Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்

Jan 09, 2025 11:36AM IST ஷேர் செய்ய : 
7bZ0gzhX-image-1-1.jpg

தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக சீமானை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (ஜனவரி 9) முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டனர்.

கடலூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளார் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இராமகிருஷ்ணன் கண்டனம்!

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் வீடியோ வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

மேலும், ”பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார். 

தபெதிகவினர் போராட்டம் – கைது!

அதன்படி சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை முயன்றனர். ஆனால் 200 அடிக்கு முன்னதாகவே அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் தொடர்ந்து சீமானுக்கு எதிராக முழக்கமிட்டு அங்கு போராட்டம் நடத்திய தபெதிகவினர் கைது செய்யப்பட்டனர். 

இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சீமானுக்கு எதிராக தபெதிகவினர் போராட்டம் நடத்தி வருகிறனர்.

 

 

https://minnambalam.com/political-news/defamatory-remarks-about-periyar-tabethikas-who-tried-to-blockade-seemans-house-arrested/

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மேலும், ”பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்திருந்தார். 

பெரியார் யாரை திருமணம் செய்திருந்தார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகள் என்றுமே கசக்கும். நீதி நியாங்களை பேசினால் எதிரிகளுக்கு பிடிக்காது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கருத்து சரி.. பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன்.. சீனுக்குள் வந்த அண்ணாமலை!

Yogeshwaran MoorthiUpdated: Thursday, January 9, 2025, 16:33 [IST]
 

seeman periyar annamalai

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரியார் எந்த புத்தகத்தில் அப்படியொரு கருத்தை கூறியுள்ளார் என்பதை வெளியிடுவேன் என்று கூறிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Also Read

 

திராவிட கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்.. பெரியாரை தாத்தா என்றேன்.. ஆமாம்.. சீமான் பரபர பேச்சு!

முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து, யார் அந்த சார் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கான ஆதாரம் எதிர்க்கட்சிகளிடம் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கலாம். அதேபோல் மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர், திமுக உறுப்பினர் அல்ல. அவர் ஒரு திமுக ஆதரவாளர் தான். அதனை நாங்கள் மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.

1950ஐ விட மோசமான நிலைக்கு சென்ற India! | Oneindia Tamil

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள், ஞானசேகரன் யார் என்றே தெரியாது. அவர் திமுகவில் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

ஆனால் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அனுதாபி என்று ஒரு வார்த்தையை கூறியுள்ளார். இதனால் முதல்வரின் இந்த செயல்பாடு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இறங்கி இருப்பதாக பார்க்கிறேன். திரும்ப திரும்ப கேட்பது என்னவென்றால், காவல் ஆணையர், அமைச்சர் ரகுபதி மற்றும் முதல்வர் என்று அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள் என்பது தான் என்று தெரிவித்தார்.

Recommended For You

 

“சீமானை எங்குமே நுழைய விடமாட்டோம்”.. பெரியார் குறித்து பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிக

தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பொறுத்தவரை, மத்திய அரசு அங்கு சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், அது மாநில அரசின் பொறுப்பில் உள்ளது. அதனால் மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்பந்திக்க போவதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் மதுரையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் பேரணியை பார்க்கிறோம். அவர் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததன் விளைவு பேரணி நடந்துள்ளது. இனியாவது முதல்வர் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் கூறிய சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு, பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை கூறியுள்ளார்.. எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவறுப்பு வந்துவிடும். சீமான் அண்ணனை தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

 

https://tamil.oneindia.com/news/chennai/bjp-state-president-annamalai-supports-naam-tamilar-party-head-seeman-for-the-controversial-comment-669835.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

டிஸ்கி 

B to A, A to B…

BABA that’s what we say…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

சீமானின் கருத்து சரி.. பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன்.. சீனுக்குள் வந்த அண்ணாமலை!

