்தேகம்................ நான் இதைப் பகிடியாக எழுதவில்லை. இவருடன் இறுதிப் போரின் போது கூட இருந்த இன்னொரு வைத்தியர் இங்கே அமெரிக்கா வந்து சேர்ந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டிருக்கின்றார். அவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள். சத்யன் அங்கேயே தங்கி விட்டபடியால், மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பது போல போய்க் கொண்டிருக்கின்றது.....................  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr.  சத்தியன்,  இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு  எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர்  பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது  புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. 

☹️

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

இல்லை கபிதன், என் நினைவில் சில விசயங்கள் திரும்பத் திரும்ப வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவனையில் இருந்து இறுதி யுத்தத்தின் போது தகவல்கள் உலகெங்கும் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் என்ன செய்யலாம் என்று பலர் கலங்கி நின்றனர். சத்யனையும், அங்கு நின்ற மற்ற மருத்துவர்களையும் மறக்கவே முடியாது.

பின்னரும், இலங்கை அரசால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு என்ன நடந்தது என்று அறிய, மற்றைய மருத்துவரின் புத்தகத்தை மக்கள் வாசிக்கவேண்டும். அவர் இங்கு வந்த போது, சில சந்திப்புகளை நடத்தியிருந்தார். நான் சிலவற்றுக்குப் போயிருந்தேன். அதுவும் கண்ணீர்க் கதை தான்........

இன்று எல்லாமே வெறும் கட்சி அரசியலும், பக்கச்சார்பு என்றும் ஆகிவிட்டது..............😌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ரசோதரன் said:

எல்லோரும் என்று நான் குறிப்பிட்டது  சகட்டுமேனிக்கு  Dr. ல் குறை கூறுபவர்களை மட்டும்தான். 

யாழ் பல்கலையில் பாதுகாவலர்கள் முதற்கொண்டு  சகல துறைகளிலும் டக்கியரின் ஊடுருவல்களைக்  க்ண்களால் கண்டவன் என்கிற வகையில் வைத்தியசாலை நிலவரத்தை நன்கு என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. 

பலருக்கு அது புரிவதில்லை. 

Dr. சத்தியமூர்த்தி பக்கச சார்பில்லாமல் அல்லது அரசியல்வாதிகளுடன் ஒத்துழைக்காது  அங்கே இயங்க முடியுமா? இதற்கு விமர்சிப்பவர்கள் பதில் தர வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

தப்பிப்பிழைத்ததால் தான் சிலருக்கு சத்யன் மேல் சந்தேகம்................ நான் இதைப் பகிடியாக எழுதவில்லை. இவருடன் இறுதிப் போரின் போது கூட இருந்த இன்னொரு வைத்தியர் இங்கே அமெரிக்கா வந்து சேர்ந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டிருக்கின்றார். அவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள். சத்யன் அங்கேயே தங்கி விட்டபடியால், மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பது போல போய்க் கொண்டிருக்கின்றது.....................  

அந்த அமெரிக்க மருத்துவர் இந்த மாதம் அவுஸ்ரேலியவிலும் அந்த புத்தகத்தை வெளியிட்டார் ...நான் சென்றிருந்தேன்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

இன்று எல்லாமே வெறும் கட்சி அரசியலும், பக்கச்சார்பு என்றும் ஆகிவிட்டது..............😌

அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை.

என நீங்கள் நினைக்க இல்லையா?

இமெல்டா சுகுமாருக்கும் இதுவே நடந்தது.

அவர்கள் 2009 மேயிற்கு பின் அவர்களை பாதுகாத்தவர் எவரோ அவருக்கு தம் விசுவாசத்தை நிருபிக்க சிலதை செய்யவேண்டி ஆகியது.

பின் அதுவே வாழ்க்கை என்றாகி விட்டது.

பழத்தை கடித்த பின் ஆத ஏவாளுக்கே மீட்சியில்லை.

16 hours ago, ஏராளன் said:

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

ஆளுனர் இப்படி ஒரு அதிகாரிக்குபோன் எடுத்து தனக்கு விரும்பியோருக்கு சலுகை காட்டுமாறு சொல்வது அதிகாரதுஸ்பிரயோகம் இல்லையா ஆளுனர் சார்?

