Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து

December 31, 2024

“தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை இழந்த பாதையைத் தொடர்கின்ற வகையில் கட்சியின் முடிவுகள், பதவிகள் அமையக்கூடாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்.” – என்றும் கஜேந்திரகுமார்  குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

https://www.ilakku.org/tamils-cannot-move-forward-without-the-tamil-arasu-party-gajendra-kumar-mps-opinion/

  • கருத்துக்கள உறவுகள்

இவரது நியாயம் என்ன நியாயம் என்று புரியவில்லை. இவரது பாட்டன் தேர்தல்களில் பல முறை தோற்றார்.  ஆனால், அவர்தான் கட்சி தலைவர். இவரது தகப்பன் குமார் பொன்னம்பலம் மக்களால் நிராகரிக்கப்பட்டார். ஒரு முறை கூட பாராளுமன்றம் போகவில்லை. ஆனால் அவர் தான் கட்சி தலைவர். இப்போது  தமிழரசுக் கட்சிக்கு வகுப்பு எடுக்கிறார். தனது கட்சி கடந்த தேர்தலில் படு தோல்வியடைந்தது ஏன் என்று இதுவரை வாய் திறக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

கஜேந்திரகுமாரின் கட்சி பற்றி, இவையெல்லாம் ஏற்கனவே கேட்கப் பட்ட கேள்விகள் தான், பதில்கள் தான் அவரது தீவிர ரசிகர்கள் இன்னும் தரவில்லை. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடந்தால் புல "ரொய்லெற்" ஊடகங்கள் மூன்றில் உடனே மூன்று நாட்களுக்கு அது தான் செய்தி. நான் அந்த செய்திகளைப் பார்த்த படி யோசிப்பது,

கஜேந்திரகுமாரின் கட்சியின் மத்திய குழுவில் எத்தனை பேர்?

கடைசியாக மத்திய குழுக்கூட்டம் எப்ப நடந்தது?

எத்தனை பேர் வந்தார்களாம்?

மணியை விலக்கிய போது அந்த முடிவுக்கு மத்திய குழுவில் அங்கீகாரம் கிடைத்ததாமா?"

இப்படி முடிவில்லாக் கேள்விகள்..😂

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 11:20, கிருபன் said:

தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்

large.IMG_7978.jpeg.d8af5e7d6be7aaea9647

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது நல்ல விடயம். அது பற்றி நமக்கு அவசியமில்லை. மூதாதையர் முதல் நீ வரை தூய்மை இருந்தால் வந்து பேசலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

🤣...............

'மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர்............' என்று அவர் மறைத்து மறைத்து சொல்ல, நீங்கள் புத்தக அட்டையிலேயே அந்தப் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கின்றீர்கள்................

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 10:20, கிருபன் said:

தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து

இந்த ஜென்மத்தில் இவைகள் திருந்த மாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 11:20, கிருபன் said:

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரின் ஆதிக்கத்தைக் கட்சி தொடர்ந்தும் அனுமதிப்பதன் ஊடாகத் தொடர்ந்தும் ஒரு மோசமான கொள்கை ரீதியான பாதையில் தமிழ்த் தேசிய அரசியலைத் தள்ளும்

large.IMG_7982.jpeg.7cd2ad87e5ca1ff76373

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் எண்டு சுமந்திரனைத் தான் குறிப்பிடுகின்றார். அப்படிப் பார்த்தால் இவரை 2010, 2015 என இது தடவைகள் மக்கள் நிராகரித்து இருக்கின்றார்கள்.  அப்படித் தொடர்ந்து இரு தடவைகள் நிராகரிக்கப்பட்ட இவர்  தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவராகத் தொடர்ந்தும் இருப்பது தமிழ்த் தேசிய அரசியலைப் பாதிக்காதா? 👀

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 05:20, கிருபன் said:

தமிழரசுக் கட்சி பிரதான கட்சியாக உள்ளமையால் அந்தக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது.” இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி இவைகளை பின்தள்ளி இலங்கை முன் நகரலாம் என்றால் பாரம்பரிய தமிழ் கட்சிகளை தவிர்த்து இலங்கை தமிழர் அரசியல் செய்ய முடியாதா? புதிய மாற்றீடு மாற்றங்களுக்கு ஏதுவாக அமையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயம் said:

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி இவைகளை பின்தள்ளி இலங்கை முன் நகரலாம் என்றால் பாரம்பரிய தமிழ் கட்சிகளை தவிர்த்து இலங்கை தமிழர் அரசியல் செய்ய முடியாதா? புதிய மாற்றீடு மாற்றங்களுக்கு ஏதுவாக அமையலாம். 