அடுத்ததாக Elon Musk செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தருவார்😂

அண்ணாமலை இனித்தான் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கப்போகின்றார்! அதுவும் நல்லதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் குறித்து சீமான் சர்ச்சைப் பேச்சு, கொந்தளித்த தி.க.வினர் - பாஜகவின் பி டீம் என குற்றச்சாட்டு

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

பட மூலாதாரம்,@NAAMTAMILARORG

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் குறித்து பெரியார் பேசியதாக, அவமதிக்கும் வகையிலான கருத்துகளை சீமான் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அவரின் சர்ச்சை கருத்து குறித்து வியாழக்கிழமை அன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் சீமான். பெண்களை அவமதிக்கும் வகையில் பெரியார் பேசினார் என்று கூறியதற்கான ஆதாரத்தை தாருங்கள் என்று கேள்வி எழுப்பியபோது, "அரசு மற்ற தலைவர்கள் எழுதிய புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது போன்று பெரியாரின் புத்தகத்தை நாட்டுடமையாக்குங்கள். அதில் உள்ளது ஆதாரங்கள்," என்று குறிப்பிட்டார்.

 

பெரியார் தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் பல கருத்துகளைப் பதிவு செய்திருப்பதாகச் சுட்டிக்காட்டி பேசிய சீமான், "பெரியார் தமிழ் மொழியை இப்படிப் பேசிவிட்டுப் பிறகு தன்னுடைய கருத்தியலை இதே மொழியில்தான் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்," என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேற்கொண்டு பேசிய அவர், வள்ளலாரைத் தாண்டி என்ன சமூக சீர்திருத்தத்தை செய்தார் பெரியார் என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பிறகு அம்பேத்கரையும் பெரியாரையும் சமமாகப் பேசுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

முன்பு பெரியாரை தன்னுடைய தாத்தா என்று கூறியது ஏன் என்ற கேள்வியை செய்தியாளர்கள் சந்திப்பில் சீமானிடம் கேட்ட போது, "முன்பு பெரியார் பற்றிய தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். தற்போது தொடர்ச்சியாகப் படித்து வரும்போது எனக்கு அந்தத் தெளிவு கிடைத்துள்ளது" என்றும் கூறியுள்ளார் சீமான்.

போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை (ஜனவரி 9), தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கூட்டமாக வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவையிலும் நாம் தமிழர் கட்சியின் கொடியைப் பறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமானின் பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புதுவை காவல்துறை கைது செய்துள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியார் கூறியதாக பொய்யான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பியதற்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக திராவிடர் கழகத்தினர் காவல் ஆணையரிடம் தெரிவித்தனர். சென்னை மட்டுமின்றி, தஞ்சாவூர், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

'சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்

பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு, விஜய் கட்சி தொடங்கிய பிறகு, சீமானின் பேச்சுகள் அதிதீவிரமாக இருப்பதை உணர முடிவதாக சுபகுணராஜன் தெரிவித்தார்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய திராவிடர் கழக வட்டாரங்கள், "சீமானின் கருத்து குறித்து அதிகம் விவாதிக்க ஒன்றும் இல்லை. அவரின் பேச்சுகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இந்த வழக்குகளை எதிர்கொள்ளட்டும்," என்றும் தெரிவித்தனர்.

பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், "தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. முன்பு திராவிடம் குறித்து அதிகமாக அவர் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் அவரின் சமீபத்திய பேச்சுகள் மிகவும் முகம் சுளிக்க வைக்கின்றன," என்றார்.

ஆர்.எஸ்.எஸ் - பாஜகவினர், தங்களால் இயன்ற அளவு பெரியாருக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டும் ஒன்றும் நடக்கவில்லை என்ற காரணத்தால் தற்போது சீமானை பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேற்கொண்டு பேசிய அவர், "விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிமுகமான பிறகு, சீமானின் ஆதரவும், வாக்கு வங்கியில் சரிவும் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால், இங்கு அரசியல்மயமாக்கப்படாத வாக்காளர்களைத் தன்னுடைய கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்," என்று கூறினார்.