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

அப்படி இருப்பின் அவர் இதை ஒரு எழுத்து உத்தரவாக போட்டிருந்தால் அதை அதிகாரி தட்டி கழித்திருக்க முடியாது.

ஏன் வாய்மூலம் சிபாரிசு? ரெக்கோர்ர்ட்டில் இல்லாமல் அலுவல் பாக்கும் கள்ளத்தனம்?

மாகாணசபை தேர்தலை நடத்தாமல், மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை, பின்கதவால் அனுபவிக்கும், பிரயோகிக்கும் ஒருவர்தான் இந்த ஆளுனரும் ஏனையோரும்.

இன்னும் ஒரு விடயம் தனக்கு கீழே வேலை செய்யும் ஒரு அதிகாரியை பொதுவெளியில் யார் என தெரியும் படி விபரம் சொல்லி விமர்சிக்கிறார்?

இதெல்லாம் தலைமைதுவ பண்பு. இவர் எல்லாம் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி.

அந்த அதிகாரியை பற்றி எனக்கு தெரியாது - ஆனால் இவர் அனுப்பி விட்டார் என்பதால் கூட்டத்தை விட்டு விட்டு அவர்களை சந்திக்க முடியாதே?

வந்தவர்கள் நேராக அவரிடம் வராமல், ஆளுனர் மூலம் வந்த சிபாரிசு பேர்வழிகள் அவர்களுக்கு வெத்திலை வைக்க வேண்டும் என ஆளுனர் எதிர்பார்ப்பது அவரின் மமதையையே காட்டுகிறது.

மிக முக்கியமாக -

அதிகாரி நடந்தது தவறு எனில் ஏன் அவர் மீது துறைசார் நடவடிக்கை எடுக்க வில்லை?

எடுத்தால் இவரின் அதிகார துஸ்பிரயோகம் - employment tribunal இல் நாறும் என்ற பயம்?

எனவே தன் இயலாமையை மேடையில் கூறி உள்ளார்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, MEERA said:

ஓம் கவி 

லண்டனில் சேவை செய்த போது

இது இறந்தகாலம். நிகழ்காலத்துக்கு சற்றே இறங்கி  வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

இது இறந்தகாலம். நிகழ்காலத்துக்கு சற்றே இறங்கி  வாருங்கள்

உங்களுக்கு தேவை என்றால் இறந்த காலமும் நிகழ்காலம் ஆகிவிடும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, ஏராளன் said:

ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.

தான் சிபாரிசு செய்ததை வெளிப்படையாக ஆளுநரால் கூற முடியுமென்றால் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் என யூகிக்கலாம். 

எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்து பத்து மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை மன்னாருக்கு இடமாற்றம் செய்திருந்தனர். அவரோ மூன்று பிள்ளைகளின் தாய். அவர் தனது நிலையை பரிபூரணமாக அறியத் தந்தும் கல்வி அமைச்சின் ஒரு சிலர் அவரது இட மாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தடையாக இருந்தனர். இறுதியில் அவர் ஆளுநர் வரைக்கும் சென்றுதான் தனது இடமாற்றத்தை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. 

அது தவிர வட மாகாண கல்வி அமைச்சு என்பது சாதி மதம் பிரதேசவாதம் என்பன தாண்டவமாடும் இடம். அங்கே என்ன நடைபெறுகிறது என்பது அதனுடன் தொடர்புபட்ட ஆட்களுக்கு நன்கு தெரியும். 

வட மாகாண கல்வி அமைச்சு என்பது கூவம் ஆறு போன்றது. 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

அது டாக்டர் சத்தியன் உயிர் வாழ்வதற்காக கொடுத்த விலை என நீங்கள் நினைக்க இல்லையா?

நீங்கள் சொல்வது சரியே, கோஷான். இவர்கள் சிலர் இவர்கள் செய்த பணிகளால் அன்று முக்கியஸ்தர்கள் மற்றும் உலகிற்கு தெரிந்தவர்கள். ஒரு விலை கொடுத்தே அவர்கள் வெளியே வரவேண்டி இருந்தது.