தமிழரசு கட்சி இருந்தால் தானே அதை திட்டி திட்டி எனது அரசியல் பிழைப்பை கொண்டு செல்லலாம் அது இல்லை என்றால் எனது  பிழைப்பு என்னவாகிறது என்ற கவலை அவருக்கு.  இவரை போல வரட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்போதாவது தமிழ் மக்களுக்களின் நன்மைக்காக  அரசியல் செய்ததை கண்டீர்களா?  யாராவது ஒருவனை வில்லனாக சித்தரித்து அவனை காட்டி மக்களைப் பயமுறுத்தி,  அதை வைத்து அரசியல் இலாபமும்,  புலம் பெயர் நாடுகளில் உண்டியல் கொத்துரொட்டி இலாபமும் பார்த்து  தமது வாழ்வை தமது முதுமை  வரை  வளப்படுத்தி வாழ்வதற்கு பெயர் தான்    தமிழர்  தேசிய செயற்பாடு.  அதை யாராவது  அம்பலப்படுத்தினால் கோபத்தில்  கண்கள் சிவக்க  சிவக்க reaction வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி என்கிற பெண்ணை சொந்தமாக்க எத்தனையோர்  பேர் போட்டி. எல்லோரையும் அதிலிருந்து விரட்டி விட்டு, தன் சொந்தப்பெண்ணாக வைத்திருக்க போட்டி. முடிந்தால்; தமிழரசை விட்டு வெளியேறி வென்று காட்டுங்கள் எனச் சவால் விடுவதில் ஆரம்பித்து மற்ற உறுப்பினர்களையும் விரட்டுவதில் வந்து நிற்கிறது. தாம் மட்டும் அதை விட்டு விலகார். காரணம், இவர் போன்ற சுயநலவாதிகளுக்கு இதைவிட வேறு நாதியில்லை. பாவம் தமிழரசு! எல்லோராலும் கைவிடப்பட்ட கைம்பெண்ணாகபோகிறாள் போகிறாள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

தமிழரசு கட்சி இருந்தால் தானே அதை திட்டி திட்டி எனது அரசியல் பிழைப்பை கொண்டு செல்லலாம் அது இல்லை என்றால் எனது  பிழைப்பு என்னவாகிறது என்ற கவலை அவருக்கு.  இவரை போல வரட்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்போதாவது தமிழ் மக்களுக்களின் நன்மைக்காக  அரசியல் செய்ததை கண்டீர்களா?  யாராவது ஒருவனை வில்லனாக சித்தரித்து அவனை காட்டி மக்களைப் பயமுறுத்தி,  அதை வைத்து அரசியல் இலாபமும்,  புலம் பெயர் நாடுகளில் உண்டியல் கொத்துரொட்டி இலாபமும் பார்த்து  தமது வாழ்வை தமது முதுமை  வரை  வளப்படுத்தி வாழ்வதற்கு பெயர் தான்    தமிழர்  தேசிய செயற்பாடு.  அதை யாராவது  அம்பலப்படுத்தினால் கோபத்தில்  கண்கள் சிவக்க  சிவக்க reaction வரும். 

அரசியல் செய்வதற்கு தகுந்த, உகந்த சூழல் இலங்கையில் தற்போது உருவாகி உள்ளது. யாராவது கடத்துவார்கள், மண்டையில் போடுவார்கள் எனும் பயம் இல்லாமல் அரசியல் செய்யலாம். 

இந்த வாய்ப்பை மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பயன்படுத்துகின்றார். 

ஆயுத போராட்ட காலத்து சூழலைவிட தற்போது உள்ள சூழல் அரசியல் பிரவேசத்திற்கும், வளர்ச்சிக்கும் பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

உங்கள் கருத்து நியாயமானது ...அதற்காக சும்மா நின்றவன் வந்தவன் எல்லாம் அரசியல் செய்து தமிழனின் தனித்துவ அடையாளத்தை இழக்கும் செயலில் ஈடுடக்கூடாது தானே ...கந்தசாமி,அந்தோனிப்பிள்ளையாக நின்று சிறிலங்கனாக செயல்படலாம் அதை விடுத்து அனுரா,விமல் ஆகா மாறி அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக கரைந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியாது ...
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

கந்தசாமி,அந்தோனிப்பிள்ளையாக நின்று சிறிலங்கனாக செயல்படலாம் அதை விடுத்து அனுரா,விமல் ஆகா மாறி அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக கரைந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியாது ...
 