"சீமானின் கருத்துகள் அனைத்தும், சமூகத்திற்கு எதிரானது. அவருடைய பாணியில் அவருக்கு பதில் அளிக்க இயலாது. ஆனால் இதற்கு சட்டரீதியாக நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றும் சுபகுணராஜன் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சீமானின் பேச்சுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

ஜனவரி 8ஆம் தேதியன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பேசாத ஒன்றைப் பேசியதாக சீமான் சொல்வது கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சீமான் அவர்கள் நாகரிகமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், "பொதுவெளியில் பேசும்போது சிந்தித்துப் பேசுங்கள். வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியாரை இழிவுப்படுத்தும் விதத்தில் சீமான் பேசிய பேச்சு அநாகரிகமானது. முகம் சுளிக்கும் வகையில் பேசி இருப்பது வேதனையளிக்கிறது," என்று லயோலா மணி தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் தன்னை விட 40 வயது இளைய மணியம்மையை மறுமணம் செய்து ஏன்? | Periyar |  Maniammai

பெரியார்... தனது வளர்ப்பு மகளான, மணியம்மையை திருமணம் செய்தது உண்மைதானே. 😎 😂
அதற்கு ஏன்... வேலை வெட்டி இல்லாதவங்கள், செந்தமிழன் சீமான்  வீட்டை முற்றுகையிடுகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அடுத்ததாக Elon Musk செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தருவார்😂

அண்ணாமலை இனித்தான் பெரியாரின் புத்தகங்களைப் படிக்கப்போகின்றார்! அதுவும் நல்லதுதான்🤣

🤣

பிற்போக்குத்தனத்தை கண்டதும் உனக்கு ஜிவ்வென்று ஏறுகிறதா? நீயும் என் நண்பனே🤣

- தோழர் மஸ்கு - 

———

எனக்கு அண்ணாமலை திமுக சிலீப்பர் செல் அல்ல சுவிசைட் ஸ்குவாட் என்ற சந்தேகம் உள்ளது.

எப்ப சீமான் வாயை திறந்தாலும்….

அண்ணாமலை பின்னாலயே வந்து “நானும்தான், எனக்கும்தான்” என கூறி…சீமான் ஆர் எஸ் எஸ் கூலி என்பதை போட்டுடைக்கிறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

🤣

பிற்போக்குத்தனத்தை கண்டதும் உனக்கு ஜிவ்வென்று ஏறுகிறதா? நீயும் என் நண்பனே🤣

- தோழர் மஸ்கு - 

———

எனக்கு அண்ணாமலை திமுக சிலீப்பர் செல் அல்ல சுவிசைட் ஸ்குவாட் என்ற சந்தேகம் உள்ளது.

எப்ப சீமான் வாயை திறந்தாலும்….

அண்ணாமலை பின்னாலயே வந்து “நானும்தான், எனக்கும்தான்” என கூறி…சீமான் ஆர் எஸ் எஸ் கூலி என்பதை போட்டுடைக்கிறார்🤣.

அண்ணன் சீமானுக்கு இப்போது தான் ஈ.வே.ராவை பற்றிய உண்மைகள் தெரியவந்திருக்கிறது. 60 வயதானாலும் அவர் குழந்தைப் போல் ஒவ்வொன்றாக கற்று தெளிந்து வருகிறார். 80 வயதிற்குள் அண்ணாமலை கூட்டாளிகளிடம் மிச்சத்தையும் கற்று சனாதானமே தமிழினத்தை மீட்கும் கோட்பாடாக ஏற்று நம்மினத்தை மீட்பார்!!! 

மீட்பர் வருகைக்காக ஆமை கறியோடும் 50 கிலோ பன்றியோடும் காத்திருப்போம் செம்மறி ஆடுகளாய்!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

பெரியார் யாரை திருமணம் செய்திருந்தார்?

தன் வளர்ப்பு மகளை.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

செந்தமிழன் சீமான் அண்ணா விஜி அண்ணியை எத்தனை முறை கருக்கலைப்பு செய்யவைத்தார்?