இந்தப் புரிதல்களும், அவர்களின் தன்னலமற்ற பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவர்களை துரோகிகள் என்ற எல்லைவரை இழுத்துக் கொண்டு போவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

புதிதாக வந்த ஒருவர் சேவை செய்கின்றார், புரட்சி செய்கின்றார் என்கின்றார்கள். உண்மையில் இதுவரை அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்.................. அப்படியே எப்பவாவது ஏதாவது காத்திரமாக செய்து விட்டாலும் கூட, இறுதிப் போரில் அங்கேயே நின்று மக்களுக்கு இவர்கள் செய்த சேவைகளை அவை மிஞ்சிவிடுமா...............

பல தாக்குதல்களில், நடவடிக்கைகளில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றே என் பார்வைக்கு தெரிகின்றது. என் பார்வை பிழையாகக் கூட இருக்கலாம். 

ஒரு சமூகமாக, எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றோம், யாரையாவது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம், தொடர்ச்சியாக அவதானிப்பதை தவிர்க்கின்றோம் அதனால் நாங்கள் கொண்டாடுவதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பத் தலைப்படுகின்றோம்.............  

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/12/2024 at 11:25, ஏராளன் said:
23 DEC, 2024 | 04:46 PM
image

வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. 

இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். 

எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம்.

உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது.

இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது.

விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. 

எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள்.

ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. 

எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள்.

உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு  மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/201981

அவர் செய்தது பிழையென்றால் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமே? 