அது யார் விட்ட தவறு? நானும் செய்யேன், மற்றவரையும் செய்ய விட்டேன் என்று ஒருவரை ஒருவர் விமர்ச்சித்துக்கொண்டும் குழிபறித்துக்கொண்டும் இருந்தால்; மக்கள் வேறு வழியை நாடுவார்கள் என்பது கூட தெரியாமல், கொட்டிக்குலைக்கும் இவர்களால் மக்களுக்கு என்ன லாபம்? இன்றும் திருந்தினார்களா பாருங்கள்? கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் தனி முடிவு, அறிக்கை, கருத்து. கட்சிக்குரிய யாப்பை பின்பற்ற தெரியாதவர்கள், நீதிமன்றம் போகிறார்கள். அங்கே என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பது தெரியாதா சட்ட நிபுணருக்கு? சட்ட யாப்பிற்கு மேல் தீர்ப்பு சொல்லாது. அப்போ யாப்பு எதற்கு? தமக்கு பிடிக்காதவரை வெளியேற்றுவதற்கா?    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

உங்கள் கருத்து நியாயமானது ...அதற்காக சும்மா நின்றவன் வந்தவன் எல்லாம் அரசியல் செய்து தமிழனின் தனித்துவ அடையாளத்தை இழக்கும் செயலில் ஈடுடக்கூடாது தானே ...கந்தசாமி,அந்தோனிப்பிள்ளையாக நின்று சிறிலங்கனாக செயல்படலாம் அதை விடுத்து அனுரா,விமல் ஆகா மாறி அடையாளத்தை இழந்து சிறிலங்கனாக கரைந்து போவதை ஏற்றுக்கொள்ள முடியாது ...
 
தமிழனின் தனித்துவ அடையாளங்கள் எவை என வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

தமிழனின் தனித்துவ அடையாளங்கள் எவை என வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்.

தமிழ் நிலம் ...சிறிலங்காவில் தமிழர் ஒர் தேசிய இனம் என்ப‌தை சிறிலங்கன்ஸ் ஏற்றுக்கொள்ள வேணும் ..அது பிரிவினை அல்ல என்பதை ஏனைய தேசிய இனங்கள் புரிந்து கொள்ள வேணும் ....

நாங்கள் சிறிலங்கன்ஸ் எண்டு போட்டு ஏனைய தேசிய இனங்களை அழித்து எண்ணிக்கையில் அதிகமான ஒர் இனம் சிறிலங்காவை உரிமை கொண்டாட முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது .....

அணுரா தோழர் இந்தியாவிலிருந்து வந்தவுடன் பெளத்த பீட தலைவரை சந்திக்கின்றார் ..

ஆனால் அமைச்சர் சந்திர சேகரம் வடமாகாணத்தில் ஒர் நிகழவின் பொழுது விபூதி பூச மறுக்கின்றார் ...அதே வட மாகாணத்தில் ஜெ.வி.பி பா .உக்கள் பெளத்த மதகுருவின் காலில் விழுந்து வணங்கின்றனர்..

மொழி பெரும்பான்மையை ஆயுத /அதிகார ஊடாக அழித்த சிங்கள சிறிலங்கன்ஸ் ... இப்பொழுது மதபெரும்பான்மையை (சைவ /இந்து) இடதுசாரி தத்துவங்கள் ஊடாக அழிப்பதில் முயற்சிக்கின்றனர்.... 

தமிழனின் தனித்துவ அடையாளங்கள்😅😅

ஏனைய இனங்களுடன் சேர்ந்து வாழ்பவன் ...பல தடவைகள் விட்டு கொடுத்து வாழந்தவன்,வாழ்பவன் ..

ஒற்றுமையாக வாழ்பவன்...
போராடியவன ..
சக தமிழனை வீழ்ந்த மாட்டான்
சாதி பார்க்க மாட்டான் 
பிரதேச வாதம் பேசமாட்டான் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.