(பீரியட்ஸ் டைமில கூட அண்ணன் விஜி அண்ணிய விடமாட்டாராமே!)

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வாலி said:

தன் வளர்ப்பு மகளை.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

செந்தமிழன் சீமான் அண்ணா விஜி அண்ணியை எத்தனை முறை கருக்கலைப்பு செய்யவைத்தார்?

(பீரியட்ஸ் டைமில கூட அண்ணன் விஜி அண்ணிய விடமாட்டாராமே!)

உங்களிடம் ஒரு கேள்வி?

கருநாநிதி தொடக்கம் சின்னவர் வரைக்கும் சினிமா நடிகைகள் ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லயாமே...

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி?

கருநாநிதி தொடக்கம் சின்னவர் வரைக்கும் சினிமா நடிகைகள் ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லயாமே...

ஓம் சின்னவர் கடைசியில நிவேதா பெத்துராஜுக்கு டுபாயில வீடுகட்டிக்கொடுத்தவர். ஸ்டாலின் பத்திமா பாபுவை கடத்திக்கொண்டு போனவர். கலைஞர் கடைசியில் குஸ்பு பிரியராக மாறினவர். இப்ப அதுக்கென்ன பிரச்சினை?  ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லேல்லையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, வாலி said:

ஓம் சின்னவர் கடைசியில நிவேதா பெத்துராஜுக்கு டுபாயில வீடுகட்டிக்கொடுத்தவர். ஸ்டாலின் பத்திமா பாபுவை கடத்திக்கொண்டு போனவர். கலைஞர் கடைசியில் குஸ்பு பிரியராக மாறினவர். இப்ப அதுக்கென்ன பிரச்சினை?  ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லேல்லையே!

அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.

Ggy-Br-NJWs-AEhx-HP.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.

Ggy-Br-NJWs-AEhx-HP.jpg

இதன் உண்மைத் தன்மை என்ன? விடுதலை ஏடு என்ற இதழில் ஒரு அறிவுரையாக இதைக் கூறினாராமா அல்லது ஒரு பந்தியில் யாருக்கோ அவர்களின் காமம் பற்றிய கண்டனத்தைப் பதிவு செய்யும் போது இப்படி எழுதினாராமா?

அனேகமாக இது "படம் பார், பாடம் படி" 😎 ரீமின் மீமை நம்பி சீமான் பேசியிருக்கிறாரென நினைக்கிறேன். இப்படி முன்னரும் நடந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.

அப்ப என்ன ****கு நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எண்டு எமனேறும் சொல்லிக்கொண்டு வாகனம் திரியுது!

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் எந்தச் சூழ்நிலையில், சந்தர்ப்பத்தில் எதற்காக அப்படிக் கூறினாரோ தெரியாது,..🤨

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

அப்ப என்ன ****கு நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எண்டு எமனேறும் சொல்லிக்கொண்டு வாகனம் திரியுது!

அது "பிழைப்பிற்கு" அல்லவா? அதை நீங்கள் குறை சொல்லக் கூடாது!

சீமான், சீமான் கட்சியினருக்கும் வாயும் வயிறும் இருக்குது தானே😂?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.

Ggy-Br-NJWs-AEhx-HP.jpg

 

"படம் பார்" ரீமின் தில்லாலங்கடி வேலைகளுக்கு இலகுவாக "காதைக் கொடுத்து பூ வாங்கும்" ஆள் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்😂.

கீழே இதை தகவல் சரிபார்க்கும் ஒரு இணையத்தளம் சரி பார்த்த விபரம் இருக்கிறது!

கண்டு களிப்படையுங்கள்!

https://tamil.factcrescendo.com/factcheck-periyar-not-commented-sexually-in-11th-may-1953-edition-of-viduthalai/

 NB: விடுதலை ஏடு இதழில் 1953 இல் இப்படியொரு வாக்கியத் தொடர் அச்சாகி இருக்காது என்பதற்கான இன்னொரு ஆதாரமும் வாக்கியத் தொடரின் ஒரு சொல்லில் இருக்கிறது. தமிழ், தமிழன் என்று புலம்பும் "பச்சைத்" தமிழர்களின் 😎 தமிழறிவை சோதிக்க நல்ல சந்தர்ப்பம்!