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை அமைதியாகவே எதிர்கொண்டார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் திருமாவளவன் விரிவாகப்  பேசினார். ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா? திமுக மீதான மன்னராட்சி விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா பேச்சு வி.சி.க-வின் பலவீனத்தை காட்டுகிறதா? திமுக கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுவது ஏன்? - அமைச்சர் நேரு கூறியது என்ன? தலித் முதல்வர்: திருமாவளவனின் கருத்து திமுகவிற்கு வைக்கப்பட்ட குறியா?   கேள்வி: புத்தக வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்வுகள் தி.மு.க. கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தின. அதற்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மட்டும்தான் காரணமா? பதில்: ''கூட்டணிக்குள் இதனால் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணிக் கட்சியைச் சார்ந்த யாரும் சலசலப்பில் ஈடுபடவில்லை. சமூக ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து யாரும், அந்த விழாவுக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. அது நான் எடுத்த முடிவு. 'இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா, விஜயும் அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார், நானும் அரசியல் பற்றிப் பேச மாட்டேன், அம்பேத்கரைப் பற்றி பேசுவேன்' என்று ஒரு மூத்த அமைச்சரிடம் சொல்லும்போது, 'அது உங்கள் விருப்பம், நாங்கள் தலையிட முடியாது' என்றுதான் சொன்னார். ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டில் எங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆளுங்கட்சியை தனது முதன்மை எதிரியாக விஜய் பிரகடனப்படுத்தியிருக்கும்போது அவரோடு மேடையில் நிற்பது இப்போதைக்கு சரியாக இருக்காது என நினைத்தேன். ஏனென்றால், நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அது. தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல. அது நான் எடுத்த முடிவு.'' தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?24 டிசம்பர் 2024 உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியல் - அம்பானி குடும்பம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?24 டிசம்பர் 2024 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கேட்பது குற்றமல்ல' கேள்வி: 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை நீங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகிறீர்கள். அதே விஷயத்தைத்தான் ஆதவ் அர்ஜுனா திரும்பவும் பேசுகிறார். அதில் ஏன் பிரச்னை வருகிறது? பதில்: ''திரும்பவும் அதை அவர் சொன்னதில் பிரச்னையில்லை. அப்படி ஒரு முழக்கத்தை வைத்தால் அது தி.மு.கவுக்கு எதிரான முழக்கம் என தி.மு.க. சொன்னதா? அல்லது நாங்கள்தான் சொன்னோமா? 'தி.மு.கவிடம் கோரிக்கையை வைக்கிறோம், தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கிறோம்' என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தி.மு.கவும் வி.சி.க. 'எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள், எங்களிடம் பங்கு கேட்கிறார்கள்' என்று சொல்லவில்லை. இதையெல்லாம் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கினார்கள். 'இவர்கள் தி.மு.கவுக்கு மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அதைக் கொடுக்கவில்லையென்றால் வெளியேறுவார்கள் போலிருக்கிறது' என இவர்களாக தங்கள் யூகத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களில் பேசக்கூடிய தனி நபர்களும் இதையெல்லாம் ஊதிப் பெருக்க ஆரம்பித்தார்கள். விஜயும் நானும் ஒரே மேடையில் ஏறப்போகிறோம் என புக்கத்தை வெளியிட்ட நிறுவனமோ, நானோ, ஆதவ் அர்ஜுனாவோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டது. அப்படியாகத்தான் அந்த விஷயத்தை அரசியலாக்கினார்கள். அவர்கள் இப்படி அரசியல்படுத்தியதால், மேடையில் நின்றாலும் அரசியல்படுத்துவார்கள், வேண்டாம் என முடிவெடுத்தேன். அதேபோல, 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' எனக் கேட்பது குற்றமல்ல. அப்படியே தி.மு.கவிடம் கேட்டாலும் குற்றமல்ல. முடிந்தால் எங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள், அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என தோழமை அடிப்படையில் கேட்கக்கூடாதா? அதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், குறுக்கே நிற்பவர்கள், 'பாருங்கள் விடுதலைச் சிறுத்தைகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்' என, அது ஏதோ தவறு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தி.மு.க. அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதைப்போல, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என 2016 காலகட்டத்திலேயே, மக்கள் நலக் கூட்டணி உருவாகும் முன்பே ஒரு கருத்தரங்கை நடத்தியிருக்கிறோம்.'' ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி - பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?24 டிசம்பர் 2024 ஆபாசப் படங்கள் ஆண்களின் பாலியல் இச்சைகளை எவ்விதம் மாற்றுகின்றன?