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செவ்வியன் said:

அண்ணன் சீமானுக்கு இப்போது தான் ஈ.வே.ராவை பற்றிய உண்மைகள் தெரியவந்திருக்கிறது. 60 வயதானாலும் அவர் குழந்தைப் போல் ஒவ்வொன்றாக கற்று தெளிந்து வருகிறார். 80 வயதிற்குள் அண்ணாமலை கூட்டாளிகளிடம் மிச்சத்தையும் கற்று சனாதானமே தமிழினத்தை மீட்கும் கோட்பாடாக ஏற்று நம்மினத்தை மீட்பார்!!! 

மீட்பர் வருகைக்காக ஆமை கறியோடும் 50 கிலோ பன்றியோடும் காத்திருப்போம் செம்மறி ஆடுகளாய்!!!

பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது வரலாறு…. எல்லாரும் அறிந்த விடயம்.

இதை தெரிந்து கொண்டே அவரை தலைவர் என ஏற்று, மேடை மேடையாக  “தந்தை” பெரியார், நான் அவரின் பேரன் என கூறியவர்தான் இந்த சைமன் செபஸ்டியன்.

அப்போ 15 வருடத்துக்கு முன் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதை ஏற்று கொள்ளும் நிலைப்பாட்டில் சீமான் இருந்தார்?

 

3 hours ago, குமாரசாமி said:

அதே போல்தான் சீமான் - விஜலட்சுமி பிரச்சனையும்.

Ggy-Br-NJWs-AEhx-HP.jpg

இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு…

 மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣.

இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

 

"படம் பார்" ரீமின் தில்லாலங்கடி வேலைகளுக்கு இலகுவாக "காதைக் கொடுத்து பூ வாங்கும்" ஆள் என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்😂.

கீழே இதை தகவல் சரிபார்க்கும் ஒரு இணையத்தளம் சரி பார்த்த விபரம் இருக்கிறது!

கண்டு களிப்படையுங்கள்!

https://tamil.factcrescendo.com/factcheck-periyar-not-commented-sexually-in-11th-may-1953-edition-of-viduthalai/

 NB: விடுதலை ஏடு இதழில் 1953 இல் இப்படியொரு வாக்கியத் தொடர் அச்சாகி இருக்காது என்பதற்கான இன்னொரு ஆதாரமும் வாக்கியத் தொடரின் ஒரு சொல்லில் இருக்கிறது. தமிழ், தமிழன் என்று புலம்பும் "பச்சைத்" தமிழர்களின் 😎 தமிழறிவை சோதிக்க நல்ல சந்தர்ப்பம்!

 

சீமான் பச்சை பொய்யன்…

என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.

போனவன் வந்தவனை எல்லாம் அப்பா என சீமான் கூப்பிடும் போதே நான் அருவருப்பாக உணர்வேன்.

இப்போ அதன் அர்த்தம் புரிகிறது.

இப்படி ஒரு கேவலமான சிந்தனையை பொய்யாகவே என்றாலும் பரப்பும் ஆள் எப்படி பட்ட செக்ஸ் மேனியா பீடித்த சைக்கோவாக இருக்க வேண்டும்.

இவன் எல்லாம் ஒரு தலைவன்.

செக்ஸ் சைக்கோ.

1 hour ago, வாலி said:

அப்ப என்ன ****கு நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் எண்டு எமனேறும் சொல்லிக்கொண்டு வாகனம் திரியுது!

இந்த ஒப்பீட்டுக்கு எருமைகள் சம்மேளனம் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சீமான் பச்சை பொய்யன்…

என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.

போனவன் வந்தவனை எல்லாம் அப்பா என சீமான் கூப்பிடும் போதே நான் அருவருப்பாக உணர்வேன்.

இப்போ அதன் அர்த்தம் புரிகிறது.

இப்படி ஒரு கேவலமான சிந்தனையை பொய்யாகவே என்றாலும் பரப்பும் ஆள் எப்படி பட்ட செக்ஸ் மேனியா பீடித்த சைக்கோவாக இருக்க வேண்டும்.

இவன் எல்லாம் ஒரு தலைவன்.

செக்ஸ் சைக்கோ.

எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணாவை நாஞ்சில் சம்பத் “அரசியல் தரித்திரம்” என்று புகழ்ந்துள்ளார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணாவை நாஞ்சில் சம்பத் “அரசியல் தரித்திரம்” என்று புகழ்ந்துள்ளார்!😂

உண்மையில் ஸ்டாலின் ஒரு வெத்து வேட்டு….

ஜெயலலிதா என்றால்… நூறு கிராம் கஞ்சாவை வைத்து விட்டு, கயல்விழியை களி தின்ன வைத்திருப்பார்…

அண்ணனுக்கு குஞ்சு மாவீரனை கழுவவே நேரம் போதாமல் போயிருக்கும்🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஜெயலலிதா என்றால்… நூறு கிராம் கஞ்சாவை வைத்து விட்டு, கயல்விழியை களி தின்ன வைத்திருப்பார்…

அந்தப் பெண் ஒன்றுக்கு செரீனா தானே பெயர்................ சசிகலாவின் வீட்டுக்காரருடன் இருந்தார் என்று கஞ்சா வைத்து அந்தப் பெண்ணை பிடித்து அடைத்து வைத்தனர்............. 

சசிகலா எப்பவும் போயஸ் கார்டனிலேயே இருந்தால் நடராஜனும் தான் என்ன செய்வார் என்று அப்ப யோசித்திருக்கின்றோம். ஆனால்  சீமானோ இப்படி கீழிறங்கி கீழிறங்கி யோசிக்கின்றாரே........... இதே பெரியார் சொன்னார் என்ற பிரச்சனையை துக்ளக் சோ 70ம் ஆண்டுகளில் கிளப்பி, பின்னர் சோ நீதிமன்றில் மன்னிப்பு கேட்டதாக செய்திகளில் சொல்லிக் கொண்டிருந்தனர்.  

புத்தக விழாவிற்கு சீமான் போனது, அங்கு பேசியது, புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது,  பபாசி நிறுவனர்களுடன் முரண்டுபட்டது, பின்னர் பெரியாரை வம்புக்கு இழுப்பது இது எல்லாமே இருட்டு அறைக்குள் சீமான் எதையோ தேடுவது போல இருக்கின்றது.

இது எல்லாம் விஜய்யால் வந்த வினை.....................🤣.

இருக்கின்ற எட்டு வீதத்தில் ஆறு அல்லது ஏழு வீதம் அங்கே போய் விடும் போல இருக்குதே என்று சீமான் கலங்கிப் போயிருக்கின்றார் போல.............

தமிழ்நாட்டில் இது போராட்ட காலம். தினமும் ஒரு கட்சி ஏதோ ஒரு விடயத்திற்காகப் போராடுகின்றது. திமுக கூட ஆளுனருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துகின்றது. அன்புமணி, பிரேமலதா, வைகோ, புஸ்ஸி ஆனந்த், எடப்பாடி, தினகரன், சீமான், சாட்டையடி அண்ணாமலை இப்படி எல்லோரும் தெருவில் இறங்கி நிற்கின்றனர்...................... அதனால் சீமானை உடனடியாக குறையும் சொல்ல முடியவில்லை.............. லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்றால் அவரும் வேறு என்ன தான் செய்கின்றது......................🤣................. கொஞ்சம் காரசாரமாக எடுத்து விடுகின்றார்...............

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

 

புலவர், இந்தக் குப்பை வீடியோக்களை இணைத்து சேவர் இடத்தை வீணாக்காமல், உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். எப்பவும் பொய்களில் புரளும் சீமான் இப்பவும் அதையே செய்திருக்கிறார் என நினைக்கிறீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.