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா கேள்வி: ஆகவே 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை வெறும் தத்துவார்த்த அடிப்படையில்தான் முன்வைக்கிறீர்களா? பதில்: ''சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்கிறோம். சாதியை இன்று உடனே ஒழித்துவிட முடியுமா? சாதி ஒழிப்பு என்பது எங்கள் இலக்கு. அதை நோக்கிய ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறோம். எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும். 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்றால் விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்தில் பங்குபெற வேண்டுமென அர்த்தம், ஏழை, எளிய மக்கள் பங்கு பெற வேண்டும், அவர்கள் அதிகாரத்தைப் பெற வேண்டுமென அர்த்தம். அவர்கள் ஒவ்வொரு முறை வாக்களித்த பிறகும், அதே மாதிரியான வாழ்க்கை முறையில் இருக்கக்கூடாது. முன்னேற்றத்தை அவர்கள் உணர வேண்டும். இதனை ஒரு கோரிக்கையாக, கோட்பாடாக முன்வைக்கிறோம். 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்ற அர்த்தமில்லை.'' பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லையா? கேள்வி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? பதில்: ''அது மேம்போக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டு. 2001ல் நாங்கள் பொதுத் தொகுதி கேட்டோம். கிடைக்கவில்லை. 2006ல் நாங்கள் பொதுத் தொகுதியை வாங்கி முகையூரில் சிந்தனை செல்வனை நிறுத்தினோம். 2011ல் பொதுத் தொகுதிகளை வாங்கினோம். உளுந்தூர்பேட்டை பொதுத் தொகுதியில் யூசுப்பும் சோழிங்கநல்லூர் பொதுத் தொகுதியில் எஸ்.எஸ். பாலாஜியும் நிறுத்தப்பட்டனர். 2021ல் இரு பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறோம். 2001ல் மட்டும்தான் கிடைக்கவில்லை. 2006ல் இருந்து தொடர்ந்து பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். ஆகவே, பொதுத் தொகுதியே தர மறுக்கிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்படும் கருத்து.'' சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'24 டிசம்பர் 2024 பழைய காரை விற்றால் 18% ஜி.எஸ்.டி. - புதிய அறிவிப்பால் யாருக்கு பாதிப்பு?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ''தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி'' என்கிறார் திருமாவளவன் கேள்வி: பொதுத் தொகுதிகளைப் பெற்றாலும் அதில் தலித் அல்லாதவர்களை நிறுத்தி வெற்றிபெற முடியுமா? பதில்: ''பொதுத் தொகுதியில் தலித் அல்லாதவரை நிறுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது நமது ஆசை. ஆனால், யாதார்த்தத்தில் சமூக இருப்பு என்னவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கோ, அதிகாரத்திற்கோ வர மாட்டோம் என்றால் யாரை வேண்டுமானால் எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஆனால், ஒரு கூட்டணிக்குள் சில இடங்களைப் பெற்று, ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும் எனும் போது ஒரு தொகுதியைக்கூட எதிரிக்கு விட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது. 'பாருங்கள், ஒரு பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டோம்' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்தத் தொகுதியை எதிரிக்கு விட்டுக்கொடுத்ததைப்போல ஆகிவிடும். ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது கட்டாயமாக வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் அங்கே இருக்க வேண்டும். தோல்விதான் கிடைக்கும் எனக் கருதி முடிவெடுத்தால் அது நல்ல அரசியல் அல்ல. வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்றால் அதற்கேற்றபடியான கணக்குகள்தான் தேவை. சமூகத்தின் இருப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கின்றன. அரசியல் கட்சிகளின் முடிவின் அடிப்படையில் சமூகத்தின் இருப்பு இல்லை. ஒரு தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலோ, இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலோ அங்கே வன்னியர் வேட்பாளரையோ, இஸ்லாமிய வேட்பாளரையோ நிறுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து வாக்களிக்கும் பொது உளவியலையும் பெற்றிருக்கிறார்கள்.'' 'தலித் கட்சி மட்டுமல்ல பிற கட்சிகளும்தான்' கேள்வி: உத்தர பிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்டவர் முதலமைச்சராக முடிகிறது, ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசினாலே பிரச்னையாகிறது என்ற விமர்சனம் இருக்கிறது... பதில்: ''துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென குறிப்பிடுவதை யார் பிரச்சனையாக்கியது? எல்லாமே ஊடகங்கள்தான். தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், அந்தக் கூட்டணியைச் சிதைக்க நினைப்பவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். தி.மு.க. அப்படி ஏதும் சொல்லவில்லையே. துணை முதலமைச்சர் பதவியைக் கேட்க வி.சி.கவுக்கு என்ன தகுதியிருக்கிறது என யாரும் கேட்கவில்லையே.. துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கேட்டது ஒரு பொதுவான கோரிக்கை. அவர் உள்நோக்கத்தோடு கேட்டதாக ஊடகங்கள் சொல்லின. ஆகவே அது ஒரு விவாதமாக மாறியது. உ.பியில் நடந்ததைப்போல இங்கே நடக்கவில்லையே என்று கேட்டால், ஒவ்வொரு மாநில அரசியலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியல்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏன் தலித் கட்சி வளரவில்லையெனக் கேட்கிறீர்கள். அதே காலகட்டத்தில் உருவான பா.ம.கவும் வளர முடியவில்லையே... ஏன், ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற எந்தக் கட்சியுமே ஒரு கட்டத்திற்கு மேல் வர முடியவில்லையே. 2001லிருந்து பா.ஜ.க. இங்கே அ.தி.மு.கவுக்கோ, தி.மு.கவுக்கோ மாற்றாக வர முயற்சிக்கிறது. அவர்களாலேயே வர முடியவில்லை. ஆகவே, இங்கிருக்கும் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.'' சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்?24 டிசம்பர் 2024 தேர்தல் நடத்தை விதிகளில் திடீர் திருத்தம் செய்த அரசு - மக்களால் இனி இதை பார்க்க முடியாதா?24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ UDHAYSTALIN படக்குறிப்பு, ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை.'' விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? கேள்வி: நிலைமை இப்படியிருக்கையில் விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழக அரசியலில் என்ன இடம் அவருக்கு இருக்கும்? பதில்: ''விஜய் ஒரே மூச்சில் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஊடகங்கள் அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எம்.ஜி.ஆரை ஒரு உதாரணமாக காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர். நீண்ட காலமாக தி.மு.கவிற்குள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறும்போது அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தது. அதனால் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மாஸ் ஹீரோ. அவருடைய ரசிகர்கள், தங்கள் திரையில் பார்த்த ஹீரோ நேரில் வருகிறார் என்பதால் பார்க்க வந்தார்கள். ஆகவே, அது ஒரு ரசிகர்கள் மாநாடுதான். அரசியல் ரீதியாக முறைப்படுத்தப்பட்ட பிறகு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். எங்கள் கட்சி மாநாட்டிற்கு வருபவர்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சக்திகள்தான் அங்கே வருகிறார்கள். நான் பேசும் அரசியல் சரியானது என நம்புபவர்கள்தான் வருகிறார்கள். விஜய் எம்.ஜி.ஆரைப் போல வந்துவிடுவார் என உசுப்பிவிடுகிறார்கள். யதார்த்தம் அப்படியானதல்ல. அவர் கடின உழைப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும்.'' எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து - தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?23 டிசம்பர் 2024 அம்பேத்கர் சர்ச்சையால் காங்கிரஸ் பலன் அடைந்ததா? ராகுலுக்கு சவாலாக பிரியங்கா மாறுவாரா?23 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ACTORVIJAY படக்குறிப்பு, ''விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும்'' கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும், ஆட்சியில் உள்ள தவறுகளை போதுமான அளவுக்கு விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பதில்: ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை. கூட்டணிக் கட்சிகள் தோழமையோடு சுட்டிக்காட்டத்தான் முடியும். சட்டமன்றத்திலோ, நேரிலோ அதைச் செய்யலாம். அறவழிப் போராட்டங்களின் மூலம் செய்யலாம். அதையெல்லாம் நாங்கள் செய்கிறோம். அ.தி.மு.கவைப்போல பேசினால்தான் விமர்சிக்கிறோம் என அர்த்தமா?'' வேங்கைவயல் விவகாரம் கேள்வி: குறிப்பாக, வேங்கைவயல் போன்ற விவகாரத்தில் நீங்கள் போதுமான எதிர்வினையாற்றவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.. பதில்: ''அது அறியாமையின் உளறல். பிரச்னை நடந்த மூன்றாவது நாள் புதுக்கோட்டையில் பத்தாயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். அப்போது தி.மு.க. அரசு என்னை தவறாக எடுத்துக்கொள்ளும் என நினைத்தேனா? அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். அதற்குப் பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அவரது அண்ணன் தி.மு.க. அரசில் முக்கியமான அமைச்சர். இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு என்பது ஒரு மிகப் பெரிய அமைப்பு. அந்த அமைப்புக்குள் பல நடைமுறைகள் இருக்கும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பிரச்னைக்காக தேர்தல் தொடர்பாக ஒரு பெரிய முடிவை நாங்கள் எடுக்க முடியுமா? அப்படிச் செய்ய முடியாது.'' கேள்வி: தமிழக சட்டமன்றம் செயல்படும் விதம் குறித்து கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், குறைவான நாட்களே அவை நடக்கிறது, போதுமான அளவுக்கு பேச அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்... பதில்: ''எந்தப் பின்னணியில் அதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. எல்லாக் கூட்டத் தொடரிலும் அவர் பேசுகிறார். வி.சி.கவுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளை, அ.தி.மு.க., பா.ஜ.க., சொல்லலாம். கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சொல்கிறார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரிடம்தான் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.'' கேள்வி: 2026லும் தி.மு.க. கூட்டணி இதேபோல தொடருமா? பதில்: தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. இப்படி ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8n75xej20o
    • கிளிநொச்சியில் நடந்து கொண்டிருப்பதை…. திறந்த மனதுடன் அணுக முடியாதவர்களுக்கு, சந்தேகம் ஒரு கேடு. 😂 🤣
    • இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு  உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
    • சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.